Buzz's So Noisy, isn't it

social networking - buzz தானாவே என் மெயில் பாக்ஸ்சில் இருந்ததை பார்த்து இது என்ன புதுசா என்று யோசிக்கும் முன்னேயே, என்னோட பதிவுகள், google reader-ரில் நான் ஷேர் செய்பவை, picasa photos, என்று வரிசையாய் சகலமும் சில்லறை சிதறினது போல ஆயிற்று. இது என்னடா கூத்து என்று யோசித்து கொண்டே, கொஞ்சம் buzz செய்தும் பார்த்தேன்.

மிக முக்கியமாக, உங்கள் அனுமதியோ இஷ்டமோ இல்லாமல் உங்கள் contact list-டில் உள்ளவர்கள் எல்லோரும் visible ஆவார்கள். இதில் எனக்கு துளியும் உடன்பாடு இல்லை. இதனால் hackers மற்றும் spam mailersகளுக்கு நிச்சயம் கொண்டாட்டமாகவே இருக்கும்.  ஒரு etiquette நிமித்தத்தில் எல்லோரையும் follow செய்து, மதியம் லஞ்ச் போது பாத்தால் mail box-சில் ஏகப்பட்ட மெசேஜுகள். : ( 

ஏகப்பட்ட மெயில் ஐடிகள் வைத்திருக்கும் பழக்கம் இல்லாததால்,  டமால் டமால் என்று வரிசையாய் மெயில் வந்து குமிஞ்சிருந்த மெயில்களையும் buzz-சையும் தனியாகப் பிரிக்கத் தெரியாமல் சுர்ர்-னு BP ஏறியது.

நேத்தே பட்டர்பிளை சூர்யா இதை பண்ணிட்டார், எனக்குத்தான் எப்படி வெளியேறுவது என்ற வழி தெரியாமல் இருந்தேன்.  இன்று காலை நான் செய்த முதல் காரியம், (என் நண்பர் "Techi" Nag-குக்கு நன்றிகள் பல) unfollow செய்ததும், buzz-சை turn off செய்ததும்தான்.
இங்க போயி ஒருத்தரோட அனுபவத்தை படிச்சுப் பாருங்க.

பஸ்ஸு ரொம்ப கூட்டமாவும் இரைச்சல் ஜாஸ்தியாவும் இருக்குங்க... மிக முக்கியமாக நிமிஷம் நிமிஷமாக ஆகும் நம்ம நேர விரயம் ... ஈடு செய்ய முடியுமா???? :(


என் நண்பர் எனக்கு சொன்னதை அப்படியே பகிர்கிறேன். How to stop buzz-ing?
////click on your followers and block those you dont want in your group.
click on the list you follow and 'unfollow' those whose messages you dont want to see.

Just be aware that anything you do linked to this id could potentially be visible to all that are connected to the id or even to hackers.

guess google will improve this to provide more options to filter out the noise v receive in future. you may want to block all and ignore Buzz until it gets better to the level u are comfortable with.
  /////

20 comments:

நட்புடன் ஜமால் said...

ஆமாம்! உங்களை(ஐடி) தெரியாமலே சாட்ட வேண்டியதாயிற்று.

நான் பஸ்ஸு வந்தவுடன் நிறுத்த ஐடியா குடுத்தேனே பார்க்கலை போல

சரி சரி யார் சொன்னா என்னா ...

Vidhoosh said...

ஆமா ஜமால். உங்கள் ஐடியாவை பார்த்து, turn off செஞ்சேன். ஆனாலும், ஈமெயில் பாக்ஸ்சில் மெசேஜ்கள் வந்து கொண்டே இருந்தது. :(

Unknown said...

பஸ் சும்மா பெரியார்ல இருந்து மாட்டுத்தாவணிக்கு போற டவுன் பஸ் மாதிரி ஒரே கூட்டம். ஆனாலும் நல்லாத்தான்யா இருக்கு.. பாத்து யூஸ் பண்ணத் தெரியணும் அம்புட்டுத்தான். :)

அகல்விளக்கு said...

சரியாச் சொன்னீங்க...

நானும் பஸ்சோட ஸ்டெப்ல தான் தொங்கிகிட்டு இருக்கேன்...

எப்படி ஆப் பண்றதுன்னுதான் தெரியல...

:-(

Vidhoosh said...

நன்றி முகிலன். உங்களை மாதிரி யூத்துக்களுக்கு இது ஜாலியாக இருக்கலாம். எங்களுக்கு வயசாயிடுச்சு இல்ல.. :))

Vidhoosh said...

அகல்விளக்கு: முதலில் உங்கள் buzz போய் எல்லோரையும் unfollow செய்யுங்கள். பின் ctrl F போட்டு turn off buzz என்று தேடி, ஜிமெயில் கீழே தெரியும் லிங்க்கை கிளிக் செஞ்சீங்கன்ன விடுதலை விடுதலைன்னு பாட்டு பாடலாம்.

ரொம்ப பொறுமையை சோதிச்சுடுச்சு :(

Prakash said...

பஸ் நல்லா தாங்க இருக்கு.அடிக்கடி மெயிலில் வந்து தானே சேகரித்துக்கொண்டு சாவடிப்பதை தவிர மற்றவை ஓகே.BUZZ is more an integration of all social networks.

நந்தாகுமாரன் said...

hmmm

Athisha said...

ஆமாங்க ரொம்ப மொக்கையா இருக்கு.

Thenammai Lakshmanan said...

பஸ்ஸை விட்டு எனகும் எறங்கத்தெரியலை வித்யா இதுனால என்னோட ஈ மெயிலுக்கோ அல்லது ப்லாக்குக்கோ அபாயம் உண்டா

Unknown said...

வித்யா, ஃபாலோயர்ஸ், ஃபாலோயிங் லிஸ்டெல்லாம் மறைக்க வழி இருக்கு. அதே மாதிரி நீங்க buzzக்கு ஒகே சொல்லாம அதுவா தானாகவும் வந்திருக்காது. நமக்குத் தொழில்நுட்ப ஜிகிடி சரியாக கைவரலைங்கிறதுக்காக குறை சொல்லக்கூடாது.

Unknown said...

buzzல் followers & following listஐ மறைக்க - edit profile போய் வலது மூலையில் இருக்கும் Display the list of people I'm following and people following me check boxஐ தூக்கிடுங்க

புலவன் புலிகேசி said...

ம் அதான் அதை மறைத்து வைக்க வழிகள் இருக்கே பாருங்க...

கமலேஷ் said...

இதுல இவளவு தொல்லை இருக்க...உங்களின் பகிர்வுக்கு நன்றி தோழி...

cheena (சீனா) said...

அன்பின் விதூஷ்

நானும் ப்ஸ்ஸிலே ஏரிட்டேன் - எங்கே போகுதுன்னு தெரில - போய் கிட்டு இருக்கேன் - பாப்போம் - இதுல பப்ளிக்கா பாஃலோ பண்றவங்களுக்கு என்னோட மெயில் ஐடியோட லின்க் இருக்கற வேற என்ன எல்லாம் தெரியும் . உதாரணத்திற்கு - ஆர்குட், பிகாசா எக்செட்ரா

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பஸ் உண்மையிலேயே கொஞ்சம் ஆர்ப்பாட்டமாத் தான் இருக்குது. எதற்காக கூகுள் பஸ்ஸில் ஏறியுள்ளது என்பதை என் பதிவில் படியுங்கள் :)

http://senthilinpakkangal.blogspot.com/2010/02/blog-post_13.html

பின்னோக்கி said...

இருக்குற தொல்லைங்கள்ள இதுவும் ஒண்ணு. கிரிடிட் கார்டு தான் நாம கேட்காம அனுப்புறாங்கன்னா, இது வேற.

அமுதா கிருஷ்ணா said...

turn off buzz -- சொல்லி தந்ததுக்கு நன்றி...

Sundar சுந்தர் said...

வட்டங்களை தனி படுத்தலைன்னா கொஞ்சம் சுத்தல் தான். ஜிமெயில் வழியாக தனி தனி ஐடி வைத்துக்கொண்டு, 'auto forward' மூலம் ஒரே ஐடி வழியாக மின்னஞ்சல் பயன் படுத்துவதன் மூலம், ஒரே ஈமெயில் படிப்பதற்கு ஆனால் reader/fb/orkut/blog எல்லாம் தனித்தனி என வைத்துக் கொள்ளலாம்.

Value of privacy is not yet appreciated even acknowledged enough by most ppl. குலுக்கல் போட்டில ஓசி ஏதாவது கொடுப்பதாக யாரவது சொன்னா உடனே address, dob, phone number, email id ன்னு எழுதி கையெழுத்து போட்டு கொடுத்துடறாங்க. identity theft, stalking, simple frauds on your close ones போன்ற பல பிரச்சினைகளை பற்றி தெரிந்திருப்பதில்லை. try running google search on anyone and see what you could potentially know abt them without them knowing abt it.

நன்கு பரஸ்பரம் தெரிந்தவர்களை தவிர மற்றவர்களுக்கு நம்மை பற்றிய விவரங்கள் எந்தளவுக்கு தெரிந்திருக்கலாம் என்று தெளிவாக இருக்க வேண்டும். most stuff once shared online, you might never be able to contain it again.

For example, I wouldn't want a business contact to use my blog entry for a small conversation with me - or worse still I dont want them to have a small conversation abt me, may be out of context with someone else in my another cirlce. no it is not abt being paranoid - just being in control of something I cant contain later.

if you are part of some pyramid marketing scheme or insurance agent you can leave your contacts everywhere ;)

Radhakrishnan said...

நன்றாகத்தான் இருந்தது, ஆனாலும் உடனே நிறுத்திவிட்டோம்.

Post a Comment