ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி

(இந்த வருடம் (2010) அஷ்டமி திதி 1.9.2010 புதனன்று காலை 6.46க்குத் துவங்கி, 2.9.2010 வியாழனன்று காலை 6.10க்கு முடிகிறது. ரோகிணி நட்சத்திரம் 2.9.2010 வியாழனன்று காலை 10.17க்குத் துவங்கி 3.9.2010 வெள்ளியன்று காலை 9.10க்கு முடிகிறது.

கிருஷ்ண ஜெயந்தி, ஜன்மாஷ்டமி, கோகுலாஷ்டமி, கிருஷ்ணாஷ்டமி, காலாஷ்டமி, கோபால்காலா என்று இந்தியர்களால் பலவிதமாகக் கொண்டாடப்படும் இப்பண்டிகை, ஆவணி (ஷ்ராவண) மாசத்தின் அஷ்டமியில் ரோகிணி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

கோகுலாஷ்டமி கொண்டாடும் விதிகளின் படி, சிராவண மாஸ பகுளாஷ்டமி, ரோகிணி நட்சத்திரம் ஹரிஷண யோகம் ரிஷப லக்னம் சேர்ந்ததே ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ஆகும்.

இதற்கு சான்றாக சூரிய சித்தாந்தம் என்ற புண்ணிய நூலில் கலியுகம் கி.மு.17 பிப்ரவரி 3102 அன்று மதியத்திலிருந்து துவங்கியதாகக் கூறப்படுகிறது. பாகவதத்தில் பிரம்மன் கூறியுள்ளபடி பார்த்தால் பகவான் கிருஷ்ணர் இப்பூமியில் 125 வருடங்கள் (கி.மு.3228 வரை) வாழ்ந்ததாகத் தெரிகிறது.

யதுவம்ஷோ(அ)வதீர்ணஸ்ய பவத புருஷோத்தம ஷரச்சந்தம் வ்யதீயாய பஞ்சகிம்ஷாதிகம் ப்ரபோ (பாகவதம் - 11/6/2)

இதனடிப்படையில் சரியாக கணக்கிட்டால் பகவான் கிருஷ்ணர் இன்றிலிருந்து 5227 வருடங்களுக்கு முன் அவதாரங்கண்டார். அதாவது கி.மு.19 ஜூலை 3228 ஆம் ஆண்டு, சிராவண மாதம் தேய்பிறை எட்டாம் நாள் (பகுள அஷ்டமி) அன்று நள்ளிரவில் ரிஷப லக்னத்தில் ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார்.

எப்படி வழிபடுவது?

பொதுவாக குழந்தை கிருஷ்ணனுக்கு விருப்பமான பட்சணங்கள், வெண்ணெய், பால், திரட்டுப்பால், பழங்கள் ஆகியற்றை வைத்து, கிருஷ்ணன் காலடி வரைந்து வழிபடுவதே எங்கும் சகஜமாக இருக்கிறது.

அறிவாற்றல், நற்புத்தி, நேர்மை, சமயோஜித புத்தி (presence of mind) ஆகியவற்றின் மொத்த வடிவமான பகவானை வழிபட்டு அவர் காட்டிய கீதை வழி நடக்க முயற்சிப்பதே இப்பண்டிகையின் தத்துவார்த்தம்.

நிவேதனங்கள்

பிரப்பம் பழம், நாவல் பழம்
அவல்
வெண்ணெய்
நாட்டுச்சர்க்கரை
பத்ரம், புஷ்பம், பலம், தோயம் என்று பகவானே தன் விருப்பத்தைக் குறிப்பிட்டபடி துளசி இலை, ஒரு பூ, ஒரு பழம், சிறிதளவு நீர்

நைவேத்திய பட்சணங்கள்
சுகியன்
அப்பம்
தட்டை
வெல்லச் சீடை
உப்புச் சீடை
முள்ளு முறுக்கு
முறுக்கு



.
போன வருஷ கிருஷ்ண ஜெயந்திக்கு என் conscientious collections என்ற வலைதளத்தில் எழுதிய பதிவு(9 Aug/09). அதில் பதியும் விபரங்களை பக்கோடவிலேயே பகிரலாம் என்று அந்த வலைதளத்தை அழித்துவிட்டேன். இது மீள் பதிவு என்பதால் அந்தப் பதிவின் பின்னூட்டங்களும் இதோடு வந்திருக்கு. :)

அந்தப் பதிவில் இருந்து இந்தப் பகுதி மட்டும் மாற்றப் பட்டுள்ளது.
(இந்த வருடம் (2009) அஷ்டமி திதி 13.8.2009 வியாழன்று காலை 9.25க்குத் துவங்கி, 14.8.2009 வெள்ளியன்று காலை 7.58க்கு முடிகிறது. ரோகிணி நட்சத்திரம் 14.8.2009 வெள்ளியன்று இரவு 7.53க்குத் துவங்கி 15.8.2009 சனியன்று இரவு 6.43க்கு முடிகிறது.

18 comments:

R.Gopi said...

//பொதுவாக குழந்தை கிருஷ்ணனுக்கு விருப்பமான பட்சணங்கள், வெண்ணெய், பால், திரட்டுப்பால், பழங்கள் ஆகியற்றை வைத்து, கிருஷ்ணன் காலடி வரைந்து வழிபடுவதே எங்கும் சகஜமாக இருக்கிறது.//

வித்யா கிருஷ்ண‌ ஜெய‌ந்தி கொண்டாட்ட‌த்தை ப‌ற்றிய‌ விள‌க்க‌ம் அருமை..... ச‌க‌ஜ‌ம் ஓகே.... உங்காத்துல வெல்ல சீடை, உப்பு சீடை உண்டா இல்லையா?? எனக்கும் சேர்த்து ஜமாய்ங்கோ...

//அறிவாற்றல், நற்புத்தி, நேர்மை, சமயோஜித புத்தி (presence of mind) ஆகியவற்றின் மொத்த வடிவமான பகவானை வழிபட்டு அவர் காட்டிய கீதை வழி காட்டுவதே இப்பண்டிகையின் தத்துவார்த்தம்.//

அருமையான‌ விள‌க்க‌ம் விதூஷ்......

இனிய‌ கிருஷ்ண‌ ஜெயந்தி வாழ்த்துக்க‌ள்.....இந்த பாட்டு நியாப‌க‌த்துக்கு வ‌ருது....

அலைபாயுதே கண்ணா, என் மனம் அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில் அலைபாயுதே

கண்ணா.... என் மனம் அலைபாயுதே......

Raghav said...

கிருஷ்ணா ஜெயந்தி வந்தாச்சா.. ஊர்ல இருந்தா உறியடி உற்சவம் கலக்கலா இருக்கும். ஆவணி ரோகிணி பற்றிய குறிப்புகள் உதவியாக இருக்கும். நன்றி.

கோச்சுக்காம ஒரு சிறு திருத்தம்.. கண்ணனின் பிறந்த வருடத்தை கி.பி. என்று சொல்லிருக்கீங்க. கி.மு தானே ?

Vidhoosh(விதூஷ்) said...

ரொம்ப நன்றி கோபி. ம்ம். ஜமாய்ச்சுடலாம்.

====

நன்றி ராகவ். ரொம்ப சரி. இதில் கோவிக்க என்ன இருக்கு. அது typo ஆகிவிட்டது. :)

====

வித்யா

சின்ன அம்மிணி said...

கிருஷ்ண ஜெயந்தின்னாலே குட்டிப்பாதங்களும் பதார்த்தங்களும்தான் ஞாபகம் வரும்.
(வேர்ட் வெரிபிகேஷன் தொந்தரவா இருக்கே)

சின்ன அம்மிணி said...

கிருஷ்ண ஜெயந்தின்னாலே குட்டிப்பாதங்களும் பதார்த்தங்களும்தான் ஞாபகம் வரும்.
(வேர்ட் வெரிபிகேஷன் தொந்தரவா இருக்கே)

Vidhoosh(விதூஷ்) said...

நன்றி சின்ன அம்மிணி. word verification-னை எடுத்துவிட்டேன். :)

--வித்யா

V.Radhakrishnan said...

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை நன்றாகச் சிறப்பித்து விடலாம். அருமையாக எழுதப்பட்ட நல்லதொரு பதிவு. மிக்க நன்றி வித்யா.

அமிர்தவர்ஷினி அம்மா said...

எனக்கு கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவது ரொம்ப பிடிக்கும், அந்தச் சின்னப்பாதங்கள் வைப்பதற்காகவே.
:))))

அமுதா கிருஷ்ணா said...

எனக்கு கிருஷ்ணஜெயந்தினா ரொம்ப பிடித்த பண்டிகை...

Vidhoosh(விதூஷ்) said...

நன்றி இராதாகிருஷ்ணன், அமித்து அம்மா, அமுதா
---வித்யா

நேசமித்ரன் said...

நல்லதொரு பதிவு

உள்ளங்கை குவித்து பாதம் வைக்கும் அம்மா
நாடகம் இயக்கிய ஹாஸ்டல் நாட்கள்
எல்லாவற்றையும் கிளர்த்துகிறது உங்கள் பதிவு

எறும்பு said...

//எனக்கு கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவது ரொம்ப பிடிக்கும்//

எனக்குசுகியன்,அப்பம்,தட்டை,வெல்லச் சீடைஉப்புச்சீடை,முள்ளுமுறுக்கு,முறுக்கு ரொம்ப பிடிக்கும்.

Vidhoosh yellam yenaku oru parcel yeduthu vainga..

:)

Paleo God said...

//பொதுவாக குழந்தை கிருஷ்ணனுக்கு விருப்பமான பட்சணங்கள், வெண்ணெய், பால், திரட்டுப்பால், பழங்கள் ஆகியற்றை வைத்து, கிருஷ்ணன் காலடி வரைந்து வழிபடுவதே எங்கும் சகஜமாக இருக்கிறது//

குழந்தை கிருஷ்ணன் நேரில் தோன்றி மொத்தமாய் எடுத்து சாப்பிடாத வரைக்கும்... ரைட்டு!

ருத்ர வீணை® said...

இப்போவே நாக்குல எச்சில் ஊறுதே !!..
அருமையான பதிவு..

இதையும் பாருங்க..

http://rudhraveenai.blogspot.com/2010/08/blog-post_31.html

RVS said...

சோத்தாங்கைப் பக்கம் மேல் மூலையில நம்ம மீசைக்காரரோட "எல்லாம் தெய்வம் கண்டீர்" போட்டீங்க பாருங்க... அதுதான் பெஸ்ட் பிக். நல்லா இருக்கு.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

சாந்தி மாரியப்பன் said...

சீடையும் அப்பமும் ரெடியா :-)))

கே. பி. ஜனா... said...

படித்து மகிழ்ந்தோம். பயனுள்ள இந்த மீள் பதிவுக்கு நன்றி!

Sivamjothi said...

எட்டை எல்லோரும் வெறுப்பர் உலகில். ஆனால் இந்த எட்டு தான் நம்மை ஆள்கிறது.
இன்று அஷ்டமி நல்ல காரியம் செய்ய கூடாது என்கின்றனர். அஷ்டமியில் தானே கண்ணன் பிறந்தான். கண்ணன் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடுகிறோமே!

எட்டாக உள்ள கண்கள் தான் கண்ணன் இருப்பிடம், இதுவே ஞானம்!
நம் முன்னோர்கள் பலரும் இந்த எட்டை பலபல பரிபாஷையில் பாடி உள்ளனர். இரண்டு பூஜியத்தை தொட்ட படி போட்டால் அது எட்டு. நிமிர்ந்து நின்ற 8 ஐ படுக்க வைத்தால் போல் ! இரண்டு கண்கள் போல் உள்ளது அல்லவா?

"பூஜ்யத்துகுள்ளே ஒரு ராஜ்யத்தை ஆண்டு கொண்டு புரியாமல் இருப்பன் ஒருவன் அவனை புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்" என கவியரசு கண்ணதாசன் பாடியுள்ளார்.
http://sagakalvi.blogspot.in/2012/04/blog-post_16.html

Post a Comment