பொழுது போகலையா

 கிட்டத்தட்ட பத்து மாசம் முடிந்து பிரசவ நாள் வந்ததும், குழந்தை இருந்த இடம் காலியாகுமே, அப்போது எப்படி இருக்கும் என்றெல்லாம் யோசிச்சு இருக்கேன்.


அந்த நாளும் வந்தது, நாலைந்து நாட்கள் அந்த வெறுமை தெரிந்தாலும், தொப்புள் கொடி அறுத்தால்தானே குழந்தை வாழ முடியும். அப்புறம், குழந்தை வளர்ப்பு தந்த ப்ரஷரில், கொஞ்சம் சீக்கிரமே, அந்த உணர்வு கடந்து போனது.

ஐந்து வயசு வரைக்கும் பார்த்து பார்த்து, அம்மா அம்மா என்று அவளும், செல்லமே பட்டுக் குட்டி, ஜில்லு என்றெல்லாம் நானும் கொஞ்சிய நாட்கள் போய், இப்போதெல்லாம் குழந்தை கொஞ்சம் independent ஆக இருக்கிறாள். என்னோடு இருப்பதை விட வெளியில் சென்று தன் நண்பர்களோடு விளையாடுவதையே விரும்புகிறாள். அவள் உலகம் விரிவதைக் கண்கூடாக உணர முடிகிறது.

உணவு பரிமாறி வைத்தால் தானே சாப்பிட்டுக் கொள்கிறாள். தானே உடை அணிகிறாள். தானே பொம்மைகளை அடுக்கி வைத்து விடுகிறாள். பாட்டி தாத்தாவோடு நிறையா பேசுகிறாள். அவ்வப்போது என்னையும் சில கேள்விகள் கேட்கிறாள். போக, அழுகை வந்தால் தேற்றிக்கொள்ள அம்மா மடி வேண்டியும், செல்லம் கொஞ்சப் பட வேண்டும் என்று அவளுக்காய் தோன்றினாலும், இரவு தூங்க வைக்க கதை சொல்லவும், தூங்கும் முன் அவளுக்கு பிடித்த 'நாம ராமாயணம்' பாட்டு பாடவும் மட்டுமே நான் அவசியப் படுகிறேன்.

பெரிய பகல் முடிந்து தானே இரவு வந்து விடுகிறது... அன்றைய நாள் முழுதுக்குமான எனது திடீர்த் தனிமை, பட்டம் அறுந்து போனது போல மிதக்கும் ஒரு உணர்வு, தாயின் இந்த உணர்வுக்கு பெயர் இது வரை சூட்டப் படவில்லை. இல்லை எந்த அம்மாவும் இது வரைக்கும் இந்த உணர்வைப் பேசவில்லையோ? தெரியவில்லை.

சனி/ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டில் இருக்கும் போதெல்லாம் அவள் வீட்டில் இருக்கிறதே இல்லை. ஸ்கூல் இருந்தாலாவது ஹோம் வொர்க் அது இதென்று இருக்கும்.

இந்த வெறும் பொழுதுகள் எனக்கு டெவில்'ஸ் வொர்க் ஷாப் இருக்கும் இடத்தை காட்டி விடுமோ? யாரை வம்புக்கு இழுக்கலாம் என்று நினைக்க வைத்து விடுமோ? வேண்டாத விவாதங்களிலும், வீண் வம்பு, குசும்பு செய்வதிலும் மூளை போகுமோ என்ற பயமெல்லாமும் கூடவே!

நான் எதைச் செய்தாலும் அதற்கான பலன்களை நான்தானே எதிர்கொள்ள வேண்டும். திணை விதைக்கிறேன், வேறென்ன முளைக்கும்? என்பதால், என் மரியாதைகேற்ற, மரியாதையை காபற்றக்கூடிய வகையில் செயலும் பேச்சும் அமைய வேண்டும் என்ற பயமும் தொற்றிக் கொண்டது.

அதனால்,

போன்சாய் ரோஜா வளர்க்கலாம் என மண்ணும் உரமும் இட்டு அழகான செடி வளர்க்கிறேன். பக்கத்து வீட்டுத் தோழிக்கும் சொல்லிக் கொடுக்கிறேன். என் பொழுது நன்றாகவே போகிறது.

இதுவரை ஹோட்டல்களில் மட்டும் சுவைத்து ரசித்த, எனக்கு தெரிந்திருக்காத சில உணவுகளை சமைத்து பார்க்கிறேன்.

என் தாயார் மூட்டு வலியால் நடக்க முடியாது தவிப்பதைக் கண்டு, கால் பிடித்து விடுகிறேன். எனக்கும் கொஞ்சம் எதிர்கால பயம் வந்து, என் உடல் நலத்தின் மீதும் மன நலத்தின் மீதும் அதிகப்படி அக்கறை காட்டுகிறேன்.

இந்தத் தனிமை கோபமாக மாறும் பொழுது, டிரெட்மில்லில் சிறிது வேகமாக ஓடுகிறேன். கொழுப்பும் குறைகிறது, கோபமும் குறைகிறது. இதயமும் மனமும் தெளிவாகிறது. புதிதாய் கற்ற ரெசிபிக்களால் கூடுதலாய்ச் சேர்த்த கலோரிகளை எரிக்கலாம்.

போக, இன்னும் சில காலம் போனால், இன்னும் தனிமையாகலாம், பொறுப்புக்கள் குறையலாம். படிக்கும் நேரமும் கிடைக்கலாம், நல்ல புத்தகங்கள் படிக்க.. நல்ல நண்பர் ஒருவர் பரிந்துரைத்த மயன் கலாச்சாரம் பற்றி இன்னும் படித்து அறியலாம் என நினைக்கிறேன்.

என்று இதெல்லாம் செய்து, போகாத பொழுதுகளை பயனுள்ளதாக்குகிறேன்.. இன்னும் ஆக்கபூர்வமாகவே இந்தத் தனிமையையும் சமாளித்து விடுவேன்.

போக, கொஞ்சம் தேள் கொடுக்கு நாக்கும் இருக்கிறது என்பதால் அதிகம் பேசாமல் இருக்கவும் பழகுகிறேன். பேசவும் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன்.

எங்கேனும் நான் ஒரு பெண் என்ற காரணத்தால், அறியாமல் செய்யும் வாக்கு பிழைகள் மன்னிக்கப் படலாம். கொஞ்ச நாளில் நானே கூட மறந்து விடக்கூடும். ஆனால், நான் அதையே அலட்சியமாய் எடுத்துக் கொண்டு, நன்றாகத் தெரிந்தே, வேண்டும் என்றே செய்யும் பிழைகளுக்கான எதிர்வினைகளை ஏற்கத்தானே வேண்டும்.

இப்போது இதுவும் கடந்து போகும்.

அடுத்து இதோ இதோ வந்து விடுவேன் என்று புன்னகைத்துக் கொண்டே நிற்கிறது தொலைவில் இன்னும் சில உணர்வுகளால் பிரிதலும், உடலால் பிரிதலும்.

எல்லாவற்றையும் இயல்பாய் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் ஒன்றை மட்டும் கற்றுக்கொள்ளத்தான் இத்தனை கடினமாய் இருக்கிறது.

தொப்புள் கொடி அறுப்பதும், உணர்வுகளால் பிரிவை ஏற்பதும் அப்படி ஒன்றும் கஷ்டமானது இல்லை. பிறரை தாழ்த்தி பிறர் மனதை அறுக்கும் கீழ்த்தர எண்ணங்களை வளர்ப்பதை விடவா, போன்சாய் ரோஜா வளர்ப்பது கடினம்?

தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே.

21 comments:

எறும்பு said...

அருமை விதூஷ்

:)

எறும்பு said...

//பெரிய பகல் முடிந்து தானே இரவு வந்து விடுகிறது.//

இரவு தானே வந்துவிடுகிறதா?!?! ஆச்சர்யம் தான்!!

மணிஜி said...

பொழுது போதலைன்னா?

மணிஜி said...

நிஜமாவே நல்லாயிருக்கு (நிஜமாகவே)

மணிஜி said...

சுஜாதா

எறும்பு said...

//பிறர் மனதை அறுக்கும் கீழ்த்தர எண்ணங்களை வளர்ப்பதை விடவா, போன்சாய் ரோஜா வளர்ப்பது கடினம்?//

உங்களுக்கு புரிஞ்சிருக்கு.. எத்தனை பேருக்கு புரியும்?

Radhakrishnan said...

பிரமாதம் விதூஸ், இன்னும் எத்தனை மணி நேரம் கிடைக்காதா என இருக்கிற மணித்துளிகளைத் தொலைத்துவிடாமல் பயனுள்ள வகையில் செலவிடுவது மகிழ்ச்சி. நானும் தந்தைக்கும் மகனுக்குமான உணர்வினை மகனாய் இருந்தும் தந்தையாய் இருந்தும் உணர்ந்திருக்கிறேன். நல்லதொரு அருமையான உணர்வுகள்.

ஊர் வழக்கில் சொல்வார்களே, 'பொழுது போகலைன்னா யாருக்காச்சும் வம்புக்கு இழுப்பது என' பலர் அப்படித்தான். பாடல் அட்டகாசம்.

உண்மைத்தமிழன் said...

நல்லாயிருக்குங்க மேடம்..! இன்னைக்கு அவசியமான அறிவுரைதான் எல்லாருக்கும்..!

நேசமித்ரன் said...

ஒரு அற்புதமான கவிதை ஒளிந்திருக்கிறது இந்த இடுகையில்

சில சங்கப் பாடல்கள் உண்டு
தேவை இருப்பின் பகிரலாம்

எழுதுங்களேன் !
:)

VISA said...

:)

செ.சரவணக்குமார் said...

ரொம்ப நல்லாயிருக்கு.

அன்புடன் அருணா said...

எல்லா அம்மாக்களும் உணரும் ஒரு தனிமை இது!

ஹேமா said...

உணர்வோடு ஒன்றிக்கிடக்கிறது பதிவு.

அ.முத்து பிரகாஷ் said...

அருமையான இடுகை தோழர் ...
உங்கள் போன்சாய் ரோஜா புகைப்படம் முடிந்தால் பகிருங்கள் ...
// பக்கத்து வீட்டுத் தோழிக்கும் சொல்லிக் கொடுக்கிறேன் //
எங்களுக்கும் கற்றுக் கொடுங்கள் ....
விரைவில் பதிவை எதிர்பார்க்கலாமா ?
// எல்லாவற்றையும் இயல்பாய் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் ஒன்றை மட்டும் கற்றுக்கொள்ளத்தான் இத்தனை கடினமாய் இருக்கிறது... //
எனக்கும் தான் விதூஷ் !

Unknown said...

இதுவும் கடந்து போகும் ... நிதர்சனம் ....

Ganesan said...

சரியான சுய பரிசோதனை செய்துகொண்டு , சரியான , நல்ல முடிவை நோக்கி பயணிக்கிறது உங்கள் தொகுப்பும், வாழ்வும்..

வாழ்த்துக்கள் ... சகோதரி

ஹுஸைனம்மா said...

//எல்லாவற்றையும் இயல்பாய் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம்//

அது மட்டும் வந்துட்டா!! ஹூம்.. அவ்ளோ ஈஸியா என்ன?

எப்பொழுதும் தூக்கிவைத்திருக்கச் சொல்லி அழும் குழந்தை, வளர்ந்தவுடன் கைவிட்டு தனியே நடக்க விரும்புவதைப் போல; ஆரம்பத்தில் சற்றுப் பணிவுடன் இருக்கும் மனது, கொஞ்சம் அனுபவம் கிடைத்தவுடன், எக்கலித்து நடக்க விழைவது போல்..

Cable சங்கர் said...

oru சர்ரியலிஸ கட்டுரை

Unknown said...

ம்.. அருமையா எழுதியிருக்கீங்க..

ரவி said...

பதிவுக்கு சம்பந்தம் இல்லாத கேள்வி. மட்டுறுத்தல் இருந்தால் வெளியிடக்கூட வேண்டாம்.

சக பதிவர் மற்றும் பெண் என்ற முறையிலாவது, ஆணாதிக்க வெறியர்களின் ஒரு பெண் மீதான வன்கொடுமையை நீங்கள் கண்டித்ததாக தெரியவில்லையே ? பெண்ணீய அமைப்பு ஒன்றில் நீங்கள் இயங்குவதாக கூட முன்பு ஒருமுறை சொன்னதாக நியாபகம் ?

டி.ஆர் அஷோக்கின் இடுகைக்கு நர்சிம் பதிவு போட்டு கண்டித்ததால் ஏற்பட்ட நன்றி உணர்ச்சியில் இப்போது கள்ள மவுனம் சாதிக்கிறீர்களா என்று தெரியவேண்டும்.

அல்லது நீங்கள் ஏற்கனவே இது குறித்து சொல்லியிருந்தால் அதை கொடுங்கள். உங்கள் கருத்தை தெரிந்துகொள்ள ஆவல்.

எல் கே said...

//எங்கேனும் நான் ஒரு பெண் என்ற காரணத்தால், அறியாமல் செய்யும் வாக்கு பிழைகள் மன்னிக்கப் படலாம். கொஞ்ச நாளில் நானே கூட மறந்து விடக்கூடும். ஆனால், நான் அதையே அலட்சியமாய் எடுத்துக் கொண்டு, நன்றாகத் தெரிந்தே, வேண்டும் என்றே செய்யும் பிழைகளுக்கான எதிர்வினைகளை ஏற்கத்தானே வேண்டும்.//

excellent lines

Post a Comment