இந்தக் கவிதை விற்பனைக்கல்ல

வெண் பாக்களுக்கு தற்போதையச் சந்தையில்
பொற் கிழிகள் கிடைப்பதில்லையென்பதால்
பாக்களுக்கு வெண்மைத் தீட்டிக் கொஞ்சம்
தட்டித் தட்டி உருவப்படுத்தியுள்ளேன்
பின்நவீனக்கவிதையென்றே அழைக்கலாம்
அடுத்தடுத்தவை சந்தங்களின்
சப்தங்களென்பதால்
முதல்வரிக்கு மட்டும் ஆயிரங்கள் ஆக முப்பது
கொடுத்து வாங்கியிருக்கிறேன்
என்பதால்
அச்சடிக்கும் செலவினங்களுக்கென
அடக்கவிலை பிரதி நாற்பத்தைந்து மட்டுமே
இல்லையெனில்
முற்றிலும் இலவசம்தான்
ஏற்கனவே தகுந்த விலைக்கு வாங்கியதுதான்
என்பதாலும்
இந்தக் கவிதை விற்பனைக்கல்ல!

எங்கெங்குப் போயினும் தலை வணங்கித்
தாழ்வுற நேர்ந்தாலும் - ஒரு
அங்கம்போல் கூடும் தன்மான மிழந்து
தின்னுமோ புல்லைப் புலி?

1 comments:

பனித்துளி சங்கர் said...

///முப்பது
கொடுத்து வாங்கியிருக்கிறேன்
என்பதால்
அச்சடிக்கும் செலவினங்களுக்கென
அடக்கவிலை பிரதி நாற்பத்தைந்து மட்டுமே
////////


கவிதையின் தலைப்பும் . தலைப்பிற்கு தகுந்தாற்போல் வார்த்தை அலங்கரிப்பு புதுமைதான் . பகிர்வுக்கு நன்றி

Post a Comment