Showing posts with label சினிமா. Show all posts

குஜாரிஷ்
Posted by
Vidhoosh
on Saturday, November 27, 2010
Labels:
bulb fiction,
சினிமா
/
Comments: (6)
டிஸ்னியின் பௌகுகொண்டாஸ்-ஸும் ஜேம்ஸ் காமேரூனின் அவதாரும்
Posted by
Vidhoosh
on Friday, January 29, 2010
Labels:
copy paste,
சினிமா
/
Comments: (7)
காமுன்யக் - ஒரு பெண் சிங்கம்
நேற்றிரவு அனிமல் ப்ளானெட்டில் Heart of lioness மறு ஒளிபரப்பானது. ஒரு மணிநேர நிகழ்ச்சி. அனிமல் ப்ளானெட்டில் ஜனவரி 2002-ல் ஸம்புரு நேஷனல் ரிஸர்வ் கென்யாவில் shoot செய்யப்பட்டது. இதில் ஒரு பெண் சிங்கம் (படபிடிப்புக் குழுவினரால் காமுன்யக்-Kamunyak என்று பெயரிடப்பட்டது) தாயைப் பிரிந்த ஒரு ஆரிக்ஸ் (orix) மான் குட்டியை தத்து(?) எடுத்துப் பாதுகாப்பதை shoot செய்திருந்தனர். நெஞ்சை உருக்குவது போல இருந்தது அந்த சிங்கத்தின் உணர்வுஇந்த படத்தைத் தொகுத்து வழங்கியுள்ள ஸபா என்ற பெண்மணி (Saba Douglas-Hamilton, presenter for Heart of a Lioness), ஸம்புரு மக்கள் அந்த
பெண் சிங்கத்தை ஒரு கடவுளாகவே பார்க்கின்றனர் என்கிறார். இந்த பெண் சிங்கம் மான்குட்டியைத் தத்து எடுத்த பின் இரண்டு மூன்று வாரங்களாக வேட்டையாடவே செல்லவில்லை என்கிறார். மேலும் அந்த பெண்சிங்கம் அங்கே வரும் மற்ற மான்களையும் விரட்டி விட்டு அந்த மான்குட்டியே மற்ற மான்களுடன் தப்பி ஓடும் போதும், போக விடாமல் தன்னுடனேயே வைத்திருக்கிறது. அந்த பெண்சிங்கம் இந்த மான்குட்டியை உணவுக்கான அல்லாமல் தன் குடும்பமாக நினைத்து பாதுகாக்கிறது என ஸபா கூறுகிறார்.தண்ணீர் குடிக்கத் தன்னுடன் கூட்டிச் செல்கிறது. அப்போது யானை கூட்டங்களை குழுவாக யானைகளோடும், அந்தந்த மிருகங்கள் தன் இனக் குழுவினோடு வருவதையும், இவை இரண்டும் ஒன்றாக நீர் அருந்துவதையும் காட்டுகின்றனர். நான் மிகவும் இரசித்த அழகான காட்சி இது.
கடைசியில், ஒரு ஆண்சிங்கம் அந்த மான் குட்டியைச் சாப்பிட்டு விடுகிறது. அப்போது ஆண் சிங்கத்தை எதிர்க்க முடியாமல் ஒதுங்கும், அந்த பெண் சிங்கத்தின் சோக உணர்வை அப்படியே படம்பிடித்துள்ளார்கள். மறுநாள் மதியமே அப்பெண் சிங்கம் ஒரு பன்றிக்குட்டியை கொன்று சாப்பிடுகிறது. இப்போது ஸபா, அந்த மான்குட்டியை இழந்ததும் அப்பெண்சிங்கம் தன் மென்மை உணர்வுகளை இழந்து மீண்டும் predator ஆகி விட்டது என்று கூறுகிறார். அதன் பிறகு சில நாட்கள் கழித்து மீண்டும் ஒரு மான் குட்டியோடு அதைக் கண்டதாகவும், ஒரு வருடம் கழித்து ஐந்து மான் குட்டிகளோடு கண்டதாகவும் அவர் கூறுகிறார்.
========================
இதை முன்பே ஓரிரு முறை பார்த்திருந்தாலும், நேற்றிரவு ஒரு விஷயத்தைக் கவனித்தேன். அப்போது என் மனதில் இந்தக் கேள்விகள்...
- சிங்கங்கள் பொதுவாகவே pride எனப்படும் ஒழுங்குபட்டக் குழுவில்தான் வாழும். ஆனால் இந்த பெண் சிங்கம் ஏன் தனியாக இருக்கிறது?
- எப்போதும் அதன் கழுத்துப்பகுதியில் ஈக்கள் மொய்த்தபடியே இருக்கிறதே? நோய்வாய்ப்பட்டதாலேயே அந்த பெண்சிங்கம் தனித்திருக்கிறதா? அப்படிஎன்றால் அது மற்ற மான்களைத் துரத்தும் போது ஏன் அந்த ஈக்கள் காணப்படவில்லை?
- பார்த்துக்கொண்டிருந்த எனக்கே எப்போது அந்த பெண் சிங்கம் அந்தமான்குட்டியை சாப்பிட்டு விடுமோ என்றிருந்தது. அந்த மான்குட்டிக்குஒவ்வொரு நிமிடமும் எவ்வளவு பயங்கரமாக இருந்திருக்கும்? அந்த பயம்அதற்கு இருந்ததால் தானே அந்த மான்குட்டி தன் இனத்தோடு தப்பி ஓடமுயன்றது?
படப்பிடிப்புக் குழுவினருக்கு எந்த விதமான கட்டாயங்கள், சட்டத்திட்டங்கள் இருக்கின்றன என்பது பற்றிய ஞானம் எனக்கு இல்லை. ஆனால் ஒரு வேளை நான் ஸபா-வாக இருந்திருந்தால், எல்லா ரூல்ஸையும் (rules) உடைத்தெறிந்து விட்டு அந்த சிங்கத்தை டிரான்க்குலைஸ் (tranquillise) செய்து விட்டு மான்குட்டியைக் காப்பாற்ற முயற்சித்து இருப்பேன். இது இயற்கை.. அதை தொந்தரவு செய்யக்கூடாது என்று பேசாமல் இருந்திருக்க மாட்டேன்.
நாமும் இயற்கையின் ஓரு அங்கம்தானே. அந்த மிருகம் தன் இயல்பிலிருந்து மாறி, இயற்கைக்கு மாறாக, தன் மேன்மையான குணத்தைக் காட்டும் போது ('a bit of uncharacteristic humanity' in Saba’s words), நமக்கு அம்மிருகத்திடம் இல்லாத பகுத்தறிவு இருக்கிறதே. தாயைப் பிரிந்த அந்த மான்குட்டியை காப்பாற்ற முயற்சித்த ஒரு மிருகத்திற்கு இருந்த உணர்வு கூட அந்த மனிதர்களுக்கு இல்லாமல் போய்விட்டதே, instead filming it was raw brutality, என்று வருந்தினேன். "We must let nature take its course" is a cold blooded attitude. Oh, wait! They did throw a little meat in the way of the lioness!
பெண்சிங்கத்தின் அந்த உணர்வை an exception to 'the rule' -ஆக ஏற்ற நம்மால், அந்த மான்குட்டியை பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு போய், அதை வாழவிடுவதை மறுத்து 'within their nature'-ஆக இருக்க மனிதர்கள் முடிவெடுத்தது எந்த விதத்தில் நியாயம்?
குறைந்த பட்சம் அந்த ஆண்சிங்கம் தன் குணத்தை நேர்மையான முறையில் காட்டி, (கருணை) கொலை செய்ததால் எப்படியும் உணவின்றி இறக்கப்போகும்அந்த மான்குட்டி மிகுதி நாளையும் பயத்தோடு கழிக்காமல் இறந்தே போனது? அந்த பெண்சிங்கமும் தகுந்த குழுவில் இல்லாமல் பின் நாட்களில் இறந்தே போயிருக்கும்.
ஆனால் my guess is the filmmakers probably acted out their voyeuristic blood lust (very thinly disguised with the sheen of 'respecting nature') and filmed that too. I understand and respect the opinion that we should leave the wild to the wild, but this was different. This was NOT a normal circumstance. Reality TV completely sucks, even reality TV wild kingdom style. I've always justified it as "They are wild animals, and so goes the circle of life." Not this time.
மற்றபடி ஒரு தனிமைப்பட்ட பெண் சிங்கத்தின் மென்மையான உணர்வுகளை பொறுமையுடன் follow செய்த படம், அதன் அருமையான போட்டோக்ராபி, அற்புதமான தொகுப்பு.
ஸ்லம் டாக் மில்லினர் (Slumdog Millionaire)
டாட்டா ஸ்கையில் ஸ்லம் டாக் மில்லினர் பார்த்தேன். This Movie won 8 Oscars. Another 62 wins & 29 nominations. No wonder.

அந்தப் பையன் ஜமாலின் பிளாஷ் பாக் கௌன் பனேகா கரோட்பதியின் கேள்விகளோடு ஒத்திருப்பது ஹைலைட். applause to the creator. இனிமேலும் இப்படி ஒரு படத்தை யோசிக்க முடியுமா என்பது கேள்விதான்.
விகாஸ் ஸ்வரூப் எழுதிய Q&A நாவலை தழுவி இங்கிலாந்து இயக்குனர் டேனி பாய்ல் இயக்கிய ஸ்லம்டாக் மில்லியனர் எட்டு பிரிவுகளில் ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து சினிமாவின் உயரிய விருதான பாஃப்டா விருதையும் இப்படம் தனதாக்கியுள்ளது.
சிறந்த இசையமைப்பாளர், சிறந்த இயக்குனர், சிறந்த படம் உள்பட மொத்தம் ஏழு பிரிவுகளில் இப்படம் விருது பெற்றிருக்கிறது.
முதலில் கோல்டன் குளோப், பிறகு பாஃப்டா, கண்டிப்பாக பாருங்கள் ...லீகலி ... எல்லாவற்றிற்கும் மேலாக ஏ.ஆர். ரகுமான்அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
துவக்கத்திலிருந்தே விமர்சனங்களை சந்தித்து வந்த இப்படத்தின் பெயரில் டாக் என்ற வார்த்தை இருக்கிறது. இது சேரியில் வசிக்கும் இந்தியர்களை அவமதிப்பதாக கூறப்பட்டது. பின்னர் இப்படம் இந்தியாவின் நிலைமையை சர்வதேச அளவில் குறைக்கும் விதமாக எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது.
ஆனால் இப்படத்தில் எந்தப் பகுதியில் உண்மை இல்லை ....?
மிகவும் பாதுகாப்பான வாழ்க்கை வாழும் எனக்கு இந்த படம் ஒரு அதிர்ச்சிதான். it's very difficult to see the other side of the society in India. ஒருவேளை நான்தான் ஒருவட்டத்தில் வாழ்ந்து விட்டேனோ. அதை விடுவோம்.
எனக்கு பிடித்த சில காட்சிகள்.
1. அமிதாப் பச்சனை பார்க்க அச்சிறுவன் எடுக்கும் முடிவு... உச்ச கட்ட அதிர்ச்சி...
2. தர்ஷன் தோ கண ஷ்யாம் நாத் ... என்ற எனக்கு பிடித்த சூர்தாஸ் பாடல் . ஆனால் இனிமேல் அந்த பாட்டை கேட்டாலே ...
3. அனில் கபூரின் வில்லத்தனம் ... ஒரு சேரிவாசி தன் ஷோவில் ஜெயிப்பதாஎன்ற உணர்வு... அற்புதமான நடிப்பு.
4. தேவ் படேல் ... சூப்பர் .... தன் வெற்றிக்கு மகிழ்ச்சி அடைகிறானா இல்லை அந்தகேள்விக்கு தொடர்புள்ள தன் பிளாஷ் பாக் அனுபவத்திற்காக வருத்தப்படுகிறானா என்று இரண்டு உணர்வுகளிலும் துடிக்கும் அவன் கண்கள்
5. ஒரே தாய்க்குப் பிறந்து ஒரே சூழலில் வளர்ந்து வரும் இரண்டு சிறுவர்கள் தன் attitude மூலம் வாழ்வில் எந்த நிலையை அடைகிறார்கள் ... attitude.... லே மென் பிரதர்ஸ், சத்யம், இன்னும் பல அனுபவங்கள் கொடுத்த பாடம் .... ATTITUDE CREATES AND DESTROYS....
இந்திய கதை, இந்திய நடிகர்கள், இந்திய இசை என இந்தியாவை சார்ந்துள்ள இந்த படம் உலக ரசிகர்களை பெற்றிருப்பதுடன், உலக அளவில் சிறப்பான விருதுகளையும் பெறப்போகிறது என்பது பெருமையான விஷயம்தானே!

இப்படிக்கு பேராண்டி... குறும்படம்
எங்கோ படித்தேன்....பார்த்தேன்.
‘பூங்கா’ என்ற குறுந்திரைப் படத்தின் மூலமாக பணக்காரப் பெற்றோரின் பாசப்பரிவுக்கும் கவனிப்புக்கும் ஏங்கித் தவித்து ஏமாறுகிற சிறுமியின் ஏக்கம், தனது பாசத்தையும் பரிவையும் எதன் மீதெல்லாம் படர விட்டது என்பதை நெஞ்சைத் தொடும் விதமாக வடிமைத்துப் அளித்த தாண்டவக்கோன், தாத்தா-பாட்டிக்கு ஏங்குகிற பேரன் களின் மன உலகத் தவிப்புகளையும், புறஉலகச் செயல் பாடுகளையும் நுட்பமான கவிதையாகப் படைத்தளித் திருக்கிறார், இப்படிக்கு பேராண்டி என்ற 45 நிமிடக் குறுந்திரைப் படத்தின் மூலமாக.
முந்தைய படைப்பைவிட இதில் தொழில்நுட்ப நேர்த்தி கைகூடி வந்திருக்கிறது. அழுத்த மான கதையை எடுத்துக் கொண்டு, அதை அற்புதமான திரைக்கதை யாக சம்பவ அடுக்குகள் பின்னி, தனித்துவக்குணம் படைத்த பாத்திரங்களையும் செதுக்கி... அதற்கான உயிர்ப்பையும் வழங்கியிருக்கிறார். குறுந்திரைப்படம் பார்க்கிற மனசுகள் ஈரவிழிகiளால் கணத்துப் போகின் றன.
காலடிக் கல்லை எத்திக் கொண்டே போகும் சிறுவன், மதிய உணவைக் கொட்டிவிட... அப்பாவின் சீற்றமும், அம்மாவின் கொதிப்பும் நினைவில் வந்து குலைநடுங்க வைக்க... புதிய கன்று ஊன்றுகிற தோட்டக்காரத் தாத்தா ஓடிவந்து ஆறுதல் சொல்கிறார். ‘செய்த தப்புக்கு அழாதே. பாடம் படிச்சுக்கோ’ என்கிறார். ‘தாத்தாக்கள் பிள்ளைகளின் மன உலக நுட்பங்களை உணர்ந்தவர் கள். இங்கிதமானவர்கள். இதம் தருகிறவர்கள்’ என்பதை உணர்த்திவிடுகிற காட்சி.
ஓரு பள்ளியின் வகுப்பு. பொது அறிவுப்பாடம். தாத்தா பாட்டியின் குணம்பற்றி டீச்சர் கேட்க, எல்லாக் குழந்தைகளும் ஆசை ஆசையாக தமது அனுபவங் களைச் சொல்ல.... ‘யார் யார் வீட்டில் தாத்தா பாட்டி இருக்கிறார்கள்?’ என்ற கேள்விக்கு மொத்த வகுப்பே மௌனமாகிறது. ஒரு சமுதாய விமர்சனமே இந்த மௌனத்தில் கூச்சலிடுகிறது.
அவசர யுகத்தில் குடும்பங்களுக்குள் தாத்தா பாட்டி களுக்கான இடம் இல்லாமல் போய்விடுகிறது. பாசம், தார்மீகம், மனிதநேயம் என்ற எந்த உணர்வுக்கும் இடமில்லாமல், தாத்தா-பாட்டிகள் அனாதைகளாக்கப் படுகின்றனர். பேராண்டிகளிடமிருந்து கத்தரித்து, தனித் தொதுக்கப்படுகின்றனர். பிள்ளைகளுக்கு பாட்டிகளின் பாசம், தாத்தாவின் பரிவு கிட்டாமலேயே போய் விடுகிறது.
தாத்தா -பாட்டிக்காக ஏங்குகிற இரு பேராண்டிகள் .அப்பாவிடம் சொல்லப் போனால் ‘பாடத்தைப் படி’ என்று துரத்துகிறார். அம்மாவிடம் சொல்லப் போனால்... செத்துப் போவதாக மிரட்டுகிறாள். பாவம், பேராண்டிகளுக்கு ஏக்கம். ஆசை. ஆவல். போன் பண்ணலாம். புதிய நம்பர் இல்லை. அந்த அளவுக்கு உறவு பழையதாகி விட்டது. பிள்ளைகளாகக் கடிதம் எழுதுகின்றனர். தாத்தா - பாட்டி சம்பந்தப்பட்ட படங்கள் பரணில் கிடக்கிறதாக தகவல். அதைஎடுக்கிற முயற்சியில் பிள்ளைகளுக்கு விபத்து. மருத்துவமனை! மருத்துவமனைக்கு வருகிற ரெங்கசாமி மூலம் தாத்தா -பாட்டிக்குத் தகவல் தெரிகிறது ‘பேரன்கள் மருத்துவமனையில்’.
திரும்பிவந்த கடிதம் தந்தை தாமோதரனுக்கு பிள்ளைகளின் மன உலகத் தவிப்பைச் சொல்கிறது.
கதை கேட்ட பிள்ளைகளுக்கு, கதைப் புத்தகம் வாங்கித் தந்ததற்காக குற்ற உணர்ச்சி கொள்கிற தாமோதரன்.
கதைகேட்ட பிள்ளைகள்.. கதையா கேட்கிறது? தகப் பனின் கதகதப்பான வருடலையும், பரிவையும் கொஞ்சிக் கொஞ்சிச் சொல்கிற கதைகளையுமல்லவா கேட்கிறது?
‘இனிய சொற்களையே பேசு’ என்று ட்யூஷன் வகுப்பு நடந்துகிற டீச்சர், காமிக்ஸ் படிக்க ஆசைப்படுகிற மகளிடம் டான்ஸ் கற்றுக் கொள்ள வற்புறுத்த... கடின சொற்களால் மிரட்ட.....
‘காமிக்ஸ் படித்தால் ஓவியப் பழக்கம் வரும்’ என்று தந்தை சொல்ல... விருப்பமில்லாத விஷயத்தை பிள்ளை களிடம் கட்டாயமாக திணிக்கிற படாடோபம் கூர்மை யாக விமர்சிக்கப்படுகிறது.
பிள்ளைகள் தாத்தா - பாட்டிகளைப் பார்க்க தவிப் பதை அறிகிற அம்மாவும் நெகிழ்கிறாள்.
நெஞ்சுவலி வந்த தாத்தா, டாக்டரைப் பார்க்கிறார்.
தாத்தா - பாட்டியைப் பார்க்க குடும்பத்துடன் காரில் போகிற போது, தாத்தா செத்து விடுவதாகவும், புதைக் கப்பட்டதாகவும் வருகிற காட்சி நம்மை பதைக்க வைக்கிறது.
நல்ல வேளை, கனவு. ஆனால், ‘காலைக் கனவு பலிக்குமோ’ என்ற நம்பிக்கை. பதற்றம்.
கதவு தட்டப்படுகிற சத்தம்.
திறந்தால்-
பேராண்டிகளைப் பார்க்க வீடு தேடி வந்து விட்ட தாத்தா - பாட்டி.
அழுத்தமான கதையை உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளாக்கி... நெகிழ்ச்சிமயமாக படமாக்கியிருக் கிறார் தாண்டவக்கோன். டாக்டராக ஒரு காட்சியில் வருகிறார்.
பேராண்டிகளாக வருவது அவரது மகன்கள். பேராண்டிகளின் அம்மாவாக அவரது மனைவி.
தாத்தா- பாட்டிகளாக தமுஎச மாநிலக் குழு உறுப்பினர் தோழர் ஈஸ்வரனும், அவரது துணைவி யாரும். நன்றாக நடித்துள்ளனர்.
காதல்-வன்முறை-ஆபாசம்-அடித்தடி-ஆஸ்திரே லியா என்று சீரழிந்து வருகிற தமிழ்ச் சினிமாக்களுக்கு அசலான மாற்றுச் சினிமா என்பது இம்மாதிரியான குறுந் திரைப்படங்கள்தான்.
தாண்டவக்கோன் நெகிழ்ச்சிமயமான காட்சிகளின் மூலமாக மனித உறவுகளின் சிதைவுகளையும், குடும்பம் என்கிற அமைப்பின் உள்பலவீனங்களையும் ஒரு சமூகக் கோபத்துடன் அழகாக முன்வைத்திருக்கிற ‘இப்படிக்கு பேராண்டி’ மாற்றுச் சினிமாவுக்கான போற்றுதலுக்குரிய முயற்சியாகும்.

தாத்தா பாட்டி
தாத்தா மற்றும் பாட்டி கவனிப்பில் வளரும் குழந்தைகள் தான், அதிக மகிழ்ச்சியாக வளர்வதாக லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஒர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
சர்வதேச அளவில் மக்களின் வாழ்க்கை ந்திரமயமாகிவரும் நிலையில், தங்களது குழந்தைகளுடன் அமர்ந்து, மனதை பகிர்ந்து கொள்வதில் பெற்றோர்களுக்கு நேரமில்லாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்காமல், ஏங்கும் நிலைக்குத் தள்ளப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு தனிமைப்படுத்தப்படும் குழந்தைகள், தவறான வழியில் சென்று, பெரிய சமூகப் பிரச்னையை எதிர்கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இந்நிலையில், லண்டன் பல்லைகக்கழகம் ஒன்று இதுகுறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் நேரத்தை பகிர்ந்துகொள்ள முடியாவிட்டாலும், தாத்தா-பாட்டியின் கவனிப்பில், குழந்தை நல்லமுறையில் வளர்வதற்கு உறுதுணையாக இருந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. தாத்தா-பாட்டியுடன் வளரும் குழந்தைகளுக்கு, தாய்-தந்தையுடன் நேரத்தைப் பகிர்ந்து கொள்ளாதது ஒரு குறையாகத் தெரியவில்லை என்றும், அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியாக வளர்வதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், தங்களது பேரக்குழந்தைகளுடன் நிதானமாக அமர்ந்து, அவர்களது இன்ப, துன்பங்களை பகிர்ந்து கொள்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. தவறு செய்யும் குழந்தைகளை திருத்துவதில், தாத்தா-பாட்டி, மென்மையான போக்கை கடைபிடிப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. முதுமையான பெற்றோர்களை வீட்டை விட்டு துரத்துவதும், அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பதும், இன்றைய இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், இந்த ஆய்வு மனமாற்றத்தை ஏற்படுத்தும் என்றால் மகிழ்ச்சி தான்.