தாத்தா மற்றும் பாட்டி கவனிப்பில் வளரும் குழந்தைகள் தான், அதிக மகிழ்ச்சியாக வளர்வதாக லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஒர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
சர்வதேச அளவில் மக்களின் வாழ்க்கை ந்திரமயமாகிவரும் நிலையில், தங்களது குழந்தைகளுடன் அமர்ந்து, மனதை பகிர்ந்து கொள்வதில் பெற்றோர்களுக்கு நேரமில்லாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்காமல், ஏங்கும் நிலைக்குத் தள்ளப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு தனிமைப்படுத்தப்படும் குழந்தைகள், தவறான வழியில் சென்று, பெரிய சமூகப் பிரச்னையை எதிர்கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இந்நிலையில், லண்டன் பல்லைகக்கழகம் ஒன்று இதுகுறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் நேரத்தை பகிர்ந்துகொள்ள முடியாவிட்டாலும், தாத்தா-பாட்டியின் கவனிப்பில், குழந்தை நல்லமுறையில் வளர்வதற்கு உறுதுணையாக இருந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. தாத்தா-பாட்டியுடன் வளரும் குழந்தைகளுக்கு, தாய்-தந்தையுடன் நேரத்தைப் பகிர்ந்து கொள்ளாதது ஒரு குறையாகத் தெரியவில்லை என்றும், அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியாக வளர்வதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், தங்களது பேரக்குழந்தைகளுடன் நிதானமாக அமர்ந்து, அவர்களது இன்ப, துன்பங்களை பகிர்ந்து கொள்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. தவறு செய்யும் குழந்தைகளை திருத்துவதில், தாத்தா-பாட்டி, மென்மையான போக்கை கடைபிடிப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. முதுமையான பெற்றோர்களை வீட்டை விட்டு துரத்துவதும், அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பதும், இன்றைய இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், இந்த ஆய்வு மனமாற்றத்தை ஏற்படுத்தும் என்றால் மகிழ்ச்சி தான்.
0 comments:
Post a Comment