ஹிந்தியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது
Original!?-not sure of the author. But I read the Hindi version here.
ஹே பார்த்தனே! (employee!!)
இன்க்ரிமென்ட் நிறையக் கிடைக்கவில்லை... நல்லது நடக்கவில்லை
இன்சென்டிவ் கிடைக்கவில்லை... இதுவும் கேடானதுதான்
சம்பளமும் குறைக்கப்படுகிறது, கெடுதல்தான் நிகழ்கிறது
நீ போன இன்சென்டிவ் கிடைக்கவில்லையே என்று வருத்தப்படாதே
நீ அடுத்த இன்சென்டிவ் பற்றியும் கவலைப் படாதே
உன் சம்பளமாவது வருகிறதே என்று சந்தோஷப்படு.
நீ இல்லாத போதும் இந்தக் கம்பெனி இருந்துகொண்டிருந்தது
நீ இல்லை என்றாலும், இந்தக் கம்பெனி இருந்துகொண்டிருக்கும்
நீ இங்கு வரும் போது எதையும் கொண்டு வரவில்லை,
உனக்கு இருக்கும் எக்ஸ்பீரியன்ஸ் கூட இங்கேயேதான் கிடைத்தது
டிகிரி மட்டும் வாங்கி வந்தாய், எக்ஸ்பீரியான்சைக் கொண்டு செல்கிறாய்
எந்த லேப்டாப் இன்று உன்னுடையதாக உள்ளதோ,
அது நேற்று வேறு ஒருவருடையதாக இருந்தது
நாளை வேறு ஒருவருடையதாக இருக்கும்,
மறுநாள் மற்றவருடையதாக இருக்கும்
இதை நீ உன்னுடையதாக நினைத்து ஏன் சந்தோஷப் படுகிறாய்?
இதே சந்தோஷம்தான் உன் எல்லா துக்கங்களுக்கும் காரணம்
நீதிகளை (policies) மாற்றுவது ஒன்றே கம்பெனிகளின் நீதியாக இருக்கிறது
நீ எதை நீதி என்று நினைக்கிறாயோ அதுவே கம்பெனிகளின் சதியாக இருக்கிறது
ஒரு நேரத்தில் நீ best performer ஆக இருக்கிறாய்,
ஹீரோவாக இருக்கிறாய், சூப்பர் ஸ்டார் ஆக இருக்கிறாய்
அடுத்த நிமிடமே நீ worst performer ஆக மாறி விடுகிறாய்,
target-களை அடையாதவன் ஆகி விடுகிறாய்
அப்ரைசல், இன்சென்டிவ் ஆகிய எல்லாவற்றையும்
உன் மனதில் இருந்து அகற்றிவிடு
உன் கனவில் கூட நினைத்துப் பார்க்காதே
அப்போது இந்தக் கம்பெனி உன்னுடையது ஆகிறது
நீ கம்பெனியுடையவன் ஆகிறாய்
இந்த இன்க்ரிமென்ட் இத்யாதி உனக்கு இல்லை
நீயும் அதற்க்கானவன் இல்லை
ஆனால் உன் job secured ஆக இருக்கிறது
பின் நீ ஏன் கவலை கொள்கிறாய்
நீ உன்னை இந்த கம்பெனிக்கு அர்ப்பணம் செய்து விடு
நீ உன் வேலையை செய், பலனை எதிர் பார்க்காதே
இதுவே எல்லாவற்றையும் விடச் சிறந்த golden rule ஆகிறது
யாருக்கு இந்த golden rule தெரிகிறதோ அவன் மகிழ்ச்சியாக இருக்கிறான்
அவனே review, incentive, appraisal, retirement போன்ற
கட்டுக்களில் இருந்து விடுபட்டு
நிரந்தரமாக முக்தி அடைய முடியும்
நீயும் முக்தி அடைய முயற்சி செய்து ஆனந்தமாக இரு...
இப்படிக்கு - கிருஷ்ண பரமாத்மா
0 comments:
Post a Comment