உறவுகள் உருவாக்கப்படுகின்றன

இன்று என் மகள் கேட்ட சில கேள்விகளுக்கு என் வீட்டு பெரியர்வர்களால் பதில் சொல்ல முடியவில்லை. அதனால் அவளை அதிகம் பேசாதே என்று திட்டி திருப்பி அனுப்பினார்கள். அப்போது நான் எங்கெங்கோ படித்தது நினைவில் வந்தது. இருந்தாலும் அவர்களிடம் கூற முடியவில்லை - மரியாதை நிமித்தமாக...

As we grow older, we learn to remain silent. Rather we start understanding that explanations are only a waste of time or a lead for further arguments.

நாம் காலம் காலமாய் சில விஷயங்களைக் கேள்விகள் கேட்காமல் செய்தே பழக்கப் பட்டு விட்டோம். ஆகையால் ஒரு சில விஷயங்களை தெரிந்துக் கொள்ள வேண்டியோ, அல்லது எதிர்க்கும் பொருட்டோ கேள்விகள் எழுப்பும் பொழுது பதில் சொல்லத் தெரியாத நம் இயலாமை எதிர் கேள்வி கேட்டவரை திமிர் பிடித்து, வீம்புக்கு கேட்பவராகவே பார்க்க பழக்கப் படுத்தி இருக்கின்றது.

நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள். உங்கள் கருத்துகளில் உடும்பு பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள். மற்றக் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.

"நீங்கள் என்ன நினைத்துக் கொண்டு என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல; யாருக்காகச் செய்கிறீர்களோ அவர்கள் மனதில் அது எவ்வாறு பதிகிறது என்பது தான் முக்கியம்".

எவ்வளவு தேவைகள் உண்டோ அவ்வளவு உறவுகள் உருவாவது இயற்கை. ஒரு குறிப்பிட்ட உறவுமுறை அதற்குரிய தேவையை நிறைவு செய்யாத பட்சத்தில் அந்த உறவு செயலிழக்கிறது.

உறவுகளின் ஆதாரசுருதியே தேவைகள்தான். விதம்விதமான உறவுகளை உருவாக்கிக் கொள்வதன் மூலம் மகிழ்ச்சியாய் இருக்க முயல்கிறீர்கள். நட்பை உருவாக்கிக் கொள்வது, திருமணம் செய்து கொள்வது, குழந்தை பெற்றுக்கொள்வது, தொழில் தொடங்குவது – இவையெல்லாமே மகிழ்ச்சியாய் இருப்பதற்கான முயற்சிகள் தான். இதையே வேறுவிதமாகச் சொல்வதென்றால், மனிதர்களைக் கசக்கிப் பிழிந்து மகிழ்ச்சியின் சாறெடுக்க முயல்கிறீர்கள். இதைச் செய்கிற போதுதான் உறவுகள் உங்களுக்குத் தொடர்ந்து தொந்தரவுகளையே தருகின்றன.

மேன்மையானா உறவுகள் மலர வேண்டுமென்றால், ஒரு மனிதர் உறவு கொள்வதற்காக இன்னொருவரைத் தேடுவதர்க்கு முன் தனக்குள் ஆழமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் ஆனந்தத்திற்கு நீங்களே மூலமாக இருக்கும் போது, உங்கள் உறவுகள் ஆனந்தத்தைப் பகிர்ந்து கொள்ளும் வழியாக இருக்கும் போது, உறவுகளைக் கசக்கிப் பிழிய வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது. எல்லோரோடும் மிக அற்புதமான உறவுகளை உங்களால் மேற்கொள்ள முடியும்.

உங்கள் மகிழ்ச்சியும், ஆனந்தமும் உங்களைச் சார்ந்தே இருக்கும்போது உங்களைச் சுற்றியிருப்பவ்ர்களுடன் அருமையான உறவுகளை உங்களால் வளர்த்துக்கொள்ள முடியும். உங்கள் வாழ்க்கையைப் பார்த்தே சொல்லுங்கள். எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்கிறவர்களோடு வாழ விரும்புவீர்களா? அல்லது எப்போதும் சோகமாக இருக்கிறவர்களோடு வாழ விரும்புவீர்களா?

மகிழ்ச்சியாக இருப்பவர்களோடுதான் வாழ விரும்புவீர்கள். மறந்து விடாதீர்கள்! அனைவருமே அதைத்தான் விரும்புகிறார்கள். நீங்கள் எப்போதும் ஆனந்தமாக இருந்தால் எல்லோரும் உங்களோடு உறவு கொள்ளத்தான் விரும்புவார்கள். யாரிடமிருந்தாவது எதையாவது கசக்கிப் பிழிய வேண்டும் என்று நீங்கள் கருதினால், நேற்று உங்களை மிகவும் நேசிப்பதாகச் சொன்னவர்கள்கூட இன்று உங்களிடமிருந்து விலகியிருக்கவே விரும்புவார்கள்.

உறவுகள் என்பவை மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வழிமுறைகளாக விளங்கும்வரை சிக்கல் இல்லை. பிறரிடம் இருந்து எதையாவது பிடுங்கிக் கொள்வது என்பதாக இருக்கும் என்றால் எப்போதும் சிக்கல்தான். அந்தச் சூழலை நீங்கள் எவ்வளவுதான் திறன்பட நிர்வகித்தாலும் தொல்லைகள் இருந்து கொண்டுதான் இருக்கும். நீங்கள் எம்.பி.ஏ. படித்திருக்கலாம். தொழிலில் பெரிய நிர்வாகியாக விளங்கலாம். ஆனால் உங்கள் உறவுகளை நிர்வகிக்க அது உதவுவதில்லை. உங்கள் உறவு என்பது பக்கத்திலிருக்கும் மனிதருக்கான ஓர் அர்ப்பணிப்பாக விளங்கும் என்றால் அது மிகவும் அற்புதமாக இருக்கும்.

அந்த கேள்வி - ஆப்பிள் ஏன் ரெட் கலரில் இருக்கு?

நான் அதற்கான பதிலை நெட்டில் தேடியெடுத்து உள்ளேன். இன்று சாயந்திரம் அவளுக்குச் சொல்லுவேன். அந்த பதிலையும் தனிப் பதிவாக போடுகிறேன் (அவள் அதில் திருப்தி அடைந்தால்!).

0 comments:

Post a Comment