கூடு மாறுதல்

மூன்று பேருமாய் வெறுந்தரையில் படுத்து உறங்குகிறார்கள்

முப்பத்து மூணு வருஷம் முன்னே வீடு பாக்க வந்தப்போ காயாத வராண்டாவில் இளையவன் ஒரு வயசுல வச்சது என்று சின்ன கால் பதிந்த அச்சிருக்கும் சிமெண்ட் தரையை தடவிப் பார்க்கிறார் அத்தை.

என்னை எப்போதும் திட்டிக் கொண்டே இங்கதான் எங்கப்பா படுத்திருப்பார்
என்று சுவற்றில் சாய்ந்து கொள்கிறார் மாமா.

கைப்பிடி சுவற்றில் சாய்ந்து நின்று தடவிப் பார்த்து இது வழியாத்தான் நாங்க ரெண்டு பேரும் மணல் மீது குதிப்போம் என்று மலர்ந்து கொள்ளும் நினைவில் கணவரும் மலர்கிறார்.

என் கவிதை நோட்டு கிடைச்சுதா வித்யா என்று குரல் வழியே பொங்கும் ஆவலில் கொழுந்தன். வேறோரு நாள் வீடியோ சாட்டிங்கில் அவன் எழுதிய காதல் கவிதைகளால் கிண்டல் செய்கிறோம் அனைவரும். நானும் அங்கேயே இருந்திருக்கலாம் பொங்குகிறான்.

பெரிய வீடா, அப்போ இந்த தீபாவளிக்கு வரோம் என்று குதூகலிக்கிறாள் ஓரகத்தி.

அந்த வீட்டில் ஜூலா கட்டலாம், ஜாலியா சைக்கிள் ஓட்டலாம், மாடில ஓடலாம், செடி வளக்கலாம் என்று மகிழும் குட்டி மகள்.

இது முதன் முதலா வாங்கின ஃ பிளாஸ்க் - அது இருக்கட்டும்
எங்கப்பா பென்ஷன் பணத்தில் வாங்கின மெத்தை - இருந்துட்டு போகட்டுமே
இது ரிடையர் ஆன போது என் கலீக்ஸ் கொடுத்தது - ஷோ கேசில் வச்சுடலாமே
இந்தப் பேனாவால்தான் பத்தாவது எழுதினேன் டீச்சர் வேலைக்கு கையெழுத்து போட்டேன் இருக்கட்டும்
இது அவனோட பென்சில் பாக்ஸ் இருக்கட்டுமேடி விடேன்
"என்னோட மிட்டு.. கால்தானே உடைஞ்சிருக்கு.. ஒட்ட வச்சுக்கலாம்." என்று ஆறாவது கார்டன் நிறைக்கும் பொம்மைகள்

முக்கியமான நினைவுகளாய் ஒவ்வொன்றும் பெட்டிகள் நிறைக்கிறது

வீடு மாறுதலில் எல்லோருக்கும் ஒவ்வொன்று இருக்கிறது நினைவு கூற!

போயிட்டு வரேன். அந்தப் புஸ்தகத்தை எல்லாம் கடையில போட்டுராதீங்கோ...

19 comments:

கிருஷ்ணமூர்த்தி said...

விதூஷ்!

நினைவுகள் அற்புதமாகப் பொங்கியிருக்கிறது.

தலைப்பை வீடு மாறுதல் என்றே வைத்திருக்கலாம்!

நினைவுகள் இருப்பதெல்லாம் இந்தக் கூட்டுடன் இருக்கும் வரைதான்! கூடு மாறினால், இந்த நினைவுகளும் போய்விடுமே!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நினைவுகள் அற்புதம்

அமைதிச்சாரல் said...

//வீடு மாறுதலில் எல்லோருக்கும் ஒவ்வொன்று இருக்கிறது நினைவு கூற!//

நிச்சயமாக, காலத்துக்கும்.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

அருமையா எழுதி இருக்கீங்க! நினைவைக்கிளறும் எதையுமே குப்பையாய்ப் பார்க்க முடிவதில்லை. :(

ரௌத்ரன் said...

:)

மணிஜீ...... said...

வாஸ்தவம்தான்..

பாச மலர் / Paasa Malar said...

மலரும் நினவுகள் வந்து போனது..

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

நல்லாயிருக்குங்க .

நேசமித்ரன் said...

இன்னும் கொஞ்சம் பேசி இருக்கலாம் போல

தலைப்பு நல்லா இருக்கு :)

பா.ராஜாராம் said...

fantastic sago! :-)

//நினைவைக்கிளறும் எதையுமே குப்பையாய்ப் பார்க்க முடிவதில்லை//

yes!

அன்புடன் அருணா said...

இதே நிலையில் நான் கூட கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்னு நான் கூட எழுதியிருக்கேன் விதூஷ்!

அம்பிகா said...

நினைவைக்கிளறும் எதையுமே குப்பையாய்ப் பார்க்க முடிவதில்லை.
உண்மைதான். அருமையான பதிவு.

அன்புடன்-மணிகண்டன் said...

ந-ல்-லா---இ-ரு-க்-கு....! :)

Sundar சுந்தர் said...

நினைவுகள் கலக்கல்!

ராமலக்ஷ்மி said...

மற்றவர் நினைவுகளையும் எழுப்பிடும் பதிவு. மிக அருமை.

உயிரோடை said...

வீடு மாறும் விசயம் இருக்கே அப்பா... நல்லா எழுதி இருக்கீங்க வித்யா.

V.Radhakrishnan said...

நினைவுகள் என்றும் சுகமானவை. சில நேரங்களில் வலியும் தரும். நல்லா எழுதி இருக்கீங்க.

ஹுஸைனம்மா said...

வீடு மாறப்போறீங்களா? :-))

நல்ல நினைவுகூறல்கள்!!

நட்புடன் ஜமால் said...

கட்டுறை வடிவில் கவிதையாய் ...

Post a Comment