நீங்கள் எல்லாம் எதற்காக எழுதுகிறீர்கள்

 

குட் பிளாக்ஸ்நன்றி விகடன்


எழுத வந்து இந்த 16-ஆம் தேதியோட ஒரு வருஷம் ஆகிவிட்டது. எம்பொண்ணோடவே போன ஞாயிறு முதல் முழு நேரமும் இருக்க வேண்டிய சூழலில் "நாட்டு நடப்பை" கவனிக்க முடியல. வரலாறில் முக்கியம் முதல் வருஷத்தை தாண்டுதல். bench-லே இருந்து கொண்டே ஒரு வருஷம் ஓட்டிவிட்டதை கவனிக்கத் தவறிவிட்டதை பதிவர்/நண்பர் பலாபட்டறை ஷங்கர் நினைவூட்டினார் நன்றி ஷங்கர் (ஷெரட்டன் பார்ட்டியை இப்போ மறந்துருவீங்க இல்ல : )).

இந்த ஒரு வருஷத்தை திரும்பிப் பார்த்தலில், வெளியிட்டு விட்ட, இன்னும் வெளியிடாமல் இருக்கும் என்ற வகையில் எழுதியவை மொத்தம் ஏறத்தாழ 250. இதில் ஆகவே இனியும் கங்கையை அசுத்தப்படுத்தாதீர்கள் என்ற பதிவை நான் எழுதியதில் எனக்கே ரொம்ப நிறைவாகவும், சந்தோஷமாகவும் கருதும் என் பொக்கிஷம் இந்தப் பதிவு.

வேறென்ன எழுதலாம்னு யோசிச்சு கொண்டிருக்கும் போதே, இன்னிக்குக் காலை நீங்கள் எல்லாம் எதற்காக எழுதுகிறீர்கள் (ரொம்ப அருமையான பதிவுங்க) என்ற வெ.ராதாகிருஷ்ணனின் பொத்தாம் பொதுவானக் கேள்விதான், என்றாலும் ரொம்ப நேரம் சிந்திக்க வைத்தது. நான் ஏன் எழுதறேன்?

பக்கம் பக்கமாக, மாங்கு மாங்குன்னு எழுதி சேமித்ததை, உழைப்பும் அருமையும் அறியாமல் கடையில் போடப்பட்டு, மொத்தமும் தொலைத்து விட்டதை உணர்ந்த போது, அந்தப் பழையப் பேப்பர் கடைக்காரனிடம் கெஞ்சிக் குப்பையைக் கிளறியதில் மிஞ்சியது நான் எழுதிய தொண்ணூறு பக்க கவிதை நோட்டு மட்டுமே. பாக்கியெல்லாம் நாமெல்லாம் சுவைத்து சாப்பிடும் பக்கோடாவின் எண்ணெய் உறிஞ்ச பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதாலேயே, பக்கோடா பேப்பர்கள் ஆனது. கொஞ்ச நஞ்சம் என் நினைவில் இருந்ததையும் தொலைத்து விடாமல் இருக்கவும், எனக்கு தெரிந்த கொஞ்சத்தை என் அக்கா பொண்ணு மற்றும் எம்பொண்ணு இருவருக்கும் எங்கேனும் விட்டுச்செல்ல எண்ணியே பதிவெழுத ஆரம்பித்தேன். யார் கண்டாங்க இதுகூட காணாமல் போகலாம், விதி வலியது என்று தவறாமல் backup செய்து கொள்வதை பழக்கி கொண்டேன்.

ரொம்ப மெல்லமாக என் நினைவில் இருக்கிறதை தட்டச்சி டிராப்டில் சேமித்துச் சென்று கொண்டிருந்த என்னை உரையாடல் கதை போட்டி மூலம் தீவிரமாக மீண்டும் எழுத வைத்த "பைத்தியக்காரன்" சிவராமனுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நன்றி தெரிவிக்கிறேன். இன்றும் : ) மேலும் ஆரம்பத்தில் இருந்து என் எழுத்தை நம்பி "இன்னும் எழுது" என்று தூண்டுதல் கொடுத்துக் கொண்டே இருக்கும் நந்தா, அகநாழிகை வாசு மற்றும் நசரேயன், இவர்களுக்கும். இன்றும் நான் எழுதுவதை படித்துக் கொண்டிருக்கும் எல்லோருக்கும் நன்றிகள் பல.

அனுபவித்து கற்றது, மற்றவரை கண்டு தெரிந்து கொண்டது, படித்துக் கொண்டே இருக்கும் போது எனக்கு ஆச்சரியம் கொடுத்தவை, கற்றுக் கொண்டிருப்பது, அறிய முற்பட்டு பக்கங்களை தோண்டி கொண்டிருக்கும் எல்லாவற்றையும், பைத்தியம் பிடிக்கும் தேடல்களையும், என் மனதை அரித்த கேள்விகளுக்கு தேடி தேடி கண்ட விடைகளையும், படித்து குதூகலித்த விஷயங்கள் எல்லாவற்றையும், இங்கே சேமித்தல் மற்றும் உங்களோடு பகிர்தல் என்பதே இங்கே நான் எழுதிக் கொண்டிருப்பதன் காரணம். சமஸ்கிருதத்தின் மீது தீராத தாகம். சமஸ்கிருதத்திலும் எழுதலாம் என்ற ஆவலை நடைமுறை படுத்துவதில் ரொம்ப சிக்கல்கள் இருந்ததாலும், என் தாய்மொழியில் எழுதுவது ஒரு நிலையில் நின்றே போய்விட, தமிழ் மறந்து விடுமோ என்ற பயம் வந்தது முக்கிய காரணம். மேலும் தாய்மொழியில் நினைத்ததை அப்படியே சொல்ல முடியும் வசதி. ஆரம்பத்தில் தமிழில் தட்டச்சு செய்யத் தெரிந்திருந்தாலும், கூகிள் transliterationனோடு திண்டாடினேன். அப்போது அகநாழிகை வாசு nhm மற்றும் MS writer பற்றி சொன்னார். கடைசியில் வானவில் மற்றும் அழகி-யை சென்றடைந்து nhm font convertor மூலம் மாற்றி இப்போதெல்லாம் தமிழில் தட்டச்சுவது ரொம்பவே எளிதாக இருக்கு.

மிக மிக முக்கியமாக இங்கே எழுதுவது பெரிய change, வழக்கமான அலுவல்கள், தினசரி வேலைகள், பல முகமூடியணிந்து, இன்ன பிற அடையாளங்கள் சுமந்து, என எல்லாவற்றையும் புறந்தள்ளி, மெதுவாக தொலைந்து கொண்டிருக்கும் விதூஷ், விதூஷாக மட்டுமே இருக்கும் இடமாகவே இதை நினைக்கிறேன். அம்மா மடியில் கொஞ்ச நேரம் அமர்ந்து, அவர் "விதூஷு" என்று கூப்பிடக் கேட்டுவிட்ட திருப்தி ஒவ்வொரு பதிவை வெளியிடும் போதும்.

வேறென்ன சொல்ல.. இந்த பதிவு எழுதக் தூண்டுதலாக இருந்த வெ.ராதாகிருஷ்ணன் மற்றும் பலாபட்டறை ஷங்கர் இருவருக்கும் நன்றி.

44 comments:

பிரியமுடன்...வசந்த் said...

//விதூஷ், விதூஷாக மட்டுமே இருக்கும் இடமாகவே இதை நினைக்கிறேன்//

கரெக்ட் வித்யா..

அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் ஏராளமான பணிச்சுமை, வருத்தம்,கோபம்,போன்ற நோய்களை குணமாக்கும் மருந்து இந்த பதிவெழுதுவது...

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள். தொடருங்கள்!

கபீஷ் said...

// அம்மா மடியில் கொஞ்ச நேரம் அமர்ந்து, அவர் "விதூஷு" என்று கூப்பிடக் கேட்டுவிட்ட திருப்தி ஒவ்வொரு பதிவை வெளியிடும் போதும்.
//

அருமை!

புதுகைத் தென்றல் said...

டெய்லி ஒரு போஸ்டாவது போடணுமாம்மா, உடம்பு சரியில்லாட்டியும் கூட போஸ்ட் போடறீங்கன்னு நேத்துதான் அம்ருதா கேட்டா. நான் சொன்ன பதில் இங்கு நான் நானாக் இருக்கிறேன்.

ஒரு வருட கொண்டாட்டத்துக்கு வாழ்த்துக்கள். பேரண்ட்ஸ் கிளப்பிலும் உங்கள் பதிவுகள் ரொம்ப அருமையா இருக்கு. மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்

நட்புடன் ஜமால் said...

இந்த கேள்வி நிறைய பேருக்கு தோணும் போல,

இன்னும் உங்களை விதூஷாகவே அடையாளம் காண்பதில் நானும் ஒருவன்.

ஒரு வடிகாலாக இந்த ப்லாக்கை பார்த்தேன் துவக்கத்தில் - பல முறை வேறு வடிகால் தேவைப்படவும் வைத்தது ...

இன்னும் நிறைய நிறைவா எழுதுங்கள் - வாழ்த்துகள்.

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்...

PPattian : புபட்டியன் said...

வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்..

எலெக்ட்ரானிக் பக்கோடா தயாரிக்கும் காலம் வரும்போது, உங்கள் பக்கங்களை கவனமாக வைத்திருங்கள்..:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள் வித்யா.

தலைப்பை படிச்சுட்டு பயந்துட்டேன், எங்கே வெளுத்து வாங்கப்போறீங்களோன்னு ;)))))

நீங்கள் சொன்னது மாதிரி ப்லாக் ஒரு change // மற்றும் வடிகால்.

ஆனா என்ன வடிகால்ல கூட வெள்ளம் வந்துடுது சில சமயம் ;)

எறும்பு said...

வாழ்த்துக்கள்
விதூஷு ஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷு
:))

எறும்பு said...

ஷங்கர் நிறைய பேர தூண்டுரார்னு சொல்லுங்க..

அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தி "பாசத்தலைவன்" பட்டம் குடுத்திறலாமா??

:)

kamala said...

Congrats Vidhya keep rocking.

வித்யா said...

ஒரு வருடத்திற்கு ஒரு வருட வாழ்த்துகள்:)

பிரபாகர் said...

எழுத வந்து ஒரு வருடம் ஆனாலும், சங்கரால் எனக்கு அறிமுகப்படுத்த்ப்பட்டு இரு மாதாங்கள் தான் ஆகிறது. சிறப்பாய் எழுதுகிறீர்கள். இன்னும் நிறைய எழுத இறையருளை வேண்டுகிறேன்...

பிரபாகர்.

Nundhaa said...

வாழ்த்துகள்

அகநாழிகை said...

நல்ல பகிர்வு வித்யா. உங்களுக்கு எழுத நிச்சயம் வருகிறது அதில் சந்தேகமேயில்லை. தொடர்ந்து கலக்குங்க-

VISA said...

Wish you a Happy 1 year.

தண்டோரா ...... said...

வித்யா எனக்கு போனவாரம் முதல் பிறந்தநாள்.ரொம்ப நல்லா எழுதறீங்க! வாழ்த்துக்கள். அந்த திருத்துரைப்பூண்டி பதிவு நான் ரசித்தது!!

டக்கால்டி said...

வாழ்த்துகள் ... தொடர்ந்து எழுதுங்கள்...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

நான் இப்பதாங்க உலையிலேயே குதிச்சிருக்கேன்:-). ஆனா உங்களுக்கு முதல் பின்னூட்டம் போட்டவன் என்ற முறையில் நீங்கள் பிரபல பதிவர் ஆவீங்கன்னு எனக்கு அப்பவே பல்லி கத்திச்சிங்க சகோதரி.. :)

டிஸ்கி:- 1.0

இடுகையின் தலைப்பு எனக்கானதாய் என்று மட்டும் நினைத்து சகோதரி வித் யாவிற்கு மட்டுமே இந்த பதில் பொருந்தும்.

டிஸ்கி:- 1.1
டிஸ்கி 1.0 வை காண்க.:)

வாழ்த்துகள்.:))

ர‌கு said...

வாழ்த்துக்க‌ள்:)

thenammailakshmanan said...

ஒஹ் முதல் பிறந்த நாளா கேக் எங்கே விதூஷ் ...

வாழ்த்துக்கள்.. உங்க பக்கோடாவுக்கு நான் அடிமை

துளசி கோபால் said...

அடடே....வருசம் ஒன்னு பூர்த்தியா?


இனிய வாழ்த்து(க்)கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துக்கள். தொடருங்கள்

பா.ராஜாராம் said...

நிறைய பதிவுகள் உங்களை ரசிச்சிருக்கேன் வித்யா.

நிறைய பதிவுகளில் உங்களை பிரமிச்சிருக்கேன்.

நிறைய பதிவுகளில் என்னை சிறுமையாக உணர்ந்திருக்கிறேன்.

வலை உலகில் கத்துக்கிற வேண்டிய எழுத்து என நிறைய தளங்கள் உள்ளது.

அதில் என்னை உறிஞ்சும் (spelling சரிதான்..ஏற்கனவே என் spelling குறித்து நிறைய சந்தேகம் உங்களுக்கு :-))இந்த பக்கோடா பேப்பர்கள் என்னை பொறுத்தவரையில் மிக முக்கியமானது.

வாழ்த்துக்கள் வித்யா!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வாழ்த்துக்கள் விதூஷ்..

இன்னும் பல்லாண்டுகள் வலையுலகில் சேவையாற்றும்படி கேட்டுக் கொள்கிறேன்..!

Sundar சுந்தர் said...

//முகமூடியணிந்து, இன்ன பிற அடையாளங்கள் சுமந்து, என எல்லாவற்றையும் புறந்தள்ளி, மெதுவாக தொலைந்து கொண்டிருக்கும் விதூஷ், விதூஷாக மட்டுமே இருக்கும் இடமாகவே இதை நினைக்கிறேன்.//
wow!

Chitra said...

//முகமூடியணிந்து, இன்ன பிற அடையாளங்கள் சுமந்து, என எல்லாவற்றையும் புறந்தள்ளி, மெதுவாக தொலைந்து கொண்டிருக்கும் விதூஷ், விதூஷாக மட்டுமே இருக்கும் இடமாகவே இதை நினைக்கிறேன்.//

......... ரொம்ப அருமையாக இந்த சிறப்பு இடுகை அமைந்து உள்ளது. வாழ்த்துக்கள், விதூஷ்.

நசரேயன் said...

// பதிவை நான் எழுதியதில் எனக்கே ரொம்ப நிறைவாகவும், சந்தோஷமாகவும் கருதும் என் பொக்கிஷம் இந்தப் பதிவு.//

அல்லோ அதை நாங்க சொல்லணும்

//நான் ஏன் எழுதறேன்? //

ஹும் .. கும்மி அடிக்கத்தான்

//நந்தா, அகநாழிகை வாசு மற்றும் நசரேயன்//

ஆட்டோவை எங்களுக்கு சேத்து அனுப்புங்கன்னு சொல்லுறீங்களா ?

//பதிவு எழுதக் தூண்டுதலாக இருந்த வெ.ராதாகிருஷ்ணன் மற்றும் பலாபட்டறை ஷங்கர் //

இம்புட்டு பிரச்சனைக்கும் காரணம் இவங்கதானா, நான் அவங்க கடையிலே போய் பேசிக்கிறேன்

அக்பர் said...

வாழ்த்துகள் மேடம் தொடருங்கள்.

முகிலன் said...

ஒண்ணாவது வருசத்துக்கு வாழ்த்துகள்.

அப்புறம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொடர் பதிவுக் கதைல உங்களை பங்கு பெற வச்ச எனக்கு ஒரு வடை கூட தராததுனால நான் இந்த ப்ளாக விட்டு வெளிநடப்பு செய்யறேன்.. :(((

பா.ராஜாராம் said...

ஒரு தொடர் விளையாட்டிற்கு அழைத்திருக்கிறேன் மக்கா.நேரம் இருக்கும் போது தளம் வாங்களேன்.

V.Radhakrishnan said...

பாராட்டுகள் விதூஸ், ஓராண்டு கடந்ததோடு நில்லாமல் பல ஆண்டுகள் நிலைத்து நிற்கட்டும் உங்கள் எழுத்து.

நெகிழ வைத்த பதிவு விதூஸ். இன்னும் மனதில் இருக்கிறது எப்படி உங்கள் எழுத்தினை அறிந்தேன் என. நூலகம் ஒன்றுக்காக நீங்கள் இட்ட இடுகை, நிச்சயம் இந்த வருடத்தில் செய்து விடுவேன். நீங்கள் எனது கதைக்கு கொடுத்த விருதினை ஒரு பெரிய அங்கீகாரமாகவே கருதுகிறேன்.

புலவன் புலிகேசி said...

//விதூஷ், விதூஷாக மட்டுமே இருக்கும் இடமாகவே இதை நினைக்கிறேன்//

அதேதான்...

அப்புறம் ஓராண்டு கடந்தமைக்கு வாழ்த்துக்கள்...

Anonymous said...

எழுதினது எல்லாம் பழைய பேப்பர்காரனுக்கு போயிடுச்சா. அச்சச்சோ. அடுத்ததரம் இந்தியா போகும்போது என்னோட டைரியெல்லாம் என்ன ஆச்சுன்னு பாக்கணும்

முகிலன் said...

// சின்ன அம்மிணி said...
எழுதினது எல்லாம் பழைய பேப்பர்காரனுக்கு போயிடுச்சா. அச்சச்சோ. அடுத்ததரம் இந்தியா போகும்போது என்னோட டைரியெல்லாம் என்ன ஆச்சுன்னு பாக்கணும்
//

உங்க டைரிதான, போன வாரம் படிச்சேனே.. நதியா நெத்தி, அமலா மூக்குன்னெல்லாம் கிறுக்கியிருந்துச்சே..

அப்புறம் பக்கடா கட்டிக் குடுத்துட்டேன்.

இன்றைய கவிதை said...

Congratulations!
Keep your good work going!

Even though I could not browse much nowadays, I always find something new when I visit your vidhoosh!

Hats off to you!

-Keyaar

KVR said...

வாழ்த்துகள் வித்யா - இருநூறாவது பதிவிற்கும்.

"உழவன்" "Uzhavan" said...

உங்களின் பெண்ணே நீயும் பெண்ணா பதிவுகள் வியக்கும் வண்ணம் இருந்தது. நிறைய எழுத வாழ்த்துகள்

Vidhoosh said...

வசந்த், ராமலக்ஷ்மி, கபீஷ், தென்றல், அண்ணாமலை, பட்டியன், அமித்தம்மா, எறும்பு, கமலா அத்தை, வித்யா, பிரபாகர், நந்தா, வாசு, மணிஜி, டக்கால்டி (என்னங்க பேரு இது), பலாபட்டறை ஷங்கர், ரகு, தேனம்மை லக்ஷ்மன், துளசியம்மா, TVR, ராஜாராம் அண்ணா, உண்மைத் தமிழன், சுந்தர், சித்ரா, நசரேயன் (ஊரு பக்கம் வாங்க.. நல்ல பதிலடி கொடுக்கிறேன் :), அக்பர், முகிலன், வெ.ரா, புலவன் புலி, சின்ன அம்மிணி, KVR, உழவன்

எல்லோருக்கும் நன்றிங்க. ரொம்ப மகிழ்ச்சியாய் இருக்கு. :)

தமிழ் உதயம் said...

முதல் முறையாக வந்து இருக்கிறேன். வாழ்த்து சொல்ல...
மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்...

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

வாழ்த்துக்கள் விதூஷ்!கட்டுரைத்தலைப்பு நெகட்டிவா,பாசிட்டிவான்னு யோசனையில படிச்சா....அனைத்து பதிவர்களின் மனத்துடிப்பை உங்களின் ஒரு பதிவு சொல்கிறது.இப்படி இந்தத் தலைப்பக்கூட ஒரு தொடர்பதிவா தொடரலாமநெ?

வேலன். said...

வாழ்த்துக்கள் நண்பரே... வாழ்க வளமுடன் வேலன்.

Joe said...

//
"நீங்கள் எல்லாம் எதற்காக எழுதுகிறீர்கள்"
//
எங்கேடா நம்மள மாதிரி உருப்படியா எதையும் எழுதாமே பொழப்ப ஓட்டிட்டு இருக்கிற பதிவர்களை போட்டுத் தாளிப்பீங்கன்னு நினைத்தேன்! ;-)

கிருஷ்ணமூர்த்தி said...

ஏன் எதுக்காக எழுதறேன்னு யாராச்சும் கேட்டுட்டாங்களா?

ஆரம்பத்துலேயிருந்தே ஒரு எச்சரிக்கையோடு பில்டப் பண்ண மாதிரித் தெரியுதே!

தர்ஷனி எப்ப ப்ளாக் எழுதப் போறாங்களாம்?

Post a Comment