Showing posts with label அஞ்சலி. Show all posts
Showing posts with label அஞ்சலி. Show all posts

லதா


தென்கச்சி கோ.சுவாமிநாதன்

அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் உதவி இயக்குனரும், பிரபல எழுத்தாளருமான தென்கச்சி கோ.சுவாமிநாதன் இன்று (16.9.2009) மதியம் 12.40 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 67.

உழவர் உலகம், வீடும் வயலும், இன்று ஒரு தகவல், ஏராளமான குழந்தைகள் நிகழ்ச்சிகள், போன்றவற்றை வழங்கி தனது குரலாலும், நகைச்சுவையாலும் ஈர்த்தவர்.

முகத்த ஏன் இப்படி சோகமா வைத்திருக்காரு? ஏன் கொஞ்சம் பளிச்சுன்னு பேசக்கூடாதா? என்று இவர் நிகழ்ச்சிகளை பார்க்கும் போதெல்லாம் நினைத்திருக்கிறேன். சர்வ சாதரணமான குரலில் அவருக்கே உரிய முறையில் பெரிய பெரிய விஷயங்களை, எந்த ஒரு பாவமும் இல்லாமல் பேசிவிட்டு போய்விடுவார்.

அவருக்கு என் நமஸ்காரங்கள்.

=============================================================
அவருடைய தொகுப்பு ஒன்று வலையில் கிடைத்தது.


எதை விட்டுக் கொடுப்பது?
- தென்கச்சி கோ. சுவாமிநாதன்

ஓர் ஊரில் பெரியவர் ஒருவர் வாழ்ந்தார். அவருக்கு நிறைய சீடர்கள். இவர்கள் அனைவரும் பெரியவர் மீது அன்பைப் பொழிந்தனர். அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தனர். பெரியவரது உலக வாழ்க்கை நிறைவு பெறும் நேரம் வந்தது. அவரைத் தேடி வந்த கடவுளின் தூதர், "ஐயா! உங்களை அழைத்துப் போக வந்திருக்கிறேன்! என்றார். சீடர்கள் துடித்துப் போனார்கள்.


இன்னும் சிறிது காலம் அவரை இந்த உலகத்திலேயே இருக்க விடுங்களேன்! என்று கடவுளின் தூதரிடம் மன்றாடினர். இந்த உலகத்தில் அவர் வாழ வேண்டிய காலம் முடிந்து விட்டதே! என்றார் கடவுளின் தூதர். "வேறு வழி இல்லையா? என்று குரலில் சோகம் ததும்பக் கேட்டனர் சீடர்கள். ஒரே ஒரு வழிதான் உள்ளது! என்றார் தூதர். என்ன வழி? தயவு செய்து சொல்லுங்கள்! ஆர்வத்துடன் கேட்டனர் சீடர்கள்.

அவருக்காகக் கொஞ்சம் தியாகம் செய்ய நீங்கள் முன்வர வேண்டும்! என்றார் தூதர். உடனே பெரியவருக்காக எங்கள் உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்! என்றனர் சீடர்கள். இதைக் கேட்ட தூதர், உயிர் வேண்டாம்,. உங்கள் வாழ்நாளில் ஆளுக்குக் கொஞ்சம் இவருக்குக் கொடுத்தால்... அதை இவரது ஆயுள் கணக்கில் வரவு வைத்து விடலாம்! என்றார்.

முதலில் ஒருவன் வந்தான். என் ஆயுளில் இரண்டு வருடத்தைத் தருகிறேன்! என்றான். இன்னொருவன், ஒரு வருடம் தருகிறேன்! என்றான். மூன்றாவதாக ஒருவன், ஒரு மாதம்! என்றான். எதையுமே செலவு செய்து பழக்கமில்லாத ஒருவன் எனது ஆயுளில் ஒரு நிமிட நேரத்தை இவருக்காகத் தருகிறேன்! என்றான்.

கடைசியாக வந்த ஒருவன் சொன்னான். இருபது வருடங்களை எடுத்துக் கொள்ளுங்கள்! இதைக் கேட்ட கடவுளின் தூதருக்கு ஆச்சர்யம். இது ரொம்ப அதிகம் இல்லையா? என்று கேட்டார். உடனே அந்த ஆசாமி சொன்னான். ""நான் சொன்ன இருபது வருடங்கள் என் மனைவியின் வயதிலிருந்து!''

நண்பர்களே! உலகில் எதுவுமே உங்களுடையது இல்லை என்பதை உணருங்கள். அப்படி உணரும் போதுதான் நீங்கள் ஆன்மிகத்தில் முதல் அடியை எடுத்து வைக்கிறீர்கள். இன்னொன்றையும் புரிந்து கொள்ளுங்கள். "இது என்னுடையது' என்று நினைக்கும் வரை, எதையும் விட்டுக் கொடுக்க நாம் தயாரில்லை. "எதுவும் என்னுடையது அல்ல!' என்கிற பக்குவம் வரும்போது, விட்டுக் கொடுக்க நம்மிடம் ஏதும் இருப்பதில்லை!.


.


.

மரணம் தீர்வாகுமா?

திரு. ஜகதானந்த் பாண்டா அவர்களது மரணம் பற்றிய இந்த செய்தி படிக்கையில் எனக்கு மிகவும் வருத்தமாகவே இருந்தது.

பாண்டா அவர்கள் M.Phil(Intnl Relations), M.A.(Political Sc.) படித்திருக்கிறார். பாண்டா 1983-batch IAS officer ஆவார். அவர் ஒரிசாவில் பல முக்கியப் பொறுப்புக்களை வகித்திருந்து, டெல்லி-க்கு central deputation-னில் 2006 ஆண்டு சென்றார். அன்னாருக்கு இப்படி ஒரு மரணம் வந்ததில் எனக்கு நிறைய வருத்தம். அவர் மீது சி.பீ.ஐ. என்கொயரி இருந்ததாக தெரிகிறது. முறைதவறிய வருமான ஆசையாலோ, இல்லை வேறு எந்த காரணமோ தெரியவில்லை.

ஒரு ..எஸ். ஆபிசர் உருவாக எவ்வளவு உழைக்கவேண்டும் தெரியுமா? அவர் தவறோ சரியோ, ஆனால் மரணம் எதற்குமே தீர்வு இல்லை. :(

red tapism, corruption என்றெல்லாம் ஐ.ஏ.எஸ்-கள் மீது தொடர்ந்து பழி போடப்பட்டாலும், நான் (நிஜமாகவே நல்ல) ஐ.ஏ.எஸ்-களுக்கு எடுபிடியாக இருந்ததால் கூறுகிறேன். அவர்களுக்கு அப்படிப்பட்ட அதிசய அறிவாற்றல் எப்படி வந்திருக்கிறது என்று வியந்திருக்கிறேன். படிப்பு தந்ததோ அல்லது சொந்த அறிவோ தெரியவில்லை, இவர்கள் எந்த விஷயத்தையுமே, futuristic vision-னோடு கூர்ந்து கவனித்து, சரியான முடிவெடுப்பது போன்றவற்றில் அவர்களுக்கு நிகர் இல்லை என்றே நம்புகிறேன். இதெல்லாம் நான் வியந்து admire செய்த விஷயங்கள்.
..எஸ். பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சுட்டவும்.





.

டி கே பட்டம்மாள் - இசையின் பைரவி

பிரபல கர்நாடக இசை மேதையும், இசைத் திலகம் எம்.எஸ். சுப்புலட்சுமி, எம்.எல். வசந்தகுமாரி ஆகியோருடன் இணைத்து போற்றப்பட்டவருமான முதுபெரும் இசைக்கலைஞர் டி.கே. பட்டம்மாள் காலமானார். அவருக்கு வயது 90.


அவருக்கு என் பணிவான நமஸ்காரங்களை அஞ்சலியாக்குகிறேன்.

====================

1919ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி காஞ்சீபுரம் தாமல் கிருஷ்ணசாமி தீட்‌‌சிதருக்கும், காந்திமதிக்கும் பிறந்த பட்டம்மாளின் இயற்பெயர் அலமேலு. அவருடைய தந்தையார் பட்டு என்று அழைத்ததே பிறகு அவுருடைய பெயராக நிலைத்தது என்று கூறுவர்.

தனது சகோதரர்கள் டி.கே. ரங்கநாதன், டி.கே.ஜெயராமன் போல இவரும் இளம் வயதிலேயே இசையில் சிறந்து விளங்கினார். துவக்கத்தில் பக்திப் பாடல்களை மட்டுமே பாடி வந்த பட்டம்மாள், பிறகு முறையாக இசையைக் கற்றார். தனது 10வது வயதிலேயே வானொலியில் பாடினார்.

13வது வயதில் சென்னை ரசிக ரஞ்சனி சபாவில் இவரது இசை அரங்கேற்றம் நடந்தது. அதற்குப் பிறகே பட்டம்மாள் சென்னைக்கு குடியேறினார்.

பைரவி இராகத்தில் இவரைப் போல் பாட யாருமில்லை என்ற அளவிற்கு தனிப் புகழ் பெற்றார்.

இன்றைக்கு உச்ச ஸ்தாயில் பாடும் பெண் இசைக் கலைஞர்களுக்கெல்லாம் முன்னோடி டி.கே.பட்டம்மாள்தான் என்று கூறுவார்கள். இவருடைய பக்திப் பாடல்களும், பாரதியாரின் விடுதலைப் பண்களை இவர் பாடியதும் ரசிகர்கள் இன்றும் மறக்காதவையாகும்.



.

மைக்கல் ஜாக்சன் - King of pop

பிரபல பாப் இசைப் பாடகர் மைக்கல் ஜாக்சன் அமெரிக்கா கலிபோர்னியா - லாஸ் ஏஞ்சலஸ்-சில் மரணம் எய்தினார்.

Hard to believe his demise. பாப் இசைக்கு பேரிழப்பு.

மரணத்தை ஏற்படுத்தும் மரபணு கோளாறான ஆல்பா 1 ஆன்ட்டி டிரிப்சின் குறைபாட்டால் அவதிப்பட்டுக் கொண்டிருந்து, அவரது பார்வையில் 95 சதவீதம் போய், பேச்சும் கிட்டத்தட்ட நின்றே போய் விட்ட நிலையில், மரணம் அவருக்கு தீராத துன்பங்கள் மற்றும் மன உளைச்சல்களிலிருந்து விடுதலை என்றே கூற வேண்டும்.

பிரபலமான வாழ்க்கை வாழ்ந்திருந்தாலும், பல இன்னல்களுக்கு இடையே துன்பப்பட்டுக் கொண்டிருந்த இவரது ஆத்மா இனியும் நிம்மதியாக உறங்க பிரார்த்தனை செய்கிறேன்.

Never Can Say Goodbye!!!