அன்றைய எனதந்த வேண்டுகோள்
இன்னும் நிராகரிக்கப்படாத மௌனமாகவே
உன் மௌனத்தைப் பற்றியபடி நான்
நீண்டதொரு இடைவெளியாய் வாழ்வும்
நீயும், சில சொற்களுமாய் பின்னிய உன் குரல்
எனக்கும் கேட்கவில்லை
விசித்திரம்தான்
உன் கனவுகளை ஒலிக்கும் என்னிதயம்
ஒரு சில நிமிடங்களுக்கான அங்கீகாரம்
தந்து உன் மௌனம் உடைந்ததும்
மீதமிருக்கும்
வார்த்தைகள் வழிந்தோடி விடும்
பயத்தில் அணை-க்கும் விரல்களுக்கு
புலப்படாத நூலிழைகளால் பின்னிய
அடிவானைப் பற்றி
சொல்வதற்கேதுமில்லை
புலப்படாத நூலிழைகளால் பின்னிய அடிவானம்
Posted by
Vidhoosh
on Tuesday, February 9, 2010
Labels:
கவிதை
31 comments:
நல்லாருக்கு மேடம்..!
இப்பிடில்லாம் எழுதனும்னு ஆசைதான் ஆனா...
முடியல...:((
நல்லா பின்றீங்க..:))
முகிலா சும்மாருடா... ராஜுவே சும்மா இருக்கும்போது உனக்கெல்லாம் எதிர் கவுஜ எழுதனும்னு தோணக்கூடாது...
கவிதை நல்லாருக்குக்கா..
//புலப்படாத நூலிழைகளால் பின்னிய
அடிவானைப் பற்றி
சொல்வதற்கேதுமில்லை //
அழகா எழுதியிருக்கறீங்க...
நல்லாயிருக்கு வித்யா
வித்யா..மிகவும் ரசிக்கத்தக்க கவிதை!
நல்ல கவிதை...கோர்வுகள் சிறப்பு...
good vidyaa innum niraiya varanum. thks
Arumayana kavithai. Rasithen.
Pon.vasudevan
மௌனம்
ரொம்ப பிடிச்சிருக்கு வித்யா!
vaarthai vilayaduthu.
\\சொல்வதற்கேதுமில்லை//
அதே அதே ..
விளக்கவுரை ஒன்னு போடுங்க :-)
தலைப்பை ரசித்தேன்
நன்றி ராஜு . டக்லஸ்சு தான் இயல்பாவும் நட்பாவும் இருக்கு. திடீர்னு வளர்ந்து வேலைக்கு போன சகோதரனை எல்லாரும் ஆபீசுல "சார் சார்" ன்னு கூப்பிடறா மாதிரி திடீர்னு "ராஜு"ன்னு மாத்திக்கிட்ட எப்டி கண்டு பிடிக்கிறது?
ஷங்கர்: ராஜுக்கு சொன்னதேதான்...
முகிலன்: சரிங்க சகோ. மிக்சிங் இல்லாத கவுஜயா இருந்தா நானும் ரசிப்பேனே.
நன்றி சங்ககவி.
நன்றி தென்றல்.
நன்றி மணிஜி.உங்களையும் பா.ராஜாராம் சொல்லும் லூசு-மாமாவையும் ஏனோ அடிக்கடி இணைத்துப் பார்கிறேன். :)) மன்னிக்க.
நன்றி டி.வி.ராதாகிருஷ்ணன்: தமிழ் மணத்துல இணைஞ்சாச்சு :)
நன்றி பாலாசி
நன்றி பித்தன்
அட... அடா...யாரு வந்திருக்காங்க.. வாசுவா.. இவ்ளோ நாள் கழிச்சா.. நலம்தானே. பரிட்சையெல்லாம் எப்படிப் போனது? இலக்கியவாதியானதுக்கு விலை சொந்த நேரம் -- இல்ல? :(
நன்றி கட்டெறும்பு. இன்னிக்கு என்ன அடக்கி வாசித்தல்?
நன்றி ராஜாராம்.
நன்றி விசா.
நன்றி ரோமியோ.
நன்றி உழவன். ஹை விளக்கவுரையா.. :))
கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு கருத்துள்ள ஒரு கவிதை யோசிச்சுட்டே தமிழ்மணம் பாக்கறேன், உங்க கவிதை. எப்படிங்க? ரொம்ப நல்ல இருக்கு.
நல்லாருக்குங்க...
நல்லா இருக்கு வித்யா
நேசத்தின் இழைகள் போல நல்லா இருக்கு வித்யா
வரிக்கு வரி அசத்தறீங்க
//Nundhaa said...
நல்லா இருக்கு வித்யா//
:)
ரொம்ப நல்லாருக்கு ..
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
//பயத்தில் அணை-க்கும் விரல்களுக்கு
புலப்படாத நூலிழைகளால் பின்னிய
அடிவானைப் பற்றி
சொல்வதற்கேதுமில்லை //
இன்னும் ஒரு கோடி வார்த்தைகள் வந்தாலும் திகட்டாத சொல் பொருள். நல்லாருக்கு வித்யா.
:)
//புலப்படாத நூலிழைகளால் பின்னிய
அடிவானைப் பற்றி
சொல்வதற்கேதுமில்லை//
ம்ம்
புது மொழி கைவரப் பெற்றிருக்கிறது
arumai . karuththu sonnavitham kavithaikku alagu serkirathu.
//
புலப்படாத நூலிழைகளால் பின்னிய
அடிவானைப் பற்றி
சொல்வதற்கேதுமில்லை
//
ஆமா, எழுத நிறைய இருக்கும் போது எப்படி சொல்ல நேரம் கிடைக்கும்
//புலப்படாத நூலிழைகளால் பின்னிய
அடிவானைப் பற்றி
சொல்வதற்கேதுமில்லை //
இதுவே கவிதையா இருக்கு
நல்லா இருக்குங்க..,
சிலபேர் முன்நவீனம், பின்நவீனம் அப்பிடின்னு சொல்லி புரியாத கவிதை எழுதரவங்ககிட்ட இந்த மாதிரி செவிட்டில் அறையும் கவிதைகளை காண்பிக்க வேண்டும்.
வாழ்த்துக்கள் தோழி
சூரியன்
:))
நல்லாயிருக்கு வித்யா...என்ன வர வர எல்லாம் சோக கவுஜயா போட்டு தாக்கறீங்க..
ம்?
பற்றி சொல்வதற்கேதுமில்லைன்னு சொல்லியே இம்பூட்டு பற்றி சொல்லிட்டீங்க
Post a Comment