Showing posts with label வரலாறு முக்கியம்ங்க. Show all posts

ஆகஸ்ட் சந்திப்புக்கள்
Posted by
Vidhoosh
on Monday, August 22, 2011
Labels:
சக பதிவர்,
வரலாறு முக்கியம்ங்க
/
Comments: (3)
போடுங்கைய்யா-ம்மா வோட்டு
Posted by
Vidhoosh
on Sunday, December 5, 2010
Labels:
வரலாறு முக்கியம்ங்க
/
Comments: (7)
யாருங்க அங்க ஓடப்பாக்குறது
Posted by
Vidhoosh
on Friday, November 19, 2010
Labels:
கவிதை,
நகைச்சுவை,
வரலாறு முக்கியம்ங்க
/
Comments: (17)
பரிசலின் சவால் போட்டியில் வெற்றி பெற ஒரே வழி
Posted by
Vidhoosh
on Wednesday, October 20, 2010
Labels:
சிறுகதைப் போட்டி,
வரலாறு முக்கியம்ங்க
/
Comments: (16)
நீங்கள் எல்லாம் எதற்காக எழுதுகிறீர்கள்
Posted by
Vidhoosh
on Friday, February 19, 2010
Labels:
வரலாறு முக்கியம்ங்க,
விகடன்
/
Comments: (44)
கூத்தாய் போன கூத்து
Posted by
Vidhoosh
on Saturday, January 23, 2010
Labels:
வரலாறு முக்கியம்ங்க
/
Comments: (13)
சொந்த அனுபவம்தான், வேறென்ன. சும்மா சிரிக்கத்தான்.
நம்ம துளசி (கோபால்) மேடம் போடும் படமெல்லாம் பாத்துப் பாத்து எனக்கும் கொசுவத்தி புகை மூட்டமாகி, கண்ணெல்லாம் இருட்டி, தொண்டை எரிந்து, இருமி, தும்மி, கண்ணீர் வழிந்து ......... நாங்கல்லாம் "சின்னப்ள---யா" "கூத்து கட்டிய" காலங்கள் நினைவுக்கு வந்தது(நானும் ரவ்டீதான்).
துளசி மேடம்! நீங்க கோபால் சாரை கன்னடத்து பைங்கிளி மாதிரித்தானே கூப்பிடுவீங்க!! எங்க! நானும் கேட்கட்டும்..
=========================================
எங்க நண்பர்கள் குழுவில் மொத்தம் பிரபா(கர்), (பால)மணி(கண்டன்), கன்னி(கா-பரமேஸ்வரி), கவி(தா), சம்ஸு(தீன்), (இவர்கள் எல்லாம் பாடகர்கள்) அலோ(சியஸ்) - கிடார் வாசிப்பான், பரத்(தன்) - ட்ரம்மர், மற்றும் நான் (வயலின்) என்று மொத்தம் எட்டு பேர்.
வழக்கமா ஸ்கூல் பங்க்ஷன்ல மட்டும் "வோகல் குரூப் - "பறவைகள்" ஆக பாடிட்டு 'சிவனே'ன்னு இருந்துவிட்டு போன எங்களுக்கு திடீர்னு நாடகம் போடணும்னு ஆசை வந்தது. நாடகம்னா மேடை வேணும், அலங்காரம் பண்ணத் தேவையான பூஷண ஆபரண ஆடை இத்யாதிகள் எல்லாம் வேணுமேன்னு யோசித்து கொண்டே இருக்கும் போது, எங்கள் நண்பர்கள் குழுவிலேயே "சிகப்பழகன்" ஹீரோ சம்சுதீன் "முதல்ல நாடகம் எழுத வேண்டாமா??? எதுக்கு இந்த வெட்டி வேலை. பரீட்சைக்கு படிக்கலாம் வாங்க"ன்னு குண்டை தூக்கிப் போட்டான்.
அப்புறம் யாருக்கும் என் பேச்சு எடுபடலை. கால்பரீட்சைக்கு ரொம்ப நாள் கழித்து, டிசம்பர் கடைசியில் நடக்கும் கல்சுரல் விழா மற்றும் "கலை" போட்டி அறிவிப்பு வந்தது.
திடீர்னு சம்சுவே 'ஹே.. விதூ நல்ல ஐடியா கொடுத்தாடா. நாமெல்லாம் ராமாயணம் ட்ராமா போடலாம்" அப்டீனான்.
"நான்தான் தசரதன்" என்றான் அலோ..
"ஐ ஆசையைப் பாரு.. அது நான்தான்" என்றான் பரத்.
அவரும் இன்று போய் நாளை வான்னு அனுப்பிட்டார். வேலை முடிந்தது என்பது போன்றான நம்பிக்கை எங்களுக்குள் வந்தது.
இரண்டு வாரம் ஓடிப்போச்சு. அவரிடம் இருந்து எந்த பதிலும் வராததால் நாங்களே படையெடுத்தோம். லீவில் அவர் புறமுதுகிட்டு ஊரை விட்டே ஓடிப் போனாதாக சொல்லப் பட்டது. வீராவேசமாக பேரு வேற கொடுத்தாச்சேன்னு எங்களுக்கெல்லாம் ஒரே கவலை.

"சிம்மாசனம்லாம் வேண்டாமா.. ரொம்ப செலவாகுமே" இது கன்னி.
எருமைமாடு(கள்) மேல மழை பெஞ்சா மாதிரியே உட்காந்திருந்தோம் நானும் கவியும்.
"விச்வாமித்திரரோட கமண்டலம், மகுடம், ஜடை முடி எல்லாம்... கன்னி இன்னும் அடுக்கிக் கொண்டே இருந்தாள்.
"வழக்கம் போல மைக் மோகன் பாட்டு எதாச்சும் பாடிட்டு போயிர்லாம்டா." என்றான் பிரபாவும் மணியும்.
ராமாயணத்துக்கு ரொம்ப செலவாகும் போல இருந்ததால் கைவிடப்பட்டது. ஆனாலும் கூத்துகட்டும் ஆசை மட்டும் விடவே இல்லை. தினமும் லைப்ரரியிலேயே "பட்ஜெட் நாடகம்" எதுவென்று தேடுதல் வேட்டை நடந்து கொண்டே இருந்தது. எங்க பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி ஒத்த பைசா செலவே இல்லாம நடத்தும்படியான நாடகம் மட்டும் கிடைக்கவே இல்லை. பாரதிதாசன் யுனிவெர்சிட்டி நூலகத்தில் தேடச் சொன்னார் தமிழாசிரியை "பன்னீர்" செல்வி (பெயர் காரணம் அறிய இங்கே பார்க்கவும்) தன்னுடைய அடையாள அட்டையையும் கொடுத்து உதவினார்.
நூலகரிடம் "சார்.. கொஞ்சம் புஸ்தகம் வேணும். ஹெல்ப் பண்றீங்களா" என்று கேட்டேன் நான்.
அவர் பார்த்த பார்வையில் எள்ளல் தெரித்தது. "புக் பேரு தெரியுமா... இனிமேதான் வைக்கப் போறீங்களா" என்றார்.
"ஷேக்ஸ்பியர்" என்றேன்...
"அவர் புத்தகம் எழுதறவருமா.. ஷேக்ஸ்பியர் ஆட்டோபயகிராபி ஏதும் இல்லையே" என்றார் சிரித்தபடி...
அவமானம் தாங்காமல் என் கருப்பான முகம் சற்றே சிவந்தது (இதைத்தான் ஆங்கிலத்தில் ப்லஷிங் என்பார்களோ!) "சார். நாங்க "ச்சூள்ள" ஒரு டிராமா போடலாம்னு இருக்கோம். கம்மி பட்ஜெட்ல, அதாவது பட்ஜெட்டே இல்லாம ஒரு ட்ராமா ஐடியா கொடுங்க சார் ப்ளீஸ்" என்றேன்.

கடைசியில் உலகமே கைவிட்டுவிட, 'சுப்பாண்டியின் சாகசங்கள்' வருமே, அதையே தொகுத்து ஒரு பத்து நிமிஷ டிராமாவா மாத்தினோம். மொத்தம் மூன்று பேர்தான் நடிக்க.
மணி சுப்பாண்டியாகவும், கன்னி வீட்டுத் தலைவியாகவும், நம்ம ஹீரோ சம்சு தாத்தாவாகவும் நடிப்பதென முடிவானது. பின்னணி இசை நானும் (வயலின்) ட்ரம்மர் பரத்து கிட்டாரிஸ்ட் அலோ.... எல்லோரும் அவங்கவங்க வேலையை மனப்பாடம் செய்து கொண்டு தயாரானோம்.
அந்த நாளும் வந்தது. சுப்பாண்டி பப்ளிக் பார்க்கில் செய்யும் அட்டகாசங்கள் பற்றிய டிராமா.. திரை விலக, புடவையில் கன்னிகா செட்டில் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து இருப்பது போல முதல் சீன்.
மைக்கில் டீச்சர் அறிவிச்சாங்க... வழக்கமா பாட்டு பாடி கலக்கும் "பறவைகள்" டீம் இன்று ட்ராமா ஒன்றை தானே எழுதி அரங்கேற்றப் போறாங்க. என்றதும், பயங்கர கைத்தட்டல். "இப்போது "அசோகவனத்தில் சீதை" என்ற நாடகத்தை பார்க்கப் போறீங்க என்றார் பாருங்கள்....
வேற வழி பத்து நிமிஷ டிராமா முழுதும் கன்னி மட்டும் உட்கார்ந்து தனியாவே சீதை வசனமெல்லாம் எதுவும் நினைவுக்கு வராமல் அழுது கொண்டே "ஜானகி தேவி ராமனைத் தேடி ... " என்று விசு படத்தில் வரும் பாட்டை "கமலா காமேஷ்" குரலிலேயே பாட, அது கூட "ராமன் வந்தான் மயங்கி விட்டாள்" என்ற வரிக்கு பிறகு மறந்து போய் திரும்பத் திரும்ப அதே வரியையே பாடிக் கொண்டிருந்தாள். மீதிப் பாட்டு ராகம் கூட தெரியாமல் நான் பின்னணியில் "விவித்பாரதி"யில் தலைவர்கள் செத்தால் அஞ்சலி செலுத்தும் போது வாசிக்கும் சோக இசையை தனியாவர்த்தனமாக வயலினில் வாசிக்க, கல்சுரல்லில் தோத்துட்டோம் என்று மேடைக்கு நடுவில் வந்து நின்று கொண்டு மணி அறிவிக்க, பயங்கர கடுப்பில் சம்சு முதுகில் "வாசிக்க" ட்ரம்மர் பரத் காத்துக் கொண்டே இருந்தான்...

...
தமிழ்மண விருதுகள் முதல் கட்டப் பிரசாரம்
Posted by
Vidhoosh
on Thursday, December 24, 2009
Labels:
வரலாறு முக்கியம்ங்க
/
Comments: (9)
:)) தமிழ்மண விருதுகள் - நானும் இருக்கேன் இதில்.
டாடா சூமோ கருப்பு பூனைகள், போன்ற எதுவும் இல்லாமையே, போட்டியிடும் வேட்பாளர்கள் மத்தியில், புதுமுக அறிமுகமாக இருக்கும் எனக்கும் வோட்டளித்து மகிழுங்கள். ஏதோ ஒன்னு ரெண்டு வோட்டாவது அளிக்கப்பட்டால் கூட மகிழும் இப்பேதை நெஞ்சம்.
சுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் என்ற பிரிவில் ஆகவே, இனியும் கங்கையை அசுத்தப்படுத்த வேண்டாம்
விளையாட்டு, உடல் ஆரோக்கியம், உடல்நலம் மற்றும் சமையல் தொடர்பான கட்டுரைகள் என்ற பிரிவில் பஞ்ச் ரங் அசார் (ஐந்து வண்ண ஊறுகாய்)
வோட்டுப் போட இங்கே கிளிக் செய்யுங்கள்.
நன்றி சகாஸ்.
..

நீதானா அந்தக் குயில்
Posted by
Vidhoosh
on Monday, December 14, 2009
Labels:
வரலாறு முக்கியம்ங்க
/
Comments: (23)
சரியாக ஒன்றிரண்டு மாதம் முன்னால் புழுதி கவிதையும், திருக்காட்டுப்பள்ளியும் பற்றிய பதிவுகள் இணையத்தில் வெளியிடும் போது இதெல்லாம் நிகழும் என்று கனவிலும் நினைக்கவில்லை. நித்யாவின் facebook கிடைக்கவும் மெசேஜ் அனுப்பினேன். "sorry i don't remember you" என்று பதில் வந்தது. :( விடுமா விக்ரமாதித்தன் வேதாளம். மீண்டும் ஒரு மெயில் அனுப்பி "குடும்பப் பாட்டு" ஒன்றையும் பாடிக் காட்டினேன். கண்களில் தண்ணீர் தளும்ப, செவாலியே சிவாஜி ரேஞ்சுக்கு நாத்தழுதழுக்க "வித்யா-நித்யா" அலம்பல் ஜோடி மீண்டும் இணையத்தால் இணைந்தது. பிறகென்ன..... கேக்கணுமா??
சென்ற 27.11.09 அன்று காரில் திருச்சி போய் கொண்டிருக்கும் போது கார்த்தியின் போன் வந்தது "என்ன, எப்படி இருக்க, என்ன செய்யுற" என்றெல்லாம் கேட்டுக் கொண்டே போனேன். நான் இப்போ எம் எல் முடிச்சுட்டேன். "அப்ப வக்கீலாயி"ட்டீங்களா"??? என்று சுருதி கொஞ்சம் இறங்கியது. "இல்ல. எம்எல்ஏவா ஆயிட்டேன்".... தொண்டையில் இருந்து வார்த்தைகள் நீளவில்லை. செருமிக் கொண்டு, "அப்படீங்களா சார்" என்றேன். அருகிருந்த என்னவர் "என்ன திடீர்னு பம்மற...யாரு போன்ல" நாம் பம்முவது பற்றிய உள்ளூர மகிழ்ச்சியோடு கேட்டார். "என் பழைய நண்பர்.. என்று கொஞ்சம் அழுத்தம் கொடுத்துக் கொண்டேன்.
அப்போதும் நினைக்கவில்லை, வில்சனின் ஈமெயில் வரும் என்று. திடீர்னு ஒருநாள் நாமெல்லாம் டிசம்பர் 12 அன்று சந்திக்கப் போறோம் என்று வில்சனின் மெயில் வந்தது. :)
=====================================

கல்லணையைக் கட்டிய கரிகால் சோழன்

கல்லணை

=======================================================================
11.12.2009 அன்று மாலை ஆறு மணி வாக்கில் புத்தக விழாவுக்குக் கிளம்ப முடியாமல் அலுவலகத்திலேயே இருந்தேன். "Still in office. convey my best wishes to vasu. to you too" என்று sms ஒன்றை நர்சிம்முக்கு அனுப்பினேன். "no chance. come" என்று பதில் வந்தது. என்ன சொல்வது இவருகிட்ட என்று யோசிக்கும் போதே, வீட்டிலிருந்து அம்மா-அம்மா டென்ஷன் ஆகி போன் பண்ணி திட்டிக் கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக good night boss சொல்லி அலுவலகத் தலை(வலி)யை வீட்டுக் அனுப்பிவிட்டு பார்த்தால் ஏழு மணி.
முடிந்த வரை வேகமாப் போய் டிஸ்கவரி புக் ஹவுசில் தலையைக் காட்டி புறப்பட்டு விடலாம் என்று ஆக்டிவாவை திருப்பினால், ஐ.டி. காரிடார் முடியும் மத்திய கைலாசத்திலிருந்து கிண்டி வரை ஊர்ந்து ஊர்ந்து போனால், அம்மாவின் போன் "சைதாப்பேட்டையில் ஏதோ திறப்பு விழாவாம்.. நங்கநல்லூரெல்லாம் வந்துண்ட்ருக்காத. நாங்க கிளம்பியாச்சு. நீ நேர கோயம்பேடு வந்துரு" என்று தாயின் ஆணை. வேறன்ன செய்ய. அட ஆபீசுலேந்து நேர வர ஒரு பொண்ணுக்கு வேற எந்த உபாதையோ, பசியோ இருக்காதான்னு யோசனையே கிடையாது இந்தம்மாக்கு என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டே ஊர்ந்தேன்.
வடபழனிக்கருகில் வரும்போது மணி இரவு எட்டரை. இனிமே பூமி தாங்காது என்று இருக்கும் சந்தில் எல்லாம் புகுந்து, டிராபிக் ஜாமிலிருந்து தப்பித்து வளசரவாக்கம் தெருக்கள் வழியாக கோயம்பேடு சாலையை அடைந்தேன்.
மீண்டும் ஊர்ந்து ஊர்ந்து "ஒன்று" வாசனை மூக்கைத் துளைக்கவும் "ஆகா வந்துட்டோம்டா" என்று என்னையே பாராட்டிக் கொண்டு, டூ-வீலர் பார்கிங்கில் இரண்டு நாளுக்கு பார்க்கிங் டிக்கட்டு வாங்கி மூன்று முறை சைடு லாக் பண்னோமானு பாத்து, நாலஞ்சு முறை சென்டர் ஸ்டாண்டு போட்டாமானு செக் பண்ணி, ஆறாவது நிமிஷம், ஏழு எட்டு வைத்து ஒம்பதாம் பிளாட்பாரம் சென்றால் பத்து மணி பஸ்ஸு கண்டேக்கடரூ என்னைத் திட்டிக் கொண்டிருந்தான். "இவங்கல்லாம் வரலைன்னு யாரு ...." என்று முடிக்கும் முன்னேயே நல்ல வேளை முன்னால் சென்று நின்றேன்.
ரயிலில் டிக்கட்டு கிடைக்காமல் லொட லொடவென்று அரசு பேருந்தில் இரவு பதினொன்றை வரைக்கும் சிங்கிள் ஆம்ப்ளிபையரில் அலறிக்கொண்டிருந்த "சுர்ருங்குது" பாட்டை "பூம் டீவி" வீடியோவில் பார்த்துக் கேட்டுக் கடுப்பாகி, "உங்கள் குறைகளை 044 25366351 என்ற எண்ணுக்குத் தெரிவியுங்கள்" என்ற அறிவிப்பைப் பார்த்து, போன் பண்ணினேன். "ஏங்க.. நான் உங்க பஸ்சுல காசு கொடுத்து போயிட்டுருக்கேங்க. இந்த பாட்டை எப்போ நிறுத்துவீங்க" அப்படீன்னு கேட்டேன்.
"இன்னுமா நிறுத்தல கண்டேக்க்று கிட்ட கொண்டுங்க" என்கவும் ஒரு நம்பிக்கையோடு என்னதான் பஸ்ஸு ஊர்ந்து கொண்டிருந்தாலும், பாலன்ஸ் பண்ணும் சமத்து பத்தாமல் நான் தள்ளாடிக் கொண்டு, கிட்டத் தட்ட கண்டேக்க்று மேலே விழுந்து விடும் தொலைவில் ஒரு கம்பியில் தொத்திக் கொண்டு "இந்தாங்க" என்று மொபைலைக் கொடுத்தேன். பேசினார் கண்டக்டர். என்னை முறைத்துக்கொண்டே இருந்தார். ஒரு நிமிஷம் போனது, "ஆமாண்டா. அண்ணி நல்லாருக்கு. சின்னப் பொண்ணை இனிமேத்தான் இஸ்கோலுல சேக்கோணும்" என்று ஒரு பத்து நிமிஷம் சொந்தக் கதை எல்லாம் பேசி முடித்து பின் "இதுங்க வரணும்னு பஸ்ஸை போட்டு வைச்சேன். இதுங்க கம்ப்ளைண்டு கொடுக்குதுங்க." என்று வரிசையாய் அக்றிணையாகி நொந்தேன். அப்படியும் பாட்டு நிறுத்தப்படலை. ஒரு வழியாக ஒரு மணிக்கு பாட்டு நிறுத்தப் பட்டது. நானும் மழையின் ஜதிக்கேற்ப தலையை இப்படியும் அப்படியும் ஆட்டி தூங்கிப் போனேன்.
காலையில் திருச்சியில் மீண்டும் ஒன்று மணம்தான் எழுப்பியது. பின்னாடியே அம்மா அப்பா தம்பி எம்பொண்ணு எல்லோரும் வரிசையாய்... என் பெற்றோர் குலதெய்வம் கோவிலுக்குப் போகவும், நான் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் பள்ளிக்குப் போகவும், யார் கேட்டாலும் (திட்டினாலும்) பரவால்லைன்னு நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை என்று பாடிக் கொண்டே இறங்கினேன். பெரியம்மா அனுப்பிய கார் வந்தது. அவங்க வீட்டுக்குப் போய் நாலு இட்லி அருமையான காப்பி குடித்து மீண்டும் எட்டு மணியளவில் திருக்காட்டுப்பள்ளி நோக்கிப் பிரயாணம்.
இப்போது திருச்சி சாலைகளும், திருக்காட்டுப்பள்ளி நோக்கி செல்லும் சாலைகளும் அகலம் குறைந்தும் நீளம் அதிகமாகியும் தோன்றியது. கல்லணை பாலத்தை ஒரு காலத்தில் நடந்தே கடக்கும் போது அலுப்பாய் இருக்கும். இன்று நடக்கலாம் என்று தோன்றினாலும் நேரம் ரொம்பக் குறைந்து போன உணர்வு வேறு துரத்திக் கொண்டே இருந்தது.
'நாங்க வந்துட்டோம்' என்று ஐந்து நிமிஷத்துக்கு ஒரு போன் வந்து கொண்டே இருந்தது. சரியாக முக்கால் மணி நேரத்துக்குள் திருக்காட்டுப்பள்ளி போய் விடுவோம். வயல், சின்னச்சின்ன வாய்க்கால்கள், குட்டைகளில் லில்லிப் பூக்கள், பச்சைப் பட்டு புல் வெளிகள், துரத்திய மரங்கள் என்று ஒரு பக்கம் பசுமையை நிலை நாட்டிக் கொண்டிருந்தாலும் ஒரு பக்கம் அகண்ட காவேரியின் மணல் வெளி கண் கூசியது. கொஞ்சூண்டு தண்ணீ இருக்கென்று காண்பிக்க நடுவில் ஓடிக் கொண்டிருந்தது.
மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அதுபோர்த்து
கருங்க யல்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி!
கருங்க யல்கண் விழித்தொல்கி நடந்த தெல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி!
பூவர் சோலை மயில்ஆலப் புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி!
காமர் மாலை அருகசைய நடந்த தெல்லாம் நின்கணவன்
நாம வேலின் திறம்கண்டே அறிந்தேன் வாழி காவேரி!
என்று மாதவி பாடுவதாகத் சிலப்பதிகாரம் பேசுகிறது. இன்று உன் கணவன் திருச்செங்கோல் வளைந்தது போலும். இந்தனை மேல்மெலிந்து கிடைகிறாயடி காவேரிப் பெண்ணே என்று வருந்திக் கொண்டேன்.
என். வெங்கட்ராமன் உரக்கடை என்று போர்டு போட்டிருந்த கடை முன் இருந்த பூக்கடையில் சாமிக்கும் அம்பாளுக்கும், திரௌபதி அம்மனுக்கும் என்று மூன்று மாலைகள் வாங்கிக் கொண்டு இருந்தார் அப்பா. கடையிலிருந்த இளைஞனின் கண்கள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. அடப் பாவி செந்தில் இன்னும் இவ்வளோ சின்னவனாவே இருக்கானா என்று நினைத்தேன். உள்ளே போய் விட்டான் அந்த இளைஞன். மீண்டும் கிஷோர் போன் வந்தது "எங்க இருக்கீங்க" என்று கேட்டான். 'நேரமாகிட்டது கோவிலுக்கு போயிட்டு ஸ்கூலுக்குப் போலாம் என்றார் அப்பா. "சரீங்கப்பா" என்று என் சுருதி கொஞ்சம் குறைந்தது.

சர் சிவசாமி ஐயர் (எங்கள் பள்ளி ஸ்தாபகர்)
ஸ்கூலைத் தாண்டி சென்றது கார். என் கண் ஸ்கூல் மீதே நின்று விட்டது. முருகன் கோவில் புதுப்பிக்கப்பட்டிருந்தது. அருகில் இருந்த பஞ்சாயத்து போர்டு ஸ்கூல் இரண்டு மாடிக் கட்டிடம் ஆகி விட்டிருந்தது. திரௌபதி கோவிலுக்குப் போனோம். கோவில் வாசலில் கர்ப்பகிரகத்தை மறைத்தவாறு பாலிவினைல் போர்டில் ரஜினி அறுபதாவது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தார். "நீ நடந்தால் நடையழகு" என்று ஆளுயர ஸ்பீக்கர் கத்திக் கொண்டிருந்தது. அருகிருந்த கிரௌண்டில் பதினைந்து வயதுக்குள் இருக்கும் சிறுவர் சிறுமிகள் எல்லாம் விளையாடியும், பாட்டுக்கு ஆடியும் கொண்டிருந்தனர். எம்பொண்ணுக்கு குஷி தாங்கலை. புழுதியில் புரண்டு பட்டுப் பாவாடையெல்லாம் மண்ணாக்கி கொண்டாள். விளையாடட்டும் என்று விட்டு விட்டேன். பொங்கல் பிரசாதத்தைக் கூட அவர்களோடு க்யூவில் நின்று வாங்கி சாப்பிட்டாள். எனக்கு எம்பொண்ணு நானாவே ஆனா மாதிரி இருந்தது. (அடங்கு வித்யா...)
இன்னொரு கோவில் போய் திரும்பிய போது "நாங்கல்லாம் ஸ்கூல்லேந்து கல்லணை டிராவலர் மாளிகைக்குப் போறோம். நீங்க அங்க வந்துருங்க" என்று வில்சன் லூர்து சேவியர் சொன்ன போது மணி இரண்டு."எனக்காக காத்திருக்க வேண்டாம். நீங்க எல்லோரும் சாப்பிட்டு விடுங்க" என்றேன். "நீங்க வரலைனாலும் பரவால்லை. ஹிந்தி மிஸ் (எங்கம்மா) கண்டிப்பா வரணும்" என்றான் (ர்) கிஷோரும் வெங்கியும். அடப் பாவிங்களா....
அக்ரஹாரத்தில் எல்லாம் மாறி விட்டிருந்தது. யார் வீட்டு வாசல் திண்ணையிலோ என் பெண் நின்று உள்ளே எட்டிப் பார்த்தாள். திட்டப் போகிறார்கள் என்று பயந்தேன். "பொண்ணு. ஒட்டுல (ஓரத்தில்) நிக்காதடீ.. விழுந்துடுவடீ..." என்று கரிசனமாய் ஒரு குரல் வந்து என் நெஞ்சைக் கரைத்தது. இன்னும் மனுஷங்க மாறலீங்க.
இரண்டு மணிக்கு கார் கிளம்பிய போது தூர ஆரம்பித்திருந்தது. கல்லணை டிராவலர் மாளிகைக்குப் போயிட்டு போலாம்ங்க என்று எங்கள் "பார்த்தசாரதி" முருகேசன் அண்ணாச்சியிடம் சொல்லவே "இருபது நிமிஷத்துல போயிடலாம்ங்க" என்றார். வழியில் பூண்டி மாதா கோவில் தெரிந்தது. "கிஷோர் நாங்க பூண்டி கிட்ட இருக்கோம். வந்திருவோம். நீங்க இருப்பீங்கல்ல" என்றேன். "பங்களா வந்து கார்த்தி சார்னு சொல்லுங்க" என்றான்(ர்) கிஷோர்.
"பார்த்தசாரதி" சொன்னதுபோல இல்லாமல் பதினைந்து நிமிஷத்திலையே கொண்டு போய் சேர்த்தார். எனக்கு முப்பத்தி நாலு பல்லும் தெரிந்து கொண்டிருந்தது. எம்பொண்ணு தூங்கி போய் விட்டாள். அவளை காரிலேயே கிடத்தி விட்டு அம்மா அப்பா நான் மூவரும் போனோம். முப்பது பேர், முப்பதும் "பசங்க" . அபர்ணா வரலையா, பவானி வரலையா, கஸ்தூரி??? என்றெல்லாம் கேட்டுக் கொண்டே எல்லாப் "பசங்க"ளையும் மறு அறிமுகம் செய்து கொண்டேன். நிறையா முகம் மாறி விட்டிருந்தது.

கிஷோர் சின்ன வயதில் பெண் வேடம் போடுவான். அதே போலத்தான் இப்போது, "பால் வடியும்" முகம் - நம்பாதீங்க பெண்களே.. இன்னும் பிரம்மச்சாரியாம்.. :)) உங்கல்யாணத்துல இருக்கு மண்டகப்படி என்று சொல்லிவிட்டுத்தான் வந்தேன்.
செந்தில் இருந்தான்(ர்)...அதே முகம், அப்போ கடையில் இருந்தது செந்திலின் தம்பி... :))

வில்சன் அதே உருவம், அதே முகம், அதே உயரம். எங்கள் பள்ளிக்கு முன். வெங்கட், முருகேசன், செந்தில், கிஷோர், வரதராஜன், பஞ்சாபகேசன், சிவசண்முகம், வேணுகோபால் என்று எல்லார் முகமும் மாறி இருந்தது. பழனியப்பன் ரமேஷ் வரலை. அவங்களை பற்றி கேட்கவும் மறந்து விட்டது. டொனால்ட் (நாங்க டக்குன்னு கூப்பிடுவோம்) இப்போ பாதர் ஆகிட்டானாம் (ராம்)

அண்ணன் மாவலியார் வாழ்க வாழ்க
எல்லாரும் நல்லவங்களா நல்ல நிலைமையில், இருக்கிறதப் பாத்து ரொம்ப சந்தோஷம்... மெட்ராஸ் வரும் வரை முப்பத்தி நாலு பல்லும் சிரித்தவாரே காணப்பட்டதாக சமூகத்துல பேசிக்கிறாங்க. அவ்வளோ சிரிப்புங்க அங்க.
மாவலியார் (கார்த்தி) மன்னிக்க, blackcat பாதுகாப்பில் புடை சூழ நின்றபோது கிண்டலடித்து பேசினத்துக்கு ஆட்டோவெல்லாம் அனுப்பவேண்டாம்னு கெஞ்சிக் கேட்டுக் கொண்டு புறப்பட்டபோது கும்பலா ... எல்லாரும் சேர்ந்து என்னைப் பாத்து "நீதானா அந்தக் குயில்" என்று பாடியதை மட்டும்....

பள்ளி கரஸ்பாண்டென்ட் திரு. என்.வி.என். அவர்களோடு நம்ம பசங்க

பரமபதம் என்ற ஸ்நேக் அண்டு லேடர்ஸ்
Posted by
Vidhoosh
on Thursday, December 3, 2009
Labels:
வரலாறு முக்கியம்ங்க
/
Comments: (13)
தற்போது இருக்கும் பரமபதம்
பரமபத சோபானம் என்ற இவ்விளையாட்டு இந்தியாவில் விளையாடப்பட்டு வரும் தொன்மையான விளையாட்டு. ஹிந்துத்துவம் மற்றும் ஆன்மீகத்தின் மதிப்பை இளையவர்களுக்கு (குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு) கற்றுத் தர உருவாக்கப் பட்டது. மோக்ஷ பதம், பரம பதம், மோக்ஷபத் (ஹிந்தி), மோக்ஷ படமு (தெலுங்கு), என்று இந்தியாவில் வடக்கு மற்றும் தெற்கில் பலவாறு அழைக்கப் படும் இவ்விளையாட்டை பதிமூன்றாம் நூற்றாண்டின் கவிஞரான ஞானதேவர் என்பவர் உருவாக்கியதாகக் கருதுகிறார்கள். ஆனால் இரண்டாம் நூற்றாண்டிலிருந்து இவ்விளையாட்டு விளையாடப்பட்டு வருவதற்கான குறிப்புக்கள் உள்ளன. ஆரம்பத்தில் தசபதம் என்று 10 x 10 கட்டங்களில் விளையாடப் பட்டு, பின் நூறு கட்டங்களாக வளர்ந்ததாகச் சான்றுகள் கூறுகின்றன.
தொன்மையான பரமபதம் (துணியில் வரையப் பட்டது)
பரமபதத்தின் ஏணிகள் புண்ணியத்தையும், பாம்புகள் பாவத்தையும் குறிக்கிறது. ஆரம்பத்தில் உருவாகிய பரமபதத்தில் பன்னிரெண்டாம் இடம் உண்மையையும், ஐம்பத்தொன்றாம் இடம் நம்பிக்கையையும், ஐம்பத்து ஏழாம் இடம் பெருந்தன்மையையும், எழுபத்தாறாம் இடம் ஞானத்தையும், எழுபத்தெட்டாம் இடம் சன்யசத்தையும் குறிக்கிறது. இந்த இடங்களில் எல்லாம் மட்டும் தான் ஏணிகள் இருக்கும். இந்த ஏணிகள் கருணை, அருள், கம்பீரம், நிறைவேற்றம், அறிவு, ஆற்றல், வெற்றி, அதிருஷ்டம், முன்னேற்றம், ஜயம் போன்றவைகளைச் சென்றடைய உதவும்.
நாற்பத்தொன்றாம் கட்டத்தில் கீழ்ப்படியாமை, நாற்பத்து நான்காம் கட்டம் அகந்தை, நாற்பது ஒன்பதாம் கட்டம் ஈனம், ஐம்பத்து இரண்டாம் இடம் களவு/திருட்டு, ஐம்பத்து எட்டாம் இடம் பொய்/புரட்டு, அறுபத்து இரண்டு மதுபானம் அருந்துதல், அறுபத்து ஒன்பது கடன், எழுபத்து மூன்று கொலை, எண்பத்து நான்கு கோபம்/வெஞ்சினம்/வஞ்சம், தொண்ணூற்று இரண்டு கர்வம், தொண்ணூற்று ஐந்து பெருமை, தொண்ணூற்று ஒன்பது காமம் ஆகிய இடங்களில் பாம்புகள் காணப்பட்டன. பாம்புகள் ஏழ்மை, வறுமை, தரித்திரம், செல்வம்/அறிவு வற்றுதல், ஆதரவற்ற நிலை, பிச்சை போன்ற கட்டங்களைக் கொடுக்கும்.
இரண்டு முதல் நான்கு பேர் வரை விளையாடக் கூடிய இந்த விளையாட்டு, தாயக்கட்டை உருட்டி அதில் வரும் எண்ணுக்குத் தகுந்தவாறு கட்டங்களில் காயை நகர்த்திச் செல்ல வேண்டும். விளையாட்டை ஆரம்பிக்க 'தாயம்' அதாவது 'ஒன்று' விழ வேண்டும். முதலில் மோக்ஷம் பெற்றவர் வெற்றி பெற்றவராவார்.
நூறாம் கட்டம் நிர்வாணம் அல்லது மோக்ஷம் என்று அழைக்கப் பட்டது.
1892-ஆம் ஆண்டு பிரிட்டிஷார்கள் (மில்டன் பிராட்லி - Milton Bradley) இவ்விளையாட்டை இங்கிலாந்துக்குக் கொண்டு சென்று, snake & ladders / Chutes என்ற பெயரில் விக்டோரியன் முறைப்படி மாற்றினார்கள்.
1943-ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு இவ்விளையாட்டு சென்றைடைந்த நேரத்தில் நல்லொழுக்க நெறிகள் மாற்றத்திக்கு ஆளாகி இருந்தன.உண்மையில் குறைந்து இருந்தன என்ற சொல்லலாம். கனடாவில் tobogaan runs என்றழைக்கப் படுகிறது.
தொன்மை வாய்ந்த இந்த விளையாட்டு snake and ladders மூலம் அழிந்து விட்டது. இப்போதெல்லாம் யாரும் விளையாடுகிறார்களா?
இன்றும் சிலர் வைகுண்ட ஏகாதசி அன்று இரவெல்லாம் கண்விழித்து இவ்விளையாட்டை விளையாடுகிறார்கள். படத்தை பெரிதாக்கிப் பார்க்கலாம். தெலுங்கில் உள்ளது. (நன்றி விக்கிமீடியா)
.
ஜெய் ஹோ - Live Show of A.R. ரஹ்மான்
Posted by
Vidhoosh
on Wednesday, September 30, 2009
Labels:
வரலாறு முக்கியம்ங்க
/
Comments: (8)

ஏ. ஆர. ரஹ்மானை அறிமுகம் செய்வது சூரியனுக்கே டார்ச் போலாகும்.
அவரது நிகழ்ச்சி (லைவ் கான்செர்ட்) சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில் செய்யூர் தாண்டி அமைந்துள்ள மார்க்-ஸ்வர்ணபூமி-யில் அக்டோபர் 11-2009 (ஞாயிறு) அன்று மாலை 6.00 மணிமுதல் நடைபெறப் போகிறது (நான்கு மணிநேர நிகழ்ச்சி).
இந்நிகழ்ச்சி மூலம் சக்தி பவுண்டேஷன் தொண்டு அமைப்புக்கு உதவி திரட்டப் படுகிறது. இதன் மூலம் திரட்டப்படும் நிதி ஆதிபராசக்தி மெடிக்கல் அண்ட் ரிசர்ச் ஹாஸ்பிடலுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க உதவும்.
இதற்கும் முன்னால் 2002-ஆம் வருடம் இதே போன்ற லைவ் நிகழ்ச்சி மகேஷ் மெமோரியல் கான்செர் இன்ஸ்டிட்யூட்-க்காக நன்கொடை திரட்ட நடத்தப்பட்டது.
ஆஸ்காருக்குப் பிறகு ஏ.ஆர்.ஆர். அவர் இசையுலகிற்கு அறிமுகமான சென்னையில் நடத்தும் முதல் நிகழ்ச்சி இதுதான்.
சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அறுநூறுக்கும் அதிகமான சிறப்பு பேருந்துகளை இலவசமாக இயக்க மார்க் நிறுவனம் (MARG) ஏற்பாடுகள் செய்துள்ளன. நிகழ்ச்சி நடைபெறும் இடம் சென்னை அடையாரிலிருந்து ஒன்றரை மணி நேரம் சாலை வழிப் பயணமாகச் செல்லலாம். கார் பார்கிங் வசதிகளும் மிகவும் அருமையாக செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிகழ்ச்சி ஜெய் ஹோ வேர்ல்ட் டூர்-ரின் பகுதியாக சென்னையில் நடைபெறுகிறது. இதில் ஹரிஹரன், சிவமணி, சாதனா சர்கம், ப்லேய்ஜ் (BLAAZE), பென்னி தயாள் போன்ற புகழ் பெற்ற இசைக் கலைகர்களும் பங்கேற்கிறார்கள்.
இதில் DRUMMER-களுக்கான போட்டியும் நடைபெறப் போகிறது. இதில் வெற்றிபெறும் போட்டியாளர் ஏ.ஆர்.ரகுமானுடன் சில நிமிடங்கள் இணைந்து இசைக்கும் வாய்ப்பைப் பெறுவார். போட்டியில் பங்கேற்க திறமை மட்டும் இருந்தால் போதும். வயதோ வேறெதுவுமோ தடையில்லை.
மூன்று சுவர் LED திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. பத்தாயிரம் சதுரடியில் இந்நிகழ்ச்சி நடைபெற அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான ரூ.300-க்கான டோனார் டிக்கெட்டுகள் என்னிடம் இருபத்தைந்து இருக்கின்றன.
For
- tickets - Click here
- Seating arrangement Details-Click here
- Transport arrangement Details -Click here
Time :6:00pm
Date:11th oct 09 Sunday
.
உரையாடல் கதைப் பட்டறை
Posted by
Vidhoosh
on Sunday, September 13, 2009
Labels:
வரலாறு முக்கியம்ங்க
/
Comments: (27)
உச்சிவெய்யில். டூ வீலர்ல, சிந்தெடிக் டிரஸ், அதுவும் புடவை கட்டி, டிரைவ் பண்ணிக் கொண்டு போகும்போது எக்கச்சக்கமா மவுண்ட் ரோடு ஸ்பென்செர் சிக்னல்ல 90 செகண்ட், 89, 88, 87-அப்படீன்னு கவுண்ட் டவுன் விழுந்து, நொந்து கொண்டே நம்பர எண்ணிட்டு இருக்கும் போது, திடீர்னு 85-லையே கிரீன் லைட் வந்தா எப்படி இருக்கும்?
அந்தமாதிரியே, ஒரு தினசரி வழக்கத்தில் சிக்கி சுத்திசுத்தி, ஒரு மாறுதல் தேடியும், தெரிந்ததைப் பகிரவும், பதிவுகள் என்ற எழுத்து-வண்டியில் பயணித்துக் கொண்டிருக்கையில், திடீர்னு நம்ம எழுத்தில ஏதோ குறையுதேன்னு மண்டை காயும்போது, வந்த கிரீன் சிக்னல் இந்தப் பட்டறை. அப்படியே, எதிர்பாராத சிக்னல் கிடைத்து 65-70 கி.மீ. வேகத்தில் சிலு-சிலுவென டிரைவ் செய்யும் அனுபவம் போல இருந்தது இந்த வொர்க் ஷாப்.
இதே போன்ற ஆர்வத்துடன், வந்திருந்த பதிவுலக நண்பர்கள் - மொத்தம் எண்ணிக்கையில் எண்பதை (80) நெருங்கிய ஆர்வலர்கள், என்னையும் சேர்த்தால் 82 :))
இதை ஏற்பாடு செய்த சிவராமன் மற்றும் ஜ்யோவ் மற்றும் நர்சிம்மின் உழைப்புக்கள் பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
இங்கு என் அனுபவத்தை மட்டும் பகிர்கிறேன். இன்னும் விபரமாக எழுதாததற்கு நான் எதையும் விட்டு விடுவேனோ என்ற அச்சம் மட்டுமே காரணம். விபரங்கள் அனைத்தையும் பத்ரி-யின் பதிவிலும், சிவராமன் (சிதைவுகள்) அவர்களின் பதிவிலும் விரிவாகப் பாருங்கள்.
வாசலிலேயே நின்று திருமண வீட்டுக்காரர் மாதிரி "வாங்க" என்று வரவேற்ற சிவராமன், hats off to you Sivaraman. மீண்டும் ஒரு முறை அசந்து விட்டேன் உங்களைப் பார்த்து. :)
முதலில் பேசிய பாஸ்கர் சக்தி, தான் கதை எழுதிய அனுபவங்களைப் பற்றிய தெளிவாக விவரித்தார். கலந்துரையாடலும், சுவாரசியமான பதில்களும் இரசிக்கும்படியாக இருந்தன. ஆரம்பகாலத்தில் இந்திய டுடேவில் தன் கதை பரிசு வென்றது, அழகர்சாமி குறித்த அவர் பகிர்தல்கள், எல்லா கேள்விகளுக்கும் புன்னகையுடன் பதில் சொல்லி, கேட்டது அற்புதமான அனுபவம்.
பின் யுவன்சந்திரசேகர் - கலகலப்பான ஆசாமி. சுவாரசிய பேச்சாளர். "எங்க விட்டேன்” என்று கேட்டு கேட்டு, தூக்கம் வராமலும் பார்த்துக் கொண்டார் :) இவர் எழுத்துக்களை, ஒன்றிரண்டை தவிர அதிகம் வாசித்ததில்லை நான். மொத்தத்தில் அவர் கதையிலிருந்தே ஒரு சின்ன வார்த்தை அவரைப் பற்றி, "தூரத்தில் ஒரு கர்ஜனை…கர்ர் க்ர்ர் க்ர்ர். கூட்டம் அமைதியாகிவிட்டது” என்றது போலும். மொத்தத்தில் இந்தப் பேச்சுக்கு கண்ணனின் குழலுக்கு மயங்கிய நிலையிலேயே இருந்தோம். நீண்ட நாள் நண்பரிடம் பேசிய உணர்வு. அவர் வார்த்தையிலேயே சொல்லனும்னா "சொக்கிட்டோம்ங்க" :))
சாப்பாடு முடிந்த பின், தேவதாஸ் அவர்களின் உலகச் சிறுகதைகள் பற்றிய வலிமையான, ஆனால் மெல்லியப் பேச்சை எவ்வளவு பேர் தூங்காமல் கேட்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அவர் பேசியவை அனைத்துமே ரொம்ப முக்கியமானதாக இருந்தன. எங்க அம்மாக்கு அப்புறம், இவரிடம் நிறையா கதைகள் சொல்லி கேட்டேன். மகிழ்ச்சியாக இருந்தது. உலக கதைகள் மீதும், மொழிகள் மீதும் தீராத காதல் இவர் கண்களில் கண்டேன். பொதுவாகவே, எனக்கு மொழிகள் மீது obsession இருப்பதால், இவர் பேச்சு எனக்கு உற்சாகமாய் இருந்தது.
பா. ரா. அவர்கள் பத்திரிக்கைக்குக் கதை எழுத வேண்டியது பற்றியும், வெகுஜனப் பத்திரிகைகள் பற்றிய பொதுப்படையான எதிர்மறைக் கருத்துக்களையும் மிக அழகாக விவரித்தார். கதைகளை படித்து, சிறந்ததைத் தேர்ந்தெடுக்கும் sub-editor-கள் பாவ ஜீவிகள் என்ற அவரது விளக்கம், சிரிப்பை வரவழைத்தாலும், கருத்தில் விவேகம். தரமணியிலிருந்து படையெடுத்த எழுத்தாளர் ஆயிரம்-கஜினிக்கு tough கொடுப்பார் போலருக்கு. பா.ரா. வுக்கு எத்தனை அனுபவங்களைக் கொடுத்தார் என்று சொல்லியபோது சிரிப்பு வந்தாலும், அவர் முகத்தில் புன்னகை கூட இல்லைங்க. எனக்கென்னவோ அவரே சொன்னது போல, "ஐயோ, இந்தாளு கதையை ஒன்னு கூட பிரசுரிக்க முடியலையே" என்ற வருத்தம் மட்டுமே தெரிந்தது. இரசனை பேச்சாளர். பேச்சுகள் பாடங்கள்.
வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை பத்ரி அவர்கள் முழுதுமாக வெளியிடுவார் என்றே நினைக்கிறேன். ஒவ்வொருவரும் கண்டிப்பாய் பாருங்கள். நாம் ஒரு எழுத்தாளராக போக வேண்டிய தூரம், ஒன்றிரண்டு முக்காதம் :)
===================
வழக்கமாக weekend-களில் நாங்கள் இருவரும் எங்கும் போவதில்லை என்றே முடிவெடுத்திருந்தோம். போறாக் குறைக்கு உடல்நிலை வேறு சிறிது ஒத்துழைக்காமல் இருந்தது. "நாளைக்கு வொர்க் ஷாப் போகனும்னு சொல்லிண்டிருந்தையே" என்று நேரத்துக்கு மருந்து-மாத்திரை கொடுத்து, என்னை கவனித்துக் கொண்ட, என்னை இதில் பங்கேற்கும் படி செய்த, பாஸ்கருக்கு (என் கணவர்) ஒரு பெரிய நன்றி. :)

நூறு புதிர்
Posted by
Vidhoosh
on Wednesday, September 2, 2009
Labels:
வரலாறு முக்கியம்ங்க
/
Comments: (30)
இந்த புதிருக்கு பதில் சொல்லுங்க!!
1 2 3 4 5 6 7 8 9 0 = 100
இந்த formula-வை mathematical symbols பயன்படுத்தி கரெக்டா 100 வரும்படிசொல்லுங்க.
==============================
அதாவது என்ன சொல்ல வரேன்னா, இது என்னோட நூறாவது பதிவுங்க.
சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் "பைத்தியக்காரன்" சிவராமன் அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன். இன்றும் ஒரு முறை "நன்றி சார்".
ஆடிக்கும் அமாவாசைக்கும் ஒருமுறை, எட்டி நின்றுகொண்டே எட்டி எட்டி பார்த்துக் கொண்டு இருந்த என்னை உரையாடல் சிறுகதைப் போட்டியே மீண்டும் எழுத வைத்தது. உண்மையில் போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கவே இல்லை. என் எழுத்துக்களுக்கு ஒரு அறிமுகம் தேடியே வந்தேன். (ஆனாலும் முடிவுகள் வந்த அன்று வயிற்றில் பட்டாம்பூச்சிகள் என்னவோ உண்மைதான்!!)
பதிவுலக நட்புக்கள் எல்லாமே போற்றத்தகுந்தவை. இது எனக்கு கொடுத்த முகமறியா நட்புக்களும், நான் நேரில் சந்தித்த ஒரே ஒரு பதிவரும், மிகவும் அற்புதமான மனிதர்கள். எவ்வளவு விஷயங்கள், கவிதைகள், எத்தனை விதமான சிந்தனைகள், எத்தனை நிறங்கள்?
எத்தனை கருத்துக்கள் உள்ளதோ, அத்துணைக்கும் வாசலாக இருக்கிறது blogging. இதுவரை அற்புதமான பயணம். அழகான நட்புக்கள். 2002-விலிரிந்து பதிவுலகை தொடர்ந்து படித்து வருகிறேன். எது என்னை blog-கிற்கு முதன் முதலில் இழுத்தது என்றெல்லாம் மறந்து விட்டது. ஆனால் ஏதோ ஒரு கூகிள் தேடலில்தான், வந்து சேர்ந்தேன் என்பது மட்டும் நிச்சயம்.
ஒரு சுபயோக சுபதினத்தில், தேடித் தேடித் படித்த என் பல வருட புத்தக படிப்பு தந்த, கையொடிய குறிப்பெடுத்த பல அருமையான புத்தக குறிப்புக்கள் அனைத்தும் நிஜமாகவே "பக்கோடா பேப்பர்கள்" ஆகிவிட, ஆரம்பத்தில், நான் கொஞ்சம் நினைவிலும் சேமித்து வைத்த புத்தகக் குறிப்புக்களை எங்கும் பத்திரமாக வைக்க வேண்டும் என்றே பதிவிட ஆரம்பித்தேன். என்ன, சிலவற்றை மீண்டும் ஒருமுறை மறுவாசித்தல் செய்து சரி பார்த்துக் கொள்ளவேண்டியதாய் இருக்கிறது.
சென்ற பிப்ரவரியில்தான் என்ட்ரி. ஆங்கிலமா தமிழா ஹிந்தியா சமஸ்கிருதமா என்று யோசித்துக் கொண்டே, தமிழை தேர்ந்தெடுத்தேன், என் எண்ணங்களும் உணர்வுகளும், தாய்மொழியில், எந்தவித சாயமும், உதட்டுப் பூச்சும் இல்லாமல் அப்படியே வந்து விழும் என்பதால்.
நான் எழுதுவதை படித்து, என்னுடன் கருத்துக்களை பகிரும், லைப்ரரியில் படிக்கிறா மாதிரி சத்தம் போடாமல் படித்துவிட்டு மட்டும் போகும், அனைவருக்கும் மிகவும் நன்றி. :)
ஒரு நல்ல மழை நாளில், ஊஞ்சலில் ஆடியபடி, நா. பார்த்தசாரதியின் "சமுதாய வீதி" புத்தகத்தோடு, அருமையான டீயுடன், பக்கோடா சாப்பிடுவது போல ஒரு மகிழ்ச்சி இங்கு வரும் போதெல்லாம்.
அப்படியே மறக்காம, அந்த புதிரையும் முயற்சி செய்யுங்க. :)
யாருமே அழைக்காமல், இந்த கல்யாண வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் வாங்க வாங்கன்னு, கை பிடிச்சு கூட்டிட்டுப் போயி, ஆதரவு விருந்து கொடுத்து, என்னை நூறாவது பதிவு வரை நகர்த்திக் கொண்டு வந்த உங்கள் எல்லோருக்கும் ரொம்ப நன்றிங்க.
உங்கள் தோழி: விதூஷ் :)

===============
அப்படியே இதையும் படிச்சு இரசியுங்க...
The Fray's Hundred
(The Fray is a Grammy Award-nominated four-piece piano rock band.)
The how I cant recall
But I'm staring at
What once was the wall
Separating east and west
Now they meet amidst
The broad daylight
So this is where you are
And this is where I am
Somewhere between
Unsure and a hundred
Its hard I must confess
I'm banking on the rest to clear away
Cause we have spoken everything
Everything short of I love you
You right where you are
From right where I am
Somewhere between
Unsure and a hundred
And who's to say its wrong
And who's to say that its not right
Where we should be for now
So this is where you are
And this is where I am
So this is where you are
And this is where I've been

First Blog
Posted by
Vidhoosh
on Monday, February 16, 2009
Labels:
வரலாறு முக்கியம்ங்க
/
Comments: (2)
When nothing was to be done, I blogged.
This day, Year 2000, Rajeswari / Vaishnavi / Vaishu, My eldest sister Gayathri's daughter was born. I wish her a happy birthday and a peaceful long life. Vaishu brought many changes in my life, of which, she made me realize what real affection is. She is the first child with whom I spent most of my time. She loves me a lot and sends gifts on mother's day to me too.
She is also the most adored akka and friend of my daughter Darshini. Vaishu and Darshini mean a lot to me, as they made me realize the purpose of my life. They made me explore more, knowledge, that I can answer their questions. They made me smile and laugh without any reason. I have many things to say to them, I start this blog as a channel to share my thoughts and some moments, on this day to show my gratitude to Vaishu. Thanks Vaishu. I love you a lot.