நதிக் குறிப்புக்கள்


சீற்றத்தோடு நீந்தும்
நித்திய கல்யாணி 
தர்ப்பைப் புல் மேயும் வேதங்கள்
மூங்கில் சூழ் கரை மேய்ப்பர்கள்

விஷப்பற்களைக் கூர்தீட்டி
நாவைத் தளர்த்தி ஆற்றின் ஆழத்தைப்
பார்க்கும் கிழட்டு நாயின்
ஊளைக்குரல் மறைக்கும் கோஷங்கள்

Image: http://www.123rf.com
சற்றே கம்பளியைத் தவிர்த்து
அனுபவியுங்கள் 
அந்தச் சிலிர்ப்பை, நடுக்கத்தை, 
படபடப்பை, வெப்பத்தை
உங்களை!

நாளை வேறு நாய், வேறொரு நதிக்கரை
எப்படியும் கிடைத்து விடுகிறது பசுமடி
தர்ப்பைப் புல், வெவ்வேறு கம்பளிக்கள், மூங்கில்கள்
எப்போதும் முழங்கியபடியே இருக்கிறது நதி.

[விதூஷ்]

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

குறிப்புக்கள் அருமை... உண்மை...

தொடர வாழ்த்துக்கள்...

நந்தாகுமாரன் said...

I Like It ... Return of the Dragon :)

Rathnavel Natarajan said...

அருமை.

Post a Comment