Showing posts with label வாசிப்பு. Show all posts
Showing posts with label வாசிப்பு. Show all posts

மரமும் செடியும் -- தி. ஜானகிராமன்

அக்பர் சாஸ்திரி - தி. ஜானகிராமன்

அம்பி, ராஜு, சேஷு மற்றும் சாப்பாட்டு ராமன்கள் - வி.கங்காதர்

ஒரு தற்கொலைக் குறிப்பு

All fled--all done, so lift me on the pyre;
The feast is over, and the lamps expire.

~~ Robert E. Howard, writer, d. June 11, 1936 (Suicide note)

சும்மாதான். இப்போ படித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் இருந்த, ரொம்ப தாக்கம் கொடுத்த, இன்னும் மனசை விட்டு போகாத ஒரு சின்னக் குறிப்பு :-)

அம்மா


விதுர நீதி 1

விதுர நீதியைத் தமிழில் எழுதிப் பார்க்க வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசையாக இருந்தது. பகுதி பகுதியாகத் தருகிறேன்.
====================
சஞ்சயன் வெறுங்கையோடு திரும்பி, திருதராஷ்டிரனைப் பார்த்து "மகாராஜா! ராயபாரம் தோல்வியுற்றது. யுத்தம் தவிர்க்க முடியாததாகிப் (அனிவார்யம்) போனது" என்றார். திருதராஷ்டிரன் பெருஞ்சஞ்சலத்தில் ஆழ்ந்தார். நம்பிக்கைக் கொடுக்கும் நல்ல வார்த்தைகள் கேட்க விழைந்து விதுரனை அழைக்கிறார்.

விதுரன், யமதர்மராஜனின் அவதாரமாகக் கருதப் படுகிறார். அவர் நிரஹங்காரி (அஹங்காரம் அற்றவர்), நிஷ்ச்சலமனஸ (சலனமற்ற மனமுடையவர்) என்றும் அறியப்படுபவர்.

திருதராஷ்டிரனைக் காண விதுரன் வந்து, அவரை நமஸ்கரிக்கிறார். விதுரனை அமரச் செய்து, திருதராஷ்டிரன் "நல்லவற்றைக் கேட்டு நாளாகிப் போனது. எனக்கு சில ஹிதவாக்கியங்களை (இனிமையான வாக்கியங்கள்) கூறுவாயாக" என்று கேட்கிறார்.

விதுரன் "மகாராஜா. உங்கள் விழிகளில் சிவப்பு நரம்புகள் தெறிக்கிறது. உங்களுக்கு உறக்கமின்றிப் போனது. இது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. ஏனென்றால், பலவந்தர்கள் (பலம் பெற்ற சான்றோர்கள்) மீது விரோதம் கொள்ளும் துர்பலர்கள் (பலத்தை துஷ்ப்ரயோகம் செய்பவர்), மாற்றான் சொத்துக்களை அபகரிப்பவர்கள், காமாந்தகர்கள், திருடர்கள் போன்றவர்கள் மட்டுமே உறக்கமின்றித் தவிப்பார்கள் என்று அனுபவ சாஸ்திரங்கள் உரைகின்றன. நானறிந்த வரையில், தாங்கள் அப்படிப்பட்ட பாதங்கள் புரியவில்லையே! பின்பு தங்களுக்கு ஏன் உறக்கம் வரவில்லை?" என்று வினவுகிறான்.

விதுரனின் எதிர்கேள்விக்கு பதிலுரைக்கமுடியாது திகைத்த திருதராஷ்டிரன் "விதுரா. உன் வாயால் தர்ம பிரவசனம் (தர்மம் குறித்த உரை - lecture) கேட்கவும் ஆவலோடிருக்கிறேன்." என்கிறார்.

விதுரன் தொடர்ந்து: "மகாராஜா! யுதிஷ்டிரன் உத்தமன். உன்னதமான ஆசைகள் கொண்டவன். தர்மத்தை பின்பற்றுபவன். உதாத தர்மவானாகிய (பிரதிபலன் பாராதவன்) அவனே அரசனாகும் தகுதிகள் பெற்றிருக்கிறான். அவனிடம் அரசனாகும் அதிகாரமும் பலமும் இருந்தாலும், உங்களைத் தந்தையாகக் கருதி, அவன் உங்கள் ஆணையை மீறி நடந்ததேயில்லை. அப்படியிருந்தும், அவனை வானப்ரஸ்தம் செய்வித்தீர்கள். இன்று உங்கள் சத்தியத்திற்கு புறம்பாகவும், வாக்கை காப்பற்றமுடியாமலுமான சூழ்நிலையில், ராஜ்ஜியத்தை அவர்களுக்கு அளிக்க முடியாமல் இருக்கிறீர்கள். துரியோதனுக்கு சாம்ராஜ்யபாரத்தை அளித்து, துச்சாதனன், சகுனி, போன்ற காமாதி அயோக்கியர்களுக்கு இடம் கொடுத்து விட்டீர்கள். இப்போது அமைதியை வேண்டுவது நியாயமில்லை? உங்களுக்கு நியாயமாகத் தோன்றுகிறதா? சாத்வீக ஸ்வபாவம் (அமைதியானவன்), உத்யோகயத்னம் (தன் வேலையைச் செவ்வனே செய்பவன்), கிலேஷ சஹனம் (விருப்பு வெறுப்பற்றவன்), தர்மவான் (நியாயமாய் நடப்பவன்), எவனோ அவனுக்கு இன்னல்கள் நேர்ந்தாலும், அவன் குறிக்கோள்களில் அவன் என்றும் தோற்ப்பதில்லை. அப்படிப் பட்ட சுஜனர்கள் (தெளிந்த குறிக்கோளுடையவர்) துர்ஜனர்களிடமிருந்து (குறிக்கோளற்றவர்கள்) விலகி இருப்பார்கள்.

மஹாராஜா! வித்வான் (அறிவிற்சிறந்தவன்) என்பவன் யார்? தர்மார்த்தங்களை பின்பற்றுபவன், லோக விவாகரங்களை நன்கறிந்தவன், குறிப்பால் உணர்பவன்
போக சிந்தனையற்றவன் ஆனால் புருஷார்த்தங்களைப் பின்பற்றுபவன் (குடும்ப வாழ்விலும் ஈடுபடுபவன்), எந்த நிலையிலும் மற்றவன் மீது அவதூறுகள் பேசாதிருப்பவன், நியாயமற்ற இலாபங்களை விரும்பாதிருப்பவன், நிரந்தரமாக இழந்துவிட்ட பொருட்களைக் குறித்த துக்கம் கொள்ளாதிருப்பவன், கஷ்டங்களை எதிர்கொள்ளும் மனஉறுதியும் தைரியமும் பெற்றவன், இடையில் விட்டுவிடாது எச்செயலையும் முழுதாக முடிப்பவன், சோம்பேறித்தனம் இல்லாதவன், இந்த்ரீய நிக்ரஹம் செய்பவன் (உணர்வுகளை அடக்கும் ஆற்றல் பெற்றவன்), போன்ற குணங்களைப் பெற்றவனின் இதயம் பவித்திரமான கங்கையின் ஊற்று நீர் போல சுத்தமாயிருக்கும். கற்றகல்வி எப்போதும் அவர்களுக்கு நல்வழி காட்டும்.

மூர்க்கர்கள் யார்? மூர்க்கர்களுக்கோ கல்வியின் பயன் கிடைக்காது, விவேகம் அழிந்து கர்வம் பெருகும். இப்படிப்பட்ட தாரித்திரியம் (காம-கோப-மூர்க்க-கர்வ குணங்கள்), கொண்டவர்களுக்கு ராஜாங்கச்செல்வங்களை பாதுகாக்கும் கனவு எதற்கு? ஸ்வ-தர்மம் (தனக்கே தன் மீதான மரியாதை) விடுத்தவர்கள், பரதர்மம் (ஸ்வ-தர்மத்தை விடுத்து அடுத்தவனின் நம்பிக்கைகளை பின்பற்றுபவன்), தன் நண்பர்களை அவமதிப்பவன், பலவந்தர்களுடன் விரோதிப்பவன், நண்பர்களே இல்லாதவன், அதிகப் பிரசங்கி (அவசியமில்லாமல் அளவு மீறி பேசுபவன்), க்ருதஞ்ஞம் (நன்றியுணர்வு) இல்லாதவன், மற்றவன் குற்றத்தை மட்டுமே நினைவில் கொள்பவன், காரணமேதுமின்றி அற்ப விஷயங்களுக்குக் கூட ஆவேசப் படுபவன், அனர்த்தர்களுக்கு உபதேசம் செய்பவன் போன்றவர்கள் மூர்க்கர்கள்.

பிரபு! பெருஞ்செல்வமான கல்வி, கேள்வி, வேள்விகளின் அதிருஷ்டம் இருந்தாலும், தானங்கள் செய்த புண்ணியவானாக இருப்பினும், கர்வம் இருந்தால், அவன் வித்துவான் ஆக முடியாது.

பரம மூர்க்கன் என்பவன் யார்? தன்னுடன் ஒரே கூரைக்குள் இருப்பவர்களுக்குக் கொடுக்காமல் உணவு உண்பவனும், உணவுக்காக இறைஞ்சுபவனும் பரம மூர்க்கர்கள்"


------------->இன்னும் வரும்<-------------

பெரியம்மை பாட்டி - திரு.வி கங்காதர்

தண்ணீர் என்ற அம்ருதம் பிரம்மா

வேதங்களைப் பற்றிய (அல்லது) அதை சுற்றிய சிந்தனைகள் மட்டும் தான் இப்போது. அதனாலேயே என்னவோ இந்த தண்ணீர் தண்ணீர் பத்திகளைப் படித்ததும் இதையும் என் சேகரிப்பில் இணைக்கத் தோன்றியது. உங்களுக்கும் பயன்படலாம். படித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் (பொறுமையும்) இருந்தால் மகிழ்ச்சி.

யாகங்கள் / ஹோமங்களின் பொது பெரும்பாலும் "மந்த்ர புஷ்பம்" என்ற "யோபாம் புஷ்பாம் வேத" என்ற மந்திரத்தை புரோஹிதர்கள் கூட்டாக உச்சாடனை செய்ய கேட்டிருக்கலாம். அதன் பொருள் என்ன? தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறேன். வரும்.

சப்தங்களின் அதிர்வை தண்ணீர் உணருமா? எப்படி உணர்கிறது? அதன் பலன் என்னென்ன? அறிந்து கொள்ள Dr. Masaru Emoto, என்ற ஜப்பானிய விஞ்ஞானியின் தளத்தை பாருங்கள். ஆராய்ச்சிகளின் மூலம் அறியத் தந்தவற்றை இந்த வீடியோவில் பாருங்கள் .



==========================================================

இன்ன பிரச்சினைக்கு இன்ன rate என்ற விகிதத்தில், பணத்தைக் கொடுத்தால் சுகபோகங்கள், வியாதி தீருதல், கணவன் மனைவி பிரியாத வாழ்வுக்காக மந்திரங்கள் ஜபிக்கப் படும் என்பதையெல்லாம் நம்பும் அவசரத் தீர்வுகளைத் தேடும் வேகவிரும்பிகளாக ஆகி விட்ட நாம், சற்று நிதானிக்க வேண்டிய தருணம் - என்று world water day மூலம் UNCED 94-ஆம் வருடம் முதல் அறிவித்துக் கொண்டே இருக்கிறார்கள், ஆமாங்க!!! இவங்க நார்த் அமெரிக்கா-காரங்கதான் ... இனிமேயாவது கொஞ்சம் கேட்டுப்போம்.

கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலையும் கதையாக, நம்மிடமே இயற்கையை பாதுகாக்கும் எவ்வளவோ வழிமுறைகள் இருந்தாலும், அவற்றை கரையானுக்கு போட்டுவிட்டு, யாருக்கும் ஈமெயில் ஒரு pdf அல்லது pps கோப்புக்களை forward to all என்று ஒரு send button-னை click செய்து அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விட முடிகிறது. தற்போதைய / வருங்கால தலைமுறைகளுக்கு நம்மிடம் கொஞ்ச நஞ்சம் மிஞ்சியிருக்கும் சிலவற்றையேனும் எடுத்துக் கொடுக்கவும், அவற்றை பின்பற்றி இருப்பதை பாதுகாத்துக் கொடுக்கவும் எவ்ளவோ விஷயங்கள் hymn-களாகவும் சுலோகங்களாகவும் ஒளிந்து கிடக்கின்றன. இப்போது யாரும் படிப்பதில்லை, யாருக்கும் புரியவதுமில்லை, ஆனாலும், long-term perspectives-களோடு எழுதப்பட்ட கருத்துக்கள், கொள்கைகள், கலாச்சாரம் மற்றும் பழக்கங்களாக மட்டுமே வேதங்களை என்னால் பார்க்க முடிகிறது.

=======================================
வேதங்களில் இயற்கையையும் இயற்கையை சார்ந்தவற்றையும் பாதுகாக்க வேண்டிய வழிமுறைகள் அனைத்தும் பாடல்படுத்தப்பட்டிருக்கிறது. நமக்கெல்லாம் யார் சொன்னா என்ன, யாராவது ஒரு வியாபாரி தன் லோகோ-வோடு "Save Water, Save Environment, Save Energy" என்று அதை இங்கிலிஷில் சொன்னால் மட்டுமே கேட்போம். அப்போத்தானே நமக்கும் பெருமை. என்னவோ போடா மாதவா.

அதில் ஒரு சில உதாரணங்கள் இங்கே. எப்போதோ இதை படித்து நம் முன்னோர்கள் "ஆமா இதைப் போயி" என்று சிரித்திருக்கலாம். அதன் பலனைத்தான் நாம் இன்று "Save... Save" என்று கூவிக் கொண்டிருக்கிறோம்.
=======================================
ரிக் வேதம் (6:48:17) மரங்களை வெட்டக்கூடாது, அவை காற்றை தூய்மை படுத்துகின்றன
யஜுர் வேதம் (5:43) வானத்தை கிழிக்காதீர்கள், ஆகாசத்தை மாசுபடுத்தாதீர்கள்
சரக சம்ஹிதம் -- ஒரு காடு அழிந்தால் ஒரு நாடு அழிகிறது, மீண்டும் ஒரு காட்டை உருவாக்குவதை விட எளிதாக ஒரு நாட்டை உருவாக்க முடியும் என்பதால், காடுகளை காக்க வேண்டும். காடுகளின் உள்ள மிருகங்கள் காட்டின் வளர்ச்சிக்கு தேவையாக இருப்பதால், அவற்றை பாதுகாப்பது நம் சடங்கு எனக் கருத வேண்டும்.
=======================================
"அம்ருதம் பிரம்மா பூர் புவஸுவரோம்"

அம்ருதம்: தண்ணீர்
பிரம்ம: உயிர் (அ) வளர்ச்சி (அ) அசைவு உடைய அனைத்தும்
பூர்: ஐம் பூதங்களைக் கொண்ட உலகம்
ஸுவ: தெய்வீகத்தன்மை கொண்ட (அ) உடையதாகக் கருதப் படும் எதுவும்
ஓம்: Universal Sound

தண்ணீர் உயிர்களின் அமிருதம், அதுவே அசைவுடைய உயிர்களைக் கொண்ட இந்த உலகத்தின் அசைவுக்கும், சுவர்க்கத்தின் இயக்கத்திற்கும், ஓம் என்ற நாதம் தோன்றவும் ஆதாரமாக அமைகிறது.
=======================================
காகூ தீர்; காகூ நீர்; காகூ பேத் பிசார் || நானகா பகத் ப்ரியா ஹோ ||3||2||155||
(சீக்கிய "ஷபத்" -- குரு அர்ஜன் தேவ் ஜி [ராக் கௌரீ-- பன்னா 213]
காகூ -> சிலர்
தீர் ->நதிக்கரை / நீர்நிலைக்கு அருகிருக்கும் மணற்பரப்பு
நீர்-> தண்ணீர்
பேத பிசார் -> வேதங்கள்
நானக் - குறு நானக்ஜி
பகத் - பகவான் / கடவுள்

சிலர் கரைகளில் வாழ்கிறார்கள்; சிலர் தண்ணீரிலேயே வாழ்கிறார்கள்; சிலர் வேதங்கள் படிக்கிறார்கள்; நானக்கிற்கு இறைவன் மீது அன்பும் (பக்தி) என்கிறார்.
=======================================
அப்ஸ்வன்தர்ம்ரித்மப்யு பேஷஜம் || [4/4 அதர்வவேதம்]

அப்ஸ்வன்தம் -->தண்ணீரில்
அம்ருதம் --> அமிருதம் இருக்கிறது
அப்யு --> அதுவே மேன்மையான
பேஷஜம் --> மருந்தாக இருக்கிறது

=======================================
ருக் வேதத்தின் ஜலஸுக்தம் என்ற புத்தகத்தில்:

யா ஆபோ திவ்ய உத(tha) யா சவன்தி, ரவநித்ரிமா உதத் வா யா ஸ்வயஞ்சா:
சமுத்ரார்தா யா: ஷுசைய: பா(p)வகாரத; ஆபோ தேவீரிஹ மாமவன்து||

தண்ணீரானது சுவர்க்கத்திற்கு நிகரான மலைமுகடுகளில் இருந்து பூமிக்கு வருகிறது. நதி ரூபமாகி வேகம் கொண்டு பாய்கிறது. ஓடையாகித் தவழ்கிறது. பூமியைத் தோண்டுவதன் மூலம் ஊற்றாகி குட்டைகள் மற்றும் கிணறுகளில் பெருகுகிறது. இவ்வாறும் பயணித்து சமுத்திரத்தில் சேர்க்கிறது. என்னை புனிதமாக்கி என்னை வாழச்செய்யும் தண்ணீரே! என்னைக் காப்பாய்.

என்று நீர்நிலைகளை வணங்கச் சொல்கிறது.

=======================================
லதுமய ஸ்மிருதியில்
"வித்தோபேக்ஷம் பவேதஷ்டிம் தடாகம் பூர்தமுச்யதே
ஆராமஷ்ச்ச விஷேஷேன தேவத்ரோணச்ததைவ ச||" என்று சொல்லப் பட்டிருக்கிறது.
அதாவது, தடாகம் என்பது விசேஷமாக அமைக்கப் பட்டத் தோட்டமும் நீர்நிலையும் கூடிய இடமாக இருக்கிறது. அழிந்துவிட்ட தடாகங்கள், கிணறுகள், மற்றும் குளங்களை மீண்டும் புனர்நிர்மாணம் செய்ய உதவுபவன் உலகில் உள்ள ஜீவராசிகளை காப்பதின் புண்ணியத்தைப் பெறுகிறான்.
=======================================

தண்ணீரை எப்படி பாதுகாக்கலாம் என்று வேதங்கள் கூறுகின்றன? இதையேதான் நாமும் இன்றும் சொல்லி (மட்டும்) கொண்டிருக்கிறோம்.

நீர்நிலைகளில் கிணற்றில் எச்சில் துப்புவதோ, குப்பைகளைப் போடுவதோ கூடாது.
நீர்நிலைகளுக்கு அருகில் மலஜலம் கழிப்பது பாவச் செயல். (சென்னையின் முகமாக கூவம் இருக்கும் கதியை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்)

வீடுகளுக்கான உபயோகத்திற்கு என்று இந்த நீர் நிலைகளில் இருந்து தினமும் தேவையான அளவுக்கு நீர் சேகரிக்க வேண்டும். அன்றைய தேவைக்கு போக மிகுந்ததை மறுநாள் காலை மீண்டும் நீர் நிலையிலேயே விட வேண்டும். (கொசு உற்பத்தி தவிர்க்கப்படுகிறது)

ஒவ்வொரு வருஷத்திற்கும் ஒருமுறை மக நட்சத்திரம் கூடிய நாளில் நீர்நிலைகளை தூர் வார வேண்டும் (மகாமகம் உற்சவமாகிப் போனது)

நீரில் மண் / சகதி முதலியவற்றை வீசக் கூடாது.

காலம்னிஸ்ட் வி.கங்காதர்


ஒரு சமயத்தில் வி.கங்காதர்-ரின் பத்திகள் (column) படிக்கவே ஹிந்து படிக்க ஆரம்பித்தேன். நாளடைவில், ஹிந்துவில் உள்ள ரசனையான ஆங்கில எழுத்து நடை என்னை ஹிந்து பத்திரிகை அடிக்ட் ஆக்கி விட்டது.

அப்படி என்னையும் தினசரி பத்திரிகை வாசிப்பவளாக ஆக்கிய வி. கங்காதர் அவர்களுக்கு இந்த போஸ்ட் சமர்ப்பணம்.

அவருடைய பத்திகளில் சில இங்கே படிக்கக் கிடைக்கும்.
rediff.com: V Gangadhar's home page

V. Gangadhar – Slice of Life Archive : Hindu Sutra

A question of age:The best way to delay ageing is to accept it, says V Gangadhar
திரு.வி.கங்காதர் ஹிந்துவில் slice of life என்ற தலைப்பில், இயல்பான பேச்சு நடையிலேயே வரும்.

ஒவ்வொன்றும் நமக்கு மென்மையான கிண்டல் உணர்வும், அப்படியே இரண்டு கைகளையும் தலைக்குக் கொடுத்து பின்னால் சாய்ந்து கொண்டு விட்டத்தை பார்த்து ஒரு மெல்லிய புன்னகை வரவழைக்கும் nostalgic அனுபவங்களையும் பற்றி எழுதி இருப்பதில், எனக்கு மிகவும் பிடித்த சில பத்திகள், தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது, முறுக்கு, மாங்காய் சாப்பிடுதல் போன்றவை பற்றி எழுதி இருப்பன.

இவரைப் பற்றி இன்னும் எழுத வேண்டும் என்றுதான் ஆசை. கைகடிக்கும் கடிகார முட்கள். என் சேகரிப்பில் இருக்கட்டும் இப்போதைக்கு என்று சிலவரிகளைக் குறித்துள்ளேன். இன்னும் விரிவாக இவரது பத்திகளை, தகுந்த அனுமதி பெற்று, மொழிபெயர்த்து பகிர்கிறேன்.

ரிக் வேதத்தில் பொங்கல் திருநாள்

போகிப் பண்டிகை - ஜனவரி 13-2010, புதன்கிழமை, மார்கழி 29, விரோதி ஆண்டு
பொங்கல் மற்றும் தை அமாவாசை - ஜனவரி 14, 2010, தை 1, விரோதி ஆண்டு, வியாழக்கிழமை
மாட்டுப் பொங்கல் - ஜனவரி 15, 2010, தை 2, விரோதி ஆண்டு வெள்ளிக் கிழமை
=================================
ரிக் வேதத்தில் சொல்லப் பட்டுள்ள மஹா விரதம்

ஒரு வருடம் முழுதையும் குறிக்கும் கவ மாயன சாத்திரம் (கவ = பூமி, மாயனம் = சூரிய மண்டல சுழற்சியில் மாற்றம் ஏற்படுவது) என்ற நாளுக்கு முதல் நாளே மஹா விரதம். விஷுவத் (விஷு) என்று சொல்லப்படும் நாள் பனிக்காலம் முடிந்து சூரியனின் முழு வெப்பமும் பூமிக்கு கிடைக்கும் நாளாக கொண்டாடப் படுகிறது. இன்று செய்யப்படும் கொண்டாட்டங்கள் மூலம் சூரியனின் வெப்பம் அதிகரிக்கும் என்றும், பின்பனி விரைவில் விலகி தாவரங்களுக்கும் நன்மை பயக்கும் என்று நம்பப் படுகிறது.

தொன்மை நாட்களில், போர் வீரர்கள் இறந்த பசுவிலிருந்து எடுக்கப் பட்ட மாட்டுத் தோல் மீது தம் அம்புகளைத் தீட்டுவார்கள். பின் அந்தத் தோல் கொண்டு முடையும் பறையில் ஒலி எழுப்பி ஒலிக்கேர்ப்ப நடனம் புரிந்தும், பிராமணர்கள், ஆரியர்கள் மற்றும் சூத்திரர்களுக்கு இடையே மல்யுத்தம், வாட்போர், விற்போர், வேதங்கள் உரைத்தல், பேச்சு, கல்வி, கவிதை புனைதல், பாடல், நடனம், மந்திர ஜாலங்கள் செய்தல் போன்ற போட்டிக்களை நடத்தியும் கொண்டாடப் பட்டது. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் தாம் தற்போது புரியும் தொழிலை விட்டு அதை விட ஒரு உயர்ந்த தொழிலைச் செய்யவேண்டும் என்று குறிக்கப் பட்டுள்ளது. தொழில் அடிப்படையில் க்ஷத்திரிய ஆரிய சூத்திரர்கள் அதாவது பிராமணன் வென்றால் க்ஷதிரியத் தொழிலையும், ஆரியன் வெற்றி பெற்றால் பிராமணத் தொழிலையும், சூத்திரன் வென்றால் ஆரியத் தொழிலையும் செய்ய வேண்டும் என்று பணித்தார்கள். தோற்றவர்களுக்கு depromotion கொடுத்து அந்ததந்ததொழிலை மேற்கொள்ள வேண்டும்.

மஹா விரதம் என்ற இந்தத் திருநாளை கலாச்சார மாற்றத்திற்கும், சமூக மாற்றத்திற்குமான நாளாகவும், அனைவருக்கும் சமமான வாய்ப்பளித்து, திறமைகளை கண்டறியும் நாளாகவும் கொண்டாடப் பட்டு வந்தன. இந்தியா முழுவது, பைசாக்கி, விஷு, ரோஹ்ரி, போகலி பிஹு, போகிப் பொங்கல், என்று பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று ஒரு பெரிய மாற்றம் தரும் நாளாகவே இருக்கின்றது. அதைத்தான் "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்றும் சொன்னார்களோ என்னவோ?

ஐத்திரேயம், ஆரண்யகம் என்பது ரிக் வேதத்தில் முக்கியமான பகுதிகள் ஆகும். ஆரண்யகத்திற்கு மூன்று புத்தகங்கள்.

முதல் புத்தகத்தில் "கவ மாயன" மஹா விரத நாளைக் கொண்டாடப்பட வேண்டிய வழி முறைகளையும், அன்றைய தினம் விடியற்காலை, மதியம் மற்றும் மாலையில் செய்ய வேண்டிய செயல்களை சாத்திரமாகவும் ரிக் வேதத்தில் பதியப் பட்டுள்ளது.

இரண்டாம் புத்தகத்தில் அன்றைய தினம் நடக்கும் (உக்தம்) கூத்து முறைகள் (பூதங்கள்/மிருகங்கள் வேஷம் கட்டி நன்னெறி நாடகங்கள் நடத்துதல்), புராணக் கதைகள் சொல்லுதல், வில்லுப் பாட்டு, போன்றவைகளை "நிஷ்கேவல்ய சாஸ்திர உபநிஷத்" என்று சொல்லப் பட்டுள்ளது.

மூன்றாம் புத்தகத்தில் பூடகமான ஞானம், ஆன்மிகம், மறைபொருள் சாஸ்திரம், ஆகியவற்றின் நேரடி அர்த்தங்கள் நிர்பூஜம், பிரார்த்தனா, உபயமந்திரேனா என்று சம்ஹிதப்பதம் மற்றும் க்ரமப்பத சம்ஹிதைகளாக கொடுக்கப் பட்டுள்ளன. இதில் உள்ள vowel, semi vowel, consonant இலக்கண முறைகளைக் கண்டறியும் போது விவரிக்கவே முடியாத அற்புத உணர்வு ஏற்படும். நாம் கற்றது கை மண்ணாவது ஒன்றாவது, சுண்டு விரலில் துளியூண்டு ஒட்டிக் கொண்டு இருக்குமே அந்த அளவு கூட இல்லையென்றும் உணர்வோம்.

ஆரண்யகம் என்ற புத்தகம் காடு, வனங்கள் (ஆரண்யம்) போன்ற தனிமையான இடங்களில் வாழ நேர்ந்தால் தனி மனிதன் தன்னம்பிக்கையோடும், வாழ்க்கை மீதான நம்பிக்கை இழக்காமலும், தனிமையை வென்றும் வாழும் முறைகளை பற்றியது. சௌனக மகரிஷி கி.மு. 500-இல் எழுதியதாக நம்பப்படும் இப்புத்தகம் நூறு வருடங்கள் கழித்து பாணினியால் மீட்கப் பட்டதாக நம்பப் படுகிறது. (சான்று A.B.Keith, 1909, Aitareya Aranyaka, Oxford, Clarendon Press)

மஹா ன் பவதி அனேன வ்ரதேன
ஓர் மாஹதோ தேவஸ்ய வ்ரதாம்
ஓர் மாஹக் ச தத் வ்ரதாம்
(சயன மகரிஷி உரைத்தது. ஐத்திரேய ஆரண்யகம் அத்தியாயம்-1, பாடல் வரி-1)

இதன் பொருள் "மஹா விரதத்தின் வழி முறைகள் இங்கே துவங்குகின்றன. இந்திரன் போர் வீரர்களுக்கான விரதங்களைக் கடை பிடித்து செல்வாக்குப் பெற்று அதிகாரியானான். அவன் அதிகாரத்தின் கீழ் இந்த மஹா விரதம் கடை பிடிக்கப் படுகின்றது.

ஐந்தாம் அத்தியாத்தில் இருபத்தைந்து வரிகளில் நெருப்பு ஏற்றப் படவேண்டிய முறைகளும், அக்னியைக் கொண்டாடும் முறைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. காலையில் (மாலை வரை) அக்னிஸ்தோமன் (சூரியன்) என்றும் மாலையில் சோமன் (நிலவு) என்றும் அக்னிஹோத்திரம் செய்யவேண்டிய முறைகளையும் பேசுகிறது. மஹா விரதம் பற்றி வேதங்களில் ஐத்திரேய ஆரண்யகம் மற்றும் சனகாயன ஆரண்யகம் இரண்டில் மட்டும்தான் குறிக்கப் பட்டுள்ளது. மஹா விரத்தன்று நடக்கும் செயல் முறைகளையும், வெற்றி பெற்றவர் / தோல்வி அடைந்தவரின் தொழில் மாற்றங்கள் குறித்த செயல்பாடுகளையும், அவர்களது அடையாளங்களையும் பரம இரகசியமாக வைக்கப் பட்டதாகவும் குறித்துள்ளனர்.

====================================================================

மகர சங்கராந்தி என்ற நாள் சூரியனின் பாதை northern hemisphere (மகர ராசி) நோக்கி இருப்பதைக் குறிக்கிறது. இதுவே உத்திராயன புண்ணியகாலத்தின் ஆரம்பமாகக் கருதுகின்றனர். இந்நாள் திருவிழாக்களின் துவக்கமாகவும் இருக்கிறது.

மஹாராஷ்டிராவில் சக்கரை மிட்டாய்கள், எள்ளுருண்டைகள், தானியங்கள் போன்றவற்றை இந்நாளில் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்கின்றனர்.

குஜராத்தில் வீட்டுக்குத் தேவையான புதியன வாங்கியும், பட்டங்கள் விட்டும் கொண்டாடுகின்றனர்.

ஹரியானா, பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல் பிரதேஷ் பகுதிகளில் லொஹ்ரி என்றும் கொண்டாடுகின்றனர்.

கர்நாடகாவில், கரும்பு, எள், வெல்லம், கொப்பரைத் தேங்காய், கடலை போன்றவற்றைப் பகிர்ந்து கொண்டு மகிழ்கிறார்கள்.

அஸ்ஸாமில் அக்னியை வணங்கும் தினமாகவும், பெங்காலில் "பித்தா" மிட்டாய்கள் செய்து, கங்கா ஸாகர் மேளாவைக் கொண்டாடியும் மகிழ்கின்றனர். ஆந்திராவில் போகியன்று கொலு வைக்கின்றனர்.

தமிழ்நாட்டில் தைப் பொங்கலும், ஜல்லிக்கட்டும், என்று கொண்டாடி மகிழ்கிறோம்.

ரத சப்தமி: சூரியனின் பாதையை அடிப்படையாகக் கொண்டு கொண்டாடப் படும் இன்னொரு பண்டிகை ரத சப்தமி. சூரியன் தோன்றிய நாள் என்றும் நம்பப் படுகிறது. இன்றைய தினம் சூரிய பகவான் தன் ஏழு குதிரைகள் பூட்டிய இரதத்தில் அமர்ந்து புதிய பயணத்தைத் துவக்குவதாகக் கருதுகின்றனர். சூரியனின் பன்னிரண்டு பெயர்களான மித்ரா, ரவி, சூர்யா, அஹானு, கங், புஷன், ஹிரண்யகர்ப்ப, மரீசி, ஆதித்யா, சவிதா, அற்கா மற்றும் பாஸ்கரா போன்ற பெயர்களை உச்சரித்தும், எருக்கம் இலையைத் தலையில் வைத்து நீர்நிலைகளில் மூழ்கியும் கொண்டாடுகின்றனர். இதன் தத்துவம் என்னவென்று தெரியவில்லை. தேடிக் கொண்டிருக்கிறேன்.

விஷு / யுகாதி / சித்திரைத் திருநாள்

சித்ரா விஷு சூரியனை வணங்கும் இன்னொரு பண்டிகை. மேஷ ராசிக்கு சூரியன் வரும் நாள் என்று நம்புகின்றனர். இதை மிகவும் புனிதமாகவும் கருதுகின்றனர். இன்றைய தினத்தில்தான் பூமி உருவானது என்று நம்பப் படுகிறது. அதனால் இத்தினத்தை யுகாதி என்றும் கொண்டாடுகின்றனர். இன்றைய தினத்தில் பகவான் ஸ்ரீ ராமபிரான் வனவாசம் முடித்து அயோத்திக்குத் திரும்பிய நாள் என்றும் நம்புகின்றனர். வாழ்க்கையின் இனிமையையும் கஷ்டங்களையும் துக்கங்களையும் குறிக்கும் வண்ணம் வெல்லம், மாங்காய், வேப்பம் பூ கொண்டு பச்சடி செய்வது விசேஷம்.

பைசாக்கி

வடக்கில் பைசாக்கி. விளைச்சலுக்கும் புது தானியங்களுக்கும் சூரியனுக்கும் நன்றி செலுத்தும் நாள். இன்றைய தினம்தான் சீக்கிய குருமாரான மரியாதைக்குரிய குரு கோபிந்த் சிங் அவர்கள் பஞ்ச் பியரா என்ற அன்புக்குரியவர்களுக்கான ஜோதியை ஏற்படுத்தினார்.

=================
எந்தப் பெயரில் கொண்டாடினாலும், மனிதன் இயற்கையை மதித்து வணங்கவும், சமூகத்தில் எல்லோருக்கும் வாய்பளித்து சமநிலை விளங்கவும், சோர்வான குளிர் நாட்கள் முடிந்து பசுமையைக் கொடுக்கும் வெயில் காலம் ஆரம்பிக்கும் நாட்களைக் கொண்டாடி மகிழ்வதையே இப்பண்டிகை குறிக்கிறது.

டெக்னாலஜியை வைத்து இன்று நாம் எதை வேண்டுமானாலும் உருவாக்க முடியும் என்ற நிலையிலேயே இருக்கிறோம். ஆனால் இயற்கையை??
====

நடப்பில் உள்ள பொங்கல் பண்டிகை

====

அமோக விளைச்சலைத் தந்து புதுத் தானியங்கள் கரும்பு என்று , பழையன கழிதலும், புதியன புகுதலும் நடைபெறும். வீட்டை சுத்தப்படுத்தி, வீட்டில் உள்ள பழைய பொருட்களை வீட்டின் முன் தீயிட்டுக் கொளுத்தி, அல்லவை அகன்று நல்லவை பெருக, வரும் ஆண்டு முழுவதும் மழை நன்றாகப் பெய்து உழவுக்கும், மக்களின் வாழ்வுக்கும் வளம் கிடைக்க வேண்டி இந்திரனை வணங்குவர். இதற்குப் பின்னணியில் ஒரு கதையும் உண்டு. போகிப் பண்டிகையன்று கண்ணனும், இடையர் குல மாந்தரும் கோவர்த்தன மலையை வணங்கி வழிபட்டனர். இதனால் இந்திரன் கோபமுற்றான். தன்னை வணங்காமல் கோவர்த்தன கிரியை வணங்குவதா? என்று சினம் கொண்ட இந்திரன், ஏழு மேகங்களை அனுப்பி மின்னல், இடி மற்றும் கன மழையை உருவாக்கினான். இதனால் இடையர்களும், நண்பர்களும் பீதியடைந்தனர். கண்ணன், கோவர்த்தன் மலையை அப்படியேத் தூக்கி குடையாக மாற்றி அதன் கீழ் அனைவரையும் வரச் செய்து, மழை, இடி, மின்னலிலிருந்து நண்பர்களையும், இடையர்களையும் காத்தார் கிருஷ்ணன். இதைக் கண்டு பயந்துபோன இந்திரன், கிருஷ்ணரிடம் வந்து தன்னை மன்னிக்க வேண்டினான். அதனை ஏற்ற கிருஷ்ணர், இந்திரனை மன்னித்ததோடு போகியன்று இந்திரனை மக்கள் வணங்கலாம் என்று ஆசிர்வதித்தார்.

அழகான வண்ணக்கோலங்கள் இட்டு, கலர்பொடிகள் கொண்டு அலங்கரித்து, நடுவில் சாணி உருண்டையில் பூசணிப் பூ சொருகி வாசல்கள் களை கட்டும் நாள்.

இரண்டாம் நாள் பொங்கல். சூரியக் கடவுளுக்கு நன்றி செலுத்தல். புது அரிசி கொண்டு பொங்கப்பானையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து கரும்பு நிவேதனம் செய்து எல்லாம் புதிதாகவேத் துவங்கப் படும் தை முதல் நாள்.

இன்றைய தினம் தான் மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கல் யானைக்கு உயிர் கொடுத்து கரும்பு தின்றதாக கல்வெட்டு பேசுகிறது.

மாட்டுப் பொங்கல் அன்று மாடு, காளைகளுக்கு நன்றி சொல்லும் தினம். மஞ்சு விரட்டு ஜல்லிக் கட்டு என்று இளைய சமுதாயம் கொண்டாடும் ஆர்பாட்டமான நாள்.

இதே நாளில் காணும் பொங்கல், கனுப் பொங்கல் என்று வித விதமான வண்ணங்களில் (சர்க்கரைப் பொங்கல் (அரக்கு), வெண்பொங்கல் (வெளிர் மஞ்சள்), மோர் சாதம் (வெள்ளை), எலுமிச்சை சாதம் (மஞ்சள்), கருவேப்பிலை சாதம் (பச்சை), எள்ளு சாதம் (கருப்பு), சாத உருண்டைகள் பிடித்து மஞ்சள்செடி இலையில் காகங்களுக்கு படைக்கும் தினம். "காக்காப் பிடி, கண்ணு பிடி, காக்கைக்கும் குருவிக்கும் கல்யாணம்" என்று சொல்லி பெண்கள் தன் சகோதரனுக்காக வேண்டிக் கொண்டு, ஏழு குட்டி குட்டி உருண்டைகளைப் பிடித்து மாடியில் காலை ஆறு மணிக்குள் வைத்து வரவேண்டும். பின் கனுபீடை நீங்க உடனே எண்ணெய் குளியல் செய்ய வேண்டும்.

=====

இப்போதெல்லாம் இது கூட குறைந்து ஒரு லீவு நாளாகவும், "உலக தொலைக்காட்சியில்" காட்டப் படும் மொக்கை பட்டிமன்றகளும், முதன் முறையாக டீ.வீ. யிலேயே ரிலீஸ் ஆகும் சினிமாக்களைப் பார்க்கவும் சரியாக போய்விடுகிறது இல்லையா?

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.






.

ஹனுமானும் சைனாக்கார சன் வுகாங்-கும்

ஹனுமத் ஜெயந்தி - டிசம்பர் 16-2009 அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்தப் பதிவு

பெரும்பான்மையான இடங்களில் ஒவ்வொரு வருடமும் சித்திரை சுக்கில பௌர்ணமி (மார்ச் - ஏப்ரல்) அன்று  கொண்டாடப்படுகிறது. தமிழ் நாட்டில் மார்கழி மாசம் (டிசம்பர் - ஜனவரி) கொண்டாடப் படுகிறது. (ஏன் இந்த நாள் வித்தியாசம் என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் பகிரலாம்).

பிறப்பு:

பிருஹஸ்பதி முனிவரின் ஆஸ்ரமத்தில் புஞ்சிகஸ்தலா (மனகர்வா என்ற அப்சரஸ்) தேவ சேவைகள் செய்து வந்தாள். இவளைத்தான் இராவணன் பலாத்காரித்து, "பெண்களை அவள் விருப்பத்திற்கு மாறாக தீண்டினால் தலை சுக்கு நூறாகத் தெறிக்கும்" என்ற பிரம்மனின் சாபம் பெற்றான். இராவணன் வால்மீகி இராமாயணத்தில் இவ்வாறு கூறுகிறான்.

பிதாமஹஸ்ய பாவனம் கச்சந்தீம் புஜ்ஞ்சிகச்தலாம்  |
சஞ்சூர்யமாநாமத்ராக்ஷமாகாஷே அக்னிஷிகாமிவ   || 6-13-11
அத்ராக்ஷ்ஹம் = நான் கண்டேன்; புஞ்சிகஸ்தலா = புஞ்சிகஸ்தலா (பெயர்); அக்னிஷிகாமிவ = நெருப்பைப் போன்ற ஒளியுடைய; சஞ்சூர்யமாநாம் = தன்னை ஒளித்துக் கொண்டவாறு  (இராவணனைக் கண்ட பயத்தில்); ஆகாஷே = வானில்; கச்சந்தீம் = போய் கொண்டிருந்தாள்; பாவனம் = சொர்கத்தை நோக்கி; பிதாமஹஸ்ய = பிரம்மனின் இடமான
ஒரு முறை  அக்னியைப் போன்ற ஒளியுடைய அப்சரஸ் ஒருவள், புஞ்சிகஸ்தலா என்ற பெயருடையவள், தன்னை தானே மறைத்து ஒளிந்து கொண்டு வானில் பிரம்மன் இருக்கும் சொர்க்கத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள்.
ஸா ப்ரஹஸ்ய மயா புக்தா க்ரிதா விவஸனா தத: |
ஸ்வயம்பூபாவனம் ப்ராப்தா லோலிதா நளினீ  யதா || 6-13-12
ஸா = அவள்; க்ரிதா = ஆக்கப் பட்டு இருந்தாள்; விவஸனா = ஆடைகள் இன்றி; மயா = என்னால்; புக்தா = அனுபவிக்கப்பட்டு; ப்ரஹஸ்ய = பலாத்காரமாக; தத: = அதன் பின்; ப்ராப்தா = அவள் சென்று அடைந்தாள்; ஸ்வயம்பூ  பாவனம் = பிரம்மனின் இடமான சொர்கத்தை; லோலிதா = நசுக்கி சிதைக்கப்பட்ட; நளினீ  யதா = ஒரு தாமரை போல;
அவளது ஆடைகளை நீக்கி அவளைப் பலாத்காரம் செய்தேன். அதன் பின், அவள் நசுக்கிச் சிதைக்கப் பட்ட ஒரு  தாமரையைப் போல, பிரம்மனின் இடமான சொர்கத்தை சென்றடைந்தாள்.
தச்சா தஸ்ய ததா மன்யே  ஜ்ஞானாதமாஸீன்மஹாத்மன:  |
அத ஸம்குபிதோ வேதா மாமிதம் வாக்யமப்ரவீ  || 6-13-13
மன்யே =நான் நினைக்கிறேன்; தச்சா = இது (இந்த விஷயம்); ஜ்ஞானாத = சொல்லப்பட்டது; ததா = அதன் பிறகு; தஸ்ய = பிரம்மாவுக்கு; மஹாத்மன: = மகாத்மாவான; அத = பிறகு; ஸம்குபித = கடுங்கோபம் கொண்ட; வேதா: = பிரம்மா; அப்ரவீத் = பேசினார்; இதம் = இந்த; வாக்கியம் = வார்த்தைகள்; மாம் = என்னிடம்
இந்த விஷயம் பிரம்மாவிடம் தெரிவிக்கப் பட்டதென்று நினைக்கிறேன். மகாத்மாவான பிரம்மா கடுங்கோபம் கொண்டு இந்த வார்த்தைகளைச் சொன்னார்.

அத்யப்ரப்ருதி யாமன்யாம் பலான்னாரீம் காமிஸ்யஸி   |
ததா தே ஷ்டதா முர்தா பலிஸ்யதி  ந சம்ஷய: || 6-13-14
அத்ய ப்ரப்ருதி = இன்று முதல்; காமிஸ்யஸி = காமம் கொண்டு ; யாம் அந்யாம் = வேறெந்த; நாரீம் = பெண்மணி; பலான் = பலத்தை பிரயோகித்து பலாத்காரம்; ததா = பிறகு ; தே = உனது; மூர்தா = தலை; பலிஸ்யதி = தூள் தூளாக (சுக்கு நூறாக); ஷடதா = நூறு (துண்டுகளாக); ந சம்ஷய: = சந்தேகமின்றி
இன்று முதல் காமத்தோடு நீ எந்த பெண்ணையும், உன் பலத்தைப் பிரயோகித்து பலாத்காரம் செய்தால், உன் தலை சுக்கு நூறாக தூளாகும். இதில் எந்த சந்தேகமும் இல்லை.
இத்யாஹம் தஸ்ய ஷாபஸ்ய பீதா: ப்ரஸபமேவ தாம் |
நாரோஹயே பலாத்சீதாம் வைதேஹீம் ஷயனே சுபே  || 6-13-15
பீதா: = பயத்தால்; தஸ்ய = அவரது; ஷாபஸ்ய = சாபத்தால்; இதி = இந்த வகையில்; அஹம் = நான்; நாரோஹயே சீதா (தா)ம் = சீதையை நான் ஒன்றும் செய்யவில்லை வைதேஹீம் = விதேக நாட்டு அரசரின் மகளான அவளை அடைய; சுபே = (என் ) கவர்ச்சிகரமான (அழகான); ஷயனே = படுக்கை; ப்ரஸபமேவ = அவசரப்பட்டு
பிரம்மனால் இந்த வகையில் சபிக்கப் பட்ட பயத்தால், நான் விதேக அரசரின் மகளான சீதையை பலாத்காரம் செய்ய எனது அழகான படுக்கைக்குக் கொண்டு செல்லவில்லை.
==================
இப்படியாக புஞ்சிகஸ்தலா தன்னையுமறியாது சீதைக்காக ஒரு உதவி புரிந்த பூர்வ ஜன்ம புண்ணியத்தால், மீண்டும் அஞ்சனையாகப் இப்புண்ணிய பூமியில் பிறந்து சிவனாரின் ரூபமான அனுமனின் தாயாகிறாள். அதைப் பற்றி மேலே படிக்கலாம்.

புஞ்சிகஸ்தலா ஒரு நாள் தெய்வ ஆராதனைக்காக பூக்கள் பறித்துக் கொண்டிருந்த பொழுது, மானுடப் பெண்கள் சிலர் தங்கள் துணைவரோடு உறவில் இருப்பதைக் கண்டு, உணர்ச்சிவசப்படுகிறாள். காமவயத்தில் அவள் பிருஹஸ்பதி முனிவரை கவர முயற்சிக்கிறாள். இதனால் கோபம் கொண்ட முனிவர் அவளைப் பெண்குரங்காக மாறும்படி சபிக்கிறார். அவள் மன்னிப்பு கேட்ட போது, சிவ ஸ்வரூபமாக ஒருவனை மகனாகப் பெறும் போது இந்த சாபத்தில் இருந்து விமோசனம் பெறுவாள் என்றும் சொல்கிறார்.

இப்படி குரங்காக மாறிய அப்சரஸ், கௌதம மகரிஷிக்குப் பெண்ணாகப் பிறந்து அஞ்சனை என்று அழைக்கப்படுகிறாள். இந்தக் குறிப்பு சிவபுராணத்தில் உள்ளது. கௌதமருக்கு அஹல்யா என்ற ரிஷி பத்தினி ஒருவர் மட்டுமே மனைவி என்பதால், இவரையே அஞ்சனையின் தாய் எனக் கொள்ளலாம். (ஆதாரக் குறிப்புக்கள் ஏதும் இல்லை. இது யூகம் மட்டுமே). அஹல்யாவின் தந்தை பிரம்மா என்று புராணங்கள் கூறுகின்றன. ஆகையால் அஞ்சனையின் தாய் வழித் தாத்தா பிரம்மன் என்பதாகிறது.

இங்கே குறிப்பிடத்தகுந்த ஒன்று: இராவணனின் தந்தை வழி தாத்தா பிரம்மன் என்றும் சிவபுராணம் குறிக்கிறது. அனுமனும், இராவணனும் பல மொழிகள் பேசும் வல்லமை பெற்று இருந்தனர். அனுமன் கிஷ்கிந்தையில் பேசும் மொழியான தெலுங்கு/கன்னடம் ஆகிய மொழிகள் சீதைக்குத் தெரியாது என்றும்,  வடமொழியான சமஸ்கிருதத்தில் பேசினால் இராவணன் என்று நினைத்து விடுவாள் என்றும், அயோத்தியாவின் மொழியான ப்ரகிரித் மொழியில் பேசியதாக இராமாயணம் கூறுகிறது.  க்ஷத்திரியர்களின் பாஷையான ப்ரகிரித் மொழி, சமஸ்கிருதத்துக்கும் புராதனமானது என்று நம்பப் படுகிறது. சிலர் இதை பண்பட்ட சமஸ்கிருதம் என்றும் கருதிகிறார்கள். அசோகச் சக்கரவர்த்தியின் கல்வெட்டுக்களில் இம்மொழி அதிகம் பயன்படுத்தப் பட்டுள்ளது என்று அகழ்வாராய்ச்சி வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். அனுமனும், இராவணனும் இசையில் சிறந்து விளங்கினர். இராவணனின் சகோதரன் விபீஷணன் கூட,

வாதே விவாதே சங்க்ராமே; பய் கோரே மகாவரே;
சிங்வ்யாக்ரதி சோரேப்ய ஸ்தோத்ரே பதத் பயம் ந ஹி; என்கிறார்.

அதாவது ஆஞ்சநேயா என்று அழைத்தாலே (பெயரை உச்சரித்தாலே) போதும், பேச்சு, வாக்கு, வாத விவாதங்கள் ஆகியவற்றில் வளமை பெற்று,  அதி பயங்கரமான பயன்கள் போன்றவையிலிருந்து விடுபடலாம். மேலும் பேரழிவை உண்டாக்கும் அபாயங்களில் இருந்தும் விடுபட்டு, செய்யும் எச்செயலிலும் வெற்றி பெறுவார் என்கிறார்.

இன்றும் ஹிந்துஸ்தானி இசையில் ஸ்ரீ ஹனுமத் ராகா என்ற ராகம் பாடப் பட்டு வருகிறது. இது தவிர அஞ்சனி கல்யாண் போன்ற இராகங்களும் ஹனுமானால் பாடப் பட்டவை என்கிறார்கள்.


இப்போது இருக்கும் வயலின் கருவி, இராவணன் கி.மு.5000-ஆம் ஆண்டுகளில் உருவாக்கிய இராவணஸ்தம் என்ற கருவியின் அடிப்படையில் அமைந்தது என்றும் கூறுகிறார்கள். அதேபோல, இராவணன் வாசித்த ஹஸ்தவீணை / இராவண ஹஸ்தம் (தந்திகள் கொண்ட வீணை)  ஏழாம் நூற்றாண்டில் இருந்ததாக அகழ்வாராய்ச்சி வல்லுனர்கள் கூறுகின்றனர். 22 அங்குல நீளமும், எட்டு கட்டைகள் (ஆக்டேவ்) கொண்டதும், குடம் தேங்காய் ஓட்டாலும், தண்டு மூங்கிலாலும், தந்திகள் உலோகத்தாலும், குதிரை வால் முடியாலும் செய்யப்பட்டு இருந்ததாகக் குறிப்புக்கள் புராணங்களிலும், நவீன ஆராய்ச்சி சான்றுகளிலும் உள்ளன. இப்படிப் பார்த்தால் வயலின் வாத்தியக் கருவி, மூன்று கட்டைகளும், நான்கு தந்திகளும், விரல் பலகை 5-1/4 அங்குலம் அளவுகளைக் கொண்டது. இது கணக்குப்படி நான்கால் பெருக்கும் போது இராவணஹஸ்தத்தின் அளவான 22 வருகிறது. அப்படியென்றால் அவர்களின் உருவ அளவை கற்பனை செய்து பாருங்கள். :)

இன்றும் இவ்வகை தந்தியுடைய கருவிகள் குஜராத் மற்றும் இராஜஸ்தானில் வாசிக்கப் படுகின்றன. புராணங்கள், இராவணனின் கொடியில் கூட வீணை முத்திரை இருந்ததாகக் குறிக்கிறது.  போரில் இராவணன் மூக-வீணை (வாயாலும் வாசிக்கலாமாம்) வாசித்து எதிரிகளின் நம்பிக்கையைக் குலையச் செய்வானாம்.   சரி, மீண்டும் அனுமனுக்கு வருவோம்.

அஞ்சனையின் கணவரான கேசரி வானர அரசராவார். கேசரியின் தந்தை ப்ரிஹஸ்பதி. ப்ரிஹஸ்பதி தேவகுருக்களில் ஒருவர், நாரதரைப் போன்ற சமகால தேவ ரிஷி ஆவார். அனுமன் தன் தந்தையென்று சொல்லும் போதெல்லாம் இவரை முதலிலும் பின்தான் வாயுவையும் குறிப்பிடுகிறார்.


அனுமனுக்கு இரு தந்தைகள் என்று புராணக் குறிப்புக்கள் உணர்த்துகின்றன. வாயு என்பவர் ஒரு தேவனாக இருந்திருக்கலாம், காற்றின் உருவமானவர் என்று குறிப்புக்கள் கூறுகின்றன. "மருத்" என்ற வம்சத்தினராக கருதப்படும் குழுவை உருவாக்கியவர் வாயு. மருத் என்பவர்கள் சிவனின் மகன்கள் என்றும் குறிப்புக்கள் உள்ளன. இவ்வகையில் அனுமன் சிவனின் பேரன் முறையாகிறார்.

இராமாயணத்தில் அனுமனின் பிறப்பு பற்றிய குறிப்புக்களில், அயோத்தி அரசரான தசரதன் பிள்ளை வேண்டி புத்திர காமேஷ்ட்டி யக்ஞம் செய்யும் போது அக்னி தேவன் ஹோமத்தின் (யக்ஞம்) பலனாக (பிரசாதம்) பாயஸம் ஒன்றை, தசரதனின் நான்கு மனைவிகளுக்குப் பகிர்ந்து அளிக்குமாறு கூறி,  கொடுக்கிறார். இந்நிலையில் சிவனை குறித்து கடுந்தவம் புரிந்த அஞ்சனைக்கு சிவரூபமாக ஒரு மகன் பிறப்பான் என்று வரமளிக்கிறார். தசரதன் கொண்டு செல்லும் பாயசத்தின் ஒரு பகுதியை கழுகு ஒன்று பறித்துச் செல்கிறது. இதில் சிதறிய துளிகளில் கொஞ்சம் காற்றில் கலந்து அஞ்சனையின் கைகளில் விழுகிறது. இதை அருந்தும் அஞ்சனைக்கு பின்னாளில் அனுமன் பிறப்பதாக சிவ புராணம் கூறுகிறது. பீமனும் வாயுவுக்குப் பிறந்ததாகக் கருதப் படுகிறான்.

மருத் வம்சத்தின் வாயுவின் மகன் என்பதால் வாயு புத்திரன் / மாருதி / பவன புத்திரன் என்றும், அஞ்சனை மகன் என்பதால் ஆஞ்சநேயன் என்றும், வானர அரசரான கேசரி மகன் என்பதான் கேசரி நந்தன் என்றும், வஜ்ஜிரம் (வைரம்) போன்ற உடலுடையவர் என்பதால் பஜ்ரங்கபலி (சமஸ்கிருதம்) என்றும், சிவரூபமானதால் மகாருத்ரன் என்றும் அழைக்கப் படுகிறார்.

மகாராஷ்ட்ராவில் உள்ள த்ரிம்பகேஷ்வர் என்ற இடத்திற்கு அருகில் உள்ள பிரம்மகிரி மலை அனுமன் பிறப்பிடமாக கருதுகிறார்கள்.  சிலர் கர்நாடக மாநிலத்தில் (மாநிலமாக நவம்பர் 1, 1956-ஆம் ஆண்டு உருவானது) உள்ள ஹம்பியில் (இப்போது விஜயநகர சாம்ராஜ்யத்தின் வரலாற்று மிச்சங்கள்), பம்பை நதிக்கரையில் அமைந்துள்ள ரிஷ்யமுக பர்வதம் என்றழைக்கப்படும் மலையில் பிறந்ததாகவும் கருதுகின்றனர்.

மேலும் ஜார்கண்ட் மாநிலத்தில் கும்லா என்ற இடத்திலிருந்து 18 கி.மி. தொலைவில், ஆஞ்சன் என்ற கிராமம் ஒன்றும் உள்ளது, அஞ்சனை இருந்ததால் இப்பெயர் காரணம் என்கின்றனர். இன்றும் நான்கு கிலோமீட்டர் மலை உயரத்தில் குகைகள் இருப்பதாகவும், அங்கே அகழ்வாராய்ச்சிக்கு உகந்த பொருட்களும் கிடைப்பதாக கூறுகின்றனர். இந்தப் பொருட்களை பாட்னாவில் காட்சிக்கு வைத்துள்ளனர்.

தொன்மை மற்றும் சிறப்பு மிக்க வழிபாட்டுத் தலங்கள்:
  1. மிகத் தொன்மையான ஆஞ்சநேயர் சிலையொன்று கஜுராஹோவில் உள்ளது. இதை கி.பி.883-யில் 'காஹில் மகனான கோல்லாக்' என்பவர் நிறுவியதாக கல்வெட்டுக் குறிப்புள்ளது.
  2. ஜலந்தரில் உள்ள பில்லௌர் (பஞ்சாப்) என்ற 50362 கி.மி. பரப்பளவில் சங்கட மோச்சன் ஸ்ரீ ஹனுமான் மந்திர் உள்ளது. இக்கோவிலின் உயரம் 121 அடியாகும். இங்கு உயரமான 67 அடி ஆஞ்சநேயர் சிலை உள்ளது.
  3. மகாராஷ்டிரா NH-6-ல் அமைந்துள்ள நந்துரா என்ற இடத்தில் 105 அடியுள்ள சிலை உள்ளது.
  4. தமிழ்நாடு நாமக்கல்லில் சுயம்பு எனக் கருதப் படும் 18 அடி உயரமுள்ள சிலை உள்ளது. இது வளர்ந்து வருவதாகக் கூறுகிறார்கள். இதனால் இங்கு கூரை வேயப் படவில்லை.
  5. 108 திவ்ய க்ஷேத்திரங்களில் ஒன்றான சோழிங்கூர் / சோளிங்கர் (வேலூர் வாலாஜா தாலுக்கா) என்ற இடத்தில் யோக ஆஞ்சநேயர் சின்ன மலையில் அமைந்துள்ளார். இதற்கு 480 படிகள் உள்ளன. சங்கு, சக்கரம், ஜபமாலை, ஜப சங்காரம் ஏந்திய நான்கு கைகள் (சதுர்புஜம்) உள்ள ஆஞ்சநேயரை இங்கு காணலாம்.
  6. ராகிகுட்டா ஆஞ்சநேயர் கோவில் பெங்களூர் ஜே.பி.நகரில் உள்ளது. இக்கோவில் ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளது.
  7. நேருல், நவி மும்பையில் ஒரு தொன்மையான ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. வெள்ளிக் கவசத்தோடு கூடிய சிலை காணப் படுகிறது.
  8. சென்னை நங்கநல்லூரில் 32 அடி உயரமுள்ள ஆதிவியாதிஹர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. ஒரே கல்லில் செய்யப்பட்ட ஆஞ்சநேயர் சிலை இங்கு மிகவும் சிறப்பு மிக்கது.
  9. ஒரிசா ரூர்கேலாவில் 72 அடி ஹனுமான் சிலை உள்ளது.
  10. ஆந்திரா குண்டூர் பொன்னூரில் 30 அடி ஹனுமான் சிலை உள்ளது.
  11. ராஜஸ்தான் தௌசா-வில் உள்ள ஹனுமானை டாகுர்ஜி (ஸ்ரீ மேஹந்திபுர்ஜி பாலாஜி)என்று அழைக்கிறார்கள். 
  12. ஆந்திராவில் பரிதலா என்ற இடத்தில் 135 அடி ஆஞ்சநேயர் உள்ளார். (2003 ஆம் ஆண்டு கட்டப்பட்டது)
  13. கும்பகோணத்தில் பஞ்சமுக அனுமான் - கிழக்கை நோக்கி குரங்கு முகம் (அ) ஹனுமான் (புத்தி-வெற்றி), தெற்கில் சிங்க முகம் (அ) நரசிம்மர் (வெற்றி-தைரியம்),  மேற்கில் கருட முகம் (அ) விஷ்ணு (மாந்த்ரீகம் மற்றும் விஷம் நீக்க), தெற்கில் வராஹம் (அ)  விஷ்ணு, வான் நோக்கி குதிரை முகம் (அ) ஹயக்ரிவர் (ஞானம் மற்றும் குழந்தைச் செல்வம்)
  14. இவற்றில் மிக முக்கியமாக ஹிமலாயாவில் உள்ள சித்ரகூட், அனுமன் ஓய்வெடுக்கும் இடமாகக் கருதப் படுகிறது. மலை முகட்டில் அமைந்துள்ள கோவிலும் ஹனுமான் தாரா என்று அழைக்கப் படும் நீர்வீழ்ச்சியும் ஒரு அற்புத அனுபவம். 
  15. பஞ்சவடியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்
 

சைனாக்கார சன் வுகாங்
குரங்கு அரசனான சன் வு குங் (Sun Wukong) என்பவன் கற்பனையில் உருவாக்கப்பட்ட நாயகனாகக் கொண்டு 1590-யில் மிங் டைனாஸ்டியின் போது எழுதப் பட்ட சீன இலக்கியங்களில் மிகவும் புகழ் பெற்ற ஒன்றாகும். மிகவும் சுவாரசியமான எழுத்து நடைக்கு இவ்விலக்கியம் ஒரு சிறந்த உதாரணம். Journey to the West பி.டி.எப். கோப்பு இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ள கிளிக் செய்யுங்கள். நூறு அத்தியாயங்களுடன் மொத்தம் 1410 பக்கங்கள் இருக்கின்றன.

இந்த இலக்கியம் இவன் வானிலிருந்து விழுந்த ஒரு துகளிலிருந்து பிறந்ததாகக் கூறுகிறது. பேராற்றல் படைத்த வீரனாகவும், குரங்குகளிலேயே மிகவும் அழகானவனாகவும் (!!?), மிருகமாகவும், மனிதனாகவும், உருவத்தை பெரிதாக்கியும், சிரியதாக்கியும் கொள்ள முடியும் ஆற்றல் கொண்டும், 72 வகையான உருவத்தில் தன்னை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டும், கூடு விட்டு கூடு பாயும் சக்தியோடும் விளங்கினானாம். 13500 கேட்டி (jīn (or) catty i.e., 1 jīn = 8,100 kgs ) அளவுக்கு பாரம் தூக்கும் பலம் பெற்றவனாகவும், ஒரு நிமிடத்திற்குள் 108,000 Li (1 Li = 500 metres) தொலைவு தாண்டக் கூடிய ஆற்றலும் கொண்டிருந்தானாம். டாவோயிசம் (Taoism) கற்றவனாகவும் இருந்தானாம்.

டன் சங் ஜங் (Tan Sang Zang) என்றவன் (அரசன்!!) பயணம் செய்து கொண்டிருந்த போது இவனைச் சந்தித்து, இவனை காக்கின்றனர். இருவரும் நட்பாகி விட்டனர். இவனுக்கு மனிதர்கள் போல பேசவும் நடந்து கொள்ளவும் கற்றுக் கொடுத்தானாம். மேலும் சன்-னுக்கு மந்திர மாந்த்ரீக ஆற்றல்களையும் கற்பித்தானாம். Space Shifting என்று இப்போது அழைக்கப் படும் ஆகாய கமனம்  (ஆகாய பயணம்/விண் நடமாட்டம்) செய்தலையும் சன் கற்றானாம். வழியில் இவர்கள் இருவரைச் சந்தித்து அவர்களும் கூட்டணியில் இணைகின்றனர்.

தன் உடலின் ஒவ்வொரு ரோமத்தையும் ஒரு உயிராகப் படைக்கும் வித்தையையும் கற்பித்தானாம். (கவனிக்க: லங்கா தகனத்திற்குப் பிறகு அனுமன் தன் வாலை கடலில் முழ்க வைத்து அணைக்கும் போது சிந்திய வேர்வைத் துளியிலிருந்து பாதாள லோக காப்பாளன் மகர-த்வஜன் பிறந்ததாக இராமாயணம் கூறுகிறது)

இவனால் ஒரே சமயத்தில் பல தலைகளையும், பல கைகளையும் ஒரே உடலில் உருவாக்க முடியுமாம். (கண் கட்டு வித்தையோ??!!) நீருக்குள்ளும், நெருப்பிலும் எந்த பாதிப்பும் இல்லாமல் கடக்க முடியுமாம். இவன் நினைத்த மாத்திரத்தில் கொதி நீர்ச் சுனையிலும், ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் நீரிலும் மூழ்கிக் குளிக்க முடியுமாம். இவனுக்கு பச்சிலை வைத்தியம் தெரிந்திருந்ததாம். ஆனால் ஒரே ஒரு முறை மட்டும் ஒரு அரசனனின் உயிர் காக்க இந்த ஆற்றலைப் பயன் படுத்தினானாம். (துரோணகிரியில் இருந்த, லக்ஷ்மணனைக் காத்த பச்சிலையோ???)  இவனை பீ மா வென் / Bi Ma Wen (பீமவான்!!) என்றும் கூறுகிறார்கள். இவன் குதிரைகள் அடக்கவும் அவற்றை தன் கட்டுப் பாட்டில் கொண்டுவரவும் ஆற்றல் மிக்கவனாம். ஒருமுறை இவன் கடலைக் கடந்து கொண்டிருந்த போது நான்கு டிராகோன்-களைக் கொன்றானாம்.

சன் வுகாங் பெருவிழா (Monkey God Festival) சீனாவில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதங்களில் கொண்டாடப் படுகிறது.

கண்டோனிய மொழியில் ஸ்யுன் இங் ஹூங் (Syun Ng Hung) என்றும், கொரியாவில் சொன் ஒஹ் கோங் (Son Oh Gong) என்றும், வியட்நாமில் டான் இங்கோ கோங் (Ton Ngo Khong) என்றும், ஜப்பானில் சொன் கோகூ  (Son Goku) என்றும், இந்தோனேசியாவில் சன் ஹோ காங் (Sun Go Kong) என்றும் அழைக்கப்படுகிறான்.

 ( ^_^ )


.

கொடியது கேட்கின் வரிவடிவேலோய்



உங்களைச் சுற்றி உலகில் வேறெந்த ஜீவனுமே மிச்சமில்லாமல் போய்விட்டால், நீங்கள் மட்டுமே உயிரோடு இருப்பதாக இருந்தால், சுற்றிலும் பிணங்களே இருந்தால், நீங்கள் நம்பிக்கை இழக்காமல், மனம் தளராமல், துணையேதும் இன்றி எப்படி வாழ்வீர்கள்.

உலகமே அழிந்து விட்டு நாம் மட்டும் தனியாக இருந்தால் என்ன செய்வது.  நாம் மட்டும் வாழ்ந்து என்ன செய்யப் போகிறோம் என்று கேட்கிறீர்களா? யார் கண்டது... நதியின் அக்கரையில் ஒரு ஹ்ருதிக் ரோஷனோ, அல்லது ஸ்ரேயாவோ உயிரோடு இருந்தால்.


ஆகவே, இனியும் கங்கையை அசுத்தப்படுத்த வேண்டாம்  என்ற பதிவின் தொடர்ச்சியாக.

கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்
அதனினும் கொடிது அன்பில்லாப் பெண்டிர்
அதனினும் கொடிது அவர் கையால்
இன்புற உண்பது தானே


இவையெல்லாவற்றையும் விடக் கொடியது தனிமை.


நம் generation-களில் single child என்பது சகஜமான ஒன்றாகி விட்டது. அதையும் தவிர சூழ்நிலைக் காரணங்களாலும், தன் சொந்த விருப்பத்தாலும், பணி நிமித்தமாகவும், குடும்பத்தோடு கூடி இருந்தாலும் களிப்பில்லாமல் மனதாலும், தன்னம்பிக்கை இல்லாது சமூகத்தோடு இணைய முடியாமலும், சமூகத்தால் பல காரணங்களுக்காக மதிக்கப்படாமல் இருத்தலும், துணை மற்றும் மகன் / பெற்றோர் போன்ற உறவுகளின் இழப்பு, மற்றவர் மீது நம்பிக்கையின்மை, சுய-மதிப்பின்மை, போன்ற பல காரணங்களுக்காக ஒருவர் தனித்துப் போகிறார்.


இக்காரணங்களில் எதுவுமே ஒருவர் மனதிற்கு நேர்மறையான விளைவுகளைக் கொடுப்பதில்லை. இதனால் வெறுமை, வெறுப்பு, பாதுகாப்பு உணர்வின்மை, மன அழுத்தம், தற்கொலை உணர்வு, போன்ற எதிர்மறை எண்ணங்கள் விளைகின்றன. இந்த எதிர்மறை எண்ணங்கள் உடலில் பல்வேறு ஆற்றொணாக் கொடுநோய்கள் விளைய வித்தாகின்றன.


தனிமையில் இருந்தாலும் தனித்தில்லாமல் இருக்க நம்மிடம் டீ.வி., ரேடியோ, மியூசிக் பிளேயர் போன்ற பல வசதிகள் இருந்தாலும், மனம் லயிக்குமா? நம்மோடு ஒருவர் இருந்து அவர் football match பார்க்க விருப்பம் என்று சொன்னால், ஒரு போட்டிக்காவது 89-களின் ஹீரோ கப் repeat telecast-டில் கபில்தேவை பிடிவாதமாய் பார்த்துக் கொண்டிருப்போம். ஆனால் போட்டிக்கு ஆளே இல்லையென்றால், டீ.வியில் மனம் லயிக்காது. மனம் அப்போது வெறுமையால் சோர்வுறாமல் இருக்க என்ன செய்வது?


இந்து சமூகத்தில் ஒரு பிரிவினர் தினமும் சமைத்த உண்ணும் உணவை சாப்பிடும் முன் காக்கைக்கு இட்டு, பின் தட்டின் முன் அமர்ந்து 'பரிஷேஷனம்' செய்துவிட்டு சாப்பிடும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். இதன் பின்னணியில் இருக்கும் மனோதத்துவம் என்ன? இதனால் ஒருவருக்கு விளையும் நன்மைகள் என்ன?


நம் மூத்தோர்கள் இறந்து, காக்கை ரூபத்தில் வந்து நம் வீட்டில் உணவு உண்பதாக நம்பிக்கை நிலவுகிறது. இதில் எத்தனை உண்மை இருக்கலாம். 


ஒரு உதாரணத்திற்கு என்றாலும் என் தாய் வீட்டில் ஒரு நிகழ்வை இன்றும் நினைத்து நினைத்து ஆச்சரியப்படுவேன். எங்கள் பாட்டி (அம்மாவின் மாமியார்) தன் தாயார் திதி மற்றும் சுமங்கலி பிரார்த்தனை செய்யும் நாட்களில், எள் கலந்த சாதம் வைப்பார். அன்று மட்டும் ஜோடியாக ஒரு அண்டங்காக்கையும் காகமும் வந்து சாப்பிடும். மற்ற தினங்கள் எல்லாமே, பாட்டி கொடுக்கும் உணவை அந்தக் காகம் மட்டும் தான் வந்து உண்டு செல்லும். காகங்கள் பார்ப்பதற்கு ஒன்று போலவே இருப்பதால், நான் கூட சின்ன வயதில் "எப்படிப் பாட்டி இந்த காக்காய்தான் தினோம் வரதுன்னு கண்டுபிடிகிற" என்றும் "பாட்டி. உங்கம்மா வந்திருக்கா பாரு" என்று கிண்டல் செய்துள்ளேன். ஆனால் இன்றும் கூட என் பாட்டி திதியன்று இதே போலத்தான் நிகழ்கிறது. மிகச் சரியாக திவசம் (திதி காரியங்கள்) முடிந்து, அந்தணர்களுக்கு இலையில் சாதம் பரிமாறி,  அவர்கள் பரிஷேஷனம் செய்யும் போது, "சாப்பிடும்மா" என்று பாட்டி (இப்போது என் தாய்) குரல் கொடுத்த பின்தான், காக்கையும் உணவைச் சாப்பிடும். இதை படிக்கும் போது, நம்பவே முடியாது. ஆனால் நான் கண்ணால் கண்டு கொண்டிருக்கும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.



சமீபத்தில் இந்து பத்திரிகையில் ஒரு article வந்திருந்தது. காக்கைக்கும், பறவைகளுக்கும், வீட்டுக் கொட்டில் மாட்டுக்கும் உணவு கொடுத்துச் சாப்பிடும் பழக்கம், மற்றும் அதே போல நாய், பூனை போன்ற மிருகங்களை வீட்டில் வளர்ப்பதும் தனிமை உணர்வைக் கொல்கிறதாம்.


தைத்திரீய உபநிஷதில் குறிப்பிட்டபடி,



"அஹம் அன்னம் அஹம் அன்னம்  அஹம் அன்னம்,
அஹம் அன்னாதோஹம் அஹம் அன்னாதோஹம் அஹமன்னத: " என்று பிராணனுக்கு அன்னத்தை வழங்குகிறார்கள்.


இதன் பொருள்: நான் பரமாத்மாவுக்காக இந்த உணவை உண்கிறேன், அதனால் ஆத்மாவுக்கு நானே உணவாகிறேன். நானே இந்த உணவு. நானே இதை உண்கிறேன். நானே ஆத்மா. ஆத்மாவை மகிழ்விக்க நான் என்னையே உணவாக  உண்கிறேன்.


உணவை வெறும் ருசிக்காக இல்லாமல் ஆத்மாவோடு இணைத்து ஆத்மநிந்தனைக்கு (உடலையும் மனதையும் வருத்துதல்) இடமில்லாமல் செய்ய இந்த சுலோகம் உதவுகிறது. பரிஷேஷன தத்துவம் என்ன? பரிஷேஷனம் என்றால் என்ன? இதை ப்ராணாக்னிஹோத்ரம் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. அக்னி ஹோத்ரம் / நித்ய யக்ஞம். நித்ய யக்ஞம் என்பது daily assertions. Self-Love, Counselling, Prayer, Meditation என்றெல்லாம் ஆங்கிலத்தில் ஒரு Psycho-analyst சொல்லும்போதுதான் நமக்கு அதைச் செய்து பின்பற்றுவது பற்றிய ஒரு பெருமை உண்டாகிறது. சரி!


வெறும் பசியாற்றுவது மட்டும் உணவின் செயல் இல்லை. உடலின் ஆற்றலுக்கும் சுறுசுறுப்புக்கும் மந்தத் தன்மைக்கும் நாம் உண்ணும் உணவே அடிப்படையாக அமைகிறது. அந்த உணவு தகுந்த முறையில் ஜெரிக்கப்பட்டு, கழிவுகள் வெளியேற்றப்படும்போதுதான் உணவின் சுழற்சி முடிந்து மீண்டும் பசி ஏற்படுகிறது. இந்த சுழற்சிகள் சரியான முறையில் நடைபெற "ப்ராண" என்று வேதங்கள் சொல்லும் வாயு (காற்று) மிகவும் முக்கியமானது. காற்றே நம் உடலை இயக்குகிறது. காற்றுதான் நம் மூட்டுக்களின் அசைவுக்கு காரணம். காற்றே இரத்த சுழற்சிக்கு தூண்டுகிறது. அதனால்தான் ஒருவர் இறந்துவிட்டால் "ப்ராணன் போய் விட்டது" அல்லது "breathed their last" என்கிறார்கள்.


பிராணா / ஆத்மா இரண்டுமே இணைந்து அன்னமய கோஸம், பிராணமய கோஸம், மற்றும் மனோன்மய கோஸம் ஆகிறது. அன்னமும் பிராண வாயும் மனதை ஆட்டி படைக்கும் ஆற்றல்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. சைவ அசைவ உணவுகள் எதுவென்றாலும் ஆத்மாவுக்கு என்று சொல்லி ருசி-அருசிகளை பாராது மகிழ்ச்சியோடு ஏற்று உண்ணும் போது மனது (ஆத்மா) மகிழ்கிறது. "இன்று இந்த உணவை இவர்களோடு பகிர்கிறேன்" என்று மிருகங்களுக்கும் பட்சிகளுக்கும் அளித்து உண்ணும்போது தனிமை நீங்கி மனம் திருப்தி அடைகிறது. 


பரிஷேஷனம் மூன்று  நிலையாக செய்யப் படுகிறது. அதாவது, ஆபோஜனம் (உணவுக்கு முன்), ப்ராணாஹுதி (உணவை பிராணனுக்கு வழங்குவது / சாப்பிடுதல்), உத்திரபோஜனம் (உணவுக்குப் பின்).


ஓம் பூர் புவ: ஸுவ: என்று காயத்ரி மந்திரம் சொல்லி,


சத்யம் த்வருதேன  பரிஷிஞ்சாமி"  என்று பகலிலும் (சத்யம் + து + றுதேன + பரிஷிஞ்சாமி = உணவே! நீயே சத்யம். எனக்கு ஏற்ற உணவான (சரியான) உன்னைச் சுற்றி தண்ணீர் தெளித்து, தெய்வமாக வணங்குகிறேன்) இரவில் "ருதம் தவ சத்யேன பரிஷிஞ்சாமி" என்றும் (அதே அர்த்தம் தான் - ஆனால் வார்த்தைகள் இடம் மாறி இருப்பதைக் கவனிக்க) வணங்குகிறார்கள்.


ஓம் ப்ரணய ஸ்வாஹா (மூச்சுக் காற்றை வணங்குதல் / breath )
ஓம் அபானாய ஸ்வாஹா (மல ஜலங்கள் வெளியேறும் முறையை வணங்குதல் /excretion system )
ஓம் வ்யானாய ஸ்வாஹா (இரத்தவோட்டத்தை வணங்குதல் / circulatory system)
ஓம் உதானாய ஸ்வாஹா (சுவாசத்தை வணங்குதல் / respiratory system)
ஓம் ஸமானாய  ஸ்வாஹா (ஜெரிக்க உதவும் உறுப்புக்களை வணங்குதல் / digestive system)
ஓம் ப்ரஹ்மனே ஸ்வாஹா (காக்கும் கடவுளாக பிரம்மனை வரித்ததால் இந்த உணவு பிரம்மனாகட்டும்)

ஓம் பிரம்மாணி மா ஆத்மா அம்ருதத்வாய (இந்த உணவே இந்த அனைத்தையும் இணைத்து (ப்ராண, அபான, வ்யான, உதான, ஸமான) என் ஆத்மா மற்றும் உடலாகி என்னையும் பிரம்மனாக்கட்டும்)



சந்தோக்யோபநிஷத்-தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தத் யத் பக்தான  ப்ரதமமாகச்சேத் தத்தோமீயம்!
ஸ யாம் ப்ரதமாம் ஆஹுதிம் ஜுஹுயாத் ப்ராணாய ஸ்வாஹேதி!
ப்ராணஸ்த்ருப்யாதி !

ப்ராணே த்ருப்யாதி சக்ஷுஸ் த்ருப்யாதி!
சக்ஷுஷி த்ருப்யத்யாத் ஆதித்யஸ் த்ருப்யாதி!
ஆதித்யே த்ருப்யாதி த்யௌஸ் த்ருப்யாதி!
திவி த்ருப்யந்த்யாம் யத் கிஞ்ச தௌஸ்வ ஆதித்யஸ்சாத் அதிதிஷ்டாத:
தத் த்ருப்யாதி!
தஸ்ய அனுத்ருப்திம் த்ருப்யாதி பிரஜா பஷுபீர் அன்னாத்யேன தேஜஸா
ப்ரஹ்மாவரச்சேநேதி !


இதன் பொருள்: உணவை உண்பவன் முதலில் தானம் (மற்றவருக்கு அதாவது மனிதன், மிருகம், பறவைகள் முதலானவை) அளித்து விட்டு உண்கிறான். அப்படி அளிக்கப்பட்ட உணவானது இறைநிலை பெறுகிறது. இதனால் ப்ராணன் திருப்தி அடைகிறது. இந்தத் திருப்தியானது ஹோமம் செய்வதற்கு ஒப்பானதாகும். ப்ராணன் திருப்தி அடைந்ததும் (மற்றவர்கள் திருப்தியாக உண்பதைக் கண்ட) கண்களும் திருப்தி அடைகின்றன. கண்கள் திருப்தியடைந்ததும் சூரியன் திருப்தியடைகிறான். சூரியன் திருப்தியடைந்ததும் ஸ்வர்கங்கள் (ப்ரபஞ்சம்) திருப்தியடைகிறது. எல்லாரும் திருப்தியடைகிறார்கள். பசு (மிருகங்கள்), பக்ஷி (பறவைகள்) ஆகியவையும் மனிதர்கள் போலவே திருப்தியடைகிற காரணத்தால், எங்கும் தேஜஸ் (ஒளி) நிறைந்திருக்கிறது. இதனால் பிரம்ம தேஜஸ் (உயிர் / ஆத்மா ஒளி) எங்கும் பரவி மகிழ்ச்சி நிறைந்திருக்கிறது.



இவை எல்லாவற்றிற்கும் மேலே "அம்ருதோபஸ்தரணம் அஸி" என்றும் தண்ணீரை உணவுக்கு ஆடையாக போர்த்தி அம்ருதம் என்றழைக்கிறது வேதம். பூமிக்கும், மிருகங்களுக்கும், பக்ஷிகளுக்கும் இதே நீரை அம்ருதமாக வழங்குமாறும் அறிவுறுத்துகிறது.


(இன்னும் வரும்)







.


நா தஸ்ய ப்ரதிமஸ்தி


பதிவர் அ. மு. செய்யது ரொம்ப நாள் முன்னர் என்னுடைய இந்தப் பதிவில் "நா தஸ்ய பிரதிம அஸ்தி" அவனுக்கு எந்தவொரு தோற்றமும் கிடையாது. (யசூர் வேதம் 32:3)" என்றும் ய‌சூர் வேத‌ம் சொல்லியிருக்க‌, ர‌விவ‌ர்மாவால் வ‌ரைய‌ப்ப‌ட்ட‌ ச‌ர‌ஸ்வ‌தி ஓவிய‌த்தை,க‌ட‌வுளாக‌ பாவித்து இந்துக்க‌ள் தொழுவ‌தேன் ??" என்றும் கேட்டிருந்தார்.

அப்போது என்னிடம் எந்தவொரு reference-ம் (ஆதாரங்கள்) இல்லாததாலும், ஏனோ தானோ என்று எதுவும் பேசுவதில் உடன்பாடில்லை என்பதாலும் உடனடியாக எதுவும் சொல்ல முடியவில்லை.

நா தஸ்ய ப்ரதிமஸ்தி என்ற இந்த விவாதத்தை முதலில் எழுப்பியவர் முகமதியராக இருந்தாலும் வேதங்களைப் படித்து அறிந்த, மதிப்புக்குரிய டாக்டர்.ஜாகீர் நாயக் அவர்கள். சமஸ்கிருதத்தின் பதம் பிரிக்கும் முறைகளை அனுமன் போலவே கையாண்ட இவரின் மொழிப் புலமையை வியக்கிறேன். விஞ்ஞானமும் சமஸ்கிருதமும் மட்டும்தான் எடுத்தார் கைப்பிள்ளை. சொல்லும் வண்ணம், பதம் பிரிக்கும் வண்ணம், வளைந்து கொடுத்து நமக்கேற்ற மாதிரி ஒரு அர்த்தம் பலனையும் கொடுக்கும்.

"நா தஸ்ய ப்ரதிமஸ்தி" என்பது ஒரு யஜுர்வேதக் கடலில் இருந்து எடுக்கப்பட்டவொரு சின்னத் துளி.

ஒரு கதையில் ஆசிரியர் "நான் குற்றம் புரிந்த ஒருவன் ஓடுவதைக் கண்டேன்" என்று எழுதி இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இதில் "நான் குற்றம் புரிந்த ஒருவன்" என்பது ஒரு பக்கத்திலும் "ஓடுவதைக் கண்டேன்" என்பது மற்றொரு பக்கத்திலும் பதிக்கும்போது பதிந்துவிட்டால், அதைப் படிப்பவர் பிற்பகுதியை படிக்காமல் விட்டுவிட்டால், அதை மாற்றான அர்த்தம் கொள்வதும் புரிந்துகொள்வதும் யார் தவறு?

ஒரு வக்கீல் போல, நமக்குச் சாதகமாக ஒன்றை பேச, ஒரே ஒரு வரி கிடைத்து விட்டால், அதை வைத்துக் கொண்டே கொஞ்ச காலம் வாதாட முடியும். புகழடைய முடியும். ஆனால் அதுதான் சரி என்று முடிவெடுக்க முடியாது. உண்மையை மறைப்பதும் பொய்யா இல்லையா? ஒரு திறமையான வக்கீலால் எந்தவொரு சின்ன வார்த்தையைக் கையில் எடுத்து யாருக்கு வேண்டுமானாலும் எதிரான ஆயுதமாக ஆக்க முடியும். இதையெல்லாம் யார் போய் ஆராய்ந்து கொண்டிருக்கப் போகிறார்கள் என்ற அலட்சியப் போக்கு. மேலும் நம் மக்கள் விரைவிலேயே எதையும் மறந்துவிட்டு அடுத்த பிரச்சினையை கவனிக்கப் போய் விடும் ஆற்றலும்தான் இந்த மாதிரியான பொறுப்பற்ற கருத்துப் பகிர்தல்களுக்கு அடித்தளமாக ஆகி விடுகிறது. இதைப் பற்றி விமர்சிக்கவோ விவாதிக்கவோ போவதில்லை இங்கு.

விரைவில் யஜுர்வேதத்தின் முழுமையானத் தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்பெயர்பை பி.டி.எஃப்-ஆக வெளியிடுகிறேன். இதை முழுதாகப் படிக்கும் பொறுமையிருந்தால் நா தஸ்ய ப்ரதிமஸ்தி என்பதன் விரிவான அர்த்தம் புரியும். ஒரு வரியிலோ, ஒரு பதிவிலோ அடக்க முடியாத பெருங்கடல் அது.

எனக்கு புரிந்ததை மட்டும் சொல்கிறேன்.

ரவி வர்மாவால் வரையப்பட்ட சரஸ்வதி ஒரு தென்னிந்தியப் பெண்ணை மாடலாக வைத்து வரையப்பட்டது. ரவி வர்மாவின் படங்கள் பெரும்பாலும் உயிருடன் இருக்கும் பெண்டிரை வைத்துதான் வரையப்பட்டன. இவரால் வரையப்பட்ட படங்கள் இன்றும் பூஜையறையில் வைத்து வணங்கப்படுகின்றன என்றால் அவரது கலைக்கும் திறமைக்கும் கிடைத்த அங்கீகாரம் அது. மாடலாக இருந்த பெண்டிர்களுக்கும் அழியாத இறைநிலையை அளித்த அவரது ஓவியங்களை என்னவென்று சொல்வது. இன்றும் கூட இந்திய கலைப் பொருட்கள் விற்பனையில் தஞ்சாவூர் ஓவியங்களுக்கு அடுத்து ரவிவர்மாவின் ஓவியங்கள்தான் உலகெங்கும் அதிக விலையில் விற்கப்படுகின்றன.

நான் இன்றும் வியந்து இரசிக்கும் படங்களில் சில. இந்தப் படங்களில் தெறிக்கும் உணர்வுகளைப் பாருங்கள். எவ்வளவு அழகான ஓவியங்கள்.


இவள் கங்கை.


அர்ஜுனனும் சுபத்திரையும்


தாதிப் பெண்

இறைவன் மனிதனின் நேர்மறையான நம்பிக்கை என்றே வேதங்கள் கூறுகிறது. நம் நம்பிக்கையின் ரூபமாக அல்லாவாக, ஏசுவாக, கிருஷ்ணனாக அல்லது சரஸ்வதி, இல்லை வேறு எந்தக் கடவுள் என்றாலும் அவர்களை நாம் இறைவனின் பிரதிநிதியாக அல்லது messenger ஆகவே வரித்துள்ளோம் என்பதை ஏறத்தாழ எல்லாருமே ஒப்புக் கொண்டிருக்கிறோம். இந்த இறைத்தூதர்கள் கொண்டு வந்த செய்தி "மனிதத்துவம்" மற்றும் "அன்பு".

ஒருவர் தன் நம்பிக்கைக்குப் பெயர் சூட்டுவது சரியென்றால் அதே நம்பிக்கைக்கு இன்னொருவர் தனக்கு பிடித்த உருவமும் கொடுத்துக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது? போகும் பாதை எதுவென்றாலும் இருவரின் இலக்கு "மனிதத்துவம்" மற்றும் "அன்பு" என்ற செய்தியை மற்றவருக்கும் கொடுப்பது மட்டும்தானே?

இலக்கை விட்டு, பாதையிலேயே உழன்று கொண்டிருந்தால், இலக்கை என்று சென்றடைவது? அவரவர் தனக்குக் கிடைத்த பாதையில் சென்றாலே போதுமே. டிராபிக் ஜாம் எதுவும் இல்லாமல் சுலபமாக இலக்கை அடைந்து  விடலாமே. வடையை சாப்பிடாமல் அதில் உள்ள துளைகளை எண்ணிக்கொண்டிருந்தால், வடையை யார் சாப்பிடுவது?

அவர்கள் கொண்டு வந்த செய்தியைத் தொலைத்து விட்டு தூதர்களை விமர்சித்துக் கொண்டிருக்கிறோம் என்பதில் எந்த மதத்தினரும் ஒருத்தருக்கொருத்தர் சளைத்தவராக இல்லை. எல்லோருக்குமே அவரவர் நம்பிக்கை மதிப்புக்குரியதாகவும் இருக்கிறது. அவற்றை சக மனிதர்களின் நம்பிக்கையை விட உசத்தியாக காண்பிப்பதையும் முக்கியமாக நினைக்கிறார்கள். என் நம்பிக்கை சிறந்தது என்று நினைப்பதில் தவறே கிடையாது. அதற்காக அடுத்தவர் நம்பிக்கையை பொய் என்று சொல்வதும், தம் நம்பிக்கையை அடுத்தவர் மீது திணிப்பதும், நிச்சயம் திணிக்கப்பட்ட நம்பிக்கையின் வாழ்நாளைக் குறைக்கும். நம்பிக்கையின் ஆதாரமே, 'அட, இதை நம்பலாம் போலருக்கே' என்று நினைக்கும் சுதந்திரம்தான்.

என் முந்தைய பதிவில் சொன்ன மாதிரியே, என் பதின் பருவங்களில் நான் அலட்சியம் செய்த சிலவற்றை, அதன் பின்னணியில் இருக்கும் காரண காரியங்கள் தெரிந்ததும் ஆச்சரியம் அடைந்து, அவற்றையே நானும் நம்ப ஆரம்பித்தேன். இந்தக் கருத்துக்கள் என் மீது திணிக்கவோ, கட்டாயப்படுத்தவோ முயற்சிக்காமல் என் தேடலுக்கும், வாசிப்புக்கும் துணை நின்ற என் தந்தையை நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். நான் ஒவ்வொரு விஷயத்தையும் ஏன், எதற்கு என்று கேட்டுத் தெரிந்து கொள்ளும் போது என் தந்தை மகிழ்ச்சியோடு ஒவ்வொன்றையும் விளக்குவார்.

எனக்குச் சொல்லப்பட்ட ஒவ்வொரு விஷயங்களிலும் என் தனிப்பட்ட நலன் மட்டுமின்றி என் குடும்பத்தின் நலனும் அடங்கியே இருந்தன. காரணங்கள் தெரிய ஆரம்பித்ததும், நாளடைவில் எந்தக் கேள்வியும் கேட்காமல் அவர்கள் சொன்னதை செய்து விட்டு, பின்னர் அதற்கான பலன் கிடைத்ததும் அதற்கான அர்த்தங்களை உணரவும் ஆரம்பித்தேன். இன்று அவர்கள் நம்பிக்கையை நான் புறந்தள்ளாமலும், என் மகளுக்கு எடுத்துச் சொல்லும் போது என் தந்தை கையாண்ட முறையையே பின்பற்றுகிறேன்.

சரி சொந்தக்கதைகளை விட்டு விஷயத்துக்கு வரலாம்.

என் தாயை நான் தெய்வம் என்று நினைத்தால் என் தாய்க்கும், ஒரு நடிகையை அதே போல நினைத்தால் அவருக்கும் கூட, எனக்கு இட வசதியும், அளவுக்கு மீறிய பணமும், வேறு முக்கியப் பொறுப்புக்களோ எதுவும் இல்லாமலும் இருந்தால் கோவில் கட்டி சிலையும் வைக்க எனக்கு தனி மனித சுதந்திரம் இருக்கிறது, இல்லையா?

நமக்கு பிடித்திருந்தால் அங்கு போய் வணங்கலாம். பிடிக்காவிட்டால் ஒன்று போகாமல் இருக்கலாம், இல்லை, அங்கு போய் இருக்கு சிற்பங்களின் கலையழகை இரசித்து விட்டு மட்டும் வரலாம். சில வைஷ்ணவக் கோவில்களில் கிடைக்கும் பிரசாதங்கள் சாப்பிடவும் கூட ரொம்ப பிரமாதமாக இருக்கும். :))

இந்துக்கள் இறைவனும் இறைவியுமாக பல உருவங்களில் ஏன் கொண்டாடுகிறார்கள்?

யோகா பற்றி நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஆனால், யோக நிலையின் பல்வேறு நிலைகளில் ஒன்றானது குண்டலினி யோகா. இந்த யோக நிலையின் உச்சத்தை அடையும் போது, யோகிக்கு பல்வேறு உணர்வுகளின் காட்சிகள் தெரிகின்றன. இவற்றை வெறுமே வாயால் விரித்துச் சொன்னால் புரிபடுவது சிரமம் என்பதால், அதை உருவகப்படுத்தி இருக்கிறார்கள். இதற்கான படங்கள் என்னிடம் கிடைக்கவில்லை. இல்லையென்றால் இந்த சிறு விளக்கத்தோடே இந்த பதில் முடிந்திருக்கும்.

பகவத் கீதையில் (7:21) "எந்த வடிவத்தில் என்னை வணங்கினாலும் அதே ஆகிறேன்" என்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

குளியல் சோப்பு இருக்கிறது. அதைப் பயன்படுத்துவதின் நோக்கம் உடல் சுத்தமாக வேண்டும் என்பதுதான். அதில் ஏன் இவ்வளவு வகைகள் இன்று சந்தையில் இருக்கிறது? ஒன்றில் moisturiser அதிகம் இருக்கு என்றும், இன்னொன்றில் pH குறைந்து இருக்கு என்றும், வாசனை சோப் என்றும், சினிமா நட்சத்திரம் உபயோகிக்கும் சோப் என்றும் பலவிதமாக சந்தைப் படுத்துவது ஏன்? ஒரே வீட்டில் எல்லோரும் இருந்தாலும், ஆளுக்கொரு சோப் வைத்துக் கொள்கிறோமே அது ஏன்? அடிப்படை சுகாதாரம் மற்றும் உடல் அழுக்கை நீக்கும் என்பதற்காக இருக்கும் சோப்பிலேயே இவ்வளவு வகைகள்.

தாய் பிள்ளை என்றாலும் தனித்தனி விருப்பு வெறுப்புக்கள் கொண்ட மனித மனத்துக்குள் நம்பிக்கைகள் எத்தனை விதங்கள்! அவற்றிற்கு எத்தனை உருவங்கள் கொடுத்திருக்கலாம். மனிதன் கடந்து வந்த பாதைகளில் இருப்பதையெல்லாம் மரியாதையோடும் பக்தியோடும் புனிதமான ஒன்றாகவே பார்த்து வந்திருக்கிறான்.

வாழ்வா சாவா என்ற இக்கட்டான ஒரு நிலையில் இருக்கும் ஒருவருக்கு, மற்றவரது தகுந்த நேரத்தில் செய்த உதவி, சின்னதே என்றாலும், உதவி பெற்றவனின் மனம், உதவி செய்தவரை தெய்வமாக்கி விடுகிறது. அல்லது அதற்குச் சமமான உயரிடத்தை அவர் இதயத்தில் பெற்று விடுகிறார். இல்லையா?

எல்லோருக்குமே ஒரே மாதிரிதான் இயற்கை மழையாகவும் வெயிலாகவும், காற்றாகவும் இருக்கிறது. மரங்கள் காய்கனிகளைத் தருகின்றன. நதிகளும் கடலும் நீர் தருகின்றன. இவற்றை எல்லாமே தெய்வங்களாக்கிப் பார்க்கிறது இந்துத்துவம். தான் நம்பியதை அடுத்தடுத்த வம்சங்களுக்கும் pass செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஒரு கோவிலும் ஒரு உருவமும் கொடுத்து, பரம்பரையாக கொண்டாடிய குலதெய்வ பழக்கங்கள் உண்டாகின. இதனால் கோவில்களும், உருவங்களும் பெருகின.

இந்துத்துவத்தில் இருக்கும் கருத்து சுதந்திரம் எனக்கு பிடித்தமானது. யாரையும் விமர்சிக்காமல், புண்படுத்தாமல், கட்டுப்படுத்தாமல், ஒரு பண்பான ஆசிரியர் போல, இது நல்லது, உனக்கு உடன்பாடென்றால் பின்பற்று என்றும், ஒருவேளை பின்பற்றினால் விதிமுறைகளின் படி பின்பற்றினால் நல்லதென்றும், விதிமுறைகளை மீறுவதால் உண்டாகும் விளைவுகளையும் மட்டும் வேதங்கள் சொல்லியிருக்கிறது. பின்பற்றவில்லையென்றால் உனக்கு கேடு விளையும் என்று வேதங்களில் எங்கும் சொல்லப்படவில்லை.

பதினெட்டு கையுடைய துர்கை அத்தனை ஆயுதங்களின் பிரயோகத்திலும் தேர்ச்சி பெற்றவர் என்பதையே குறிக்கிறது. உருவகப்படுத்தும் போது, ஒருவருக்கு இத்தனையும் தெரியும் என்பதை எப்படிக் காட்டுவது? அதனால் பதினெட்டு கைகள் கொடுத்திருக்கலாம்.

வீணை வாசிக்கப்படுவது போன்ற உருவமும் (சரஸ்வதி), ஐந்து தலை நாகத்தில் மனிதன் படுத்திருப்பது போன்ற உருவமும் (விஷ்ணு) குண்டலினி யோகத்தின் உருவகங்களே. யோக சாஸ்திரங்களின் சுலோகங்களைப் படிக்கும் போது, அதில் அந்தந்த யோகத்தின் உச்சநிலையை விவரித்தபடி படமாக வரைந்தால், நிச்சயம் இந்துக் கடவுள்களின் உருவங்களை ஒத்த ஒரு காட்சி விரியக்கூடும்.

இது என் கருத்து மட்டும்தான். இதில் நிறைய பேருக்கு உடன்பாடு இல்லாமலும் இருக்கலாம். யாரையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்க.

இன்னும் சிறிது தேடினால் இதற்கான படங்களும் ஆதாரங்களும் நிச்சயம் எங்கோ இருக்கலாம். தேடுவேன் :)

இந்தத் தேடலில் நான் அறிந்த சில விஷயங்கள். உங்களுடன் பகிர்தல்.

கிருஸ்துவ சமூகத்தில் ஏசுபிரான் மற்றும் பைபிள் ஒன்றுதான். ஆனால், லத்தின் கதோலிக், சிரியன் கதோலிக் சர்ச்சுக்குள் போகமாட்டாராம். இவர்கள் இருவருமே பெண்டேகோஸ்ட் சர்ச்-க்கு போகமாட்டாராம்.இவர்கள் மூவரும் மர்தொமா சர்ச்-க்கு போகமாட்டாராம்.மர்தொமா மற்றவர்களது சர்ச்-க்கு போகமாட்டார்.இந்த நால்வருமே சால்வேஷன் ஆர்மி சர்ச்-க்கு போகமாட்டார்கள்.இந்த ஐந்து பேருமே செவன்த் டே அட்வெண்டிஸ்ட் சர்ச்-க்குப் போக மாட்டார்கள்.மேற்சொன்ன ஆறு குழுவினரும் ஆர்தொடாக்ஸ் சர்ச்-க்குப் போக மாட்டார்கள்.இந்த ஏழு பேருமே ஜகோபைத் சர்ச்-க்கு போக மாட்டார்கள்.கேரளாவில் மட்டும் 146 விதமான கிருஸ்துவப் பிரிவினர்கள் இருக்கிறார்கள்.இதில் எந்தப் பிரிவினருமே மற்ற சர்ச்சுகள் போவதில்லை அல்லது தமக்கு வரும் நன்கொடைகளைப் பகிர்வதில்லை.

இங்கு இப்படி இருக்க, முஸ்லிம்களில் அல்லா, குரான், நபிகள் எல்லாம் ஒன்றுதான் என்கிறார்கள். ஆனால்,ஷியா மற்றும் சுன்னி முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.ஷியாக்கள் சுன்னி முஸ்லிம்கள் மசூதிகளுக்குப் போக மாட்டார்கள். அகமதிய மசூதிகளுக்கு இவர்கள் இருவருமே போக மாட்டார்கள். சுஃபி மசூதிக்கு இந்த மூவரும் போக மாட்டார்கள்.முஜாஹித்தின் மசூதிகளுக்கு இவர்கள் யாருமே போகமாட்டார்கள். 13 ஜாதிப் பிரிவுகளைக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரே புனித நூலை அடிப்படையாக கொண்டு, இறை நம்பிக்கை வளர்க்கும்  மனிதர்களிடமே இத்தனை வித்தியாசங்கள்.

1,280 புனித நூல்கள், 12,000 விளக்கங்கள், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட உபவிளக்கங்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள், பலதரப்பட்ட மடங்கள், ஆசாரியர்கள், ரிஷிகள், நூற்றுக்கணக்கான மொழிகள் என்று இருக்கிறது கூட இந்து மதத்தில் இருக்கும் சுதந்திரம் காரணமாகத்தான். ஆனாலும் ஹிந்துக்கள் அனைவரும் எல்லாக் கோவில்களுக்கும் அவரவர் விருப்பம் போல போகிறார்கள்.

சிலை/உருவ வழிபாடு முறையை ஹிந்துக்கள் மட்டும்தான் பின்பற்றுகிறார்கள் என்று இல்லை.  முஸ்லிம்கள் மெக்காவைக் குறித்த ஒரு காபாவையும், கிருஸ்தவர்கள் சிலுவையையும் ஒரு உருவம்/idol ஆக வரித்துக் கொண்டுதான் தத்தம் தொழுகைகைகளையும், பிரார்த்தனைகளையும் செய்கிறார்கள். படங்களும், ஓவியங்களும், சிலைகளும் இதைப் போன்ற தனிநபர் மன உருவங்களின் வெளிப்பாடுதான்.

பழுத்துப் போன ஆன்மீகவாதிகளுக்கு இறைவனைக் காண மீடியம்(medium) ஏதும் தேவைப்படுவதில்லை. ஆனால் என்னைப் போன்ற ஆரம்ப நிலை கத்துக்குட்டிகளுக்கு இதுதான் இறைவன் என்று சொல்லித்தான் தலை வணங்கவே கற்றுக் கொடுத்தார் என் தந்தை. பூஜையறையையும், கோவில்களையும் கடக்கும் போதெல்லாம் கன்னத்தில் போட்டுக் கொள்வதும், ஒரு ஆம்புலன்ஸ் அலறிக்கொண்டே போனால் கூட "கடவுளே அவர்களோடு இரு" என்று வேண்டிக் கொள்வதும் கூட, என் தந்தையார் எனக்குள் இறைவனாக வரித்த உருவங்கள் இருப்பதால் மட்டுமே. இல்லையென்றால் என் தலை வானை நோக்கியே பார்த்துக்கொண்டு, கர்வம் தலைக்கேறி, அடுத்தவர் உணர்வுகளை குனிந்தும் பார்க்காமல், அஹங்கார குழிக்குள் என்றோ விழுந்திருப்பேன்.

மனதிற்குள் மட்டும் உருவமே இல்லாத இறைவைனைக் காணும் அளவுக்கு நமக்கு பக்குவம் வந்து விட்டிருந்தால், நாம் இங்கு blog எழுதிக் கொண்டு, சாயந்திரம் சப்பாத்திக்கு தாலா இல்லை, உருளைக் கிழங்கு குருமாவா என்று கவலைப் பட்டுக் கொண்டிருக்க மாட்டேன். அடுத்த மாதம் வரும் அரியர்ஸ் பற்றியும், Activa மற்றும் Wagon-R சர்வீஸ் நாட்களையும் எண்ணிக் கொண்டு டைரியில் குறித்துக் கொண்டிருக்க மாட்டோம்.

முக்கியமாக டூம்ஸ் டே இவ்வளோ சீக்கிரம் வந்து விட்டதே. என் பெண் கல்யாணத்தை பாக்காமலே போயிடுவேனோ என்றெல்லாம் கவலைப்படமாட்டேன்.:))

அழுத்தப்பட்டப் பந்து எப்படி நீரிலிருந்து வெளியேறி விழுந்து விடுமோ, கட்டுப்படுத்தி திணிக்கப்பட்ட கருத்துக்களும், கட்டுப்படுத்துபவன் இருக்கும் வரை இருப்பது போலத் தெரிந்தாலும், காலப்போக்கில் மறைந்து விடும். நம் சமயங்கள் உணர்த்துவது அன்பு மட்டும்தான். நம் வீடுகள் தனித்தனியென்றாலும், பயணிக்கும் பாதைகள் வெவ்வேறேன்றாலும், நம் இலக்கு ஒன்றுதான். இலக்கையே குறித்திருப்போம். நம் நம்பிக்கையை மதிப்பது போலவே மற்றவர் நம்பிக்கையையும் மதிப்போம். இல்லை, குறைந்த பட்சம் விமர்சிக்காமலாவது இருக்கலாமே. :)

ஒரு நாட்டின் கொடி என்பது துணியில் வரையப்பட்ட ஓவியம்தான். ஆனால் தன் நாட்டுக் கொடியை காக்க இராணுவ வீரர்கள் உயிரைக் கூடத் தியாகம் செய்கிறார்கள். துணியில் வரையப்பட்ட கொடியின் உருவம் அவருக்கு அவ்வளவு மதிப்பு மிக்கதாக ஆகி விடுகிறது, இல்லையா?

சாதாரண வெள்ளைத் தாள் எந்த மதிப்பும் இல்லாதது. ஆனால் அதன் மேல் அரசாங்கத்தின் முத்திரை இட்டிருந்தால், அதை வைத்து கோடிக்கணக்கில் ஊழல் செய்யும் அளவுக்கு மதிப்பு மிக்கதாகி விடுகிறதே?

மின்சாரம் உருவமற்றது. ஆனால் மின் விசிறியோ அல்லது ஏ.சியோ இருந்தால்தான் நம்மால் காற்றைப் பெற முடிகிறது இல்லையா? இரவில் ஒரு ட்யூப் லைட் இருந்தால் தான் ஒளி பெற முடிகிறது. இல்லை அந்த ஆற்றலை ஒரு பாட்டரி மூலம் பெறுகிறோம் இல்லையா?

அதே போலத்தான், ஆற்றலை, ஒருவர் பஜாஜ் ஃபேன் ஆகவும், இன்னொருத்தர் கெய்தான் ஃபேன் ஆகவும், வேறொருவர் ஹவெல்ஸ் ஃபேன் ஆகவும் அவரவர் வீட்டுக் கூடத்தில் பொருத்திக் கொண்டு காற்றை வாங்கி கொண்டிருக்கிறார்கள்.

ஒரு அற்புதமான வாசிப்பு அனுபவத்திற்குத் தூண்டிய அ.மு.செய்யதுக்கு நன்றிகள் பல.

யாரையும் புண்படுத்தும் நோக்கமோ, விமர்சிக்கும் எண்ணத்துடனோ எழுதவில்லை. இதில் உள்ளவை என் கருத்துக்கள் மட்டுமே.

யாரையும் காயப்படுத்தாதீர்கள் தாழ்மையான கோரிக்கையோடு ஆரோக்கியமான விவாதத்திற்கு வைக்கிறேன்.

நன்றி.


.

பேரூர் சிற்றூர் ஆன கதை

புத்தக வாசிப்பில் எனக்கென ஒரு கோணலான இரசனை. பொதுவாகவே புத்தகங்களை வாங்கியதும் படிக்க மாட்டேன். புத்தகம் சின்னதோ பெரிசோ, ஒவ்வொரு பக்கமாக flip செய்து random-மாக நான்கு-ஐந்து நாட்களுக்கு படிப்பேன். அத்தியாயங்களின் தலைப்புகளில் எது முதலில் கவர்கிறதோ அதைப் படிப்பேன். பெரியப் பத்திகளைப் படிப்பேன். பிறகுதான் ஆரம்பத்திலிருந்து முழு புத்தக வாசிப்பும். இதனால் புத்தகத்தில் எந்த இடத்தில் தொய்வு இருக்கிறது என்று எனக்கு easy-யாகத் தெரிவது போன்ற ஒரு நம்பிக்கை. அப்படியாக இந்த முறை ஐந்து நாள் பயணத்தில் இரயில் துணையாக வந்த எட்டுப் புத்தகங்களில் ஒன்று நந்திதா கிருஷ்ணா-வின் "மெட்ராஸ் - சென்னை" (ஜெயஸ்ரீ கோவிந்தராஜனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது) வந்தது. என் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து பத்ரியின் கிழக்கு பதிப்பகம் (Prodigy) அனுப்பிய இலவசத் தமிழ் புத்தகம். இந்தப் புத்தகம் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது.

வாங்கலாமா?
  • வாங்கலாம். இந்தப் புத்தகத்தை easy reading வகையில் சேர்க்கலாம். வரலாற்றுச் செய்திகள் கொண்டது என்றாலும் படிக்கும்போது தொய்வில்லாமல் இருக்கிறதால் முழுப் புத்தகத்தையும் ஒரே நேரத்தில் படிக்க முடிகிறது. உண்மையில் இதொரு டைரிக் குறிப்பு.
  • யார் படிக்கலாம்? சிறுவ-சிறுமியர்கள், மாணவ-மாணவிகள், சுற்றுச் சூழல் பற்றிய ஆர்வமுடையவர்கள், வரலாற்றுப் பசியுள்ளவர்களுக்கு இந்தப் புத்தகம் இளநீர். என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆசையுடைய, curiosity உடையவர்கள் யாருமே படிக்கலாம். Guide-கள், பள்ளிச் சிறார்கள், சென்னைக்கு வரும்/வர ஆசைப்படும் சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டவர்கள்.
  • என்ன சொல்றாங்க? மதராஸ், சென்னை ஆனபோது வெறும் பெயர் மாற்றம் மட்டுமா நடந்தது? பேரூராக இருந்த மதராஸ், சென்னையாக சுருங்கியதும், மனித ஆக்கிரமிப்புக்களால் சுற்றுச் சூழலில் ஏற்பட்ட மாற்றங்கள், மரங்களும் கோவில்களும், பெயர்க் காரணங்களும், தற்போதைய நிலை மாற்றங்கள், நகரம் சுருங்கி மீண்டும் விரிகிறதும் போன்ற விஷயங்கள் summarise செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இரசிப்பான வாசிப்பனுபவம் பெறுவது உறுதி. இப்போது இருக்கும் சென்னையிலிருந்து முன்னாளைய மதராசுக்கு கூட்டிச் செல்லும் ஒரு பயணம் - அலுக்கவில்லை.
சிந்தனைகள்:
  • அந்தக் காலத்தில எல்லாம் இப்படியா? என்று ஒரு அலுப்போடு ஆசிரியர் எழுதியது போல இருக்கிறது. உண்மையாகவே மதராஸாக இருந்தபோது இருந்த பல நல்ல விஷயங்களை, கலாச்சாரங்களை தொலைத்துவிட்டது  சென்னை. ஆனால் கால மாற்றங்கள் கொடுத்த நன்மைகளையும் அங்கங்கே சொல்லியிருந்தால் ஒரு balanced view ஆக இருந்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றியதை மறைக்க முடியவில்லை.
  • வாசிக்க மாட்டார்களோ என்று தோன்றியோ என்னவோ, சின்னச் சின்ன விஷயங்கள் விபரமாகச் சேர்க்கப்படாமல் glimpse மட்டுமாக இருக்கிறதால், முழுமையான வாசிப்பின் நிறைவைக் கொடுக்கவில்லை. நிறைய அறிய வேண்டுமானால் அந்தப் புத்தகத்தை படியுங்கள் என்று இன்னொரு புத்தகத்துக்கும் ஒரு reference கொடுத்திருக்கலாம்.
ப்பொருளடக்கம்:
  • சென்னையின் இயற்கை வளங்களான நீர் நிலைகள், விலங்கியல், மற்றும் தாவரங்களைப் பற்றிய விவரிப்புக்கள் அருமை.1985-க்குப் பிறகுதான் கூவம் மாசுபெற்றது என்பதை அறியும் போது வேதனை தலைதூக்குகிறது.
  • சுனாமியின் போது பக்கிங்காம் கால்வாய் நீரின் வேகத்தைக் குறைக்க உதவியது குறித்து படிக்கையில் ஆச்சரியமும், அதை நாம் போற்றிக் கொண்டிருக்கும் இழி நிலையும் பற்றிய வருத்தமும் தோன்றியது. இருந்த செயற்கை ஏரிகளையும் ஆக்கிரமித்து அரங்சாங்கமே கட்டியுள்ள கட்டிடங்களைப் பற்றி என்ன சொல்ல?
  • பெரும்பாணாற்றுப்படையில் கரிகால் சோழன் விவசாயத்தை அறிமுகம் செய்தது குறித்த பகுதிகள் அடேடே! என்றே படிக்க வைக்கும். பல்லவர்கள் குறிப்புக்கள் படித்தார்ப் போல இருந்தாலும், செய்திகள் சுவையாக இருக்கின்றன.
  • மயிலாப்பூர், புனித தாமஸ் குன்று, திருவல்லிகேணி, திருவான்மியூர், பல்லாவரம், திருவொற்றியூர் கோவில்கள் பற்றிய குறிப்பும் உள்ளன.
  • பூந்தமல்லி என்றால் மல்லிகைபூக்கள் விளையும் இடம் என்று குறித்துள்ளார்கள். உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் உலகு உய்யகொண்ட சோழபுரம் என்றும் பூவிருந்த வல்லி (மகாலக்ஷ்மி) என்றும் பெயர் உடையது இத்தலம். சிவபுராணங்களில் புஷ்பகவல்லி என்றும் லக்ஷ்மிபூர் என்றும் குறிக்கப்பட்டுள்ளன.
  • விவரிப்பில் சென்னை புகழ் அடையாறு ஆலமரம் இல்லாமல் போனது பற்றிய குறிப்புக்கள் ஏதும் இல்லாததும் வருத்தமே.
  • பிரிட்டிஷாரின் வருகை பற்றியும், அதன் பின் சென்னையின் தாறுமாறான குடியிருப்புகளின் வளர்ச்சியும் இதன் விளைவாக சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் பாதிப்பும் பற்றியும் சொல்லியிருக்கிறார். புனித ஜார்ஜ் கோட்டை, மற்றும் ஏழு கிணறின் கதைகளும் சுவை. 
  • சென்னையில் தற்போதும் புழக்கத்தில் உள்ள பல்வேறு இடங்களின் பெயர்க் காரணங்கள் simply superb. 
  • இதில் பெரம்பூர் பற்றிய குறிப்பில் தவறு இருக்கிறது. பிரம்பு/மூங்கில் காடுகள் நிறைந்த இடமாகையால் பிரம்பு+ஊர் = பிரம்பூர் மருவி பெரம்பூர் ஆனது. இதில் குறித்தபடி பேர்+அன்பு+ஊர் என்றெல்லாம் இருந்திருக்க முடியாது.
  • இயற்கையான துறைமுகமான பழவேற்காடு (புலிகாட்) படுக்கை (Padouke) என்றும், புலிகாட் என்றும், மாமல்லப்பட்டினம் என்றும், பிரளய காவேரி என்றும் அனந்தராயன்பட்டினம் என்றும் அழைக்கப் பட்டு, பின் 1521-னில்தான் பழவேற்காடு என்ற பெயர் வந்தது.
  • சென்னையின் பல்வேறு நினைவிடங்கள், முக்கியக் கட்டிடங்கள்,  பற்றிய குறிப்புக்கள் தெளிவாக இருக்கின்றன. ருக்மிணிஅருண்டேல் அவர்கள் நிர்மாணித்த கலாக்ஷேத்திரா இந்தியாவின் முதல் பள்ளி என்று குறிக்கப்பட்டுள்ளது, இதை இந்தியாவின் முதல் கலைக்கூடம்/கலைக் கல்லூரி என்று குறிப்பிடலாம்.
  • பிரச்சினைகளும் தீர்வும் : ஆஹா வென்று மகிழ்ந்த குறிப்புக்கள். தீர்வுகளில் சாலை போக்குவரத்து மற்றும் வாகனப் புகையினால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு மெட்ரோ இரயில் திட்டத்தை ஒரு நல்ல மாற்றாக சொல்லியிருப்பார்கள் என்று நம்பித் தேடித் பார்த்தேன். போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வே காணோமே? மின்சார இரயிலால் சுற்றுச் சூழல் மாசு மற்றும் டிராபிக் ஜாம் / போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படலாமே?
  • மொத்தத்தில் இந்தப் புத்தகம் மெட்ராஸ் - சென்னை ஒரு பயணக்குறிப்பு. இன்னும் கொஞ்சம் உழைப்பும், தேடலும் இருந்திருந்தால் இந்தப் புத்தகம் போற்றுதலுக்குரியதாகவே ஆகியிருக்கலாம். இந்த விலைக்கு இதுதான் என்றாலும், press ink-க்குக்கு கொஞ்சம் மதிப்பும் கொடுத்திருக்கலாம். விலை இன்னும் கொஞ்சம் கூட்டி, அதிகமென்றால் கூட பரவாயில்லையே! ஓர் நல்ல வரலாற்றுப் பதிவாக வந்திருக்க வேண்டிய புத்தகம் இது. ஹும்ம்ம்.  தாளிக்கும் ஓசை புகழ் ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் அவர்களா? சமையல் குறிப்புக்கே அதிக details கொடுக்கும் நீங்களோ மேடம் இப்படி?
புதுசா வாங்க:  இங்கே செல்லவும்.



.

கர்ணன் என் காதலன் - 3

கர்ணன் என் காதலன் - 1, 2
இந்தத் தொகுப்புக்களில் உள்ளவை பல்வேறு புத்தகங்களிலிருந்தும், மகாபாரதத்திலிருந்தும் கர்ணனைப் பற்றிய குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.


இராதேயனும் இராதையும்

இராதேயன் நதிக்கரையில் நின்றிருந்தான். விடியற்காலையில் செய்யவேண்டிய தர்ப்பணங்கள் மற்றும் சூரியனுக்கும் அர்க்கியம் விடுவதற்கான பொழுது.

அவன் பெயர் இன்றும் வசுஷேணன் என்றே அறியப்பட்டிருந்தது (வசதிகளுடன் பிறந்தவன்). கர்ணன் (அறுத்துத் தந்தவன் அதாவது கவச குண்டலங்களை அறுத்தவன் என்ற பொருள்படும்) என்று பின்னாளில் அழைக்கப்பட்டான்.

அவன் உயரமாகவும், தேஜஸ்வீயாகவும், தலை நிமிர்ந்தும், சூரியனுக்கு ஒப்பான ஒளி படைத்த பரந்த கண்களையும், பலம் பொருந்தியவனாகவும், புஜங்களும் தோளும் திரண்டு, விரிந்த மார்போடும் நின்றிருந்தான். அவனை சுற்றியிருந்த காற்றில் கூட அவன் வாசமே வீசியது. அவன் விழியின் ஒளியினால் சூரியனின் ஒளி குறைந்து தெரிந்தது. அவன் நடந்த வழிகளில் இருந்த சோலைகளின் பூக்கள் இவன் வருகை கண்டே மலர்ந்தன. இவன் ஸ்பரிசித்த நீர்ச் சுனைகளின் தன்மை இன்னும் குழைந்து குளிர்ந்தது. காலையின் இறைபூஜைக்கு அவன் பூக்களை பறித்த போது குழந்தையின் கைகளைப் போன்ற மிருதுவான தொடுதலும், அதன் பின்பு வாள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவன் கரங்கள் வாளைப் பற்றும் போது உறுதியாகவும், இறுக்கமாகவும் இருந்தன. பூமியில் அவன் உறுதியான பாதங்கள் அழுந்தியதில் மண்துகள்கள் மேலும் பொடிந்தன. அவன் வியர்வையை தொட்ட தென்றல் இன்னும் மணம் கொண்டு பூக்களை தோற்கடித்தன. வாள் போகும் திசையிலெல்லாம் அவன் விழிகள் திரும்பியதைக் காணும் போது, ஒரு தாய் தன் குழந்தை போகுமிடமெல்லாம் கவனித்துக் கொண்டே இருப்பது போன்ற அதீத கவனம் இருந்தது.  அவன் நிமிர்ந்த பார்வையும், சதுர முகமும், கூர்மையான் முகவாயும், விரிந்த தோள்களும், குறுகிய வயிறும், பலம் பொருந்திய கரங்களும், தொடைகளும், உறுதியான பாதங்களும் அவன் வீரத்தையும், கூரான மூக்கும், காதுகளும்,  நிமிர்ந்த புருவங்களும் அவன் அறிவையும், அவன் கருமையான கண்களின் வசீகரமும், உதடுகளின் ஈர்ப்பான புன்னகையும் அவன் ஈர குணத்தையும் பறைசாற்றிக் கொண்டிருந்தன. அவன் திசைக்கு எதிரான திசையில் அவனது வாள் பயிற்சியின் வேகத்தில் விரிந்த கூந்தல் அவனது வசீகரத்தைக் கூட்டியது. அவன் அசைவுகளின் கம்பீரத்தை சிம்மத்திற்கு ஈடாக்கினால் கூட கம்பீரத்தில் குறைத்தே கூறியதாகும்.

இப்படி அற்புதமான தோற்றத்தோடு கம்பீரமாக வாள் பயிற்சியில் இருந்த தன் மகனைப் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் இராதை.

"மகனே" என்ற அழைப்புக்கு திரும்பினான் இராதேயன். அவன் விழிகளில் தாயன்பின் மகிழ்வும் அவள் அரவணைப்பின் கர்வமும் தெரிந்தன.

அவனுக்கு ஏதோ உண்ணக் கொடுத்தவாறே, "என்ன இவ்வளவு மகிழ்ந்திருக்கிறாய் கண்ணே" என்று கேட்கிறாள் தாய். "நான் வெல்லப்போகிறேன் தாயே" என்றான் இராதேயன். "குரு வம்ச இளவரசர்கள் தம் வீரத்தையும் திறனையும் காட்டும் போட்டியொன்று நடக்கப் போகிறது. அங்கு நானும் என் திறனை வெளிப்படுத்தப் போகிறேன்" என்றவன் மார்பு கர்வத்தால் விரிந்திருந்தது.

இராதையின் முகம் சுருங்கிவிட்டது. "அதிரதன் என் கரங்களில் ஆற்றிலிருந்தும் கொண்டு வந்த சின்னஞ்சிறு குழந்தையாகவே அவனை கருதியிருந்தேனே. இவ்வளவு வளர்ந்து விட்டானா? துரோணர் இவனை க்ஷத்திரியன் இல்லை என்றும் பரசுராமர் இவனை பிராமணன் இல்லையென சபித்ததும் இன்றும் என்னைத் துன்புறுத்துகிறதே. இவனுக்கு வில்-வாள் பயிற்சியில் ஆர்வம் ஏன் ஏற்பட்டது? அவனைத் தானே சிறந்தவனாக நிரூபிக்க எது தூண்டுகிறது? அவன் ஒருவேளை க்ஷத்திரியனோ? அல்ல தேவனாகவும் இருப்பானோ? அதிரதனைப் போன்றே தேரோட்டுவதில் இவனுக்கு ஏன் விருப்பமில்லை? சூதர்களும் பாதி க்ஷத்திரியர்கள்தானே. அவர்கள் தேரோட்டுவதில் திருப்தியடையவில்லையா? இவன் க்ஷத்திரிய குலத்தவனாக இருந்திருந்தால் இவன் தாய் இவனை ஏன் ஒதுக்கினாள்? ஒருவேளை தவறான தொடர்பில் பிறந்தவனோ? நான் வளர்த்த என் மகன், க்ஷத்திரிய குலத்தவன் என்றால் அவனுக்கான வழிதான் என்ன? அவன் சூதனாகவும் தன்னை ஏற்க மறுக்கிறான். க்ஷத்திரியர்கள் இவனை ஏற்க மாட்டார்கள். எனக்கே பிறந்திருந்தால் இவனுக்கு இத்தனை துன்பங்கள் வந்திருக்காதே. இந்த எண்ணங்கள் என் மனதை இப்படித் துன்புறுத்துகிறதே"

இப்படி மனதிற்குள் எண்ணியவாறே இராதை பெருமூச்செறிந்தாள். தன் மடியில் ஒரு குழந்தை போல சாய்ந்திருந்தவனின் தலையை பாசத்துடன் கோதினாள்.

===================================

போட்டியரங்கில், துரியோதனன் தன்னை பீமனுக்கு இணையாகவே கருதிய போதும், அர்ஜுனனுக்கு இணை யாருமில்லையே என்ற கவலை அவனுள் இருந்தது. அரங்கில் வசுஷேணனின் திறமைகளைக் கண்டதும் "நீ என் நண்பன். அர்ஜுனனுக்கும் மேலானவன்" என்றறிவித்தான்.

மேலும் வசுஷேணன் அவமதிக்கப்பட்டபோது மதங்கொண்ட யானையை போல துரியோதனன் "வீரமே க்ஷத்திரியனின் திறமை. பிறப்பு இல்லை. வீரர்களின் பிறப்பும் நதிகளின் பிறப்பைப் போலவே யாராலும் அறியமுடியாது. உலகையே எரிக்கும் நெருப்பு தண்ணீரிலிருந்துதான் பிறக்கிறது. தானவர்களை அழித்த இடி டடித்சி என்ற தேவனின் எலும்பாகும். நாம் வணங்கும் தெய்வங்களின் பிறப்பு இரகசியம் யாருமறியாதது. சிலர் அக்னி வம்சமென்றும், ருத்ர வம்சமென்றும், கங்கை வம்சமென்றும் கூறிக்கொள்கிறார்கள். விச்வாமித்திரர் போன்ற க்ஷத்திரியர்கள் சிலர் வீர வாழ்வைத் துறந்து பிராமணர்கள் ஆகி கல்வி-ஞான போதனைகள் செய்து கொண்டிருப்பதை நாமெல்லாம் அறிவோம். இன்று நம் குலகுருக்களான துரோணர் தண்ணீர் குடத்தில் பிறந்தவர், கௌதம வம்ஸியான கிருபாச்சாரியர் பூக்களின் கூடையிலிருந்து பிறந்தவர். பண்டவர்களே! உங்கள் பிறப்பின் இரகசியத்தையும் நான் நன்றாக அறிவேன். பெண்மான் என்றேனும் சிங்கத்தை பெற முடியுமா? அது போலவே வசுஷேணன் போன்ற வீரனின் தாயும் சாதாரணமானவராக இருக்க முடியாது. அவனது தேஜசும், வாளை பிடிக்கும் கரங்களின் அசைவும் அவன் கவச குண்டலங்களும் நமக்கு அறிவிக்கவில்லையா? இவன் அங்க அரசன் மட்டும் இல்லை, இந்த உலகத்தையே ஆளப் பிறந்தவன். இந்த வீரனை அவன் திறமைக்கு நான் தலை வணங்குகிறேன். இங்கு யாருக்கேனும் நான் வசுஷேனனுக்கு அளித்த பெருமைகள், பொறுத்துக்கொள்ள முடியாதவாறு இருந்தால், அவன் வசுஷேணனின் வில்லை தன் காலால் முறித்து காட்டட்டும்" என்று அறைகூவல் விடுத்தான்.

==============================

இராதேயன் தன் தாயிடம் விரைந்து "தாயே. நான் இன்றொரு மன்னன்" என்று அணைத்துக் கொண்டான். இராதையின் மௌனத்தைக் கண்டு "தாயே. உன் விழிகளில் அந்த மகிழ்ச்சி இல்லையே. உங்களுக்கு என்னால் பெருமை இல்லையா?" என்று கேட்டான்.

இராதை "என் அன்பு மகனே. நாம் க்ஷத்திரியர்கள் இல்லை. நம்மிலும் உயர்ந்தவர்களின் நட்பு நமக்கு நன்மையோ பெருமையோ தராது. துரியோதனன் தன் சொந்த சகோதரன்  பீமனுக்கே விஷம் வைத்தவன். அவனைப் பற்றிய நல்ல அபிப்பிராயங்கள் மக்களிடையே இல்லை. அவன் சபையில் உன்னை புகழ தன்னிலும் மூத்தவர்களையே இகழ்ந்தான். அவனுக்கு தன் குடும்பத்து பெரியவர்களையே மதிக்கத் தெரியாது. அவன் மாமன் சகுனி அவனை தவறான வழிக்குத் தூண்டுகிறான். அவன் தந்தையோ பிள்ளைப் பாசத்தில் குருடானவர். அவன் அளித்த மகுடம் சூடினால், அவனுக்கு நன்றிகடன் பட்டவனாவாய். உன் நன்றிக்கு அவன் தகுதியானவனா? அப்படிப்பட்டவனின் இராஜ்ஜியத்தில் ஒரு பகுதியில் நீ அரசனாவது அவசியம்தானா? உனக்கு உன்னைப் பெற்றவர்களோ, குருமார்களோ அளிக்காத பெருமையை ஏன் ஒரு கபடும் வஞ்சகமும் நிரந்தவனிடம் தேடுகிறாய்?" இராதையின் கண்களின் கண்ணீர் வசுஷேணனை அசைக்கவில்லை.

"தாயே. நான் க்ஷத்திரியன் என்ற உணர்வு என் பிறப்பின் இரகசியம். என்னை என் குலத்தாய் ஏன் நீக்கினார்கள் என்பது தெரியவில்லை. என்னைப் பெற்ற தாயின் தவறுக்கு நான் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்? நான் க்ஷத்திரியன். வீரன். திறமிக்கவன். இன்று என் வீரத்திற்கு தகுந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது" என்று மகிழ்ந்தான் இராதேயன்.

"மகனே. உன் தகுதிகளை அங்கீகரித்தவன் உன் வீரத்தை தன் சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்துவான். தன் சகோதரர்களை அழித்து அவர்கள் இராஜ்ஜியத்தை வெல்ல உன்னைப் பகடைக் காயாகவே பயன்படுத்துவான். உன் நண்பன் சமூகத்திற்கும் தன் அரசாங்கத்துக்கும் நன்மை விளைவிக்க உன்னை நண்பனாக்கவில்லை." என்கிறாள் இராதை.

அந்த நேரம் அதிரதன் வருகிறான். இராதேயன் "தந்தையாரே. ஒரு தேரோட்டியாக உங்களை மகிழ்வித்தது எது?" என்று கேட்கிறான்.

புன்னகைத்த அதிரதன் "என் மகனே. பெருமைமிக்க அரசனே. எனக்கு குதிரைகள் பிடிக்கும். அதன் வேகம் சரியான செயல்பாடுகள், என் தேரைக் கட்டுப் படுத்தும் போது அவை அதை புரிந்து கொண்டு எனக்கு பணியும் குணங்கள் எல்லாம் பிடிக்கும். தேரோட்டும் வித்தையில் என்னைவிட நள மகாராஜாவே சிறந்தவராக இருக்க முடியும்" என்கிறார்.

இப்போது தாயை நோக்கி இராதேயன் "அதே போலத்தான் தாயே. இதே ஈர்ப்பு தான் எனக்கும் வில் வாள் மற்றும் ஆளுமை மீது. என் பிறப்போடு இரத்தத்தோடு வந்தவை இவை. என்னால் ஒதுக்கவே முடியாத குணங்களாக இருக்கிறது. என்னால் மற்றவனுக்கு பணிய முடியவில்லை.துரியோதனன் மட்டுமே எனக்கு அரசனாகும் வாய்ப்பளித்தான். அவனே என்னை ஒரு வீரனாகவும், வில்லாலனாகவும் அங்கீகரித்தான். நான் இதை ஏற்கப் போகிறேன்"

"ஆனால் மகனே. நீ பரந்தாமன் கிருஷ்ணனிடம் போயிருந்தால் இதை விட அதிகமாகவே பெற்றிருப்பாய். அவன் ஆதரவில்லாதவரின் ஆதாரம். அவன் எதிரிகளின் பயம். அவன் இதயத்தால் நியாயஸ்தன். புத்தியால் வியாபாரி. அவன் உன் உற்ற தோழனாகவும், போர்க்களத்தில் துணையாகவும், உன் ஆசானாகவும், உன் வழிகாட்டியாகவும், அவன் உனக்கு தேரோட்டியாகக் கூட இருந்திருப்பான். அவன் உன் சகோதரன். என் சகோதரனின் மகனே அவன். அவனிடம் போ வசுஷேணா, உலகம் உன்னை பெருமையுடன் பார்க்கும் அளவுக்கு நீ வளருவாய். நீ விரும்பியது கிடைக்கும். துரியோதனர்கள் உன்னை நாடுவது தன் விருப்பத்திற்காவே அன்றி உன் நலத்திற்காக அல்ல என் மகனே. புரிந்துகொள். ஆனால் கிருஷ்ணனோ நீ நம்பி பாதம் பற்றினால் கைவிடவே மாட்டான். உன் இதயத்தில் வசிப்பான். உன்னைப்போலவே அவன் தர்மவான். வேறு யாரிடமும் கேட்காதே. கிருஷ்ணனிடம் கேள்." என்று கெஞ்சினாள் இராதை.

"தாயே. நீ கண்ணனின் நண்பனாகச் சொல்கிறாய். நானோ அவனை விட மேலானவனாக விரும்புகிறேன். அவனைப் போலவே மற்றவர் கேட்பதையெல்லாம் மறுக்காமல் கொடுக்கிறேன். சூரியன் பாவிகள் மீது, முனிவர்கள் மீதும் ஒரே போலத்தான் ஒளிர்கிறது. இன்று நான் கண்ணனிடம் போய் இராஜ்ஜியம் கேட்டால், துரியோதனனுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? அவன் சுயநலத்திற்கு என்னை நண்பனாக்கினான் என்கிறாய், நான் என் சுயநலத்திற்கு கண்ணனை நண்பனாக்கினால் அது தகுமா? நான் கிருஷ்ணனை மதிக்கிறேன். நான் கேட்காமலேயே துரியோதனன் எனக்கு இராஜ்ஜியம் அளித்தான். கைமாறாக நான் என்ன வேண்டும் என்று கேட்ட பிறகுதான் என் நட்பையே கேட்டான் அவன். என் நட்பை ஏற்கனவே அவனுக்காக வாக்கு கொடுத்துவிட்டேன். கிருஷ்ணன் நல்லோர் நட்பை மட்டுமே பேண வேண்டுமென்றால், இந்த உலகில் யார்தான் நல்லவர்? கண்ணனின் கொடுக்கும் முன் நல்லது கேட்டதை பார்த்தா கொடுக்கிறார்? நானும் அதேபோல நல்லவன் கேட்டவன் என்றெல்லாம் யோசித்து வாக்கு கொடுக்கவில்லை. ஈகை என் தர்மம். என் நோக்கம் வீரம். இவையே என் வாழ்கையின் குறிக்கோள்கள். ஒருநாள் கிருஷ்ணனே என்னிடம் வந்து தனக்கு ஏதும் அளிக்கும்படி கேட்பான். இதுவே என் நெஞ்சின் ஆவல். அன்று நான் அவனைவிட ஈகையில் சிறந்தவன் என்றறியப்படுவேன்" என்று பெருமையுடன் கூறிய அங்க அரசன் தன் தாயின் பாதங்களைத் தொட்டு வணங்கினான். அவள் விழிகள் கண்ணீரில் நனைந்தன.

"என்னுயிரே. என் உடலின் ஒவ்வொரு அணுவும் உன்னைக் காக்கட்டும்." என்று வாழ்த்தினாள் அன்னை.

========================

அப்படியே கர்ணனைக் குறித்த இன்னொரு பதிவு இங்கே பாருங்கள்.

.

கர்ணன் என் காதலன் - 2

வசுஷேணன் என்று பெயரிடப்பட்டாலும் அவன் கர்ணன் என்றே உலகறியப்பட்டான்.

ஜமதக்னி முனிவரின் மகனான பரசுராமரைப் பற்றியறிந்த பிறகு, கர்ணனுக்கு, முனிவராக இருந்தாலும், தலைசிறந்த போர்வீரராகத் திகழும் அவரைப் பற்றிய விபரங்களை அறிவதில் ஆர்வமேற்பட்டது. பரசுராமர் இந்திய நாட்டை இருபத்தியொரு முறை முழுமையாக விஜயம் செய்திருக்கிறார். அவரை எந்த க்ஷத்திரியனாலும் வெல்ல முடியாது. அவர் தன் வில்லில் நாணேற்றினால் எதிரிகள் நடுங்குவார்கள். க்ஷத்திரியர்களின் மேல் உள்ள வெறுப்பால், பிராமணர்களுக்கு மட்டும் வில் வித்தை பயிற்றுவித்து வந்தார். வில் வித்தையில் உள்ள நுணுக்கங்கள் அனைத்தையும் அறிந்தவராக இருந்த அவரை தன் குருவாகவே பாவித்து வளர்ந்தவன் கர்ணன்.அவரிடமே மாணவனாகி விற்பயிற்சி பெற விரும்பிய கர்ணன் மனதிற்குள் சூதவம்ஸியான தன்னை மாணவனாக அவர் ஏற்பாரா என்ற கவலையும் இருந்தது. இதனால், கர்ணன் தான் ஒரு பிராமணன் என்று பொய்யுரைத்து அவரிடம் வில்வித்தை பயில்கிறான். குருவை மிஞ்சும் சிஷ்யனாகிறான். ஒருநாள், பரசுராமர் இவன் மடியில் சாய்ந்து உறங்குகையில், கர்ணனின் தொடையை இந்திரன் தேள் ரூபத்தில்  துளைக்கிறான். இதனால் உண்மையறிந்த பரசுராமர் அவனுக்கு சாபமிடுகிறார்.


ராம்தாரி சிங் தினகர் என்பவர் எழுதிய "ரஷ்மிரதி" என்ற தொகுப்பில் இருந்து ஒரு பாடல். இந்த முழுத் தொகுப்பும் இங்கே ஹிந்தியில் இருக்கிறது.

தேஜஸ்வி சம்மான் கோஜ்தே நஹி கோத்ரா பத்லா கே
(உயரிய பெரியோர்கள் பெருமையை கோத்திரம் சொல்லித் தேடமாட்டார்கள்)
பாதே ஹை ஜக் மே பிரஷஸ்தி அப்னா கர்தப் திக்லா கே
(உலகின் முன் தன் திறமையைக் காட்டி பிரபலம் ஆகிறார்கள்)
ஹீன் மூல் கீ ஓர் தேக் ஜக் கலத் கஹெ யா டீக்
(உலகம் தவறென்றும் சரியென்றும் சொல்லால் கூட, ஒரு செயலால் விளையும் பலனை மட்டும் நோக்க வேண்டும்)
வீர் கீன்ச் கர் ஹீ ரஹதே ஹை இதிகாஸோமே மே லீக்
(வீரர்கள் இதிகாசங்களில் தன் பெயரை எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்)
சூத்-வன்ஷ் மே பல, சகா பீ நஹி ஜனனி கா க்ஷீர் 
(சூத வம்சத்தில் வளர்ந்த இவன் தன்னைப் பெற்றவளின் தாய் பாலை கூட அருந்தவில்லை)
நிக்லா கர்ண ஸபி யுவகோ மே தப் பீ அத்புத் வீர்
(இப்படி இருந்தும் கூட அனைத்து இளைஞர்களிலும் கர்ணனே அற்புதமான வீரனாக இருந்தான்)
தன் ஸெ சமர்ஷூர், மன் ஸெ பாவுக், ஸ்வபாவ் ஸெ தானி
(உடலால் பரம வீரன், மனத்தால் உணர்வுமயமானவன், குணத்தால் தானியும் ஆவான்)
ஜாதி-கோத்ர கா நஹி, ஷீல் கா, பௌருஷ் கா அபிமானி
(ஜாதி, கோத்திரத்தால் உயர்ந்தவன் இல்லை என்றாலும், ஆண்களில் விரும்பத்தகுந்தவன் அவனே)

என் பதின்பருவத்தில், கர்ணனை முதலில் ராம்தாரி சிங் தினகர் அவர்கள் எழுதிய ரஷ்மிரதியில்தான் பார்த்தேன். கண்டதும் காதல் என்பார்களே, அது இவர் எழுத்தில் கண்ட கர்ணன் மீது ஏற்பட்டு விட்டது. :))

கர்ணனின் வீழ்ச்சிக்கு காரணமானவை:
  1. குந்திக்கு துர்வாசரின் வரம், கர்ணனுக்கு கிடைத்த முதல் சாபம். பிறப்பெனும் சாபம். பிறப்பால் அவனே ஹஸ்தினாபுர அரியணைக்கு உரிமை கொண்டவன். பாண்டவர்களில் அவனே மூத்தவன். பிறப்பின் இரகசியம் தெரியாததால், அவன் பிறப்பே அவனுக்கு சாபமானது.
  2. தக்க சமயத்தில் திறமைகள் உதவாமல் போக வேண்டும் என்ற பரசுராமரின் சாபம்
  3. அறியாமல் விலங்கென நினைத்து, பசுவைக் கொன்றதால், பரம எதிரியுடன் போரில் இருக்கும் போது எல்லாம் இருந்தும் பலனின்றி உதவியின்றிப் போவான் என்ற பிராமண சாபம்.
  4. ஒரு பெண்குழந்தை கேட்டதால், பூமியைப் பிழிந்து நெய்யெடுத்ததால், "எதிரிகளிடம் சிக்கி அழியும் வண்ணம் தேர் பூமியில் புதைய வேண்டும்" என்ற பூமாதேவியின் சாபம் 
  5. யாசகனுக்கு தன் கவச குண்டலங்களை தானமிட்டது 
  6. துரோணரின் சதியால், சக்தியாயுதத்தை கடோத்கஜன் மீது எய்து வீணடித்தது
  7. குந்திக்கு செய்த இரு சத்தியங்கள், அதில் ஒன்றான நாகாஸ்திரப் பிரயோகம்
  8. கூடவே இருந்து வஞ்சித்த தேரோட்டி சல்லியன், இவன் வார்த்தைகள் கர்ணனை சோர்வுறச் செய்தன.
  9. அபிமன்யுவின் மரணம் கொடுத்த வேதனை
  10. பதினேழாம் நாள் காந்தாரி, கர்ணனை ஆசிர்வதிக்க மறுத்தல்
கர்ணனுக்கும் குந்திக்கும் இடையேயான சம்பாஷணைகள் 
(மொழி பெயர்க்கப்பட்டது)
கர்ணன் : புனிதமான ஜானவி நதிக்கரையில், அந்தி சாயும் பொழுதில், தேரோட்டி அதிரதன் மற்றும் இராதையின் மகனான கர்ணன் உங்களை வணங்குகிறேன். மாதரசியே. நீங்கள் யார்?

குந்தி(மனதிற்குள்): இளைஞனே. முதன்முதலில் இந்த உலகிற்கு உன் அறிமுகம் என்னாலே ஏற்பட்டது. உன் தாயானவள் நான்தான், ஆனால் அதை உன்னிடம் கூறவே வெட்கப்படுகிறேன்.

கர்ணன் : மரியாதைக்கு உரியவரே, சூரியனைக் கண்ட பனி போல, உங்கள் குனிந்த இமைகளின் ஒளியினால் என் இதயம் உருகுகிறது. உங்கள் குரல் என் இதயத்தில் பூர்வ ஜன்ம நினைவுகளைக் கிளறி துன்புறுத்துகிறது. உங்களை யாரெனத் தெரியவில்லையே? பெண்மணியே. உங்களுக்கும் எனக்குமான அந்த பந்தம்தான் என்ன? மர்மமாக உள்ளதே?

குந்தி: பொறுமையாக இருக்க. சூரியன் அஸ்தமிக்கட்டும். இருள் சூழட்டும். வீரனே. நான் குந்திதேவி.

கர்ணன்: அர்ஜுனனின் தாயான குந்திதேவி நீங்களோ?

குந்தி: அர்ஜுனனின் தாய்தான். ஆனால் அதற்காக என்னை வெறுத்துவிடாதே. நீ சிறுவயதில் ஹஸ்தினாபுர போட்டி அரங்கிற்குள் தயங்கித் தயங்கி மெல்ல வந்தாயே, அது இன்றும் என் நெஞ்சில் இருக்கிறது. நட்சத்திரங்களுக்கிடையே சூரியன் கிழக்கில் மெல்ல உதிப்பதைப் போன்றே இருந்த அந்தக் காட்சி என் மார்பில் சொல்லவொண்ணாத் துயரத்தை விளைவித்தது. அர்ஜுனன் தாயாக நானே திரை மறைவிலிருந்து உன்னை கண்டு கொண்டிருந்தேன். உன் கரங்களை என் பார்வை முத்தமிட்டுக் கொண்டிருந்தது. கிருபாச்சாரியார் உன் தந்தையின் பெயரை அறிவிக்கச்சொல்லி, "க்ஷத்திரியன் அல்லாதவன் அர்ஜுனனுடன் போட்டியிடத் தகுதியில்லாதவன் என்றறிவித்த போது, நீ வாயடைத்து, வெட்கத்தால் முகஞ்சிவந்து, தலை குனிந்து நின்றாயே கர்ணா. நான் அன்றிலிருந்து அவமானத்தின் நெருப்பில் எரிந்து கொண்டிருக்கிறேன், அர்ஜுனனின் தாயான நான்தான் அவள். துரியோதனனை ஆசிர்வதிக்கிறேன். அவன் புண்ணியன், உன்னை அங்க அரசனாக்கினான். அவனை வாழ்த்துகிறேன். உனக்கு முடி சூட்டப்பட்ட பொழுது, என் கண்களில் கண்ணீர் பெருகி, உன்னை அணைக்கத் தோன்றியது. அதிரதன் அதிருஷ்டசாலி, அவனால் உன்னை பெருமையுடன் அணைத்துக்கொள்ள முடிந்தது. நீயும் அரசனான பெருமிதத்தில் தலை நிமிர்ந்திருந்தாய்.இலட்சக்கணக்கான பிரஜைகளின் ஆரவாரத்தில் திளைத்துக் கொண்டிருந்தாய். உன்னை வணங்கிய உன் சாரதியை தந்தையே என்று அழைத்து அவரை வணங்கினாய். குரூரத்தோடு புன்னகைத்துக் கொண்டிருந்த பாண்டவர்களின் இடையே அமர்ந்து, வீரனே, உன்னை வாழ்த்திக் கொண்டிருந்த பெண், அர்ஜுனனின் தாயான நான்தான்.

கர்ணன்: அப்படியா. மகிழ்கிறேன் மாதரசியே. உங்களை வணங்குகிறேன். நீங்கள் இந்தப் போர்க்களத்தில் ஏன் தனியாக இருக்கிறீர்கள். நான் கௌரவர்களின் சேனாதிபதி.

குந்தி: உன்னிடம் ஒரு வேண்டுகோளோடு வந்துள்ளேன். என்னை வெறும் கையேடு அனுப்பிவிடாதே.

கர்ணன்: வேண்டுகோளா? அதுவும் என்னிடமா? அப்படி நீங்கள் வேண்டினால் தர்மத்திற்கு உட்பட்ட எதையுமே தங்கள் காலடியில் சமர்பிப்பேன்.

குந்தி: உன்னை நான் திருப்பி அழைத்துப் போக வந்துள்ளேன்.

கர்ணன்: அப்படி நீங்கள் என்னை எங்கு அழைத்துப் போவீர்கள்?

குந்தி: உனக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் என் இதயத்திற்கு. என் தாய்மடிக்கு உன்னை அழைக்கிறேன்.

கர்ணன்:
பெண்மணியே. ஏற்கனவே நீங்கள் ஐந்து மகன்களால் வரம் பெற்றுள்ளீர்கள். நானோ சாதாரண அரசன், எந்தப் புகழும் இல்லாதவன். உங்கள் இராஜ்ஜியத்தில் எனக்கேது இடம்? எனக்கென்ன இடமளிப்பீர்கள்?

குந்தி: எல்லோரையும் விட மேன்மையான இடம். உன்னை என் மகன்களுக்கெல்லாம் மூத்தவனாக்குகிறேன்.

கர்ணன்: எந்த உரிமையில் அப்படிப்பட்ட தலை சிறந்த இடத்தை அளிக்கிறீர்கள்? எப்படி என்று கூறுங்கள்? ஏற்கனவே ஏமாற்றப்பட்ட அந்த இராஜ்ஜியத்தின் சொத்துக்களில் எந்தப் பகுதியை நான் எனதாக்க முடியும், அவை பாண்டவர்களுடையது. மேலும் அவர்களுக்கே உரிமையான தாயன்பை நான் எப்படிப் பெற முடியும்? அதிகாரத்தால் பெற ஒரு தாயின் இதயம் சூதாட்ட களமில்லை, அந்த உரிமை இறைவனின் நற்கொடை.

குந்தி: ஐயோ என் மகனே. அந்த இறைவனின் நற்கொடையால் உரிமையாக அன்றொரு நாள் நீ என் மடிக்கு வந்தாய். இன்று அதே உரிமையில் மீண்டும் வந்து விடு. கவலைப் படாதே. நீ உனக்கான இடத்தை உன் சகோதரர்களிடம் எடுத்துக்கொள், உன் தாய் மடியை மீட்டுக்கொள்.

கர்ணன்: மரியாதைக்குரிய பெண்மணியே. நான் கனவில் காணுவது போல் கேட்கிறது உங்கள் குரல். இருள் நாலாபுறமும் சூழ்ந்து விட்டது. நான்கு ஜாமம் கழிந்து விட்டது. நதிகளும் ஓடைகளும் அமைதியாகிவிட்டன. நீங்கள் என்னை ஏதோ மறந்து விட்டக் கனவுலகிற்கு அழைக்கிறீர்கள். ஏதோ கடந்தகால உண்மை போல உங்கள் வார்த்தைகள் என் இதயத்தை மயக்குகிறது. நானே இழந்துவிட்ட என் குழந்தைப் பருவம் போல, எனக்கு மறந்துவிட்ட கருவறையின் இருள் இன்றெனைச் சுற்றி வளருகிறதே? ராஜ மாதா. உங்கள் அன்புக்கு நன்றி. இது கனவோ, நனவோ, உங்கள் கரங்களை என் நெற்றியில், கன்னத்தில் ஒரு நிமிடம் வையுங்கள். என்னைப் பெற்ற தாயார் என்னை விட்டுச் சென்றதாக நான் அறிவேன். மெல்ல மெல்ல நடந்து, அன்புடன் என் தாய் என்னிடம் வருவதாக, எத்தனை இரவுகளில் இப்படிப்பட்டக் கனவுகளை நான் கண்டிருப்பேன்.  அவளை என் கண்ணீருக்கூடே  பார்த்திருக்கிறேன். அவளிடம் கெஞ்சியிருக்கிறேன் "தாயே. உங்கள் முகத்திலிருக்கும் திரையை விலக்குங்கள்" என்று என் குரல் ஒலித்ததும், அவள் மறைந்து விடுவாள். என்னை கண்ணீரில் நனைத்துவிட்டு, பேராசையின் தீராத தாகத்தோடு அந்தக் கனவும் மறையும். பாகீரதி கரையில், போர்க்களத்தில், இன்றைய இரவில், அந்தக் கனவேதான் நினைவாகி இன்றும் பாண்டவர்களின் தாயாக வந்திருக்கிறதோ, ஐயோ! பெண்மணியே, அந்தக் கரையில் பாண்டவர்களை பாசறை உள்ளது. அந்த வெளிச்சம் இக்கரைக்கு வருகிறது. என் கூடாரம் வெகு தொலைவில் இல்லை. கௌரவர்களின் பல்லாயிரக்கணக்கான குதிரைகளின் குளம்பொலிகல் ஓய்ந்து கொண்டிருக்கிறது. நாளை காலை பெரும் போர் மூளும் இந்தச் சூழலில், அர்ஜுனனின் தாயான உங்கள் வாயால், என் தாயின் குரலை நான் ஏன் இன்றிரவு கேட்க வேண்டும். அர்ஜுனனின் தாய் வாக்கில் என் பெயர் ஏன் ஒரு அற்புதமான இசை போல ஒலிக்க வேண்டும்? என் இதயம் பாண்டவர்களை சகோதரர்களே என்றழைத்து அணைக்கவும் ஓடுகிறதே?

குந்தி: அப்படியென்றால் இப்போதே என்னுடன் வந்துவிடு.

கர்ணன்: சரி தாயே. நான் உங்களுடன் வருகிறேன். எந்தக் கேள்வியும் கேட்க மாட்டேன். பெண்மணியே. நீங்கள் என் தாயாவீர்கள். உங்கள் அழைப்பு என் ஆன்மாவை எழுப்புகிறது. என்னால் போர் முரசுகளை கேட்க முடியவில்லை. சங்கு முழக்கங்கள் என் காதில் விழவில்லை. போரின் வன்மம், வீரனுக்கான புகழ், வெற்றி தோல்விகள், எல்லாமே பொய்யெனத் தோன்றுகிறது. என்னை அழைத்துக் கொள்ளுங்கள். நான் எங்கு வரவேண்டும்?

குந்தி: அங்கே, அக்கரைக்கு, வெளிறிய மணல் மீது கூடாரங்களின் விளக்கொளி ஜொலிக்கிறதே, அங்கு.

கர்ணன்: அங்கு, தாயில்லாத ஒரு மகன், தன் தாயை எப்போதைக்குமாக நிரந்தரமாகப் பெறுவான் இல்லையா? அங்கு ஒரு துருவ நட்சத்திரம் உங்களின் அன்பு நிறைந்த விழிகளை இரவெல்லாம் விழித்திருக்க வைக்கும். பெண்மணியே! இன்னொரு முறை நான்தான் உங்கள் மகன் என்று கூறுங்கள்.

குந்தி: மகனே.

கர்ணன்: அப்படியென்றால், என்னை அவமானமாகக் கருதி ஏன் விட்டெரிந்தீர்கள்? என் குடும்பத்தின் புகழ் எனக்கில்லாமல் செய்தீர்கள். என் தாயின் அன்புப் பார்வை என் மேல் படாமல் செய்தீர்கள். இந்த இரக்கமற்ற குருட்டு உலகின் முன் என்னை ஏன் தனியாக்கினீர்கள்? என்னை ஏன் நதியின் ஓட்டத்தில் திரும்பி வரவே முடியாதளவு தூரத்திற்கு அனுப்பினீர்கள்? என் சகோதரர்களிடமிருந்து விலக்கி வைத்தீர்கள்? அர்ஜுனனுக்கும் எனக்குமான இடைவெளிக்கு நீங்களே காரணம். சிறு வயதிலிருந்து வளர்ந்திருக்க வேண்டிய சகோதர பாசம், தவிர்க்க முடியாத பகைமையாக மாறியது. இந்த வஞ்சம் விஷமாகக் கசக்கிறது எனக்கு. தாயே! இதற்கெல்லாம் உங்களிடம் பதில் இல்லையா? உங்களின் அவமானத்தை நான் உணர்கிறேன். அந்த அவமானம்  இந்த இருளிலும் வார்த்தைகளே இல்லாமல் என் நரம்புகளைச் சுடுகிறது. என் கண்கள் இருட்டுகிறது. அப்படியே இருக்கட்டும். என்னை விட்டெறிந்த காரணத்தைக் கூறவே வேண்டாம். தாயன்பு ஒன்றேதான் இறைவனின் முதல் அன்பளிப்பு. அந்த புனிதமான ஒன்றை உங்கள் குழந்தையான என்னிடமிருந்து ஏன் பறித்தீர்கள்? இதற்கும் நீங்கள் பதில் சொல்ல விரும்ப மாட்டீர்கள். ஆனால் இப்போது மட்டும் என்னை ஏன் திரும்பப் பெற வந்துள்ளீர்கள் என்று மட்டும் சொல்லுங்கள்.

குந்தி: மகனே. உன் வார்த்தைகள் என்னை ஆயிரம் இடிகள் போல துளைக்கின்றன. என் இதயத்தை தூள் தூளாக்குகின்றன. உன்னை விலக்கிய சாபம் இன்றும் என்னை துன்புறுத்துகிறது, அதனாலோ ஏன் இதயம் ஐந்து குழந்தைகள் இருந்தும் குழந்தைக்காக ஏங்குகிறது. மகனே. உன்னை ஏந்திக் கொள்ள என் மனம் தவிக்கிறது. இந்த உலகில் உன்னையே துழாவி தேடியது என் கரங்கள். தனித்து விடப்பட்ட அந்த குழந்தைக்காகவே என் இதயமெனும் விளக்கு ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. அதன் ஜோதி என்னையே எரிக்கிறது. நான் மிகவும் துரதிருஷ்மானவள். உன் வாய் மழலை பேசும்முன்னே உனக்கு கொடுமையானதொரு துரோகம் செய்தேன். அதே வாயால் இந்த கொடூரமான தாயை மன்னித்துவிடு மகனே. உன் மன்னிப்பின் ஜ்வாலை என் இதயத்தில் இன்னும் ஏதும் கெட்ட எண்ணங்கள் இருந்தால் அவற்றை எரிக்கட்டும். என் பாவங்களை சாம்பலாக்கி என்னை புனிதமாக்கட்டும்.

கர்ணன்: தாயே. சிறிது உங்கள் பாததூளியைக் கொடுங்கள். என் கண்ணீரால் அவற்றைத் துடைக்கிறேன்.


குந்தி: மகனே. உன்னை என் மார்போடு அணைத்துக்கொள்ள மட்டும் இன்று வரவில்லை. உன்னை உன் உரிமையான இடத்திற்கு கூட்டிச் செல்லவே வந்துள்ளேன். நீ சூதபுத்திரன் இல்லை. நீ ஒரு க்ஷத்திரியன். உன் அவமானங்களைத் துடைத்து எறிந்துவிட்டு, உன் ஐந்து சகோதரர்களுக்கு மூத்தவனாக திரும்பி வா.

கர்ணன்: ஆனால் தாயே. நிதர்சனத்தில் நான் சூதபுத்திரன்தானே. இராதையே என் தாய் என்ற அந்தப் பெருமை  எனக்கு எல்லாவற்றையும் விட மேலானது. பாண்டவர்கள் பாண்டவர்களாகவே இருக்கட்டும். கௌரவர்களும் அப்படியே இருக்கட்டும். எனக்கு யார் மீதும் வருத்தம் இல்லை. வஞ்சமில்லை.

குந்தி: உன் புஜபலத்தால் உன் இராஜ்ஜியத்தை மீட்டெடு என் மகனே. யுதிஷ்டிரன் உனக்கு சாமரம் வீசுவான். பீமன் உனக்கு குடை பிடிப்பான். அர்ஜுனன் உனக்கு சாரதியாவான். தௌமிய மகரிஷி வேத மந்திரங்களை உச்சரித்து புரோதிதம் செய்யட்டும். எதிரிகளை வெல்பவனே, நீ உன் உறவுகளுடன் மகிழ்ந்திருப்பாய். யாருடனும் பங்கு கொள்ளாத பேரரசனாக அலங்கரிக்கப்பட்ட அரியணையில் அமர்ந்து நீயே இந்த இராஜ்ஜியம் முழுதும் ஆள்வாய்.

கர்ணன்: அரியணை? தாயே. அன்று தாய்மையின் அன்பை மறுத்த நீங்கள், இன்று எனக்கு அரியணையின் உத்திரவாதங்களை அளிக்கிறீர்களா? இதே உரிமைகளையும், இராஜ்ஜியங்களையும் என்னிடம் இருந்து நீக்கியது நீங்கள்தானே. என்னிடமிருந்து பறிக்கப்பட்ட எதையும் நீங்கள் திருப்பியளிக்கவே முடியாது. நான் இழந்தவை இழந்தவைதான். அவை உங்கள் கட்டுப்பாட்டினின்றும் மீறிவிட்டன. நான் பிறந்தபோது, தாயே, என் தாயிடமிருந்து, சகோதரர்களிடமிருந்து, இராஜ குடும்பத்திலிருந்து ஒரே நிமிடத்தில் என்னைப் பிரித்துத் தூக்கி எறிந்தீர்கள். ஆனால் இன்றோ, நான் என்னை வளர்த்த அன்பே உருவான அன்னை, தேரோட்டி குலத்தை சேர்ந்த இராதையை ஏமாற்றி, பெருமைக்காக இராஜகுலத்தோடு இணைவேனென்றும், அரியணையின் ஆசையில் உங்களோடு வந்து விடுவேன் என்றும் நீங்கள் நினைத்தால், அவற்றை நான் மறுக்கிறேன்.

குந்தி: நீ சுத்த வீரன்தான். மகனே. தர்மவானே. உன் நியாயம் எவ்வளவு உறுதியாக இருக்கிறது? அன்று உதவியற்ற ஒரு பச்சிளங்குழந்தையை விட்டுச் சென்றபோது, அவன் இப்படிப்பட்ட பேராற்றல்களைப் பெற்று வீரனாவான் என்று யாருக்குத் தெரியும்? அவனே மீண்டும் திரும்பி இருள் சூழ்ந்த பாதை வழியாக, தன் கையில் குரூரமான ஆயுதங்களை ஏந்தி, தன் தாய்க்குப் பிறந்த தன் சகோதரர்களையே நோக்கி வருவான் என்று யாருக்குத் தெரியும்? இதென்ன சாபம்?

கர்ணன்: தாயே. கலங்க வேண்டாம். நான் இன்றே சொல்கிறேன். பாண்டவர்கள்தான் வெல்வார்கள். இந்த இரவின் சாயலில் இந்தப் போரின் முடிவில் பாண்டவர்களின் வெற்றி எனக்குத் தெளிவாகத் தெரிகிறது.  இந்த அமைதியான, சலனமற்ற பொழுதில், எல்லையே இல்லாத ஆகாசத்தின் ஊடே வெற்றியடையப் போகாத ஒரு முயற்சி, நம்பிக்கையில்லாத உழைப்பின் வேர்வைத்துளிகள் போலவே நான் இருக்கும் இந்தப் போர்களத்தின் கடைசி நாளன்று வெறும் அமைதியும் வெறுமையும் மட்டுமே எனக்குத் தெரிகிறது. இந்தப் பக்கம் தளர்ந்து கொண்டே வருகிறது. பாண்டு புத்திரர்கள் வெல்லட்டும். அவர்களே அரசர்களாகட்டும். இந்தக் கூடாரத்தை விட்டு என்னை வரச் சொல்லாதீர்கள். நான் நம்பிக்கைகள் தூளாகித்  தோற்பவர்களின் பக்கமே இருந்துவிட்டுப் போகிறேன். நான் பிறந்த அன்றைய இரவில் என்னைத் தனியாக, பெயரின்றி, வீடின்றி இவ்வுலகில் விட்டுச் சென்றீர்கள். அதே போல இன்றைய இரவும், இரக்கமே இல்லாமல், உங்கள் இதயத்தைக் கொன்றுவிட்டு, என்னை விட்டுச் சென்று விடுங்கள் தாயே. என்னை தோற்கவிடுங்கள், புகழே இல்லாமல், பெருமையில்லாதவனாக தனியனாக்கிச் செல்லுங்கள் தாயே. நீங்கள் போவதற்கு முன், ஒரே ஒரு வரமளித்துச் செல்லுங்கள், நான் சுத்த வீரனாக, மார்பில் காயம் கொண்டு இறக்கும் வரை வெற்றியின் நம்பிக்கை என் இதயத்தைவிட்டு நீங்கக் கூடாது என்ற ஒரே வரமளியுங்கள்.



(தொடரும்)
.