சென்னை வலைப்பதிவர் குழுமம் குறித்து

சனிக்கிழமை அன்று குழுமம் அமைப்பது குறித்த பதிவர் சந்திப்பு பலருக்கும் ஏமாற்றம் தந்திருக்கலாம். ஆனால், இது நிச்சயம் ஒரு மிகப் பெரிய ஆற்றலாகும் குழுமத்திற்கான துவக்கம் என்றே நான் கருதுகிறேன். இதை initiate செய்தவர்களுக்கு வாழ்த்துக்கள் - நன்றியும்.

பின்னாளில் திரும்பிப் பார்க்க எழுத்தின் மூலம் உபயோகமாய் செய்யவும், பதியவும் வேண்டும் என்ற ஒத்த சிந்தனையுள்ளவர்களும், என்னதான் சொல்றாங்கன்னு பார்க்கலாம் என்றும் அங்கே வந்து அமர்ந்திருந்த பலரையும் அடையாளம் காண முடிந்தது. ஏற்கனவே தீர்மானித்த ஒரு முடிவுக்கு தலையாட்டி விட்டு வரலாம் என்றும் நினைந்த்திருக்கலாம் சிலர். போதாக் குறைக்கு ஞாநி வேறு யூனியன், கவர்மண்டோடு பேச ஒரு மீடியம் என்றெல்லாம் பிரம்மாண்டம் காட்டி மிரட்டி விட்டதால், ஆயாசம். இன்னும் இந்தக் குழுமம் போகும் பாதையை கலந்தாலோசிக்க வேண்டியே அமைந்தது இக்கூட்டம் என்றாலும், அதை பலரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள் என்பது, திட்டமிடல் சரியாக அமையாமல் குழப்பம் மிஞ்சியது நிஜம்தான். இப்போதுதானே துவங்கி இருக்கிறது.

சென்ற முறை நிகழ்ந்த (முதல்) சொற்கப்பல் விமர்சனக் கூட்டம் ஒரு அற்புதமான எடுத்துக்காட்டாக அமையக் கூடும். எதைப் பற்றி, என்ன பேசப் போகிறோம் என்பது பற்றிய திட்டமிடல் அருமையாக அமைந்திருந்தது. முக்கியமாக அஜயன் பாலாவின் உரை. சொல்ல வந்தது அனைத்தும் முழுமையாகவும் சரளமாகவும் இருந்தது. என்னால் அன்று கூட்டம் முடியும் வரை இருந்து முழுதும் கேட்க முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது. சரி போகட்டும்?

நாம் ஒரு குழுமமாக அமைய என்ன செய்யலாம் என்று பேச நினைத்தவை இவை. வந்து அமர்ந்து அங்கு நடந்து கொண்டிருந்த கருத்து அமளிகள் மற்றும் நேரமாகிக் கொண்டிருந்த கஷ்டம் போன்றவைகளால் என்னால் அங்கேயே பகிர முடியாது போனது.
  • குழுமம் அமைக்கப் படவேண்டியது நிச்சயம் தேவை. ஒபாமா ஜெயித்ததற்கு வலை பதிவர்கள் மிக முக்கியமான கருவியாக அமைந்திருந்தது இங்கு குறிக்கத்தக்கது. தெளிவான சிந்தனையோடு இன்னது எங்கள் நோக்கம் என்ற முடிவோடு அமையப் பெற வேண்டியது முக்கியம்.
  • இணையதளம் மூலம் எழுதுவதனால், எண்ணிலடங்கா வாசகர்களை சென்றடைந்து, தமிழ் மற்றும் தமிழ் எழுத்தாளர்கள், வளரும் எழுத்தாளர்கள் போன்றவர்களுக்கான தளமாகவும், தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழ் இலக்கியத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்கி, தமிழுக்கு தனி மரியாதையை உலக அளவில் உருவாக்கித்தரும் ஆற்றல் blogging மூலம் பெற முடியும்.
  • தமிழ் பதிவர்களை திரட்டி professional blogger-களாக ஆகவும், blogging மூலம் பொருள் ஈட்டவும் வழிவகைகள் செய்தல். பெரும்பான்மையான தமிழ் பதிவர்கள் பகுதி நேர பதிவர்களாகவே இருக்கிறோம். supportive income என்ற வகையில் பொருளீட்டும் வழிமுறைகளை தொழில்நுட்ப ரீதியாக பகிர்வதன் மூலம், இன்னும் பயனுள்ள வகையில் எழுதுவதை ஊக்கப் படுத்தலாம்.
  • blogging ethics முறைகளை தெளிவு படுத்துவது.
  • தமிழ் blogger-களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பை வழங்குவது. பத்திரிக்கையாளர்கள் சட்டம் இதற்கும் பொருந்துமா என்பது யோசிக்க வேண்டிய ஒன்று. அப்படி இல்லையென்றால், அதற்கு என்ன வழி என்பதையும் பொறுத்து, அடிப்படையாகக் கொண்டு, அதற்கேற்ற மாதிரி இந்த குழுமம் பதிவு செய்யப் படவேண்டும்.
  • கருத்து சுதந்திரம் மற்றும் எப்படிப்பட்டக் கருத்தும் உடனடியாக அனைவருக்கும் படிக்கக் கிடைக்கும் ஆபத்தும் இணைந்தே இருப்பது என்பதால், தனிநபர் (பதிவர்) பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வும், பொறுப்புணர்வும் தருவது.
  • தலைவர் வேண்டாம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால் பகிர / சொல்லப் படும் கருத்துக்கள், சிதறவும், அள்ளமுடியாமலும் போகக் கூடும். தலைமை என்பது நிச்சயம் தேவை. அந்தந்தக் கூட்டத்திற்கு ஒருவர் என்ற வகையில் சுழற்சி முறை தலைமையாக அமையலாம். இது பேசும் பொருளுக்கான agenda மற்றும் direction மற்றும் control -லுக்கு உதவும்.
  • வரும் நாட்களில் முறையாக பதிவு (registration) செய்த பின், freelancer மற்றும் வலைப் பதிவுகள் மூலம் எழுதியும் பொருள் ஈட்டியும் வரும் நபர்களுக்கு, குழுவாக / forum ஆக அமைந்திருந்தால் medical insurance (உதாரணத்திற்கு) போன்றவை கிடைக்க வழிவகை செய்யும் சட்ட பாதுகாப்புக்கள் கிடைக்கும் வழிகள் இருக்கின்றன. a group shall definitely take us a long way in positive sense.
  • குழுவாக அமையும் போது, எழுதும் கருத்துக்கள் மீதான பொறுப்பு அதிகரிக்கும். பல எழுத்தாளர்களை அடையாளம் கண்டும், புத்தகங்கள் வாசிக்க பகிரும் ஒரு அரங்காகவும் அமையலாம். முடிந்தால் அனைவரும் இணைந்து ஒரு நூலகம் கூட அமைத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கலாம்.
  • தொழில்நுட்பம் மற்றும் தொழில்/இலக்கியம் சார்ந்த விஷயங்களைப் பகிர்தல். எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருப்பதில்லை. அப்படி அறிய விரும்பும் விஷயங்களை பொதுவில் கேட்கலாம் / தெரிந்தவர்கள் பகிர்ந்து, ஆரோக்கியமாக விவாதித்துக் கொள்ளலாம்.
    • lighter side: சிரிக்க மட்டும்: எனக்கு தெரிந்து இலக்கிய விவாதங்கள் செய்தே ஒரு தம்பதி விவாகரத்து பெற்றிருக்கின்றனர். வீட்டில் கணவனோ மனைவியோ ஒருவர் மட்டும் எழுதுதல் நம்ம உடம்புக்கும் மனசுக்கும் குடும்பத்துக்கும் நல்லது என்று முன்னெச்சரிக்கை விடுத்துக் கொள்கிறேன். சாமர்த்தியமாக உங்கள் spouse-களை வாசிப்பதோடு நிறுத்திக் கொள்ள வைப்பது உங்கள் சமர்த்து.
எனக்கு இப்போதைக்கு தெரியும் சில சிக்கல்கள்:

  • யார் யாரை உறுப்பினர்களாக அங்கீகரிப்பது?
  • பூசல்காரர்களை என்ன செய்வது?
  • கூட்டம் நடத்துவதற்கான பொருட்செலவை எப்படி நிர்வகிப்பது?

என்பவை மட்டுமே. சமாளிக்கக் கூடியவைதான் இவைகளும். மற்ற பிரச்சினைகள் பற்றியும் தெரிந்தவர்கள் பகிரலாம். ஆரோக்கியமான விவாதங்கள், மற்றும் ஆலோசனைகளை வரவேற்கிறேன். கூட்டாக இணைந்து குழுவாக இருப்பதால் நிச்சயம் நற்பலன்கள் அதிகம். பிரச்சினைகள் இருக்கும். எங்குதான் இல்லை?

ஒரு முக்கியமான அனுபவக் குறிப்பு:
உதாரணம்: நம் அலுவலகங்களில் நடக்கும் weekly review meeting-குகள். :-))
அடிக்கடி சந்திப்பதனால் பேசும் கருத்தும், பேச்சும் பிசுபிசுத்துப் போகும் என்பதால், முடிந்த வரை மூன்று / ஆறு மாதத்திற்கு ஒரு முறை சந்தித்துப் பேசுவதே குழுமத்தின் நீண்ட ஆயுளுக்கு நல்லது. அதுவே பயனுள்ள கருத்துக்களைத் தரும் நிகழ்வாக அமையும்.

36 comments:

Paleo God said...

சகோதரி, உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.

:)

Ashok D said...

ஆஹா....

மணிஜி said...

வித்யா நல்ல கருத்துக்கள்.. அப்புறம் தூக்க முடியாமல் தூக்கி கொண்டு வந்தேன். உங்கள் அன்பளிப்பை. நன்றி

Unknown said...

உங்கள் கருத்துகளை அவசியம் பரிசீலிக்க வேண்டும்...
தேர்ந்த கருத்துகள்,
அப்புறம் என் வீட்டில் மனைவி படிப்பதேயில்லை
ஒரு இலக்கிய வியாதியை குடும்பம் தாங்கினால் போதும்....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) நல்லா எழுதி இருக்கீங்க..

மறுபாதி எழுதக்கூடாதுங்கறதுக்கு காரணம் சொன்னீங்க பாருங்க.. :))

butterfly Surya said...

தெளிவா சொல்லியிருகீங்க.

பகிர்விற்கு நன்றி.

நந்தாகுமாரன் said...

hmmm ... good points ...

ஹுஸைனம்மா said...

எல்லாக் கருத்துக்களுடனும் ஒத்துப் போவதன் அளவைவிட அதிகமாக “வீட்டுக்கு ஒரு பதிவர் போதும்” என்ற கருத்தை அதிகம் வழிமொழிகிறேன்!!

எம்.எம்.அப்துல்லா said...

உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

:)

Vidhoosh said...

ஷங்கர்: எனக்கும்தான்.

அசோக்: நன்றி

மணிஜீ: தெரிந்திருந்தால் ஆட்டோ அனுப்பி இருப்பேன். பரவால்லை. :))

நன்றி செந்தில்: இது இன்னும் நல்லது. அட என்னைய பத்தி இப்டி எல்லாமா எழுதுறது?ன்னு சண்டை வராது பாருங்க.

முத்துலெட்சுமி: நன்றிங்க.

சூர்யா: நீங்கள் வந்திருந்தீர்களா? உங்களையும் சந்திக்கனும்னுதான் நினைத்தேன். :)

நந்தா: நன்றிங்க. ரஜினி மாதிரி எப்போ எழுதரீங்கன்னே தெரிய மாட்டேங்குது.

நன்றி ஹுசைனம்மா :))

அப்துல்லா: எனக்கும் மகிழ்ச்சியே. :) இன்னும் கொஞ்சம் பேசவும் நேரம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

Vidhya Chandrasekaran said...

குழுமம் தேவைதான். ஆனால் தெளிவு அதைவிட அவசியம்.

ஹி ஹி அப்புறம் மறுபாதி வாசிக்கறதும் கஷ்டம் தானுங்கோ. நல்லவேளை எங்காளு தமிழ் கூட்டிப் படிக்கறதுக்குள்ள விடிஞ்சிடும்ங்கறதால வண்டி ஓடுது:)))

கபீஷ் said...

அவசியமான, நல்ல கருத்துக்கள்.
வீட்டுக்கு ஒரு பதிவர் :-):-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

வீட்டில் கணவனோ மனைவியோ ஒருவர் மட்டும் எழுதுதல் நம்ம உடம்புக்கும் மனசுக்கும் குடும்பத்துக்கும் நல்லது என்று முன்னெச்சரிக்கை விடுத்துக் கொள்கிறேன். சாமர்த்தியமாக உங்கள் spouse-களை வாசிப்பதோடு நிறுத்திக் கொள்ள வைப்பது உங்கள் சமர்த்து. //

வாஸ்தவம் தாங்க :)

Unknown said...

”எனக்குக் கிடையாதன்னு” கேட்டேன்.
காதுல வாங்காமா கொடுக்கமா போய்ட்டீங்களே! நியாயமா?

VISA said...

சங்கம் பற்றிய சங்கதி என்பதால் சிங்கம் இப்போதைக்கு
குகைக்குள் போய்விடுகிறது அப்பாலிக்கா வரும்.....

துபாய் ராஜா said...

நல்லதொரு பகிர்வு.

Vidhoosh said...

நன்றி வித்யா: ரொம்ப நல்லதா போச்சு
நன்றி கபீஷ் தீபா: வீட்டுக்கு ஒரு பதிவர் நாட்டுக்கும் நலமே.
நன்றி அமித்தம்மா: :)) என்னவோ போங்க.
ரவிசங்கர்: மன்னிக்கணும். போயிட்டு வரேன்னு புறப்பட்டச்சுன்னா மனசு முதல்லையே நேர வீட்டுக்கு போயிடுது. வேறேதும் காதுல விழுவதில்லை.அதுவும் அன்றைக்கு அங்கே ரொம்ப சத்தம் ஜாஸ்திதான். :( ரொம்ப மன்னிக்கணும். இனி எங்காவது பாத்தீங்கன்ன நீங்க "விதூஷ், நில்லுங்க"ன்னு சொல்லுங்க. அடுத்த முறை கண்டிப்பா பார்க்கலாம்.

விசா: நன்றிங்க. :)

துபாய் ராஜ: நன்றிங்க. :)

Radhakrishnan said...

ரொம்பத் தெளிவாத்தான் இருக்கீங்க ஆனா பதிவர்கள் மத்தியில சின்ன சலசலப்பு தென்படுவது வருத்தம் தரும் விசயம், நிச்சயம் ஒரு சிறந்த அமைப்பினை உருவாக்க எனது ஆதரவு உண்டு. அரசியல், உள்குத்து, வெளிக்குத்து இதெல்லாம் இல்லாம ஒரு அமைப்புதனை உருவாக்குவது என்பது பெரிய போராட்டமே. வாழ்த்துகள்

ராம்ஜி_யாஹூ said...

என்னுடைய தனி பட்ட கருத்து இது.
பதிவிலும் வருமானம் வருமா, சந்தா கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தால் பதிவு எழுதல் விரைவில் சலிப்பு அடைந்து விடும் என்பதே.
இப்போது பதிவின் மேல் பலருக்கும் ஈர்ப்பு இருக்க காரணம் இப்போது டார்ஜெட் , குறிக்கோள்கள் இல்லை.

நீங்கள் சொல்லும் வலைப்பதிவு எதிக்ஸ், அங்குதான் பதிவு தணிக்கை நுழைந்து விடும்.

Cable சங்கர் said...

நல்ல பதிவு விதூஷ்..

"உழவன்" "Uzhavan" said...

கருத்துகளை தெளிவாக வைத்துள்ளீர்கள். இதுபோன்ற பல யோசனைகள் போகப்போக பலரிடமிருந்து கிடைக்கும் என எண்ணுகிறேன்.
 
அன்று ரொம்ப அவசரமா கிளம்பிக்கிட்டு இருந்தீங்க.. நங்கநல்லூரும் செல்லவேண்டுமென..

Vidhoosh said...

நன்றி ராதாகிருஷ்ணன் சார். போராட்டம்தான். பிரச்சினைதான். எங்குதான் இல்லை. இதனால் நிச்சயம் பல நற்பயன்கள் உண்டு என்பதால் என்றும் என் ஆதரவு உண்டு.

நன்றி ராம்ஜி: நீங்கள் சொல்வதும் உண்மைதான். சொந்த நேரம், அறிவு முதலியவற்றிற்கு பணம் ஒரு ஈடே கிடையாது. ஆனால் கொஞ்சம் அதற்கான அங்கீகாரம் பணமாகவும் கிடைத்தால் பலருக்கும் இன்னும் ஊக்கமாக இருக்கலாம். இன்று இணையத்தில் எழுதும் நிறையா தமிழ் பதிவர்கள் நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்பது சமீபத்து சந்திப்புக்களில் நான் உணர்ந்த ஒன்று. சொந்தக் காசையோ, மின்சாரத்தையோ, இல்லை அலுவலகத்தில் தம் வேலைகளுக்கு இடையே கிடைக்கும் நேரத்திலயோ பதிவு எழுதி, பின்னூட்டம் இடுகிறார்கள். அவர்களுக்கு இணையம்/வலைப்பூ மூலம் வரும் வருமானம் நிச்சயம் உதவியாக இருக்கும் என்றே நினைத்து அவ்வாறு கூறினேன். :)

நன்றி சங்கர் (கேபிள்). :)

நன்றி நவநீத கிருஷ்ணன். ஆமாம் நங்கநல்லூருக்கு போய் விட்டு குழந்தையை pick up செய்து கொண்டு எங்கள் வீட்டுக்கு போகும் அவசரம்தான். இல்லையென்றால் தூங்கி விடும். :(

Rajeswari said...

உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி விதூஷ்.

சிநேகிதன் அக்பர் said...

நல்லதொரு பகிர்வு.

அரவிந்தன் said...

சாரு எங்கே கூட்டத்திற்க்கு வந்தார்..வந்தது ஞாநி அல்லவா..

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

Ken said...

சாருநிவேதிதா வேறு யூனியன், கவர்மண்டோடு பேச ஒரு மீடியம் என்றெல்லாம் பிரம்மாண்டம் காட்டி மிரட்டி விட்டதால்,

Pls rectify this , charu was not there that was njani :((((((((((((

creativemani said...

இத்தனை உபயோகமான அம்சங்கள் இருக்கும் போது.. கூகிள் கிட்ட போய் கேட்கலாம், கவர்ன்மென்ட் கிட்ட போய் கேட்கலாம், சைபர் க்ரைமில் பேசலாம் என்பது போன்றவைகளே அதிகம் அலசப் பட்டன.
உங்களை சந்தித்ததில் சந்தோஷம்..
எனது கருத்துக்களை இங்கே பதிந்திருக்கிறேன்..
http://anbudan-mani.blogspot.com/2010/03/blog-post.html

உண்மைத்தமிழன் said...

தங்களுடைய வருகைக்கும், பரிந்துரைக்கும், ஆலோசனைக்கும் மிக்க நன்றிகள்..!

Thenammai Lakshmanan said...

வித்யா போய் இருந்ததீங்களா ..
நல்லது

நசரேயன் said...

//எனக்கு தெரிந்து இலக்கிய விவாதங்கள் செய்தே ஒரு தம்பதி விவாகரத்து பெற்றிருக்கின்றனர். வீட்டில் கணவனோ மனைவியோ ஒருவர் மட்டும் எழுதுதல் நம்ம உடம்புக்கும் மனசுக்கும் குடும்பத்துக்கும் நல்லது என்று முன்னெச்சரிக்கை விடுத்துக் கொள்கிறேன். சாமர்த்தியமாக உங்கள் spouse-களை வாசிப்பதோடு நிறுத்திக் கொள்ள வைப்பது உங்கள் சமர்த்து//

சங்கத்திலே முத தீர்மானமாக நிறைவேற்ற வழி மொழிகிறேன்

பா.ராஜாராம் said...

நான் வாசித்த வரையில்...(இது குறித்து)

மிகுந்த நம்பிக்கை அளிக்கும் பதிவு இது வித்யா!

Vidhoosh said...

ராஜேஸ்வரி: எனக்கும்தான் :) நிறையா எழுதுங்க.

அக்பர்: நன்றிங்க

அரவிந்தன்: ஆமாங்க. ஞாநிதான் ஸ்லிப் ஆகிடுச்சு :)) மாற்றி விடுகிறேன். சுட்டியதற்கு ரொம்ப நன்றிங்க.

கென்: உங்களுக்கும் நன்றிங்க. மாற்றி விடுகிறேன்.

நன்றி மணிகண்டன். ஆரம்பித்து பயணிக்கும் போது இன்னும் பல நன்மைகளும் காணக் கிடைக்கும். ஜன்னல் ஓரத்தில் சீட்டு போட்டு வையுங்கள் :)

நன்றி உண்மை தமிழன். அத்தனையும் பொறுமையாய் புன்னகைத்து கொண்டே முன்னால் நின்று சமாளித்து கொண்டு இருந்தீர்களே. அதற்கே உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட். நானாக இருந்தால் கொஞ்சம் டென்ஷன் ஆகி இருந்திருப்பேன்.

தேனம்மை: ஆமாம் மேடம். அடுத்த முறை கொஞ்சம் பெண்களுக்கு சௌகரியமான நேரமாக நிகழ்ச்சியை வைக்கச் சொல்லி கோரிக்கை விடுத்திருக்கிறேன். நீங்கள் (பெண்கள்) அனைவரும் நிச்சயம் வரவேண்டும் என்பது என் வேண்டுகோள்.

நன்றி நசரேயன். :) கொஞ்சம் வளவளத்தாளையும் சங்கத்துல ஆஜராகச் சொல்லுங்க. அவங்களை பாக்கனும்னு பேச கேட்கணும்னு ஆசை. :))

பா.ரா. அண்ணா: ஏனோ பிரச்சனைகளை லென்ஸ் வைத்து பார்த்து கொண்டு இருக்கிறார்கள். இணைந்து குழுவாக செயல் படும் போது அனைவருக்கும் பல நன்மைகளும், பாதுகாப்பும் கிடைக்கும் என்பது அனுபவத்தில் உணர்ந்தது. என்ன, பல வண்டிக்கு சாரதியாக இருப்பதால், இந்த வண்டிக்கு என்னால் பின்னால் இருந்து ஆதரவு குரல் மட்டுமே தரமுடியும் என்று நினைக்கிறேன்.

இரசிகை said...

nalla yosanaikal....!

செந்தில் நாதன் Senthil Nathan said...

ரெம்பவே எதிர்பார்புகள அதிகபடுதுற மாதிரி இருக்கு..



இது மாதிரி நடைமுறையில் சாத்தியம் இல்லாத பல எண்ணங்கள் பதிவு முழுக்க..

குழுமம் வேண்டாட்டி போ அப்படின்னு சொன்னா, அதுவும் சரி தான்..நான் பாடு போய்கிட்டே இருக்கேன்.. :-)

பின்னோக்கி said...

எந்த ஒரு கருத்துக்கும் மாற்று கருத்து உண்டு என்ற அளவில், முதல் சந்திப்பில் ஆர்வம் அதிகமாக இருந்ததால், குழப்பம் நிகழ்ந்திருக்கலாம் என நினைக்கிறேன். விரைவில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்.

துளசி கோபால் said...

அருமையான யோசனைகள் வித்யா.

வெளிநாடுகளில் இருந்து தமிழில் எழுதும் பதிவர்களையும் அங்கத்தினரா சேர்த்துக்குவாங்கதானே?

வீட்டுக்கு ஒரு மரம் & வீட்டுக்கு ஒரு பதிவர். ஆஹா......

Post a Comment