ஓடுகிற நாயும் துரத்துகிற நாயும்

 ஓடுகிற நாயும் துரத்துகிற நாயும் - விதூஷ் 
நீங்கள் எப்போதாவது நாய்களை கவனமாகப் பார்த்ததுண்டா? நாய்களில் மூன்று வகை உண்டு. ஒரு செல்லப் பிராணி, இன்னொன்று வளர்ப்பு நாய், மற்றொன்று தெரு நாய். முதல் வகை செல்லப் பிராணிகள். ஐந்து நட்சத்திர வீடுகளில் வசிக்கும் வரம் பெற்றவை. வெல்வெட் படுக்கையில் உட்கார்ந்து, பட்டுப் படுக்கையில் தூங்கும். எஜமானி மடியில் செல்லம் கொஞ்சித் தவழும். இளவரசர்களையும் இளவரசிகளையும் கூட சாய்த்து அடிக்கும் வசதிகள் கிடைக்கப் பெற்றவை. இது போன்ற நாய்களை யார் பார்த்தாலும் பல பிறவிகளின் புண்ணியத்தின் பலனாகச் செல்ல நாயின் வாழ்வை அடைந்ததாக உணர்வான். இரண்டாவது வகை வளர்ப்பு நாய்கள், வீடுகளைக் காக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவை. ஒருவகையில், அவர்கள் தினசரி கூலியாள் மாதிரி. ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு கிடைக்கும். இதைவிட மலிவான கூலியாள் கிடைக்காததால், நாய்க்கும் எஜமானர்களின் தேவைக்கேற்ப மரியாதையும் கிடைக்கும்.

கடைசியான வகையறா தெருநாய்கள் தான் ரொம்ப முக்கியமானது. தெருநாய்கள் கும்பலாக வாழ்கின்றன. திடீரென்று வாலை ஆட்டிக் கொண்டு ஓடத் தொடங்கும். அவை மனிதனைப் பற்களால் கடிக்கின்றன. மனிதன் அவர்களுக்கு பயப்படுகிறான். இதுபோன்ற 4-6 கொடூர நாய்கள் வாழத் தொடங்கும் தெருவில், மாலைக்குப் பிறகு அந்தத் தெருவில் யாரும் செல்லத் துணிவதில்லை. யாராவது சென்றால், அவரைப் பார்த்து குரைக்கின்றன. அவற்றின் குரைப்பால், தெருவில் நுழைந்தவர் திரும்பி ஓடிச் செல்ல நேர்கிறது. தெருநாய்களின் ஆதரவால்தான் ரேபிஸ் ஊசி வியாபாரம் நடக்கிறது. அவர்கள் மாதந்தோறும் யாரையாவது கடித்துக் கொண்டே இருக்கின்றன. நாய் கடித்தால் ரேபிஸ் என்ற நோயை உண்டாக்குகிறது என்பது உலகம் அறிந்ததே. தெருவில் வெறியோடு திரியும் இந்த தெருநாய்களால் தான் நாய்களுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது.

தெருநாய் எந்த அர்த்தமும் இல்லாமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கும். சாலைக்கு அந்தப் பக்கம் மெதுவாக நடந்து போய் கொண்டிருக்கும். சில நேரம் தேமே என்று படுத்துக் கொண்டிருக்கும். திடீரென்று என்ன நினைக்குமோ என்னவோ, திடு திடுவென்று வேகமாய் ஓடி வந்து 'த்தப்படி த்தப்படி' என்று மூச்சிரைக்க சாலையைக் கடந்து இந்தப் பக்கம் ஓரமாய் படுத்துக் கொள்ளும். அதற்கு அங்கேயே படுத்துக் கிடந்தால் என்ன? எதற்கு இப்படி ஓடி வரணும்? 

சேருமிடத்தின் முகவரியோ, பாதைகள் பற்றிய அறிவோ இல்லை. விதி எங்கு அழைத்துச் சென்றதோ, அங்கே சென்று கொண்டு இருக்கும். தெருநாய்க்கு நடக்க வழி இல்லை, சிவனே என்று உட்காரும் பழக்கமுமில்லை. அதன் வாழ்க்கையின் எந்த தத்துவத்தையும் கொண்டிருக்கிறது என்று தெரியாது. அதை வைத்துக் கொண்டு எதையும் முடிவு செய்ய முடியாது. அது எப்படி இருக்கும் என்று எதையும் எதிர்பார்க்க முடியாது. 

மாறாக, செல்ல நாய்களைப் பாருங்கள்! வீட்டை விட்டு வெளியே வரும்போது, குளித்துவிட்டு, தலைமுடியைக் கோதி வாரி விட்டு என்று, இப்படித்தான் ஸ்டைலாக சாலையில் நடக்கின்றன! சில நாய்கள் ஜட்டி கூட போட்டிருக்கின்றன. இதோ பார், செல்ல நாய் ஒன்று வருவது தூரத்தில் தெரிகிறது. கழுத்தில் பட்டை, ஓனர் கையில் பிடித்து வைத்திருக்கும் செயின் மட்டுமே அவைகளின் அடையாளம் என்பதல்ல. உண்மையில் நாகரீகம் என்றால் அதை வளர்ப்பு நாய்களிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நாகரீகத்தின் பெயரையும் சுவடுகளையும் துடைத்தழிக்க தெருநாய்கள் சபதம் எடுத்தது போலாகும்.

தெருநாய்கள் இருந்தாலே எல்லா இடங்களிலும் ஒரு பிரச்சனை. கிராமம் என்ன, நகரம் என்ன, தெருவென்ன, சாலை என்ன ! நீங்கள் எங்கு சென்றாலும் அது தனியாகத் தெரியும். ஒரு நல்ல குணமுள்ள மனிதர் ஒருவர் மகிழ்ச்சியான மனநிலையில் எங்கோ செல்கிறார். இவரைப் போன்றவர்களைக் கண்டால் தெருநாய்களுக்குப் பொறுக்காது, அவர் தெனாலி ரக பயமெண்டால் பயம் அடையும் வரைக்கும் துரத்திச் செல்லும். திடீர் என்று நின்று கொண்டு குப்பையை கிளறும்.

பொதுவாக தெருநாய்கள் கூட்டமாக காணப்படும். நான்கைந்து தெருநாய்கள் ஒன்று கூடினால் போதும். ஒன்றாகவே நடக்க ஆரம்பிக்கின்றன. அவை எதற்கும் யாரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. அவற்றின் உலகம் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. எங்கு திரும்பினாலும் நாய்கள் நாய்கள். நாய்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. ஏழு-எட்டு நாய்கள் கொண்ட பெரிய அளவிலான குழுக்களும் இருக்கின்றன. ஆனால் எந்த நாய் எந்தக் கூட்டத்தைச் சேர்ந்தது என்று தெரிவதில்லை. தொலைவில் இருந்து அதை அறிய முடியாது, நெருங்கிப் போனால் ஆபத்து. சில நேரங்களில் மனிதர்களை வேறுபடுத்திப் பார்ப்பது போல் நாயையும் நாயையும் வேறுபடுத்துவது மிகவும் கடினம். தூரத்தில் இருக்கும் இரண்டு அல்லது நான்கு நாய்களை வேறுபடுத்திப் பார்ப்பது என்பது மிகவும் கடினமான பணி. 

சில தெருநாய்கள் நிற்கக் கூட நேரமில்லாமல் அதிகமாக அலைந்து திரிகின்றன. அவற்றைப் பார்க்கும்போது விளையாட்டுத்தனமான சுபாவத்துடன் நடமாடுவதைக் காணலாம். அவற்றைப் பார்க்கும்போது, யாரைக் கண்டாலும் வாயைத் திறந்து, கோரைப் பற்கள் வெளிப்பட ஆரம்பித்து விடும், துரத்தப் படும் மனிதன் தன் உயிரைக் காப்பாற்றினால் போதும் என்று ஓடுவான். ஆனால் ஒரு தெரு நாயின் வேகம் ஒரு மனிதனின் வேகத்தை விட வேகமாக இருக்கும். அது கடிக்காமல் விடாது. தெருநாய்கள் எப்போதும் அலைந்து திரிவதில்லை. சில நாய்கள் பாவம், மிகவும் எளிமையானவை, குழந்தைகள் கூட கற்களால் அடித்து விளையாடுகிறார்கள். மக்கள் சில தெருநாய்களுக்கு அன்பினால் உணவளிக்கின்றனர். சிலர் பிஸ்கட் ஊட்டுகிறார்கள். மக்கள் தங்கள் நம்பிக்கையின்படி தெருநாய்களை விரும்புகிறார்கள், ஆனால் ஒரு தெரு நாயை தூக்கி தங்கள் வீட்டிற்கு கொண்டு செல்லும் தைரியம் யாருக்கும் இல்லை. அவர் பதினைந்து நிமிடங்களுக்கு தெரு நாயைப் நேசிப்பார்கள், மீதமுள்ள இருபத்தி மூன்றே முக்கால் மணி நேரம் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் படி விட்டுவிடுவார்கள்.

நாய் வளர்க்கப்படும் வீட்டின் வாயிலில் நுழைவதை எந்த மனிதனும் விரும்புவதில்லை என்றாலும், வளர்ப்பு நாய் கண்ணியமானது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும், ஏனெனில் நாய் விருந்தினரை வரவேற்க உரிமையாளர் முன் நிற்கிறது. இருந்தாலும் எங்களுடைய நாய் கடிக்காது என்று உரிமையாளர் சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஆனால் நாய் ஒரு நாய். அதற்கு தெரியாது யாரைக் கடிக்கலாம், யாரைக் கடிக்கக் கூடாது என்று. கடித்தால் என்ன செய்ய முடியும்? உரிமையாளரைக் கடிக்காது என்பதால் அது யாரையும் கடிக்காது என்று அர்த்தமல்ல. வீட்டு நாய் விருந்தினரைக் கடித்தால் கூட, நம் நாய் கடித்தால் கவலைப்பட ஒன்றுமில்லை, ஊசி போட்டிருக்கு என்று உரிமையாளர்கள் சொல்கிறார்கள். இதில் எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் வலியை யார் தாங்குவது. 

தெருவில் திரியும் நாயாக இருந்தாலும் சரி, செல்லப் பிராணியாக இருந்தாலும் சரி, தெருவுக்கும், வீட்டுக்கும் தான்தான் காவலாளி என்பது நாய்களுக்கு மரபணு ரீதியாக பதிந்து இருக்கிறது போலிருக்கிறது. ஒரு அந்நியன் இரவில் தெருவில் வர முயற்சித்தால், அவரை நாய் ஒரு தவறான நபர் என்று உணர்ந்தால், அவரைப் பார்த்துக் குரைத்துத் துரத்தி விரட்டலாம். அவரைக் கடிக்காமல் இருக்கலாம். நாயின் குரைப்பு தானே முக்கியம். ஆனால் கண்டிப்பாக குரைப்பதோடு அந்த நாய்கள் நிறுத்திக் கொள்வதில்லை, குரைக்கிற நாய் கடிக்காது என்பதெல்லாம் பொய்யாக்கி வள் வள் என்று குரைப்பதோடு வலிக்கும் படி கடித்து வேறு வைக்கிறதுகள்.

நாய் இரண்டு விதமாக குரைக்கிறது. முதலில், ஒரு செங்கல்லால் அடித்தால், ஒரு விதமாய் குரைக்கும். ஸ்கூட்டரோ, மோட்டார் சைக்கிளோ, காரோ அதன் காலில் ஏறி விட்டிருந்தால் ஒருவிதமான குரைக்கிறது. ஆனால் திருடனைப் பார்த்து நாய் குரைக்கும் போது, விசுவாசமும் நன்றியுணர்வும் கலந்த ஒரு உன்னதமான உயர்ந்த பண்புகளின் கலவையை அதில் காணக் கிடைக்கிறது.

நாயைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைக் கேளுங்கள். ஒருமுறை ஒரு நண்பர் தனது சொந்தக்காரரைச் சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றார். அவர் வீட்டின் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைந்து உள் வாயிலை அடைந்தவுடன், சாலையில் இருந்து ஒரு தெருநாயும் அவரைப் பின்தொடர்ந்து வந்தது. மாண்புமிகு நண்பர் மணியை அடிக்கச் சென்றவுடன், நாய் அவருக்கு முன்னால் நின்று கூர்மையாக வெறியோடு அவரைப் பார்த்தது. இப்போது அது நிச்சயமாகத் தன்னைக் கடிக்கும் என்று நண்பருக்குப் புரிய ஆரம்பித்தது! அந்த நண்பர் பயத்தில் மட்டும் கொஞ்சம் சத்தமாய் கீச்சுக் குரலில் அலறினார். ஆனால் நல்லகாலம், தற்செயலாக அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்தார். நாயை வெளியே துரத்திவிட்டு, பிரதான வாயிலை மூடிய பிறகு வந்தவரிடம், இந்த நாய் எப்படியெல்லாம் இதுவரை பலரைக் கடித்து வைத்திருக்கிறது என்று விளக்க ஆரம்பித்தார். அதோடு விடாமல் அவர் "அது எங்கள் செல்லப் பிராணியல்ல, ஆனால் கொஞ்ச நாளுக்கு நாங்கள் அதற்கு சோறு ஊட்டினோம். இதன் காரணமாக அது பாதி வளர்ப்பு நாய் போல ஆகி விட்டது. அதன் பிறகு அது எங்கள் விசுவாசியாக மாறியது, எங்கள் உதவியைத் திருப்பித் தர அது தானாகவே எங்கள் வீட்டைக் காக்கத் தொடங்கியது. இப்போது யார் வந்தாலும் அவரைக் கடிக்கிறது. அதன் கடிக்கும் பழக்கத்தால் இப்போது யாருமே எங்கள் வீட்டுக்கு வருவதில்லை. நாங்கள் இதனால் இப்போது அதற்கு சோறு ஊட்டுவதைக் கூட நிறுத்திவிட்டோம், ஆனால் அது இன்றுவரை நமது கடந்த கால உதவியை மறக்கவில்லை, நாம் வேண்டாம் என்றாலும் நம்மைக் காத்து வருகிறது. என்ன செய்வது?" என்று கேட்டார்.

நம் பெரிய பிரச்சனை என்னவென்றால் செல்ல நாய்களை எப்படியாவது தவிர்த்து விடலாம். ஆனால் தெருநாய்களை எப்படி தவிர்ப்பது? ஒரு மனிதன் தெருவில் செல்வதை நிறுத்த வேண்டுமா அல்லது தெருவில் செல்லவேக் கூடாதா?

தெருநாய்கள் அதிகம் காணப்படும் தெருக்கள் வழியாக பல நேரங்களில் மக்கள் இரண்டு அல்லது நான்கு பேர் கொண்ட குழுக்களாக செல்கின்றனர். ஆனால் இதுவும் பிரச்சினைக்கு தீர்வாகாது. சில நேரங்களில் ஒரு தெருநாய் இரண்டு அல்லது மூன்று பேரை ஒன்றாகப் பார்க்கும்போது, அது இன்னும் மகிழ்ச்சியாக ஆகிறது, இன்று மக்கள் மொத்தமாக கடிபட போகிறார்கள் என்று நினைக்கிறதோ என்னவோ? குதூகலமாக ஒரே நேரத்தில் இரண்டு-மூன்று பேரை ஒன்றாகக் கடிக்கிறது.

ஒவ்வொரு நாய்க்கும் அதன் சொந்த குணம், அதன் சொந்தப் பல், மற்றும் அதன் சொந்த வால் இருப்பதைப் போலவே, ஒவ்வொரு நாய்க்கும் அதன் தனிப்பட்ட ஆளுமை உள்ளது. சிலதுக்கு வாலில் பெரிய கரும்புள்ளி இருக்கும். சிலவற்றின் முகத்திலும் இருக்கும். ஆனால் ஒன்றையொன்று வேறுபடுத்திப் பார்க்க முடியாது. காலையில் ஒரு குழுவில் இருந்து கொண்டு வெறியோடு பார்க்கும் நாய் மதிய நேரத்தில் மற்றொரு குழுவில் சேர்ந்து கொண்டு நம்மைப் பார்த்துக் குறைப்பதைக் காணலாம். பின்னர் மாலையில், மூன்றாவது குழுவில் நம்மைப் பார்த்து வாலை ஆட்டுவதைக் காணலாம். 

நாயின் வால் எப்போதும் வளைந்திருக்கும். ஆனால் நாயின் வால் நேராக மாறினால், நாய்க்கு பைத்தியம் என்று புரிந்து கொள்ள வேண்டும். கௌரவர்களை வென்ற பிறகு யுதிஷ்டிரன் ஒரு நாயை தத்தெடுத்ததாக கூறப்படுகிறது. உண்மையில், யுதிஷ்டிரர் தனது விடாமுயற்சி, உண்மை மற்றும் அன்பின் உதவியுடன் நாயின் வாலை நிமிர்த்த முயன்றார். ஆனால் நாய் உண்மையான நாயாகவே இருந்தது. யுதிஷ்டிரனால் கடைசி வரை நாயின் வாலை நிமிர்த்த முடியவில்லை. பின்னர் நாயின் வாலை நேராக்க, யுதிஷ்டிரன் நாயை சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றான்; ஆனால் வால் வளைந்தே தான் இருந்தது. ஒரு வேளை தர்மச் சக்கரத்தின் சுழற்சியால் யுதிஷ்டிரனின் தவமும், உண்மையும், அன்பும் வளையலாம், ஒரு நாய் கடைசி வரை உண்மையான நாயாகவே வளையாத வாலோடு இருக்கிறது. நேராக இருப்பதற்கு பெயர் நாய் வால் இல்லை.

நேராக இருந்தாலும் சரி, வளைவாக இருந்தாலும் சரி. என் தெருவின் நாய்கள் கூட்டாக குரைக்கும் போது, மிகவும் கலைநயத்துடன் வாலை சுருட்டிக்கொண்டு, தெருவில் குரைப்பதை முழு தெருவாசிகளும் அந்தந்த ஜன்னல்களில் இருந்து இந்த நிகழ்ச்சியை வேடிக்கைப் பார்ப்பது வாடிக்கைதான். ஒருமுறை ஒரு நாயை மற்றொரு, மூன்றாவது, நான்காவது நாய் பின்தொடர்ந்தது. பின்னால் இருந்த நாயும் மிக வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. அப்போது திடீரென்று பின்னால் இருந்த நாய் முன்னால் இருந்த நாயைத் தாண்டிக் கொண்டு ஓடியது. ஏன் ஓடுகிறது? எங்கே ஓடுகிறது? நாய்க்கும் தெரியாது. நமக்கும் தெரியாது. திடீரென்று மின்கம்பங்கள் அவற்றின் கண்களுக்குத் தென்படும். அப்போது அந்த நாய்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஈரமான மின்கம்பங்களைப் பார்த்து, அவை ஏற்கனவே அந்த தெருவின் எதிர் கோஷ்டியை சேர்ந்த நாய்களால் திறந்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வரும். இரு கோஷ்டி நாய்களுக்கும் இடையே கடும் சண்டை மூளும். இப்படிப்பட்ட சண்டை, சில நேரம் அதே கோஷ்டிக்குள், வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்து சில சமயம் என்று இதுபோன்ற சண்டை அடிக்கடி வெடிக்கும்.

இந்த கொடூரமான தெருநாய்களை எப்படி நடத்துவது? இந்த நாய்களிடமிருந்து மனிதர்களை எவ்வாறு பாதுகாப்பது? சிலர் இந்த தெரு நாய்களை கொல்ல வேண்டும் என்று பரிந்துரைக்கும் அளவுக்கு பாதிக்கப் பட்டுள்ளார்கள். ஆனால் இந்த வழி வன்முறையானது. எனவே அனைவரும் ஒத்துக் கொள்வதில்லை. இன்னொரு வழி நாய்களுக்குக் கருத்தடை செய்வது. நகராட்சி அதிகாரிகள் விரும்பினால், நாய்களை நாய் வண்டியில் பிடித்துக் கொண்டு சென்று, கருத்தடை செய்து, விலங்கு மீட்பு மையங்களில் விட்டு விடலாம். வாழும் சில வருடங்கள் வரை, மரியாதையாக வைத்து, உணவு முதலியவற்றைக் கொடுக்க வேண்டும். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அது இயற்கையான மரணம் அடையும். ஆனால் அவற்றால் எந்த மனிதனையும் கடிக்க முடியாது. இதன் மூலம் தெருநாய்கள் பிரச்னை முற்றிலும் தீர்க்கப்படும். துரதிர்ஷ்டவசமாக, இன்னும் நடைமுறையில் தெரு நாய்களைப் பிடிக்கும் எந்தத் திட்டமும் ஒழுங்காக செயல்படுத்தப்படவில்லை. அதனால்தான் இந்த மூர்க்க நாய்கள் மனிதர்களைக் கடித்து தங்கள் சாம்ராஜ்யத்தை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. தெருநாய்கள் தெருக்களில் சுற்றித் திரிகின்றன. கண்ணியமான மனிதர்கள் தங்கள் வீடுகளில் பூட்டிக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.


=========

Emotional blocks அல்லது unhealed emotional pain என்னவெல்லாம் செய்யும்?

 என் அம்மாவின் மரணம் சற்றும் எதிர்பாராத வகையில் நிகழ்ந்தது. அம்மாவுக்கு டிமென்ஷியா இருந்தாலும், வேறெந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தார். கொரோனா சமயம். டெத் சர்ட்டிஃபிகேட் வாங்குவதற்கு படாத பாடு பட்டு அலைந்தேன்.

கடைசியில் அவரை கௌரவமாய் அவரது வீட்டில் இருந்து அனுப்பி வைத்தேன். அம்மா 2020 செப்டம்பர் மாதம் முதல் தேதி காலை 7 மணிக்கு காலமானார். அன்று காலை என் கூட பணி புரியும் பள்ளி ஆசிரியை ஒருவரோடு பேசும் போது என்னையும் அறியாமல் ஒரு சிறு கேவல் எழும்பி ஒரு ஐந்து நிமிடம் அழுதிருப்பேன். பக்கத்தில் தம்பி "இப்போ என்ன செய்யறது" என்று கேட்டதும் எல்லாம் அப்படியே freeze ஆகி விட்டது. அப்புறம் எவ்வளவோ முயன்றாலும் சரியாகல்லை. இது என்னை physically ரொம்ப ரொம்ப பாதிச்சது. அடிக்கடி தலை சுற்றி கீழே விழுதல், VERTIGO, non clinical physical symptoms, படியில் இறங்கவே யார் கையாயாவது பிடித்துக் கொண்டு இருந்தேன். சாப்பிடவே பிடிக்காமல் போனது. கடைசியில் ANGINAவில் கொண்டு போய் விட்டது. இதெல்லாம் எனக்கு தெரிந்தே நடந்தது. நான் என் தோழியான ஒரு psychiatrist இடம் பேசினேன். அவர் அறிவுரையின் பேரில் அம்மாவின் புடவை தலைகாணி ஆனது. கார் சீட்டில் குஷன் ஆனது. கடந்த ஆறு மாதமாக மீண்டு வந்து இருக்கிறேன். இந்த emotional blocks எதுவும் இல்லாமல். Healing process கொஞ்சம் complicated ஆனது. நம்மால் முடிந்த அளவு self awareness பெற்று இருப்பது மட்டுமே.
Emotional blocks அல்லது unhealed emotional pain என்னவெல்லாம் செய்யும்?
தீர்க்கப்படாத உணர்வு என்பது போதுமான அளவு கவனிக்கப்படாத அல்லது தீர்க்கப்படாத நீடித்த எதிர்மறை உணர்ச்சி, துயரம் அல்லது அதிர்ச்சியைக் குறிக்கிறது. கடந்தகால அதிர்ச்சிகரமான அனுபவங்கள், இழப்பு, உறவுச் சிக்கல்கள் அல்லது தீர்க்கப்படாதச் சிக்கல்கள் போன்ற பல்வேறு காரணங்களால் உருவாகலாம். தீர்க்கப்படாத உணர்வு வெவ்வேறு வழிகளில் வெளிப்படும். ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை வெகுவாகப் பாதிக்கலாம்.
தொடர்ச்சியான எதிர்மறை உணர்ச்சிகள்: பெரும்பாலும் சோகம், கோபம், பயம் அல்லது அவமானம் போன்ற தொடர்ச்சியான எதிர்மறை உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறது. இந்த உணர்ச்சிகள் தொடர்ந்து வெளிப்படும். சில நிகழ்வுகள், நினைவுகள் அல்லது அடிப்படை வலி தொடர்பான நினைவூட்டல்களால் எதிர்மறை உணர்ச்சிகள் தூண்டப்படலாம்.
அன்றாட வாழ்வில் குறுக்கீடு: வேலை, உறவுகள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு உட்பட அன்றாட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் தலையிடலாம். இதனால் சிலருக்கு கெட்ட பழக்கங்கள், உறவுச் சிக்கல்கள் போன்றவற்றால் பாதிக்கப் படலாம்.
உடல் அறிகுறிகள்: தலைவலி, தசை இறுக்கம், பதற்றம், சோர்வு அல்லது பசியின்மை அல்லது தூக்க முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற உடல் அறிகுறிகளிலும் வெளிப்படும். இந்த உடல் அறிகுறிகள் மனம்-உடல் இணைப்பு & ஒட்டுமொத்த நல்வாழ்வில் துயரத்தின் தாக்கத்தின் விளைவாக எழலாம்.
இதை எப்படி சமாளிப்பது? விட்டில் பூச்சி போல, வைரத்தை வைரத்தால் அறுப்பது போல் துயரத்தின் வலியை இன்னொரு வலியால் நீக்க முடியுமா? அதை எப்படி சரி செய்வது? Healthy coping mechanism என்பது என்ன? என் coping strategies சரியானதுதானா என்று எப்படி தெரிந்து கொள்ள?
Next பார்க்கலாம்.

துயரத்தின் தாக்கத்தின் விளைவாக எழும் வலியை இன்னொரு வலியால் குறைக்க முடியுமா? இதை எப்படிச் சமாளிப்பது? விட்டில் பூச்சி போல, வைரத்தை வைரத்தால் அறுப்பது போல் ஒன்றால் ஏற்பட்ட வலியை இன்னொரு வலியால் நீக்க முடியுமா? அதை எப்படிச் சரி செய்வது? Healthy coping mechanism என்பது என்ன? என் coping strategies சரியானதுதானா என்று எப்படி தெரிந்து கொள்ள?
உடல் வலி மற்றும் உளவியல் வலிகள் அடிக்கடி ஒன்றுக்கொன்று intersect ஆகலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, நாள்பட்ட உடல் வலி உளரீதியான துன்பம் மற்றும் பாதிப்புக்களுக்கு வழிவகுக்கும். அதே போலவே ஆறாத துயரம், மன அழுத்தம் அல்லது பதட்டம் போன்ற உளவியல் காரணிகள் உடல் வலியை அதிகரிக்கலாம். வலி உணர்தல் மனிதருக்கு மனிதர் வேறுபடும். கலாச்சாரம் மற்றும் தனிப்பட்ட நம்பிக்கைகள் போன்றவற்றாலும் மாறுபடலாம். ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபடலாம். வயது காரணமாக வலியின் தீவிரம் உணரப்படலாம்.
சமீபத்தில் கால் வழுக்கி கீழே விழுந்ததில் எனக்கு முதுகில் tissue tear ஆகி பயங்கர வலி, ஒரு மாதம் பிசியோவால் சரியானது. ஆனால் இதில் கவனிக்க வேண்டியது ஒன்று இருக்கிறது. விழுந்ததில் முழங்கையில் ஒன்றரை இன்ச் நீளத்துக்கு சதை கிழிந்து விட்டது. ஆனால் அது எனக்கு டாக்டர் பார்த்து பிளாஸ்டர் போடும் வரை தெரியவே இல்லை. ரத்தம் வந்தது கூட தெரியவில்லை. அதைவிட அதிக வலி முதுகில் இருந்ததால் கவனம் அங்கேயே தான் இருந்தது.
சுருக்கமாக, வலி உடல் மற்றும் உளவியல் கூறுகளை உள்ளடக்கியது. உடல் வலி திசு சேதத்தின் விளைவாக உணர்திறன் அனுபவத்துடன் தொடர்புடையது. உளவியல் வலி உணர்ச்சி துயரத்தை உள்ளடக்கியது, பல்வேறு உளவியல் காரணிகளால் எழலாம்.
பச்சை குத்திக்கொள்வது போன்றவை தற்காலிகமாக உங்கள் கவனத்தை திசைதிருப்பலாம், வலியிலிருந்து உங்கள் கவனத்தை மாற்றலாம். ஆனால் அது வலியை நேரடியாக குணப்படுத்தவோ குறைக்கவோ இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பச்சை குத்தல்கள் போன்றவை முதலில் உடல் அல்லது உளவியல் வலிக்கான தீர்வு என்பதை விட சுய வெளிப்பாட்டின் ஒரு வடிவமாகும். பச்சை குத்துதல் செயல்முறையின் போது ஏற்படும் வலி பொதுவாக தற்காலிகமானது. சிலருக்கு பச்சை குத்திக்கொள்வது வினோதமான அதிகாரமளிக்கும் அனுபவமாக இருப்பதைக் குறிப்பிடுகிறார்கள். இது அவர்களின் தீவிரமான உணர்வுகளால் கொந்தளிக்கும் மன நிலையில் இருந்து வெளிவர மறைமுகமாக பங்களிக்கும். இருப்பினும், ஒருவர் உடல் அல்லது உளவியல் வலியை அனுபவித்து அதிலிருந்து விடுபட முடியாமல் இருந்தால், தகுந்த சிகிச்சையின் மூலம் ஆதரவை வழங்கக்கூடிய தகுதி வாய்ந்த நிபுணர்களிடம் இருந்து தகுந்த மருத்துவ அல்லது உளவியல் உதவியைப் பெறுவது நல்லது.
உணர்ச்சி வலியை மற்றொரு வகையான வலியால் தீர்க்க முயல்வது சரியான அணுகுமுறை அல்ல. உணர்ச்சி வலி பொதுவாக அதிர்ச்சி, இழப்பு அல்லது துன்பகரமான வாழ்க்கை நிகழ்வுகள் போன்ற உளவியல் காரணிகளிலிருந்து எழுகிறது. உடல் வலி சில சமயங்களில் உணர்ச்சி வலியிலிருந்து நம் கவனத்தை தற்காலிகமாக திசை திருப்பலாம். அடிப்படை காரணங்களை நிவர்த்தி செய்யாது ஒருவரால் வலியில் இருந்து மீள இயலாது.
உணர்ச்சி வலியைச் சமாளிப்பதற்காக உடல் வலியை ஏற்படுத்தும் நடத்தைகைளில் ஈடுபடுவது தீங்கு விளைவிக்கும். கூடுதல் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். உணர்ச்சி வலியை ஆரோக்கியமான ஆக்கபூர்வமான முறையில் நிவர்த்தி செய்வது முக்கியம். நண்பர்கள், குடும்பத்தினர் ஆதரவைப் பெறுதல், மனநல நிபுணர்களிடமிருந்து சிகிச்சைக்கான ஆலோசனை பெறுதல், தன் நலம் பேணும் நுட்பங்களைப் பயிற்சி செய்தல், மன அழுத்தத்தைக் குறைக்கும் தசை-தளர்வு பயிற்சிகள், கலை சிகிச்சை போன்ற உத்திகளை பின்பற்றுவது ஆகியவை இதில் அடங்கும்.
வலிக்கு பங்களிக்கும் உணர்ச்சிகள், எண்ணங்கள் மற்றும் அனுபவங்களின் காரணிகளைப் புரிந்துகொள்வது முதலில் மிக மிக முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நம் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பதும் உணர்ச்சி வலியை திறம்பட சமாளிக்க தகுந்த ஆதரவைப் பெறுவது முக்கியம்.
உளவியல் ரீதியான வலியை ஆரோக்கியமான முறையில் சமாளிப்பது நல்வாழ்விற்கும் வலியை நிரந்தரமாக குணப்படுத்துவதற்கும் அவசியம். வலியில் இருந்து நிரந்தரமாக விடுபட உதவியாக இருக்கும் சில உத்திகள் இங்கே:
1. ஆதரவைத் தேடுங்கள்: நம்பகமான நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களை அணுகவும். நம் உணர்வுகளையும் அனுபவங்களையும் புரிந்துகொள்ளும் அனுதாபம் கொண்ட ஒருவருடன் பகிர்ந்து கொள்வது ஆறுதலை அளிக்கும்.
2. சிகிச்சை / ஆலோசனை: ஒரு சிகிச்சையாளர் / ஆலோசகரிடம் இருந்து மருத்துவரீதியான உதவியை நாடவும். அவர்கள் நமக்கு வழிகாட்டுதல், சரியான ஆதரவு, சிகிச்சை நுணுக்கங்களை வழங்க முடியும், இது உளவியல் வலியை சரியான திசையில் செயலாக்க உதவும்.
3. தன் நலப் பயிற்சி: சுய-வளர்ச்சியை ஊக்குவிக்கும் செயல்களில் ஈடுபடுதல், உடற்பயிற்சி, போதுமான தூக்கம், சீரான உணவைப் பராமரித்தல், தளர்வு நுட்பங்களைப் பயிற்சி செய்தல் (பிராணாயாமம், தியானம் போன்றவை), இயற்கைச் சூழலில், பொழுதுபோக்குகளில் ஈடுபடுதல் ஆகியவை இதில் அடங்கும்.
4. எழுத்து: நம் எண்ணங்கள், உணர்வுகளை ஜர்னலிங் செய்வது, எழுதுவது ஒரு வினோதமான சிகிச்சை முறையாக இருக்கலாம். உணர்ச்சிகளை பாதுகாப்பான தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்தவும் செயலாக்குவதையும் இலகுவாக்குகிறது. இவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்துப் பார்க்கும் போது, நம்மையும் அறியாமல் பிரச்சினைக்களுக்கானத் தீர்வுகளை நோக்கி நம் மனம் நகரும்.
5. பிரார்த்தனை / தியானம்: தியானப் பயிற்சிகளை வழக்கமாக்கிக் கொள்வது. இந்த நுட்பங்கள் தற்போதைய தருணத்தைப் பற்றிய விழிப்புணர்வை வளர்க்கவும், மன அழுத்தத்தை நேர்மறையாக நிர்வகிக்கவும், அமைதியான உணர்வை வளர்க்கவும் உதவும். நம்மையும் அறியாமல் நம்பிக்கையுணர்வை வளர்க்கும்.
6. நேர்மறையான செயல்களில் ஈடுபடுதல்: பொழுதுபோக்குகளைத் தொடர்வது, அன்பானவர்களுடன் நேரத்தைச் செலவிடுவது, ஆக்கப்பூர்வமான காரியங்களில் பங்கேற்பது போன்ற மகிழ்ச்சியைத் தரும் செயல்களில் ஈடுபடுவது நம் கவனத்தை மாற்றவும், நிறைவான உணர்வை வழங்கவும் உதவும்.
7. எல்லைகளை அமைக்கவும்: உளவியல் வலிக்கு பங்களிக்கும் உறவுகள் மற்றும் சூழ்நிலைகளில் இருந்து மீண்டு வர ஆரோக்கியமான எல்லைகளை அமைக்கவும். தேவைப்படும்போது "இல்லை" என்று சொல்லக் கற்றுக்கொள்வது முக்கியம்.
8. ஆதரவுக் குழுக்கள்: இதே போன்ற அனுபவங்களைச் சந்தித்த மற்றவர்களுடன் இணையக்கூடிய ஆதரவுக் குழுவில் சேர்வதும், மற்றவர்களின் கதைகளைப் பகிர்வதும் கேட்பதும் "நாம் தனியாக இல்லை" என்ற உணர்வை அளிக்கும். Stigmaவிலிருந்து விடுபட உதவும்.
மனநலம் பயின்று, மற்றவர்களுக்கு உதவும் நிலையில் இருந்தாலும், ஒரு physician/medico நோய்வாய்ப்படும் சாத்தியங்கள் எவ்வளவு அதிகமோ, அதே போல, மனம் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியானது தான். நமக்கு மனம் சரியாக இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளும் போதே, நாம் தீர்வை நோக்கி நகர ஆரம்பித்து விட்டோம் என்பதை உணர்வது மிகவும் அவசியம்.
ஒவ்வொருவரின் பயணமும் தனித்துவமானது. நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட வகைகளில் ஏதோ ஒன்றோடு போராடிக்கொண்டிருக்கிறோம். நமக்குச் சரியான, நமக்கேற்றச் சமாளிக்கும் உத்திகளைக் கண்டறிவது முக்கியம். வலியோடு வாழ வேண்டிய அவசியம் இல்லை.
அது உடல் வலியாக இருந்தால் தகுந்த டாக்டரிடம் ஆலோசனை பெற்று physiotherapy மூலம் சரி செய்து கொள்ளுங்கள். மனவலியாக இருந்தால் psychotherapy மூலம் சரி செய்து கொள்ளுங்கள். Awareness about the problem, being proactive with the diagnosis, acceptance to treat the problem are the keys to faster healing and recovery.
Overstimulation and Avoidance: ஓய்வெடுப்பதற்கு ஒருவருக்கு தனிப்பட்ட மன ஊக்கம் இருக்க வேண்டும். இப்படி நான் சொல்வது "என்னடா இது" என்று தோன்றலாம். ஆனால் ஓய்வெடுப்பது சிலருக்கு சங்கடமாக இருக்கும். அவர்கள் ஓய்வாக இருக்கும்போது எழும் அடிப்படை உணர்ச்சிகள் மற்றும் கவலைகளை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற்காக அவர்கள் தங்களை பிஸியாக வைத்திருக்கலாம்.
Coping Mechanisms: விரும்பத்தகாத எண்ணங்கள், உணர்ச்சிகள், கடினமான வாழ்க்கைச் சூழ்நிலைகள் போன்ற உளச் சிக்கல்களில் இருந்து தங்களைத் திசைதிருப்ப சிலர் ஓயாமல் வேலை செய்து கொண்டே இருப்பது, தனது schedulesசை tight ஆக பிஸியாக வைத்திருப்பது போன்றவற்றை சமாளிக்கும் வழிமுறையாகப் பயன்படுத்தலாம். ஓய்வெடுப்பது அவர்கள் தவிர்க்க முயற்சிக்கும் இந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்ளச் செய்யலாம்.
Simple ஆன உதாரணம் ஒன்று. பரபரப்பான நகரத்தின் ஒரு மழைநாளில் ஒருவர் வீடு திரும்பப் படும் அல்லல்கள் இயல்பாகவே ஒருவரது கோபத்தை தூண்டி இருக்கும். பொதுவாக ஒரு சாதாரண மனிதருக்கு இப்படி கோபம் வருவது இயல்புதான். அந்தக் கோபத்தை நாம் எப்படி cope up செய்கிறோம் என்பதில் இருக்கிறது நமது self awareness.. எப்படி நம் மனதை, உடலின் limitationsசை புரிந்து கொள்வது? நம்மில் பெரும்பாலானவர்கள் கீழ்கண்ட வகைகளில் ஒருவராக இருக்கலாம்.
கோபத்தை யார் மேல் காட்டுவது என்று தெரியவில்லை என்றால்?
கோபத்தை வெளிக்காட்டும் நபராக இல்லாதிருந்தால்?
எல்லோருக்கும் இதே பிரச்சினைதானே என்று நினைப்பவராக இருந்தால்?
அவங்க எல்லாம் எப்படி சீட் கிடைத்து ஜாலியா உக்காந்து வராங்க பாரு.. நானும் இருக்கேனே... எனக்கு மட்டும் எப்போவும் இப்படித்தான் என்று புலம்புபவராக இருந்தால்?
இந்த 45 நிமிஷத்தில் எவ்வளவு வேலை செய்து முடித்திருக்கலாம்... இப்படி கால் வலிக்க நின்று வீணாகி விட்டதே? வீட்டுக்கு போய் கால் வலியோடு வேலை செய்ய முடியாது.. இன்று முழுதும் வேஸ்ட் ஆகி விட்டதே என்று frustrate ஆகி வருந்துபவராக இருந்தால்?
ஒரு மழையை கூட சமாளிக்க முடியாத கையாலாகாத ஒருவராக இருக்கிறேனே என்று frustrate ஆகி வருந்துபவராக இருந்தால்?
இதில் நீங்கள் யாராக இருந்தாலும், கீழிருக்கும் healthy coping strategyக்களில் ஏதாவது ஒன்றை consider செய்யலாம். மழையில் மாட்டிக்கொண்டு இருப்பது நிச்சயம் எரிச்சலாகவும், stressful ஆகவும்தான் இருக்கும். நமக்கு கோபமாக இருக்கிறது, எரிச்சலாக இருக்கிறது, stressed ஆக இருக்கிறோம் என்பதை ஒரு முறை நாமே சொல்லிக்கொண்டு, "இதெல்லாம் சகஜம்தானடா உனக்கு" என்று சமாதானம் சொல்லிக்கொள்ள வேண்டும். அப்போது மனம் கொஞ்சம் அமைதியாகும். காத்திருந்த அந்த 45 நிமிடங்களை வலியில்லாமல் சுவாரசியமான அனுபவமாக ஆக்கலாம். எப்படி?
1. அருகிலிருக்கும் டீக்கடையில் ஆற அமர டீ குடிக்கலாம் (no பஜ்ஜி ok!). மழையை ரசிக்கும் மனநிலை உருவாகும்.
2. உங்களைப் போன்றே மழையில் சிக்கிக் கொண்டு நிற்கும் சக மனிதர்களோடு உரையாடலாம். இப்படிப்பட்ட சிக்கலான சமயங்கள் positive connections ஏற்படுத்திக்கொள்ள நிறைய உதவும்.
3. எங்காவது பாதுகாப்பாக அமர்ந்து (cafe போன்ற இடங்களில்) நீண்ட நாளாக பேச நேரம் கிடைக்காமல் இருந்த உறவுகள்/நண்பர்களுக்கு phone செய்து பேசலாம்.போது
1993யில் சிதம்பரத்தில் அண்ணாமலை யூனிவர்சிட்டியில் 15 நாள் contact classes attend செய்து விட்டு, இரவுக்குள் வீடு திரும்ப, ஆறு மணிக்கு திருச்சிக்கு பஸ்ஸில் ஏறினேன். சரியான மழை, காற்று. பஸ்ஸின் கூரை பிய்த்துக் கொண்டு போனது. விருத்தாச்சலம் அருகில், பஸ் நடு ரோட்டில் நின்று விட்டது. மணி ஒன்பதாகி விட்டிருந்தது. நான் தனியாள். அப்போது 19 வயதுதான். மொபைல் போன் எல்லாம் அப்போது கிடையாது. பயமாக வேறு இருந்தது. அதே contact classசில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சிலர் (girls & boys) அங்கங்கே நின்று கொண்டிருந்தார்கள். அவர்களோடு பேசிக் கொண்டு இருந்தேன். எல்லாருமே லால்குடி, திருவெள்ளறை என்று திருச்சி மெயின் தாண்டி போக வேண்டியவர்கள்தான். அங்கேயே ஒருவருக்கொருவர் துணையாக இருந்து பேசிக்கொண்டு இருந்தோம். விடியற்காலை இரண்டு மணிக்கு ஒரு பஸ் வந்தது, சீட் எல்லாம் கிடைக்கவில்லை. பஸ் தரையில் உட்கார்ந்து கொண்டு பயணம். ஆனால் இன்றும் நாங்கள் எல்லோரும் நண்பர்களாக இருக்கிறோம். அந்த அனுபவம் எனக்கு மிகப்பெரிய confidence தரும் நிகழ்வாக இருந்தது.

ஆன்ம விசாரம்


ஒரு தனிநபராக, பல சமயங்களில் நமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஏதாவது நடப்பதைக் காண்கிறோம், ஆனால் நாம் அமைதியாக இருக்கிறோம். பீஷ்மரைப் போல இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொள்கிறோம். சமூகத்தின் ஒரு பகுதி, பணியிடம், குடும்ப உறவு - அல்லது எதுவாக இருந்தாலும் அவற்றோடு நாம் பிணைக்கப்பட்டுள்ளோம், அது தவறு என்று உணர்ந்தாலும் அமைதியாக இருக்கத் தேர்வு செய்கிறோம். நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி - நமது தனிப்பட்ட valuesகளுடன் ஒத்திசைந்து என்ன நடக்கிறது என்பதுதான். நம் valuesகளுக்கு சரியாக இல்லையென்றால், நாம் அதைப் பற்றி உரத்து பேசுவது முக்கியம். அப்படிச் செய்யவில்லை என்றால் இறுதியில் நம் மனசாட்சியே நமக்குத் தண்டனையைக் கொடுக்கும் என்று நான் நம்புகிறேன். பீஷ்மர் கர்மவீரர் என்றறியப்பட்டாலும் பேச வேண்டிய நேரத்தில் அமைதியாக இருந்ததால் தண்டிக்கப்பட்டார். அவருக்கே கதி இப்படி என்றால், நம்மைப் போன்ற தாழ்ந்த ஆன்மாக்களுக்கு என்ன நடக்கும் என்று நம்மால் கற்பனை செய்ய முடியுமா?

ஜஸ்லீன் கவுர் VS சர்வ்ஜீத் வழக்கு.


ஆகஸ்ட் 23, 2015 அன்று, டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியின் மாணவி ஜஸ்லீன் கவுர், போக்குவரத்து சிக்னலில் இருக்கும்படியாக சரவ்ஜீத் சிங்கின் புகைப்படத்தை வெளியிட்டார், அவர் தனக்கு ஆபாசமான கருத்துக்களை அனுப்பியதாகவும், அவரை ஃபோட்டோ எடுக்க முயன்றபோது தன்னை மிரட்டியதாகவும் கூறியிருந்தார்.
கவுரின் ஃபேஸ்புக் பதிவு சில மணிநேரங்களில் வைரலானது. சர்வ்ஜீத் சிங், கவுரின் புகைப்படம் குறித்து தான் நிரபராதி என்றும், டிராஃபிக் சிக்னலை கடக்கும் போது அவர் தனது வழிகாட்டுதலைப் பின்பற்ற மறுத்தபோது ஜஸ்லீன் தான் அவரை அச்சுறுத்தியதாகவும் கூறியிருந்தார்.
சிங் விரைவில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். டெல்லி பெண்கள் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் துன்புறுத்தலுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு என இந்த வழக்கு முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஜஸ்லீனை ஒரு துணிச்சலான இளம் பெண் என்று வாழ்த்தினார்கள். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் ஜஸ்லீனை பாராட்டினார்
கவுர் உடனடி பிரபலமாகிவிட்டார். இந்தியா டுடே அறிக்கையின்படி, தில்லி போலீஸ் கமிஷனர் பிஎஸ் பாசி, கவுரின் துணிச்சலுக்கு 5000 ரூபாய் பரிசு அறிவித்தார்.
சர்வ்ஜீத்தை ஒரு வக்கிரக்காரனாகவும் குற்றவாளியாகவும் சித்தரிக்க கிட்டத்தட்ட எல்லா ஊடக சேனல்களும் உடனடியாகத் குதித்தன. சமூக ஊடகங்களும் ஜஸ்லீனின் இடுகை மற்றும் பிற தொடர்புடைய இடுகைகளை பரவலாகப் பகிர்ந்து கொண்டனர் சர்வ்ஜீத்தை வக்கிரம் பிடித்தவர் என்று அறிவித்தனர்.
சர்வ்ஜீத்தின் கைது மற்றும் நேரில் பார்த்த சாட்சிகளின் விசாரணைக்குப் பிறகு, வழக்கு வலுவிழக்க தொடங்கியது. அந்த இடத்தில் இருந்த விஸ்வஜீத் சிங், சர்வ்ஜீத் நிரபராதி என்றும், உண்மையில், ஜஸ்லீன் தான் சர்வ்ஜீத்தை தகாத வார்த்தைகளால் திட்டி, தவறாகப் பேசியதாகவும் கூறினார். கவுர் மீண்டும் சமூக ஊடகங்களில் தான் சொல்வது சரி என்றும், நேரில் கண்ட சாட்சிகள் பொய்யானவை என்றும் கூறி வந்தார்.
சரவ் ஜீத் பல வேலை வாய்ப்புகளை இழந்தார், ஏனெனில் அவரது முகம் வக்கிரம் பிடித்தவர் என்று 'பிரபலமாக' மாறிவிட்டது, காவல்துறைக்கு தெரிவிக்காமல் டெல்லிக்கு வெளியே கூட செல்ல முடியாது. சர்வ்ஜீத் சிங் நான்கு வருடங்கள் விசாரணைகளில் கலந்து கொள்கிறார். ஜஸ்லீன் கவுர் மூன்று ஆண்டுகளாக விசாரணைக்கு வரவில்லை. நீதிமன்றத்தில் 14 விசாரணை தேதிகளைத் தவறவிட்ட பிறகு, அவர் கடந்த ஆண்டு டிசம்பரில் முதல்முறையாக ஆஜரானார். கனடாவில் தனக்கு ‘கல்விப் பொறுப்புகள்’ இருப்பதால் தான் விலகி இருப்பதாகக் கூறியிருந்தார்.
இத்தனை ஆண்டுகளாக, சர்வ்ஜீத் சிங் களங்கத்தை எதிர்கொண்டார். 2016 ஆம் ஆண்டில், அவர் மீண்டும் ஒரு சமூக ஊடக இடுகையின் மூலம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார், துன்புறுத்தலுக்கு ஒரு மனிதனைப் பொய்யாகக் குற்றம் சாட்டுவது எவ்வளவு எளிது என்பதையும், பாலின அடிப்படையில் ஒருவரை பாதிக்கப்பட்டவராகவும் மற்றொருவரை துன்புறுத்துபவர்களாகவும் சாயம் பூசுவது எப்படி தவறு என்பதை விவரித்தார்.
இறுதியாக சிங் நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

BE A MAN, DON'T CRY


Gender bias and patriarchal society are more harmful for men than women. That's why we need gender equality. To achieve this, we should start working on our EQ.
Patriarchal societies, by definition, prioritise male power and authority, which can create certain expectations and pressures on men. However, it is important to note that patriarchal systems also perpetuate gender inequalities that adversely affect women in numerous ways.
Emotional Expression: Patriarchal societies enforce rigid gender roles and expectations, which can limit men's ability to express their emotions fully. Men may feel pressured to conform to traditional notions of masculinity, which can lead to emotional suppression, increased stress, and mental health issues.
Violence and Aggression: Patriarchal societies tend to perpetuate and normalise aggressive behaviour in men, linking masculinity with dominance, power, and control. This can contribute to higher rates of violence and aggression among men, both within their own gender and towards women. Men may also feel pressured to engage in risky behaviours or physical confrontations to prove their masculinity.
Mental Health: Due to societal expectations, men may be less likely to seek help or support for mental health issues. Patriarchal norms often discourage men from acknowledging or discussing their emotional struggles, leading to higher rates of undiagnosed and untreated mental health conditions such as depression and anxiety.
Suicide Rates: Studies consistently show that men have higher rates of completed suicide compared to women. The societal pressure to be strong, self-reliant, and stoic in the face of adversity can prevent men from seeking help or reaching out for support during times of crisis.
Workplace Expectations: Patriarchal societies expect men to be the primary providers for their families, which can create significant stress and financial burden. Men may feel compelled to prioritise their careers over their personal lives and may face societal stigmatisation if they choose to pursue traditionally female-dominated professions or prioritise family responsibilities.
While men may face certain challenges within a patriarchal society, it is essential to recognise that women often experience systemic disadvantages, discrimination, and violence on a broader scale.
We should start seeking to address gender inequalities and create a more equitable society for all genders, acknowledging that dismantling patriarchal systems benefits everyone, including men.
It is important to understand that discussing the drawbacks of a patriarchal society for men does not diminish the significant harm it causes to women and other marginalised genders.

AI எனக்கான வாய்ப்புக்களை பறித்துவிடுமா

 என் பள்ளியில் career guidance sessions போது, குழந்தைகள் கேட்கும் கேள்வி "இன்னும் ஐந்து வருடம் கழித்து நான் படிக்கும் படிப்பு எனக்கான வேலை வாய்ப்பை உருவாக்கித் தருமா? AI எனக்கான வாய்ப்புக்களை பறித்துவிடுமா" என்பது தான்.

அவர்களுக்கு நான் சொல்லும் ஒரே பதில் "AIயின் switch உங்கள் கையில் தான் இருக்கும்" என்பதே. "நம்மைச் சுற்றி என்னென்ன நடக்கிறது என்பதைப் பற்றி எப்போதும் updated ஆக இருக்க வேண்டியது அவசியம். கால மாற்றங்களுக்கு ஏற்றவாறு நம்மை adapt செய்து கொள்ள வேண்டியதும் முக்கியம். உங்கள் peers எப்படி முன்னேறுகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். உங்கள் seniors என்னென்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். கண்களையும் காதுகளையும் திறந்து கூர்ந்த கவனத்தோடு இருக்கும் போது வழியில் வரும் எந்தத் தடைகளையும் தகர்த்து முன்னேற முடியும்". என்று சொல்லி இருக்கிறேன்.
டெக்னாலஜி அதிவிரைவாக வளர்ந்து வரும் இந்தக் காலகட்டங்களில் வேலைவாய்ப்புக்கான சந்தைகளை பாதிக்கும் பல காரணி இருப்பதால் வேலைகளின் சரியான எதிர்கால நிலையை கணிப்பது சவாலானது. இருப்பினும், தற்போதைய வளர்ச்சிகள் மற்றும் வடிவங்களின் அடிப்படையில் சில சாத்தியமான போக்குகள் மற்றும் வளர்ச்சியின் பகுதிகளை நான் வழங்க முடியும். இவை ஊக கணிப்புகள் தான். எதிர்கால வேலை சந்தையை துல்லியமாக பிரதிபலிக்காது என்பதை நினைவில் கொள்ளவும். அரசியல், சுற்றுச்சூழல், பொருளாதார நிலைமைகள், கொள்கை மாற்றங்கள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் உலகளாவிய நிகழ்வுகள் போன்ற பல்வேறு காரணிகளால் வேலை சந்தை பாதிக்கப்படலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
தொழில்நுட்பம் தொடர்பான திறன்களுக்கான அதிகரித்த தேவை (technology related services): தொழில்நுட்பத்தின் தற்போதைய முன்னேற்றத்துடன், செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், டேட்டா சயன்ஸ், சைபர் செக்யூரிட்டி, மென்பொருள் மேம்பாடு போன்ற துறைகளில் நிபுணர்களுக்கான தேவை தொடர்ந்து வளர வாய்ப்புள்ளது. ஆட்டோமேஷன் மற்றும் ரோபாட்டிக்ஸ் தொடர்பான வேலைகளும் அதிகரிக்கலாம்.
Gig economy & remote work: குறுகிய கால ஒப்பந்தங்கள் மற்றும் ஃப்ரீலான்ஸ் வேலைகளால் வகைப்படுத்தப்படும் கிக் பொருளாதாரம் தொடர்ந்து விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவிட்-19 தொற்றுநோய்களின் போது குறிப்பிடத்தக்க வேகத்தைப் பெற்ற தொலைதூர வேலை, மிகவும் பரவலாகி, மெய்நிகர் ஒத்துழைப்பு மற்றும் தொலைதூர வேலை நிலைகளுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கலாம்.
Green & Sustainable jobs: காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதிலும், நிலையான எதிர்காலத்திற்கு மாறுவதிலும் உலகம் கவனம் செலுத்துவதால், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலையான விவசாயம் மற்றும் பசுமை தொழில்நுட்பங்கள் தொடர்பான வேலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. டெக்னாலஜியோடு இணைந்த நீர் மேலாண்மை, விவசாயம் மற்றும் பெட்ரோலியம் சார்ந்த துறைகள் அதிக வேலைவாய்ப்புக்களை உருவாகும்.
Healthcare & Services related to Aging People: வயதான மக்கள்தொகை மற்றும் சுகாதார சேவைகளுக்கான அதிகரித்த தேவை போன்ற காரணிகளால் உந்தப்பட்டு, சுகாதாரத் துறையானது தொடர்ச்சியான வளர்ச்சியை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவ வல்லுநர்கள், செவிலியர்கள், மனநலம் மற்றும் பராமரிப்பாளர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணிகளுக்கு அதிக தேவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Integrated studies of Physiology, Psychology and Alternative Medicines are more likely to become popular.
Upskilling & Reskilling: தொழில்நுட்ப முன்னேற்றங்களின் விரைவான வேகம், தொழிலாளர்களின் திறன் மற்றும் மறுதிறன் தேவையை அதிகரிக்க வழிவகுக்கும். வாழ்நாள் முழுவதும் கற்றல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை மாற்றியமைக்கும் திறன் ஆகியவை வேலை சந்தையில் போட்டித்தன்மையுடன் இருக்க அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும்.
Human-centric roles: சிக்கலான மனித திறன்கள், படைப்பாற்றல், உணர்ச்சி நுண்ணறிவு, மற்றும் விமர்சன சிந்தனை தேவைப்படும் சில தொழில்கள் தேவையில் இருக்கும். இந்த பாத்திரங்களில் ஆலோசனை, பயிற்சி, கற்பித்தல், கலை மற்றும் பொழுதுபோக்கு மற்றும் சமூகப் பணி போன்ற பகுதிகள் அடங்கும்.
Cybersecurity and data privacy: தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதால், இணைய பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் தரவு தனியுரிமை மற்றும் பாதுகாப்பில் நிபுணர்களின் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகரித்து வரும் இணைய அச்சுறுத்தல்கள் மற்றும் முக்கியமான தகவல்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் ஆகியவை இந்தத் துறைகளில் திறமையான நிபுணர்களுக்கான தேவையை அதிகரிக்கும்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் எந்தெந்த வேலைகளை AI முழுமையாக எடுத்துக்கொள்ளும் என்பதை துல்லியமாக கணிப்பது சவாலானதாக இருந்தாலும், AI குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் சில வேலைகள்:
Routine and repetitive tasks: Data entry, basic accounting மற்றும் அசெம்பிளி லைன் வேலைகள் போன்ற, மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய யூகிக்கக்கூடிய பணிகளை உள்ளடக்கிய வேலைகள், AI ஆல் தானியக்கமாக்கப்படுவதற்கான அதிக ஆபத்தில் உள்ளன. AI-இயங்கும் மென்பொருள் மற்றும் ரோபோக்கள் பெரும்பாலும் இந்த பணிகளை மிகவும் திறமையாகவும் குறைவான பிழைகளுடனும் செய்ய முடியும்.
வாடிக்கையாளர் சேவை மற்றும் ஆதரவு: AI சாட்போட்கள் மற்றும் மெய்நிகர் உதவியாளர்கள் பெருகிய முறையில் அதிநவீனமாகி, வாடிக்கையாளர் விசாரணைகள் மற்றும் ஆதரவைக் கையாளும் திறன் கொண்டவர்களாக மாறி வருகின்றனர். அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பது அல்லது அடிப்படை தகவல்களை வழங்குவது போன்ற எளிய வாடிக்கையாளர் சேவை தொடர்புகளை AI ஆல் கையாள முடியும், இது மனித முகவர்களின் தேவையை குறைக்கும்.
Data analysis and insights: AI அமைப்புகள் பெரிய அளவிலான தரவை செயலாக்கி பகுப்பாய்வு செய்வதில் மிகவும் திறமையானவை. சந்தை ஆராய்ச்சி, தரவு உள்ளீடு மற்றும் அடிப்படை தரவு விளக்கம் போன்ற தரவு பகுப்பாய்வுகளை உள்ளடக்கிய வேலைகள், AI ஆல் ஓரளவு தானியங்குமாறு செய்யப்படலாம். மிகவும் சிக்கலான பகுப்பாய்வு மற்றும் முடிவெடுப்பதில் மனிதவளம் ஈடுபடுத்தப்படலாம்.
Manufacturing and production: ஆட்டோமேஷன் ஏற்கனவே உற்பத்தி மற்றும் தயாரிப்புத் தொழில்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. AI-இயங்கும் ரோபோக்கள் மற்றும் இயந்திரங்கள் அசெம்பிளி, தரக் கட்டுப்பாடு மற்றும் பொருள் கையாளுதல் போன்ற பணிகளை துல்லியமாகவும் வேகமாகவும் செய்ய முடியும். இந்தப் போக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது சில உற்பத்தி நிறுவனங்களில் உடலுழைப்புத் தேவையைக் குறைக்கும்.
Predictive analytics and forecasting: AI அல்காரிதம்கள் வடிவங்களை பகுப்பாய்வு செய்வதிலும் வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் கணிப்புகளைச் செய்வதிலும் திறமையானவை. கையேடு முன்கணிப்பு அல்லது முன்கணிப்பு பகுப்பாய்வை உள்ளடக்கிய வேலைகள், தேவை முன்கணிப்பு அல்லது நிதிச் சந்தை பகுப்பாய்வு போன்றவை, AI வழிமுறைகள் மிகவும் சிக்கலானதாக இருப்பதால், ஆட்டோமேஷனை அதிகரிக்கலாம்.
இவை எல்லாம் AI ஆல் பாதிக்கப்படக்கூடிய சாத்தியமான வேலைகளை முன்னிலைப்படுத்தினாலும், AI மேம்பாடு, தரவு அறிவியல் மற்றும் AI நெறிமுறைகள் போன்ற துறைகளிலும் AI புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கூடுதலாக, AI பெரும்பாலும் மனிதர்களை முழுவதுமாக மாற்றுவதை விட மனித திறன்களை அதிகரிக்க ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது. பல வேலைகளுக்கு தொழில்நுட்ப திறன்கள், படைப்பாற்றல், உணர்ச்சி நுண்ணறிவு மற்றும் விமர்சன சிந்தனை ஆகியவற்றின் கலவை தேவைப்படுகிறது, அதை முழுமையாகப் பிரதிபலிக்க AI போராடுகிறது. எனவே, வேலைச் சந்தையில் AI இன் தாக்கத்தை replacement என்பதற்குப் பதிலாக transformation என்பதாகவே பார்க்க வேண்டும்.

வரலாறு முக்கியம் பாஸ் - காலிஸ்தான்

இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு முதற் சில ஆண்டுகளில், பஞ்சாபிலிருந்து குடியேறிய சீக்கியர்கள், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மிகப்பெரிய ஒற்றைக் குழுவாக இருந்தனர். அவர்களில் சிலர் பிரிட்டிஷ் ஆட்சியின் போது கூட, குறிப்பாக  பிரிட்டிஷ் கொலம்பியாவின் மரத்தூள் ஆலைகளில் வேலை செய்வதற்காக கனடாவுக்கு இடம்பெயர்ந்தனர். மற்றவர்கள் 1947 க்குப் பிறகு புலம் பெயர்ந்து சென்றுள்ளனர். இந்த புலம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலோர் ஏழை கிராமப்புற குடும்பங்களில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களில் பலர் இங்கிலாந்தில்  அரசுப் போக்குவரத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களாக வேலை செய்வதன் மூலம் தங்கள் வாழ்க்கையை நடத்தினர்.


அவர்கள் மேற்கத்திய நாடுகளில் வாழ்ந்த போதிலும், அவர்கள் தொடர்ந்து தங்கள் மதத்தைப் பின்பற்றி உண்மையான சீக்கியர்களாக தங்கள் வாழ்க்கையை நடத்தினர். அவர்கள் தேவைக்குப் போதுமான பணத்தை சேமிக்கும் போதெல்லாம், அவர்கள் தங்கள் உறவினர்களைப் பார்க்கவும், அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் வழிபடவும் இந்தியாவுக்கு வருவார்கள். 1950 களின் பிற்பகுதியிலும் 1960 களின் முற்பகுதியிலும், வெளிநாட்டில் சம்பளம் வாங்கும் சீக்கியர்கள் சிரமங்களை எதிர்கொள்ளத் தொடங்கினர், ஏனெனில் அவர்களின் முதலாளிகள் தங்களிடம் பணியில் தொடர வேண்டுமென்றால் சீக்கியர்கள் தாடியை மழித்தும், தலை முடியை கத்தரித்து கொண்டும் தலைப்பாகை அணிவதை நிறுத்தவும் வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கினர். இது குறிப்பாக இங்கிலாந்தின் அரசுப் போக்குவரத்து நிறுவனங்களில் இருந்தது. மேலும், மேற்கில் குடியேறிய சீக்கியர்கள், நிலம் கையகப்படுத்துவதற்கும், குருத்வாராக்களை கட்டுவதற்கும் நகராட்சி அதிகாரிகளிடம் அனுமதி பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டனர்.இங்கிலாந்தில், பாதிக்கப்பட்ட சீக்கியர்கள் பலர் லண்டனில் உள்ள இந்திய ஹை கமிஷனிடம் இந்த விஷயத்தை எடுத்துச் சென்று, அதன் தலையீட்டை நாடினர். இந்திய ஹை கமிஷன் தலையிட மறுத்து, சீக்கியர்கள் தங்கள் குறைகளைத் தீர்க்க உள்ளூர் அதிகாரிகளை அணுகுமாறு அறிவுறுத்தியது. அப்போது இந்தியாவின் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர் விஷயத்தில் கைகழுவி விடும் கொள்கையைப் பின்பற்றினார். அவர்கள் சார்பாக இந்திய அரசு தலையிடுவதை அவர் எதிர்த்தார்.


உள்ளாட்சி அதிகாரிகளிடம் தங்களின் பிரச்னைகளை எடுத்துரைத்து, தாங்களாகவே தீர்வு காண வேண்டும் என, கூறப்பட்டது.


பாதிக்கப்பட்ட சீக்கியர்கள், இந்திய அரசின் அலட்சியப் போக்கை, அவர்கள் எங்கு வாழ்ந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், யூத மக்களின் மத உணர்வுகளுக்கு ஆதரவளிப்பதில் இஸ்ரேல் அரசு ஆற்றிய உதவி மற்றும் தலையீடுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தனர். 


அதோடில்லாமல், இஸ்ரேலிய குடியுரிமைச் சட்டங்கள் இரட்டைக் குடியுரிமையை அனுமதித்தன, அதேசமயம் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற சீக்கியர்கள் இந்திய குடியுரிமையை கைவிட வேண்டியிருந்தது. சீக்கியர்களின் மற்றொரு கோரிக்கை என்னவென்றால், பாகிஸ்தானில் உள்ள நங்கனா சாஹிப் குருத்வாரா போன்ற புனிதத் தலங்களுக்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் சீக்கியர்களின் புனித யாத்திரை செல்லும் வழிமுறைகளை எளிதாக்குவதற்கான கோரிக்கையை இந்திய அரசு பாகிஸ்தானுடன் மேற்கொள்ள  வேண்டும் என்று விரும்பினர்.


மற்ற அரசாங்கங்களுடன் இதுபோன்ற பிரச்சினைகளை தீவிரமாக எடுத்துக்கொள்வதில் இந்திய அரசு தயக்கம் காட்டுவது குறித்த அதிருப்தி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிக்கும் சில சீக்கியர்களிடையே தங்களுக்கு என்று ஒரு சுதந்திரமான அரசை உருவாக்கினால் மட்டுமே தாங்கள் இஷ்டம் போல இருக்க முடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. அவர்களின் மத உரிமைகளை பாதுகாக்க முடியும். இங்கிலாந்தில் உள்ள சீக்கிய பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் குழு சரண் சிங் பாஞ்சியின் தலைமையில் சீக்கிய ஹோம் ரூல் இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கியது.


அமெரிக்காவில் உள்ள சில வசதி படைத்த சீக்கிய விவசாயிகள், யுனைடெட் சீக் அப்பீல் என்ற அமைப்பைத் தொடங்கினர், இது யூத மக்களின் உரிமைகளை தீவிரமாக ஆதரித்து, இஸ்ரேலின் சுதந்திர தேசத்திற்காக உழைத்த ஐக்கிய யூத அப்பீலின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இருப்பினும், மேற்கில் உள்ள பெரும்பான்மையான சீக்கிய சமூகத்தினர் இந்த அமைப்புகளில் இருந்து விலகி இருந்தனர். சுதந்திர சீக்கிய நாடு என்ற கருத்தை அவர்கள் ஆதரிக்கவில்லை.


1971 இந்தியா-பாகிஸ்தான் போருக்கு முன்பு, 1967 மற்றும் 1969 க்கு இடையில் சில மாதங்கள் பஞ்சாப் சட்டமன்றத்தின் துணை சபாநாயகராகவும் பின்னர் பஞ்சாபின் நிதி அமைச்சராகவும் பணியாற்றிய டாக்டர் ஜக்ஜித் சிங் சவுகான், லண்டன் சென்று சீக்கியர்களுடன் சேர்ந்தார். ஹோம் ரூல் இயக்கம், அதன் தலைமைப் பொறுப்பை ஏற்று அதற்கு காலிஸ்தான் இயக்கம் என மறுபெயரிடப்பட்டது. பஞ்சாபில் உருவாக்கப்படும் சுதந்திர சீக்கிய மாநிலத்திற்கு காலிஸ்தான் என்று பெயரிடப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார்.


அவர் இங்கிலாந்திற்கு வருவதற்கு முன்பே, பாகிஸ்தான் ஹை கமிஷன் மற்றும் லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகம் ஆகியவை சீக்கிய ஹோம் ரூல் இயக்கத்தின் செயல்பாட்டாளர்களுடன் தொடர்பில் இருந்தன. சௌஹானின் வருகைக்குப் பிறகு அவர்கள் அவருடன் தொடர்பை ஏற்படுத்தி, இந்திரா காந்தியை சங்கடப்படுத்துவதற்காக இந்திய அரசுக்கு எதிரான அவரது பிரச்சாரத்தை ஊக்குவிக்கத் தொடங்கினர். பாகிஸ்தானின் இராணுவ சர்வாதிகாரி ஜெனரல் யாஹ்யா கான் அவரை பாகிஸ்தானுக்கு அழைத்தார்.


பஞ்சாபின் சீக்கிய சமூகத்தில் அவருக்கு ஆதரவாளர்கள் இல்லாவிட்டாலும், அவர் அன்புடன் வரவேற்கப்பட்டார் மற்றும் இந்திய சீக்கிய சமூகத்தின் தலைவராக அடையாளப்படுத்தப்பட்டார். அவரது பாகிஸ்தான் விஜயத்தின் போது, பாகிஸ்தானின் குருத்வாராக்களில் வைக்கப்பட்டிருந்த சில சீக்கியர்களின் புனித நினைவுச்சின்னங்களை பாகிஸ்தான் அதிகாரிகள் அவருக்கு வழங்கினர். அவர் அவற்றைத் தன்னுடன் இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்று சீக்கியர்களின் மத நலன்களைப் பாதுகாக்கக்கூடிய ஒரு தலைவராக தன்னை முன்னிறுத்துவதற்காக அவற்றைப் பயன்படுத்த முயன்றார்.


1971 டிசம்பரில் போர் வெடிப்பதற்கு முன், இந்திரா காந்தியின் அறிவுறுத்தலின் பேரில் R&AW, கிழக்கு பாகிஸ்தான் மக்களின் மனித உரிமை மீறல்களையும், அதன் விளைவாக இந்தியாவிற்குள் அகதிகள் நுழைவதையும் எடுத்துக்காட்டும் ஒரு சைவார் (Psywar) பிரச்சாரத்தைத் தொடங்கியது. இந்தியாவில் சீக்கியர்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், வெளிநாடுகளில் வாழும் சீக்கியர்களின் பிரச்சனைகளில் இந்திய அரசின் அலட்சிய மனப்பான்மை குறித்தும் Psywar பிரச்சாரத்தை தொடங்குவதன் மூலம் CIA மற்றும் ISI இதை எதிர்கொள்ள முயன்றன.


சௌஹான் நியூயார்க்கிற்குச் சென்று உள்ளூர் ஊடகங்கள் மற்றும் பிறரைச் சந்தித்து காலிஸ்தான் இயக்கத்தைப் பற்றி விளக்கினார். இந்தச் சந்திப்புகள் அமெரிக்க தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின் சில உறுப்பினர்களால் முன்னின்று ஏற்பாடு செய்யப்பட்டன, பின்னர் டாக்டர் ஹென்றி கிஸ்ஸிங்கர் தலைமை தாங்கினார். அக்டோபர் 13, 1971 இல், அவர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் ஒரு சுதந்திர சீக்கிய மாநிலத்திற்கான இயக்கத்தின் தொடக்கத்தை அறிவிக்கும் ஒரு விளம்பரத்தை வெளியிட்டார்.


இந்த விளம்பரத்திற்காக வாஷிங்டன் டிசியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் பணம் செலுத்தியதாக R&AW மேற்கொண்ட விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீக்கியர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறப்படும் பிரச்சினையில் இந்தியாவிற்கும் இந்திரா காந்திக்கும் எதிரான இந்த Psywar பிரச்சாரம் 1977 வரை தொடர்ந்தது. இந்திரா காந்தி 1977 இல் தேர்தலில் தோல்வியடைந்து மொரார்ஜி தேசாய் நியமிக்கப்பட்டபோது, இந்த பிரச்சாரம் CIA மற்றும் ISI ஆல் திடீரென நிறுத்தப்பட்டது. 


டாக்டர் சௌஹான் இந்தியா திரும்பி காலிஸ்தான் என்று அழைக்கப்படுவதற்கான பிரச்சாரத்தை நிறுத்தினார்.இதற்கிடையில், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள சீக்கிய இளைஞர்களின் பிரிவுகளால் உருவாக்கப்பட்ட பல சீக்கிய அமைப்புகள் சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு (ISYF), தால் கல்ஸா, பாபர் கல்ஸா போன்ற பெயர்களுடன் தொடங்கப்பட்டன. இவை காலிஸ்தானை உருவாக்குவதற்கான வன்முறைப் பிரச்சாரத்தை ஆதரித்தன. வன்முறைக்கு எதிராக இருந்த டாக்டர் சௌஹானின் தலைமையை நிராகரித்தன. 1970 களின் இறுதியில், ஐஎஸ்ஐ சௌஹான் மீதான ஆர்வத்தை இழந்து புதிய அமைப்புகளை ஊக்குவிக்கத் தொடங்கியது.


1980 இல் இந்திரா காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், சௌஹான் மீண்டும் லண்டனுக்குச் சென்று தனது காலிஸ்தான் இயக்கத்தை மீண்டும் தொடங்கினார். அவரது பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, அவர் கனடாவில் அச்சிடப்பட்ட காலிஸ்தான் மாநிலத்தின் தபால்தலைகள் மற்றும் கூறப்படும் கரன்சி நோட்டுகளைப் பெற்று அவற்றைப் புழக்கத்தில் விடத் தொடங்கினார். அவர் ஒட்டாவாவுக்குச் சென்றார், அங்கு ஒரு சீன இராஜதந்திரியைச் சந்தித்து தனது இயக்கத்திற்கு சீன ஆதரவைக் கோரினார். சீனர்கள் மறுத்துவிட்டனர்.


அவர் ஹாங்காங் சென்று சீன தலைவர்களை சந்திப்பதற்காக பெய்ஜிங் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அவரை சீனாவுக்குள் நுழைவதை சீன அதிகாரிகள் தடுத்துவிட்டனர். 1980 க்குப் பிறகு, அவர் சீனாவால் புறக்கணிக்கப்பட்டார், அதன் பின் பாகிஸ்தானால் நிராகரிக்கப்பட்டார், ஆனால் அமெரிக்கா தொடர்ந்து அவர் மீது தன் பிடியைத் தக்க வைத்துக் கொண்டது. அவர் அடிக்கடி வாஷிங்டன் டிசிக்கு விஜயம் செய்தார், அமெரிக்க அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களை சந்தித்தார். சோவியத் ஒன்றியத்துடனான இந்தியாவின் உறவுகள், இந்தியாவில் சோவியத் இராணுவ அதிகாரிகள் இருப்பதாகக் கூறப்படுவது போன்ற விஷயங்களில் காங்கிரஸின் கமிட்டிகளுக்கு முன்பாக அவர் சாட்சியமளித்தார். புதிய சீக்கிய இளைஞர் அமைப்புக்கள் வன்முறையை ஆதரித்ததால், CIA அவர்களிடம் இருந்து விலகியிருந்தது.  ஆனால் அது அவர்களின் நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களைப் பற்றி  ஊடகவியலாளர்கள் மற்றும் பிற இடைத்தரகர்கள் மூலம்  தொடர்ந்து உளவு பார்த்தது.


இந்திரா காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, ஒரு புதிய சீக்கிய தலைவர் அமெரிக்காவில் செயல்படத் தொடங்கினார். அவரது பெயர் கங்கா சிங் தில்லான், அவர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து வாஷிங்டன் டிசியில் குடியேறுவதற்கு முன்பு பஞ்சாப் காவல்துறையில் இளநிலை அதிகாரியாக இருந்தார். அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த பிறகு, அவர் கென்ய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு சீக்கியப் பெண்ணை மணந்தார், அவர் ஜெனரல் ஜியா-உல்-ஹக்கின் மனைவியின் நெருங்கிய நண்பராக இருந்த அவர் ஒரு கென்ய குடும்பத்தைச் சேர்ந்தவர்.


மனைவியின் உதவியுடன், தில்லான் ஜியாவைப் பற்றி அறிந்து கொண்டு அவருடைய நம்பகமான நண்பர்களில் ஒருவரானார். அவர் வாஷிங்டன் டிசியில் நன்கனா சாஹிப் அறக்கட்டளை என்ற அமைப்பை உருவாக்கி அடிக்கடி பாகிஸ்தானுக்குச் சென்று வந்தார். ஜியா வாஷிங்டன் டி.சி.க்கு சென்றபோது, ஜியாவும் அவரது மனைவியும் உள்ளூர் அதிகாரிகள் உதவியோடு ஹோட்டலில் தங்குவதோடு அல்லாமல், தில்லான்களுடன் அவரது உடல் நலம் குன்றிய மகளும் தங்கியிருந்தாள்.


தில்லான் இந்திரா காந்தியின் கடுமையான விமர்சகராகவும் ஆனார் மற்றும் அவருக்கு எதிரான பிரச்சாரத்தில் அமெரிக்காவிற்கு உதவினார்.


இந்த நடவடிக்கைகளின் விளைவாக, சன்டூக் 1980 ஆம் ஆண்டின் இறுதியில், வெளிநாடுகளில் உள்ள சீக்கிய தீவிரவாதக் கூறுகளின் நடவடிக்கைகள் பற்றிய உளவுத் தகவல்களைச் சேகரிக்கவும், ஐஎஸ்ஐ உடனான அவர்களின் தொடர்பைக் கண்காணிக்கவும் ஒரு தனிப் பிரிவை உருவாக்க முடிவு செய்தார்.சில நாட்களுக்குப் பிறகு, இந்திரா காந்தியின் கீழ் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார் நரசிம்மராவ்.


செப்டம்பர் 29, 1981 அன்று, அப்போதைய கேபினட் செயலாளருக்கு (CS) புது தில்லி விமான நிலையக் கட்டுப்பாட்டுக் கோபுரத்திலிருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் சில அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு லாகூருக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக ஒரு ஃபிளாஷ் கிடைத்தது. இந்திய அரசின் நெருக்கடி மேலாண்மைக் குழு உடனடியாக கேபினட் செயலாளரின் அலுவலகத்தில் கூடியது.


முன்னதாக 1971 ஆம் ஆண்டு விமான கடத்தலை நடத்திய ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எஃப்) உறுப்பினர்களால் கடத்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது ஆரம்ப மதிப்பீடாக இருந்தது. 


அதுவரை சீக்கிய தீவிரவாதிகள், நிரங்காரிகள் எனப்படும் ஒரு பிரிவைச் சேர்ந்த சிலரைப் படுகொலை செய்ததைத் தவிர வேறு எந்த பயங்கரவாதச் செயலிலும் ஈடுபட்டதில்லை. கஜேந்திர சிங் தலைமையிலான தால் கல்ஸாவைச் சேர்ந்த சிலர்தான் இந்தக் கடத்தலை நிகழ்த்தி இருந்தனர். இது நிகழும் சில நாட்களுக்கு முன்பு புதுதில்லியில் இருந்த நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் ஒருவர் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்குச் சென்று தால் கல்ஸாவைச் சேர்ந்த சிலரைச் சந்தித்தார். அவர் தால் கல்ஸாவின் நோக்கங்கள் மற்றும் சீக்கியர்களின் பிரச்சனைகள் குறித்து கஜேந்திர சிங்கையும் பேட்டி கண்டிருந்தார்.


அந்தப் பேட்டியில், கஜேந்திர சிங் : “பாலஸ்தீன விடுதலை அமைப்பை தால் கல்ஸா பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.” என்று கூறியிருந்தார்.


பயணிகளையும் விமானத்தையும் விடுவித்துச் சரணடையுமாறு பாகிஸ்தான் அதிகாரிகள் கடத்தல்காரர்களை வற்புறுத்தினர். பயணிகளுடன் விமானம் இந்தியா திரும்பியது. கஜேந்திர சிங் உட்பட சரணடைந்த கடத்தல்காரர்கள் நங்கனா சாஹிப் குருத்வாராவில் தங்க அனுமதிக்கப்பட்டனர். அவர்களை விசாரணைக்காக இந்திய அரசிடம் ஒப்படைக்க ஜில்-உல்-ஹக் அரசு மறுத்தது.உரிய விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று பாகிஸ்தான் உறுதியளித்தனர்.  விசாரணை என்ற போலியான அறிக்கைகளை உருவாக்கினார்கள். அவர்கள் குற்றவாளிகள் என்று சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர், ஆனால் அவர்களை சிறைக்கு அனுப்புவதற்கு பதிலாக, அவர்கள் நங்கனா சாஹிப்பில் தொடர்ந்து தங்க அனுமதிக்கப்பட்டனர். கஜேந்திர சிங் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து நங்கனா சாஹிப் வருகை தரும் சீக்கிய யாத்ரீகர்களை சந்தித்து இந்திய அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வந்தார். இதற்கு எதிராக புதுடெல்லி நடத்திய போராட்டங்கள் பாகிஸ்தான் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது.

தொடரும்

புனிறு தீர் பொழுது - 5

 புனிறு தீர் பொழுது - 4 : https://vidhoosh.blogspot.com/2022/05/4.html

புனிறு தீர் பொழுது - 3: https://vidhoosh.blogspot.com/2022/05/3.html

புனிறு தீர் பொழுது - 2: https://vidhoosh.blogspot.com/2022/05/2.html

புனிறு தீர் பொழுது - 1: https://vidhoosh.blogspot.com/2022/05/1.html

"என் குழந்தையை எனக்குப் பிடிக்கவில்லை. இப்படிச் சொல்வதற்காக என்னை ஒரு மோசமான அம்மா என்று எல்லோரும் நினைத்தால் என்ன செய்வது?"

இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண்மணி. அவர் பெயர் நவ்யா என்று வைத்துக் கொள்வோம். தான் தன் முதற் குழந்தையைப் பெற்றெடுத்தபோது, ​​பிரசவத்திற்குப் பிறகான எடையைக் குறைப்பது கடினமாக இருந்தது.

நவ்யா சொன்னது "கர்ப்பகாலத்தில் அது பற்றிய புத்தகங்களைப் படித்தேன், பல பெண்களிடம் அவர்களின் அனுபவத்தைப் பற்றிப் பேசினேன், எப்படிச் சிறப்பாகத் தயாராக இருக்க வேண்டும் என்று மருத்துவ ஆலோசனை கேட்டேன். ஆனால் இத்தனைக்கும் பிறகு எல்லாமே மங்கலாகி  என் வாழ்வின் மூன்று வாரங்களை இழந்தது போல் உள்ளது. நான் கவனக்குறைவாக மாறிவிட்டது மட்டும் தான் நினைவிருக்கிறது. என் குழந்தை என்னை விட அதிக கவனம் பெறுகிறதே என்று பொறாமை இருந்தது. என்னவோ என் வாழ்வே முடிந்துவிட்டது போல், இப்போது அனைவரின் கவனமும் குழந்தை மேல் மாறியது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத கோபம், சோகம் மற்றும் நம்பிக்கையின்மை போன்ற உணர்வுகளோடு போராடிக் கொண்டிருக்கிறேன். நான் தாய்ப்பால் கூட கொடுக்க விரும்பவில்லை."

நவ்யாவுக்கு நாம் திரைப்படங்களில் பார்க்கும்படி கொண்டாட்டமான கலகலப்பான கர்ப்பகாலமாக இருந்தது. அசௌகரியம், காலைச் சுகவீனம், கால் வீக்கம், முதுகு வலி போன்றவை ஏதும் இல்லை. அவரது குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் அவளை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்திருந்தது.

 அவருடைய வார்த்தைகளாலே சொல்வதென்றால்   “கருவுற்ற போது 60 கிலோ இருந்த நான், குழந்தை பிறந்த மாதத்தில் நான் 102 கிலோ ஆகி விட்டிருந்தேன். அதை ஒப்புக்கொள்ள நான் தயாராக இல்லை. நான் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன். சில நேரம் குழந்தை யாரென்றே எனக்குத் அடையாளம் தெரியாது. நான் குழந்தையை என் கணவரிடம் கொடுத்து, 'எனக்கு இதைப் பிடிக்கவில்லை. இது என் குழந்தையில்லை. தயவுசெய்து இதை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்' என்று சொன்னேன். கணவர் அதிர்ச்சியில் கத்தினார். என்னுடன் சண்டை போட்டார். என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள எனக்கு ஒரு வாரம் ஆனது. அது என்னை என் தலையின் ஆழ்ந்த இருண்ட பகுதிகளைக் காட்டியது. என்னை கும்மிருட்டுக்கு அழைத்துச் சென்று திகிலூட்டியது. என் நம்பிக்கை முற்றிலும் சிதைந்தது. ஒரு வருடம் கழித்தும் என்னால் உடல் எடையை குறைக்க முடியவில்லை. நான் வெளியே செல்லக் கூட பயந்தேன். என்னுடல் முன்னைப் போல அழகாக இல்லை. வயிறு சரிந்து மார்பகங்கள் தளர்ந்து தொடைப் பகுதிகள் பெருத்து கண்ணாடியில் நானே என்னைப் பார்க்க விரும்பவில்லை. என் உடல் மீதான அவநம்பிக்கையில் கணவரோடு மீண்டும் தாம்பத்திய உறவு கொள்வது பயமூட்டுவதாக இருந்தது. மீண்டும் கர்ப்பமடைந்து விடுவோமோ என்ற அச்சம் மேலிட்டு உறவில் ஆர்வம் குறைந்தது. இதையெல்லாம் யாரிடம் சொல்வது?"

அவர் தன் அம்மா முதற்கொண்டு ஊரில் உள்ள பெண் தோழிகளின் உதவியை நாடினார். ஆனால் பேசிப் பேசிப் பார்த்த பின்னும், அவருக்கோ கிடைத்தது "உங்களுக்கு ஓய்வு தேவை" என்று டாக்டர் சொன்ன வெறும் அறிவுரை. "அட்ஜஸ்ட் செய்து கொள்" போன்ற "அம்மான்னா சும்மாவா" அறிவுரைகள் தான். அது மட்டும் இல்லை "குழந்தைக்குப் பாதுகாப்பான மடி தாயுடையது தான்" என்று வேறு   கூறப்பட்டது.

பேபி ப்ளூஸ்? நாங்கள் எல்லாரும் இதைக் கடந்துதான் வாழ்ந்திருக்கிறோம், இதெல்லாம் புதுசா, ரொம்ப அலட்டிக் கொள்ளாதே. ஊரில் இல்லாத அதிசயமா? என்றெல்லாம் ஏச்சுப்பேச்சுக்களைக் கேட்க நேரிடும் அன்புள்ள அம்மாக்களே, மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு உங்கள் தவறு அல்ல.

வேலைக்குப் போகும் பெண்கள் தாயாவது போராட்டம் என்றால், வீட்டு வேலை மட்டும் செய்து கொண்டு குடும்பத்தலைவியாக இருக்கும் பெண்கள் தாயாவது இன்னும் அதிக சிக்கலானது. குறைந்த பட்சம் வேலைக்கு போகும் பெண்களுக்கு குழந்தையை மற்றவர் பொறுப்பில் குற்றவுணர்வு ஏதும் இல்லாமல் விட்டுப் போகும் சுதந்திரமாவது இருக்கும்.

வேலைக்குப் போகாத பெண்களுக்கு மனச்சோர்வு என்பது ஒரு பொதுவான நிகழ்வாகும்.

மனச்சோர்வை பெரும்பாலும், மூளைக்கு அதிக வேலை தரும் செயல்கள், கடினமான இலக்குகள், மற்றும் உலகெங்கிலும் ஊதியம் மற்றும் வேலை அல்லது தொழில்களுடன் தொடர்புபடுத்துகிறோம்.

நம்மில் பெரும்பாலோர் மனநலம் பற்றி விவாதிக்கக் கூடத் தயங்குகிறோம், ஏதோ மனத்தடை இருக்கிறது. 

உங்கள் வீட்டில், உங்களைச் சுற்றியுள்ள பெண்களின் உண்மையான கதைகளைத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.  ஒருவர் தனக்கு திரும்பி கனவில் கூட வர விரும்பாத இருண்ட நாட்களைக் கடந்து இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்வதற்கு உண்மையான தைரியம் தேவை. எவ்வளவு அதிக வெளிச்சம் இருக்கிறதோ அவ்வளவு இருண்ட நிழல் விழுகிறது. அதே போல அடர்ந்த இருளுக்குப் பிறகும் வெளிச்சம் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பிறருடைய அனுபவம் மற்றும் மருத்துவர் / மனநல நிபுணரின் ஆலோசனைகள் மனச்சோர்வைப் புரிந்துகொள்ள உதவும்.

மனச்சோர்வுக்கு ஒருவர் சுதந்திரமான எண்ணம் கொண்டவர், வெற்றிகரமானவர், உடற்பயிற்சி, தியானம், யோகா, சமூகப் பழக்க வழக்கம், நட்பு வட்டம், ஆரோக்கியமான உணவுப் பழக்கம், நேர்மறை மனப்பான்மை,  ஆரோக்கியமான வாழ்க்கை முறை பின்பற்றும்  நபர்  என்றெல்லாம் தெரியாது, இன்னின்னார் மன அழுத்தத்திற்கு ஆளாக முடியாது என்பதெல்லாம் தெரியாது.  மன அழுத்தம் என்ற பெயரில் இது சிறிய அளவில் ஊடுருவி, பின்னர் பெரியதாக மாறக்கூடும், மேலும் இது எந்த வயதினரையும் எந்த நேரத்திலும் பாதிக்கலாம்.

குழந்தைப் பேற்றுக்குப் பிறகு "எல்லாரும் செய்வதுதானே.. இதிலென்ன அதிசயம் ?" என்று கேட்பவர்கள் கூட என்னவற்றையெல்லாம் கடந்து வந்திருக்கக் கூடும்.

உடல் ரீதியாக ஈடுபட்டிருந்தாலும் நீங்கள் மனரீதியாக கவனம் செலுத்த இயலவில்லை என்பதை நீங்கள் அறியும் போது, உங்களுக்கு மனஅழுத்தம் ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.  எப்போதும் சோம்பேறித்தனமாக உணர்வது தான் முதல் அறிகுறி.

தூங்க விரும்பும்போது குழந்தை அல்லது வேலைகள் காரணமாக தூங்க முடியாது.

பசியாக உணர்ந்தாலும், உணவை அனுபவித்துச் சாப்பிட முடியாமல்  சோர்வாக இருக்கும் அல்லது சாப்பிடுவதற்கு பிடிக்காது. அல்லது அப்போதுதான் குழந்தை அழும் இல்லை, ஈரம் செய்து விடும்.

சமைக்க விரும்பாதபோது, ​​​​குழந்தைகளுக்கு சமைத்தே வேண்டும்.

ஓய்வெடுக்க விரும்பினால் அல்லது சிறிது நேரம் வீட்டை விட்டு வெளியே போக விரும்பினால், குழந்தைகளை விட்டு போக முடியாது

நாள் முழுவதும் பிஸியாக இருக்கும் முகம் கழுவக்கூட நேரமில்லாமல் இருக்கும். பாத்ரூமில் குளிக்கக் கூட சுதந்திரம் இல்லாமல் இருக்கும், பாத்ரூம் கதவைத் தாழ்பாள் இட்டுக் கொண்டால் குழந்தை வீறிட்டு அழும், அல்லது அதற்குள் ஏதாவது விஷமம் செய்து விடும்.

நவ்யாவுக்கு என்னவாயிற்று?

நவ்யா மகப்பேற்றுக்கு பிறகான மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இது ஒரு கொடூரமான உணர்வுகளைத் தரும் அதீத மனநல நிலை. தனக்குப் பிறந்தக் குழந்தைக்கு உணர்ச்சிபூர்வமாக கவனமளிப்பதில் சிரமம் இருக்கும். இது குழந்தைக்குத் தீங்கு விளைவிக்கும் எண்ணங்களுக்குக் கூட வழிவகுக்கும்.

இந்தியாவில் மகப்பேற்றுக்கு பிறகான மனநோயின் பரவல் பற்றிய புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை. இந்தியாவில் பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வு உள்ளவர்களுக்கு தன் மனநிலை பற்றிய மிகக் குறைவான விழிப்புணர்வு உள்ளது. ஒரு அன்பான குடும்ப சூழ்நிலை ஒரு புதிய தாயை ஹார்மோன் சமநிலையின் விளைவுகளிலிருந்து பாதுகாக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மனநலத்தை அல்லது மனநோய்கள் பற்றிய  களங்கம், சமூகப் பார்வை மற்றும் நாட்டில் தொழில்முறை உளவியல் நிபுணர்களின் பற்றாக்குறை பல பெண்களை PPD போன்ற மனநோய்களைத் தனியாகச் சமாளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கி இருக்கின்றது.

பிரசவத்திற்கு முந்தைய மனச்சோர்வு என்பது உலகளாவிய பிரச்சனையாகும் - ஏழு பெண்களில் ஒருவருக்கு மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு (PPD) ஏற்படலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இந்த எண்ணிக்கை ஐந்தில் ஒருவருக்கு உள்ளது. மனநல மற்றும் உளவியல் சிகிச்சை நிபுணர்களின் பற்றாக்குறை, அவசரமாக உதவிக்கு தகுந்த ஒருவரை அணுகுவதை சாத்தியமற்றதாக்குகிறது.

முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் ஜனவரி 2022ல் தூக்கில் தொங்கி மரணித்த நிலையில், PPD பரவலாக உள்ளது, ஆனால் எப்போதும் கண்டறியப்படுவதில்லை என்பது மீண்டும் கவனம் பெறுகிறது.

குழந்தையை ரத்தம் வருமளவு தாக்கியது, குழந்தையை ஒரு வாளி தண்ணீரில் மூழ்கடித்து கொன்றது, தலையணையால் அழுத்திக் கொன்றது, போன்ற செய்திகளை நாம் அவ்வப்போது தினசரிப் பத்திரிகைகளில் காண்கிறோம்.

அப்பெண்மணிகள் கைது செய்யப்பட்டு, தீராத அவப்பெயருடன், கண்ணீருடன் வாழ வேண்டியிருக்கிறது.

"எல்லோரும் என்னை ஒரு கொலையாளி என்கிறார்கள்." 27 வயது உமா சென்னையில் தன் குழந்தையை ஏரியில் வீசியதாக கைதாகி தண்டனை பெற்றவர்.

பெரும்பாலான பெண்கள் 3 முதல் 6 மாதங்களுக்குள் தகுந்த சிகிச்சை பெறும் போது குணமடைவார்கள். 4 தாய்மார்களில் 1 பேர் தங்கள் குழந்தைக்கு ஒரு வயதாகதாகும் போது கூட  மனச்சோர்விலேயே உள்ளனர். கவனிக்கப்படாத போது, மனநோயின் தீவிரம் அதிகரிக்கலாம். அன்புள்ள அம்மாக்களே, மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு உங்கள் தவறு அல்ல.

சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள முழுமையான உடல்நலப் பரிசோதனைக்குச் செல்லுங்கள். மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு பற்றி தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் உணர்வுகளை நேர்மையாக அடையாளம் கண்டு அணுகுங்கள்.

புதியதாகத் தாயாகி இருப்பவரின் நடத்தையில் சிறிதளவு மாற்றங்கள் ஏற்பட்டாலும் குடும்பங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தாமதமாகவே என்றாலும் சமீப காலமாக மருத்துவர்கள் கர்ப்பிணிப் பெண்களுடன் PPD பற்றிய ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளனர், அவர்கள் தேவைப்பட்டால் சரியான நேரத்தில் உதவி பெறலாம். இது அனைத்து மருத்துவர்களிடையேயும் வழக்கமாகிவிட்டால், விழிப்புணர்வு அதிகமாகும். பெண்கள் தாங்களாகவே முன்வந்து விரைவில் உதவியை அணுகுவதை உறுதிசெய்யலாம். உறவுச் சிக்கல்கள், உயிரிழப்புக்கள் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

ஒருவர் மன உளைச்சலில் இருப்பதாகத் தெரிய வந்தால் அல்லது தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இருந்தால், தமிழ்நாடு அரசு சுகாதார உதவி எண்ணை 104 அல்லது சினேகா தற்கொலை உதவி எண்ணை 044-24640050 என்ற எண்ணில் அழைக்கவும்.

5/5

புனிறு தீர் பொழுது - 4

புனிறு தீர் பொழுது - 3: https://vidhoosh.blogspot.com/2022/05/3.html

புனிறு தீர் பொழுது - 2: https://vidhoosh.blogspot.com/2022/05/2.html

புனிறு தீர் பொழுது - 1: https://vidhoosh.blogspot.com/2022/05/1.html

 

வேலைக்குப் போகும் தாய்மார்கள் PPDயை எப்படி சமாளிக்கிறார்கள்?

அன்று இரவு 2 மணி இருக்கும். என் அலுவலகத் தோழியிடம் (ஜானகி என்று வைத்துக் கொள்வோம்) இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவளுடைய கணவர் ஊரில் இல்லை. முதன்முதலாக டிப்ரஷன் அறிகுறிகளின் கோரப்பல் அவளுக்கு தெரியவந்திருக்கிறது. அது PPD என்று அவளுக்கும் தெரியாது. இன்னும் diagnose ஆக வில்லை. நள்ளிரவில் பதற்றம் மிகுந்து அழுகை பீறிட்டுக் கொண்டு வர, "I'm sorry it's late. But something is terribly wrong. I'm scared to be alone with the baby. I think it's panic attack. Please help" என்றாள். உடனே அவள் கணவருக்குத் தெரிவித்து விட்டு, அவளையும் அவள் கைக்குழந்தையையும் எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தேன். "I'm Ok" என்று சொல்லியபடி அசதியில் உறங்கிப் போனாள். ஆனால் அவள் ஓகே இல்லை என்பது எனக்குத் தெரியும்.

வெளி உலகத்திற்கு, அவளுக்கு உடல்நலக் குறைவு எதுவும் இல்லை. வேலைக்குப் போய் கொண்டிருந்தாள். தன் குழந்தையை நல்லவிதமாகக் கவனித்துக் கொண்டிருந்தாள். வீட்டையும் நல்லவிதமாகவே நிர்வகித்தாள். ஆனால் இரவு நேரத்திலும் பணியிடத்திலும்  பாத்ரூமில் அழுது கொண்டிருப்பாள்.

PPD இல்லையா இருக்கிறதா என்பது தாண்டி, எண்ணற்ற பெண்களுக்கு, குழந்தைப் பேற்றுக்குப் பின்னால் மீண்டும் வேலைக்குச் செல்வது என்பதே மிகப்பெரிய சவால் தான்.  PPD, உடல் எடைகூடுதல் அல்லது சிசேரியன் வலிகள், தாய்ப்பால் ஊட்டுவதில் பிரச்சினைகள், போன்றவை இல்லாவிட்டாலும் கூட, முதல் இரண்டு வருடம் கைக்குழந்தை வளர்ப்பு என்பதே 24 மணிநேரத்துக்கும் உழைப்பைக் கேட்கும்.

இதையும் தாண்டி பொருளாதாரம் அல்லது குடும்ப சூழல் காரணமாகவோ, பணியிடத்து அழுத்தம் காரணமாகவோ, வேறெந்த காரணமோ, வேலைக்குப் போகிறாள் என்பதே சாதனைதான்.

பெண்கள் தன் உத்தியோகத்தை பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமில்லை, சுயசார்பு அடையவும் அலாதியான ஆத்ம திருப்தியும் அளிக்கிறது. குழந்தைப் பேறுக்கு பின்னும் நம் வாழ்க்கை முன்பு இருந்ததைப் போலவே இருக்கவும், நம் தினசரி வேலைகளையும் முன்பு போலவே கையாளவும் விரும்புகிறோம், எதிர்பார்க்கிறோம்.

பிரச்சனை என்னவென்றால், மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு மெதுவாக, நாம் உணரும் முன்னரே முழுமையாக ஆக்ரமித்து விடுகிறது. அதை உணரும் போதோ, அல்லது episodes எனப்படும் திடீர் திடீரென உண்டாகும் episodic attacksசை அனுபவிக்கும் போது, பயத்தாலும் பதட்டத்தாலும் அறிகுறிகளை அடையாளம் காண்பது கடினமாக இருக்கும்.

PPD என்பது தனிமையில் அழுவதோ பேபி ப்ளூஸ்-சோ மட்டுமல்ல. நம் வாழ்க்கையின் மிகப்பெரிய meeting / presentation போது ஏற்படும் panic attack போன்று, நாம் சற்றும்  எதிர்பார்க்காத போது, நிகழக்கூடும்.

PPDயால் ஒருவர் பாதிக்கப்பட்டால் என்னென்ன மாற்றங்கள் நிகழக்கூடும்.

மனநிலை மாற்றங்கள்: கோபம், பதட்டம், குற்ற உணர்வு, நம்பிக்கையின்மை, எதிலும் ஆர்வம் இல்லாமல் உணருவது, மகிழ்ச்சியை உணர முடியாமல் இருப்பது, அல்லது பீதி அடைதல் (பேய்/கருப்பு உருவங்கள், gory காட்சிகள் போன்றவை மீண்டும் மீண்டும் மனதில் தோன்றுவது), மனச்சோர்வு

நடவடிக்கை மாற்றங்கள்: அழுகை, அமைதியின்மை, தூக்கமின்மை, பசியின்மை, அதிக எரிச்சல் உணர்வு , குழந்தையுடன் பிணைப்பு ஏற்படுத்திக் கொள்வதில் சிரமம், வழக்கத்திற்கு மாறான உடற்சோர்வு அல்லது பசியின்மை

எடை: எடை அதிகரிப்பு அல்லது எடை இழப்பு

அறிவாற்றல்: கவனச் சிதறல், சுழற்சியாய் மீண்டும் மீண்டும் தொடர்ந்து வரும் தேவையற்ற, தவிர்க்க விரும்பியும் தவிர்க்கவே முடியாத எண்ணங்கள்

ஜானகி எப்போதும் சுறுசுறுப்பாய் வேலை செய்பவள். கணவரின் அலுவல் பயணங்கள் நிறைந்தது என்பதால், அவள் தனியாகவே பெரும்பாலும் தினசரி குடும்ப வேலைகளைத் திறமையாக நிர்வகிக்கிறாள். அவளே எல்லாவற்றையும் சமாளிப்பாள். தனது மற்ற பிரச்சினைகளைப் போலவே PPD-யையும் ஒரு கட்டம் வரை அவள் தானே சமாளித்துவிடலாம் என்று நினைத்தாள். பிரச்சினைகளை சரிசெய்வதற்கு நமக்கு பிரச்சினை ஏதோ இருக்கிறது என்று ஒப்புக்கொள்வது முதல் வழி, இரண்டாவது யாரிடமாவது உதவி கேட்பது. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் கூட அதை நீங்கள் தனியாகக் கையாள வேண்டியதில்லை. உங்கள் அலுவலகத்தில் யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாது என்று நீங்கள் நினைத்தால், சொல்லத் தேவையில்லை. ஆனால் மறுத்தவரையோ அல்லது மனநல ஆலோசகரையோ பார்த்து பேசவேண்டியது அவசியம். ஜானகிக்கு PPD இருப்பது இதுவரை பணியிடத்தில் யாருக்கும் தெரியாது.

புத்திசாலித்தனமாகவும் சுதந்திரமாகவும் இருப்பது என்பது எப்போது, யாரிடம் உதவி கேட்க வேண்டும் என்பதை அறிவதுதான், இல்லையா?

பின்னோக்கிப் பார்த்தால், ஜானகி தன் அலுவலகத்தில் PPD பற்றி பேசாததும் சொல்லாமல் இருப்பதும் மிகவும் புத்திசாலித்தனமான நடவடிக்கை அல்ல, ஆனால் அவள் அப்படித்தான் செய்தாள். சொன்னால் அவள் தன் நற்பெயரையும் வேலையையும் கூட இழக்கக்கூடும் என்று நினைக்கிறாள். ஏன் ஜானகி அப்படி நினைக்கிறாள்?

இந்தியாவில் disabilities act என்பது பெயரளவில் தான் இருக்கிறது. சமீபத்தில் தான் அங்கங்கே ஒன்றிரண்டு நிறுவனங்கள் இதைக் குறித்து சிந்திக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். நாம் பேசுவது பெரும்பான்மை பெண்கள் வேலைக்குப் போகும் தனியார் நிறுவனங்களைப் பற்றி மட்டுமே. IT நிறுவனங்களில் WFH வசதி கூட கொரோனா காலகட்டத்துக்குப் பின்தான் பரவலாக ஆனது.

 

நிதர்சனத்தில், maternity leave என்பதே நிறைய பெண்களுக்கு இல்லை என்பதே உண்மை. ஏன்? Maternity leave என்பது விடுப்பில் செல்லும் பெண்ணுக்கு ஆறு மாத காலம் வரை முழுச் சம்பளம் அல்லது basic payயாவது தரவேண்டும், சட்டபூர்வமாக. ஆனால், நடைமுறையில் பெரும்பாலான நிறுவனங்கள் அவர்களை resign செய்யச் சொல்லி விட்டு, மீண்டும் வரச் சொல்கிறார்கள்.

ஆனால், PPDயை அல்லது உளவியல் நோய்கள் பொறுத்த வரை பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இயலாமை பற்றி அலுவலகத்துக்கு தெரியாவிட்டால், அலுவலகம் சட்டத்திற்குக் கட்டுப்படத் தேவையில்லை. சொன்னாலோ மதில் மேல் பூனை நிலைமைதான், எப்போது எந்தக் காரணம் சொல்லி வேலையை விட்டு அனுப்புவார்கள் என்று தெரியாது.

நேர்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், பணியிடத்தில் ஜானகியால் முற்றிலும் பயனற்ற நாட்கள் இருந்தன. கூடுதல் வேலை செய்யும் நிலை இருந்தால், அவளால் எதுவும் செய்ய முடியாது, அழுவதைத் தவிர.

அவள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும்போது (ஒவ்வொரு episode முடியும் போதும் அது நடக்கும்) அவள் நிறுவனத்திற்கு விலைமதிப்பற்ற சொத்து என்பதை நிரூபிப்பாள்.

PPDக்கிடையே அதிக வேலைகளை எடுத்துக்கொண்டு, அரைகுறையான வேலையைச் செய்வது அவளை dull light-டில் காட்டும். அவள் இன்னும் மோசமாக depressed ஆக உணருவாள். பின்னர்... கண்ணீர் காட்சிகள். இப்படித்தான் ஜானகியின் அந்த இரண்டு வருடங்கள் ஓடின. சரியான medications மற்றும் மனநல ஆலோசனைக்குப் பின் அவள் மீண்டு விட்டாள். அந்த இரு வருடங்கள் நரகமாக இருந்தாலும் - அவள் இன்னும் அதே நிறுவனத்தில் இருக்கிறாள், முன்பை விட நன்றாகவே இருக்கிறாள் இன்னும் உயர்ந்த பொறுப்பில்.

 

உங்கள் பணி ஒப்பந்தத்தின்படி, அது சம்பளப் பலன்களாக இருந்தாலும், வேறு எதுவாக இருந்தாலும் சரி, நிறுவனம் உங்களுக்கு என்ன வாக்குறுதியளித்தது என்பது குறித்து நீங்கள் அறிந்திருப்பது மிகவும் முக்கியம். தவறான அல்லது போதுமான அறிவிப்பு இல்லாமல் பணிநீக்கம் செய்வது, அல்லது உங்களை வேலையை விட்டுச் செல்லச் சொல்வது என்று அந்த ஒப்பந்தத்தை மீறி நியாயம் வழங்கத் தவறினால், நீங்கள் நீதிமன்றத்திற்குப் போகலாம்.

 

நிறுவனத்துக்கு எதிராக நீங்கள் வழக்குத் தாக்கல் செய்தால், நீங்கள் பல பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். முதலில், தீவிர ஆய்வுக்கு உங்களை நீங்களே ஆளாக்கிக் கொள்கிறீர்கள். உங்கள் தினசரி வேலை அட்டவணை (work schedule), நீங்கள் செய்த வேலை (work done), சக ஊழியர்களுடனான உங்கள் பழக்கம் (inter personal relationships at work) மற்றும் பலவற்றை நிறுவனம் ஆய்வு செய்யும். ஒரு சிறிய தவறு கூட உங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம். கடந்த காலத்தில் உங்களுக்கு சிக்கல்கள் இருந்ததா என்று பார்க்க, நிறுவனம் உங்களின் முந்தைய வேலைவாய்ப்பு பதிவுகளை ஆராயலாம். கூடுதலாக, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை நுண்ணோக்கின் கீழ் வரலாம். மன அழுத்தத்திற்கான காரணம் வேலையா அல்லது தனிப்பட்ட வாழ்க்கையா என்பதை நிறுவனம் கண்டறிய முயற்சிக்கும். நீங்கள் 'வழக்குப் போடும்' பணியாளராகவும் பார்க்கப்படுவீர்கள், இது உங்கள் எதிர்கால வேலைவாய்ப்பை பாதிக்கும். பயமுறுத்துவதற்கு சொல்லவில்லை.. ஒரு HR ஊழியராக என் கடந்த கால அனுபவங்களில் இவை எல்லாம் நிகழ்வதைப் பார்த்திருக்கிறேன். மனம் வெதும்பி, அப்படித் துன்புறும் பணியாளருக்கு, அவர் பக்கம் நியாயம் இருந்தால் வேறு நிறுவனங்களில் பணியமர்த்த recommend செய்வதைத் தவிர வேறேதும் செய்ய முடியவில்லை என்பதே வெட்கம் கெட்ட உண்மை.

 

4/5