யமராஜனின் காதல் கடிதம்

மரியாதைக்குரிய சகதர்மிணிக்கு,
அன்புள்ள என்று எழுதினாலும் கோபித்துக் கொல்வாயாடி, ஷ்பெள்ளிங் மிஷ்டேக் ஆயிடுத்த்தூ, கொள்வாயோடி அப்டீன்னு நடுங்கிண்டே யமராஜனாகிய அடியேன் பணிந்து நமஸ்கரித்து எழுதுவது.



எத்தனை காலன்களடி, பாரேன், நடுக்கத்தில் எத்தனை ஷ்பெள்ளிங் மிஷ்டேக் ஆய்யிண்டே இருக்குன்னு... எத்தனை காலங்களடி இந்த எருமை மேலமர்ந்து பாசக்கயிற்றை சுழற்றியடித்து மனுஷாளைக் கொல்வது?

சகியே, எப்போதும் போரடிக்கும் வியாதி உனக்குத்தான் வரும், இன்னிக்கு பாரு எனக்கு வந்துடுத்து. நீயும் நானும் சமம் அப்டீன்னு லோகத்து ஜனங்கள் எல்லாம் சொல்லலாம், ஆனால் அது நிஜமான்னு நோக்கும் நேக்கும் மட்டும்தான் தெரியும்..

நேத்திக்கு வெயில்ல அலைஞ்சு திரிஞ்சு சன் ஸ்ட்ரோக் வந்தவாளை எல்லாம் கட்டி இழுத்து சொர்க்கம் நரகம்னு தபால் பிரிச்சு அனுப்பிட்ட்டூ... ஒரு வாய் தீர்த்தம் கேட்டேன்னு கரண்டிய எடுத்து போட்டியே ஒரு போடு தலை வீங்கும் அளவுக்கு... அதுக்கு நான் சமைச்சு வச்ச கல்லு இட்லி ஈடாகுமா?

அரைச்சு வச்ச மாவை எல்லாம் ஒரு க்ஷணத்துல பக்கத்தாத்துக்கு எடுத்து கொடுத்துட்டியே அதுக்கு நான் கல்லுரலில் வேர்வையை தெளிச்சு தெளிச்சூ.... கஷ்டப்பட்டு அரைச்சது ஈடாகுமா?

தண்ணி ஊத்தி வச்சிருந்த பழே சாதம் எல்லாத்தையும் சாப்டுட்டு, ஒரு சொட்டு கூட இல்லயேடி அப்டீன்னு நான் கேட்டத்துக்கு பாத்திரத்தை வழிச்சு ஒரு சொட்டை என் வாயிலே தெளிச்சாயே அதுக்கு ஈடாகுமா..

இப்டித்தான் நீ ஒரு நாழிக்கு ஒரு தரம் கூப்ப்டுண்டே இருக்கச்சே வராம போனத்துக்கு சாப்ட எலுமிச்சம்பழ சாதமெல்லாம் வெளில வர அளவுக்கு அடிச்சியே, அதுக்கு நான் கிளறி வச்ச அவல் உப்புமாவெல்லாம் ஈடாகுமா?

நோக்கும் நேக்கும் யுகம் யுகமானாலும், ஈடே ஆகாதுடி, ஈடே ஆகாது, நீயோ சூர்யா பிராண்டட் ட்யூப் லைட். நானோ மங்கலா எரியும் ஜீரோ வாட் பல்பு.

தொடையெல்லாம் நடுங்கறது பயத்துல, தலை சுத்தறது, வாந்தி வராமாதிரியே இருக்கு. இப்போ செல்லக் கொழந்தை சித்ரனிடம் கடுதாசைக் கொடுத்தனுப்பறேன். எதா இருந்தாலும் வழக்கம் போல எல்லாம் நீயே பேசி முடிச்சுட்டு என்னை தீத்துகட்டிரலாம்.

சர்வாங்க சாஷ்டாங்க நமஸ்காரம்.

9 comments:

எல் கே said...

செம கற்பனை. விழுந்து விழுந்து சிரிச்சேன்..

Vidhya Chandrasekaran said...

கொஞ்சம் கற்பனை பண்ணி பார்த்தேன். முடியல. ROTFL:))

நேசமித்ரன் said...

//எதா இருந்தாலும் வழக்கம் போல எல்லாம் நீயே பேசி முடிச்சுட்டு என்னை தீத்துகட்டிரலாம்//

ஏன் ஏன் இந்தக் கொலைவெறி

ஆஆஆவ்வ்வ்வ்

ம்ம் நகைச்சுவைலயும் கலக்குறீங்க போல :)

நந்தாகுமாரன் said...

இது மகாஎரிச்சலான போஸ்ட் ... போன கவிதை ஓரளவு நன்றாக இருந்தது

ஹுஸைனம்மா said...

சிரிப்பு வருது; ஆனா வரல!! ஏன்னா, நானும் ட்யூலைட்டுதான்!! :-)))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நல்லாயிருக்கு பாஸ்..ஹா.ஹா..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எலுமிச்சம்பழ சாதமெல்லாம் வெளில வர அளவுக்கு அடிச்சியே, அதுக்கு நான் கிளறி வச்ச அவல் உப்புமாவெல்லாம் ஈடாகுமா?
//

பயந்துட்டேன்..எலுமிச்சை பழமுனு...

Iyappan Krishnan said...

ஹ்ம்ம்.. சிரிச்சேன் லைட்டா

Unknown said...

Emane Aanaalum, avanukkum Eman undu

Post a Comment