இனிமே இப்டி செய்வியா

ஐம்பதாவது கவிதைப் பதிவு இது.

என் காது திருகி "இனிமே இப்டி செய்வியா? செய்யமாட்டேன்னு சொல்லு" என்று மிரட்டும் ஆத்ம நண்பர்கள் மூன்று பேருக்கும்!

கடைசி வரை ஏனோ மூன்று பேருமே "கதை மட்டும் எழுதாதே" என்று சொல்லவேயில்லை. அதுனால... கண்டிப்பாய் கதை எழுதுவேன் மீண்டும்.. :-))



***எண்ண அலைகள் சுந்தர்***

எப்போதும் போலத்தான்...
பேசிக்கொண்டே இருக்கிறான்!
அவ்வப்போது நான் சொல்வதற்கு
சிரித்தும் கொள்கிறான்!
காது திருகி தலையில் குட்டி
இன்னும் பார் இன்னும் படி
என முடித்துவிட்டு
"சரியா பேசமுடிலை, வீட்டுக்கு போய்ட்டு
மறுபடி கூப்பிடறேன்" என்றும் சொல்லி
அவன் அன்பளிப்பாய் கொடுத்த
புத்தகத்தை நினைவூட்டுகிறான்
"டு கில் எ மாக்கிங் பேர்ட்"

***நேசமித்திரன்***

ஏணி சின்னதுதா னெனக்கருதி
ஒவ்வொரு படிகளாய்
தாவித் தாவிக் கடக்கிறேன்
யுகங்களாலான பயணம் தனித்தே
என்றாலும் அங்கே...
என்னையே கண்டேன்
அவனே இருக்கிறான்!

***கருவேல நிழலான்***

வானம் போல எப்போதேனும்
வரும் காற்றில் உதிர்ந்து
அடிக்கடி வருவதில்லை
வாசல் நிறைக்கும் சருகுகள்

கொஞ்சம் சுவரும், அகலமாய்க் கதவும்
கொண்ட வீட்டுக்குள் சென்று
தொலைந்து போகும் பயம் போல
அடிக்கடி வருவதில்லை
பாராமல் தாண்டிச் சென்று விடும் ஆவல்

***************************

39 comments:

VISA said...

//கடைசி வரை ஏனோ மூன்று பேருமே "கதை மட்டும் எழுதாதே" என்று சொல்லவேயில்லை. அதுனால... //


ஏதோ நீங்களாவே புரிஞ்சுக்குவீங்கன்னு விட்டிருப்பாங்க. எதுக்கும் இன்னொரு தரம் கன்பார்ம் பண்ணிகோங்க.

VISA said...

நான் தான் பஸ்ட் செக்கண்டு ரெண்டும். ரெண்டு வடை.

நட்புடன் ஜமால் said...

என்னையே கண்டேன்
அவனே இருக்கிறான்

----------

அருமைங்க.

--------------------

செய்யமாட்டேன்னு எத சொல்ல சொன்னாங்க

---------------

கதை எழுதவேண்டாம்னு சொல்லலைன்னா - வேற எதையோ எழுதவேண்டாம்ன்னு சொன்னாங்களா

Radhakrishnan said...

வாழ்த்துகள், பல கவிதைகள் பெருகட்டும். அந்த மூவரும் விரைவில் மனமாற்றம் பெறுவார்கள்.

க.பாலாசி said...

//கொஞ்சம் சுவரும், அகலமாய்க் கதவும்
கொண்ட வீட்டுக்குள் சென்று
தொலைந்து போகும் பயம் போல//

சூப்பர்.... வாழ்த்துக்கள்....

Radhakrishnan said...

அந்த மூவரும் விரைவில் மனமாற்றம் பெற்று கவிதைகள் எழுதச் சொல்வார்கள் என பொருள் கொள்ளவும். :)

முன்னர் எழுதும்போது திருத்தமாக எழுதாமல் விட்டுவிட்டேன்.

நேசமித்ரன் said...

வீடெங்கும் எறும்பூறும் ஓரங்களில் கோலமிட்டு செஞ்சாந்து கரையெழுதி
உள்ளங்கை குமித்து பிரிய தெய்வம் பாதங்கள் செய்த வீட்டில் மகளோடு இறங்கினேன். பாதக் காரணம் கேட்டவள்
கருத்தவனின் பாதமேன் வெளுப்பாய் என்றாள்
கைகாட்டிய திசை இது

*********************************
பிள்ளைத்தமிழ் பெரும் ஞானம்
நீரூறும் சமையல் யாவும் எழுதித்தீராத மையில் கவியும்
மூன்றும் பிசைந்து
*********************************
இனிதுகள் துவங்கி நல் வாழ்வில்
இமை நனைக்கும் காலம்
அறிதுயில் பொழுதின் விழிப்பு
ஆகாசம் நிறைக்கட்டும் சுவடு
***********************************

:)

VELU.G said...

அருமையான கவிதைகள்

வாழ்த்துக்கள்

பாலா said...

ஏங்க.... அவங்க மூணு பேரும்.. கவிதை எழுத வேணாம்னு சொல்லலையா?

கொலைகாரப் பசங்க!!:)

அகநாழிகை said...

:)

பா.ராஜாராம் said...

என்ன சகோ?

நேசனையும் என்னையும் பத்தி எழுதியது போல இருக்கு?

இருங்க, இருங்க,

நசர், நசர்,

காது திருவி கொட்டும். பொறவு வந்து பார்க்கிறேன். சத்தத்தை பார்ப்பேன் என்பதா? :-)

மணிஜி said...

கொஞ்சம் தண்டோரா போடக்கூடாதா அம்மணி?

நசரேயன் said...

//ஐம்பதாவது கவிதைப் பதிவு இது.//

அல்லோ மேடம், நீங்க வரிக்கு கீழே வரியா மட்டும் எழுதுங்க, அது கவுஜையா, கவிதையான்னு நாங்க சொல்லிக்கிறோம்.

//
கடைசி வரை ஏனோ மூன்று பேருமே "கதை மட்டும் எழுதாதே" என்று சொல்லவேயில்லை. //

அந்த ஒரு இலாகாதான் இவ்வளவு நாள் நல்லா இருந்தது.

//கதை எழுதுவேன் மீண்டும்//

கதைக்கு எல்லாம் காத்தை திருக மாட்டாங்க, உங்க பக்கோடாவை வச்சி எறிவோம்.

//"டு கில் எ மாக்கிங் பேர்ட்"//

ஒ, தட்ஸ் வோய் யு ஆர் கில்லிங் அஸ்..

//என்னையே கண்டேன்
அவனே இருக்கிறான்!//

எதுக்கு கொண்டு போன ஏணியை தலையிலே போடவா ?

//பாராமல் தாண்டிச் சென்று விடும் ஆவல்//

இப்படி எல்லாம் கவுஜை
எழுதி கொல்லுவீங்கன்னு
பார்த்தும் பாராமல்
போய் விடுவதே நலம்

செ.சரவணக்குமார் said...

50 வது கவிதைப் பதிவிற்கு வாழ்த்துகள். நேசமித்ரனும், பா.ராவும் எனக்கும் பிரியமான நண்பர்கள். முதலாமவரையும் வாசிக்க வேண்டும்.

பா.ராஜாராம் said...

self-employed கேட்டகரியில் ஓட்டு போட்டேன் சகோ. ;-)

Ashok D said...

சுந்தர்க்கு ’ர் ’போட்டுயிருக்கீங்க, நிழலான் மற்றும் நேசன் ‘ன்’ போட்டுயிருக்கீங்க... எந்த விதத்தில் நியாயம்...?











சும்மா லொள்ளுங்க...




நல்லாயிருக்குங்க மூனும்...
சரி ஐம்பதாவது கவிதைன்னு சொன்னீங்க... அதுதான் எங்கேன்னு தெரியல :(

ஓக்கே ஓக்கே...
பின்னூட்டத்தில நேசனின் கவிதையிருக்கு...
50-க்கு வாழ்த்துக்கள் :)

பா.ராஜாராம் said...

ப்ரியா நசர், வந்தாச்சா?

ஹா..ஹா..

நல்லா கொட்டும்! :-)

பா.ராஜாராம் said...

மகனும் வந்தாச்சா?

:-)

50-வது கவிதை எங்கே? அதானே..

பா.ராஜாராம் said...

//சுந்தர்க்கு ’ர் ’போட்டுயிருக்கீங்க, நிழலான் மற்றும் நேசன் ‘ன்’ போட்டுயிருக்கீங்க... எந்த விதத்தில் நியாயம்...?//

கழக மற்றும் கலக கண்மணியே.. :-)))

பா.ராஜாராம் said...

என்னங்கையா...

கும்மிக்கு ஆள் இல்லையா?

மைக் டெஸ்டிங்...

ஒன்,டு, கொர்ர்ர்ர்..

bye.

Ashok D said...

//கழக மற்றும் கலக கண்மணியே.. :-)))//

சித்தப்ஸ் பின்னூட்டங்கள்ல மட்டும் 100% லொள்ளு..

பதிவுல மத்ததெல்லாம் :)

நசரேயன் said...

இருக்கியாளா ..?

Vidhoosh said...

பக்க வடை சாப்பிட்ட பரமசிவன் வாழ்க... :)) என்னத்த புரிஞ்சு என்னத்த எழுதி.. ஹும்ம்

ஜமால்.. என்னவோ போங்க.. கதை விடாதேன்னு சொல்லிட்டாங்க

ராதாகிருஷ்ணன் சார். இப்படியா காலை வாரி விடறது.

நேசன். அட இது.. கவிதை. என் வரிகளை பொறுத்தருள்க. :-))

நன்றி பாலாசி.

நன்றி டிவிஆர் சார்.

நன்றி வேலு ஜி.

பாலா.. எங்கங்க போயிட்டீங்க. நாங்க வலை வீசி தேடி சுறா தான் மாட்டுது.

வாங்க வாசு. :-)

வாங்கண்ணே.. சரிதான் - நசர் கூட சேந்தாச்சா.. கொட்டுற கொட்டுல தலை வடிவேல் ரேஞ்சுக்கு ஆகப் போகுது...

மணிஜி.. அது சரி. நீங்க உமா சரி செய்யவே நேரம் போறலை. இந்த அழகுல நட்பெல்லாம் எங்க பாராட்டுறது..

அய் ... யோ... நசரேயா. :-))

நன்றிங்க சரவணா ... சுந்தர் இப்போ எழுதறதில்லை.

அசோக். அப்போ வரி வரியா வரிஞ்சு கட்டினதுன்னு சொல்லிக்கலாம்.

ம்ம்ம்ம் நடக்கட்டும்ம்... ஸ்டார்ட் மூஜிக்

Vidhoosh said...

வூட்டையாவும் பொண்ணும் வந்தாச்சு.. நான் இப்போ கிளம்பறேன். பதிவுல ஏதும் அதகளம் பண்ணீங்க... தெரியும் சேதி..
.

காமராஜ் said...

அபாரம் வித்யா.

மரா said...

நல்லா இருக்கு கவிதை.

Sundar சுந்தர் said...

ஆமாம் அந்த புக்கை சுட்டது நீ தானா? இவ்ளோ நாள் கழிச்சு அது அன்பளிப்பா மாறிடிச்சா? சரி போ. அதெல்லாம் படிச்சுக் கூட கதை எழதற அளவுக்கு உனக்கு ரொம்பத் தான் தில்.

இப்பவாவது தப்பித்ததே கதை. ஆனால் பாவம் இந்த கவிதை. எனக்கான கவிதை மட்டும் வதைப்பட்டிருக்கே?

என்னை திட்டனும்ன்ன புரியற மாதிரி திட்டு.

Vidhoosh said...

நன்றி காமராஜ் சார்.

நன்றி மயில்ராவணன்.

சுந்தர்: நோ பப்ளிக் டாமேஜ். நண்பன்தானே.. :-)) உன்னை திட்டணும்னா கதை இல்ல எழுதி இருப்பேன். :))
கவிதைல மட்டும் என்ன வாழுது ரெண்டும் ஒண்ணுதான்னு நீ புலம்பிக்கறது கேக்குது.. கிர்ர்..

விக்னேஷ்வரி said...

விதூஷ் என்னது இதெல்லாம்....

நல்லாருக்கு. :)

creativemani said...

முக்கனி.. :)
50-க்கு வாழ்த்துக்கள்!!!

Unknown said...

"டு கில் எ மாக்கிங் பேர்ட்" //


ஏணி சின்னதுதா னெனக்கருதி
ஒவ்வொரு படிகளாய்
தாவித் தாவிக் கடக்கிறேன்..//

வாசல் நிறைக்கும் சருகுகள்
தொலைந்து போகும் பயம் போல..//

ரொம்ப நல்லா இருக்கு
:)

ஆதவா said...

மூன்றாவது கவிதை பிடித்திருந்தது. அதை நன்கு வாசிக்கும் பொழுது "ஆமாம்ல" என்று எனக்கு நானே சொல்லிக் கொள்ள வைத்தது.

அப்பறம்,

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள்.

அது சரி(18185106603874041862) said...

//
கடைசி வரை ஏனோ மூன்று பேருமே "கதை மட்டும் எழுதாதே" என்று சொல்லவேயில்லை. அதுனால... கண்டிப்பாய் கதை எழுதுவேன் மீண்டும்.
//

இவர் அவர் அவள் கதை மூணு பாகமும் இப்ப தான் படிச்சேன்...நல்ல நேரஷன்...எனக்கு பிடிச்சிருக்கு.

ஆனா, ரொம்ப கட் பண்ணிட்டீங்க போல..."அவள்" கேரக்டர் சரியா எஸ்டாபிளிஷ் ஆகலை... தவிர, ரெண்டு வருஷமா தற்கொலை பண்றதுக்காக கயிறை தொங்கவிட்டிருக்கவரு, இன்னொரு ஆளுக்கு நடந்த ஒரே ஒரு ஆக்ஸிடன்ட்ல முடிவை மாத்திக்கறதுக்கு பெரிய காரணம் எதுவுமில்லை...தற்கொலைங்கிறது ஒரு மாதிரி பெரிய முடிவு...அந்த மாதிரி ஆளுங்கல்லாம் அவ்ளோ சீக்கிரமா மாற மாட்டாங்க....மூணு பேருமே மாறுறது ஒரு மாதிரி டெம்ப்ளேட் முடிவு மாதிரி இருக்கு.

(தப்பா எடுத்துக்காதீங்க...சொல்லணும்னு தோணிச்சி..அவ்ளோ தான்...ஆனா, நீங்க எழுதியிருக்க ஸ்டைல் ரொம்ப நல்லாருக்கு...இன்னும் நிறைய எழுதுங்க...எழுதுங்கள், அது தான் எழுதுவதின் ரகசியம்னு சு.ரா சொல்லிருக்காராம்...ஜெயமோகன் சொன்னாரு)

அது சரி(18185106603874041862) said...

//
வானம் போல எப்போதேனும்
வரும் காற்றில் உதிர்ந்து
அடிக்கடி வருவதில்லை
வாசல் நிறைக்கும் சருகுகள்
//

இது நல்லாருக்கு....

சருகுகளும் வரா சபிக்கப்பட்ட வாசல்களும் உண்டு...நிறைய சுவரும் மூடப்பட்ட சிறிய கதவுகளும் கொண்ட வீடுகளின் இருட்டின் நடுவில் தேடிக் கொண்டிருக்கிறார்கள் வெளிச்சம்.

Thenammai Lakshmanan said...

நேசனையும் பாராவையும் நன்கு தெரியும் விதூஷ் .. அருமை..:))

Unknown said...

//சிரித்தும் கொள்கிறான்!//

இப்படி வரலாமா? இந்த இடத்தில் கொஞ்சம் டிங்கரிங் தேவையோன்னு தோணுது

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்குங்க...ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்..

Admin said...

அருமை.... வாழ்த்த்துக்கள்

ராகவன் said...

அன்பு வித்யா,

அழகான கவிதைகள், மூன்று கவிதையிலும் வரும் கடைசி வரிகள், அற்புதமாய் இருக்கிறது.

வாழ்த்துக்கள் வித்யா!

அன்புடன்
ராகவன்

Post a Comment