எழுத்துப் புரட்சியும் பன்னீர் புர்ச்சியும்

 1. எடுத்தோமா கவிழ்த்தோமா என்று செய்வது ரொம்ப சுலபம்
 2. எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்
 3. யார் வேண்டுமானாலும் செய்யலாம்
 4. சீக்கிரம் செய்யலாம்
 5. பெரிதாக குறிப்புக்களை வாசிக்கும் அவசியம் இல்லை
 6. முன் அனுபவம் தேவையில்லை
 7. பாரம்பரியமானது, பழமையானது, புராதனமானது என்பதால் பின்நவீனத்துவமானதும் கூட
 8. சுவை கூட்ட தாளிப்பது அவசியம், ரொம்ப முக்கியமும் கூட
 9. துண்டு போட்டால் நன்றாக இருக்காது என்பதால் துருவித்தான் போடவேண்டும்
 10. நன்றாக உருட்டி உருட்டி குழப்பி பிணைந்து வைக்க வேண்டும்
 11. தக்காளி சாஸ் சேர்க்க வேண்டியது அவசியம்
 12. வெங்காயத்தை நன்றாக வதக்க வேண்டும்
 13. முட்டை தவறுதலாய் உடைந்துவிட்டால் அழுகிப் போகாமல் இருக்க அதிலும் செய்யலாம்
 14. நன்றாக அடிக்க வேண்டும்
 15. எல்லாம் காய்ந்து போகும் வரை நன்றாக வறுக்க வேண்டும்
 16. காய்ந்து போகாமல் இருக்க அவ்வப்போது பால் தெளித்து வைக்க வேண்டும்
 17. நன்றாக கிண்டி விட்டால்தான் வேகும்
 18. துண்டு துண்டாக ஆகி சிதறும் வரை கைவிடாமல் கிளற வேண்டும்
 19. உப்பு, மசாலா சேர்ப்பது அவசியம் தேவை
 20. stefano, soggiomo ஆகியவை இத்தாலிய முறையில் தயாரிப்பது
 21. tory என்பது அமெரிக்க முறை, பஞ்சாபி முறையிலும் செய்யலாம்.
 22. யாருக்குமே ஜெரிக்காது
 23. வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல், ஏப்பம், உப்புசம், வயிற்றெரிச்சல் கிளம்பலாம்
 24. வாயு பிரிதல் உபத்திரவம் இருக்கும். இத்தொல்லைகளால் நம்மைக் கண்டாலே எல்லாரும் தெறித்து ஓடுவார்கள்
 25. ஏதோ கொஞ்சம் சமைச்சோம் சாப்பிட்டோம் போனோம்னு இருக்கும் மற்றவருக்கு கண்டிப்பாய் எரிச்சல், மன உளைச்சல் உண்டாகும்.
 26. பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லாதது
 27. மலச்சிக்கல் உண்டாகும்
 28. தீவிரமாய் படைக்கும் போது தீய்ந்தும் போகலாம்
 29. தெரியவில்லை என்றால் அப்படியே பக்கத்துக் கடையில் கூட வாங்கிக்கலாம்
 30. எப்டி இருந்தாலும், எங்கேர்ந்து வாங்கினாலும் வாயில் வைக்க வழங்காது

17 comments:

எம்.எம்.அப்துல்லா said...

ஹி..ஹி..ஹி..

எம்.எம்.அப்துல்லா said...

முதல் பின்னூட்டப் புரட்சி என்னுடையது :))

ஹுஸைனம்மா said...

//# எல்லாம் காய்ந்து போகும் வரை நன்றாக வறுக்க வேண்டும்//

சரி, புரியுது.

//# காய்ந்து போகாமல் இருக்க அவ்வப்போது பால் தெளித்து வைக்க வேண்டும் //

என்னாதிது, குழப்புறீங்க? இப்பத்தானே நல்லா காயற வரை வறுக்கணும்னு சொன்னீங்க; இப்பக் காயக்கூடாதுன்னு சொல்றீங்க?

ஓ, “புர்ச்சி” இப்படித்தான் இருக்குமோ?

பத்மா said...

super

ஜாக்கி சேகர் said...

நன்றாக உருட்டி உருட்டி குழப்பி பினைக்க வேண்டும்... இதுதான்டபுள் டச்.

வித்யா said...

ரைட்டு...

புர்ச்சியாளர் விதூஷக்கா வால்க வால்க..

அமைதிச்சாரல் said...

//துண்டு துண்டாக ஆகி சிதறும் வரை கைவிடாமல் கிளற வேண்டும்//

புரட்சி..சீ சீ.. புர்ஜி செய்யறது இவ்வளவு ஈஸியா!!!!!!!!!

முகிலன் said...

கலக்கல்.. இப்பிடிக்கூட புர்ச்சி செய்யலாமா?

இனியா said...

Good one Vidhoosh!

virutcham said...

http://www.virutcham.com/?p=3571
உங்கள் அயீஷா பதிவை எனக்குப் பிடித்த பதிவுகளில் சேர்த்து இருக்கிறேன்

நசரேயன் said...

நல்லாவே இருக்கு

நட்புடன் ஜமால் said...

என்னதான் புர்ச்சியோ ஒன்னும் விளங்கியில்லை

T.V.ராதாகிருஷ்ணன் said...

Ok..Ok..

வால்பையன் said...

ஜூப்பரு

Vidhoosh said...

குறுமுனி... அது எதுக்கு கமெண்ட் போட்டு அளிச்சுடறீங்க :)) நீங்க யாருன்னு எனக்கு தெரிஞ்சு போச்சுங்க. :))


அப்துல்லா: :))

ஹுசைனம்மா: சென்னை வந்து தொலைபேசுங்கன்னு சொன்னா 'கம்னு' இருக்கீங்க?

பத்மா: நன்றிங்கோ :)

ஜாக்கி : நன்றிங்க.

வித்யா: கோஷம் சூப்பர்

அமைதி: நன்றிங்க

முகில்: நன்றிங்க

இனியா: நன்றீஸ்

விருட்சம் சார்: நன்றி சார்.

நசர்: நன்றிங்கோ/ சொல்லுற ஸ்டைல் நல்லாவே இல்லைங்கறாப்ல இருங்குண்ணே

ஜமாலு: அதேதாண்ணே... தலை சுத்துது படிச்சா.

டி வி ஆர் சார். அதான். அதான் :))

வாலு : நன்றிங்கோ.

ramachandranusha(உஷா) said...

நா ஒன்னும் சொல்லலபா :-)))))

சுரேகா.. said...

:)

இவ்ளோ இருக்கா இதுக்குள்ள?

Post a Comment