பாகம் இரண்டு - யமா..இஃதோ வுந் தருமம்
======================== தாமரையிலயுஞ் ஜலமு மெப்படி யொட்டாதோ; பிள்ளைப்பூச்சியுஞ் சேறு மெப்படி மெப்படி யொட்டாதோ; புளியம்பழமுந் தோடுமெப்படி யொட்டாதோ; அப்படியே தண்ணீர் பாலுங் காப்பி டிகாஷனுஞ் சேராது. இன்னம் ஆயிரந்துண்டாய்ச்சேதித்துவிடுமென்று நாக்கெனுஞ் (நாக்கு) ஜாலவித்தகன் பேரிகைவாத்தியஞ் சுருதிசப்தங் கோஷிக்கிற தானபடியாலே அனந்தகோடி ஜனனங்களிலே யார்ச்சித்த கருமராசிகள் பாபாக்கினி நாசம்பண்ணிச் சாம்பராக்கிவிடும் (சாம்பல்!!). பாலுக்கும் தண்ணீருக்கும் வெகு விரோதமென்பது சித்தாந்தம். அஃதெப்படியென்றால்? பால் சொற்பமாயிருந்தாலும், சிரேஷ்டமென்றுதானே வியாக்கியவர்க்கர்வசனம். இஃதுமாத்திரமல்ல. சொற்ப பாலிலே அநேக ஊத்துக்களிலே ஜலங்களாயிருக்கிற யாதொரு ஸ்நானாதி லாபமுண்டோ? இப்படியாக ஸ்நானப்ராப்திக் கூட சேரவிய லாதப்படிகொத்த கோரமாயிருக்கிற வஸ்துவிலே, கலப்படஞ் செய்வதைப் பற்றி, ஹே லோகாதீகாள்! நம்மையேனேவுகிரீரென்று (என்னையே ஏன் ஏவுகிறீர் என்று!!!) இந்திரன் யமனிடம் கேட்டார்.
அதற்கு யமன்: "யாதொருத்தன் பாலில் தண்ணீர் கலக்கும் பிரம்மஹத்தியாயிருக்கிரானோ; அவனானாவிதத்திலும் (அவன் நானா விதத்திலும்) நரகத்தைத்தானே யடைவனென்று கீதாவசனம். அப்படிப்பட்டஞ்ஞானி லோக விம்சைகளெல்லாம் பண்ணினாலுமவன்பண்ணவுமில்லை. யெப்போதவனுக்குனா னென்கிற (எப்போது அவனுக்கு நான் என்கிற) புத்தியில்லையோ, அவனை யந்தக் கருமங்களும் பந்தியா தென்று கீதாவசன மானபடியாலே யினி திரவியமயமாயிருக்கிற யெக்கியத்தைக் (யஞ்ய-மாம்!!) காட்டிலும், நானே கர்த்தாவென்கிற சகலதருமங்களையும் விட்டுத் துவிசனானவன் (விசனம் அதாவது கவலை இல்லாதவனாமாம்!!) சமதமாதிகளையு மெத்தனம் பண்ணிச்சம்பாதி யென்று லோகத்தார் வசனமிருப்பதால் இகலோகபரலோககருமங்களெல்லாம் விட்டு வேதங்களும் விட்டு கலியிலே லோகோபகாரார்த்தமாய் இதராளுஞ் சதாசம்பத்தியத்தை பண்ணுவார்கள்; அப்படிப்பட்டஞ்ஞானிகள் பணஞ்சம்பாதிக்கும் புண்ணியபாவம்; மாயவுடல் மரித்ததும், ஒரு அசுவமானது கீழே பிரண்டுபிரண்டு ரோமங்களை யெப்படி யுதறுமோ; அக்கினியானதெப்படி இலவம்பஞ்சை தகிக்குமோ; ஓடத்தினாலே யெப்படிச் சமுத்திரத்தைக் கடப்பனோ; அப்படி தன்னைத்தானே ஈசுவரன்; பரமாத்மா; சகலஞானி யென்றிருப்பவனின் கர்மாவினாலேற்பட்ட பிரயாசம், ஆயாசம், திரவியச்சிலவு, சரீரக்கிலேசங்களுண்டு. பாகிய தீர்த்தங்களிற் கோடிதீர்த்தங்களிலே ஸ்நானம் பண்ணினாலும்; மரித்தவன் வாயிலே ஊற்றிய பால்தெப்பத்தினாலேயே மோக்ஷம்; அதுதா னிவனுக்கு ஆத்ம சுத்தி. தானேவுசத்தியானவ னென்கிற (தானே உசத்தியானவன் என்கிற) சகலசாப மோக, பாவங்களையுங் கடப்பனென்றும், பாலுந்தண்ணீர்தானே; நிரம்பச்சொன்னது போதும்; இல்லையோ;" என்று கூறி தர்மலோகம் நோக்கி ப்ரீதியார்த்தஞ் செய்தார்.
========================
இப்போதைக்கு இதோடு யமராஜன் தர்மலோகத்திற்கு போயிட்டார் : ) ஆனா தர்மந்தேயும் போதெல்லாம் சகதர்மிணியின் ஆணைப்படி தர்மராஜன் பூலோகத்திற்கு ப்ரஸ்தானஞ் செய்வார் என்பதையுஞ் சொல்லிக் கொள்கிறேன்.
இப்போ தெரியுதா?
முந்நூறு பக்கத்த எப்படி நொப்பி (நிரப்பி) இருக்காங்கன்னு....
புஸ்தகம் படிக்கிற பழக்கம் எப்படி ஒழிஞ்சுதுன்னு? ஆங்...
========================
//பிரம்மேய, சமுசய, பிரயோஜன, திருஷ்டாந்த, சித்தாந்த, அவையவ, தர்க்க, நிர்ணய, வாத, செலப்ப், விதந்த, எத்துவா, பாச, சல, சாதி, நிக்கிரச்தான வேன்றவிப் பதினாறு தர்க்ககங்களை>> நடைமுறைத் தமிழ் please!// என்று சுந்தர் கேட்டதற்காக:
- தர்க்ககங்கள் - Arguments / discussions / opinion (விவாதம் செய்வது)
- பிரம்மேய (read as Brahmeya) holy , sacred , divine (புனிதமானவற்றைப் பற்றிய விவாதம்)
- சமுசய (read as Samuchchaya) aggregation , accumulation , collection , assemblage , multitude (திரட்டுதல் / ஒன்றிணைத்தல் - அதாவது பல விஷயங்களைப் பற்றிய விவாதம்)
- பிரயோஜன (read as prayojana) occasion , object , cause , motive , opportunity , purpose , design , aim , end, with a particular intention , on purpose (பயன் கருதி செய்யப் படும் விவாதம்)
- திருஷ்டாந்த (read as druShtaantha) the end or aim of what is seen, example , paragon , standard , allegory (ஏற்கனவே அனுபவித்து உணர்ந்ததை எடுத்துக்காட்டி, உருவகப் படுத்தி, உதாரணப் படுத்தி வாதம் செய்தல்)
- சித்தாந்த (read as sidhdhaantha) established end , final end or aim or purpose (முடிவு தீர்மானிக்கப்பட்ட அல்லது முன்பே முடிவெடுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய விவாதம்)
- அவையவ (read as avaiyava) those which are not conventional, usual , of everyday occurrence (வழக்கத்திற்கு மாறான / out of box விவாதங்கள்)
- தர்க்க (read as tharka) reasoning , speculation , inquiry, philosophical system, logic , confutation (காரணம், விசாரணை, தர்க்க ரீதியான விவாதங்கள்)
- நிர்ணய (read as nirNaya) complete ascertainment , decision , determination , settlement of a particular logic (ஒரு விஷயத்தை குறித்த முடிவு தீர்மானம் செய்ய வேண்டி விவாதிப்பது)
- வாத speech, discourse, talk , utterance, statement, plaint, accusation, discussion, controversy, dispute, contest , quarrel, thesis , proposition (சச்சரவு, சாட்சி, குற்றம், வாக்கு வாதம்)
- செலப்ப (read as shelpa) statue, craft, art, skill, manual craft, fine art, handicraft, mechanical art, manual art, artistic work, ornament, decoration, workshop, manufactory, basic craft, technology, technical (கலை / தொழில் நுட்பம் சம்பந்தமான விவாதங்கள்)
- விதந்த (read as vidhanta / VidhaNDA) arguments fully on religion, criticism of other religion without establishing the merits of one's own religion, toothless, baseless (அடிப்படை அறிவோ, ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பற்றிய தெளிவோ, வாசிப்போ, தெரிந்து கொள்ளும் ஆர்வமோ கூட இல்லாமல் வெறும் வாதம் செய்யும் நோக்கோடு மட்டுமே வாதிப்பது / விதண்டா வாதம்)
- எத்துவா (read as yaththuva) together or in line; to conform or comply with; to requite, return, reward or punish, reprove (as a fault) (ஒரு செயலையோ, குறிப்பிட்ட நபர்/குழுவையோ தவறானவர்/ குற்றம் செய்தவர் என்று நிரூபிக்க / தண்டனை வழங்கும் நோக்கோடு வாதம் செய்வது)
- பாச (read as paasa) on worldly bondage or against religious adoration or worship (உலகியல், வாழ்வியல், குடும்பம், ஆன்மீகம் குறித்த விவாதங்கள்)
- சல (read as jala) argument with stupid, frigid (moral or mental or physical) (முட்டாளுடன் வாதிப்பது)
- சாதி (read as jaathi) on birth (human & animals), production (numerics and materials), existence, race, lineage, (to expose genuine or true state of anything) founded merely on similarity or dissimilarity (சமூக ஏற்ற இறக்கங்கள், ஜாதி, இனம், வம்சாவளி, எண்ணிக்கை, கணிதம், மனித/மிருக/கனிம வளம் மீதான விவாதங்கள்
- நிக்கிரச்தான (read as nikraSthaana) insult, pull one's leg, show down, offend, abuse, rude, slur, affront, stain, disgrace (ஒருவரை அவமானப் படுத்தும் நோக்கோடு செய்யப்படும் வாதம்)
13 comments:
ஸ்ஸ்ஸ்ஸ் அப்பபா....
ஆயிரம்......
ரெண்டாயிரம்.....
மூவாயிரம்.....
நாலாயிரம்.....
ஐயாயிரம்.......
ஆறாயிரம்.......
பத்தாயிரம்.........
மாமீ...... பிஸ்கோத்து....!
:)
ஐ யேம் சாரீ..
மீ த எஸ்கேப்பு..
(கலகலப்ரியா கவிதையே பரவாயில்ல போல)
//பிரம்மேய, சமுசய, பிரயோஜன, திருஷ்டாந்த, சித்தாந்த, அவையவ, தர்க்க, நிர்ணய, வாத, செலப்ப், விதந்த, எத்துவா, பாச, சல, சாதி, நிக்கிரச்தான வேன்றவிப் பதினாறு தர்க்ககங்களை>> //
இத்தனை விதமான விவாதங்களா விதூஷ் ..?அருமை பகிர்வுக்கு ..
பழைய .,ஏடு கிழிந்த., ஆதிகாலத்து புத்தகம் படித்த எஃபெக்ட்...!!
நீங்க தமிழ்ல எழுதுவீங்கன்னு நினைச்சி தெரியாத்தனமா கடைப்பக்கம் வந்தது என் தப்புதான்.. போற முன்னாடி முகிலன் சொன்னத்தை மறுபடி ௬விக்கிறேன்
நீ எழுதும் புத்தகங்களை அச்சில் பார்க்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று நினைக்கிறேன்.
பலக்காலக்கட்டங்களில் வந்த தமிழை புரிந்து கொள்ளும் திறனுக்கே உனக்கு முனைவர் தகுதி உண்டென்று நான் நினைக்கிறேன். Phd - here she comes!
ஸ்ஸ்ஸ்ஸ் ....இப்போதைக்கு பிரசண்ட் ..போட்டுக்கிறேன்
என்னங்க இது! பாகம் 1, 2 வேற லிங்க் குடுத்துருக்கிங்க, இதுவே என்னால முடியல. ரொம்பவே பேஜாரா இருக்கு. இப்படி சொன்னா, நீயெல்லாம் ஒரு தமிழனான்னு கேக்கமாட்டிங்கள்ல?...:)
முடியல...
ஐ, நல்லாருக்கு வித்யா இந்தத் தமிழ். சூப்பர்.
எல்லோருக்கும் நன்றீஸ் சகாஸ்.
ஷங்கர்: 1000+2000+3000+4000+5000+6000+10000=31000
ரூவா சொன்னமாதிரி இன்னும் வந்து சேரலை என்பதை சொல்லிகிறேன்.
பட்டர்காச் க்ரீம் டைகர் பிஸுகோத்து சொன்னபடி மேற்படி ஸாகித்தியத்துக்கு பொதுவில் அறிவிச்ச சம்மானப் பணம் வந்ததும் அனுப்பி வைக்கப் படும்.
=======
நன்றி முகிலன், அண்ணாமலை, நசரேயன், ரகு, டி.வி.ராதாகிருஷ்ணன், புலிகேசி... :))
"நீ....ங்க...ல்...லாம் தமிழினமா....(செவாலியே சிவாஜி ரேஞ்சுக்கு எபக்க்டு கொடுத்து உதடு துடிக்க புருவம் நெரிய படித்துக் கொள்ளவும்)
====
நன்றி தேனம்மை.பிடித்திருப்பது புராணப் பித்து.. :))
=====
சுந்தர்: அவ்வ்வ்வ்.. (மூக்கு)முனை(முறிந்த)வர் என்று வேணா வச்சுக்கலாம். :))
//Phd - here she comes!//
C.Vidhya மற்றும் தமிழாக்க ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு "ஓடுங்க ஓடுங்க அது நம்மள நோக்கித்தான் வருது"ன்னு PhD... ஓடுது ..... :))
======
விக்கி. ரொம்ப நன்றி. நீங்க ஒருத்தர்தான்... ஐ..ன்னு சொல்லி சூப்பர்ன்னு வேற சொல்லிட்டீங்க.. (கண் கலங்க விசும்புகிறேன்) :))
//"ஓடுங்க ஓடுங்க அது நம்மள நோக்கித்தான் வருது"// பைபிள் தமிழ், ஜூனூன் தமிழ், அனகொண்டா தமிழ்ன்னு எல்லா வகைகளையும் சகிச்சா தானே மொழி வளர முடியும். ஆங்கிலம் இந்த அளவிற்கு பரவலானதிர்க்கு காரணம் எல்லா வற்றையும் உள்ளடக்கிக் கொள்வதனால்தானே.
ஆமாம் அதென்ன மூக்கு முறிந்த? வர வர நீ எது சொன்னாலும் சரியாய் புரியற மாதிரி இன்னொரு தடவை கேட்க வைக்கிறே.
// துவிசனானவன்//
த்விஜன் = இரு பிறப்பாளன்.
சுலபமா படிக்க முடியுதே? :-) இது ஒரு காலகட்ட தமிழ். அப்பப்ப மாறிகிட்டே இருக்கும். இதுக்கும் புத்தக படிப்பு ஒழிஞ்சதுக்கும் யாதொருசம்பந்தமுமில்லையென்பதைசொல்லிக்கொள்கிறேன்.
Post a Comment