முந்தாநேத்து பிரேமானந்தா, நேத்து கல்கியானந்தா, இன்று நித்தியானந்தா, நாளை ஒரு சதியனந்தாவோ... சத்தியானந்தாவோ
வெயில் நாலு டிகிரி உயர்ந்து விட்டதையும், இனிமேல் வெயில்தான்- இனி எந்த சாக்கு போக்கும் இல்லாமல் சாலை இல்லாத கிராமங்களுக்கு, சாலைப் பணிகள் ஆரம்பிக்கலாம் என்பதையும் மறந்து, தீடீரென்று முளைத்து விட்ட "குடிசை இல்லா தமிழ்நாடு" பற்றிய கேள்விகள் எதுவும் கேட்கத் தோன்றாமல், தமிழ்நாட்டில் ஆளும்கட்சியின் குளறுபடிகளையும், பட்ஜெட்டில் பொருளாதாரம் சறுக்கி அதல பாதாளத்தில் விழுந்ததையும், பெட்ரோல் விலை உயர்வையும், எக்சைஸ் டூட்டியையும், தங்கத்தில் கொசுறை குரைத்து வெள்ளியில் மலைபோல வரியை ஏற்றியதையும், coal போன்ற மூலப் பொருட்களின் மீதான செஸ் உயர்வு வரும் நாட்களில் தொடர் சங்கிலியாக விலையேற்றத்திற்கு வழி வகுத்திருப்பதையும் யோசித்துக் கூட பார்க்க முடியாத படி, உணவு பற்றாக்குறையையும், உணவுப் பொருட்களின் மீதான பாதுகாப்பு, விவசாயிகள் வாழ்க்கைத் தர உயர்வோ, வேலையின்மை மீதான எந்தவொரு குறிப்போ, பொறுப்போ இல்லாத பட்ஜெட் பற்றிய விவாதங்கள் ஏதும் நிகழாமல், "யார் அவ" என்றறிவதிலேயே நம் வேலைகளை விட்டு கவனிக்க ஆரம்பிக்கிறோம். குறைந்த பட்சம் தமிழ் பதிவர்கள் கொண்டாடிக் கொண்டிருந்த "விண்ணைத்தாண்டிவருவாயா" படத்துக்கு இப்படி ஒரு நீலப் படம் போட்டியாக வரும் என்று கனவிலும் கூட நினைத்திருப்பாரா கௌதம்மேனன்.
அடுத்தவன் படுக்கையறையை எட்டிப் பார்ப்பதில் அவ்ளோ ஆர்வம். குழந்தைகளும் மருமகள்களும் வீட்டில் இருக்கிறார்கள் என்பதையும் மறந்து நாம் நடுக்கூடத்து எல்சீடீயில் லீலைகளை பார்த்து "அடப்பாவி" என்று சொல்லிக் கொண்டே சன் டிவியை மாற்றாமல் முக்கியமான காட்சிகளை மனப்பாடம் ஆகும் வரை ஒளிபரப்பாகும் போதெல்லாம் பார்த்துக் கொள்கிறோம். "மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு" என்று சின்னதாய் ஒரு ரன்னர் ஓடாத குறையைத் தவிர வேறேதும் இல்லை...
கடந்த எட்டு வருடத்தில் இந்தியப் பொருளாதாரம் கன்னாபின்னாவென்று முன்னேறிவிட்டதாம்.... புள்ளைக்கு படிப்பு சொல்லித்தந்து, இதோ சாதமும் ஊட்டி, தூங்க வைத்து விட்டு தான் நான் இந்தப் பதிவு எழுதுகிறேன் என்பதையும் சொல்லிக்கிறேன். : ) )
என்னவோ போடா மாதவா...
31 comments:
அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர் மரணங்களை விட்டு விட்டீர்களே??
விதூஷ் வந்தாச்சு.. எல்லாரும்....
சன்.டி.வி யின் டி.ஆர்.பி. எகிறிவிட்டது. ரஞ்சிதா என்று பெயரை அம்பலப்படுத்துவார்கள் என்று நான் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை. ஆர். என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் நடிகை என்று முதல் நாள் அறிவித்த போதே சன்.டி.வி யின் வக்கிரம் எனக்கு புரிந்துவிட்டது. இரண்டாம் நாள் சாமியாரை விட அந்த பெண் தான் என்னை அதிகம் பாதித்தாள்.
அரசியல் பிரச்சனைகளை திசை திருப்ப சாமியார் மடங்கள் சாதகமாக இருக்கிறது, இதில் ஒரு பெண்ணும் அவமானத்திற்கு ஆளாகும் போதும், மிக கேவலமான ஆங்கிள்களில் படமாக்கப்பட்ட கிளிப்களும் சர்வ சாதரணமாக சன் செய்தி-தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது குறித்த வெட்க உணர்வு கூட இல்லை நம் மக்களுக்கு. செய்திதாள்களும் மூத்த அரசியல்வாதிகள் கூட இதை பற்றிய கேள்வி கேட்கவில்லை. அப்படியே கேட்டாலும், "நீங்க நித்தியானந்தாவை ஆதரிக்கிறீர்கள்" என்று சாணியை கரைத்து ஊற்றுவார்கள்.
இந்தியாவை விட்டு போயிடலாமான்னு இருக்கு... இது போன்ற தருணங்களில்.
கடந்த எட்டு வருடத்தில் இந்தியப் பொருளாதாரம் கன்னாபின்னாவென்று முன்னேறிவிட்டதாம்...
.......அப்படியா? ....
//கடந்த எட்டு வருடத்தில் இந்தியப் பொருளாதாரம் கன்னாபின்னாவென்று முன்னேறிவிட்டதாம்...
.......அப்படியா? ....////
அப்டீன்னுதான் பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேசினாருங்க சித்ரா... காலக் கொடுமை.
அண்ணாமலை பல்கலை கழக விவகாரம் ஊடகங்கள் மூலம் திசை திருப்பப் பட்டு வருகிறது என்பதை தவிர வேறு ஏதும் சொல்ல விருப்பம் இல்லை. இங்கு முற்றிலும் சாக்கடை அரசியல்.
//// D.R.Ashok said...
விதூஷ் வந்தாச்சு.. எல்லாரும்....///
அது சரி... :))
//இங்கு முற்றிலும் சாக்கடை அரசியல்.//
நீங்க ரொம்ப லேட். நாங்க இத புரிஞ்சுகிட்டு இந்த நாட்டுல வருமான வரி கட்டி குப்பை கொட்டிக்கொண்டிருக்கிறோம்.
பிரேமானந்தா வரிசைல நித்யானந்தா வந்த மாதிரி ஷோபா, சில்க் ஸ்மிதா வரிசைல ரஞ்சிதா, நயனதாரா பேரும் வந்தாலும் வரும். கிசுகிசு படிச்சிட்டு போயிக்கிட்டே இருப்போம் :(
/இந்தியாவை விட்டு போயிடலாமான்னு இருக்கு... இது போன்ற தருணங்களில்.//
போனாலும் விடாது கருப்பு!!
நாங்க இந்தியாவில இல்லைனாலும் அப்டேட்டடாத்தான் இருக்கோம் ஊடகங்களின் தயவில்!! ;-))
ரைட்டு
இந்த மாதிரிக் கண்றாவியெல்லாம் எங்கேயும் துரத்தும் வித்யா...
எங்கே போவீங்க..?
வழியில்லை ...
நடுக்கூடத்தில் கூட....
நம் கட்டுப்பாடில் எதுவுமில்லை...
பெரியவர்கள் கூட இப்படி அவலுக்கு அலைவது அசிங்கம்..
:(
என்னமோ போடா மாதவா தான் இங்கும்:(
பட்ஜட் பத்தி நானும் ஒரு பதிவு போடணும்னு நினைச்சிருந்தேன். வேலை அதிகமாகி விட்டுட்டேன். நான் பதிவு போட்டுட்டா பொருளாதாரம் முன்னேறிடவா போகுது?? :((
கேட்டுட்டேன்... கேட்டுட்டேன்... :-)
எப்புடி வித்யா... நாலு வரில பதிவு எழுதுறீங்க?? (வேணும்னா நல்லா பாருங்க. ஒவ்வொரு பத்திலையும் ஒரு முற்று புள்ளி தான் இருக்கு :-)) )
என்னமோ போடா மாதவா... :-)
நீங்கள் கேட்ட கேள்விகளை பற்றி யாருக்கும் கவலையில்லை.
வக்ரம் பிடித்த ஊடகங்கள் எல்லவற்றையும் மூடி மறைக்கவும், திசை திருப்பவும் மட்டுமே செய்கின்றன.
\\இந்தியாவை விட்டு போயிடலாமான்னு இருக்கு... இது போன்ற தருணங்களில்.\\
:-(((
இந்தியாவாவது பொருளாதாரம் ஆவது அதெல்லாம் டூப்பு..நித்யானந்தா தான் டாப்பு.
:((
தீபா,முல்லை, அப்புறம்,வித்யா... செவ்வணக்கம் வித்யா.
உலகத்திலேயே இப்பதான் சாமியார்கள் இப்படி ஆன மாதிரி.
ஒவ்வொரு முறையும் கூத்து நடக்குது.பிடிபடதா சாமியார்கள் நமுட்டுச்சிரிப்புடன்.
//புள்ளைக்கு படிப்பு சொல்லித்தந்து, இதோ சாதமும் ஊட்டி, தூங்க வைத்து விட்டு தான் நான் இந்தப் பதிவு எழுதுகிறேன் என்பதையும் சொல்லிக்கிறேன்//
அம்மா சொல்லுறது நிசமா தர்ஷனி நீயே கேளேன் ?
குப்பை கிளரும் சேனல்களை கூடத்தில் விடுவது நாம் தானே. பெரும்பாலான செய்தி தொகுப்புகள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல குடும்பத்துடனான நேரத்திற்கும் பொருந்தாதவையே. மற்ற நிகழ்ச்சிகள் கூட, எங்கோ முரண்பாடாய் நடக்கும் நடவுகளையும், dysfunctional குடும்பங்களையும் சராசரி போல காண்பிப்பதில் குப்பைகளே. குழந்தைகளுக்கான சேனல்கள் கூட வயதிற்கு தகுந்த மொழிப்பெயர்ப்பின்றி ரொம்ப டெர்ரர் ஆகத்தான் இருக்குது. But then it is up to us to use a remote.
/இந்தியாவை விட்டு போயிடலாமான்னு இருக்கு... இது போன்ற தருணங்களில்/
gays kissing on the streets may repulse you back :)
உண்ர்வுகள் அருமையான label...
இவையாவும் நம் நாட்டின் நடுகூடத்து நாராசம். சுந்தர் கூறுவது போல remote is in our hands அதை யாராலும் தடுத்து நிறுத்த இயலாது. அடுத்த வீட்டு விஷயத்தில் மூக்கை நுழைப்பது நமக்கு சர்வசாதாரணம் , ரணம் தான் அந்த பெண்ணுக்கு இனி நான் அவளில்லை என்ற கூப்பாடு ஆரம்பிக்கும் , வீடியோ பதிவில் மாற்றிவிட்டார்கள் அரசியல் தலையிடு என்று தொடரும் , நித்தியானந்தா போய் இன்னொரு ஆனந்தா வருவார் நம் பிள்ளைகளின் பாதிப்பு தொடரும்..
TRP பாதிக்கும் வகையில் ஒவ்வொருவரும் அந்த தொலைக்காட்சியை தவிர்த்தால் தான் இதற்கு பின்னடைவு என்ற தினத்தை எட்டி விட்டோம் ஆனால் இன்று தொலைக்காட்சி இல்லாம் மாலை பொழுது எந்த வீட்டில் கழிகிறது ? ஒவ்வொருவரும் மரம் வள்ர்த்தால் நாடு செழிக்கும் என்று பல காலமாக சொல்லிக்கொண்டே இருக்கிறோம் நம்மில் எத்தனை பேர் மரம் நட்டிருக்கிறோம் அது போல் தான் இதுவும் பார்ப்பவர்கள் இருக்கும் வரையில் எதை காண்பிக்கலாம் என்பது அவர்களின் கையில் தான்...பார்ப்பதும் பார்க்காததும் நம் கையில், எல்லாத்த்துக்கும் மேலே ஒரு நல்ல சாமியார் என்று யாரையேனும் எங்காவது காண்பிப்பார்களா ? இப்படி இருக்கும் ஆட்களால் உண்மையானவர்களின் நறமும் மங்கலாகி விடுகிறது...
29” 32” 40” இன்சு தொலைக்காட்சி பெட்டியின் காட்சிகளில் நம் நம்பிக்கைகளும் உணர்வுகளும் பூட்டப்பட்டும் வழிநடத்தப்பட்டும் வருவது நமது துர்பாக்கியம்..
என் நாடு , நம் நாடு மகத்தானது , அருமையான பல விஷயங்கள் இங்கே இன்னும் தெரியாமல் அமுங்கி கிடக்கின்றது.. என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ...ம்ஹும்
நன்றி
ஜேகே
//வெயில் நாலு ................வேலைகளை விட்டு கவனிக்க ஆரம்பிக்கிறோம்.//
அப்பாடா.. இவ்வளவு வார்த்தைகளை மூச்சுவிடாம ஒரே மூச்சுல பேசிருக்கீங்க :-)
தலைப்பு நல்லாருக்கு
cool, இன்னும் ஒரு வாரத்திலே ஐபிஎல் வந்திடும். பிறகு, மக்கள்ஸ் இதையும் மறந்திடுவாங்க
no comments.. all the swamiji businesses r same to me.. i hate god-men.. sun tv sure knows their business.. sometimes black is indeed better than grey!
என்ன செய்ய வித்யா. ஹும்ம்ம்ம்
அக்கோவ்..,
இப்ப ஒற்றை லக்கமாம்.
அடுத்த இரண்டாண்டுகளில் இரட்டை லக்கமாம்..யாராலும் தடுக்கவே முடியாதாமாம்ல..
விவசாயிகளே இல்லாத இந்தியாவை படைப்போம் அப்படீன்னு அறைகூவாதவரை பரவால்ல..
இரண்டாம் பாரா ரொம்ப வெய்ட்..கொஞ்சம் மூச்சு விட்டு சொல்லியிருக்கலாம்ல..
என்னவோ போடா மாதவா-தான்.ஹும்...
ஹா ஹா! நீங்களுமா?!
அட!
எவ்ளோ லேட்டா படிக்கிறேன் இந்தப் பதிவை.
ஆனாலும் விஷயம் இன்னும் சூடு குறையாமதான் இருக்கு.
Post a Comment