பிரார்த்தனை

விழுந்து கொண்டிருந்தது
வால் நட்சத்திரம் அதிசயமாய்
வேறென்ன வேண்டுவேன் அவன்
வாயால் ஒரு பாராட்டு வார்த்தை
சாதாரண மனைவிதானே நான்!.

3 comments:

Nundhaa said...

//

விழுந்து கொண்டிருந்தது வால் நட்சத்திரம்
வேறென்ன வேண்டுவேன்
அவன் வாயால் ஒரு பாராட்டு வார்த்தை

//

என்று மாற்றினால் என் அறிவிற்கு இதை near poetry எனக் கொள்வேன் ...

Vidhoosh said...

கவிதையால் கெஞ்சிக் கேட்டேன், அப்படிக்கூட
கிடைக்கவில்லையே அங்கீகாரம்,
நடை பழகும் மக்கு தானே நான், என்னை
கொக்கு என்று நினைத்தாயோ கொங்கணவா நீ....

வெ.இராதாகிருஷ்ணன் said...

அருகிலிருப்பவரின் அருமைத் தெரியாது என மனதில் இருக்கும் ஏக்கத்தை வெளிப்படுத்தும் அழகிய கவிதை. மிக்க நன்றி வித்யா அவர்களே.

Post a Comment