புத்தக விமர்சனம் - மைனஸ் ஒன் (கவிதைகள்)


மைனஸ் ஒன் (கவிதைகள்)
ஆசிரியர்: நந்தாகுமாரன்
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்

தூங்கா விரதத்தோடு துவங்கும் மெட்ரோ வாழ்க்கை, தாயம் விழும் வரை நீள்கிறது. தலை கோத தானியங்கி கை கேட்டு தானியங்கித் தொட்டில் இராமாயணங்களில் ஜனனம் கருடப்பருந்தின் நிழல் மேவும் பழைய நிலம். 

கடவுளாகித் திரியும் மனிதனின் ஹெல்மெட் அபத்தங்களைக் கண்டே வளர்ந்து வளர்ந்து டிராகுலாவின் காதலியைக் காண்கிறது. நந்தாவின் கவிதைகளில் எனக்குப் பிடித்தமானவற்றில் இக்காதலியும்.

கிங்பிஷர் தன்னை கிங்பிஷர் என்றுணரும் தருணத்தை செத்த நீர் எனக் கொண்டாடுகிறார். உம்மீதா பொழியும் மழை என்றுக் கேட்கிறார்.

சூரியனும் நிலாவும் இவருக்கு மிகவும் அணுக்கமானவை என்று கவிதைகளில் கோடிசூரியனும்   நூற்றெண்பது நிலாக்களும் வந்து வந்து செல்கின்றன.


உறங்கி விழிப்பது போலும் என்றபடியே ஸ்தலபுராணங்கள், சிம்ப்ளி சூப்பர்ப். கரடி ரயில் டில்லி, சிவாஜி வாயிலே ஜிலேபி என்றெல்லாம் கமெண்ட் பாக்ஸ் நிரப்பிய தங்க நாட்கள், நந்தாவின் பயணக் குறிப்புக் கவிதைகள் எல்லாமே சிறப்பு தரிசனம். 1500 AMSL, பெஸ்ட் ஆப் நந்தாஸ்.

ரயில், பயணங்கள், சூரியன், நிலவு, நட்சத்திரங்கள் அப்பார்ட்மெண்ட், மொட்டை மாடி காட்சிகள், பியர், சிகரெட்,  கணினித் திரை, ஜீரோ, மற்றும் ஒன் ஆகியன. டிபிக்கல், அக்ஷர சுத்தமான பெங்களூரு தமிழ்வாசியின் மென்பொருள் தின்று செரித்த நாட்கள், செய்யாத பாவக் கணக்குகளைத் தீர்க்க பழைய வேண்டுதல்கள்.

சித்தியின் அழுகையை கவனித்தீர்களா?

கூரையேறி வைகுண்டம் போனவனைக் காணவில்லை.

கடை விரித்தேன் கொள்வார் இல்லை என்று சொன்ன நந்தாவின் கடந்த நாட்களின் பயணக் குறிப்பு இத்தொகுப்பு. செம.!!

0 comments:

Post a Comment