Showing posts with label book review. Show all posts
Showing posts with label book review. Show all posts
புத்தக விமர்சனம் - மைனஸ் ஒன் (கவிதைகள்)
Posted by
Vidhoosh
on Friday, June 28, 2013
Labels:
book review,
சக பதிவர்
/
Comments: (0)
கேபிள் ஷங்கருக்கு ராயல்டி கிடைக்குமா
Posted by
Vidhoosh
on Saturday, January 8, 2011
Labels:
book review
/
Comments: (5)
மை நேம் இஸ் கெளஹர் ஜான்
Posted by
Vidhoosh
on Friday, June 25, 2010
Labels:
book review
/
Comments: (14)
பேரூர் சிற்றூர் ஆன கதை
Posted by
Vidhoosh
on Tuesday, November 3, 2009
Labels:
book review,
வாசிப்பு
/
Comments: (4)
புத்தக வாசிப்பில் எனக்கென ஒரு கோணலான இரசனை. பொதுவாகவே புத்தகங்களை வாங்கியதும் படிக்க மாட்டேன். புத்தகம் சின்னதோ பெரிசோ, ஒவ்வொரு பக்கமாக flip செய்து random-மாக நான்கு-ஐந்து நாட்களுக்கு படிப்பேன். அத்தியாயங்களின் தலைப்புகளில் எது முதலில் கவர்கிறதோ அதைப் படிப்பேன். பெரியப் பத்திகளைப் படிப்பேன். பிறகுதான் ஆரம்பத்திலிருந்து முழு புத்தக வாசிப்பும். இதனால் புத்தகத்தில் எந்த இடத்தில் தொய்வு இருக்கிறது என்று எனக்கு easy-யாகத் தெரிவது போன்ற ஒரு நம்பிக்கை. அப்படியாக இந்த முறை ஐந்து நாள் பயணத்தில் இரயில் துணையாக வந்த எட்டுப் புத்தகங்களில் ஒன்று நந்திதா கிருஷ்ணா-வின் "மெட்ராஸ் - சென்னை" (ஜெயஸ்ரீ கோவிந்தராஜனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது) வந்தது. என் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து பத்ரியின் கிழக்கு பதிப்பகம் (Prodigy) அனுப்பிய இலவசத் தமிழ் புத்தகம். இந்தப் புத்தகம் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது.
வாங்கலாமா?
.
வாங்கலாமா?
- வாங்கலாம். இந்தப் புத்தகத்தை easy reading வகையில் சேர்க்கலாம். வரலாற்றுச் செய்திகள் கொண்டது என்றாலும் படிக்கும்போது தொய்வில்லாமல் இருக்கிறதால் முழுப் புத்தகத்தையும் ஒரே நேரத்தில் படிக்க முடிகிறது. உண்மையில் இதொரு டைரிக் குறிப்பு.
- யார் படிக்கலாம்? சிறுவ-சிறுமியர்கள், மாணவ-மாணவிகள், சுற்றுச் சூழல் பற்றிய ஆர்வமுடையவர்கள், வரலாற்றுப் பசியுள்ளவர்களுக்கு இந்தப் புத்தகம் இளநீர். என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆசையுடைய, curiosity உடையவர்கள் யாருமே படிக்கலாம். Guide-கள், பள்ளிச் சிறார்கள், சென்னைக்கு வரும்/வர ஆசைப்படும் சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டவர்கள்.
- என்ன சொல்றாங்க? மதராஸ், சென்னை ஆனபோது வெறும் பெயர் மாற்றம் மட்டுமா நடந்தது? பேரூராக இருந்த மதராஸ், சென்னையாக சுருங்கியதும், மனித ஆக்கிரமிப்புக்களால் சுற்றுச் சூழலில் ஏற்பட்ட மாற்றங்கள், மரங்களும் கோவில்களும், பெயர்க் காரணங்களும், தற்போதைய நிலை மாற்றங்கள், நகரம் சுருங்கி மீண்டும் விரிகிறதும் போன்ற விஷயங்கள் summarise செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இரசிப்பான வாசிப்பனுபவம் பெறுவது உறுதி. இப்போது இருக்கும் சென்னையிலிருந்து முன்னாளைய மதராசுக்கு கூட்டிச் செல்லும் ஒரு பயணம் - அலுக்கவில்லை.
- அந்தக் காலத்தில எல்லாம் இப்படியா? என்று ஒரு அலுப்போடு ஆசிரியர் எழுதியது போல இருக்கிறது. உண்மையாகவே மதராஸாக இருந்தபோது இருந்த பல நல்ல விஷயங்களை, கலாச்சாரங்களை தொலைத்துவிட்டது சென்னை. ஆனால் கால மாற்றங்கள் கொடுத்த நன்மைகளையும் அங்கங்கே சொல்லியிருந்தால் ஒரு balanced view ஆக இருந்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றியதை மறைக்க முடியவில்லை.
- வாசிக்க மாட்டார்களோ என்று தோன்றியோ என்னவோ, சின்னச் சின்ன விஷயங்கள் விபரமாகச் சேர்க்கப்படாமல் glimpse மட்டுமாக இருக்கிறதால், முழுமையான வாசிப்பின் நிறைவைக் கொடுக்கவில்லை. நிறைய அறிய வேண்டுமானால் அந்தப் புத்தகத்தை படியுங்கள் என்று இன்னொரு புத்தகத்துக்கும் ஒரு reference கொடுத்திருக்கலாம்.
- சென்னையின் இயற்கை வளங்களான நீர் நிலைகள், விலங்கியல், மற்றும் தாவரங்களைப் பற்றிய விவரிப்புக்கள் அருமை.1985-க்குப் பிறகுதான் கூவம் மாசுபெற்றது என்பதை அறியும் போது வேதனை தலைதூக்குகிறது.
- சுனாமியின் போது பக்கிங்காம் கால்வாய் நீரின் வேகத்தைக் குறைக்க உதவியது குறித்து படிக்கையில் ஆச்சரியமும், அதை நாம் போற்றிக் கொண்டிருக்கும் இழி நிலையும் பற்றிய வருத்தமும் தோன்றியது. இருந்த செயற்கை ஏரிகளையும் ஆக்கிரமித்து அரங்சாங்கமே கட்டியுள்ள கட்டிடங்களைப் பற்றி என்ன சொல்ல?
- பெரும்பாணாற்றுப்படையில் கரிகால் சோழன் விவசாயத்தை அறிமுகம் செய்தது குறித்த பகுதிகள் அடேடே! என்றே படிக்க வைக்கும். பல்லவர்கள் குறிப்புக்கள் படித்தார்ப் போல இருந்தாலும், செய்திகள் சுவையாக இருக்கின்றன.
- மயிலாப்பூர், புனித தாமஸ் குன்று, திருவல்லிகேணி, திருவான்மியூர், பல்லாவரம், திருவொற்றியூர் கோவில்கள் பற்றிய குறிப்பும் உள்ளன.
- பூந்தமல்லி என்றால் மல்லிகைபூக்கள் விளையும் இடம் என்று குறித்துள்ளார்கள். உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் உலகு உய்யகொண்ட சோழபுரம் என்றும் பூவிருந்த வல்லி (மகாலக்ஷ்மி) என்றும் பெயர் உடையது இத்தலம். சிவபுராணங்களில் புஷ்பகவல்லி என்றும் லக்ஷ்மிபூர் என்றும் குறிக்கப்பட்டுள்ளன.
- விவரிப்பில் சென்னை புகழ் அடையாறு ஆலமரம் இல்லாமல் போனது பற்றிய குறிப்புக்கள் ஏதும் இல்லாததும் வருத்தமே.
- பிரிட்டிஷாரின் வருகை பற்றியும், அதன் பின் சென்னையின் தாறுமாறான குடியிருப்புகளின் வளர்ச்சியும் இதன் விளைவாக சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் பாதிப்பும் பற்றியும் சொல்லியிருக்கிறார். புனித ஜார்ஜ் கோட்டை, மற்றும் ஏழு கிணறின் கதைகளும் சுவை.
- சென்னையில் தற்போதும் புழக்கத்தில் உள்ள பல்வேறு இடங்களின் பெயர்க் காரணங்கள் simply superb.
- இதில் பெரம்பூர் பற்றிய குறிப்பில் தவறு இருக்கிறது. பிரம்பு/மூங்கில் காடுகள் நிறைந்த இடமாகையால் பிரம்பு+ஊர் = பிரம்பூர் மருவி பெரம்பூர் ஆனது. இதில் குறித்தபடி பேர்+அன்பு+ஊர் என்றெல்லாம் இருந்திருக்க முடியாது.
- இயற்கையான துறைமுகமான பழவேற்காடு (புலிகாட்) படுக்கை (Padouke) என்றும், புலிகாட் என்றும், மாமல்லப்பட்டினம் என்றும், பிரளய காவேரி என்றும் அனந்தராயன்பட்டினம் என்றும் அழைக்கப் பட்டு, பின் 1521-னில்தான் பழவேற்காடு என்ற பெயர் வந்தது.
- சென்னையின் பல்வேறு நினைவிடங்கள், முக்கியக் கட்டிடங்கள், பற்றிய குறிப்புக்கள் தெளிவாக இருக்கின்றன. ருக்மிணிஅருண்டேல் அவர்கள் நிர்மாணித்த கலாக்ஷேத்திரா இந்தியாவின் முதல் பள்ளி என்று குறிக்கப்பட்டுள்ளது, இதை இந்தியாவின் முதல் கலைக்கூடம்/கலைக் கல்லூரி என்று குறிப்பிடலாம்.
- பிரச்சினைகளும் தீர்வும் : ஆஹா வென்று மகிழ்ந்த குறிப்புக்கள். தீர்வுகளில் சாலை போக்குவரத்து மற்றும் வாகனப் புகையினால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு மெட்ரோ இரயில் திட்டத்தை ஒரு நல்ல மாற்றாக சொல்லியிருப்பார்கள் என்று நம்பித் தேடித் பார்த்தேன். போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வே காணோமே? மின்சார இரயிலால் சுற்றுச் சூழல் மாசு மற்றும் டிராபிக் ஜாம் / போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படலாமே?
- மொத்தத்தில் இந்தப் புத்தகம் மெட்ராஸ் - சென்னை ஒரு பயணக்குறிப்பு. இன்னும் கொஞ்சம் உழைப்பும், தேடலும் இருந்திருந்தால் இந்தப் புத்தகம் போற்றுதலுக்குரியதாகவே ஆகியிருக்கலாம். இந்த விலைக்கு இதுதான் என்றாலும், press ink-க்குக்கு கொஞ்சம் மதிப்பும் கொடுத்திருக்கலாம். விலை இன்னும் கொஞ்சம் கூட்டி, அதிகமென்றால் கூட பரவாயில்லையே! ஓர் நல்ல வரலாற்றுப் பதிவாக வந்திருக்க வேண்டிய புத்தகம் இது. ஹும்ம்ம். தாளிக்கும் ஓசை புகழ் ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் அவர்களா? சமையல் குறிப்புக்கே அதிக details கொடுக்கும் நீங்களோ மேடம் இப்படி?
.