ஊஞ்சல் - 23.2.2010

ஊஞ்சல்:
கேரளாவின் கோவில் யானைகளுக்குச் சொக்கத் தங்கத்தால் பட்டை அணிவித்து கொண்டாடினாலும், சுதந்திரமாக இருக்க வேண்டிய மிருகத்தை இப்படி அங்குசத்தால் குத்தி குத்தி, இரும்புத்தடியால் அடியில் தட்டி, துன்புறுத்தி தெய்வத்தைச் சுமக்க வைக்க வேண்டியதன் அவசியம் என்ன? ரொம்பவே அருகில் சென்று தெய்வ தரிசனம் செய்யும் வாய்ப்பில், யானைக்கான வன்முறைகளையும் கண்டு நெஞ்சு பதைத்தது. இதில் அந்த யானை மூன்று வலம் வந்து முடித்தது இயற்கை உபாதையால் மலஜலம் கழித்து விட்டது. கூட்டத்தில் யாரோ, "கேசவன் இப்படியெல்லாம் பண்ணாது தெரியுமா" என்று கூறிக் கொண்டிருந்தார். யானைக்கு toilet training சரியாக் கொடுக்காத பாகனை என்ன செய்யலாம்?


ஏம்பா இப்படி?


அப்புறம் பின்னாடி ஒருநாள் இன்னும் நூறுதான் மிஞ்சியிருக்குன்னு மட்டும் சொல்லி, எப்படிக் காப்பது என்பதையோ, அதற்கான தீர்வையோச் சொல்லாமலேயே, ஒரு நிறுவனம் தன் Logo-வுடன் "அக்கறை" காட்டும். நம்ம பதிவர்/நண்பர் வால்பையன் போன்ற சமூக நல சிந்தனைவாதிகளும், இவரும் அதற்கான தீர்வைச் சொல்லாமலேயே,   "இவன் ஏன் இதுக்கு மேலே உக்காந்திருக்கான்" அப்டீன்னு பதிவு போட்டு, இந்திரனை கிழி கிழி எனக் கிழித்துக் கும்மிகளை கிளப்பச் சௌகரியமாக இருக்கலாம். விளம்பரம் ஒன்றுதானே நோக்கம் வியாபாரத்தில். நடக்கட்டும் கச்சேரிகள். ஆனால் தில்லானாவில், எப்படி புலிகளைக் காப்பது என்ற குறிப்பும், தாள லயத்தோடு, ரசிக்கும் படியாக இருந்தால் எங்களைப் போன்ற பொதுபுத்தி உடையவர்களுக்கும் உதவியாக இருக்கும். வீட்டுக்கு ஒரு புலி வளர்க்கலாம் என்றாலும் இடம் பத்தாதே..


தேநீர்:


அப்படியே அருணா சாயிராமின் "காளிங்க நர்த்தன தில்லானாவில்" ஐந்து தலை நாகம் ஆன காளிங்கன் "கர மந்தஸ்ஸ்ஸ்ஸ்" என்று பெருமூச்சோடு சரிவதையும் கேட்டு, இந்தப் பாட்டுக்கு மொத்த பார்வையாளர்களும் நர்த்தனமாடும் அழகையும், கைகட்டி வாயடைத்து, சிலையாகி இசையில் மூழ்கி விட்ட ஒரு ரசிகரையும் கண்டு ரசியுங்கள். காளிங்கன் போன்ற ஐந்து தலை நாகங்கள் இப்போது இல்லாமல் போனதற்கு கிருஷ்ணன் காரணமில்லை என்பதை மட்டும் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.




பக்கோடா:
துளசி அம்மா மாதிரி பயணக் கட்டுரையெல்லாம் எழுத முடியுமான்னு தெரியலை. செண்ட கொட்டு என்றழக்கப்படும் இசை சேவை காலையில் மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் ஏறத்தாழ மூன்று மணிநேரம் பறையடித்தல் நிகழ்ந்தது. ரொம்பவே சிலிர்ப்பான அனுபவம். எத்தனையோ முறை சென்னையில் ஐயப்பன் பூஜையில் கண்டிருந்தாலும், கேட்டிருந்தாலும், இந்த முறை ரொம்பவே வித்யாசமாக இருந்தது. சுவாமி பக்தி-ஸ்ரத்தைக்கு கேரளா தாங்க.


இந்த வீடியோ you tube-பில் இருந்து எடுத்தேன். என்னால் ஒரு பத்து நிமிஷம் தான் வீடியோ எடுக்க முடிந்தது. அதற்குள் தர்ஷிணி பொறுமை இழந்து விட்டாள். விரைவில் upload செய்து பகிர்கிறேன். life time அனுபவம்.


மழை:
தமிழ்நாடு ஸ்டேட் போர்ட் பாடப்புத்தகங்களை இலவசமாக தரவிறக்கம் செய்ய இங்கே பாருங்கள்.  
NCERT - Online Textbooks for Classes I to XII





27 comments:

Chitra said...

தொகுப்பு அருமை.

Anonymous said...

யானைகள் சாமிக்கு என்கிற காரணத்தில் நிறையவே துன்பத்துக்குள்ளாகின்றன. நாமளும் கேள்வி கேக்காம போயிடறோம்.

எறும்பு said...

// அதற்குள் தர்ஷிணி பொறுமை இழந்து விட்டாள். விரைவில் upload செய்து பகிர்கிறேன்//

பின்ன குழந்தைங்கள பீச்சு பார்க்குன்னு கூட்டிட்டு போகாம கோயிலுக்கு கூட்டிட்டு போனா இப்படிதான்..
:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை.

VISA said...

//தமிழ்நாடு ஸ்டேட் போர்ட் பாடப்புத்தகங்களை இலவசமாக தரவிறக்கம் செய்ய இங்கே பாருங்கள். //

Good Info - Thanks.
I am starting from 1st Standard.

pudugaithendral said...

ஊஞ்சலில் மனமார ஆடினேன்.

ஆயில்யன் said...

ஹம்ம்ம்ம்

கேரளா போயிட்டு வந்தீங்களா?

Radhakrishnan said...

மிகவும் அருமையான ஊஞ்சல்.

நட்புடன் ஜமால் said...

மழை - சுகம்
பக்கோடா - மொறு மொறு

மற்றவை - நோ கமெண்ட்ஸ்

Paleo God said...

ஊஞ்சல்:- ஆறறிவு அதற்கும் ஒரு நாப்பி கண்டு பிடிக்கும். அது பாட்டுக்கு காட்டுல மேஞ்சிட்டிருந்தது, தூக்கிட்டு வந்து, சாமிய ஏத்தி, பிச்சை எடுக்க வெச்சாச்சி..

ஏம்ப்பா இப்படி: நான் புளியமரம் வளர்க்கப்போறேன். கொஞ்ச நாள்ல புலி இருக்குமோ என்னமோ மரம் இருக்காது.

தேநீர்:இது உள்குத்து.. யானைய விட பாம்பு பாவம்.. சரி உடுங்க..:)

பக்கோடா: எறும்பு திண்ணாச்சு

மழை: எனக்கு பழசு. நெம்ப உபயோகமானது. நானும் ஒன்னாப்பு படிக்கலாம்னு திட்டம். சரி வர புரிதல் இலாததால இல்ல பையன் கிட்ட மானம் போகாம இருக்க இருக்கலாம். .:))

Ashok D said...

utubes ... thanks Vidhoosh :)

Ashok D said...

A.S class... நெனஞ்ட்டுயிருக்கேன்...

அண்ணாமலையான் said...

நல்லா ஆடுது....

டக்கால்டி said...

அனைத்தும் அருமை...
குறிப்பாக குறிப்பாக யானையின் பயன்பாடு...
எப்படியோ யானைக்கும் அதை வளர்க்கும் பாகனுக்கும் மூன்று வேளை சோறு கிடைக்கிறதே என்பது ஒரே ஆறுதல்.

க.பாலாசி said...

//ஏம்பா இப்படி?//

அப்டித்தான்...இனிமே அப்டித்தான்...

வால்பையன் said...

சிவனும், இந்திரனும் ஒண்ணா?

நான் சிவன் படம் தானே காட்டினேன்!?

ஒரே குயப்பமா இருக்கே!

வால்பையன் said...

VISA said...

//தமிழ்நாடு ஸ்டேட் போர்ட் பாடப்புத்தகங்களை இலவசமாக தரவிறக்கம் செய்ய இங்கே பாருங்கள். //

Good Info - Thanks.
I am starting from 1st Standard.//


தல பக்கத்துல எனக்கு ஒரு இடம் போட்டு வையுங்க!

வால்பையன் said...

// ஆயில்யன் said...
ஹம்ம்ம்ம்
கேரளா போயிட்டு வந்தீங்களா?//

உங்களுக்கு நேந்திரம் சிப்ஸ் பார்சல் வரலையா!?

creativemani said...

//சுவாமி பக்தி-ஸ்ரத்தைக்கு கேரளா தாங்க//
நானும் அப்படித் தான் நினைக்கிறேன்... நம்ம ஊரு மாதிரி, கோவிலுக்கு வந்தும், எனக்கு அவரைத் தெரியும் இவரைத் தெரியும்ன்னு முன்னே போய்விடும் பந்தா பேர்வழிகளும் கம்மி..

Thenammai Lakshmanan said...

நல்லா இருக்கு வித்யா ஊஞ்சல்

புலவன் புலிகேசி said...

புலித்தோல் சாமியாருங்க பாதி புலியை கொன்னுட்டு மீதியைத்தான் விட்டிருக்கானுங்க. அதுவும் இப்ப கொல்லப்பட்டு கிட்டிருக்கு.

அது ஏன் கோவில்னா யானை இருக்கனும்? உள்ள இருக்குறவனுக்கு அது என்ன வாகனமா? ஒரு உயிரை அடிமைபடுத்துறவன் கடவுளா?

Vidhoosh said...

நன்றி சித்ரா
நன்றி சின்ன அம்மிணி: கேள்வி கேட்கலாம்.. கேட்டேன். அதுக்கு சொன்ன பதில் "அப்பத்தான் அடங்கும்" என்றான் பாகன். வயிற்றை பிசைந்தது. என்னவோ போடா மாதவா? மிருக வதை சங்கங்கள், மேனகா எல்லாரும் இதை பார்த்ததில்லை போலருக்கு. அந்த தங்க பட்டைக்கு கீழ் எத்தனை வலியோ யாருக்குத் தெரியும்??

எறும்பு ராஜகோபால்: ம்ம் சரிங்க சார்.

டி வி ஆர் சார். நன்றி

விசா: என்னவோன்னு நினைச்சேன் அரசாங்க இணையதளத்தை. நிஜமாவே நன்றாக மெயின்டெயின் செய்கிறார்கள். அப்படியே NCERT புத்தகங்களையும் பாருங்கள். உயர்ந்த தரத்தில் இருக்கின்றன.

நன்றி தென்றல்

நன்றி ஆயில்யன். கேரளா தான். அருமையான கிராமங்களை மட்டும் பார்த்தோம். உணவு மட்டும் சுமாராகத்தான் இருந்தது. அதுவா முக்கியம்.

நன்றி வெ.ரா.கி.

நன்றி ஜமால்.:))

நன்றி ஷங்கர். :)

நன்றி அஷோக். உங்களுக்கு விருப்பமாயிருந்தால், அருணா சாய்ராம் அவர்களின் "என்ன கவி பாடினாலும்" மற்றும் "மாடு மேய்க்கும் கண்ணே" இரண்டையும் கூட கேளுங்கள்.

அண்ணாமலையான்: நன்றிங்க

நன்றி டக்கால்டி: :(

பாலாசி: நன்றி

வால்பையன்: வாங்கையா. அன்னிக்கே பின்னூட்ட கும்மியடிக்கலாம்னு நினைச்சேன். சரி வேணாம்னு வுட்டுட்டேன். சிவன் ஒன்றுமே இல்லை.. ஆமா, "அந்தாளு"தான் இல்லைன்னு சொல்றீங்க. கற்பனையான ஆளு அப்புறம் புலி மேல உக்கந்தாதான் pulsar மேல உக்கந்தாத்தான் என்ன.. என்னவோப்பா.. ஆனா இந்திரன் யானை மேல உக்காந்திருக்கா மாதிரிதான் படம் போட்டு இருக்காங்க. அதுக்காச் சொன்னேன்.. மாசம் சம்பளம் வருதோ இல்லையோ, இந்த மாதிரி பதிவு கண்டிப்பா ஒன்னு வந்து விடுகிறது :)) சரி எப்படியோ, இங்கயாவது இறைவன் காணக் கிடைக்கிறானே என்று மகிழ்ந்து கொள்வதோடு சரி :)) சிப்ஸ் இப்போல்லாம் அத்தனை ருசிப்பதில்லை. பி.டி. தேங்காயோ , எண்ணையோ, நேந்திரமோ.. :(

நன்றி மணிகண்டன்: ரொம்ப சரிதான்.

நன்றி தேனம்மை.

நன்றி புலிகேசி: சாமி அந்தோ பாவம்.... கல் பாறை மேலதாங்க கல்லா இருக்கு. மனுஷன்தான்...நாமதான் உற்சவர தூக்கி மடில வச்சுகிட்டு யானை மேல உக்காந்துக்கறோம். :(

தமிழ் உதயம் said...

பொறுக்க முடியாமல், பொங்கும் யானையின் கோபத்தை, அப்போதும் புரிந்து கொள்ளாமல் மதம் பிடித்து விட்டது என்று யானைக்கு தான் ட்ரிட்மெண்ட் எடுக்கிறோம். மனிதன் தனக்கு ட்ரிட்மெண்ட் எடுப்பது எப்போது.

Raghu said...

//அந்த தங்க பட்டைக்கு கீழ் எத்தனை வலியோ யாருக்குத் தெரியும்??//

ந‌ச்னு சொல்லியிருக்கீங்க‌!

கோயில்க‌ளில் திருவிழா நாட்க‌ள் இல்லாத‌போது யானைக‌ளோட‌ மூணு கால்க‌ள்ல‌ ச‌ங்கிலியால‌ க‌ட்டி வெச்சுருக்க‌ற‌த‌ பார்த்திருக்கேன், இதுக்கு யானையை வெச்சு பிச்சை எடுக்க‌ற‌தே பெட்ட‌ர்ங்க‌, கொஞ்ச‌ம் சுத‌ந்திர‌மாவாவ‌து உலாவும்

"உழவன்" "Uzhavan" said...

யாரும் பாகனை மிரட்டவும் வேண்டாம்; தண்டிக்கவும் வேண்டாம். அப்புறம் அவனுக்கும் ட்ரெயினிங் குடுக்கவேண்டியிருக்கும் :-)

Thenammai Lakshmanan said...

வித்யா வருகைகும் கருத்துக்கும் நன்றி அருணா சாய்ராம் கேள்விப்பட்டு இருக்கேன் இன்றுதான் கேட்டேன் கம்பீர நாட்டை கம்பீரம் காளீங்க நர்த்தன தில்லானா நர்த்தனம் காதுக்குள் ..செண்டைக்கொட்டும் ஒவ்வொரு செல்லிலும் கொட்டுது வித்யா..நான் பூரம் பார்த்து இருக்கேன் அதில் குடைகளும் கொடிகளும் மாற்றுவார்கள்

ரோகிணிசிவா said...

Meenkulathi Amman? Kollengode pakkama?
If yes ,it was our regular temple for weekends

Post a Comment