வேட்டைநாயின் நாவில் மட்டும் ஈரம்
எலும்புக் கட்டிடங்களில் பசித்த மானுடம்
மருந்துப் புட்டியுள் விஷமூற்றி
சக்கிர வியூகம் அமைத்து துரியன் மீண்டான்
பீஷ்மனைத் தேடி வந்த பீமனிடம்
அபிமனின் காயங்கள் உரைத்தது:
தருமத்தினும் பெரிது பலம்!
காலச் சக்கரம் சுழன்றுகொண்டே
அரக்கு மாளிகை எரிக்கிறது!
துரியனே! உன் தொடைகள் பத்திரம்!
14 comments:
சூப்பரா இருக்குங்க.துரியன் மட்டும் பத்திரமா இருந்தா போதுமா!!!
ரொம்ப சிம்பிள்... தருமனையும் சகுனியையும்... துட்டுயில்லாம தான் ஜூதாடனும்ன்னு ஸ்ரிக்டா சொல்லிடனும்....
என்னாச்சு...
(இது கவிதைக்கான பின்னூட்டம்)
சுவையான கவிதை பக்கோடாவை போலவே
//எலும்புக் கட்டிடங்களில் பசித்த மானுடம்// நல்ல சொல்லாட்சி, ஆனால் அது அரசாங்க அகதிகள் கட்டிடமோ என்னவோ? 'எலும்புக் குச்சு(குடிசை)களில் என்று இவர் எழுதாததற்குக் காரணம் என்ன?' என் மூளையை வரண்டிக்கொண்டு இருக்கிறேன்.
//மருந்துப் புட்டியுள்...// வாசித்து இன்றைய வியூகம் நினைவுக்கு வந்துவிட்டது. உள்துறை அமைச்சரின் மகன் பெயருக்கு உரிமை மற்றப்பட்டு துரியன் தன்னை மீட்டுக் கொண்டதாகச் சொல்கிறார்கள்.
'வேட்டை நாய்' போதுமானது; பெயர்உரியாக வரும் 'விறைத்து நிற்கும்', நம் கால எழுத்துக்கு, மிகைபடக் கூறல் என்று எண்ணுகிறேன், 'சிவந்து தோன்றும் குங்குமம்' என்பது போல.
ரா.சு. ஐயா.
மருத்துவமனைகளில் இலவச காப்பீடு என்ற போர்வைக்குள், பெட்டிகள் மாற்றி, பல அறியாத அங்கீகரிக்கப் படாத மருந்துக்களுக்கான ஆய்வுகள், நோயாளிகளுக்கு தெரிவிக்கப் படாமலேயே, அவர்கள் ஒப்புதலோ, சம்மதோ இல்லாமலேயே நடந்து கொண்டிருக்கிறது.
எலும்புக் கட்டிடம் என்பது மருத்துவமனையாகவும் கொள்ளலாம். குச்சுகளில் கூரை இல்லை!
உரிமம் மட்டுமா? :(
வேட்டை நாய்: சரிதான் ஐயா. மாற்றி விடுகிறேன். ரொம்ப நன்றிகள்.
நல்லாருக்கு வித்யா! :-)
அண்ணன் புழங்குவது எவ்வளவு வசதியாய் இருக்கு!
இவரின் பின்னூட்டத்திற்கு முன்பாக வந்து வாசித்து, பிடிபடாமல் போனேன். :-))
அடடா இதான் அர்த்தமா... பறவைகளின் தாகத்தை பத்தி யோசிக்கறவங்களாச்ச நீங்க... நான் நெனச்சன் யாரோ உங்கள கலாய்ச்சிட்டாங்க போல அதான் இந்த கவிதன்னு...
அஷோக்கு எப்பவும் உன் லெவல்லயே think பண்ணறத நிறுத்துடா...
அட அட அட..
ஓக்கே! :-)
--
நேத்து எதுனா வட்டமா சாப்பிட்டீங்களா?
சில நேரங்களில் வரிகள் அமைத்துவிடப்படும் யுக்தியில் கவிதையின் சாரம் தொலைத்துவிடுகிறேன்.
வைர வரிகளுக்கொரு விருது.
http://amaithicchaaral.blogspot.com/2010/05/blog-post_28.html
ஓ வித்யா டீச்சர் கவிதையும் கலக்கலா எழுதுவீஙக்ளா/
Post a Comment