கத்தரிக்காயும் கலியுக முடிவும்

இதைப் படிச்சாச்சா? கத்தரிக்கா யாபாரமா
=====
கத்திரிக்காயில் அப்படி என்ன இருக்கு? எதுக்கு சாப்பிடணும்? என்று கேட்பவர்களுக்கு, எந்த கறிகாயையுமே ஒதுக்காமல், மாதம் ஒரு முறையாவது சாப்பிட பழக்கிக் கொள்ள வேண்டும். கறிகாய்களை நன்றாக அலம்பி (கழுவி) விட்டு கொதிக்கும் நீரில், அரை டீஸ்பூன் மஞ்சள் , உப்பு சேர்த்து கால் மணிநேரம் கழித்து சமைத்தால், கறிகாய்கள் மீது இருக்கும் கெமிகல்களின் வீரியத்தை ஓரளவுக்குக் குறைக்கலாம். அதுக்குன்னு வெண்டக்காயை எல்லாம் இந்தமாதிரி பண்ணிட்டு, நாட்டுக்கே கொடுமை செஞ்சுராதீங்க. :)) அப்புறம் ஒரு வெண்டக்காயை எடுத்தாலே எல்லாம் க்யூவில் வரும்.

கத்தரிக்காயில் சாச்சுறேடட் பாட் (saturated fat), சோடியம் மற்றும் கொலஸ்ட்ரால் மிக மிக குறைச்சல். பைபர் (நார் சத்து), போலேட் (folate), பொட்டாசியம் (potassium), மாங்கனீஸ் (manganese), வைட்டமின் சி மற்றும் பி6 (C & B6 vitamins), தியாமின் (thiamine), நியாசின் (niacin), பண்டோதனிக் ஆசிட் (pantothenic acid), மக்னீசியம் (magnesium), பாஸ்பரஸ் (phosphorus), காப்பர் (copper) ஆகிய சத்துக்கள் அதிகளவில் நிறைந்தது. இதனால் உணவில் சரியானளவு தேவையான ஊட்டச்சத்துக்கள் சேரவும், கொழுப்பு மற்றும் உடல் எடை குறைப்பில் அதிகம் உதவுவதாகவும் கத்தரிக்காய் விளங்குகிறது.

மொன்சாண்டோ என்ற சர்வதேச நிறுவனம்தான் ஜி.எம்(ஜெனடிகலி மாடிபைடு) உணவுப் பொருட்களை தயாரித்து விற்பதில் முழு முனைப்புடன் இருக்கிறது. இவ்வகை உணவுப் பொருட்களுக்கு சட்ட பூர்வமான அங்கீகாரம் அல்லது கட்டுப் பாடுகள் எதுவும் இப்போது வரை உருவாக்கப்படவில்லை என்பதால் சந்தையில் ஊடுருவதில் இந்நிறுவனம் முழு முயற்சியில் இருக்கிறது. இதனால், இங்கே அரசாங்கத்தின் பொறுப்பும் பங்கும் மிக அதிகமாக இருக்கிறது. மக்களின் பங்கு, இம்மாதிரி புதிய கண்டுபிடிப்புப் பொருட்கள் மீதான பூரண பாதுகாப்பு பற்றிய விபரங்கள் தெரியாதவரை, இவற்றை விலை குறைவு என்றே இருந்தாலும் ஆதரிக்காமல் (வாங்காமல்) இருப்பதுதான். நல்ல நோட்டோடு கள்ள நோட்டு கலந்தடிக்கிறாமாதிரி இதையும் நல்ல கறிகாய்களோடு கலந்தால்... : ( தேவுடா.. இந்தியாவில் லேபிளிங் (labeling) செய்து விற்பனையா? பேசப்டாது... உஷ்ஷ்....

இந்தியாவில் கடந்த அக்டோபர் 14, 2009 அன்று ஜி.எம். உணவு வகையான சிலந்தி ஜீன் கலக்கப் பட்ட பி.டி.கத்திரிக்காய் விளைவிப்பதற்கான அனுமதி வழங்கப் பட்டு விட்டது. வர்த்தக ரீதியாக மார்ச் 2010 முதல் சந்தைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ஏன் பி.டி.கத்திரிக்காயை வேண்டாமென விலக்க வேண்டும்?

1. ஜி.எம். உணவுகள் சம்பந்தமே இல்லாத மாற்று ஜீன் வகைகளை ஒரு உணவு விளைபொருளின் ஜீனுக்குள் (டி.என்.ஏ / DNA) செலுத்தி உருவாக்கப்படுபவை. இவற்றால் உண்டாகும் மரபு/மரபணுக் கோளாறுகளை இதுவரை பூரணமாக ஆராய்ச்சி செய்து அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. (கொஞ்ச காலம் கழித்து உங்கள் மகன்/மகள் வயிற்றுப் பேரனாக ஒரு "ஸ்பைடர்மேன் (Spiderman)" கூடப் பிறக்கலாம்.. என்பது என் சின்ன மூளைக்குள் அடக்கிவிட முடியாத, பறந்து விரிந்த கற்பனை)

ஜி.எம். (GM) அல்லது இரசாயன உரம் (Chemical/Synthetic pesticides) இரண்டையுமே பயன் படுத்தாமலேயே, பல விவசாயிகள் இயற்கை முறையில் வெற்றிகரமாகவும், சிக்கனமாகவும் உள்ள பயிர் பாதுகாப்பு முறைகளை பல இந்திய விவசாயத்தில் நடைமுறைப் படுத்தி வெற்றி கண்ட அனுபவங்களை "தேசிய விவசாய ஆராய்ச்சி மையம்" தெரிவிக்கிறது. இந்திய விவசாயிகளுக்கு உதவ ஜி.எம். ஒன்றுதான் வழியா?

இந்த வகை உணவுகளை 90 நாட்களுக்கும் அதிகமான காலத்திற்கு மனிதர்கள் மீது ஆராயவில்லை. இதனால் இதன் மீதான நம்பகத்தன்மை வலுவிழக்கிறது.

ஜி.எம். வகை பருத்தியால் கால்நடைகள் மற்றும் சில விலங்கினங்கள் பெரும் பாதிப்பு (மரணம் கூட) அடைந்திருப்பதாக மருத்துவ ஆதாரங்கள் இருக்கின்றன. மேலும் ஜி.எம். உணவு வகைகள் மனிதர்களின் உடல் வளர்ச்சி குறைபாடுகள், கல்லீரல், நோயெதிர்ப்பு சக்தி, கணையம், சிறுநீரகம், இனபெருக்க உறுப்புக்கள் போன்ற உள்ளுறுப்புக்களின் மீது அதிகபட்ச கேட்டை விளைவிக்கக் கூடும் என்று தனியார் ஆராய்ச்சி மையம் ஒன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இன்னும் இந்தியாவில், இரசாயன உரங்கள் மீதான ஆராய்ச்சியே முழுமை அடையவில்லை. இரசாயன உரங்கள் தரும் பின் விளைவுகளையே சரியான முறையில் கண்டுபிடிக்கவில்லை. இதில் ஒரு generation-ஷனை (குறைந்தது ஐம்பது வருடம்) ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய ஜீன் மாற்றம் குறித்த வர்த்தகம் சர்வ சாதாரணமாய் இந்தியாவில் அனுமதிக்கப்படுவது மக்கள் மீதான அரசாங்கத்தின் அலட்சியம் பற்றிய அதிர்ச்சியின் உச்சகட்டம். இரசாயன உரங்களையாவது பின்னாளில் என்றேனும் லஞ்சம் கொடுக்க ஆளில்லாமல், தயாரிப்பை 'அரசியல் சட்ட பூர்வமாக' நிறுத்தி விட்டால், ஒரு ஐம்பது அறுபது வருடங்களில் அதன் பாதிப்புக்கள் குறையலாம். ஆனால், ஜீன் மாற்றம் போன்றவை தொடர் சங்கிலி நிகழ்வாக (chain reaction), நிறுத்தவே முடியாமல் போகலாம். விதைகளுக்கு உயிர் இருப்பதால், இதைக் கட்டுப்படுத்தவே முடியாத ஒன்றாக ஆகிவிடும் அபாயமும் இருக்கிறது.

ஒரு முறை பி.டி. கத்திரிக்காய் வர்த்தக சந்தைபடுத்தப் பட்டால், மற்ற கறிக்காய்களுக்கும் இதே கதிதான் ஏற்படும். அப்புறம் பி.டி. இல்லாத இயற்கை காய்கறிகளையோ பழங்களையோ நாம் கண்டு பிடிக்கவே முடியாமல் போகலாம்
==================
சரி... அதுக்கும் கலியுக முடிவுக்கும் என்ன சம்பந்தம்... சம்பந்தம் இருக்கே!!

பிரம்ம வைவர்த்த புராணத்தில் கூறியுள்ளது: கலியுக முடிவு நெருங்கும் நேரத்தில் ஆட்சி புரிபவர்கள் பொருளாதாரத்தைக் கட்டுப் படுத்த முடியாமலும், மனிதர்களுக்கு முறையற்ற காமம் மீதான ஆர்வம் அதிகமாக இருப்பதால் காமத்தையே வாழ்வின் முக்கியாம்சமாகவும் கருதும் நிலையும் ஏற்படும். ஆண்களும் பெண்களும் பொருள் ஈட்டுவதை நோக்கியே உழைக்கும் உழைப்பு களைப்பையும் சோர்வையும் தரும். இதனால் உழைக்காமல் இருக்கும் நேரங்களில் களியாட்டங்களில் ஈடுபடுவார்கள், அதையே மாற்றாகக் கருதுவார்கள் என்றும் கூறுகிறது.

உணவுகளின் சுவை குறைந்து கொண்டே போய், உண்ணும் உணவு மீதான பாதுகாப்புத்தன்மை குறைந்து விடும். இந்த காலகட்டத்தில் வேதம் பரிந்துரைக்கும்  உணவுகளான கோதுமையும் பார்லியும் மட்டுமே நம்பத்தகுந்த உணவாக இருக்கும். மீண்டும் மக்கள் இவற்றையே விளைவிக்க ஆரம்பிப்பார்கள் என்றும் குறிக்கப் பட்டுள்ளது. (இந்த உணவுகளில் ஜி.எம்.மின் பாச்சா பலிக்காதோ என்னவோ!!!)

மஹாமுனிவர் சூதர் உரைத்தது "எப்போது பூக்களுக்குள் பூவும், கனிகளுக்குள் கனிகளும் உருவாகிறதோ, அப்போது, நிற்காமல் மழை பொழிந்து யுகாந்திரம் ஏற்படும்" என்கிறார்.

மேலும் யுகம் யுகமாக, மனிதனின் உயரம் குறைந்து கொண்டே வரும் என்றும், கலியுக  முடிவு நெருங்கும் போது, மனிதனின் உயரம் ஆறடி உயரம் இருக்கும் என்றும், கலியுக முடிவில் ஒரு தும்பைச் செடியின் கீழ், ஆறடி மனிதனுக்கு இருக்கும் கட்டை விரல் உயரம்தான் இருப்பானாம். அதனால், எல்லோரும் காம்ப்ளான், ஹார்லிக்ஸ், போர்ன்வீடா குடிச்சு குறைந்தது "மூன்று இன்ச்" உயரத்திற்கு மட்டுமாவது ஆசைப்படுங்க..

பேசில்லஸ் துரின்ஜீன்சிஸ் (பி.டி) (Bacillus thuringiensis-Bt)என்ற பாக்டீரியல் ஜீன்-னை கத்திரிக்காயின் டி.என்.ஏ-வுக்குள் செலுத்திவிடும் போது 24x7 காலத்தில் (ஒரு வாரம்) கத்திரிக்காயின் டி.என்.ஏவுக்குள் டாக்சின் (toxin) ஒன்று உருவாக்கி விடுகிறது. இதில் கவனிக்கப் படவேண்டிய விஷயம் என்னவென்றால், இம்முறையால் 'ஷூட் போரர்' என்ற ஒரே ஒரு வகை பூச்சியிலிருந்து மட்டும்தான் கத்தரிக்காய்க்கு பாதுகாப்பு கிடைக்கும். மற்றபடி கத்தரிக்காயை நறுக்கும் போது புழுவெல்லாம் வராது என்பதற்கு உத்திரவாதம் கிடையாது.

அதுனால கத்தரிக்காயில் இருக்கும் புழுவை தெரியாம வெட்டிட்டீங்கன்னா, வெளிநாட்டு புழுவாச்சே, எரிக்கலாமோ கூடாதோ அப்படீங்கற பயம் இருந்தாலும், "அடக்கம்" பண்ணிவிட்டு, நம்மூரு மண்ணுக்குள்ள வளர்ந்ததுனால கண்டிப்பா பால் ஊற்றவும். இல்லன்னா பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கும்னு "மொன்சான்டோ" சோசியக்காரங்க சொல்லி வருவதாகத் தெரியும் தகவலுக்கு தலையும் கிடையாது வாலும் கிடையாதாம்..



.

73 comments:

நந்தாகுமாரன் said...

கத்தரிக்காயின் Nutritional Information கொடுத்ததற்கு நன்றி

S.A. நவாஸுதீன் said...

பி.டி. கத்தறிக்காய் பத்தி எக்கச்சக்கமா சொல்லிட்டீங்க. நல்ல பகிர்வு வித்யா. நன்றி.

(ஒரு சின்ன சந்தேகம், தயிர்ல போட்டு, நல்லா காய வச்சு வடம் பண்ணி சாப்பிட்டாக்கூட எஃபெக்ட் இருக்குமா)

ப்ரியமுடன் வசந்த் said...

என்ன வித்யா கத்திரிக்காய்க்கு இம்புட்டு அக்கர எடுத்துகொள்வதின் மர்மம் என்னவோ?

எறும்பு said...

எச்சூஸ் மீ,
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்
கத்ரிகாவுல ஏதாவது ஆராச்சி பண்ணி டொக்டர் பட்டம் வாங்க முவர்ச்சி பண்றீங்கோலா??
அல்லாங்காட்டி வேறு எதா மேட்டரா??

Ashok D said...

கத்திரிக்கா முத்தனா கடதெருவுக்கு வருமென்பது சரியா தான் இருக்கு...

Sanjai Gandhi said...
This comment has been removed by the author.
Sanjai Gandhi said...

யூ டூ வித்யா? :)))

இந்த சுற்றுச் சூழியல் ஆர்வலர்கள் தொல்லைத் தாங்கவே முடியலை போங்க.. பெப்சி, கோக்கில் அனுமதிக்கப் பட்ட அளவை விட அதிக நச்சுத்தன்மை இருக்குன்னு சுனிதாநாயர் சொன்னப்போ எல்லாரும் எங்க தான் போனிங்களோ?. சாக்லேட்டுகளும், அலுமினியக் கவர்களில் அடைத்து விற்கப் படும் திண்பண்டங்களும், சிகரெட்டும் பல வியாதிகளை குடுக்கும் என்று அதிகாரப் பூர்வமான ஆராய்ச்சி முடிவை அறிவித்தும் அதை எல்லாம் வாங்கி உண்பது ஸ்டேட்டஸ் சிம்பலாகவே பார்க்கப் படுகிறது. அதை எல்லாம் விட்டுவிட்டு என் விவசாயிகள் மீது மட்டும் இந்தத் தாக்குதல்?

இந்த ஆர்வலர்கள் யாரும் தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு வேக வைச்ச வேர்க்கடலையும் அவிச்ச அவரைகாயும் தருவதில்லை.

விவசாயம் என்பது பெரும் நெருக்கடிக்கும் அதிக செலவும் ஆகும் தொழிலாகிவிட்டது. போட்ட பணத்தை லாபத்துடன் எடுக்க முடியலைனாலும் நஷ்டம் ஆகாமல் இருக்க வேண்டும் என்பது தான் விவசாயியின் கவலை.

தற்போது இருக்கும் முறையில் பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கும் , நீண்ட காலம் விளையும் முறையால் ஆள் கூலிக்கும் கொடுத்தே சமாளிக்க முடியவில்லை.

சரி, பூச்சிக் கொல்லிகளைக் குறைக்கலாம் என்றால் நன்மை செய்யும் பூச்சிகளும் உரமாய் இருந்த மண் புழுக்களும் மகரந்த சேர்க்கைக்கு உதவிய வண்டுகளும் தேனீக்களும் தொலைபேசி, டிவி சிக்னல்கள், போக்குவரத்து இறைச்சல், மக்கள் தொகைப் பெருக்கத்தால் அவைகளின் வாழிடங்கள் அழிந்தது ஆகியவற்றால் அழிந்தேவிட்டன.

ஆகவே செலவைக் குறைக்கவும் பயிர் செய்யும் கால அளவுகள் குறையவும் புதிய தொழில்நுட்பங்கள் தேவைப் படுகிறது. அது மரபணு மாற்றத்தால் முடிகிறது. அதை உண்மையான விவசாயிகள் ஆதரிக்கிறார்கள். விவசாயிகள் போர்வையில் எதிர்ப்பவர்கள் எல்லாம் வணிகர்கள். இயற்கை உர வணிகர்கள். பிடியால் அவர்கள் பிசினஸ் படுத்துவிடும். ஏனெனில் இயற்கை உரம் என்பது சிக்கலான காரியம். எல்லாராலும் தயாரிக்க முடியாது. அதற்கான டிமாண்டை அதிகப்படுத்தி காசை அள்ளலாம் என நினைத்த ஆல்வார்களின் ஆசையில் பிடி மண்ணைப் போடுகிறது.


//அதிகபட்ச கேட்டை விளைவிக்கக் கூடும்//

இதாங்க பிரச்சனை.. பிடியை எதிர்ப்பவர்களின் ஏமாற்று வேலையை இதிலேயே புரிந்துக் கொள்ளலாம். அதென்ன கூடும்? உறுதியாக சொல்ல வேண்டியது தானே?

செல்போனால் ஆண்மைக் குறையக் கூடும் என்றார்கள். யாரும் பயன்படுத்தலையா? விவசாயிகள் மட்டும் அடிமைகளா? அவர்கள் பிழைக்க வேணாமா?

பிடியால் மரபு கத்தரிக்காய் அழிந்துவிடும் என்கிறீர்களே.. நான் மேலே சொல்லி இருக்கும் காரணங்களால் கத்தரிக்காய் விவசாயம் செய்வதையே விவசயிகள் நிறுத்திவிட்டால் என்ன செய்வீர்கள்? தன்னை நஷ்டப் படுத்துக் கொண்டு மற்றவரை ஆரோக்கியமாக வாழ வைக்கும் சேவையில் எந்த விவசாயியும் இல்லையே.

இதே ரீதியில் உலகை பயமுறுத்திக் கொண்டிருந்த நோபல் புகழ் பச்சோரி இப்போ எல்லாப் பக்கமும் அடி வாங்கிட்டு இருக்கார். நாளை நம்மால்வார் கும்பலும் வாங்கக் ”கூடும்”

பிடி பருத்தியாக் மகசூல் அதிகரித்து நல்ல வருமானம் கிடைக்கிறது. ஆடுமாடுகள் செத்தன என்பது பூச்சாண்டி. ஜிஎம் மற்றும் மைக்கோ நிறுவனங்களுக்கு ஆதரவாக சிலர் பிடியை ஆதரிக்கிறார்கள் என்ற குற்றசாட்டைப் போல அந்த நிறுவங்களால் தங்கள் பிஸினஸ் ஊத்திக்கும் என்ற மற்ற கம்பெனிகளிடம் காசு வாங்கிக் கொண்டு தான் பிடியை எதிர்க்கிறார்கள் என்று கூட சொல்லலாம்..

( சில வரிகள் பதிவுக்கு சம்பந்தம் இல்லாதது வித்யா.. பொறுத்துக் கொள்ளவும் :) )

Vidhoosh said...

எல்லோருக்கும் நன்றீஸ்.

//கத்திரிக்காய்க்கு இம்புட்டு அக்கர ///
//கத்ரிகாவுல ஏதாவது ஆராச்சி பண்ணி டொக்டர் பட்டம்//
:)) அதெல்லாம் இல்லீங்க. பி.டி.யைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அறிந்து கொண்ட செய்திகள்தான் இவை.

சஞ்சய்காந்தி: விவசாயிகளுக்கு நன்மைதான் செய்ய வேண்டும் என்றால் கடன் தள்ளுபடி மட்டும் செய்தால் போதுமா. இம்மாதிரி முறைகள் இடைத் தரகர்களை நீக்குமா... விவசாயிக்கே நேரடியான இலாபம் கிடைக்குமா? இதை விட அதிகப் பயனளிக்கக் கூடிய இயற்கையான வழிமுறைகள் இருக்கையில், இதை அவசர அவசரமாக நடைமுறைப் படுத்துவது ஏன்?

இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன். உங்களுக்கு தெரிந்தவற்றையும் பகிரவும் சஞ்சய்.

sathishsangkavi.blogspot.com said...

சரியாச்சொல்லியிருக்கறீங்க.....

Vidhoosh said...

சஞ்சய்:
பி.டி.யினால் விவசாயிகளுக்கு நன்மை விளையுமா? எனக்கு சத்தியமாய் புரியல?

கத்திரிக்காயை விடுங்கள். நடைமுறை வர்த்தகத்தில் இருக்கும் பி.டி. பருத்தி என்பது சதவிகிதம் பயன்பாட்டில் இருப்பதாக அறிகிறேன். இதன் மூலம் எத்தனை விவசாயிகள் பலன் அடைந்திருக்கிறார்கள் என்று அறியவும் ஆர்வத்தோடு இருக்கிறேன். ப்ளீஸ்.உங்களுக்கு தெரிந்ததை தயங்காமல் பகிருங்கள். இல்லையென்றால், பதிவிடுங்களேன். நிஜமாகவே அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

Vidhoosh said...

நன்றி நந்தா

நன்றி நவாஸ் : தெரில.. கத்தரி வத்தல் என்று ஒன்று இருக்கும் விவரமே நீங்க சொல்லித்தான் தெரியும். :(

நன்றி வசந்த்: மர்மமொன்றும் இல்லை. ஆர்வம்.

நன்றி எறும்பு ராஜகோபால். உடுக்கை சத்தம் கேட்குது.

அசோக்: நன்றீஸ்.

சங்ககவி: நன்றிங்க.

Vidhoosh said...

கலியுகம் பற்றியரியும் ஆர்வம் உள்ளவர்கள் http://www.gauranga.org/files/brahma_vaivarta_purana.pdf
இங்கே பார்க்கவும்.

Sanjai Gandhi said...

//சஞ்சய்காந்தி: விவசாயிகளுக்கு நன்மைதான் செய்ய வேண்டும் என்றால் கடன் தள்ளுபடி மட்டும் செய்தால் போதுமா. இம்மாதிரி முறைகள் இடைத் தரகர்களை நீக்குமா... விவசாயிக்கே நேரடியான இலாபம் கிடைக்குமா? இதை விட அதிகப் பயனளிக்கக் கூடிய இயற்கையான வழிமுறைகள் இருக்கையில், இதை அவசர அவசரமாக நடைமுறைப் படுத்துவது ஏன்?//

வித்யா, இதை நடைமுறைப் படுத்துவதில் ஏராளமான குறைகள் இருப்பதை மறுக்க முடியாது. குறிப்பாக ஏகபோகம். ஆனால் பிடியையே எதிர்ப்பதை தான் நான் எதிர்க்கிறேன்.

//பி.டி. பருத்தி என்பது சதவிகிதம் பயன்பாட்டில் இருப்பதாக அறிகிறேன். இதன் மூலம் எத்தனை விவசாயிகள் பலன் அடைந்திருக்கிறார்கள் என்று அறியவும் ஆர்வத்தோடு இருக்கிறேன்//

ஒருவன் பெயர் சஞ்சய்காந்தி. மற்ற ஆயிரக்கணக்கானவர்கள் பெயரை சொன்னால் அவர்களை உங்களுக்கு தெரியாதே.. :)

Vidhoosh said...

இன்று விதைச்சு நாளை அருப்பருக்கனும்னு (அறுவடை செய்தல்) ஆசை பட்டா முடியுமா.. விவசாயிக்கே இதை சொல்வது நியாயம் இல்லை. பத்தாவது படிக்கும் வரை வரப்பு நீர் பாய்ச்சி இருக்கும் அனுபவத்தில் மட்டுமே பி.டி.யை எதிர்க்கிறேன்.

எது இயற்கைக்கு புறம்பானதோ அது தரும் குறுகிய கால நன்மைகள் தலைவலிக்கு "ஆஸ்பிரின்" சாபிடிவது போல மட்டுமே இருக்க முடியும். தலைவலிக்கான ஆதாரத்தை சரி செய்யுமா??

Sanjai Gandhi said...

முன்பெல்லாம் பருத்தி பயிரிடும் போது வீட்டுக்குப் போகவே அழுவேன் :) முதுகில் ஸ்ப்ரேயர் மாட்டிக் கொண்டு பூச்சிக்கொல்லி மருந்தடிப்பது உயிர் போகும். http://www.blog.sanjaigandhi.com/2009/11/blog-post.html

உரம் வைக்க, களை கொத்த, மண் கட்ட ஆள் கிடைக்காது. இப்போ பூச்சிக்கொல்லிக் கவலை குறைந்துவிட்டது. பூச்சிக்கொல்லிகளுக்கான எக்கச்சக்க செலவுகளும் குறைந்துவிட்டது. காய்கள் வீணாவது குறைந்துவிட்டது. நல்ல மகசூல்.

Sanjai Gandhi said...

//இன்று விதைச்சு நாளை அருப்பருக்கனும்னு (அறுவடை செய்தல்) ஆசை பட்டா முடியுமா.. விவசாயிக்கே இதை சொல்வது நியாயம் இல்லை. பத்தாவது படிக்கும் வரை வரப்பு நீர் பாய்ச்சி இருக்கும் அனுபவத்தில் மட்டுமே பி.டி.யை எதிர்க்கிறேன்.//

தவறான ஏளனமான புரிதல். 6 மாதம் அல்லது 1 வருடன் என்பது பாதியாகவோ கால்பாகமாகவோ குறைந்தாலே போதும் என்பது எங்கள் கவலை. ஏன்னா, குடியிருப்புகளால் விவசாய நிலங்களும், நகரம் நோக்கிய இந்தத் தலைமுறையினரின் படயெடுப்பாலும் விவசாயம் செய்ய நிலமும் ஆட்களும் குறைவு. 10 ஏக்கரில் 7 முதல் 10 பேர் கொண்ட கூட்டுக் குடும்பம் 15 வகை பயிர்களை செய்ய முடிந்தது. தொடர்ந்த வருமானமும் கிடைத்தது. இப்போ அவ்வளவு நிலமும் இல்லை. 2 பேர்க்கும் மேல் வீட்டில் ஆளும் இல்லை. ஆகவே குறைந்த நாட்களில் மக்சூல் தேவைப் படுகிறது.


ஏன் அடுத்த நாளே விளைய வேண்டும் என ஆசைப் படக் கூடாது? ஒருவேளை அதுவும் முடியும் என்றால் நடக்கட்டுமே. ஆசைப் பட்டால் முடியுமா என்பது போன்ற ஏளனமான கேள்விக்கு என்ன அவசியம்னு புரியலையே வித்யா.. விவசாயி 2 நாளில் வருமானம் பார்க்கக் கூடாதா?. இட்லி மாவு விற்பவர் கூட காலையில் தயாரித்து மாலையில் காசு பார்க்கிறாரே.. விவசாயி அதை செய்யக் கூடாதா? :)

Sanjai Gandhi said...

//விவசாயிக்கே இதை சொல்வது நியாயம் இல்லை. //

:))).. என்ன ஒரு அதிகாரம்.. ஏன் நியாயம் இல்லை? :)

//எது இயற்கைக்கு புறம்பானதோ அது தரும் குறுகிய கால நன்மைகள் தலைவலிக்கு "ஆஸ்பிரின்" சாபிடிவது போல மட்டுமே இருக்க முடியும். தலைவலிக்கான ஆதாரத்தை சரி செய்யுமா?? //

மனசாட்சியை தொட்டு சொல்லுங்க.. இன்று வரை இயற்கைக்கு புறம்பான எதையும் நீங்கள் பயன்படுத்தியதில்லையா? . காரில் செல்லும் போது கார்பன் மோனாக்சைடு வெளிவருமே.. அது இயற்கைக்கு ஆதரவானதா?. மரத்தை அழித்து தயாரிக்கும் காகிதம் உபயோகிபப்தில்லையா? உயிரினங்களை அழித்து தயாரிக்கும் செருப்போ கைப்பையோ உபயோகித்ததில்லையா?

சமரசம் இல்லாமல் யாராலும் வாழ முடியாதுங்க.. அதுல ஒரு எல்லை இருக்கனும்.. அவ்வளவு தான்.. ஆனால் ஒரு கண்ணில் வெண்ணெய் இன்னொருக் கண்ணில் சுண்ணாம்பு என்ற எல்லை தான் தவறானது.. என்ன சொல்றிங்க.. :)

Vidhoosh said...

//தவறான ஏளனமான புரிதல்.//ஏளனமான கேள்விக்கு என்ன அவசியம்னு புரியலையே வித்யா///
சஞ்சய் இப்போதான் உங்க 'பஞ்சு விளைவித்தல்' பற்றிய பதிவை படித்து கொண்டிருக்கிறேன்.

நிச்சயம் ஏளனம் செய்யும் நோக்கோடு கேட்கவில்லை. நேர்மையான ஆதங்கம் மட்டுமே! ஆதங்கத்துக்கு ஏதும் ஸ்மைலி இருப்பது பற்றி தெரியவில்லை. எழுத்தில் ஆதங்கத்தை எப்படி காட்டுவது என்றும் தெரியவில்லை. என் மனதில் உள்ள கேள்வி அது!

அவசரம்தான்.. ஆனால் இயற்கைக்கு மாறாக எப்படி? விரைவில் பலன் கொடுக்கலாம். நீங்க சொல்லும் ஆள் பலம், பண பலம் எல்லாமே முட்டுக்கட்டைகளாக இருக்கலாம். விரைவில் லாபம் தருவதாக இருக்கலாம்.. ஆனால் நீர்நிலைகளை பெப்சி /கோலா போன்றவைகளுக்கு தாரை வார்த்தது போலாகி விடக்கூடாதே என்ற பயமும் இப்பதிவில் ஒளிந்திருக்கிறது.

Sanjai Gandhi said...

//கால்பாகமாகவோ குறைந்தாலே//
தவறாக எழுதிவிட்டேன்.. கால்பாகம் அளவாவது.. அதாவது 1 வருடம் என்பது 6 அல்லது 9 மாதமாக குறைந்தாலே போதும்..

pudugaithendral said...

கத்திரிக்காயின் சத்துக்களைப்பத்தி சொன்னதுக்கு ரொம்ப நன்றி.

என் உறவில் ஒரு பையன் அவனுக்கு கத்திரிக்காயே பிடிக்காது. உன் கல்யாணத்தில் தாலி தேங்காயில் வைப்பதற்கு பதில் பெரிய்ய கத்திரிக்காயில் தான் வைக்கச் சொல்வேன். கத்திரிக்கய் தான் சமையலில் பிராதனமா இருக்கும்னு சொல்வேன்.
அதுல சத்தே இல்லைன்னு சொல்லிகிட்டு இருக்கான். இதை அனுப்பி வைக்கிறேன்

சூர்யநிலா said...

உலகையே விலைக்கு வாங்கக்கூடிய மான்சண்டோவிற்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும் ஒருத்தர் இருக்குறது ஆஹா புல்லரிக்குது

சூரியன்

சூர்யநிலா said...

எப்பொழுது உலகப்போரின் மீதமான வெடிமருந்துகளை உரங்களாக நம்மீது திணித்தார்களோ அன்றே நாம் அடிமைப்பட்டுவிட்டோம்.

என்னவென்றே தெரியாமல் பி.டி கத்தரி, பி.டி பருத்தி என்று ஆதரிக்கும் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது

சூரியன்

சூர்யநிலா said...

சுபாஷ் பாலேகர் எந்த இயற்கை கம்பனியையும் ஆதரிக்கவில்லை. சந்தைப்படுத்தவில்லை. தமிழராக இருப்பதால் மட்டும் நம்மாழ்வாரை குறை சொல்ல முடிகிறது.

உரங்களால் மண் கேட்டு விட்டது.

மட்கும் (Humus) திறனே இல்லை

இந்திய பாரம்பரிய மாட்டினங்கள் கலப்பினங்களாக மாற்றப்பட்டு உள்ளது.

இன்னும் நாம் வெள்ளையனுக்கு அடிமைதான்.

Genetic Slave

சூர்யநிலா said...

சிகரட் கேடு என்று கூறியுள்ளார்

புகையிலை கண்டுபிடித்து ஐயாயிரம் வருடம் ஆகிவிட்டது, அப்போது எங்கு கான்சர் இருந்தது.
(http://forces.org/)

Sanjai Gandhi said...

சூர்யநிலா, உங்களைப் போன்றே அனைவரும் அறிவுஜீவிகளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் எப்படிங்க?
//பெண்களின் செக்ஸ் உணர்வை தூண்டக்கூடிய மருந்தை கண்டு பிடித்துள்ளனர். இதன் பெயர் ப்ளிபன்செரின் (Flibanserin). ஆண்களுக்கு வயாக்ரா போல பெண்களுக்கு இது பயன்படுமாம். இன்னும் சில மாதங்களில் சந்தைக்கு வந்துவிடும். பக்க விளைவுகள் என்ன என்று தெரியவில்லை.//

இது போன்ற அதிமுக்கிய மருந்துகளை ஆதரிக்காமல் பிடியை ஆதரிப்பது குற்றம் தான்.

//ஆஹா புல்லரிக்குது //

உங்கள் அரிப்புக்கு கவலைபட முடியவில்லை மன்னிக்கவும்.. உங்கள் பதிவை பார்த்தாலே தெரியுது.

//என்னவென்றே தெரியாமல் பி.டி கத்தரி, பி.டி பருத்தி என்று ஆதரிக்கும் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது //

நான் விவசாயி... பிடி விதையை பயன்படுத்தும் விவசாயி.. பழைய நஷ்ட முறைகளில் இருந்து லாபத்தை கொடுத்திருக்கிறது. விவாதிக்க துப்பில்லை என்றால் ஒதுங்கி கொள்ளுங்கள்.. உளறிக் கொண்டிருக்க வேண்டாம்.

சூர்யநிலா said...

யாராவது ஒரு பதிவர் பதிவு எழுதினால் அதை தனி ஒருவராக எதிர்த்து தன்னை பிரபல படுத்திக்கொள்ளும் வித்தையாகவே இது எனக்கு படுகிறது சகோதரி

சூரியன்

Sanjai Gandhi said...

//ஆண்களுக்கு வயாக்ரா போல பெண்களுக்கு இது பயன்படுமாம். இன்னும் சில மாதங்களில் சந்தைக்கு வந்துவிடும். பக்க விளைவுகள் என்ன என்று தெரியவில்லை.////

ஏனுங்க.. பிடியை உபயோகிக்கலாமா வேணாமான்னு குறைஞ்ச பட்ச ஆராய்சியாவது செஞ்சிருக்காங்க.. உங்க விளம்பரத்துல வர ப்ராடக்பத்து எதும் ஆராய்ச்சிப் பண்ணி இருக்காங்களா? மேலும் இந்த ப்ராடக்ட் எந்த சாமான்யன் தயாரித்தது? நான் மான்சாண்டோவை ஆதரிக்கிறேன். நீங்க என்ன மூலப்பட்டி மொக்கசாமியவா ஆதரிக்கிறிங்க?

சூர்யநிலா said...

நானும் விவசாயிதான்

உங்க உளறலை விட என் உளறல் பரவாயில்லை.

சூர்யநிலா said...

பி.டி கத்தரி சாப்பிட்ட பிறகு உடலுக்குள் நடக்கும் என்சைம் மாறுதல்களை அறிந்த ஒரே விஞ்ஞானி சஞ்சய் அவர்கள் தான்

சூர்யநிலா said...

விதை பைகளில் இருக்கும் (Treated With Poison) என்பதற்கு என்ன அர்த்தம் அறிஞரே

Sanjai Gandhi said...

பிடியை பற்றி மட்டுமே விவாதிப்போம்.. பிறவற்றைப் பற்றி நான் பேசவில்லை.. பிடியை ஆதரிக்கும் காரணங்களை நான் சொல்லிவிட்டென். எதிர்க்கும் காரணங்களை நீங்கள் சொலுங்கள். எதற்கு என் பிரபலம் ஆகும் உத்தியை சகோதரியிடம் ஜாடையாய் சொல்றிங்க? என்னிடமே நேரடியாய் பேசுங்கள். எனக்கும் பிரபலம் ஆகனும்னு ஆசை உண்டுதான், ஏன்னா என்னை இங்க யாருக்கும் தெரியாது. கூடவே கொஞ்சம் விவாதிக்கவும் செய்யலாம் வாங்க. நீங்க தனிப்பட்ட தாக்குதலில் இறங்காதவர என் விவாதம் மிக நாகரிகமாகவே இருக்கும்.

சூர்யநிலா said...

பி டி கத்தரி பயிரிடப்போகும் முதல் தமிழக விவசாயி சஞ்சய்

பசுமை விகடனில்

Sanjai Gandhi said...

//பி.டி கத்தரி சாப்பிட்ட பிறகு உடலுக்குள் நடக்கும் என்சைம் மாறுதல்களை அறிந்த ஒரே விஞ்ஞானி சஞ்சய் அவர்கள் தான்

//

உங்களுக்கு பொது விவாதத்தில் நம்பிக்கை இல்லை போல. உங்கள் லெவலுக்கு வர கொஞ்சம் சிரமம். எஞ்சாய்.

முடிஞ்சா இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க.. கட்டாயம் எல்லாம் இல்லை..

//ஆண்களுக்கு வயாக்ரா போல பெண்களுக்கு இது பயன்படுமாம். இன்னும் சில மாதங்களில் சந்தைக்கு வந்துவிடும். பக்க விளைவுகள் என்ன என்று தெரியவில்லை.////

ஏனுங்க.. பிடியை உபயோகிக்கலாமா வேணாமான்னு குறைஞ்ச பட்ச ஆராய்சியாவது செஞ்சிருக்காங்க.. உங்க விளம்பரத்துல வர ப்ராடக்பத்து எதும் ஆராய்ச்சிப் பண்ணி இருக்காங்களா? மேலும் இந்த ப்ராடக்ட் எந்த சாமான்யன் தயாரித்தது? நான் மான்சாண்டோவை ஆதரிக்கிறேன். நீங்க என்ன மூலப்பட்டி மொக்கசாமியவா ஆதரிக்கிறிங்க?

Vidhoosh said...

சூரியன்: உங்கள் வரவுக்கு நன்றி. விவாதம் ஆரோக்கியமாக இருத்தல் நன்று. தனிநபர் தாக்குதல்கள் வேண்டாம்.

சூர்யநிலா said...

நமக்குள் கருத்து மோதல்தான்

நான் என்ன அநாகரீக வார்த்தைகளை உபயோகபடுத்தி இருக்கிறேன்

Vidhoosh said...

சூரியன்: கருத்துக்கள் ஒருத்தருக்கொருத்தர் வித்தியாசப் படலாம். நாம் நம்புவதை பிறரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கும் போது, நாம் கற்றுக் கொள்வது குறைந்து போகும். சஞ்சய் சொல்வதையும் கேட்போமே சகோதரரே.

அவர் நடைமுறையில் விவசாயம் செய்பவர். விரைவில் பி.டி பற்றிய தனிப் பதிவு எழுதுவார் என்று எதிர்பார்கிறேன்.

Sanjai Gandhi said...

//நமக்குள் கருத்து மோதல்தான் //

மன்னிக்கவும் சூர்யநிலா.. கீழே இருப்பதெல்லாம் கருத்து மோதல் தான் என்பது எனக்குத் தெரியாது. அதை சார்த்து விவாதிக்கும் கலையும் எனக்கு விருப்பம் இல்லாதது..

....
தமிழ்நாட்டிலும் ஒருத்தர் இருக்குறது ஆஹா புல்லரிக்குது

என்னவென்றே தெரியாமல் ஆதரிக்கும் கூட்டம்

தனி ஒருவராக எதிர்த்து தன்னை பிரபல படுத்திக்கொள்ளும் வித்தை

அறிந்த ஒரே விஞ்ஞானி சஞ்சய் அவர்கள் தான்

முதல் தமிழக விவசாயி சஞ்சய்

பசுமை விகடனில்

சூர்யநிலா said...

please go through this article

http://devinder-sharma.blogspot.com/2009/10/bt-brinjal-indias-first-poisonous-food.html

Thanks

சூர்யநிலா said...

சரி நண்பா

சில நாட்கள் பொறுத்திருப்போம்

அதுவரை என் சார்பான கருத்தை நான் மற்ற போவதில்லை

நீங்களும் மாற்றி கொள்ள வேண்டாம்

காலம் பதில் சொல்லட்டும்

சூரியன்

Vidhoosh said...

சூரியநிலா: :) உங்கள் முதல் வரவு. பி.டி. பற்றி இன்னும் விபரங்களைச் சேகரித்து எழுதுங்களேன். இது பற்றிய தகவல்கள் எங்கும் (தமிழில்) கிடைக்கவில்லை. சிந்தனையை தூண்டுவதாக அமையலாம். நன்றி. :)

Sanjai Gandhi said...

இங்கு யாருமே பிறர் கருத்தை மாற்றிக் கொள்ள சொல்வதில்லை. நான் பிடியை ஆதரிப்பதால் வித்யா இந்தப் பதிவை நீக்கிவிட்டு ” ஆதரிக்கிறேன் பிடியை” என்று எழுதப் போவதில்லை.. என் கருத்தும் அனுபவமும் நான் பகிர்ந்துக் கொள்கிறேன். அதையே நீங்களும் செய்ங்க. அதவிட்டு விஞ்ஞானி, அறிஞர் என்றெல்லாம் தனிப்பட்ட முறையின் ரசிக மனோபாவத்துடன் பேசக் கூடாது. அதுக்கு வேற ஏரியா இருக்கு. அங்க நான் உங்கள விட லோக்கல்..

சூர்யநிலா said...

விட்டதுக்கு அப்புறம் நான் லோக்கல் நீங்க எஸ்டிடி அப்பிடிங்கறது தேவையா ?

Radhakrishnan said...

நாங்க எல்லாம் வாங்கற கத்தரிக்காய்களில் இந்த மரபணு மாற்றம் இல்லாத காய்களாகத்தான் பார்த்து வாங்கி சாப்பிடுவோம். ஏன்னா இங்கே கத்தரிக்காய்ல ஒரு காகிதத்தைச் சுத்தி வைச்சி அது எங்கிருந்து உருவானதுனு எழுதியிருப்பாங்க. நம்ம ஊருல அது நடப்புக்கு வருமா? ஏன்னா இங்க கூட நம்ம தமிழ்க்கடைகளில் காகிதம் சுத்தி கதை சொல்ற வழக்கம் இல்லை. இருந்தாலும் அவங்க வாங்க்யாரது எல்லாம் மரபணுக்களால் மாற்றம் இல்லாத ரகம் தானு சொல்றாங்க. நம்பிடுறோம்.

மரபணு பற்றிய முழு விபரமும் அறிந்தால் தேவையற்ற புரிதல்கள் விலகிவிடும் என்பது எனது அபிப்ராயம். முன்னமே சொன்னமாதிரி புது விசயம் வந்தா உடனே எதிர்த்து ஆர்பாட்டம் பண்றது நமக்கு வழக்கமாகிப் போய்விட்டது. நீங்க எழுதியிருக்கிறது கொஞ்சம் அதிகப்படியான விசயமாக இருக்கிறது விதூஸ். ஆனா உங்க மூலமா ஒரு புராணம் படிக்கிற வாய்ப்பு தந்து இருக்கீங்க. தவறாக எழுதி இருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

சூர்யநிலா said...

http://www.allvoices.com/contributed-news/4602952-the-dangers-of-bt-brinjal-farming-in-india

Vidhoosh said...

நன்றி ராதாக்ருஷ்ணன்:
இந்தியாவில் லேபில் முறை வரவில்லை.

என் கவலை எல்லாம்:
காலப் போக்கில் விவசாயிகளுக்கு கிடைக்கும் விலை குறையாதா... விளைச்சல் அளவுக்கும் அதிகமானால்?

Monsanto, Cargill, and ConAgra போன்றவை மார்கெட் முதலைகள் ஆகி விட்டால் என்ன செய்வது? பி.டி தொழில்நுட்பம் அவர்கள் வசம்தானே உள்ளது.

Vidhoosh said...

நல்ல தகவல்கள் சூர்யநிலா. நன்றி. :)

Sanjai Gandhi said...

//என் கவலை எல்லாம்:
காலப் போக்கில் விவசாயிகளுக்கு கிடைக்கும் விலை குறையாதா... விளைச்சல் அளவுக்கும் அதிகமானால்?//

வித்யா, முதல் முறையாக சரியான திசையில் வந்திருக்கிறீர்கள். மேலே குறிப்பிட்டிருப்பது பிடி ஆதரவாளார்களின் கவலையும் கூட.

1. மக்கள் தொகை அதிகரிக்கிறது. வாங்கும் சக்தி அதிகரிக்கிறது. பொங்கலுக்கும் தீபாவளிக்கும் புது துணி வாங்கியது போய் 3 மாதம் ஒரு முறை வாங்குகிறோம். மாதம் இரண்டு முறை என்றும் வரலாம். மேலும் விளைச்சல் அதிகமாகும் போது விலை குறையட்டுமே. தான் விளைச்சல் அதிகரிக்கிறதே ( நீங்கள் மேலே சொல்லி இருப்பது போல்). அதனால் துணிகளின் விலையும் குறையட்டுமே. இன்னும் அதிகமாக வாங்குவார்கள் இல்லையா? ஆகவே அதிக விளைச்சலும் விலையும் கவலை இல்லை. மேலும் ஒரு முறை விலை குறைந்தால் பாதிப் பேர் மாற்று பயிருக்கு மாறிவிடுவார்கள். பின்னர் சரி ஆகிவிடும். இது தான் நடைமுறை.

//Monsanto, Cargill, and ConAgra போன்றவை மார்கெட் முதலைகள் ஆகி விட்டால் என்ன செய்வது? பி.டி தொழில்நுட்பம் அவர்கள் வசம்தானே உள்ளது. ////

2. சரியான கவலை. பிடியை அமலாக்குவதில் சிகல்கள் இருப்பது நிஜம் தான். நாம் இதைத் தான் முறைப்படுத்த வலியுறுத்த வேண்டும். மாறாக அந்த தொழில்நுட்பத்தையே எதிரிப்பது என்ன நியாயம்? உங்கள் கவலை சுவை இல்லை, விஷமாகி விடும் என்பது தானே. இப்போது இருப்பது ஒன்றும் இறுதியான ஆராய்ச்சி இல்லையே. ஆரம்பம் தானே. நாளையே சுவை கூட்டும், விஷத்தன்மை போக்கும் மரபணுக்கள் மாற்றமும் உருவாகலாமே? ஏன் ஆரம்பத்திலேயே எதிர்க்கனும்?

Vidhoosh said...

சஞ்சய்:
எல்லோருக்கும் இலாபம் மட்டும்தான் குறிக்கோள். இதில் தவறேதும் இல்லை.

ஆனால், parallel-ஆக நிஜ பருத்தியையும் விளைவிக்கிரீங்களா?

திடீர்னு அவங்க patent அது இதுன்னு புறப்பட்டா என்ன செய்வீங்க.

நிஜப் பருத்தி விதைகளில் இந்த பி டி கலப்படமாகி, திரும்பி வரமுடியாத நிலையில்?

Sanjai Gandhi said...

//ஆனால், parallel-ஆக நிஜ பருத்தியையும் விளைவிக்கிரீங்களா?//

விளைவிக்கிறோம்.. எங்க நிலத்தில் அதுவும் இருக்கு.. உங்களுக்கு அனுப்பிய புகைப் படத்தில் இருக்கும் பாருங்க.

//திடீர்னு அவங்க patent அது இதுன்னு புறப்பட்டா என்ன செய்வீங்க.
//

இந்தக் கவலையை போக்க வேண்டிய கடமை அரசாங்கத்துக்கு உள்ளது.

//நிஜப் பருத்தி விதைகளில் இந்த பி டி கலப்படமாகி, திரும்பி வரமுடியாத நிலையில்? //
கொஞ்சம் மாத்தி யோசிங்க.. வழக்கமான பருத்தியால் பிடியின் தன்மையும் பாறலாம் இல்லையா? மகரந்த சேர்க்கை மூலமா பிடி விதையின் குணாதிசயம் மரபுரீதியிலான( இதுவே தப்பு) பருத்திக்கும் வரும் என்று யோசிப்பது போல் அதன் குணம் பிடிக்கும் வரலாம் இல்லையா?

Vidhoosh said...

//இந்தக் கவலையை போக்க வேண்டிய கடமை அரசாங்கத்துக்கு உள்ளது.// அரசாங்கம் மாறிக் கொண்டே இருக்கும். அவர்கள் இவர்களையும் இவர்கள் இன்னொருவரையும் குறை சொல்லிக் கொண்டே காலம் ஓடி விடும். சுய சார்பு என்பது ரொம்ப முக்கியம். அதுவும் இந்திய விவசாயிகள் தற்போது இருக்கும் மோசமான நிலையில்.

இருக்கிறதே மண் குடிசை. அதையும் கொண்டு போய் வெளிநாட்டுகாரன் கிட்ட அடகு வச்சு என்ன செய்யப் போறீங்க.

Vidhoosh said...

சஞ்சய்: நீங்க கண்டிப்பா பி.டி தொழில் நுட்பம் பற்றி எழுதணும்.

Sanjai Gandhi said...

இதில் பெரிய அளவில் கவலைப்பட எதுவும் இல்லை வித்யா. இது ஒரு தொழில்நுட்பம் தான். ப்ராண்ட் இல்லை. பேடண்ட் பிரச்சனை வரும் வரை போட்டியாளர் உருவாகாமல் இருக்க வாய்ப்பே இலலை. கோவை விவசாயப் பல்கலைக் கழகத்தில் கண்டுபிடித்த பிடி கத்தரிக்காய்க்கு யார் பேடண்ட் கோர முடியும்? இது போல் இன்னும் ஏராளமாய் வரும். மேலும் நிருவனம் வைத்தது தான் விலை என்றால் விவசாயி வேறு விவசாயத்துக்கு மாறிவிடுவான். அந்த நிறுவனம் யாரிடம் போய் நிற்கும்? இழுத்து மூடிவிடுவார்களா? பீதியடைய வேண்டியதே இல்லை.

நீங்கள் சொல்வது போல் இது போன்ற அத்தியாவசிய பிரச்சனைகளில் அரசாங்கங்கள் தட்டிக் கழித்துவிட முடியாது. அவர்களை ஆட்டம் காண வைத்துவிடும்.

Sanjai Gandhi said...

//சஞ்சய்: நீங்க கண்டிப்பா பி.டி தொழில் நுட்பம் பற்றி எழுதணும். //

தொழில்நுட்பம் பற்றி நீங்கள் உட்பட சிலர் எழுதிவிட்டீர்கள். மேலும் புதுசா எழுத எதுவும் இல்லை என நினைக்கிறேன். பார்ப்போம். ஆதரவைத்தான் எழுதும் எண்ணம். ஆனால் அவசரப் படவிரும்பவில்லை. ஒரு பயனாளியாய் சுயநலத்துடன் எழுதினால் 10 பதிவுகள் தேத்தலாம். :)) ஆனால் அதன் மறுபக்கத்தையும் எழுதனும்.

Unknown said...

மாசாண்டாவோட தாய் தேசமான அமெரிக்காவுலயே இப்ப எல்லாம் ஜி.எம் ப்ராடக்ட்ஸ் உபயோகப் படுத்துறதை குறைச்சிட்டு வர்றாங்க. அதுனால தான் மாசாண்டா இந்தியாப் பக்கம் எட்டிப் பாக்குறான். கூடிய மட்டும் “ஆர்கானிக்” பொருட்களையே சாப்புடுங்க..

காமராஜ் said...

வெண்டைக் காய்கள்
க்யூவில் வருமாமே...
ஆஹா... சத்தம்போட்டுச் சிரித்தேன்
அதுக்காக இப்டியா என்று வசவு வாங்கி.

நல்லாருக்கு வித்யா.

Thenammai Lakshmanan said...

வித்யா இப்பதான் குமுதத்துல படிச்சுட்டு வர்றேன் ஆனா உங்க ஹுமர் சென்ஸ் அதிகம் இதுல..

பின்னே கத்திரிக்காய் நம்ம தேசிய உணவாச்சேப்பா

உயிரோடை said...

வித்யா உங்கள் ஹுமர் சென்சுஸ்க்கு நல்லா இருக்கு.

நல்ல பகிர்வு.

கலிகாலம் என்று சொல்லிய விசயங்கள் எல்லாம் பயம் கொள்ள செய்கின்றன.

செரி இந்த மரபு கத்திரிக்காயை புறக்கணிக்க என்ன செய்ய?

ஆனா கத்திரிகாயில் இத்தனை சத்து இருக்கின்றதா எங்கிருந்து தகவல் திரட்டினீர்கள். நம்பகமான தகவல் என்றால் மிகவும் மகிழ்ச்சி.

சூர்யநிலா said...

பி.டி கத்தரி தகவல்கள் தமிழில்

http://solvanam.com/?p=5543

சூர்யநிலா said...

பி.டி., கத்தரிக்காய் பயிரிட்டால் 200க்கும் மேற்பட்ட செடிகள் அழியும் : நம்மாழ்வார் எச்சரிக்கை
""பி.டி., கத்தரி சாகுபடி செய்யும் பட்சத்தில், கத்தரி இனத்தை சேர்ந்த தூதுவளை, சுண்டக்காய், கண்டகத்தரி, மணத்தக்காளி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பாரம்பரிய ரகங்கள் அழிந்து விடும்,'' என இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கூறினார்.கோவை வேளாண் பல்கலை மற்றும் அமெரிக்கா விதை நிறுவனமான மான்சான்டோவின் இந்திய பங்குதாரர் "மஹிகோ' நிறுவனமும் காய்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் மரபணு மாற்றம் செய்த பி.டி., கத்தரிக்காயை உற்பத்தி செய்துள்ளது.


பி.டி.,கத்தரிக்காய்க்கு, இந்திய உயர் தொழில் நுட்பவியல் ஒழுங்குமுறை அமைப்பு, மத்திய அமைச்சகத்துடன் இணைந்த ஜெனிடிக் இன்ஜினியரிங் ஒப்புதல் கமிட்டியும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.இந்தியாவில் அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப, காய்கறி உற்பத்தியை பெருக்குவதற்காக, தட்ப வெப்ப நிலைக்கு தாக்கு பிடித்து, அதிக அளவில் காய்க்கும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி., கத்தரிக்கு அனுமதி வழங்க, மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.பி.டி., கத்தரியை சாகுபடி செய்வது தொடர்பாக, விவசாயிகளின் கருத்து கேட்க, மத்திய அரசு இம்மாதம் நாடு முழுவதும் ஆறு மாநில தலைநகரங்களில் கூட்டம் நடத்தவுள்ளது.


பி.டி., கத்தரி தொடர்பாக அகில இந்திய இயற்கை உழவர் இயக்க தலைவரும், இயற்கை விஞ்ஞானியுமான நம்மாழ்வார் கூறியதாவது:விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் முடிந்த பின்னர் பி.டி., கத்தரி சாகுபடி செய்ய மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கினாலும் ஆச்சரியமில்லை. ஆனால், தமிழகத்தில் பி.டி., கத்தரி சாகுபடி செய்தால், விவசாயிகளிடம் நேரில் சென்று பி.டி., கத்தரியால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.தற்போது பி.டி., கத்தரிக்கு அனுமதி வழங்கினால், படிப்படியாக, அனைத்து காய்கனிகளும் மரபணு மாற்றம் செய்யப்பட்டு விடும். பி.டி., கத்தரி குறித்து ஆராய்ச்சி செய்யும் இந்திய மாணவர்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் உதவித் தொகை வழங்குகிறது. அதனால்தான் பி.டி., கத்தரி எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது என, அவர்களும் தெரிவிக்கின்றனர். ஆனால், பி.டி., கத்தரி சாப்பிட்டால் புற்றுநோய், மலட்டுதன்மை, அலர்ஜி போன்ற நோய்கள் வரும் அபாயம் உள்ளது.


தூதுவாளை, கண்டங்கத்தரி, மணதக்காளி, சுண்டக்காய் என, கத்தரி இனத்தில் 500க்கும் மேற்பட்ட பாரம்பரிய ரகங்கள் நாட்டில் இருந்தது. இவற்றில் பெரும்பாலான ரகங்கள் காலப்போக்கில் அழிந்து விட்டன.பி.டி., கத்தரி சாகுபடி செய்தால், அதன் விதையை எடுத்து மீண்டும் உபயோகப்படுத்த முடியாது. பதிலாக, அதனை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் இருந்து தான், ஒவ்வொரு முறையும் விதைகள் வாங்கியாக வேண்டும். பி.டி.,கத்தரி சாகுபடி செய்யும் போது, அந்த பூக்களில் அமரும் பூச்சிகள்தான், பிற கத்தரி இன பூக்களுக்கும் சென்று மகரந்த சேர்க்கையில் ஈடுபடும்.அவ்வாறு மகரந்த சேர்க்கையில் ஈடுபடும் பூச்சிகள், பிற கத்தரி இன பூக்களில் அமரும் போது, அந்த பூக்களும் மலடாகி காலப்போக்கில் கத்தரி இனமே முற்றிலும் அழிந்து விடும். மீண்டும் சாகுபடி செய்வதற்காக எடுத்து வைக்கும் விதையும் முளைக்காது.


எதிர்காலத்தில், ஒட்டுமொத்த விவசாயிகளும் பி.டி.,கத்தரி விதை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை நம்பியே இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.நாட்டின் ஒட்டுமொத்த காய்கறி உற்பத்தியும் ஒரு சில தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். அவர்கள் எவ்வளவு அதிக விலை நிர்ணயம் செய்தாலும், அந்த விலைக்கு விதைகளை வாங்கியே ஆக வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். விவசாயிகளும், பொதுமக்களும் எச்சரிக்கையாக இருந்தால் மட்டுமே, இந்த ஆபத்தை தடுக்க முடியும்.இவ்வாறு நம்மாழ்வார் கூறினார்.

Radhakrishnan said...

பல அதிசய தகவல்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது. இயற்கை வளம் கொழிக்கட்டும்னு எழுதுனா தப்பா போயிரும் போலிருக்கே. ;)

Sanjai Gandhi said...

//""பி.டி., கத்தரி சாகுபடி செய்யும் பட்சத்தில், கத்தரி இனத்தை சேர்ந்த தூதுவளை, சுண்டக்காய், கண்டகத்தரி, மணத்தக்காளி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பாரம்பரிய ரகங்கள் அழிந்து விடும்,'' என இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கூறினார்//

அதே நம்மாழ்வார்,
//தூதுவாளை, கண்டங்கத்தரி, மணதக்காளி, சுண்டக்காய் என, கத்தரி இனத்தில் 500க்கும் மேற்பட்ட பாரம்பரிய ரகங்கள் நாட்டில் இருந்தது. இவற்றில் பெரும்பாலான ரகங்கள் காலப்போக்கில் அழிந்து விட்டன//

பிடி இல்லை என்றாலும் காலப்போக்கில் அழிந்துக் கொண்டுதானே இருக்கிறது. பின் ஏன் பிடியை பார்த்து கவலைப் படனும்?

நசரேயன் said...

என்ன எல்லோரும் டீ குடிக்க போயாச்சா ?

நசரேயன் said...

//நீங்க கண்டிப்பா பி.டி தொழில் நுட்பம் பற்றி எழுதணும்//

எங்க ஊரிலேயும் பீடி சுத்துறோம்

Sanjai Gandhi said...

//பி.டி., கத்தரி குறித்து ஆராய்ச்சி செய்யும் இந்திய மாணவர்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் உதவித் தொகை வழங்குகிறது. அதனால்தான் பி.டி., கத்தரி எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது என, அவர்களும் தெரிவிக்கின்றனர்.
//

அதாவது , பணம் வாங்கிக் கொண்டு தங்கள் பிளைகளுக்கு, பேரப் பிள்ளைகளுக்கு விஷம் தயாரிக்கிறார்கள் என்கிறார் நம்மாழ்வார். இது போன்ற அறிவார்ந்த கருத்துகளை சொல்ல அவருக்கு இணை அவரே.

//ஆனால், பி.டி., கத்தரி சாப்பிட்டால் புற்றுநோய், மலட்டுதன்மை, அலர்ஜி போன்ற நோய்கள் வரும் அபாயம் உள்ளது.//

அதென்ன அபாயம் உள்ளது? எதன் அடிப்படையில் இதை சொல்கிறார். யூகத்தின் அடிப்படையில். இன்னும் சொல்ல வேண்டுமானால், தன் ஆலோசனையில் இயற்கை உரம் தயாரித்து லாபம் பார்க்கும் இயற்கை உர வணிகர்களுக்கு சாதகமாய் சொல்கிறார். இவரை நம்பியே ஆக வேண்டிய அவசியம் இல்லை. இவர் சொல்லும் ஆபத்துகளை நிரூபிக்கட்டும். இவர் தமிழகத்தின் பச்சோரியாக பேசுகிறார். தட்பவெப்ப நிலையில் ராஜேந்திர பிரசாத் பச்சோரியுன் யூகக் கணக்கின் தவறு இப்போது அம்பலமாகிவிட்டது. அவர் டெரி எனப்படும் டாடாவின் நிறுவனத்தின் இயக்குனர் ஜென்ரல். இதே போல் தான் நம்மால்வாரும்...

Sanjai Gandhi said...

//பி.டி., கத்தரி சாகுபடி செய்தால், அதன் விதையை எடுத்து மீண்டும் உபயோகப்படுத்த முடியாது. பதிலாக, அதனை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் இருந்து தான், ஒவ்வொரு முறையும் விதைகள் வாங்கியாக வேண்டும்.//

பிடி ஆராய்ச்சிகள் இன்றோடு முடிந்துவிடவில்லை. தொடரும்.. இப்படித்தான் இருக்கும் என யூகமான முடிவுகள் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு எதிரானது. நம்ப வேண்டிய அவசியம் இல்லை. ஒரே நிறுவனம் தான் பிடி ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை.. இனி பல நிறுவனங்கள் செய்யும்.. அவர்களுக்குத் தான் தொழில் போட்டி வரும். விவசாயிகளுக்கு நிர்பந்தம் இருக்காது.

Sanjai Gandhi said...

//பி.டி.,கத்தரி சாகுபடி செய்யும் போது, அந்த பூக்களில் அமரும் பூச்சிகள்தான், பிற கத்தரி இன பூக்களுக்கும் சென்று மகரந்த சேர்க்கையில் ஈடுபடும்.அவ்வாறு மகரந்த சேர்க்கையில் ஈடுபடும் பூச்சிகள், பிற கத்தரி இன பூக்களில் அமரும் போது, அந்த பூக்களும் மலடாகி காலப்போக்கில் கத்தரி இனமே முற்றிலும் அழிந்து விடும். மீண்டும் சாகுபடி செய்வதற்காக எடுத்து வைக்கும் விதையும் முளைக்காது.//

சில மரபணுக்களில் தானே மாற்றம் செய்கிறார்கள். கத்தரிக்காய் செடியில் தேங்காய் விளைய செய்யலையே. ஒரு சில மரபணுக்கள் ஒட்டு மொத்த குணநலனையே மாற்றிவிட வாய்ப்பில்லை. ஆகவே அவர் குறிப்பிடும் மற்ற செடிகளின் குணங்கள் மகரந்த சேர்க்கை மூலம் பிடிக்கும் பரவலாம் இல்லையா? பிடியின் மலட்டுத் தன்மை போகலாம் இல்லையா?

Sanjai Gandhi said...

//எதிர்காலத்தில், ஒட்டுமொத்த விவசாயிகளும் பி.டி.,கத்தரி விதை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை நம்பியே இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.நாட்டின் ஒட்டுமொத்த காய்கறி உற்பத்தியும் ஒரு சில தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். அவர்கள் எவ்வளவு அதிக விலை நிர்ணயம் செய்தாலும், அந்த விலைக்கு விதைகளை வாங்கியே ஆக வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். விவசாயிகளும், பொதுமக்களும் எச்சரிக்கையாக இருந்தால் மட்டுமே, இந்த ஆபத்தை தடுக்க முடியும்.இவ்வாறு நம்மாழ்வார் கூறினார். //

இது தேவையில்லாத பீதி. நம்மாழ்வாரின் ஈகோ தான் முக்கியக் காரணம். தான் எதிர்த்த ஒன்று பரவுவதை அவரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அவருக்கு வேண்டியவர்கள் தயாரிக்கும் இயற்கை உரங்களுக்கு பாதிப்பு வருவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

நசரேயன் said...

இனிமேல நான் நல்லா கத்தரிக்காயே சாப்பிடலை

சூர்யநிலா said...

"ஒரு சில மரபணுக்கள் ஒட்டு மொத்த குணநலனையே மாற்றிவிட வாய்ப்பில்லை"

Down Syndrome எதனால் ஏற்படுகிறது ?

சூர்யநிலா said...

நம்மாழ்வராவது பஞ்சகவ்யத்தில் நெய் தயிர் சேர்க்க சொல்கிறார். ஆனால் சுபாஷ் பாலேகர் அது தேவை இல்லை என்று தானே ஜீவாமிர்தம் உருவாக்கினார். இயற்கை உரங்களை கடைகளில் வாங்க வேண்டாம் என்றுதானே கூறுகிறார்.

மூன்று தலைமுறைக்கு முன் ஏது யூரியா, பொட்டாஷ் அம்மோனியா ?

அப்போது எப்படி விவசாயம் செய்தார்கள் ?

Vidhoosh said...

///நீங்கள் சொல்வது போல் இது போன்ற அத்தியாவசிய பிரச்சனைகளில் அரசாங்கங்கள் தட்டிக் கழித்துவிட முடியாது. அவர்களை ஆட்டம் காண வைத்துவிடும்.///
உங்கள் நம்பிக்கை வாழ்க. ததாஸ்து.


//விவசாயி வேறு விவசாயத்துக்கு மாறிவிடுவான். ////
சரீங்க. இப்போ கத்திரிக்காய்தான். அப்புறமா அரிசி கோதுமைன்னு எல்லாம் பி.டி.யா வந்து மண்ணு வீணாப் போனபிறகு, பி.டி.யா விற்று சம்பாதிச்ச காசையா நட்டு வளப்பீங்க?

===========================

முகிலன் said...

மாசாண்டாவோட தாய் தேசமான அமெரிக்காவுலயே இப்ப எல்லாம் ஜி.எம் ப்ராடக்ட்ஸ் உபயோகப் படுத்துறதை குறைச்சிட்டு வர்றாங்க. அதுனால தான் மாசாண்டா இந்தியாப் பக்கம் எட்டிப் பாக்குறான்.////

இதைத்தான் நானும் சொல்ல வருகிறேன். இந்தியாதான் கிடைச்சுதா... why not US or Europe

==========================
நன்றி காமராஜ். :))
நன்றி தேனம்மை
நன்றி லாவண்யா //நம்பகமான தகவல் என்றால் /// N&D புத்தகத்திலிருந்து எடுத்த நம்பகமான தகவல்தான். இங்கேயும் பார்க்கலாம். http://www.medindia.net/patients/foodcalories/fooddetails.asp?id=52&cate=5&subcate=2&food=brinjal

நன்றி ராதாகிருஷ்ணன் : அதெல்லாம் ஒன்னும் இல்லை. ஒரு செய்தியைப் படிக்கும் போது எழும் நேரடி சிந்தனைதான் இது. எழுதறதை எழுதிட்டேன். இதனால் எவ்ளோ கற்றுக் கொள்ளக் கிடைத்தது பாருங்க.

நசரேயா: பீடியா... கிர்ர்ர்ர்...

சூர்யநிலா: மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் இருந்த சூழலும் இன்றைய சூழலும் முற்றிலும் மாறுபட்டு விட்டது. அன்று இருந்த பல நல்லவற்றை இழந்ததன் பலனாக மிக மிக கொஞ்சமான சுக சௌகியங்களை அனுபவிக்கிறோம், அதோடு நோய்களையும்.

சஞ்சய்: எனக்கு நீங்கள் கூறுவது வியாபார நோக்கில் வேண்டுமானால் சரியென படுகிறது. ஒரு சில விவசாயிகள் குறைந்தபட்ச பணக்காரர் ஆகலாம். ஆனால், பொதுவில், நுகர்வோருக்கு?

மொபைல், பட்டாம்பூச்சி, குருவி, தவிட்டுக் குருவிகள், போன்றவற்றையும், ஓசோன் பாதிப்பு, பனி உருகுதல் போன்ற எல்லாவற்றையுமே எதிர்ப்புக்களை மீறித்தான் நிகழ்த்தியிருக்கிறோம் என்பதில் எந்த ஐயமும் இல்லை. முன்பே அண்ணாமலையான் சொன்னது போல "இதுவும் கடந்து போகும்"
ஆனால், எவ்வளவு தூரம் என்பது மில்லியன் டாலர் கேள்வி?
==========================

Anna said...

I mostly agree with Sanjai Gandhi's view.

You might find this blog entry helpful too.

http://pamelaronald.blogspot.com/2008/08/10-things-about-ge-crops-to-scratch.html

Unknown said...

பி.ட்ஈ கத்தரிக்காய் ஐயோ....

Post a Comment