களைத்த நாயின் குரல்

இனி
அடமானத்துக் காகிதங்கள்
எனக்கான
துர்மரணங்களை நிர்ணயிக்காது
எம்மகளின் சொத்தாகவுமிருக்கும்

இனி எனக்கு
முகமூடிகளை மாற்றி மாற்றியணியும்
நிர்பந்தம் இருக்காது

இனி
வீடு நோக்கி பயணிக்கலாம்
திரிவேணிக்கு காத்திருக்காது
என் தாயின் அஸ்தி

இருண்ட நகரின் குகையில்
ஒலிக்கும் களைத்த நாயின் குரல்
நிரம்பிய காதுகளை மூடும்
ஏதுமற்ற என் விரல்கள்

17 comments:

Thenammai Lakshmanan said...

களைத்த நாயின் இளைப்பு கூட கேட்டுது இதில் வித்யா

Ashok D said...

நல்லாயிருந்ததுங்க... கவித்துவமா


(Mind voice: ஆஹா... நாம்மளும் ஒரு புரியா கவித எழுதிடவேண்டியதுதான்..)

நேசமித்ரன். said...

மிக வலிக்கும் ஒரு உணர்வை ஒரு மெல்லிய எதிர்வினையை பதிவு செய்திருக்கிறது இந்தக் கவிதை

அன்புடன் அருணா said...

ரொம்ப நல்லாருக்கு!

Unknown said...

நல்லா இருக்குங்க கவித..

எல்லாரும் சொல்ற மாதிரி கவிதை எழுதினா அந்த கவித்துவத்தை ரசிச்சிட்டு விட்டுர வேண்டியதுதான்.

தமிழ் உதயம் said...

நல்லா இருக்கு. ஆனா ஏதோ ஒரு சொல்லத் தெரியாத குறைபாடு... தெரிகிறது. ஒரு வேளை அந்த குறை தான்... இந்த கவிதையின் வெற்றியோ.

Paleo God said...

கடிக்காதவரை சரிங்க..:)

Chitra said...

இருண்ட நகரின் குகையில்
ஒலிக்கும் களைத்த நாயின் குரல்
நிரம்பிய காதுகளை மூடும்
ஏதுமற்ற என் விரல்கள்

........... good one

சாந்தி மாரியப்பன் said...

நல்லா இருக்கு வித்யா.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லா இருக்கு

பித்தனின் வாக்கு said...

ரொம்ப நல்லாயிருக்கு, ஆனால் தொடர்புகள் தான் புரியவில்லை.

"உழவன்" "Uzhavan" said...

இன்னமும் எலிமெண்ட் ஸ்கூல் லெவல்லயே இருக்கறதால, புரிஞ்சிக்குறது பெரும்பாடாவே இருக்கு :-)

vidivelli said...

நல்லாயிருக்குங்க.........
வசதியிருந்தால் நம்ம பக்கமும் வரலாம்தானே..........

காமராஜ் said...

நல்லா இருக்குங்க கவிதை.

Sanjai Gandhi said...

யாரையாச்சும் திட்றிங்களா? :(

விஜய் said...

பின்நவீனத்துவ கவிஞராக மாறிட்டீங்க போலருக்கு.

நல்லா இருக்கு

விஜய்

Radhakrishnan said...

ஓடியாடி உட்காரும்போது மனதில் ஒருவித அமைதி கிடைக்க வேண்டுமெனில் ஒவ்வொரு செயலையும் நேசிக்கத் தொடங்குங்கள், கவிதையில் சில காயங்கள் தென்படுகின்றன.

Post a Comment