"ஏய் வெளிய வாங்கோடி"
என்று கூவிக் கொண்டே நிற்கிறான்
"ஜிகிடி வந்துட்டான்" என்றபடியே
கதவடைத்துக் கொள்கிறார்கள்
படிதாண்டாப் பெண்டுகள்
முக்காடை எடுத்து மூடிக் கொள்கிறாள்
குருக்கள் பாட்டி
மன்னி அழுதுகொண்டே
அவன் தலையில் குடத்தோடு
சரித்து ஊற்றுகிறாள்
மடிந்து விழுகிறான்
சாணி தெளித்த வாசலில்
மாக்கோலம் அழிய அழிய
உருளுகிறான்
அம்மா அழுகிறாள் கேமிரா உள்ளில்
"செத்துத் தொலையேண்டா"
என்று உறுமினார் அண்ணா
அப்பாவுக்குக் கூடத் தெரியாது
"ஹி வாஸ் அப்யூசிவ், ஐம் நாட்" என்று
நுனி நாக்கு ஆங்கிலம் பேசும்
ஊசி சாமுவும் கூட
தூக்குப் போட்டுத்தான்
செத்துப் போனான்.
(ஜிகிடி மற்றும் சாமு நினைவாக)
ரிஹாபிலிடேஷன் முறைகளும், போதை அடிமைகளுக்கு தகுந்த சிகிச்சைகளும் இல்லாத காலங்களில் (1980-85), மிகவும் திறமையான Glider Traineeக்களாக இருந்த ஜிகிடியும் சாமுவும் தகுந்த சிகிச்சை இல்லாமலும், உறவினர்களின் அரவணைப்பும் தொலைந்து போன தருணங்கள், அவர்களைத் தற்கொலைக்குத் தூண்டியது. உங்களுடைய குடும்பத்தில், ஒரு வேளை, அப்படி யாரேனும் இருந்தால், அவர்களை சமூகத்தில் இருந்து மூடி மறைத்து பாதுகாக்க வேண்டாம். தகுந்த மருத்துவ / மனநல சிகிச்சையும், உறவுகளின் ஆதரவும் அவர்களை மீட்டுக் கொள்ள உதவும். நீங்களும் அன்பை மட்டும் கொடுத்து உதவுங்கள். போதை / குடி அடிமைகளும் நம்மை போன்ற, ஆனால் வழி தவறிய மனித ஜீவன்களே.
7 comments:
// போதை / குடி அடிமைகளும் நம்மை போன்ற, ஆனால் வழி தவறிய மனித ஜீவன்களே. //
உண்மை. அரவணைப்பும், நல்ல மருத்துவமும் அவர்களை நெறி படுத்தும்.
// போதை / குடி அடிமைகளும் நம்மை போன்ற, ஆனால் வழி தவறிய மனித ஜீவன்களே//
நிச்சயமாக...
அருமை வித்யா! (இங்கு அருமை போடலாமான்னு தெரியல) ஆனா, அருமை!
//போதை / குடி அடிமைகளும் நம்மை போன்ற, ஆனால் வழி தவறிய மனித ஜீவன்களே//
மெயின் ரோட்டுக்கு எப்படி போகணும் பாஸ்? :-) (பேன்ட் பைக்குள் கை விட்டபடி, ஒரு காலை மட்டும் ஆட்டியபடி)
Wonderful Vidhoosh..
....,
நன்றி ராகவன் அண்ணா
நன்றி கலா
நன்றி சக்தி ஸ்டடி சென்டர்
நன்றி அமைதி
நன்றி பாரா அண்ணே.. :))))) அப்பியே வடக்கால போயி, இடது திரும்புங்க, நேர போனா பொழுது சாஞ்சுரும், அப்பியே, வலது பக்கம் திரும்பி திரும்ப நடங்க..
நன்றி அஹமது.
:(
Post a Comment