காலம்னிஸ்ட் வி.கங்காதர்


ஒரு சமயத்தில் வி.கங்காதர்-ரின் பத்திகள் (column) படிக்கவே ஹிந்து படிக்க ஆரம்பித்தேன். நாளடைவில், ஹிந்துவில் உள்ள ரசனையான ஆங்கில எழுத்து நடை என்னை ஹிந்து பத்திரிகை அடிக்ட் ஆக்கி விட்டது.

அப்படி என்னையும் தினசரி பத்திரிகை வாசிப்பவளாக ஆக்கிய வி. கங்காதர் அவர்களுக்கு இந்த போஸ்ட் சமர்ப்பணம்.

அவருடைய பத்திகளில் சில இங்கே படிக்கக் கிடைக்கும்.
rediff.com: V Gangadhar's home page

V. Gangadhar – Slice of Life Archive : Hindu Sutra

A question of age:The best way to delay ageing is to accept it, says V Gangadhar
திரு.வி.கங்காதர் ஹிந்துவில் slice of life என்ற தலைப்பில், இயல்பான பேச்சு நடையிலேயே வரும்.

ஒவ்வொன்றும் நமக்கு மென்மையான கிண்டல் உணர்வும், அப்படியே இரண்டு கைகளையும் தலைக்குக் கொடுத்து பின்னால் சாய்ந்து கொண்டு விட்டத்தை பார்த்து ஒரு மெல்லிய புன்னகை வரவழைக்கும் nostalgic அனுபவங்களையும் பற்றி எழுதி இருப்பதில், எனக்கு மிகவும் பிடித்த சில பத்திகள், தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது, முறுக்கு, மாங்காய் சாப்பிடுதல் போன்றவை பற்றி எழுதி இருப்பன.

இவரைப் பற்றி இன்னும் எழுத வேண்டும் என்றுதான் ஆசை. கைகடிக்கும் கடிகார முட்கள். என் சேகரிப்பில் இருக்கட்டும் இப்போதைக்கு என்று சிலவரிகளைக் குறித்துள்ளேன். இன்னும் விரிவாக இவரது பத்திகளை, தகுந்த அனுமதி பெற்று, மொழிபெயர்த்து பகிர்கிறேன்.

24 comments:

Paleo God said...

நடத்துங்க..:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அனுமதி பெற்று, மொழிபெயர்த்து பகிர்கிறேன். //

பகிரவும்

சரவணன் said...

நானும் தொடர்ந்து படிச்சிருக்கேன். இவர் மனைவி குஜராத்தி என்று எழுதியிருப்பார். அப்புறம் மாப்பிள்ளை மைக் ஞாபகம் இருக்கா? சின்ன வயசில் படம் பார்க்க அப்பாவை தாஜா செய்வது, முதல் விமானப் பயணம் எல்லாம் அருமையா எழுதுவார்.

அப்பல்லாம் வில்லேஜ் விஸ்டாஸ் அப்படின்னு ஒரு பத்தியும் வரும். முடிஞ்சா அதையும் எழுதுங்க!

நர்சிம் said...

நல்ல ப(கிர்வு)திவு.

Thenammai Lakshmanan said...

நல்ல பகிர்வு வித்யா என்ன பழைய யமதர்மர் கதை எல்லாம் என்ன ஆச்சு ...ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும் வித்யா அது.. அடுத்ததைப் போடுங்க

Vidhoosh said...

நன்றி ஷங்கர்.

நன்றி TVR. "செய்யணும்"கள் லிஸ்டில் நிறையா இருக்கு... :( ஒவ்வொன்னா முடிக்கணும்.

சரவணன். :) ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. யாரானும் இவர் எழுத்துக்களை படிச்சிருப்பாங்களா, அப்டியே படிச்சிருந்தாலும் நினைவு வைத்திருப்பாங்களான்னு நினைச்சேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு சரவணன் :) அவர்கள் எல்லோருமே கற்பனை கதாபாத்திரங்கள் தான். ஆனாலும் ரொம்ப நாளைக்கு அவர்கள் நிஜம்தான்னு நம்பிக் கொண்டிருந்தேன். :)

நன்றி நர்சிம். :)

நன்றி தேனம்மை: :)) யமனா... வருவார், ரொம்ப மொக்கையா என்னை நானே உணரும்போது எனக்கும் உயிர் தர வருவார்.:))

Vidhya Chandrasekaran said...

விரிவான பதிவுக்கு வெயிட்டிங்.

நேசமித்ரன் said...

நல்ல பகிர்வு

நிறைய ஆர்.கே. நாராயண் தாக்கம் என்று சொல்லலாமா

கான்செப்ட் & ஹ்யூமர்

:)

Vidhoosh said...

நன்றி வித்யா. :)

நன்றி நேசன். ஆமா. இவர்களுக்குள்ளான அருமையான ஒப்பீடுகள் இருக்கின்றன. விரிவாகப் பதிகிறேன். :)

விக்னேஷ்வரி said...

நல்ல பகிர்வு. சீக்கிரம் மொழிபெயர்த்துப் பகிருங்க.

பா.ராஜாராம் said...

அவசியம் விரிவாக பகிரவும் வித்யா.

passerby said...

In the 80s, he wrote a regular column in the now defunct SUNDAY, an Amrita Bazaar Pathrika publication from Kolkata. Before that, in Blitz.

He is an average or typical Tamil paarpanar. His poliitcal views, if they relate to TN, are the same as an average TB holds. He blindly supported Jayalalitha in those columns. I dont know what he now holds regarding her.

Coming to Slice of Life, it is, as you said, anecdotal - harking back to his childhood days in Chennai in a typical brahminical household. He could not conceal it.

As someone wrote here, reading him reminds one of RKN. But VG does not have the charm of RKN in narrative gift or the power of English prose. RKN will be remembered, not by Tamilians alone, but by the entire English-reading world.

You are enchanted with VG as you can relate to him in his childhood experiences.

I read the Slice for a few days continuously, then stopped because the 'element of surprise' is missing and his English is not a pleasure to read. It is not necessary it should be flowery. It may be simple, but could be a pleasure as in RKN's.

In the achievements of English prose and narration, after RKN, there has not yet come a writer who can bind us in his spell.

Still, if VG has made you an addict for the Hindu by his prose style, he can be proud of. You can remain thankful to him.

Vidhoosh said...

நன்றி ராஜாராம்.

நன்றி கள்ளபிரான், நீங்கள் பின்னூட்டம் இட்ட விதம், நீங்கள் எழுத்தாளரின் ரிஷிமூலங்களை வைத்து விருப்பு வெறுப்புக்களை தீர்மானிப்பவர் போல ஒரு வித deceiving தோற்றம் தருகிறது.
தமிழ்நாட்டில், இரண்டு சாய்ஸ் மட்டுமே இருந்த பட்சத்தில் நான் கூட ஜெயலலிதாவை ஆதரித்திருக்கிறேன், ஆப்ஷன் இல்லாத காரணத்தால் மட்டும். :)) மேலும், எழுத்தாளராக பணம் பண்ணும் அவசியம் நேர்கையில், பல நேரங்களில் எழுத்தாளர் "எழுதுகிறார்". அதே போல இவரது (இன்னும் பல நல்ல எழுத்தாளர்களின்) சில கருத்துக்களும் இருக்கிறது. எல்லாவற்றையும் குடையத் துவங்கினால், ரசனை இருக்காது. மீன் குழம்பு பிடிக்கும் என்பதற்காக தினமும் அதையே சாப்பிட முடியுமா? சில நேரத்தில் இட்லிதான் விற்றுப் போகும் என்றால், நல்ல வெந்த இட்லியையும் விற்கிறார்கள். ருசிக்கு தகுந்த சமையல் :))

இன்றும் எனக்கு பல எழுத்தாளர்களின் பெயர் அவர் எழுதிய கதையோ/கவிதையையோ அல்லது கட்டுரையையோ சொன்னால் மட்டும்தான் தெரியும். இன்ன எழுத்தாளர் என்பதை விட, எழுத்துக்களை மட்டுமே விரும்புகிறேன். சில நேரங்களில் அது எழுத்தாளர் மீதான adoration ஆகவும் ஆகி விடுகிறது.

மேலும் RKN போலவே எழுதுவதற்கு VG தேவையில்லை. அவரே போதும். எனக்கு கூடத்தான் சாகித்ய அகாடமி விருதுக்கு எழுத வேண்டும் என்று ஆசை, முடில, அதுக்காக எழுதறதை நிறுத்திட்டு ஓடவா முடியும். முயற்சித்து கொண்டே இருக்க வேண்டியதுதான். சில நேரம் மரணம் முந்திக் கொள்ளவும் கூடும். :)) take it easy kallapiran. இவரும் எழுதி இருக்கார், எனக்கு பிடிக்கிறது என்பதை தவிர வேறெந்த அர்த்தங்களையும் வரிகளுக்கூடே கண்டு பிடிக்காதீங்க.:))

Unknown said...

சிறு வயதில் தமிழ் வழியிலிருந்து ஆங்கில வழிப் படிப்புக்கு மாறிய காரணத்தால் ஹிந்துவின் ஆங்கிலம் எனக்கு அந்நியமாகவே இருந்து வந்திருக்கிறது.

அந்த அந்நியம் வளர்ந்த பின்னும் தொடர்ந்து விட்டது. அதனால் கங்காதரின் பத்திகளைப் படித்ததில்லை.
உங்கள் மொழிபெயர்ப்புகளை எதிர்பார்த்திருக்கிறேன்.

மொழிபெயர்த்துப் போடும் அந்தப் பதிவுகளில் ஒரிஜினலையும் போடுங்கள். என்னை மாதிரி படிக்க வாய்ப்புக் கிடைக்காதவர்களுக்கு உதவியாக இருக்கும்.

க.பாலாசி said...

நமக்கும் ஆங்கிலீஸ்க்கம் ரொம்ப தூரங்க....

passerby said...

Dont take it as an argument. You have a right to your opinions, whatever they are.

I have said, 'relate to', which needs to be slightly explained, as you seem to have ignored it.

It is only a discerning reader who is not deceived by an author. For the rest of us, the 'relate to' factor holds firmly good.

What is that?

Take the e.g of the novel Jane Eyre. Girls, who are not endowed with physical charms, will feel 'relate to' the character of Jane Eyre, a plain girl without physical beauty and is always conscious of it. She succeeded in making a 'masculine' man fall at her feet; and when he pleads before her with folded hands asking for her love, such girls feel vindicated.

Similarly, the children who were brought up in orphanages bereft of all good things of life, will feel 'relate to' JE, as she suffered such a life in an orphanage.

All of them will no doubt say the novel is the best one they have read, although the reason for that lies in the 'relate to' factor.

In your case, you 'relate to' the childhood experiences of VG in a brahminical household in Chennai. If his experiences were about a poverty-stricken household with all its blackness, a man brought up in that culture, will relate to VG. You will have just ignored VG.

Your admiration for VG springs from that 'relate to' factor. The admiration has made you unable to discern other factors that should be seen in order to adjudge a work as a work of art or a trash.

RKN, too, wrote many pieces that revolve around Tamil brahmin culture. Yet he stands apart in a class of own. How? By his writing skills and powers of English prose.

The series of articles 'Slice of Life' cant become a classic - not because it depicts a brahminical culture, but because it fails to achieve literary beauty.

passerby said...

//எனக்கு பிடிக்கிறது என்பதை தவிர வேறெந்த அர்த்தங்களையும் வரிகளுக்கூடே கண்டு பிடிக்காதீங்க.:))

A pathetic fallacy in a discussion about a written work which was primarily intended to entice readers who seek literary leisure.

Reading any thing, even a fable, is not for reading alone. It has folds and folds of meaning.

If we read a book without the intention of drawing any inferences, or get drawn by its inferences, there is no difference between a hungry man who pounces upon a feast without caring for its various delicacies and tastes, but with the sole intention of filling up his stomach, and us.

We must discern. All books should be read with deep discernment. Only such discernment will help you take out the spirit of the work.

You propose to translate him. That puts a serious demand upon you namely, you must be a discerning reader.

I dont either like or dislike VG. But I discern. Which, I am sure, will make me a better translator. I am not going to do that though. For the plain reason which ought to be confessed here: I lack confidence in English.

Please do it for us.

Wishing you luck in your adventure.

நசரேயன் said...

ஒ.. தராளமா .. எவ்வளவு மொக்கையா இருந்தாலும் தாங்குவேன்

Ashok D said...

நைஸ்ஸா ... கள்ளபிரான் மூனு பத்தி எழுதிட்டாரு... நல்லயிருந்தது நைனா...

விதூஷ்... ஹிண்டு இங்கிலிஷல வர்றதுனால நான் படிக்கறதுயில்ல... நானொரு உண்மைதமிழனாக்கும்.. ;)


சே..உங்க ப்ளாக் வந்தாலே அப்படியே உங்க ஸ்டைல்லேயே வந்துடுது..பின்னூட்டந்தான்ங்க :))

எறும்பு said...

no know english..

only thamilu...

me read only thanthi..

SK said...

படித்தது இல்லை.. படிக்க முயற்சி செய்கிறேன் :) நன்றி பகிர்வுக்கு..

சுந்தர்ஜி said...

கங்காதரின் பத்தியைப் படிக்காத ஞாயிறு இருக்கமுடியாது என்றே தோன்றுகிறது விதூஷ். அவர் தொலைத்த கருப்பு நிற சீப்பை இன்னும் நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.சில விஷயங்கள் நம்மை விட்டு விலகுவதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிவது ஒரு சோகம்தான்.மொழிபெயர்ப்புக்குக் காத்திருக்கிறேன்.

Radhakrishnan said...

கிரிக்கெட் படிப்பதுடன் நின்று போனது, இவரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

Sundar சுந்தர் said...

i had an image of a mature, full grey haired, retired govt staff in those words. always liked the subtle humour and his joy over small pleasures & relationships. thanks for sharing. its helped with a quick trip down memory lane to my lazy weekend paper time :)

Post a Comment