அன்புள்ள அப்பாவுக்கு

அன்புள்ள அப்பாவுக்கு,

இந்தக் கடிதத்தை நான் அம்மாவுக்கும் எழுதியிருக்க முடியும், ஆனால் எப்போதும் உங்கள் அன்பான வழிகாட்டுதல்கள் என்னை செல்லமாய் கண்டித்திருக்கின்றன. அதனால் இன்று இக்கடிதம் மூலம் என் உணர்வுகளை நீங்கள் மட்டுமே சரியாகப் புரிந்து கொள்வீர்கள் என்று உங்களுக்கு எழுதுகிறேன்.


இராணுவ அதிகாரியான நீங்கள் இன்றுவரை நீங்கள் எங்களோடு இல்லாத குறையை உணரச் செய்ததே இல்லை. நாங்கள் உங்களோடு இல்லாத நாட்களில் நீங்கள் தவிப்பதை ஒவ்வொரு முறை இங்கிருந்து நீங்கள் மீண்டும் டியூட்டிக்குக் கிளம்பும் போதும் நான் உணர்ந்திருக்கிறேன். அம்மா என்னிடம் மறைப்பதாக நினைத்து பால்கனியில் அழுவதைப் பார்த்துவிட்டதை நானும் மறைத்திருக்கிறேன். உங்கள் விரல் பற்றியே இந்த பூங்காக்களின் சறுக்கு மரங்களில் இருந்து விழும்போதெல்லாம் எழுந்துள்ளேன். சைக்கிள் முதல் கார் ஓட்டப் பழகும் வரை "எதையும் கற்கும் போதே முழுமையாகத் தெரிந்து கொள்! என்றேனும் பயன்படும்" என்று கூறியே ஒவ்வொன்றையும் கற்கச் செய்தீர்கள். சிறிதும் இரக்கமின்றி என்னை இராணுவத்திற்கு தயார் செய்தீர்களே அப்பா! இன்று அதற்கான பெருமைகளை அவார்டுகளாகவும் பாராட்டுக்களாகவும் பெறும்போது உங்களை மட்டுமே மனம் நினைக்கிறது.

ஆனால் இன்று என்னை நீங்கள் எல்லோர் முன்னும் உரத்த குரலில் திட்டினீர்கள். திறந்திருந்த வாயிற் கதவினூடே என் பக்கத்து வீட்டு நண்பர்கள் எல்லோரும் எட்டிப் பார்த்துச் சென்றனர். இந்த இருபது வருடங்களில் இதுவே முதன் முறையாக உங்கள் குரலில் இப்படி அத்தனை ஆக்ரோஷத்தைக் கண்டு விக்கித்துப் போனேன்.என் தோழிகள் நண்பர்கள், என் கல்வி, உத்யோகம் என அனைத்தையும் நீங்களே தீர்மானித்தீர்கள். அப்படியும் என்னிடம் இத்தனை ஆக்ரோஷம் ஏன்?

நீங்களே என்னை எனக்கான முடிவுகளை எடுக்கவும் கற்றுக் கொடுத்தீர்கள், இன்று எனக்கான முடிவொன்றை நான் கூறக் கேட்கக் கூட நீங்கள் தயாராக இல்லையே அது ஏன்? நான் என்ன சொல்லிவிட்டேன்? அவனைத் திருமணம் செய்ய எனக்கு விருப்பமில்லை என்றுதானே கூறினேன்? இதில் தவறென்ன இருக்கிறது? எனக்கு அவனைத் தெரியாது, பார்த்தாலும் அப்படியொன்றும் மனதிற்கு ஏற்பானவனாகத் தோன்றவில்லை என்பதால் அவனோடு என்னால் வாழ்நாள் முழுதுக்குமான உறவை எப்படி ஏற்க முடியும் அப்பா?

உங்களுக்கு சரியெனப் பட்டதும் இந்தத் திருமணம் நடந்தாக வேண்டுமென எப்படித் தீர்மானித்தீர்கள்? அப்படியே நடந்தாலும் என் மனதிற்கு ஒப்புதல் இல்லாதத் திருமணத்தினால் நாளை நான் கண்ணீருடன் இருந்தால் உங்கள் கண்களும் கசியாதா? உங்களால் அப்போதும் என் முடிவுதான் சரி என்று நிரூபிக்க இயலுமா? நீங்கள் கூறியபடியே வாழ்க்கையில் சமரசங்களும் விட்டுகொடுத்துப் போதலும் என்றும் தவிர்க்கவியலாதது என்பதை நான் நன்றாகவே உணர்ந்திருக்கிறேன். இருந்தாலும் என் விருப்பமில்லை என்று தெரிந்துமே உங்கள் முடிவுகளை என் மீது திணிப்பதை எந்தவிதத்தில் சமரசம் என்று அழைக்க முடியும்?

அப்பா! நான் உங்கள் மகள், நீங்கள் என் மீது நம்பிக்கை வைத்துத்தான் ஆகவேண்டும். நான் ஒவ்வொரு முறை வெற்றி பெற்று வந்து உங்களை நமஸ்கரித்த போதெல்லாம் என் தலை மீது உங்கள் கரங்களை வைத்து "நீ புத்திசாலி. நீயே என் நம்பிக்கை" என்று கூறுவீர்களே அப்பா! இப்போது என் முடிவில் புத்திசாலித்தனம் ஏதும் தென்படவில்லையா அப்பா? நான் அவனைத் திருமணம் செய்து கொள்ளவே மாட்டேன் என்று சொல்லவில்லை, ஆனால் அவனை சிறிது புரிந்து கொண்டு நாங்கள் நண்பர்களான பின் திருமணம் செய்யலாமா வேண்டாமா என்றத் தீர்மானங்களைச் செய்யுங்கள் என்றுதானே கேட்கிறேன்.

உங்கள் உரத்தகுரல் என் குரலை நெறிக்கிறது அப்பா! என்னால் மூச்சு விட முடியவில்லை. ஆனால் இதயம் இப்போதும் துடித்துக் கொண்டுதானிருக்கிறது. நீங்கள் வழிக்காட்டிய படியே என் வாழ்க்கையின் பல தீர்மானங்களை செய்திருக்கிறேன். ஆனால் இப்போது முதன்முறையாக நீங்கள் காட்டிய வழியில் சிறிது நிதானித்துச் செல்ல ஆசைப்படுகிறேன். என் நேர்மையான உணர்வுகள் உங்களுக்குப் புரியுமா அப்பா!

என்றும் அன்புடன்,

உங்கள் மகள்.


[வீட்டை விட்டு ஓடிப் போகும் முன் ஒரு மகள் எழுதியது. ஹிந்தி மூலத்திலிருந்து மொழிபெயர்த்தவைகளில் ஒன்று]

41 comments:

எம்.எம்.அப்துல்லா said...

அதெப்படி பெண்களுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலான உறவை ஒரு நொடியில் உதற முடிகின்றது??

வித்யா said...

நல்லாருக்கு. எளிமையான நடையில்.

சிங்கக்குட்டி said...

இப்படி சென்று வாழும் யாரும் அவர்கள் மகள் இருபது வயதானவுடன், என் தந்தை செய்த தவறை நானும் செய்ய விரும்பவில்லை, அதனால் நீயே ஒருவனை தேடிக்கொள் என்று ஏன் சொல்வதில்லை?

காரணம் அன்று அவர் மகள் இன்று தாய்...இரவும் பகலும் போல, காலம் காலமாக மாறாத ஒரு தொடர் கதை இது.

நட்புடன் ஜமால் said...

என் கருத்துகளை சொல்ல இயலாமல்
1&3 செய்துவிட்டன

Vidhoosh said...

நன்றி அப்துல்லா :
இது நல்ல குணமா கெட்ட குணமா என்று தெரியவில்லை. ஆனால் பெண்களிடம் இருக்கும் குணம் இது.. "நீ அடுத்தவன் சொத்து" என்பதாக சொல்லிச் சொல்லி ஜீன்களில் ஊறிப் போன ஒன்று என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.

தனக்கு/தன் மனதுக்கு ஒப்புதல் ஆகாத வரை பெண்களை யாராலுமே கட்டாயப் படுத்த முடியாது. இதுவே பெண்களின் பலம் & பலவீனம் அல்லது ஆற்றல் என்றும் சொல்லிக்கலாம்.. தானாக நம்பாதவரை பெண்களை யாராலும் முன்னேற்றி/வீழ்த்தி விட முடியாது.

உஸ்..ய(b)ப்பா.. சோடா ப்ளீஸ்:))


நன்றி வித்யா: அப்போ பூட்ஸ் போட்டுக்கிட்டா கடினமா நடக்கலாம் நேசமித்திரன் மாதிரின்றீங்க..

நன்றி சிங்கக்குட்டி - அவங்க ஒன்னும் தானே தேடிக்கறேன்னு சொல்லலைங்க.. 45 வயசு தாண்டினாலே ஞான வட்டம் வந்திருதுங்க, புருவம் லைய்சா மேல ஏறிக் கொண்டு, கண்ணும் அரையா மூடிக்குது.. இளிச்ச வாய் மாதிரி எதுக்கெடுத்தாலும் புன்னகை வருது... நாப்பத்தி மூணு வயசு முடிஞ்சிட்ட எல்லாருக்கும் நாப்பத்தஞ்சு வயசு ஆகாம நாப்பத்தாறு வயசு ஆக முடியாதே.. அந்த கொடுமைய யாருகிட்ட போயி சொல்ல.. matter இந்த 35 வயசுலதாங்க இருக்கு.... மீதிய நாளைக்கு சொல்றேன்.. சோடா ப்ளீஸ்..

நன்றி ஜமால் ... யப்பா.. தப்பிச்சோம்னுதானே நினைக்கிறீங்க..

அமைதிச்சாரல் said...

ரொம்ப அருமையா ஒரு மகளின் மன உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறது....

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

படிச்சி முடிச்சிட்டேன்.. ஒரு சோடா ப்ளீஸ்..!

Vidhoosh said...

நன்றி அமைதி... :)

உ.த.அண்ணன்.. டாக்டர் சீனு நடிக்க வன்டாராமே... உங்களுக்கு பத்திரிக்க வச்சாரா.. பட விமர்சனம் எப்போ ரிலீசு..

பா.ராஜாராம் said...

மகளுக்கு கல்யாண நேரத்துல எதுக்கு தாயி, இந்த படத்தை போட்டு பயமுருத்துரீக? :-)

பா.ராஜாராம் said...

உஸ்ஸ்ஸ்ஸ்...சோடா ப்ளீஸ்.

Vidhoosh said...

ராஜாராம் அண்ணே.. எங்கண்ணே பதிவையும் காணோம் ஆளையும் காணோம்.. சீரெல்லாம் வாங்கியாச்சா... என்ன நடக்குது?

பா.ராஜாராம் said...

சகோ, எல்லாம் நடந்துகிட்டே இருக்கு. நன்றி!

ரமதான் வேலைப் பளுக்கள். :-)

எறும்பு said...

//நல்லாருக்கு. எளிமையான நடையில்//

வித்யா நீங்க சொல்லிட்டு போயிருவீங்க. அப்புறம் விதூஷ், நாம மொழிபெயர்தது நிஜமாவே நல்லாருக்கு நினைச்சுகிட்டு கண்டதையும் மொழி"பெயர்த்து" எடுப்பாங்க. இந்த கொடுமை தேவையா?

எறும்பு said...

//அதெப்படி பெண்களுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலான உறவை ஒரு நொடியில் உதற முடிகின்றது??//

வீட்ல துணி துவைச்சு உதறி உதறி காயப்போடுறது அவங்கதானே.. அந்த பழக்கத்துல உறவையும் உதறிடுறாங்க
:)

Vidhoosh said...

யோவ்... எறும்பு... சிந்தனை சிதறல்கள் கவ்வி கூட்டுக்கு போயி சாப்டோமா போனோமான்னு இருக்கணும்.. அதை விட்டு.. மொழிய பெயர்க்கலன்னா முழிய பெயர்த்துட்டு போறேன்... அதுவும் இல்லைனா.. கவுஜை, கதை, கட்டுரை எல்லாம் எழுதி டெர்ர்ரர் ஆக்குவேன்.. அடுத்தது கவுஜைதான்.

Vijay said...

//இந்தக் கடிதத்தை நான் அம்மாவுக்கும் எழுதியிருக்க முடியும்//

என்னாங்க நியாயம் இது. அப்பா திட்டினதுக்கு ஓடிட்டு... அம்மாவுக்கும் எழுதியிருக்க முடியும்னா என்ன அர்த்தம்? அம்மாதான் இ.வா யா?

Vijay said...

//அதனால் இன்று இக்கடிதம் மூலம் என் உணர்வுகளை நீங்கள் மட்டுமே சரியாகப் புரிந்து கொள்வீர்கள் என்று உங்களுக்கு எழுதுகிறேன்//

பார்ரா... உணர்வுகளை சரியா புரிஞ்சிகிட்டா அப்புறம் ஏன் அந்தக் கத்து கத்தினாரு? இல்லனா இவங்க திரும்ப சொல்லி வெளங்க வச்சிருக்கலாமே.. ஏன் ஓடினாங்க?

Vidhoosh said...

விஜய்:

யாராவது மாத்தி யோசிப்பீங்களான்னுதான் நானும் பார்க்கிறேன். அப்பா - மகள்-ன்னதுமே எல்லாருக்கும் மனக்கண்ணில் செண்டிமெண்ட் ஆறாப் பொங்குதே தவிர, யாருக்குமே இன்னும் அந்தப் பொண்ணுக்கு சுய புத்தியே இல்லைன்னு யோசிக்க மாட்டேன்ட்றீங்க. அப்பா திட்டினா ஓடி போயிடறதா.. எங்கதான் போவாளோ? :(

இந்த கடிதம் நிஜமா கதையான்னு தெரில... ஆனா இதை translate செய்த அன்னிலேர்ந்து இதே யோசனைதான்.

Vijay said...

//சிறிதும் இரக்கமின்றி என்னை இராணுவத்திற்கு தயார் செய்தீர்களே அப்பா! இன்று அதற்கான பெருமைகளை அவார்டுகளாகவும் பாராட்டுக்களாகவும் பெறும்போது உங்களை மட்டுமே மனம் நினைக்கிறது.//

அட..ராணுவத்துல வேல செய்யறவங்க ஏன் ஓடணும். நேருக்கு நேர் நிண்ணு பேசி இருக்கலாமே? அதும் இல்லாம ராணுவத்துல இருந்து ஓட முடியாதே... அப்போ வீட்டுல் இருந்து ஓடல...வீட்டை விட்டு வெளியேறிட்டாங்க...சொல்லறத சரியா சொல்லுங்கபா...சும்மா பீதிய கெளப்பாதீங்க...:))

Vijay said...

அட, ஆன்லைன்லயா இருக்கீங்க... கும்மலாம்னு பார்த்தா முடியாது போல இருக்கே... அதும் ஒப்புதல் வாக்குமுலம் வேற குடுத்துட்டீங்க...சரிங்க ... நான் அபிட்டு.... சாரி, மத்த படி உங்க எழுத்துங்க சுப்பரு....:))

Vijay said...

சாரி, போன கமெண்ட்ல அது சுப்பரு...இல்ல...ஹி..ஹி..

Vidhoosh said...

what ஒப்புதல் வாக்குமூலம் விஜய்... நீங்க friends விஜய்-யா இல்லை வேட்டைக்காரன் விஜய்-யா... # வெறி வெறி சுமால் டவுட்டு

நசரேயன் said...

//உஸ்..ய(b)ப்பா.. சோடா ப்ளீஸ்:))//

ஆட்டோ விலே அணிப்பி வைக்கிறேன்

நசரேயன் said...

//உஸ்..ய(b)ப்பா.. சோடா ப்ளீஸ்:))//

ஆட்டோ விலே அணிப்பி வைக்கிறேன்

மணிஜீ...... said...

அலைபாயுது

sriram said...

விதூஷ்..
நானும் அப்துல்லா, சிங்கக் குட்டி கட்சிதான்.

மொதல்ல ஒண்ணு சொல்லிக்கறேன் - பெற்றோர்கள் செய்யும் கட்டாயத்திருமணத்தில் எனக்கு உடன் பாடில்லை.

ஆனால் பெண் வீட்டை விட்டு ஓடிபோவதிலும் எனக்கு உடன்பாடில்லை. நின்னு ஜெயிக்கணும் விதூஷ், அதுல இருக்கு பெருமை.
எப்படி பெண்களால் 20-25 வருஷம் வளர்த்தவர்களை ஓரிரு வருடங்களே தெரிந்தவனுக்காக விட்டு ஓடமுடியுதுன்னு எனக்கு புரியல. இங்கு ஓரிரு விஷயங்கள சொல்லணும்.

1. ஓடிப்போன பெண்ணின் குடும்பத்தார் அனுபவிக்கும் அவமானம் உணர்ந்திருக்கிறேன்.

2. ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்குவது எவ்வளவு கடினம் என்பதையும் உணர்ந்திருக்கிறேன் (என் அக்கா மகன் பிறப்பிலிருந்து அதிகம் எங்க வீட்லதான் வளர்ந்தான்).
உணவு ஊட்டி, பாராட்டி, சீராட்டி, மலம் மூத்திரம் துடைத்து, படிப்பு தந்து, அறிவு தந்து, உலகம் சொல்லித்தந்து - இவையனைத்தும் செய்ய ஊண் உறக்கம் மறந்த
பெற்றோரைப் பார்த்து மகன் / மகள் கேக்கும் கேள்வி - என்னை ஏன் பெத்தே?

காதலுக்கு நான் எதிரியல்ல, நானும் காதல் மணம் புரிந்தவந்தான். காதலித்தவனை பெற்றோரும் ஏற்கும்படி செய்வது வீரம். அதை விட்டு ஓடிப்போவது கோழைத்தனம்.

ஓடிப்போயி, அனைவரின் எதிர்ப்போடு கல்யாணம் செய்து கொண்டு, அப்புறம் ????? இந்த கேள்விக்கு காதலர்கள் கொஞ்சம் விடை தேடினால் நல்லா இருக்கும்..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்.

VISA said...

நன்றாக மொழிபெயர்த்திருக்கிறீர்கள்

ராஜ ராஜ ராஜன் said...

ம்ம்ம்ம்ம்...

அப்படியா சொல்றீங்க...?

(பி.கு. மொழியாக்கம் நல்லாருக்கு...)

http://communicatorindia.blogspot.com/

ராஜவம்சம் said...

இதே கடிதத்தை அந்த தந்தை எழுதியிருந்தால்

//இத்தனை வருடமாக நான் உனக்காக எதையெல்லாம் நன்மைபயக்கும் என்ற நோக்கத்தில் செய்தேனோ அவற்றையெல்லாம் நீ சுதந்திரமாக ஏற்றுக்கொண்டாய் அவற்றில் சாதிக்கவும் செய்தாய் சந்தோஸமாகவும் பெருமையாகவும் இருந்தது இந்த விசயத்தில் நான் ஏதோ தவறானமுடிவு எடுத்துவிட்டது போல் உனக்கு தோன்றுவது ஏன் என்று தெரியவில்லை தவறு என் மீது என்றே நினைக்கிறேன் இன்னும் உன்னை மகள் என்ற பாசத்தில் சிறுபிள்ளையாகவே நினைத்துவிட்டேன் இத்தனைவருமும் இல்லாமல் உனக்கு இந்த உரிமையை யார் கொடுத்தது என்று கேட்காமல் கேட்டுவிட்டாய்
இப்படிக்கு குற்றவுணர்ச்சியில் தலைகுனிவுடன் உன் தந்தை.//

Vijay said...

//VISA said...
நன்றாக மொழிபெயர்த்திருக்கிறீர்கள்//

விசா, ஹிந்தி மூலததை எந்த பிளாக்ல விதூஷ் போட்டு இருக்காங்க? :P

Vijay said...

//ஓடிப்போயி, அனைவரின் எதிர்ப்போடு கல்யாணம் செய்து கொண்டு, அப்புறம் ????? இந்த கேள்விக்கு காதலர்கள் கொஞ்சம் விடை தேடினால் நல்லா இருக்கும்..//

பாஸ்டன், கூல்...கூல்... லெட்டர்ல அப்படி எல்லாம் எழுதி இருக்கவே இல்ல.

@ விதூஷ், எப்பிடிதான் இப்பிடி ரீடிங் பிட்வீன் த லைன்ஸ் படிக்க வக்கிறீங்களோ... ;))

Vijay said...

//ராஜவம்சம் said...
இதே கடிதத்தை அந்த தந்தை எழுதியிருந்தால்//

அது இருக்கட்டும் ராஜவம்சம் சார், எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாவணும்... அவரு கடிதாசி எழுதுனா, ஓடிப் போயி எழ்தி இருப்பாரா... இல்ல... வீட்டுல ஒக்கந்தே எழ்தி இருப்பாரா? அட..சார், அட... கல்லை கீழ போடுங்க... வேணாஆஆம்... ஐயோ...

Vijay said...

//உஸ்..ய(b)ப்பா.. சோடா ப்ளீஸ்:))//


உஸ்.... எனக்கும் தான்...!!!!! சரி சரி .. நாச்ரேயன் ஆட்டோ ரிட்டர்ன் பேக்.

Vijay said...

//மணிஜீ...... said...
அலைபாயுது//

இல்லிங்க...மழைபேயுது.

ஒகே..விதூஷ், நீங்க சொல்லச் சொன்னா மாதிரியே சொல்லிட்டேன். வரட்டா? :))

sriram said...

//
ஒகே..விதூஷ், நீங்க சொல்லச் சொன்னா மாதிரியே சொல்லிட்டேன். வரட்டா? :))//

விஜய் @ Mouthpiece of Vidhoosh..

நான் கூலாத்தான் இருக்கேன் மற்றும் இடுகையில் அப்படி விதூஷ் எழுதியிருக்காங்கன்னு நான் சொல்லவே இல்லயே.
அவங்க அப்துல்லாவுக்கு சொன்ன பதிலின் தொனி அப்படி இருப்பதாக எனக்கு பட்டது.


என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

rajasundararajan said...

//வீட்டை விட்டு ஓடிப் போகும் முன் ஒரு மகள் எழுதியது//

இம்புட்டு வாய்கிழிய அல்லது பேனாத்தேய எழுதிட்டு ஏன் ஓடிப் போகணும்? வாஸ்தவத்துல அந்த அப்பன் அந்தப் பொண்ணெ உருப்படியா வளர்கலைன்னு சொல்ல வர்ற இலக்கியப் படைப்பு இது, அப்படித்தானே?

Vidhoosh said...

விஜய்: அப்போ நீங்க வேற வேற வேட்டைக்காரந்தான்னு சொல்றீங்க.. :))))))) எல்லாம் சரிதான் ... பேசறதை எல்லாம் பேசிட்டு கடைசில நான் சொல்லிகுடுத்தேன்னு ஏனய்யா பிட்டை போடுறீர் ஓய்..

நன்றி விசா.

நசரு: நடைவண்டி தான் வந்து நிக்கிது.. நீங்க அனுப்பினது இல்லையோ?

மணிஜி : ம்ம்ம்.. flashback??

பாஸ்டன் ஸ்ரீராம்: நீங்க சொல்றதும் சரிதான்.

you to ராசு சார்... :)))))

Vidhoosh said...

நன்றி ராஜவம்சம்

நன்றி ராஜ ராஜ ராஜன். அவர் ஏன் சார் குற்றவுணர்ச்சியில் தலைகுனிவுடன் இருக்கணும்.. இது போல ஒன்றிரண்டு பெண் குழந்தைகள் இருக்கலாம்.. எனக்கு இன்னும் அப்பா + மகளின் மனநிலைய புரிஞ்சிக்க முடியல சார்! ஏதோ ஒரு குழப்பத்தில் கொண்டு விட்ட கடிதம் -- நிஜமாத்தான் எழுதினாங்களா இல்லை சும்மா கற்பனையா என்றும் தெரியல.. :-(

மோகன்ஜி said...

மொழிபெயர்ப்பின் அந்நியத் தன்மை
தென்படாமல் எழுதியுள்ளீர்கள். இன்னும் நிறைய மொழிபெயர்ப்புகள் செய்யுங்கள்..

பத்மா said...

இதுக்கு அந்த அப்பா என்ன பதில் சொல்லிருக்கக்கூடும்? ...

நட்புடன் ஜமால் said...

நன்றி ஜமால் ... யப்பா.. தப்பிச்சோம்னுதானே நினைக்கிறீங்க..]]

கிடையாது விதூஷ்
எப்பொழுதுமே மற்ற கமெண்டுகளை படிக்காமல் தான் கமெண்ட் போடுவேன்

நான் போட்டு இருந்தா அவங்களுக்கு தான் கஷ்ட்டமாயிருக்கும்

Post a Comment