பரிமாணங்கள்

1
விலகுகிறது திரை
இருண்டதாகவேத் தெரிகிறது நிழல்கள்
மௌனமாகவே நிற்கின்றன மரங்கள்
எல்லா மரங்களும் வெட்டப் பட்ட பின்
வெளிச்சமாய் இருக்கின்றன சாலைகள்

***********

2
சமையலறையில் வெறுமே
நினைவுகளைத்தான் கிளறுகிறாய்
உனக் கெதற்கு கைகடிகாரம்?

*************
3
**நம்பிக்கை**

காண் அல்லது காணாதே
பேசு அல்லது பேசாதே
மூழ்கு அல்லது கரையொதுங்கு
செய் அல்லது .......
என்பதானது மட்டும் முடிவதேயில்லை

***************
4

இந்த வண்ணங்களெல்லாம்
வானத்துடையதா?
தண்ணீருடையதா?

***************
5

மகாராஜா வீட்டு
சமையலறையில்
எல்லாமிருந்தது
நெருப்பைத் தவிர!

***************

16 comments:

எறும்பு said...

Present madam...

நந்தாகுமாரன் said...

:(

anujanya said...

இரண்டாவது கவிதை ரொம்பப் பிடித்திருக்கிறது.

அனுஜன்யா

Nathanjagk said...

1
Fantasy
2
Realism
3
Prudence
4
Illusion
5
Sarcastic?

Greetings Vidhoosh!!

உயிரோடை said...

//விலகுகிறது திரை
இருண்டதாகவேத் தெரிகிறது நிழல்கள்
மௌனமாகவே நிற்கின்றன மரங்கள்
எல்லா மரங்களும் வெட்டப் பட்ட பின்
வெளிச்சமாய் இருக்கின்றன சாலைகள்//

என்ன‌வோ குறையுது. அடுத்த‌ மூன்று வ‌ரிக‌ளோடு ஒன்ற‌வில்லையா அல்ல‌து அடுத்த‌ மூன்று வ‌ரிக‌ள் ம‌ட்டுமே போதுமான‌தா?

Unknown said...

இந்த வண்ணங்களெல்லாம்
வானத்துடையதா?
தண்ணீருடையதா? //

அழகு :)

நேசமித்ரன் said...

ஆஹா!

வெளிச்சமாய் இருக்கின்றன சாலைகள்
வெறுமே கைகடிகாரம்
இந்த வண்ணங்களெல்லாம்
வானத்துடையதா?
தண்ணீருடையதா?
எல்லாமிருந்தது
நெருப்பைத் தவிர....

நல்லா வந்திருக்கு விதூஷ்

ஜெகன் பின்னூட்டம் க்ளாசிபைடு

வாழ்த்துகள் தொடருங்க

பா.ராஜாராம் said...

1, 2, 4

நல்லாருக்கு சகோ!

ஹுஸைனம்மா said...

//சமையலறையில் வெறுமே
நினைவுகளைத்தான் கிளறுகிறாய்
உனக் கெதற்கு கைகடிகாரம்?//

ம்ம்.. பிரஷர் குக்கரை நேரம்பாத்து இறக்க!!

//மகாராஜா வீட்டு
சமையலறையில்
எல்லாமிருந்தது
நெருப்பைத் தவிர!//

எலெக்ட்ரிக் அடுப்பு வச்சிருக்காரோ?

(சாரி, வந்ததுக்கு எதாச்சும் சொல்லணுமேன்னு...)

:-)))

Ashok D said...

1.//வெளிச்சமாய் இருக்கின்றன சாலைகள்//
எரிச்சலாய் இருக்கின்றன சாலைகள் என்று தானே வரனோம்

2.சமையலறை புழுக்கமா தான் இருக்கும் அங்க எதுக்கு கைகடிகாரம்...? சரிங்க

3. யாருன்னா குத்துனா திருப்பி கும்மாங்குத்து

4. இரண்டுமே இல்லை எல்லாம் கண்கள் காட்ற கோலம்

5. நெருப்பு இருந்தாதானே புகையும்

இதுவும் பரிமாணங்கள்தாங்க. ஆனா சீரியஸான பரிமாணங்களுங்கோ... :)


எனக்கு மொதொ கவிஜ பிடித்ததுங்க...

நசரேயன் said...

//
விலகுகிறது திரை
இருண்டதாகவேத் தெரிகிறது நிழல்கள்
மௌனமாகவே நிற்கின்றன மரங்கள்
எல்லா மரங்களும் வெட்டப் பட்ட பின்
வெளிச்சமாய் இருக்கின்றன சாலைகள்//

கண்ணிலே பிரச்சனை?

//
சமையலறையில் வெறுமே
நினைவுகளைத்தான் கிளறுகிறாய்
உனக் கெதற்கு கைகடிகாரம்?
//

ம்ம்.. எவ்வளவு நேரம் கிளறுனென்னு கணக்கு எடுக்க


//
காண் அல்லது காணாதே
பேசு அல்லது பேசாதே
மூழ்கு அல்லது கரையொதுங்கு
செய் அல்லது .......
என்பதானது மட்டும் முடிவதேயில்லை
//

படி அல்லது படிக்காதே
எழுது அல்லது எழுதாதே
கொல் அல்லது எழுதி கொல்
என்பதானது மட்டும் முடிவதேயில்லை

//
இந்த வண்ணங்களெல்லாம்
வானத்துடையதா?
தண்ணீருடையதா?
//

கண்டிப்பா டாஸ்மாக் தண்ணீருடையதுதான்

//
மகாராஜா வீட்டு
சமையலறையில்
எல்லாமிருந்தது
நெருப்பைத் தவிர!
//

நீங்க பக்கோடா செய்யப் போறீங்கன்னு, அவங்களுக்கு முன்னாடியே தெரியுமோ என்னவோ

Chitra said...

மகாராஜா வீட்டு
சமையலறையில்
எல்லாமிருந்தது
நெருப்பைத் தவிர!


..... very nice.

யாத்ரா said...

எல்லாமே ரொம்ப நல்லா இருக்குங்க

ஹேமா said...

முதாலவதும் நான்காவதும்
மிகவும் ரசனை விதூஷ்.

பத்மா said...

வானத்துடையதா தண்ணீருடையதா கேள்வியே வசீகரம்

"உழவன்" "Uzhavan" said...

அருமையான தொகுப்பு

Post a Comment