யமா..இஃதோ வுந் தருமம்

ஏதோ ஒரு நிகழ்வு தந்த சோகத்தில்'மிகுந்த வருத்தத்தில்'இருந்த போது எழுதிய விடை பெறுகிறேன் தோழர்களேவில் வந்த யமனை எனக்கு ரொம்பப் பிடித்துப் போனது. அப்படியே அதே நினைவில் நேற்று எழுதிய மகா ராஜ ஸ்ரீ யமராஜன் ரிடர்ன்ஸ் என்ற அரும்பெரும் ஸாகித்யத்தை படிச்சு ஓடினவங்க முதுகில் குத்திய அம்பாக பாகம் 2 ரிலீஸ் செய்யப்படுகிறது. இரண்டு வருஷம் முன்னாடி முந்நூறு பக்கம் கொண்ட புத்தகம் ஒன்றை நண்பர் ஒருவர் "திருப்பி நடைமுறைத் தமிழில் எழுதித்" தரச்சொன்னார். இதில் கவனிக்கப் படவேண்டிய அதி முக்கியமான விஷயம் அந்த நண்பருக்கு எழுபது வயசுங்க:)) எழுதுகிறேன் எழுதுகிறேன் எழுதிக் கொண்டே இருக்கிறேன். முடீல. எப்படியும் ஜூன் மாசத்துக்குள் (2010தாங்க) முடிச்சுடுவேன் என்றே நம்பிக் கொண்டிருக்கிறேன். அந்த எழுத்தை படிச்சு படிச்சு அதே போல ஒரு ஸாகித்யம் படைத்து ஸாகித்ய அகாடமி விருதுக்கு அனுப்பணும்னு ஆசை. :)) என்ஜாய் மாடி.

ஒரே வேலையை செய்து செய்தே போரடிக்கும் உணர்வு வருவது பெண்களுக்கு ரொம்ப சகஜம். அதனால் யமனின் சகதர்மிணிக்கு போரடிக்கும் உணர்வு தோணும்போதெல்லாம் தர்மராஜாவான இவரே ஹீரோவாக ஆகி, தர்மபரிபாலனம் செய்ய பூமியில் தரையிறங்குவார் என்று முன்னெச்சரிக்கை தந்தே விடுகிறேன். வயறு வலி, சிரிச்சு பல் உதிர்ந்து போதல், கோபத்தில் கீபோர்டு, மானிடரை உடைத்தல் போன்ற நிகழ்வுகளுக்கு பக்கோடா கும்பெனி தானே பொறுப்பேற்று, இந்த விளைவுகளை சரி செய்ய, பக்கோடாவில் கூட இதுவரை பிரசுரமாகாத, பிரசுரிக்க வெட்கப்படும் எண்ணெய் பிசுக்கு வெங்காயக் கவிதை ஒன்றும் மரணமொக்கையான ஊசிப் போன உப்புமா கதை ஒன்றும் இலவசமாக வீட்டுக்கு பார்சலில் அனுப்பி வைக்கப் படும் என்பதும் அபாய அறிவிப்பாகவே கொடுத்து விடுகிறேன்.
============
பசுவாகப்பட்டது கோ-குலத்திலேயான ஜனனத்ததுனாலேயும், பசும்பால் மீதான விளம்பராதியுக்திகள் கூடி ஜனங்கள் விபரீதாதி தோஷபிரதிபந்தம் காணுகிறதாலேயும் கன்னுக்குட்டிக்குக் கூட கிஞ்சித்துமிச்சப் படாமலேயே அந்தகரண தருமங்களுக் கெல்லாமாத்ம வஞ்சனை செய்து அபகரித்த பசுவின் பாலை கறந்து, பிரம்மவித்தையினாலே கைகூடிய நீர்கலக்கும் எதார்த்தத்தை கண்டுபிடிக்கக் கூடிய அடிமுடிநடுவெல்லாம் அந்நியங் காணா ஆறுப்பிரகாரமாக பிரவாகமாகும் பசும்பாலை கோனார் எனுஞ் சர்வஞ்யத்துவாதி, அந்த கர்மகர்மாகர்ம  வஸ்துவிலேவஸ்துவென்கிறபடியாக இன்னு ஞ்சுத்திசெய்ய படாத செம்பில் ஊற்றி ஞானகருமக்கூட்டுறவினாலே தருவிப்பார்.

தர்கீகாள் சொல்லுகிரபடியான பிரம்மேய, சமுசய, பிரயோஜன, திருஷ்டாந்த, சித்தாந்த, அவையவ, தர்க்க, நிர்ணய, வாத, செலப்ப், விதந்த, எத்துவா, பாச, சல, சாதி, நிக்கிரச்தான வேன்றவிப் பதினாறு தர்க்ககங்களையும் செய்து சத்தியஞ் செய்தாலும் அக்கோனார் தருவிக்கும் பாலில் குணமணங் காணவியலா துக்கம் துக்கம். கருமத்துக்கும் அவித்தைக்கும் விரோதமில்லையாகிரபடியாலே, நானஞ்ஞானி. நானேய றிகிற  விடத்தில் காப்பி டிகாஷனுக்கும்  தண்ணீர்பாலுக்கும்  கூடியிருக்கிறமோக்ஷமில்லை. ஆனால், அஞ்ஞானத்திற் காசையைத் தோற்றுகிறாரே; அந்தஞ்ஞானத்திற்கு நிவிர்த்தியில்லை.

அஃதெப்படி? விக்கியானங் கூடிபூலோகத்துலே யிப்படியாக நாசங் கூடிக்கொண்டேயிருக்கிரதனாலே யிந்திரனாதிகள் சித்தங்கொண்டு சிரத்திலேகை வைத் தமர்ந்திருதார். "யமா"வென்றலறல் கேட்டு செவிப்பறைசித றோடி வந்தார் யமனாதிகள். "யமா..இஃதோ வுந் தருமம்?" எனக்க டிந்தி டித்து ரைத்தார் இந்திரன்.

டிஸ்கி: 6-ஆம் தேதியே இத்தாக்குதல் நிகழ்ந்திருக்க வேண்டியது. நாளாகி விட்டது. நாளையோடு முடிந்து விடும்.
{தாக்குதல் தொடரும்}

12 comments:

pudugaithendral said...

வந்தேன்

Chitra said...

அந்த எழுத்தை படிச்சு படிச்சு அதே போல ஒரு ஸாகித்யம் படைத்து ஸாகித்ய அகாடமி விருதுக்கு அனுப்பணும்னு ஆசை. :)) என்ஜாய் மாடி.

........... ஸாகித்ய அகாடமி "விருது" கிடைக்க வாழ்த்துக்கள்.

Thenammai Lakshmanan said...

யம்மாடி வித்யா தாக்குதல் தாங்க முடியல்ல சீக்கிரம் அந்த சாகித்ய அகாடமி விருதை குடுங்கப்பா (இவ்வாறு பழைய புராணங்களை சம்பாவனை செய்து காப்பாற்றுகிறபடியால் சிதம்பரம் தீக்ஷ்திதர் மனைவியின் கையால் செய்யப்பெற்ற காப்பரிசியும் அக்காரவடிசிலும் வித்யாவுக்கு வழங்க ஏற்பாடு செய்வோம் )

Paleo God said...

அதாவது கயுவாத சொம்புல கன்னுகுட்டிக்கு ரவ கூட குடுக்காம.. பால் கறந்து, தண்ணிய வூத்தி, கூட்டுறவுல வித்துபோட்டு, அத்த டிகாசனு ஊத்தி காப்பின்னு சொல்லி குடிக்கிராங்களே அத்த சொல்றீங்களா? கட்டன் காப்பி, கருப்பட்டி காப்பி எழுதினாத்தான் விருது தருவாங்கோ ..:))

------
@thenammailakshmanan

சிதம்பரம் தீக்ஷ்திதர்+அக்கார வடிசல் = இது என்ன கூட்டுறவு சங்கம்???:))

Vidhoosh said...

தென்றல்; ரொம்ப மிரண்டு போயிட்டீங்களா :))

சித்ரா: நன்றி. உங்கள் பரிந்துரையை கமிட்டி ஏற்கும். :))

தேனம்மைலக்ஷ்மணன்: நாளை ஒரு நாள் மட்டும் தானே.


ஷங்கர்: :)) அதான்.. ஆனாலும் எனக்கு இந்த மெட்ராஸ் பாஷை மட்டும் வரவே மாட்டேங்குது. :))

Vidhoosh said...

அப்புறம் தீட்சிதராம்படையாள் செய்யும் காப்பரிசியும் அக்கார வடிசலும் தேவாம்ருதம். அக்கார வடிசல்ல நெய் தாராளமா இருக்கட்டும்.

Sanjai Gandhi said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்...

Vidhya Chandrasekaran said...

பதிவப் படிச்சு டர்ராகி வந்தால் பின்னூட்டப் பொட்டிக்கு வந்தா அக்கார வடிசலாம். நெய் ஜாஸ்தியா வேணுமாம். நல்லாருங்கக்கோவ்:)

Sundar சுந்தர் said...

>>பிரம்மேய, சமுசய, பிரயோஜன, திருஷ்டாந்த, சித்தாந்த, அவையவ, தர்க்க, நிர்ணய, வாத, செலப்ப், விதந்த, எத்துவா, பாச, சல, சாதி, நிக்கிரச்தான வேன்றவிப் பதினாறு தர்க்ககங்களை>>

நடைமுறைத் தமிழ் please!

கமலேஷ் said...

தாக்குதல் கொஞ்சம் பலமாத்தான் இருக்கு...நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் தோழி...வாழ்த்துக்கள்...

புலவன் புலிகேசி said...

முடியல...முடியல...

ஆர்வா said...

என்ன சொல்ல.. ஆல் தி பெஸ்ட்

Post a Comment