அம்மா வாழ்ந்த வீட்டிற்குள் நுழையும்போது, ஒவ்வொரு மூலையிலும் அவள் இருப்பை கிசுகிசுக்கிறது காற்று. அவளுடைய அரவணைப்பு போன்ற ஒரு வெதுவெதுப்பான காற்று காலி அறைகளை நிரப்புகிறது.
உள்ளே செல்லும் ஒவ்வொரு அடியிலும், நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன. அவளுடைய பரிச்சயமான வாசனை, அவளுடைய நேசத்துக்குரிய உடைமைகள். எப்படியோ அவளின் ஒரு பகுதி இன்னும் இங்கே காத்திருக்கிறது என்ற உணர்வு.
அட ஆண்களே, சகோதரர்களே... அப்பாக்களே... நீங்கள் ஏன் இப்படி இருக்கிறீர்கள்? ஒரு வீட்டைக் கட்டி முடிக்க காசு இருந்தால் போதும். அதை நிர்வகித்து வாழும் இடமாக்க ஒரு பெண் தேவையாய் இருக்கிறாள். ஆனால் அவளோடு முடிந்து விடும் வீடுகள் ... கைவிடப்பட்ட வீடுகளாக மாறி விடுவது ஏன்? நீங்கள் அதை எடுத்து நடத்த ஏன் முடிவதில்லை? ஒரு பெண்ணால் வீட்டையும் அலுவலகத்தையும் கவனிக்க முடியும் போது, உங்களால் ஏன் முடிவதில்லை? நீங்கள் மாற வேண்டிய இடத்தில் இருக்கிறீர்கள் என்பது ஏன் உங்களுக்கு புரிவதே இல்லை?
அந்த வீடு உண்மையில் அம்மா-அப்பா வீடாகத்தானே இருக்க வேண்டும்?
0 comments:
Post a Comment