பெரியவங்களுக்கு ... ஒரு ஊர்ல கதை

ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்தது.
===========================================================================
ஒரு ஊர்ல ஒரு பெரிய வக்கீல் ஒருத்தர் இருந்தாராம். அவருக்கு வாத்து பிடிக்கணும்னு ஒரே ஆசையாம்.


ஒருநாள் ஊருக்கு வெளில இருக்கும் தன்னோட வயல்ல வாத்து பிடிக்க கிளம்பினாராம். வானத்துல ஒரு வாத்து கூட்டம் பறந்துகிட்டு இருந்ததை பாத்தாராம். உடனே, துப்பாக்கிய எடுத்து டுமீல்னு சுட்டுட்டாராம். ஒரே ஒரு வாத்து மட்டும் அடிபட்டு கீழே விழுந்துச்சா? எங்கே விழுந்துச்சுன்னு தேடிக்கிட்டே போனாராம். பாத்தா, அது பக்கத்து வயல்ல போயி 'தொபுகடீர்'ன்னு விழுந்திருச்சாம். வேலிக்கு அந்தப் பக்கம் வயலுக்கு சொந்தக்காரரான விவசாயி இதெல்லாம் பாத்துக்கிட்டே நின்னுட்டு இருந்தாராம்.

வக்கீல் நைசா வேலி மேல ஏறி தாண்டி விவசாயியோட வயல்ல குதிச்சாராம். விவசாயி வயசானவர் வேறயா.. டிராக்டர ஓட்டிகிட்டு வக்கீலுக்கு பக்கத்துல வந்து பார்க் பண்ணாராம்.

"என்னா மேன் பண்றே?" அப்டீன்னு விவசாயி கேட்டாராம்.

வக்கீல் உடனே "ஒரு வாத்தை சுட்டேன், இந்த வயல்ல விழுந்துடுச்சு, அதை எடுக்கப் போறேன்" என்று சொன்னாராம்.

"இது என்னோட இடம், அப்டியெல்லாம் இங்கே நீ நுழைய முடியாது" என்றாராம் விவசாயி.

"பாருங்க நான் சிட்டிலயே பெரிய வக்கீலாக்கும். உன் மேல ஒரு கேஸ் போட்டேன்னா போதும். உன்கிட்ட இருக்கு சொத்து பத்தெல்லாம் என்னுது ஆக்கிடுவேன் தெரியுமா?"

"அது சரிதாங்க. ஆனா இங்க கிராமத்துல நான் சின்னச் சின்ன சண்டைகளை எப்படி தீர்ப்போம் தெரியுமா? மூன்று உதை ரூல் தெரியுமா?"

வக்கீலுக்கு அந்த ரூல் பத்தி எதுவுமே தெரிலயாம். "அது என்ன"ன்னு கேட்டாராம்.

விவசாயி அதைப் பத்தி தெளிவா விளக்கினாராம். "இப்போ பிரச்சினை நிலம் தானே நிலம் என்னுது. அதுனால முதல்ல நான் உன்னை மூணு தரம் உதைப்பேன். அப்புறம் நீ என்னை மூணு தரம் உதைக்கணும், யாராவது சரீன்னு பிரச்சினையை விட்டுக் கொடுக்கும் வரை மாறி மாறி உதைத்துக் கொண்டே இருக்கணும்" என்றாராம்.

விவசாயி கிழவன் தானே, காலை தூக்கக் கூட முடியாது அவனால. ஒரு உதைக்கு தாங்கமாட்டான். நாம் அவன ஈசியா ஜெயிச்சுடலாம்னு வக்கீலும் தைரியமா ஒத்துகிட்டாராம்.

விவசாயியும் ரொம்ப மெதுவா மூட்டு வலியோட டிராக்டரை விட்டு இறங்கி வக்கீலை நோக்கி மெதுவா நடந்து வந்தாராம். முரட்டு ஷூ போட்டிருந்த காலை கொஞ்சமா தூக்கி வக்கீலின் கால் விரல்கள் ஓங்கி மிதிச்சாராம். வக்கீல் 'ஐயோ'ன்னு அலறிக்கிட்டே மண்டி போட்டு உக்காந்துட்டாராம்.

நடு முதுகில் இன்னொரு உதை விட்டாராம். மதியம் சாப்பிட்ட எலுமிச்சை சாதமெல்லாம் வெளியே வந்திருச்சாம். இன்னொரு உதை, அவ்ளோதான், வக்கீல் முகமெல்லாம் சேறு வழிய விழுந்து கிடந்தாராம்.

தன்னோட உடல்-மன உறுதியை எல்லாம் திரட்டி வக்கீல் மெல்ல எழுந்து நின்னாராம். அப்படியே கையால் முகத்தை துடைச்சுகிட்டு, "ஏய் கிழவா.. இப்போது என் முறை" என்றாராம்.

விவசாயி சிரிச்சுகிட்டே "இல்லீங்க! நானே விட்டு கொடுத்துடறேன்.. உங்க வாத்தை எடுத்துகிட்டு போங்க"ன்னு சொல்லிட்டாராம்.

மாரல் ஆப் தி ஸ்டோரி இஸ்:

When you are educated, you'll believe only half of what you hear.
When you're intelligent, you know which half.

அதாவது, படிப்பு ஒருத்தருக்கு கேட்பதில் பாதியை மட்டும் நம்பச் சொல்லித் தருகிறது. ஒருத்தருக்கு இயல்பாவே இருக்கும் புத்திசாலித்தனம் மட்டும்தான் அது எந்தப் பாதி என்பதை நிர்ணயிக்கிறதாம்.

30 comments:

இராகவன் நைஜிரியா said...

நல்ல அனுபவப் பாடத்தைத்தான் அந்த வக்கீலுக்கு பெரியவர் சொல்லிக் கொடுத்து இருக்கார்.

ஹுஸைனம்மா said...

நல்ல பாடம்!!

Anonymous said...

It appears to be your own creation. Story books dont adopt such narrative style. போனாராம், வந்தாராம், சொன்னாராம் and the like.

Frankly, I dont understand the story; more precisely, the moral you say it denotes.

Maybe, my IQ is not upto the mark to understand your story.

It is a fantasy story, meaning such things dont happen in life. I have seen frivolous cases foisted upon their rivals by lawyers and the lawyers winning the cases.

Never play games with lawyers! They will drag you to court and your life will be wasted between the court and your home! The verdict, if at all in your favour, will come after so many years, given our judicial system.

//When you are educated, you'll believe only half of what you hear.
When you're intelligent, you know which half.
//

I cant help finding your English defective again:

Educated person is not the person who is a bibiliophile or a book worm. Education is more than bookish knowledge and acquisition of degrees.

Therefore, be extra careful when you use the word, Educated.

You are delinking education from intelligence. I am afriad you cant do that.

Further, the word, intelligence is also misunderstood by you.

Intelligence in a person is not a constant. It has a ongoing process of growth and development in his life. It stagnates and atrophies only when the person intelluctual faculty is diseased: like Alzemiers', addition's, Down syndrom -some neurological maladies that affect brain.

The intelligence I had had at the age of 2, or 20 and now, widely differ - for better I am sure.he..he..!

So, you have made a hash of the moral of the story. You would not have done it, if you had written the moral in Tamil.

Your English gives you slip. Let us love our mother-tongues, you, your Tamil, me, my...!

Just for a fun I am writing this pinnuuuttams. Madam will write another story in the next blogpost. She wants to express her feeling in story form!

VISA said...

அட்ரா சக்க அட்ரா சக்க அட்ரா சக்க

எறும்பு said...

When you have humour sense you dont research what you read, you will just enjoy. But if you have intelligence..

ஹூம்........
நான் எனக்கு சொல்லலை.

மணிஜீ...... said...

வாத்தை வறுத்தாங்களா? குழம்பு வச்சாங்களா?(ரொம்ப முக்கியம்)

விக்னேஷ்வரி said...

நல்லாருக்கு கதை வித்யா.

தாரணி பிரியா said...

நல்லா இருக்குங்க :)

rajasundararajan said...

விக்னேஸ்வரி சொன்னதுதான் நமதும்: நல்ல கதை. ஆனா, setting நம்ம நாட்டுக் கதைல மாதிரி இல்ல. அதனால மொழிமாற்றுன்னு நம்புறேன்.

முந்திமுந்தி, தில்லி - சென்னை விமானத்துல ஒரு பிரெஞ்சுக்காரிகிட்ட, பேச்சுக்கு இடையில, 'mais' சொல்றதுக்குப் பதிலா, 'lekhin' சொல்லிப்புட்டேன். அம்புட்டுத்தான் அவ இங்லீசுக்கு மாறிட்டா.

ஆனா இங்லீஷ்க்காரங்க முன்னப் பின்ன இருந்தாலும் தப்பா எடுத்துக்கிறது இல்லன்னுதான் கேள்விப் பட்டிருக்கேன். Education - instructed knowledge; itelligence - cultured understanding, அப்படித்தானுங்களே?

நீச்சல் படிச்சப்புறந்தான் தண்ணிக்குள்ள குதிக்கணும்கிறது நல்ல புத்திமதிதான், ஆனா நீச்சல் படிக்கிறதுக்கு குதிச்சுத்தானுங்களே ஆகணும்?

அந்த விவசாயிக்கு inherant knowledge இருந்துச்சு, ஆனா அந்த வக்கீலுக்கு instructed knowledge அளவுக்குத்தான் யோசனை இருந்துச்சுன்னு சொல்ல வர்றீங்க, சரிதானுங்களா? நமக்கும் அவ்வளவா யோசனை கிடையாதுங்க, அதுனாலதான் கேட்டுத் தெரிஞ்சுக்கிறேன்.

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும்.

"உழவன்" "Uzhavan" said...

கதையின் தலைப்ப "ஒரு ஊர்ல உதை" னு மாத்துனா நல்லாயிருக்குமே :-)
மாரல் ஆப் தி ஸ்டோரி சூப்பர்

வால்பையன் said...

சூப்பர் கதை விதூஷ்!

வால்பையன் said...

Jo Amalan Rayen Fernando

உங்களுக்கு இங்கே பந்தி வச்சிருக்காங்க!

நேசமித்ரன் said...

கதை நல்லா இருக்கு :)

வால் ~! பந்தி ...ஜுகல்பந்தி :)

பா.ராஜாராம் said...

செங்க மங்கலா இருக்கு...

வயசு, பார்வை குறைவு.

போக, அடைசல் வேற.

யாராவது இந்த பீரோவ நகத்துங்களேன். காத்து வரட்டும்.

இந்தா வர்றேன், வால் அண்ணன். மதிச்சு கூப்பிடுறீங்க..

பா.ராஜாராம் said...

பந்தியாக்கும்ன்னு வந்தேன் வால்ஸ்..

ஏற்கனவே எனக்கு செங்க மங்கல்.

இப்ப, பூச்சி பறக்குது. :-))

Anonymous said...

வால்!

நன்னி ஃபார் தெ ஹைபர்லின்க்.

ஆனால் நான் படிக்கல்ல.

நான் ருத்ரன் பிளாக்கிலெ என் பொதுவான பதிலை சொல்லியிருக்கே. ஆருக்கு ஆன்மிகம். வாலுக்கு ஏன் இல்லேன்னு!

இங்கே மேடம் போட்டக கதை நல்லாயிருக்கா?

சூப்பர் கதை.

இதுக்குப்பேரு பின்னூட்டக்கதைன்னு பேர் வைக்கலாம்.

ஏன்னா இது ஒரு ட்ரிக்.

இந்த டிரிக், டோண்டு, சுப்பையா பதிவுகளில் காணலாம்.

எனக்காக அவர்கள் இருவரும் பின்னூட்டக்கதையிட்டார்கள்.

புருஷன் பொண்டாட்டியை அடிப்பான். அல்ல திட்டுவான்.

அவனை எதித்து அடிக்கமுடியாது. அதுக்காக புள்ளைகளை அடிப்பார்கள்.

கேட்டா:

நான் பெத்தே. நான் அடிப்பே.

வால்பையன் said...

நான் கதையின் டிவிஸ்டை தான் ரசித்தேன், சாராம்சத்தை நோண்டவில்லை!

நான் ஜெயித்தால் பத்து கொடு போதும், நீ ஜெயித்தால் நூறு தர்றேன் என்று இதே பாணியில் ஏற்கனவே கதை படிச்சிருக்கேன்!

ஆனா சத்தியமா நீங்க பின்னூட்டட்தில் சொன்ன கதை புரியல, ஒருவேளை பின்நவீனமா இருக்குமோ!?

பா.ராஜாராம் said...

//ஆனால் நான் படிக்கல்ல//

சரி.. ஸ்தோத்திரம். ஆமென்.

அண்ணே..கொஞ்சம் இந்த பீரோவ...

முகிலன் said...

கதை நல்லா இருக்குக்கா

நசரேயன் said...

நல்லா இருக்குக்கா

D.R.Ashok said...

உங்க பின்னூட்டம் சூப்பரு ஃபெர்னாண்டோ ..

Sundar சுந்தர் said...

நல்ல கதை. இந்த கதைக்கு பின்னே ஏதாவது சொந்த உதையிருக்கா என்ன?

Chitra said...

When you are educated, you'll believe only half of what you hear.
When you're intelligent, you know which half...... super!

Sundar சுந்தர் said...

Hello Jo,
What you think as others' thinking is actually your thinking not theirs. Same goes for reading, interpreting, understanding and making sense.

//The intelligence I had had at the age of 2, or 20 and now, widely differ - for better I am sure.he..he..!//

looks like you have a long way to go :) whichever way you go, you better find someone who can match up to your level of intelligence only then you could have some 'conversation', else it will be like your long lines...expressing more of you and making not much sense otherwise.

உங்கள் வார்த்தைகள் என்ன போதையின் பிதற்றலா அல்லது விதண்டாவாதியின் சீற்றமா.

May be you are just misplaced. like priests trying to intervene 'sinners' or a fun seeker trying to influence a priest.

May be you just need to get lost then may be just may be you may find yourself and spare us.

Just think of me as a fellow library user who got annoyed with your markings on the book he came to read.

if you are still thinking of turning your guns on me...you can talk to yourself, I may not spare any of my time on you.

Vidhoosh(விதூஷ்) said...

நன்றி இராகவன் நைஜீரியா :)

நன்றி ஹுசைனம்மா :)

நன்றி விசா.. :))

நன்றி எறும்பு ராஜகோபால்

நன்றி மணிஜி: :)) சுட்டு சாப்பிட்டு இருப்பாங்களோ?

நன்றி விக்கி

நன்றி தாரணிபிரியா

நன்றி ரா.சு. சார். நம்ம setting-ல வயதில் மூத்தவர்களை இத்தனை அலட்சியமாக நினைப்பதில்லை என்றே நம்புகிறேன், சார்.

பிரெஞ்சுக்காரி செய்தி: :)) புரண்டு புரண்டு சிரிக்கிறேன். :))
திருக்குறள் சூப்பர் இடஞ்சுட்டல் சார். குறித்துக் கொண்டேன்.

நன்றி உழவன் நவநீதன்.

நன்றி வால் அருண். சாராம்சம் ஏதுமில்லை அருண். நான் படிச்சு ரசித்த நல்ல, ஆனால் சாதாரண ஆங்கிலக் கதை இது. ரீடர்ஸ் டைஜஸ்ட்டில் வெளியான ஆங்கில ஒரிஜினல் மூலம் poor quality jpeg ஆக இருக்கு. அதனால் பகிரவில்லை. கூகிளில் தேடினால் ஒருவேளை கிடைக்கலாம்.

நன்றி நேசன். :)

நன்றி பா.ரா. அண்ணே. :) அதே செங்க மங்கல்தான் இங்கேயும். ஆனா பாருங்க, டிசம்பர் 2009-ல் மொழி மாற்றி எழுதினது. அப்போது நம்ம பதிவர் சூழல் கொஞ்சம் அரசியலா இருந்துச்சுன்னு கிடப்பில் போட்டேன். நல்ல கதை இப்போ பகிரலாம்னு நேத்துதான் தூசி தட்டி எடுத்தேன். இப்போதும் ஒருத்தர் தான்தான் அதுன்னு நினைக்கிறார். என்னவோ போடா மாதவாதான் நமக்கு எப்போதும் ஒரே வழி. :)) இப்ப, எனக்கும் பூச்சி பறக்குது. :-)) நம்ம பொழப்பை பார்க்கலாம் வாங்க.

நன்றி முகிலன் தம்பியாரே. :)

நன்றி நசர்... என்ன கம்முனு போயிட்டீர்.. :))

நன்றி டி.ஆர்.அசோக் :)

நன்றி சுந்தர். ஏதும் இல்லை. காமாலை கண்ணனுக்கு காண்பதெல்லாம் மஞ்சள். என்ன செய்யறது? :)

நன்றி சித்ரா.

Vidhoosh(விதூஷ்) said...

ஹேய் ஹேய்... easy! சுந்தர்: ஜோ அமலன் உத்தியோக ஓய்வு பெற்று, தன்னோடு நிஜமாவே இருக்கும் மற்றவருக்கு இடைஞ்சல் தராமல், இப்படியெல்லாம் எழுதிக் கொண்டு இருப்பவர். மதியம் தூக்கம் வராமல் இருக்கும். ஏதாவது யோசித்து எழுதி கொண்டிருப்பார். எழுதத்தானே செய்கிறார், விடுங்கள். ரொம்ப தனிமையாகவும் இருக்கலாம். இதெல்லாம் ஒரு outlet. எல்லோரும் வாழ வேண்டும், சந்தோஷமா.

துளசி கோபால் said...

:-))))))))))))))

Vidhoosh(விதூஷ்) said...

http://www.lawlaughs.com/animals/itsyourduck.html

கூகிள் தேடலில் இந்தக் கதை இங்கேயும் இருக்கு.

பிரசன்னா said...

//எலுமிச்சை சாதமெல்லாம் வெளியே வந்திருச்சாம்//

ஓ இதுதான் நெஞ்சில் இருக்கும் மஞ்சா சோறு வெளில வரதா :)

V.Radhakrishnan said...

:) அருமை.

Post a Comment