லோரோ ஜோங்க்ராங், போரோபுடூர்

இது கடாரத் தமிழ்ப் பேரறிஞர் டாக்டர் எஸ்.ஜெயபாரதி அவர்கள் எழுதிய பதிவு.

ஜாவாவின் மன்னர்கள் மிகவும் புராதனமான க்ஷத்திர மரபைச் சேர்ந்தவர்கள். சைவ சமயம், பௌத்த சமயம் ஆகியவை இரண்டும் செல்வாக்குடன் இருந்தன. சைவ சமயம் என்பது நாம் இன்று வைத்திருக்கும் சொங்கி சைவம் இல்லை. ஆகமம், தாந்திரீகம் ஆகியவை கலந்த சைவம். அது ஒரு ஒருமாதிரியான துவைத சைவம். சிவனே சர்வேஸ்வரன்; பரமேஸ்வரன். அவனே அருளாளன். அவனே படைத்தல், காத்தல் முதலியவற்¨றைச் செய்பவன். ருத்ரனாக இருந்து அழிப்பவனும் அவனே. ஒரு வித்தியாசம். ருத்ரனாக இருந்து காப்பவனும் அவனே. இந்த சைவத்தில் வைஷ்ணவமும் இணைந்திருந்தது. ராமனுடைய கதையாகிய ராமாயணமும் அவர்களிடம் இருந்தது. கிருஷ்ணனுடைய அவதார மகிமைகளைக் கூறும் கிருஷ்ணாயணமும் இருந்தது. 'க்ரிஸ்ணாயாணா' என்ற பெயரில் அந்த இதிகாசம் விளங்கியது. சக்தி வழிபாட்டின் பல கூறுகள் அங்கு விளங்கின. கொடி கட்டிப் பறந்தது சண்டி வழிபாடு என்றழைக்கப்பட்ட துர்க்கை வழிபாடு. ஒரே இடத்தில் ஆயிரம் கோயில்களைக் கொண்ட இடம் ஜாவா. ப்ராம்பானான் என்று அழைக்கப்படும் கோயில்கூட்டம் அங்கு உள்ளது. அதை லோரோ ஜோங்க்ராங் என்னும் பெயராலும் குறிப்பிடுவார்கள். ப்ராம்பானான் கோயில் கூட்டத்துடன் ஜாவாவில் ஆயிரக்கணக்கான கோயில்கள் இருக்கின்றன. அதாவது அழிக்கப்பட்டவை போக மிச்சம் இருப்பவை. அவர்களின் பௌத்தமும் தாந்த்ராயணா பௌத்தம் என்னும் வகையைச் சேர்ந்தது.


வஜ்ரபோதி என்னும்
தமிழரைத் தலைமை பிக்குவாகக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஜாவானிய மன்னர் ஒருவர் போரோபுடூர் என்னும் பிரம்மாண்டமாக மேரு விஹாரத்தை நிர்மாணித்தார். மனிதன் என்பவன் தெய்வீக ஆற்றல்கள் பெற்றவனாக விளங்கவேண்டும் என்ற கொள்கையினர். க்ஷத்திரியர்களாக விளங்கியவர்கள் அந்த மாதிரி ஆற்றல்களைப் பெரிதும் வளர்த்துக்கொண்டார்கள்.

லோரோ ஜோங்ராங்க் கோயில் இருக்குமிடம் மத்திய ஜாவாவிலுள்ளது. அதன் அருகில்தான் போரோபுடூர் என்ப்படும் பௌத்தஸ்தூபியும் இருக்கிறது.

மிக மிகச் சுருக்கமாகவும் எளிமையாகவும் சொல்லவேண்டுமென்றால், 'யந்த்ர' என்பது ஒரு தெய்வத்தின் அல்லது தெய்வ சக்தியின் வரைபடம். அதற்கு இரண்டு பரிமாணம் உண்டு. அதையே முப்பரிமாணமாகவும் ஆக்கலாம். ஸ்ரீசக்ரம் என்பது தேவிவழிபாட்டுக்குரிய யந்திரம். அதுதான் தேவிவழிபாட்டின் உச்சகட்டத்து யந்திரம். யந்திரங்களுக்கெல்லாம் தலைமையானது. ஆகையினால் அதை 'சக்ரராஜம்' என்று சொல்வார்கள். அது ராஜராஜேஸ்வரியின் தேராகவும் விளங்கும். ஸ்ரீசக்ரராஜத்தின்மீது அமைந்த சிம்மாசனத்தில் வீற்றிருப்பவள்.

'ஸ்ரீசக்ரராஜசிம்மாசனேஸ்வரி ஸ்ரீலலிதாம்பிகையே .புவனேஸ்வரி' என்ற பாட்டை நிச்சயம் கேட்டிருப்பீர்கள்.

அதன் முப்பரிமாண வடிவமும் உண்டு. அதனை 'ஸ்ரீசக்ர மேரு' என்று குறிப்பிடுவார்கள்.
யந்த்ரங்களை மண்டலங்கள் என்றும் குறிப்பிடுவதுண்டு. போரோபுடூர் என்பது என்ன என்பது ஒரு பெரிய மர்மம். கோயிலா, ஸ்தூபியா, மண்டலமா?

அதன் உயரம் 42 மீட்டர். 123 மீட்டருக்கு 123 மீட்டர் தன்னச்சதுரம். 10 அடுக்குகளைக் கொண்டு படிப்படியாக உயர்ந்து செல்லும். அடுக்குகளை யந்திர சாத்திரத்தில் 'ஆவரணம்' என்று கூறுவோம். அடியில் உள்ள ஆறு ஆவரணங்கள் சதுரமானவை. அதற்கு மேலுள்ளவை வட்டவடிவம் கொண்டவை. ஸ்ரீசக்ரமேருவில் ஒன்பது ஆவரணங்கள் உண்டு. அடியில் உள்ள ஓர் ஆவரணம் சதுரமானது. அதற்குமேலுள்ள இரண்டும் வட்டவடிவமானவை. அதற்கு மேலுள்ள ஐந்தும் முக்கோணங்களால் ஆனவை. ஆக மேலுள்ளது பிந்து எனப்படும். பிந்து என்றால் 'புள்ளி' எனப்பொருள்படும். புள்ளி என்றால் பெரிதாகவும் இருக்கலாம்; அல்லது சிறியதாகவும் இருக்கலாம். அதைத்தான் நாம் அறிவோம். ஆனால் ஸ்ரீசக்ர மேருவிலோ ஸ்ரீசக்ரத்திலோ உள்ள 'பிந்து' என்பது மனதில் சிந்தனைகளை ஓடவிட்டுக்கொண்டிராமல் கூட்டிக்கழித்துப் பார்க்காமல் ஜியாமெட்ரியெல்லாம் போட்டுக்கொண்டிராமல் மோனமாக இருந்து இலக்கின்றி பாருங்கள். 'அக'ப்படும்.

எகிப்திய பிரமிட், மாயான் பிரமிட், இந்திய ஸ்தூபி, சுமேரிய ஸிகுராட் (Ziggurat) முதலியவற்றின் தன்மைகளும் அமைப்பும் கலந்து காணப்படுகின்றன.

போரோபுடூரைக் கண்டுபிடித்து அதனைச் செப்பனிட ஆரம்பித்து இருநூற்றாண்டுகள் ஆகின்றன. ஆனால் இதுவரைக்கும் அதன் மர்மம் யாருக்கும் பிடிபடவேயில்லை।


ஸ்ரீசக்ரம், ஸ்ரீசக்ரமேரு, போரோபுடூர் ஆகியவற்றை ஒரு Comparative Study-க்காக இந்த யூஆரெல்லில் போட்டிருக்கிறார். பார்த்துக்கொள்க.

0 comments:

Post a Comment