மதோசா மாவு

1974-லிலிருந்து அரைத்து அரைத்து ஒரு வழியாய் மதோசா அஹ்.. அஹ்.. 33 மசோதா இன்று நிறைவேறி விட்டது.

இனிமே கவலையே இல்லை. இப்போல்லாம் பெண் குழந்தைதான் நிறையா பிறக்கிறதாம். கள்ளி பாலுக்கு தேவையே இருக்காது. நம்ம கோண குப்பத்து எம்.எல்.ஏ-வுக்கு பெண் வாரிசு மட்டும்தான். வாரிசு அரசியலுக்காக ஆண் குழந்தை பெற்றுக் கொள்ள அடுத்த தெரு எட்டாம் வீட்டுக்காரியையும், கீழ் தெரு கடைசி வீட்டுக்காரியையும் பாலிகமி என்ற பெயரில் மணந்து கொள்ளத் தேவை இருக்காது. பெண் பிள்ளைகளையே வாரிசாக அறிவித்து விடலாம்.

இன்னும் பல பெண்கள் சாதா தோசா-வாகஅடுக்களையில் இருந்து வெந்து போகாமல், ஊசிப் போன மசாலா தோசா-வாக ஆட்டுவிக்கப்பட, சாக்கடைஅரசியலுக்குள் வரவும், இன்னும் பல அரசியல்வியாதிகள் தம் வீட்டுப் பெண்கள் பின்னால் நின்று கட்ட பஞ்சாயத்து அரசியல் பண்ணிக் கொள்ளவும், ஏதாவது குற்றமாகிப் போனால், அவளை விட்டே "என் சீலையை அவன் உருவினான்" என்று எப்.ஐ.ஆர் கொடுத்து எதிர்ப்பவர்கள் முட்டியை பெயர்க்கவும், தேசிய அளவில் வழி வகை கிடைத்து விட்டது.

எங்க "தீதி" மாயாக்கா பிரணாப்-பை கீழே தள்ளி ஒரு அருமையான பட்ஜெட் கொடுத்து இந்திய பொருளாதாரத்தை எங்கயோ கொண்டு போகப் போறா பாருங்க.. (என்ன பெட்டு...)

யார் கண்டார்கள், அடுத்த தேர்தலில் யானைகளோடு, ராக்கி சாவந்த் போன்ற தேசிய முக்கியத்துவம் பெற்ற, சமூக அக்கறை கொண்ட, புரட்சிகர பாலிவுட் பூனைகளும், கேட் வாக்கிங் செய்து கொண்டு பார்லிமெண்டுக்கு வரலாம். டிக்கட் டு பார்லிமென்ட்...

ஆமா... 33 என்ன 33.. பாக்கி 17 கிடைச்சாத்தானே சம உரிமை? கேட்கிறார்கள் இங்கே
வாழ்க ஜனநாயகம். வாழ்க ஈயப் பித்தளை வியாதிகள்.

"டாக்டர்" அஷோக், பலா பட்டறை ஷங்கர், கார்கி போன்றவர்கள் பார்த்து ஏதும் போராட்டம் பண்ணி ஆணீயம் வளர்த்தால் உண்டு.. இல்லை என்றால் மன்மோகன் கதிதான் உங்களுக்கும் என்று இப்போதே சொல்லிகிறேன். அப்புறம் 'முன்னமே சொல்லி இருக்கலாமே அக்கா"ன்னு புலம்பப் ப்டாது...

யாரவது தெரிஞ்சவங்க விளக்குங்கள்... மனித சமூக சம உரிமைகளையும், மனிதனுக்கான விடுதலையையும் பற்றி... ஆண் பெண் வித்தியாசங்களைப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம்..

(லீவு போட்டுட்டு நிம்மதியா இருக்க விடறாங்களா பாருங்க.. )

22 comments:

VISA said...

I love this post.

நட்புடன் ஜமால் said...

ம-தோசா மாவு :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

1974-லிலிருந்து அரைத்து அரைத்து ஒரு வழியாய் மதோசா அஹ்.. அஹ்.. 33 மசோதா இன்று நிறைவேறி விட்டது. //

போங்க, நேத்து சாயங்காலமே நிறைவேறிடுச்சு. நீங்க போஸ்ட் போட்டது 10ந் தேதி ;))))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆமா... 33 என்ன 33.. பாக்கி 17 கிடைச்சாத்தானே சம உரிமை? கேட்கிறார்கள் இங்கே
வாழ்க ஜனநாயகம். வாழ்க ஈயப் பித்தளை வியாதிகள். //

அங்கே ஈயம் பித்தாளைக்கு பேரீச்சம்பழம் கொடுக்குறாங்களா என்ன? ;))))))))))))))

எறும்பு said...

I like this dosaa...

பலாபட்டறை ஷங்கர், கார்க்கி மேல ஏதாவது கோபம்னா பேசி தீத்துக்கலாம்.
:)

D.R.Ashok said...

ஓ.. அது டாக்டர் அஷோக்கா...? அப்ப நானில்ல..

(கொடுத்த லிங்க் ஆங்கிலத்திலும், Administrative லாங்குவேஜிலும், பாடபுத்தகம் போலவும், இருப்பதால் படிக்கமுடியவில்லை..)

பா.ராஜாராம் said...

:-)))

பா.ராஜாராம் said...

D.R.Ashok said...

//ஓ.. அது டாக்டர் அஷோக்கா...? அப்ப நானில்ல..//

எங்கப்பனும் குதிரில் இல்ல. :-)))

D.R.Ashok said...

ஆணியம் வளக்கறதா... அது முடியாத விஷயம் .. ஏன்னா எல்லா ஆண்களும் கல்யாணம் செஞ்சே ஆகனுமே

KVR said...

ஒதுக்கீடு என்பதே ஜனநாயகத்து எதிரானதுன்னு சொல்லிருக்காங்க, அது பத்தியும் கொஞ்சம் மாவு அறைங்களேன் ;-)

புதுகைத் தென்றல் said...

நக்கலா, கலக்கலா சூப்பரா இருந்துச்சு பதிவு.

லீவு போட்டுட்டு இருக்க முடியுமா?

Virutcham said...

linkல் இருப்பதை கொஞ்சம் மொழி பெயர்த்து மாவு அரைசிடுங்க.
நம்ம கனி அக்கா உதடு காஞ்சாலும் சொல்ல வந்ததை சொல்லி முடிச்சிட்டாங்க பார்த்தீங்களா? இந்திக்கு தான் நாங்க சிவப்புக்கருப்பு கொடி ஆங்கிலம் எங்க மொழியாக்கும்.

http://www.virutcham.com

Sangkavi said...

நல்லாயிருக்குங்க உங்க மதோசா மாவு....

முகிலன் said...

இதையே நான் சொல்லியிருந்தா என்ன நடந்திருக்கும்னு யோசிச்சுப் பாத்தேன்.. எதுக்கு விடுங்க..

Chitra said...

ஸ்பெஷல் தோசை, முறுமுறுனு இருக்கு.

நசரேயன் said...

//'முன்னமே சொல்லி இருக்கலாமே அக்கா"//

அப்படியா பாட்டி

Vidhoosh said...

நன்றி விசா

நன்றி ஜமால்

நன்றி அமித்தம்மா: கும்மியடி பெண்ணே கும்மியடி... :)) நேற்றிரவு எழுதினது :)

எறும்பு ராஜ்: பேசி தீர்ந்துடுமா... :))

"டாக்டர்" அஷோக்: :)) //எங்கப்பனும் குதிரில் இல்ல. :-)))// :))))))))
அப்டியெல்லாம் விட்டுட முடியுமா.. எத்தனை வருஷம்தான் பெண்ணீயம் மட்டுமே விற்று காசு பாக்குறது..

ராஜாராம்: நன்றி.. :))

கே.வி.ஆர்.: அரைக்கலாமே...:))

நன்றி தென்றல். முடில.. அதான்.. எங்க கொண்டு போய் புலம்பறது.. கேட்கிரத்துக்கும் யாரும் இல்லை.. :))

விருட்சம்: உங்கள் முதல் வரவுக்கு நன்றி. கண்டிப்பா மொழி பெயர்கணும்னுதான் நினைக்கிறேன். செய்யுறேன்.

நன்றி சங்ககவி

நன்றி முகிலன்: நீங்க பேசியிருந்தா நானும் ஈயம்-பித்தாளைக்கு பேரீச்சம் பழம்... யாபாரம் பண்ணி இருப்பேன்..:))

சித்ரா: நன்றி

நன்றி நசரேயன் : பேராண்டி :))

Subu said...

பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதா உண்மையில் பெண்காளுக்காகவா, இல்லை அரசின் திசை திருப்பல் விளையாட்டா ?

ஒரு ஓட்டெடுப்பு

http://manakkan.blogspot.com/2010/03/blog-post_10.html

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

நல்ல காலம் என் பேர பார்த்தவுடனே தொடர்பதிவுபோலன்னு நினெச்சிட்டேன்..:)

--

இதுக்காகவே போராட்டம் உண்டுங்க.. :) சிவமில்லையேல் சக்தி இல்லைங்க...

எதுனா பார்த்து போட்டு எம்.பி ஆக்கிடுங்க..:)

SK said...

இட ஒதுக்கீடு முழுவதும் தவறு என்று சொல்ல முடியாது.. சரியான ஆட்கள் அதில் பயன் பேரும் வரை. ஆனால் அது நடப்பதில்லை. .. வேற என்ன சொல்றது.

V.Radhakrishnan said...

நூறிலிருந்து முப்பத்து மூன்றாக குறைந்துவிட்டதே எனும் வருத்தம் எனக்கு அதிகமிருக்கிறது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

Post a Comment