பிஜ்லி கி ராணியும் ஹவா ஹவாயியும்

ஸ்ரீதேவி பற்றிய பதிவாக இருக்கும் என்று எதிர்பார்த்து வந்து ஏமாந்து போனதை யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க.


பிஜ்லி கி ராணியும் ஹவா ஹவாயியும் எங்க வீட்டுக்கு வந்து என்னையும் ராணியாக்கிட்டாங்க. யாருகிட்ட... யாருகிட்டேன்னேன்? நான் இன்னும் இளவரசிதானாக்கும்...

நன்றி புதுகை தென்றல். வைரக் கல் கொஞ்சம் பெரிசாவே இருந்துச்சு. நானே வைரங்கள் எல்லாத்தையும் மட்டும் எடுத்து வச்சுக்கிட்டு இந்த ராணி கிரீடத்தை மட்டும் இவங்க எல்லோருக்கும் அன்புடன் தருகிறேன். நீங்க உங்களுக்கு பிடிச்சா மாதிரி ஜேடோ, ரூபியோ பதிச்சுக்கோங்க.

கே.வீ.ஆர். - ஸ்ரீதேவி பற்றிய பதிவாக இருக்கும் என்று எதிர்பார்த்து வந்து ஏமாந்து போனதை உங்கள் வீட்டம்மிணி கிட்ட சொல்லிட்டு இந்த கிரீடத்தை அவங்க தலையில் வச்சுடுங்க.

  • "நூறு கும்மி" புகழ் டைரக்டர் "தாமிரா"ஆதிமூலகிருஷ்ணன்
  • புனைவு வுனைபு னைபுவு புகழ் நர்சிம்
  • உமா புகழ் மணிஜி
  • அதே உமா மற்றும் சில கவிதைகள் புகழ் பா.ராஜாராம்
  • அதேதே உமாவுக்காக ஜெட் டிக்கெட் புகழ் 'மொக்கை பதிவர்' கவிஞர் நேசமித்திரன் - அந்த நான் ரீபண்டு டிக்கட்டை எவ்ளோ தரம் கான்செல் செஞ்சீங்கண்ணே.

போன்ற இன்னும் ஆண் பதிவர்கள் எல்லோரும் தெகிரியமா தங்கமணி பதிவு இன்னும் எழுதி கொண்டிருக்காங்கன்னா, இவங்க எழுதும் போது அவங்க வீட்டில் அவங்களை 'ஹுக்கும்... என்ன வெட்டிக்கு' என்று புலம்பினாலும், பேனா நிப்பை முறித்து கம்ப்யூட்டரை உடைத்து தொந்தரவு தராமல் இருக்கிறதே காரணம் என்பதால் மட்டுமே என்பது எனக்கும் தெரிந்த உண்மை என்பதாலும் எல்லா வீட்டம்மிணிகள் தலையிலும் இந்த கிரீடத்தை வைக்குமாறு இப்போதைக்கு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அப்புறம் நம்ம சமையல் பதிவுக்கு (vidhya's kitchen) பிஜ்லி கி ராணி இந்த அவார்டை கொடுத்திருக்காங்க. இந்த விருதை தர்ஷிணியை சுமந்திருந்த போது எனக்கு முதல்முதலா மசக்கை சாப்பாடு போட்ட எங்க பாஸ்கரோட அத்தை சமையல் ராணி "கமலா அத்தை"க்கு கொடுக்கிறேன். நிஜமாவே புரையேற வைக்கும் சாப்பாடும் அன்பும்...Cook at Ease என்ற தளத்தில் வித விதமாய் சமைக்கிறார். உலகமெங்கும் இந்த சமையல் ராணிக்கு அடிமைகள் உண்டு, நானும்.


நன்றி ஜலீலா (பிஜ்லி கி ராணி) மற்றும் புதுகை தென்றல் (ஹவா ஹவாயி).

ஸ்வரோஸ்கி கிறிஸ்டல் வகை கண்ணாடி பொருட்கள் என்றால் நிறையாவே பிடிக்கும் என்பதையும் இங்கே சொல்லிக்கிறேன்.

22 comments:

ராமலக்ஷ்மி said...

கிடைத்த விருதைப் பகிர்ந்திருக்கும் விதம் அருமை:))! வீட்டம்மிணிகளிடம் கொண்டு சேர்த்தார்களா என்பதை மறக்காமல் செக் பண்ணிடுங்க:)!

உங்களுக்கும் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்:)!

சிவாஜி சங்கர் said...

//ஜெட் டிக்கெட் புகழ் 'மொக்கை பதிவர்' கவிஞர் நேசமித்திரன் ///
ஒரு பதிவுக்கேவா...?

//புனைவு வுனைபு னைபுவு புகழ் நர்சிம்//
கிகிகி....

வாழ்த்துக்களும் புன்னகையும்....... குட் க்க்கா......... :)

நேசமித்ரன் said...

/.ஜெட் டிக்கெட் புகழ் 'மொக்கை பதிவர்' கவிஞர் நேசமித்திரன் ./

நன்றி நன்றி நன்றி

ஹாஹ்ஹஹஹா

விருதுக்கு நன்றிங்க விதூஷ்

கிரீடம் வீட்டம்மணிக்கா ..
இளவரசில்ல பஞ்சாயத்துக்கு வருவாங்க

சரி சரி வித்யா ஆண்டி வீட்டுக்கு போய் தர்ஷினிகிட்ட வாங்கிக்கலாம்னு சொல்லி வைக்கிறேன் இப்போதைக்கு

:)

மத்த மக்கமாருக்கு வந்தனமுங்க வந்தனம்

வாழ்த்து சொல்லிக்கிறேன் சாமியோவ்

Kanchana Radhakrishnan said...

உங்களுக்கும் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்

Vidhoosh said...

இதென்ன அநியாயம்...மெனக்கெட்டு ஹைலைட் வேற செஞ்சு இருக்கேன்.. யாருமே கண்டும் காணாத மாதிரி போனால் எப்படி?

//ஸ்வரோஸ்கி கிறிஸ்டல் வகை கண்ணாடி பொருட்கள் என்றால் நிறையாவே பிடிக்கும் என்பதையும் இங்கே சொல்லிக்கிறேன்.////

நசரேயன் said...

//ஸ்ரீதேவி பற்றிய பதிவாக இருக்கும் என்று எதிர்பார்த்து வந்து ஏமாந்து போனதை யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க.//

அல்லோ அந்த ௬ட்டத்திலே நான் கிடையாது என்பதை பணிவாக தெரிவித்து கொள்கிறேன்.

Chitra said...

விருது பெற்ற உங்களுக்கு, வாழ்த்துக்கள்!
உங்களிடம் இருந்து விருது பெறும் அனைவருக்கும், வாழ்த்துக்கள்!

செ.சரவணக்குமார் said...

//உமா புகழ் மணிஜி
அதே உமா மற்றும் சில கவிதைகள் புகழ் பா.ராஜாராம்
அதேதே உமாவுக்காக ஜெட் டிக்கெட் புகழ் 'மொக்கை பதிவர்' கவிஞர் நேசமித்திரன் - அந்த நான் ரீபண்டு டிக்கட்டை எவ்ளோ தரம் கான்செல் செஞ்சீங்கண்ணே.//

உமா இப்ப உலகப் புகழ் ஆகிட்டாங்க. நேசமித்ரன்தான் இதுல ரொம்ப முக்கியமானவர்னு நெனைக்கிறேன். மணிஜீ பதிவுல அவர் அடிச்சிருக்குற கும்மிய பாருங்க.
ஆனாலும் பா.ரா?????? கொஞ்சம் டேமேஜ் ஜாஸ்திதான்.

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

pudugaithendral said...

ஹவா ஹவாயி ஹை நல்லாயிருக்கு இந்தப் பேரு. (ஸ்ரீதேவியோட இந்தப்பாட்டு ரொம்ப பிடிக்கும்)

பனித்துளி சங்கர் said...

வழங்கிய விருதுக்கு மிகவும் சிறப்பாக பதிவு செய்து இருக்கிறீர்கள் .மிகவும் அருமை உங்களின் முயற்சி . வாழ்த்துக்கள் !

Ananya Mahadevan said...

விருது வாங்கினவங்களுக்கு வாழ்த்துக்கள்!!
விருதுல ஒரு ஸ்லிப் அட்டாச் பண்ணி தங்கமணியாகியா நான் பெற்றுக்கொண்டேன்னு ஒரு வவுச்சர் வெச்சுடுங்க.. :))

பை தி வே, நான் இந்த பாட்டை
”பிஜ்லி கிரானே மை ஹூ ஆயி”(Bijli giraane main hoon aayi)ன்னு
நினைச்சுண்டு இருந்தேன்.
அப்போ பிஜிலி கி ரானி யா?

பா.ராஜாராம் said...

அடாடா...நமக்கும் உண்டா? இதுக்கு நன்றி சகோ!

போட்டியாளர்கள் இருவருக்கும் கொடுத்துருக்கீங்களே...இதுக்கு கண்டனம் சகோ. :-)

//போன்ற இன்னும் ஆண் பதிவர்கள் எல்லோரும் தெகிரியமா தங்கமணி பதிவு இன்னும் எழுதி கொண்டிருக்காங்கன்னா, இவங்க எழுதும் போது அவங்க வீட்டில் அவங்களை 'ஹுக்கும்... என்ன வெட்டிக்கு' என்று புலம்பினாலும்//

இதுக்கு ஹி..ஹி..சகோ.

பா.ராஜாராம் said...

//வீட்டம்மிணிகளிடம் கொண்டு சேர்த்தார்களா என்பதை மறக்காமல் செக் பண்ணிடுங்க:)!//

என்னா வில்லத்தனம் சகா.. :-)

வல்லிசிம்ஹன் said...

விருது வித்யாவுக்கும் கொடுத்த தென்றலுக்கும்,ஜலீலாவுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
இப்பவே ஸ்விஸ் ஸ்வரோவ்ஸ்கி 15 காரட் அனுப்பி வைக்கிறேன். பெற்றுக் கொண்டு ரசீது அனுப்பவும்.
மனமார்ந்த வாழ்த்துகள் வித்யா.

Deepa said...

:(( உண்மையில் அப்படித் தான் ஏமாந்து போனேன். நியாயமாங்க? எனக்கு அந்தப் பாட்டும் ஸ்ரீதேவி டான்ஸும் ரொம்ம்ம்ம்பப் பிடிக்கும்!
விருதுக்கு வாழ்த்துக்கள்!

அன்புடன் அருணா said...

அடடா!இப்பிடில்லாம் விருது கொடுக்கிறாங்களா!

மரா said...

வாழ்த்துக்கள் மேடம்.

Vidhoosh said...

நன்றி ராமலக்ஷ்மி :)

நன்றி சிவாஜி ஷங்கர் :) ஒரே பதிவிலேயே 100 அடிச்ச பதிவுலக டெண்டுல்கர்-ங்க நேசன்.

நன்றி நேசன். இளவரசிக்கும் ஒன்னு செஞ்சு கொடுத்துட்டா போச்சு.

நன்றி டி வி ஆர் சார். காஞ்சனா மேடம்.

நன்றி நசரேயன். ஹா ஹா... எப்டில்லாம் சமாளிக்க வேண்டியதாக இருக்கு.. அவங்களும் இப்போ கிழவிதாங்க. :))

நன்றி சித்ரா. :)

நன்றி சரவணா.. (பா.ரா. வோட சரவணா-வா... நீங்க..). மரம் சும்மாவே இருந்தாலும் காற்று விடுவதாயில்லை... அப்டீங்கரா உமா .. பார்றா...

நன்றி தென்றல். :) naughty eyes ஸ்ரீதேவிக்கு .. இல்லீங்க.

பனித்துளி... நன்றிங்க.

நன்றி அனன்யா.. எப்படி வேணா வச்சுக்கலாம்.. நம்ம இஷ்டம் தானே.. எப்டியும் ஸ்வரம் சேராமத்தான் பாடபோறோம்.. :))
வவுச்சர் வச்சாச்சு..

பா.ரா.. போட்டி இருந்தாத்தானே பொருளுக்கு மதிப்பு.. தோளுக்கு மேல தூக்குங்க இளவட்டக் கல்லை... ஆங்.. :))

வல்லி மேடம். ரொம்ப நன்றிங்க.. ஆஹா.. 15 கேரட்டா... மூச்சே நின்னுடும் போலருக்கே... ரொம்ப அழகா இருந்துதுங்க.. ரசீது அனுப்பிருக்கேன். :))

நன்றி ஜமால். :)

நன்றி தீபா .. :-) நியாயமே இல்லைதான்.. குறைந்தது ஸ்ரீதேவி போட்டோவாவது போட்டிருக்கணும் இல்ல.. :))

அருணா.. அட ஆமாங்கறேன்.. அதான் அடுத்த முறை ஸ்வரோஸ்கி "கண்ணாடி" கேட்டுருக்கேன். ஜம்முனு இருக்கும் இல்ல.. :))

நன்றி மயில்ராவணன். இதே பேருல என் கொழுந்தனுக்கு ஒரு ஆத்ம நண்பர் இருந்தாருங்க.. பத்து தலை மட்டும் கிடையாது, ஆஜானுபாஹுவா வால்மீகி வரிச்ச ராவணனையே நேர்ல பார்த்தா மாதிரியே இருக்கும். ஆனா இவருக்கு எல்லாமே நல்ல குணம். :-))

Vidhoosh said...

என்னாதான் இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்.. ஸ்ரீதேவி பத்தி எழுதலங்கரத்துக்காக இப்படி மைனஸ் வோட்டு போட்டா எப்படி... :)) யாரா இருந்தாலும் உங்களுக்கு நன்றி பாஸ்.. :))

Radhakrishnan said...

விருது பெற்றமைக்கும், விருது வழங்கியமைக்கும் வாழ்த்துகள்.

Jaleela Kamal said...

பகோடா பேப்பர் ராணி, வாழ்த்துக்கள்.

வந்து பார்க்க நேரம் இல்லப்பா அதான் இவ்வள்வு லேட்.

நல்ல பெயர் வைத்து இருக்கீங்க எனக்கும் புதுகை தென்றலுக்கும்.

வாழ்க்கையே ஒரு பிஜிலி தானே பா, தினம் ஓடிக்கொண்டு தானே இருக்கிறோம்.

Jaleela Kamal said...

ஹிந்தி டீச்சராச்சே ஹிந்ஹ்டியில் பட்ட சூப்பர் பட்ட பெயர் கொடுத்து இருக்கீங்க நன்றி.வித்யா

Post a Comment