மை நேம் இஸ் கெளஹர் ஜான்

ஆசிரியர்-விக்ரம் சம்பத்
346 பக்கங்கள்
விலை: ரூ.595
மொழி: ஆங்கிலம்
பதிப்பாளர்: ரூபா & கோ. (ஏப்ரல் 1, 2010)
இணையத்தில் 15% தள்ளுபடி விலைகளில் கிடைக்கிறது.

முதன்முதலாக கிராம ஃபோன் இசைதட்டுக்களில் தன் குரலைப் பதிந்த கெளஹர் ஜானின் பெயர் இந்திய இசை வரலாற்றின் முதற் பெயரும் மறக்கப்பட்ட பெயருமாகவே இருக்கிறது. ஆரம்பகாலங்களில் ஐரேப்பாவில் இசைத்தட்டுக்கள் எடிட் செய்யப்பட்டதால், ஒவ்வொரு பாடல் முடிவிலும் பாடியவர் "மை நேம் இஸ்..." என்று அறிவிக்கும் பழக்கம் இருந்தது. மயக்கும் மேல்-ஸ்தாயி குரல் வளத்துடன் ஹிந்துஸ்தானி இசையின் மகாராணியாக போற்றப்பட்டவர் இவர். இசைத் தட்டில் பதிந்தால் குரல் பாதிக்கப் படும் என்ற நம்பிக்கை இருந்த போதே, துணிந்து முதன்முதலாக தன குரலை பதிந்தவர் இவர்.

இப்புத்தகம் இந்திய இசை வரலாற்றில் மிக முக்கியப் பெயர்களில் ஒன்றான கெளஹர் ஜான் (1873-1930) கல்கத்தாவின் தவாயிஃப் எனப்படும் நர்த்தகி மற்றும் பாடகி ஆவார். பன்மொழியறிந்து, சிறந்த உச்சரிப்பும், இனிமையான குரல் வளமும், தன்னம்பிக்கையும் நிறைந்த, கவித்துவமிக்க, மிகவும் வசீகரமான, ஆடம்பர விரும்பியான இப்பெண்மணியைப் பற்றிய சின்னச்சின்ன விபரங்களையும் ஆசிரியர் விக்ரம் சம்பத் சேகரித்து தொகுத்து மிகவும் அற்புதமான முறையில் எழுதியுள்ளார்.

இந்திய வரலாற்றின் மிகவும் முக்கியமான காலகட்டத்தில் வாழ்நத கெளஹர் குழந்தைப் பருவத்தில் அசம்கர் மற்றும் பனாரஸ் நகரங்களிலிருந்து பெருமைமிக கல்கத்தா நகருக்கு வந்து இந்திய இசையின் இராணியாகவே போற்றப்பட்டார். வசீகரம் குறைந்த பின்னாட்களில் பெரும்பாலான தவாயிஃப்களைப் போன்றே புகழ் பெருமை ஆடம்பரம் அனைத்தும் குன்றி, மைசூரில் மறைந்தார். கெளஹரின் வாழ்க்கையைப் படிக்கும்போதே இந்திய சமூக வரலாற்றையும், இந்திய இசை வரலாற்றையும் நாம் அறியும் வண்ணம் மிகவும் தெளிவான நடையில் எழுதப்பட்டு இருக்கிறது.

1873யில் ஒரு அர்மேனியத் தந்தைக்கும் இந்தியத் தாய்கும் பிறந்தவர் கெளஹர் ஜான். ஒரு தவறான புரிதலில் மணமுறிவு ஏற்பட்டு தாய் ஒரு முகமதியரை மணந்ததும் "(Badi Malika Jaan)படி மலிக்கா ஜான்" என்ற பெயருடன் அறியப்படுகிறார். இவர் கவிஞராகவும் பாடகியாகவும் புகழ் பெறுகிறார். கெளஹரின் அம்மா வழி பாட்டியார் ஒரு பிரிட்டிஷ்காரரை மணம் புரிந்தவர். இப்படியாக பலவேறு கலாச்சாரங்களையும் அறிமுகப்படுத்திக் கொண்டே பல காலகட்டங்களில் நம்மைப் பயணிக்க வைக்கிறார் ஆசிரியர்.

இதில் பீவி கானா என்றறியப்படும் ஒரு இல்லம் பற்றிய செய்திக் குறிப்பும் வருகிறது. குடும்பங்களைப் பிரிந்து தொழில் நிமித்தம் இந்தியா வந்த பிரிட்டிஷார், இங்கு இந்தியப் பெண்களை மணந்து, அந்த பெண்கள் அனைவருமே ஒன்றாக பீவிகானா எனப்படும் இடத்தில் வசிக்க வைக்கப்பட்டதாக அறியப்படுகிறது. அதே போல கப்பல்கள் அடிக்கடி இந்தியா வர ஆரம்பித்ததும் ஐரோப்பிய நங்கைகளும் வர ஆரம்பித்தனர். இவர்கள் அப்படி வரும் கப்பல்கள் "ஃபிஷ்ஷிங் ஃபீலீட்" என்றும் அந்த பெண்கள் தனியாகத் திரும்பும் கப்பலை "ரிடர்னிங் எம்ப்டீஸ்" என்றும் அழைத்தனர். இப்படி சமூக, கலாச்சார, மாற்றங்களையும் கெளஹர் ஜானின் வாழ்வினூடே நம்மை அறியச் செய்கிறார்.

அந்நாட்களில் பெண்கள் முக்கியஸ்தர்களுக்கு (ஊர் பெரியவர்கள், ஜமீன்தார்கள், டாகுர்கள், அரசர்கள், நவாப்கள்) முன் பொதுவில் (மெஹஃபில்) பாடுவதும் நடனமாடுவது திறமிகுந்த பெண்களின் மரியாதைக்குகந்த தொழிலாகவே இருந்து வந்திருக்கின்றது என்பதும் தெரியவருகிறது. இந்தப் பெண்கள் அதிகம் படித்தவர்களாகவும், நடனம் இசை இலக்கியம் ஓவியம் போன்ற கலைகளில் அதிக தேர்ச்சி பெற்ற சிறந்தவர்களாகவுமே இருந்திருக்கின்றனர். இவர்களின் இசை, நடனம் போன்றவற்றைக் காண வரும் முக்கியஸ்தர்கள் இவர்களது கலைத்திறமை செம்மை படுத்த பொருளாதார ரீதியாக உதவியும், இவர்களை தங்கள் சமூக கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் மீடியமாகவும் தயார் செய்து அதற்குரிய பயிற்சிகளைப் பெறவும் உதவி செய்தார்கள் என்றும் அறியப்படுகிறது. இருப்பினும் குடும்பப் பொறுப்புள்ள மணமான பெண்கள் இத்தகைய தொழிலில் ஈடுபடுத்தப் படவில்லை, அல்லது தவிர்க்கப் பட்டார்கள் என்றும் தெரிகிறது. கெளஹர் சிறுமியாக இருந்தபோதே தன் தாயுடன் பாட ஆரம்பித்துவிட்டார். இவள் இளமையிலேயே தன் குரலால் புகழின் உச்சத்தை அடைந்தார். தன் வாழ்நாளில் 600 இசைத் தட்டுக்களில் (கிராமஃபோன்) தன் குரலைப் பதிந்து தும்ரி, தாத்ரா, கஜ்ரி, சைதி, பஜன், தரானா, போன்ற கச்சா கானா எனப்படும் மெல்லிசைகளை பதிந்தார்.

ஆசிரியர் விக்ரம் சம்பத் எலக்ட்ரானிக்ஸ் இஞ்சினியர் பட்டம் பெற்று, பிட்ஸ் பிலானியில் கணிதத்தில் மாஸ்டர்ஸ் முடித்து, ஃபைனான்ஸ் எம்பிஏ முடித்துள்ளார். ரீடைல் பேங்கிங் செக்டாரில் பணியிலுள்ள இளைஞர். வாசிப்பு, வாசித்தவை குறித்த ஆய்வுகள், மற்றும் எழுத்துக்கு, தன்னார்வம் மட்டும் இருந்தால் போதும், அதற்கான நேரம் தானாகவே கிடைக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் என்றே நினைக்கிறேன். மைசூர் உடையார்களைப் பற்றி Splendours of Royal Mysore: The Untold Story of the Wodeyars என்ற இவரது முதல் புத்தகம் எழுதிக் கொண்டிருக்கும்போது கௌஹர் ஜான் பற்றி அறிந்து ஆர்வம் மிகுந்து இந்தப் புத்தகம் எழுதத் துவங்கியதாகவும் கூறுகிறார் ஆசிரியர். இடையிடையே விபரங்கள் ஏதும் கிடைக்காமலும் மிகுந்த சோர்வடைந்ததாகவும் சொல்கிறார் (SOURCE: NDTV HINDU INTERVIEW)

நூற்றாண்டுகளாய் ஆகிவிட்ட பழைய கதை, மறந்தே போய்விட்ட காலஞ்சென்ற பாடகி-நடனக்காரி, கெளஹர் ஜானின் வாழ்விலிருந்து பெரிதாக என்ன விபரங்களைப் பெற முடியும் என்று ஒதுக்காமல், முழு முயற்சியோடு ஆய்வுகள் செய்து, பிரயணம் செய்து, ஆதாரங்கள் திரட்டி, தேடியலைந்து கண்டுபிடித்து பல புத்தகங்களைப் படித்து என ஆசிரியரின் முழு உழைப்பும் இப்புத்தகத்தில் கொட்டப்பட்டு இருக்கிறது. அப்படிப்பட்ட உழைப்பின் பூரண வடிவமாக மிகவும் அற்புதமான புத்தகமாகவே வெளிவந்திருக்கிறது மை நேம் இஸ் கெளஹர் ஜான்.

இசை மற்றும் வரலாற்றில் ஆர்வமுடைய ஒவ்வொருவரும் படித்தறிய வேண்டிய புத்தகம் இது.

14 comments:

Thenammai Lakshmanan said...

மிக அருமையான பகிர்வு வித்யா..ஆசிரியர் விக்ரம் சம்பத்துக்கும் வாழ்த்துக்கள்..

Thenammai Lakshmanan said...

மிக அருமையான பகிர்வு வித்யா..ஆசிரியர் விக்ரம் சம்பத்துக்கும் வாழ்த்துக்கள்..

எல் கே said...

nice introduction

நேசமித்ரன் said...

விரிவான பார்வை பற்றிய தெளிவான பகிர்வு

நசரேயன் said...

மை நேம் இஸ் நசரேயன்

கமலேஷ் said...

மிக அருமையான பகிர்வு தோழி..நன்றி...

பா.ராஜாராம் said...

மை நேம் இஸ் ராஜாராம்.

Vidhoosh said...

தேனம்மை, கார்த்திக், நேசன், நசர் (அப்டியா?), கமலேஷ், பா.ரா. எல்லோருக்கும் நன்றீஸ். :)

Romeoboy said...

விமர்சனம் நன்றாக இருக்கிறது. ஆனால் ஆங்கிலத்தில் இருக்கிறதே .. தமிழில் யாரவது மொழிமாற்றம் செய்தால் வாங்கலாம்

சுரேகா.. said...

நல்ல புத்தகம்!
சிறப்பான பகிர்வு!
நன்றிங்க!

மங்குனி அமைச்சர் said...

ok :-))))

ஹுஸைனம்மா said...

ம்ம்.. பொஸ்தக விமர்சனம்லாம் எழுதுறீங்க.. ரொம்பப் பிரபல பதிவர் போல!!

Chitra said...

nice review. பகிர்வுக்கு நன்றி..

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

கால வெள்ளத்தில் மூழ்கி போன ஒரு போற்றுதலுக்குரிய வரலாறு படித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க வளமுடன்

Post a Comment