ஸ்லம் டாக் மில்லினர் (Slumdog Millionaire)

டாட்டா ஸ்கையில் ஸ்லம் டாக் மில்லினர் பார்த்தேன். This Movie won 8 Oscars. Another 62 wins & 29 nominations. No wonder.

அந்தப் பையன் ஜமாலின் பிளாஷ் பாக் கௌன் பனேகா கரோட்பதியின் கேள்விகளோடு ஒத்திருப்பது ஹைலைட். applause to the creator. இனிமேலும் இப்படி ஒரு படத்தை யோசிக்க முடியுமா என்பது கேள்விதான்.

விகாஸ் ஸ்வரூப் எழுதிய Q&A நாவலை தழுவி இங்கிலாந்து இயக்குனர் டேனி பாய்ல் இயக்கிய ஸ்லம்டாக் மில்லியனர் எட்டு பிரிவுகளில் ஆஸ்காருக்கு ப‌ரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து சினிமாவின் உய‌ரிய விருதான பாஃப்டா விருதையும் இப்படம் தனதாக்கியுள்ளது.

சிறந்த இசையமைப்பாளர், சிறந்த இயக்குனர், சிறந்த படம் உள்பட மொத்தம் ஏழு பிரிவுகளில் இப்படம் விருது பெற்றிருக்கிறது.

முதலில் கோல்டன் குளோப், பிறகு பாஃப்டா, கண்டிப்பாக பாருங்கள் ...லீகலி ... எல்லாவற்றிற்கும் மேலாக .ஆர். ரகுமான்அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

துவக்கத்திலிருந்தே விமர்சனங்களை சந்தித்து வந்த இப்படத்தின் பெயரில் டாக் என்ற வார்த்தை இருக்கிறது. இது சேரியில் வசிக்கும் இந்தியர்களை அவமதிப்பதாக கூறப்பட்டது. பின்னர் இப்படம் இந்தியாவின் நிலைமையை சர்வதேச அளவில் குறைக்கும் விதமாக எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால் இப்படத்தில் எந்தப் பகுதியில் உண்மை இல்லை ....?

மிகவும் பாதுகாப்பான வாழ்க்கை வாழும் எனக்கு இந்த படம் ஒரு அதிர்ச்சிதான். it's very difficult to see the other side of the society in India. ஒருவேளை நான்தான் ஒருவட்டத்தில் வாழ்ந்து விட்டேனோ. அதை விடுவோம்.

எனக்கு பிடித்த சில காட்சிகள்.

1. அமிதாப் பச்சனை பார்க்க அச்சிறுவன் எடுக்கும் முடிவு... உச்ச கட்ட அதிர்ச்சி...

2. தர்ஷன் தோ கண ஷ்யாம் நாத் ... என்ற
எனக்கு பிடித்த சூர்தாஸ் பாடல் . ஆனால் இனிமேல் அந்த பாட்டை கேட்டாலே ...

3. அனில் கபூரின் வில்லத்தனம் ... ஒரு சேரிவாசி தன் ஷோவில் ஜெயிப்பதாஎன்ற உணர்வு... அற்புதமான நடிப்பு.

4. தேவ் படேல் ... சூப்பர் .... தன் வெற்றிக்கு மகிழ்ச்சி அடைகிறானா இல்லை அந்தகேள்விக்கு தொடர்புள்ள தன்
பிளாஷ் பாக் அனுபவத்திற்காக வருத்தப்படுகிறானா என்று இரண்டு உணர்வுகளிலும் துடிக்கும் அவன் கண்கள்

5. ஒரே தாய்க்குப் பிறந்து ஒரே சூழலில் வளர்ந்து வரும் இரண்டு சிறுவர்கள் தன் attitude மூலம் வாழ்வில் எந்த நிலையை அடைகிறார்கள் ... attitude.... லே மென் பிரதர்ஸ், சத்யம், இன்னும் பல அனுபவங்கள் கொடுத்த பாடம் .... ATTITUDE CREATES AND DESTROYS....

இந்திய கதை, இந்திய நடிகர்கள், இந்திய இசை என இந்தியாவை சார்ந்துள்ள இந்த படம் உலக ரசிகர்களை பெற்றிருப்பதுடன், உலக அளவில் சிறப்பான விருதுகளையும் பெறப்போகிறது என்பது பெருமையான விஷயம்தானே!

0 comments:

Post a Comment