வெ.இராதாகிருஷ்ணன் அவர்கள் எழுதும்படி அழைத்ததால்.
பதிவுலகில் நான் எப்படிப்பட்டவர்?
யாரேனும் சென்சஸ் எடுத்திருந்தால், இந்த தமிழ் பதிவு 'உலகில்' "நிஜமாக" இருப்பவர் மொத்தம் எத்தனை பேர் என்றறிய ஆவல் :D
1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
விதூஷ்
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
உண்மையான பெயர் ஸ்ரீவித்யா, அம்மா என்னை விதூஷ் என்றே அழைப்பார். எந்த முகமூடியும் இல்லாமல் நான் நானாக மட்டுமே (குறைந்த பட்சம் பெயரளவிலாவது) இருக்க.
3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
2003-ஆம் வருடம் என் ஸ்கிரிப்பிளிங் பேட் சேகரிப்புகள் பழைய புத்தகக் கடைக்குப் போனதால், என் தம்பி ஹரி கொடுத்த யோசனையின் பேரில் வானவில் மற்றும் அமுதம் தமிழ் எழுத்துரு, க்ருதிதேவ் ஹிந்தியிலும், சமஸ்கிருத்திற்கு ஐ-டிரான்சலேட்டர் புரோக்கிராம்களைப் பயன்படுத்தி தட்டச்சு செய்து ரீரைட்டபிள் சிடிக்களில் சேகரிப்பு ஆரம்பித்தது. இப்போது NHM Font Converter-ருக்கு நன்றி. 2004-ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் ஒரு ப்ளாகும் தொடங்கி எந்த பதிவையும் வெளியிடாமல் வைத்திருந்தேன். முதல் முறையாக ப்ராமிஸ்ராணி என்ற நபர் கர்னாடக சங்கீதங்களை எழுதி வைத்து வெளியிட்டிருந்தார். அட! இதையெல்லாம் பகிரக் கூட முடியும் போலிருக்கே என்று தேடிப்பார்த்தேன். முதலில் படித்தது மரத்தடி யாஹூ குழும ஃபோரம் பக்கங்கள். அப்போது எழுதவேண்டும் என்ற உந்துதல் ஏதும் இல்லை. ஒவ்வொரு முறையும் ஃபான்ட் இல்லாமல் அந்தந்த பக்கங்களைப் படிக்க எழுத்துருக்களை டவுன் லோட் செய்து கொண்டு படித்ததுண்டு. மரத்தடி இணையத்தில் நடந்த அரசியல்கள் கொஞ்சம் நிறையாவே இணைய etiquette கற்றுக் கொடுத்தது. அப்புறம் தமிழ்மணம் மூலம் படித்துக் கொண்டிருந்தேன். பிப்ரவரி 16 2009 அன்று பதிவு கணக்கு ஆரம்பித்தேன் எனக்குத் தெரிந்ததைப் பகிர.
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
பிரபலமாக விருப்பம் இல்லை.
5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
சொந்த விஷயங்களுக்கு டைரி எழுதுவது உண்டு, பாஸ்கர் கூட பார்க்க அனுமதிக்காத நிலையில், அதைப் போய் நியூஸ் பேப்பர் மாதிரி பொதுவில் வைப்பானேன். அப்புறம் என் குடும்பப் பாட்டின் ராகம் தாளம் பல்லவிகளைத் தெரிந்து கொண்டு வாரிசு உரிமை கொண்டாடிக் கொண்டு யாராவது வந்து விட்டால் என்ன செய்வது?? :))
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
பொழுது போக்க சினிமா பார்கிறேன். சம்பாதிக்க வேலை செய்கிறேன். எழுதவேண்டும் என்பதற்காக மட்டும் எழுதுகிறேன்.
7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
2004-கில் இணைய தள வடிவமைப்பு கற்பதற்காக முதன்முதலாக ஆரம்பித்தது. ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் எழுதும் ஒரு பிரைவேட் தளம் ஒன்று இருக்கிறது. அரசியல், புத்தகம் சார்ந்த என் கருத்துக்கள் மற்றும் உத்யோகம், தொழில் சார்ந்த விபரங்களைப் பகிர்வதால் குறிப்பிட்ட சில நண்பர்களுடன் மட்டும் பகிர்ந்திருக்கிறேன். அதைப் பொதுவில் பகிர விருப்பம் இல்லை.
தமிழில் பக்கோடா பேப்பர்கள், நாற்றங்கால், வித்யாஸ் கிச்சன் என்று மூன்று பதிவுகள் இருக்கின்றன. இதுதவிர ஹிந்தியில் என் பெண்ணுக்குக் கற்றுக் கொடுத்தவற்றையும் துத்லாஹட் என்ற பதிவில் பகிர்கிறேன். பேரன்ட்ஸ் க்ளப் என்ற பதிவில் அவ்வப்போது எழுதுகிறேன்.
8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
ஆங்கில ப்லாக்கர்களுக்கு விவாதிக்கவும் கற்றறியவும் திறந்த மனமும் பரந்த மனப்பான்மையும் இருப்பது போல, குறைந்த பட்ச அளவுக்காவது மனப்பாங்கு தமிழ் பதிவுலகில் இல்லையே என்று ஆங்கில ப்லாக்கர்கள் மீது பொறாமை உண்டு.
யாரிடம் கோபப்படுவது? தமிழ் பதிவுலகில் மிகச் சிலரைத் தவிர யாரையும் முன்பின் தெரியாது. அந்நியரிடம் கோபப்படும் அளவுக்கு இன்னும் ஆகவில்லை. ஆனால் எதிர்கருத்துக்கள் உண்டு. அதிகம் விதண்டாவாதங்கள் மட்டுமே செய்யப்படுகின்றன என்பதால் எப்போதும் தமிழ் பதிவுகளில் என் மாற்றுக் கருத்துக்களைத் தெரிவிப்பதில்லை. தமிழ் பதிவர்கள் எப்போதும் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே இருப்பது போன்றும் ஒரு உணர்வும் ஏற்பட்டு இருக்கிறது. எதையும் நிதானமாக யோசிக்கவும், தெளிவு பெறும் பொறுமையில்லாமல் ஆழ உழுவதை விட அகல உழும் ஆசை, அன்றைய தினப் பரபரப்புக்காக எதையும் செய்வது என்று சூழ்நிலையும் இருக்கிறது என்பதில் நிறையவே வருத்தம் உண்டு.
எழுத்தின் மீதும் மொழிகளின் மீதும் அதிக மரியாதை வைத்து எதையும் சுயமதிப்பீடு செய்து, ஆழ்ந்து எழுதும் பதிவர்களான, பாட்டி சொல்லும் கதைகள் ருக்மிணி அம்மா, கிருத்திகா வாசுதேவன், அமித்து அம்மா, குறிஞ்சி மலர்கள் சுந்தரா, காகித ஓடம் பத்மா, ஒரு பெண்ணின் பயணம் சீதாம்மா, திருமதி.எம்.ஏ.சுசீலா, அகநாழிகை வாசு, பழமைபேசி மணி, நேசமித்ரன், தருமி ஐயா, என்.கணேசன், அடர்கருப்பு காமராஜ், குழந்தை ஓவியம் ஆதவா, ஜலதரங்கம் ரெளத்ரன், ஜிஎஸ் தயாளன், பத்ரி சேஷாத்ரி, சேரலாதன், சைபர்சிம்மன், ஆகியோர் மீது அதிக பிரமிப்பு உண்டு, இவர்களின் எழுத்தின் மீது அதிக மரியாதையும் உண்டு. இவர்களிடம் இருக்கும் எழுத்தின் மீதான உழைப்பும் பொறுப்புணர்வும் எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு இலக்கணமாக இருக்கிறது.
9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
உரையாடல் கதைப் போட்டிக்காக நான் எழுதிய அக்கரை பச்சை-கதைக்கு முதன்முதலாக பின்னூட்டம் இட்டு வாழ்த்திய கோபிநாத், நந்தா, சிடிசன் ஆஃப் இந்தியா, மற்றும் தனிமடல் எழுதி வாழ்த்திய அகநாழிகை வாசு.
10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
முக்கியமாக ஏதும் தோன்றவில்லை. பொதுவுலகிற்கு என் ஆட்டோபயாகிரபி அவசியம் தெரியவேண்டும் என்ற அளவுக்கு தனித்துவமிக்க சாதனைகள் புரிந்த நபரோ, அப்படி தெரியக்கூடாது என்றும் இரகசியம் காக்கும் அளவுக்கும் முக்கியஸ்தரோ இல்லை. யாரையும் பாதிக்காத அளவில் சுவாரசியமான மெல்லிய சொந்த விஷயங்களை மிகவும் மெல்லிய முறையில் பரவாயில்லையென நினைக்கும் போது பக்கோடா பேப்பரில் பகிர்கிறேன். பெரும்பாலும் பதிவோ / கருத்தோ படு-த்ராபையாக இருக்கும் போது கொஞ்சம் பழகிய நம்பகமான நண்பர்களாக இருந்து, வெறும் பொழுதும் மிஞ்சும் போது மொக்கை/கும்மியும் அடிக்கிறேன். :D
Charity begins at home என்பதை மிகவும் தீவிரமாக நம்புகிறேன். உலகம் உய்ய வேண்டும் என்ற போராட்ட குணம் வருவதற்குள் குழந்தை வேறு பிறந்து விட்டது. என்னையே முழுதாய் நம்பி இருக்கும் இவர்களை கவனித்து உய்ய வைக்கவும், அலுவலகம் செல்லவும், மிஞ்சிப் போனால் படித்ததை பதிவாக எழுதுவதும் என ஆகி விடுகிறது. குடும்பம் எனக்கு முக்கியம், என் ப்ரயாரிட்டியும் கூட. இவ்வளவுதான் நான்.
===========================================================
இந்தத் தொடர்பதிவை எழுத நான் இவர்களை அழைக்கிறேன்.
Scribblings வித்யா
சின்ன அம்மிணி அகிலா
கேளுங்க...கேளுங்க...கேட்டுக்கிட்டே இருங்க டவுட் கார்த்திகா
புதுகைத் தென்றல் கலா
சும்மா
=========
update
வீடு திரும்பல் மோகன் குமார்
இரும்புத்திரை அரவிந்த்
நேசமித்ரன் கவிதைகள்
பலா பட்டறை
வானவில் போல் வாழ்க்கை....அழ... எறும்பு ராஜகோபால்
விசா பக்கங்கள் ரைட்டர் விசா
ப்ராஜக்ட் மேனேஜர் வெண்பூ
எல்லாரையும் எழுதுங்கன்னு கேட்டுக்கொள்கிறேன்.
44 comments:
சூப்பர்.
ஆனாலும் உங்க முதல் இடுகையிலேயே நீங்க பிரபலமா வருவீங்கன்னு முதல் பின்னூட்டம் எழுதிய ஒரு பெரிய பதிவர் பத்தி சொல்ல மறந்தது ஏனோ? :)
திரு barcode:சாபத்தை எல்லாம் வெளியே சொல்றதில்லை. :))
//ஆனாலும் உங்க முதல் இடுகையிலேயே நீங்க பிரபலமா வருவீங்கன்னு முதல் பின்னூட்டம் எழுதிய ஒரு பெரிய பதிவர் பத்தி சொல்ல மறந்தது ஏனோ? :)//
Pls read the post & Comment :)
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
பிரபலமாக விருப்பம் இல்லை.
//அம்மா என்னை விதூஷ் என்றே அழைப்பார்.//
உங்க அம்மாவுக்கு அப்பவே தெரிஞ்சிருக்கு. விதூஷ் என்றால் விதூசகனின் short form தானே
:))
பஸ்சுல ஏறுங்க எறும்பு... அங்கே எல்லாரும் பிக்னிக் போயிட்டு இருக்கோம். ஒன்லி நண்பர்கள்..
அசத்தலான பதில்கள்: உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..
super, nalla pathilkal, vaazthukkal!!
தெளிவான, நேர்மையான பதில்கள் விதூஷ்.
//யாரேனும் சென்சஸ் எடுத்திருந்தால், இந்த தமிழ் பதிவு 'உலகில்' "நிஜமாக" இருப்பவர் மொத்தம் எத்தனை பேர் என்றறிய ஆவல் :D//
சாதிவாரியாக இல்லையே!
:-)
அருமை; ரசித்தேன்.
குறிப்பாய் தனிப்பட்ட விஷயங்கள் ப்ளாகில் பகிர கூடாது என்ற உங்கள் கருத்து மிக சரி; போலவே குடும்பம் தான் முக்கியம் என்ற கருத்தும். இந்த ரெண்டு கருத்திலும் உங்களுடன் முழுவதும் ஒத்து போகிறேன்.
ஆமாம்.. ஏன் பெண்களை மட்டும் அழைத்துள்ளீர்கள்?
ஆஹா மாட்டி விட்டுட்டீங்களா???
சரி பதிவு போடறேன்.
போடறேன் வித்யா , கொஞ்சம் டைம் ப்ளீஸ் :)
மோகன்குமார், ஏன்னு கேள்வி கேட்டா இப்படித்தான் மாட்டிக்கவேண்டியிருக்கும்
எழுதிட்டா போச்சு.
அழகாய் பகிர்ந்திருக்கிறீர்கள்.
straight சகோ!
fantastic! :-)
http://pudugaithendral.blogspot.com/2010/07/blog-post_21.html
எழுதிட்டேன்
முதல் தடவ வந்தப்போ இல்ல.
ஓ.கே கண்டிப்பா எழுதிடுவோம்.
Thanks :)
தங்கள் மனதில் உள்ளதை அப்படியே எழுதி வைத்தது போன்று மிகவும் சிறப்பாக இருக்கிறது.
பல விசயங்கள் தங்களிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும் என மனதில் எண்ணம் எழுந்தது. மிக்க நன்றி விதூஷ்.
//மோகன் குமார் said...
ஆமாம்.. ஏன் பெண்களை மட்டும் அழைத்துள்ளீர்கள்
////
ஸாரி பலா!! உங்க ப்ரொஃபைல் போட்டோ பார்த்து, இவ்ளோ நாள் நான் தப்பா நினைச்சிட்டேன்!!
(அப்டேட்-ன்னு போட்டிருந்தாலும் விட மாட்டமில்ல)
மிகவும் ஸ்டெரெயிட் பார்வர்டான பதில்கள்..
என்னையும் கோர்த்து விட்டாச்சா
ம்ம் :)
எழுதலாம் !
ங்கில ப்லாக்கர்களுக்கு விவாதிக்கவும் கற்றறியவும் திறந்த மனமும் பரந்த மனப்பான்மையும் இருப்பது போல, குறைந்த பட்ச அளவுக்காவது மனப்பாங்கு தமிழ் பதிவுலகில் இல்லையே என்று ஆங்கில ப்லாக்கர்கள் மீது பொறாமை உண்டு.
யாரிடம் கோபப்படுவது? தமிழ் பதிவுலகில் மிகச் சிலரைத் தவிர யாரையும் முன்பின் தெரியாது. அந்நியரிடம் கோபப்படும் அளவுக்கு இன்னும் ஆகவில்லை. ஆனால் எதிர்கருத்துக்கள் உண்டு. அதிகம் விதண்டாவாதங்கள் மட்டுமே செய்யப்படுகின்றன என்பதால் எப்போதும் தமிழ் பதிவுகளில் என் மாற்றுக் கருத்துக்களைத் தெரிவிப்பதில்லை. தமிழ் பதிவர்கள் எப்போதும் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே இருப்பது போன்றும் ஒரு உணர்வும் ஏற்பட்டு இருக்கிறது. ---//
நல்ல சொல்லி இருக்கிங்க விதுஷ்... நான் கூட எதிர்கருத்து சொல்ல யோசிப்பதுண்டு...
எல்லாமே நேரடியான பதில்கள்.
பகிர்வு நன்றி தோழி.
//அதிகம் விதண்டாவாதங்கள் மட்டுமே செய்யப்படுகின்றன என்பதால் எப்போதும் தமிழ் பதிவுகளில் என் மாற்றுக் கருத்துக்களைத் தெரிவிப்பதில்லை//
தமிழ் பதிவர்களின் பெருந்தன்மை.. அடுத்தவங்க கருத்துக்கு மதிப்பு கொடுத்து கும்மி அடிக்கிறது
//ஆனாலும் உங்க முதல் இடுகையிலேயே நீங்க பிரபலமா வருவீங்கன்னு முதல் பின்னூட்டம் எழுதிய ஒரு பெரிய பதிவர் பத்தி
சொல்ல மறந்தது ஏனோ? :)//
தல சூரியனுக்கே டார்ச் லைட் வேணுமான்னு விட்டு இருப்பாங்க
//வாரிசு உரிமை கொண்டாடிக் கொண்டு யாராவது வந்து விட்டால் என்ன
செய்வது?//
உங்க பக்கோடாவைக் கொடுங்க எல்லாம் சரியா போகும்
//தொழில் சார்ந்த விபரங்களைப் பகிர்வதால் குறிப்பிட்ட சில நண்பர்களுடன் மட்டும் பகிர்ந்திருக்கிறேன். அதைப் பொதுவில்
பகிர விருப்பம் இல்லை.//
கேட்க ஆள் இல்லைன்னு சொல்லி முடிங்க
well written vidoosh!
ம்ம் இடுகை போட்டாச்சு :)
நல்ல பதில்கள்.
என் பெயரை குறிப்பிட்ட பிரமிப்பிலிருந்து இன்னும் வெளிவரவே இல்லை வித்யா ...
எதிரே பார்க்காதது இது..மிக்க நன்றி
உங்கள் எல்லா படைப்புகளைப் போல இதுவும் அழகான maturity உடன் ...வாழ்த்துக்கள்
அருமையான பேட்டி...!!!
ரொம்ப தெளிவான பகிர்வு விதூஷ்.. நான் ஊர் செல்கிறேன்டா.. தமிழ் மகனும் இந்த பதிவுக்கு கூப்பிட்டு இருக்கார் .. எனவே ஆகஸ்ட் முதல் வாரத்தில் எழுதுடுறேன் மா..
அடடா ஒரு கேள்வி கேட்டதுக்காக நம்மளையும் சேர்த்தாச்சா? ரைட்டு.. அடுத்த வாரம் முடிவதற்குள் எழுதுறேன்
ஆங்கில ப்லாக்கர்களுக்கு விவாதிக்கவும் கற்றறியவும் திறந்த மனமும் பரந்த மனப்பான்மையும் இருப்பது போல, குறைந்த பட்ச அளவுக்காவது மனப்பாங்கு தமிழ் பதிவுலகில் இல்லையே என்று ஆங்கில ப்லாக்கர்கள் மீது பொறாமை உண்டு.
...... எனக்கு ஆதங்கம் உண்டு.
அழைத்ததற்கு நன்றி விதூஷ் ...
சீக்கிரமே எழுதிடறேங்க
:)
பாசாங்கில்லாமல் பகிர்ந்ததற்கு நன்றிகள் மேடம்..!
//பொழுது போக்க சினிமா பார்கிறேன். சம்பாதிக்க வேலை செய்கிறேன். எழுதவேண்டும் என்பதற்காக மட்டும் எழுதுகிறேன்.//
:)
மனசுல உள்ளத அப்படியே பதில்களா கொடுத்துள்ளது சிறப்பு....
எனக்கு பிடிச்சது இந்த பதில்கள் தான்...
1. சொந்த விஷயங்களுக்கு டைரி எழுதுவது உண்டு, பாஸ்கர் கூட பார்க்க அனுமதிக்காத நிலையில், அதைப் போய் நியூஸ் பேப்பர் மாதிரி பொதுவில் வைப்பானேன்.
2. ஆங்கில ப்லாக்கர்களுக்கு விவாதிக்கவும் கற்றறியவும் திறந்த மனமும் பரந்த மனப்பான்மையும் இருப்பது போல, குறைந்த பட்ச அளவுக்காவது மனப்பாங்கு தமிழ் பதிவுலகில் இல்லையே என்று ஆங்கில ப்லாக்கர்கள் மீது பொறாமை உண்டு.
3. பொழுது போக்க சினிமா பார்கிறேன். சம்பாதிக்க வேலை செய்கிறேன். எழுதவேண்டும் என்பதற்காக மட்டும் எழுதுகிறேன்.
4. எழுத்தின் மீதும் மொழிகளின் மீதும் அதிக மரியாதை வைத்து எதையும் சுயமதிப்பீடு செய்து, ஆழ்ந்து எழுதும் பதிவர்கள் என்று உங்களுக்கு பிடித்த பதிவர்களை குறிப்பிட்டது...
வாழ்த்துக்கள் விதூஷ்....
நன்றி ஷங்கர்.
நன்றி எறும்பு
நன்றி ஸ்டார்ஜன்
நன்றி அபி அப்பா
நன்றி விக்கி
நன்றி வால் அருண்: ஜாதிவாரியாக எடுத்தால் உங்களுக்குத்தான் சௌகரியமா இருக்கும் அருண். :-))
நன்றி மோகன்குமார்: நீங்க கேட்டபடியே சில ஆண் பதிவர்களையும் இணைச்சுட்டேன்.
நன்றி கலா :)
நன்றி சின்ன அம்மிணி :)) தோணும் போது எழுதுங்க
நன்றி வித்யா.
நன்றி பா.ரா. அண்ணா
நன்றி விசா
நன்றி வி.ரா சார்
நன்றி ஹாலிபாலி - ஷங்கரு பன்முகக்கலைஞர். பதிவுலக ஸ்டால்.. சரி வேணாம்
நன்றி கேபிள் சங்கர்.
நன்றி நேசன்.
நன்றி ஜாக்கி சேகர்.
நன்றி கமலேஷ்.
நன்றி நசர் - என்ன நடக்குது. ஆறரைக்கு இன்னும் நான் கமென்ட் போடலைங்கறது நினைவிருக்கட்டும். அதான் சொல்லிட்டேனே !!
நன்றி இனியா :)
நன்றி சரவணகுமார்.
நன்றி பத்மா.
நன்றி ஜெய்லானி
நன்றி தேனம்மை
நன்றி கார்த்திகா
நன்றி சரவணன் அண்ணா
நன்றி சுந்தர்
நன்றி கோபி
//நன்றி வால் அருண்: ஜாதிவாரியாக எடுத்தால் உங்களுக்குத்தான் சௌகரியமா இருக்கும் அருண். :-))//
எனக்கு என்னாங்க செளகரியம்!
தெரிஞ்சி நான் என்ன பண்ணப்போறேன்!
ஒருவரது செயல் தான் எனக்கு நண்பராக இருக்கனுமா? வேண்டாமான்னு திர்மானிக்கும்!
எத்தனை திருட்டுபயலுக இருக்காங்கன்னு வேணும்னா தெரிஞ்சிக்க ஆசை!
பதிவு அருமை. இந்தப் பதிவு கீழ்கண்ட வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற பதிவுகளை படிக்க..
http://senthilathiban.blogspot.com/2010/07/blog-post_31.html
இந்த இடுகைக்கு என் பதிவின் கீழே பதில் எழுதியது சரியாய்ப் படவில்லை.
அதனால் இங்கே....
கடைசிக் கேள்விக்கான பதிலில் பல அர்த்தங்களும் நிதர்சனங்களும் பொதிந்துள்ளன.
நான் சொல்லவேண்டும் என்றில்லை, கையில் கையேடு ஒன்றைக் கொண்டு எழுதத் தோன்றுவதையெல்லாம் குறித்துக் கொள்ளுங்கள். நேரம் கிடைக்கையில் அவற்றை வடித்திடுங்கள். அப்போது, நாங்கள் எதையும் மிஸ் செய்ய மாட்டோம்.
http://honeylaksh.blogspot.in/2010/08/blog-post_05.html விதூஷ் இதை பார்க்கலையா :)
Post a Comment