சம்ஷயிக்கணும் கேட்டேளா


தோ பாருங்கோடி! லோகத்து ஸ்திரீகள் எல்லாரும் அவாவா புருஷாளை சம்ஷயிக்கணும் கேட்டேளா! ஞாத-அஞ்ஞாத காரணங்களுக்கெல்லாம் சந்தேகங் கொள்ளணும். காரணமே ஏதும் இல்லேன்னாக்கூட விடப்படாது.

தோ பாருங்கோ! கலி முத்திடுத்தூ..ன்னேன். புருஷாளை நம்பவே முடில. சம்ஷயிக்க இடங் கிடைக்கும் போதெல்லாம் சம்ஷயிக்கணும். சந்தேகப்படறது ஸ்திரீகளுக்கு ஆபரணம் மாதிரின்னா? சௌமாங்கல்யத்துக்கு எப்படி குங்குமம் அழகா இருக்கோ, கண்ணுக்கு எப்படி கண்மை அழகா இருக்கோ, இன்னும் என்னவெல்லாம் அழகோ, அதே மாதிரி ஸ்திரீ மனசுக்கு சந்தேகம் அழகுன்னா..

ன்மிகம் எப்படி மன சாந்திக்கு அவசியமா இருக்கோ, அதே மாதிரி குடும்பத்துல அமைதி நிலவரத்துக்கு சந்தேக ஜப மாலையை உருட்டி உருட்டி கேள்வி கேட்டுண்டே இருக்கணும். கேள்வி கேட்டுண்டே இருந்தாத்தான் அவா கம்ம்னு இருப்பா. அவாளுக்கு பதில யோஜிக்கரதுக்கே நேரம் சரியாப் போயிடும். நம்மள எதுவும் கேள்வி கேட்க மாட்டா. அப்புறம் என்ன? வீட்ல அமைதியோ அமைதிதான். பெண்மையின் குணம் சந்தேகம் வந்தப்புறம்தான் பூரணமாறது. சந்தேகப் படாத பொம்மனாட்டிகள் எல்லாம் பொம்மனாட்டிகளே கிடையாதுன்னேன். சந்தேகம் பொம்மனாட்டிகளின் பிறப்புரிமையாக்கும்.

க்ரஹஸ்தாளுக்கு புரட்சி பண்ணறத்துக்கு சான்சே இல்லேன்னு யார் சொன்னா? சந்தேகத்தை விட பெரிய புரட்சி உண்டோ? சந்தேகம்தான் எல்லாப் பிரச்சினையையும் புரட்டி போட்டு புது பிரச்சினையை கொடுக்கறது தெரியுமோ? புதுப் புதுப் பிரச்சினைகள் வத்தாத் தானே பழச மறந்து புது சமுதாயம் உருவாகும். புதிய சமுதாயத்தில் புதுமைப் பெண்களோட நெலம இன்னும் உயரும் பாருங்கோ. அடிப்படையா பார்த்தோம்னா, நன்னா புரியும், நன்னாப் பாருங்கோ... இந்த புரட்சிக்கெல்லாம் யார் காரணம், சந்தேகம்தானே.

திகாலத்துலேர்ந்தே சந்தேகத்துக்கு கொஞ்சம்தான் fixed varieties-ஸா இருந்துது. இப்போ பாருங்கோ, பல விதமா, விதம் விதமா சந்தேகப் படலாம். காரணங்களோ கொட்டிக் கிடக்கு.. கேள்வி கேட்டுக் கேட்டே ஆத்துக்காரரை அழ வச்சுடலாம்... கிக்கி கிக்கி.. [வில்லிச் சிரிப்பு].

தோ பாருங்கோடி, இதுல சிலது ஆத்துக்குள்ளே யூஸ் பண்றது, சிலது வெளி வட்டாரத்துலே யூஸ் பண்ணறது. இன்ஸ்டன்ட் காபி மாதிரி இன்ஸ்டன்ட் சந்தேகம் படணும் அதுக்கெல்லாம் சமத்து வேணும் கேட்டியோ. பழைய சந்தேகங்களை எல்லாம் கூட கொஞ்சம் ரிப்பேர் பண்ணி புதுசா வேறமாதிரி சந்தேகப்படணும். வாரக் கடைசீல மிஞ்சின கரிகா எல்லாம் கலந்து mixed veg curry ஆறா மாதிரி, முன்னே கேட்ட கேள்வியெல்லாம் கலந்து புதுசா ஒன்னைக் கேட்டு மூச்சே விட முடியாதளவுக்கு அதிர்ச்சி கொடுக்கணும்.

ரொம்ப வேக வேகமா கேள்வி கேட்டா, நமக்கே என்ன கேட்டோம்னு மறந்து போய்டும். அதுனால புருஷாளோட நடவடிக்கைகள் மொள்ள இருக்கா, ஆத்தரத்தோட இருக்காளா, அமைதி இருக்காளா அப்டீன்னு எல்லாம் பாத்துண்டு, மெதுவா மொதல்ல லேசா சின்னதா ஒரு அஸ்தரத்த எடுத்து விடணும்... அவா எப்படி ரியாக்ஷன் கொடுக்கறான்னு பாத்துண்டு பின்னாடி சமத்து சமத்தா சந்தேகத்தக் கேட்டுக்கணும்.

ரு வேளை நீங்க டாம் பாய்-யா இருந்தா, அதாவது பொண்ணாப் பொறந்தும் ஆம்பளைகள் மாதிரி துளிகூட கற்பனைவளம் இல்லாம, படுவறட்சியா இருந்தா, போனாப் போறது பரவால்லை, பொண்ணுங்கற ஒரே காரணத்துக்காக, ஹெல்ப் பண்றேன் தெரிஞ்சுக்கோங்கோ. இதுக்குத்தான் சங்கீதம் கத்துக்கணும். சமைக்கும் போது, குளிக்கும் போது, வீடு பெருக்கும்போது, குழந்தையைக் குளிப்பாட்டும் போது, சாதம் போடும்போதுன்னு எப்போ பார்த்தாலும், "ஜெகதா னந்த காரகா"தான் வாய்லே ஒலிக்கணும்.... நமக்கே நம் குரலால் எரிச்சல் வந்தாலும் பொறுத்துக்கணும்... ஒரே பாட்டைக் கேட்டு கேட்டு, வெறுஞ் சுவரே விரிசல் கண்டிடும்... அவாளுக்கு கோவம் வராதா என்ன.. வரும்.. வரணும், வர வைக்கணும்.

ப்போதான் நம்ம கச்சேரிய ஆரம்பிக்கணும்.. முதல்ல அரங்கேற்றம்.. எப்டின்னா.. "ஏன் என் குரல் உங்களுக்கு பிடிக்காதா... அப்போ யார் குரல்தான் பிடிக்கும்.. வர வர..." ன்னு இழுத்தா, போறும்.. புருஷாள் கொஞ்சம் சாமர்த்தியகாராளா இருந்தாக்க இப்போதே உடனே சடார்னு கால்ல விழுந்துடுவா.. இல்லையா அடுத்த அஸ்தரம்.. "இதுக்குத்தான்... பாம்பே ஜெயஸ்ரீகிட்ட சங்கீதம் பாடம் பண்ணிக்கலாம்னு அன்னிக்கே சொன்னேன்... காசு செலவு பார்த்தேள்.. உங்க அக்காக்குன்னா இப்படி கணக்கு பார்ப்பேளா... எல்லாம் எனக்குதான், அடுத்த தரம் உங்கக்கா வரட்டும் அவள்டயே கேட்டுடறேன்" அப்டீன்னு கண் கலங்கராமாதிரி லேசா கண்ணீர்(பொறாமை)புகை குண்டு ஒன்றை தூக்கி அடிக்கணும்...

துக்கும் அசராது சிலதுகள்.

துக்குத்தான் பிரம்மாஸ்தரம் (சந்தேகம்+அழுகை) "வர வர என்னைக் கண்டாலே உங்களுக்கு பிடிக்கரதில்லை... ஆபீசுலேந்து ஒருத்தி எஸ் எம் எஸ் அனுப்பிண்டே இருக்காளே... அவளப் பிடிக்க ஆரம்பிச்சுடுத்தோ... என்னைத்தான் பண்ணிப்பேன்னு ஒத்தக் கால்ல நின்னான் எங்க அம்மாஞ்சி.. நான் உங்களைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும் பண்ணிண்டேன் பாருங்கோ.. என்னைய்ய்ய்ய்"ன்னு அஸ்தரத்த வீசி ஓன்னு அழ ஆரம்பிச்சா.. எதிராளி சரண்டர்தான். பொம்மனாட்டி கண்ணீருக்கு பேயும் அடங்காதா என்ன? இதுக்கெல்லாம் கொஞ்சம் பயிற்சி வேணும்.. கற்பனேல கூட பச்சாதாபத்தக் காட்டிடக் கூடாது. நம்ம குரல்லயும் சிரிப்பு வரதுன்னு துளி கூட காட்டிக்கப்டாது.

தாவது அஸ்தரம் ராமாயணத்துல காமிக்கரா மாதிரி பொசிங்கிப் போயிடுத்துன்னா அசந்து போகப்டாது. மூஞ்சிக்கு நேரே காமெரா வரும் போது கரக்டா ராமரும் ராவணனும் அதிர்ச்சி காமிக்கறா மாதிரி எல்லாம் எக்ஸ்பிரஷன் காமிச்சு அபிஷ்டுத்தனம் பண்ணப்டாதுன்னா.. இதுக்கெல்லாம் முன்னாடி நன்னா பயிற்சி பண்ணிக்கணும். இல்லேன்னா அரங்கேற்றமே சொதப்பல் ஆயிடும். அப்புறம் என்னத்த கச்சேரி பண்றது..

த்தியானம் எல்லாம் கூர்மையா பாலாஜி டெலிவிஷன்காரா காமிக்கற சீரியல் ஒண்ணுவிடாம பார்த்தா, நிறையா டயலாக்கு கிடைக்கும். ஒன்னொன்னா பாடம் பண்ணிண்டு, ஸ்வரம் தப்பாம, ஸ்ருதி ஏற்ற இறக்கத்தோட, அடுத்த வீட்டுக்கு கேட்கும் அளவுக்கு குரலில் முதலில் ஆரம்பிச்சா, பூரா பில்டிங்கும் அதிர அதிர கச்சேரி களை கட்டும்.

பின்நவீனத்துவ சந்தேகம்னா என்னன்னு கேளுங்கோ... ரொம்ப முக்கியமான சூட்சுமம் ஒண்ணு இருக்குன்னா... அது பின்நவீனத்துவ சந்தேகம்தான். அதாவது புருஷாளோட ஈமெயில், பாஸ்வர்ட், பாங்க ஸ்டேட்மென்ட், லேப்டாப், தம்ப்-டிரைவ், மொபைல், ஆபீசு பேப்பர்கள், டயரி, கர்சீப்பு, கார், பைக், ஸ்கூட்டர்னு ஏதும் விடாம, ஒன்னு விடாம நீங்களே பராமரிச்சு, துடைச்சு, சுத்தம் பண்ணி, துணி தோச்சுப் போட்டு, எடுத்துப் பார்த்து பார்த்து க்வாலிடி மெயிண்டயின் பண்ணி வச்சுக்கணும். சமத்துவம் பேசி, ஒன் வேலைய நீயே பாத்துகோடான்னு சொல்லிட்டா, போச்சு, உங்க கைல எல்லாம் இல்லேன்னா க்ளூ எதுவும் சிக்காம அவஸ்தை படபோறது நீங்கதான். ரொம்ப பழம்பஞ்சாங்கமா இருக்கே, இதுல என்ன பின்னவீனத்துவம்னு கேக்கறேளா... முன்னாடி ரொம்ப பின்னாடி காலத்துல ரொம்ப நாள் யூஸ் பண்ண டெக்னிகேயல்லாம், நவீன யுகத்துல யூஸ் பண்ரோமோல்யோ... அதான்..

ந்தேகம் ஒரு ஆத்மயோகம் மாதிரி .. பொம்மனாட்டிகள் அதிலேயே மூழ்க மூழ்க புருஷாளுக்கு நேர மோக்ஷம்தான்..

[ன் பக்கத்துவீட்டு ஆருயிர் தோழி சந்தேகராணி சித்ராவுக்கு சமர்ப்பணம் - சும்மா பொழுது போகாம அவளோட பேசிக் கொண்டிருந்ததில் உருவானது]

18 comments:

V.Radhakrishnan said...

ரொம்ப நல்லாத்தான் இருக்கு. இதெல்லாம் சொல்லிக் கொடுத்தா பெண்களுக்கு தெரியும் என நினைக்கிறீங்க. நல்லாவே புரணி (பரணி நட்சத்திரமில்லை) பேசறீங்க. ;)

கலகலப்பாக வித்தியாசமாக இருந்தது, ஆமா அந்த ராணி சித்ரா பக்கோடா பேப்பர்கள் படிப்பாங்களா? ;)

LK said...

எங்க எங்க இப்படி ?? ஏற்கனவே கேக்க வேண்டாம் . இதுல ஐடியா வேறயா

K.B.JANARTHANAN said...

சம்ஷயமே இல்லே, பிரமாதம்!

புதுகைத் தென்றல் said...

அடுத்த ரவுண்ட் ஹஸ்பண்டாலஜி ஆரம்பிக்கலாமோ வித்யா. :)) நல்லா இருக்கு பதிவு. ஹஸ்பண்டாலஜி பேராசிரியையா உங்க பதிவை ரொம்ப ரசிச்சேன்.

வித்யா said...

:))

virutcham said...

சம்ஸயமில்லாம சரி தான்

சம்ஸயமா சம்ஷயமா ?

நேசமித்ரன் said...

முடியல :)

ஹுஸைனம்மா said...

//பின்நவீனத்துவ சந்தேகம்னா என்னன்னு கேளுங்கோ...//

சந்தேகத்துலயுமா பின்னவீனத்துவம்? கிழிஞ்சுது போங்க!!

Chidambaram Soundrapandian said...

கேட்டுன்டோம்...

வால்பையன் said...

மனைவி போனை சும்மா சும்மா எடுத்து நோண்டுவது கூட மனைவியை சொர்க்கத்துக்கு அனுப்ப நினைக்கும் செயலோ!?

எப்படியெல்லாம் பிட்டை போடுறாங்கப்பா!

நசரேயன் said...

//சம்ஷயிக்கணும் கேட்டேளா//

சரி மாமி

பா.ராஜாராம் said...

ஷேமம்!

நல்லாருங்கோ, மாமி! (உபயம், நசர்) :-))

Vidhoosh(விதூஷ்) said...

ராதாகிருஷ்ணன் சார்: அவள் படித்த படித்த பிறகே வெளியிட்டிருக்கிறேன். :))

கார்த்திக்: பின்ன... யாருகிட்டேன்னேன்.. :))

கே.பி.: நன்றீஸ். :)

நன்றீஸ் வித்யா

நன்றி விருட்சம்: இரண்டுமே தகும்.. இரண்டுமே சரிதான் என்று நினைக்கிறேன். ஒரு வேளை, எழுத்துப் பிழை இருந்தால், உங்கள் விளக்கம் மாற்றாக இருந்தால் கற்று அறியவும் ஆவல்.

நேசமித்திரன்: எனக்கும் தினோம் காலங்கார்த்தால சத்தம் தாங்க முடியல... அதுனாலதான் எழுதினேன். :))

ஹுசைனம்மா: ஹி ஹி

சிதம்பரம்சௌந்தரபாண்டியன்: நல்லதுங்கோ:)

வால்ஸ்: யப்பா... ஏதோ முடிவோட வந்து ஏதும் சிக்காம போறா மாதிரி இருக்கு.. :)) ஜாக்கரதை.. முடிஞ்சா வரைக்கும் உங்கள் வேலைகளை நீங்களே பார்த்துக்கோங்க.. அப்புறம் அவ்ளோதான்.. :))

நசர்: யாருக்கு மெசேஜ்ஜுன்னு புரிஞ்சா சரிதான்.. :P

பாரா அண்ணே: பொண்ணுக்கு சீர்ல இதையும் ஒரு பிரிண்ட் எடுத்து கொடுங்கண்ணே... அப்புறம் நீங்க கவலையே இல்லாம இருக்கலாம்..:))

virutcham said...

சம்ஷயம்னு சொல்லி நான் கேட்டது இல்லை. சம்ஸயம்னு சொல்லறது தான் பாலக்காட்டு வழக்கம்னு நான் நினைக்கிறேன். உங்க வீட்டிலே எப்படியோ ?

பின் நவீனத்துவ விளக்கம் - அதான் highlight
வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

அன்புடன் > ஜெய்லானி <
################

அபி அப்பா said...

சும்மாவே ஆடுவாங்க. இதிலே சலங்கை கட்டி விடுறீங்களே விதூஷ்:-)

(வசனம் களவாணியில் இருந்து களவாடப்பட்டது)

R.Gopi said...

//"சம்ஷயிக்கணும் கேட்டேளா"//

ஓ.... ஆராக்கும் கேட்டது....

திவா said...

கடவுளே! காப்பாத்து!

Post a Comment