ட்ரூமேன் ஷோ (1998) - சினிமா விமர்சனம்

ஒரு சின்ன விபத்தில் வலதுகை விரல்களில் அடிபட்டு வலது கை உதவாமல் இருக்கு. சந்தேக ராணி சித்ரா உதவியோடு இந்தப் பதிவு. நன்றீஸ் சித்ரா. சனிக்கிழமை அன்று எம்பொண்ணை ஊர்சுற்ற அழைத்து போய் விட்டு டிவியில் ஹோம் அலோன் மீண்டும் எத்தனாவது முறையாகவோ பார்த்தேன். எம்பொண்ணு ரொம்ப ரசித்து சிரித்து பார்த்தாள். ஞாயிறு கைவலி கொஞ்சம் அதிகமாகி இருந்தது. நான் மட்டும் வீட்டில் இருந்தேன். எல்லோரும் வெளியே போய் விட்டார்கள்.  Beautiful Life, Shutter Island, Up போன்ற அருமையான படங்கள் பார்க்க முடிந்தது. ரொம்ப போரடித்து போய் டிவியை browse செய்து கொண்டிருந்தேன். HBO-வோ PIX-ஸோ ஏதென்று நினைவில்லை, சிக்கிய திரைப்படம் ட்ரூமேன் ஷோ. ஜிம் கேரி என்றதுமே சேனலை மாற்றாமல் அமர்ந்து பார்த்தேன்.

ஒரு ஜீனியஸ் நடிகன்.. எனக்கு ரொம்ப பிடிக்கும். ரொம்ப லாஜிக் எல்லாம் பார்க்காமல், just a movie, என்பதாக பார்த்ததில் இத்தனை நாள் எப்படி மிஸ் பண்ணினோம் என்றே இதோ இப்போது வரை ஜிம் கேரியின் முகம் மனதிலேயே நிற்கிறது. அருமையான படம்.


ட்ரூமேன்-னின் அம்மா-அப்பா, மனைவி, உயிர் நண்பன் முதற்கொண்டு அவனைத் தவிர மீதி எல்லோருமே ஒரு 24-மணிநேர இடைவேளையே இல்லாத டிவி ரியாலிட்டி ஷோவின் நடிகர்கள். அவன் அவர்களையே உண்மை என்று நம்பி பிறந்தது முதல் ஒரு சின்னத் தீவில் வளர்ந்து வருகிறான். ஷர்ட் பட்டன் முதல் ஒவ்வொரு இடத்திலும் கேமரா-க்கள் ஒளித்து வைக்கப் பட்டு அவன் வாழ்க்கையை அவனுக்கே தெரியாமல் படமாக்குகிறது.

இன்சூரன்ஸ் ஏஜண்டாக இருக்கும் ட்ரூமேன் ஒரு நாள் வேலைக்கு போகும் போது ஏதோதோ பொருட்கள் அவன் காரில் வந்து விழுகிறது. ஏதோ ரேடியோ அறிவிப்பு வந்ததும் அது ஏதோ ஹெலிகாப்டரில் இருந்து விழுந்தவை என்று நம்புகிறான்.


அவன் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் sponsor-கள் மூலம் விளம்பரம் செய்து creator இந்த ஷோவை நடத்துகிறார்.


அவன் விரும்பும் பெண்ணொருத்தியை நூலகத்தில் சந்திக்கிறான். அவளோ "எனக்கு உன்னோடு பேச அனுமதியில்லை" என்கிறாள். இருவரும் ரகசியமாக கடற்கரையில் சந்திக்கின்றனர். தன் பெயர் லாரன் இல்லை சில்வியா என்கிறாள். அவள் இவனிடம் உண்மையைக் கூறுகிறாள். அவள் தந்தையென்று சொல்லிக் கொண்டு ஒருவர் இவளுக்கு ஷீசோபெர்னியா இருப்பதாக் கூறி இழுத்துச் செல்கிறார். போகும் போது இவர்கள் பிஜி-க்கு செல்வதாக சொல்லிவிட்டுப் போகிறார் அந்தத் 'தந்தை'


இவளது முகத்தை பத்திரிக்கைகளில் இருந்து கிழிக்கப் பட்ட பல படங்களை ஒட்டி உருவாக்குகிறான்.

ஒரு நாள் இவனது கார் ரேடியோ இவனது ஒவ்வொரு செயல்பாடுகளையும் விவரிக்கிறது.அன்றே ஏதோ ஒரு கட்டிடத்தின் எலிவேட்டர் ஸ்டுடியோ செட் என்று அறிந்து அதிர்ச்சி அடையும் போது அவன் அக்கட்டிடத்தில் அத்து மீறி நுழைந்ததாகச் சொல்லி வெளியேற்றப் படுகிறான்.

இதன் பிறகு ஒரு நாள் அவன் தாயும் அவன் மனைவியும் பழைய போட்டோ ஆல்பங்களை காட்டிப் பேசிக் கொண்டிருக்கின்றனர். அவனது திருமண ஆல்பங்களைப் பார்க்கும் போது அவன் மனைவி தன் விரல்களை cross செய்து வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறான்.

மறுநாள் அந்த தீவை விட்டு வெளியேற முயற்சி செய்கிறான் ஆனால் ஒரு மாதத்திற்கு எல்லா flight-களும் book ஆகி இருப்பதாக அறிகிறான். சிகாகோ செல்ல முற்பட்டு ஏறும் பஸ்சும் பிரேக் டௌன் ஆகிறது.


"இதோ இப்போது ரெட் சைக்கிளில் ஒருத்தி வருவாள் பார், பின்னாலேயே பூ கொண்டு ஒருவன் போவான். அப்புறம் ஒரு கார்" என்கிறான், அவன் மனைவியிடம். அதே போல ஆகிறது. "என்னவோ தெரியவில்லை, எல்லாம் ஒரே மாதிரி திரும்பத் திரும்ப சென்று கொண்டிருக்கிறார்கள்" என்று குழம்புகிறான். அவன் மனைவி மெரில் பேச்சை மாற்றுகிறாள். அந்த நகரத்தை விட்டு வெளியேற முயற்சிக்கிறான். ஒவ்வொரு தெருவிலும் செயற்கையாக traffic jam ஆகிறது. இதையும் அவன் தெரிந்து கொண்டு திரும்பிச் செல்வதாக ஏமாற்றி கண்டு பிடித்து, தனக்கு தண்ணீர் பயம் இருப்பதால், அந்த நகரத்தை விட்டு வெளியே செல்லும் ஒரே பாலம் மீது தன் மனைவியை காரோட்டும் படி வற்புறுத்தி பாலத்தை கடந்து செல்கிறான். பாலத்தைக் கடந்ததும் அங்கே power plant ஒன்றில் தீவிபத்து நேர்ந்து விட்டதாக இவர்களை வலுக்கட்டாயமாய் திருப்பி அனுப்புகின்றனர்.

அவன் காலையில் குடிக்கும் ஹாட் சாக்லேட்டை அவன் மனைவி டப்பாவோடு கையில் எடுத்துக் கொண்டு விளம்பரப் படுத்தும் விதமாக "ட்ரூமேன் தினமும் காலையில் விரும்புவது ஹாட் சாக்லேட்" என்று சொல்லி கோல்கேட் புன்னகை புரிகிறாள். ட்ரூமேன் ஒன்றும் புரியாமல் "என்ன சொல்கிறாய்" என்கிறான். சமாளிக்கிறாள். இருவருக்கும் வாக்குவாதம் ஆகிறது. அப்போது 'தற்செயலாக' அவன் நண்பன் வருகிறான். ட்ரூமேனை வெளியே அழைத்துச் செல்கிறான். ட்ரூமேன் தன்னைச் சுற்றி ஏதோ பொய்யாக நிகழ்வதாக உணருவதாகக் கூறுகிறான்.

இவனது இந்தக் குழப்பத்தை திசை திருப்ப இந்த ஷோவின் creator ட்ரூமேனின் தொலைந்து போன தந்தையை அவனை சந்திக்கச் செய்கிறார். அவனும் நெகிழ்ந்து போகிறான்.

இந்த ஷோ பற்றி பார்வையாளர்களுடனான நேரடி உரையாடலில் creator-ரிடம் சில்வியா 'அவனை நீங்கள் ஏமாற்றுகிறீர்கள். அவன் ஒரு சிறைக் கைதி போல நடத்தப் படுகிறான். அவனுக்கு உண்மை தெரிய வரும் போது நீங்கள் அவனை தடுத்து நிறுத்தவே முடியாது' என்று குமுறுகிறாள்.

ஒரு நாள் எப்போதும் போல ட்ரூமேன் அலுவலகத்துக்குச் செல்கிறான். மெரில் வேலையை விட்டுச் சென்று விட்டதால், வேறொரு பெண்ணை அவனுக்கு தோழியாக்கும் முயற்சியில் அவனுக்கு அறிமுகம் செய்து வைக்கின்றனர். அவனும் எப்போதும் போலவே நடந்து கொள்கிறான். மாலையில் வீடுதிரும்பி தன் வீட்டின் basement அறைக்குள் செல்பவன் அப்படியே உறங்கிப் போவதாக கேமரா-வில் தெரிகிறது. நீண்ட நேரமாகியும் அவன் எழுந்திருக்க வில்லை என்பதால் christof(creator) சந்தேகம் கொண்டு ட்ரூமேன்-னின் நண்பனான மார்லனை பார்க்கச் சொல்கிறார். ட்ரூமேன் தப்பிச் சென்று விட்டான் என்று தெரிய வருகிறது.

ஷோ 'technical' பிரச்சினைகளுக்காக நிறுத்தப் படுகிறது. எல்லோரும் ட்ரூமேனைத் தேடுகிறார்கள். ட்ரூமேன் ஒரு boat-ட்டில் தப்பிச் செல்வது தெரிகிறது. புயல் மழை எல்லாம் உருவாக்கி அவனை தடுக்க முயற்சிக்கிறார்கள். அவன் boat ஸ்டுடியோ செட்டின் எல்லையை அடைந்து வானம் போல வரைந்து வைத்திருக்கும் சுவற்றில் முட்டி நிற்கிறது. அவனுக்கு எல்லாம் தெரிய வருகிறது. அந்த சுவற்றை ஒட்டி படிகள் இருக்கின்றன. அந்தப் படிகள் வெளியேறும் கதவில் சென்று முடிகிறது. அவன் அக்கதவை அடையும் போது christof-ன் குரல் ஒலிக்கிறது. அந்தக் குரல் மூலம் அவன் அனைத்தையும் அறிகிறான். அவன் தன் புது உலகத்தை நோக்கி வெளியேறும் போது இந்த ஷோ நிறைவுக்கு வருகிறது.


"வேறேதும் ஷோ இருக்கிறதா" என்று பார்வையாளர்கள் தேடுகிறார்கள்.

20 comments:

- யெஸ்.பாலபாரதி said...

நல்லா இருக்கு. எனக்கும் ஜிம் கேரி பிடிக்கும்.
(ஆங்கிலப்)படங்களின் பெயர் எல்லாம் நினைவில் இருப்பதில்லை. இந்த படத்தைஇன்னும் பார்க்கலை. பார்த்துட வேண்டியது தான். நல்ல சினிமா கதை சொல்லியா இருக்கீங்க! :)) #ஒத்த கையை வச்சுகிட்டு, அதுவும் அஸிஸ்டெட் வச்சுகிட்டு... எம்மாம் பெரிய பதிவு..

☀நான் ஆதவன்☀ said...

டிராமெடிக்கான படம். ஆனாலும் ரசிக்க வச்சிருக்கும். ஹீரோ மேல ரசிகர்களுக்கு ஒரு பரிதாப சூழ்நிலையை கடைசி வரை கொண்டு சென்றிருப்பார்கள்... விக்ரமன் படம் போல :))

Unknown said...

படம் வெளி வந்த புதிதில் ட்ரெய்லர் மட்டும் பார்த்துவிட்டு பல ஆண்டுகள் தேடினேன் 2 வருடங்கள் முன்பு தான் பார்த்தேன்.

எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள் என்பதே மிக பிரமிப்பா இருந்திச்சி

நடிப்பு ரொம்ப அருமையாக இருக்கும்

முதன் முதலில் ‘The Mask' என்ற படத்தின் வாயிலாக உள்ளே வந்தவர்

மிக அருமையான படங்களில் ஒன்று ட்ரூமேன் ஷோ

கடைசி வரி நச் ...

Vidhya Chandrasekaran said...

நேற்றோ அதற்கு முன் தினமோ ஸ்டார் மூவிஸ்/HBO/ஏதோவொரு மூவி சேனலில் என லிஸ்டிங்கில் பார்த்தேன். படம் ஏற்கனவே பார்த்திருந்தால் இம்முறை பார்க்கவில்லை. அருமையான பாடிலேங்குவேஜ் ஜிம் கேரிக்கு.

ப்ரூஸ் அல்மைட்டி அதைவிட ace ventura இரண்டும் எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காதவை.

Unknown said...

நல்ல விமர்சனம்.

சி.பி.செந்தில்குமார் said...

ஜிம் கேரியின் காமெடி அங்க சேஷ்டைகள் இதில் குறைவுதான் என்றாலும் இது திரைக்கதைக்கான படம்.படக்கதையை தெளிவாக,பொறுமையாக விளக்கியதற்கு நன்றி

நேசமித்ரன் said...

விதூஷ் கதை நல்லா இருக்கு

ஆமா விமர்சனம் எங்கே ?

:)

Unknown said...

@நேசன்: வாய்யா... டி.வி.ஆர் மற்றும் உமக்காத்தான் இந்த பதிவையே எழுதினேன். நல்ல படத்த பார்க்காம விட்டு இருக்க போறீங்களேன்னு..

விமர்சனம் எழுத முடில.. கதையே பக்கம் நிரம்பிருச்சு.. படம் பார்க்கும் போது பாத் டப்பில் உக்கார்ந்து கொண்டே ஒருத்தர் டிவி பார்த்துக் கொண்டிருப்பார்.. அவரது reactionகளை கவனிக்காமல் விட்டுடாதீங்க.

ஒரு நிலையில் உங்களையும் அறியாமல் ஒரு வித பதட்டம் உங்களையும் தொற்றிக் கொண்டால் நீங்க இன்னும் நல்லவர் என்று அர்த்தம் #எப்டி சிக்க வைத்தேன் பாருங்க.. :))

Unknown said...

ஜிம்கேரியின் சுறுசுறுப்பு,பாடிலேங்வேஜ்,காமெடி,முகசேஷ்டைகளின் ரசிகர் நான்.

Paleo God said...

சிக்கன் விங்ஸ் சாப்பிடுங்க கை வலிக்கு நல்லது! :)

நீங்களும் பட விமர்சனம் போட ஆர்ம்பிச்சாச்சா? ரைட்டு!

Sridhar Narayanan said...

//விமர்சனம் எழுத முடில.. கதையே பக்கம் நிரம்பிருச்சு.. //

:))

ஆனா இப்படியா முழுக் கதையையும் சொல்றது? அப்புறம் படம் பாக்கிறவங்களுக்கு ஆர்வம் குறைஞ்சிடாது? ஏதோ பாத்து செய்யுங்க :)

ஜிம் கேரி ‘மாஸ்க்’குக்கு முன்பே பல படங்கள் செய்திருக்கிறார். டிவி ஷோக்களும். ஸ்டீவ் மார்டின், ராபின் வில்லியம்ஸ் போல மேடை நிகழ்ச்சிகளும் செய்யக்கூடிய திறமை உள்ளவர்.

இவருடைய படத்தில் முக்கியமானது Liar, Liar. செம காமெடிப் படம் :)

Unknown said...

இந்த படத்த பத்தி கேள்விபட்ருக்கேன். நல்லா எழுதீருக்கீங்க.

Unknown said...

ரொம்ப நன்றி சகாஸ்!

யெஸ்.பாலபாரதி : இப்போ சரியாப் போயிடுச்சு

நான் ஆதவன்: :)

நட்புடன் ஜமால்: :) நானும் டிவிடி கிடைக்குமான்னு பார்த்துக் கொண்டிருக்கேன்.

வித்யா : )

ஆறுமுகம் முருகேசன் :)

சி.பி.செந்தில்குமார் :)

ஆனந்த் :)

பார் கோட் ஷங்கர் :) சமைச்சு கொண்டு வாங்க..


ஸ்ரீதர் :: 1998 வந்த படத்தை நான் இப்போதான் பார்க்கிறேன் :)) பத்து வருஷ பழைய படம் கதையை முழுசா சொன்னால்தான் என்ன.. அப்புறம், உங்களோட "குட்டி சாத்தான்" கதை-யை என் ஸ்கீமில் படிச்சு காட்டினேன். ஒரே கைதட்டல்.. உங்களுக்கு தனிமடல் போடணும்னு நினைச்சேன். ஏதோ மறதி :( கதை படிச்ச recorded mp3 அனுப்பி வைக்கிறேன். # sorry சொல்லிட்டா சரியாப் போயிடுமா.

ராமசாமி கண்ணன் நன்றி. முடிந்தா பார்த்துடுங்க.

சீனு said...
This comment has been removed by the author.
சீனு said...

ஜிம் கேரியின் பல படங்களை பார்த்தாலும் அவருடைய இரு படங்களால் தான் அவரின் விசிறியானேன். இது அதில் ஒன்று (இன்னொன்று Me, Myself and Irene என்னும் ஆபாசக்குப்பை). இந்த படம் ஒரு ரியல் கேன்டிட் கேமரா. பிறந்த குழந்தையாக ஜிம் இருப்பது முதல் அவனை 'உருவாக்கப்படும் சூழல்' அவனை எப்படியெல்லாம் ரியாக்ட் செய்ய வைக்கிறது என்பதை லைவாக காசுபார்க்கும் அந்த கிரியேட்டர் தான் வில்லன். கடைசியில் ட்ரூமேன் அந்த ஸ்டுடியோவில் இருந்து 'தப்பிக்கும்' பொழுது ட்ரூமேனின் விசிறிகள் போலவே நமக்கும் சந்தோஷம் ஏற்படுகிறது.

மறக்க முடியாத படம்.

பாலா said...

யாருப்பா.. இது..?? எங்களுக்கு போட்டியா??? ;)

--

சீக்கிரம் கை வலி சரியாகி.. மீதி விமர்சனத்தை எழுதுங்க.

Cable சங்கர் said...

nice movie

NILAMUKILAN said...

ட்ரூமான் ஷோ மிக வேறுபட்ட சிந்தனை. ஜிம் காரி அருமையாக செய்திருப்பார். பல நாட்களுக்கு முன் பார்த்தது. மீண்டும் பார்க்க தூண்டுகிறது உங்கள் பதிவு. நன்றி.

geethappriyan said...

இது என் ஆல்டைம் ஃபேவரிட் படம்.நீங்கள் ஜிம் கேரியின் ரசிகை என்றால் அவசியம் த மெஜஸ்டிக் பாருங்கள்,என்னமா பெர்ஃபார்ம் செய்திருப்பார்,அது ஃப்ரான்க் டாரபாண்ட்[ஷஷான்க் ரிடெம்ஷன்] இயக்கியது,மிகவும் பிடிக்கும்.ஆனால் இது அண்டர்ரேடட் படம்,இப்போவே சொல்லிவிடுகிறேன்,

Unknown said...

மிகவும் விரிவான விமர்சனம்.. நான் மிகவும் ரசித்த படம் இது.. பாராட்டுக்கள்..

Post a Comment