நேற்று நீண்ட நாள் கழித்து ப்ளாக் பக்கம் வந்தேன். வெட்டியின் ப்ளாகில் 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டி பற்றி அறிந்து போய் பார்த்து ஒரு கதையும் எழுதிப்போட்டேன்.
அங்கே ஒரு சிரிப்பு வெடி சிங்காரம் (மணி - உங்களுக்கு பட்டப்பெயர் வைத்ததுக்கு மன்னிக்கணும்) எழுதிய போனாகானா முதலியாரின் தேசபக்தி என்று ஒரு சிரிப்புச் சரவெடியை ரசித்தேன்.
இன்று விடியற்க்காலையில் சமைக்கும் போது முதலியாருக்கு குத்திய ஆயிரம் ஆணிகள் ஞாபகம் வந்து தொலைத்து விட்டது. என் கணவருக்கு இன்று என் சிரிப்பொலிதான் அலாரம். ஹா ஹா....
படியுங்கள் .. சிரியுங்கள் சிரியுங்கள், சிரித்துக்கொண்டே இருங்கள்.
2 comments:
சமைக்கும் போது இப்படியெல்லாம் சிந்திக்காதீர்கள் வித்யா. அப்புறம் சாம்பாரில் சர்க்கரையை கொட்டிவிட்டால் உங்கள் கணவர் என்னை திட்டுவார்.
நன்றி வித்யா அவர்களே!
எனக்காக ஒரு பதிவு எழுதியதற்காக!
அப்புறம் ஒரு வேண்டுகோள். மணி என்று என்னை மரியாதைக்குறைவாக அழைக்காமல் மணிப்பயல் என்று மரியாதையுடன் அழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
மணிப்பயல்
http://manimscspl.blogspot.com/
:) சரிங்க மணிப்பயல் (சார்).
Post a Comment