கடந்த இந்நிமிடத்தில்
குற்றம் ஒன்று செய்துள்ளேன்
அடுத்த நிமிடத்திலும்
செய்வேன்
நாளையும் அதற்கு மறுதினமும்.
மீண்டும் மீண்டும்.
காரணமேதும் இல்லை
காரணமேதுமின்றியும்
காரணத்தைத் தேடியும்
காரணத்திற்காகவும்
மீண்டும் செய்கிறேன்.
இதயங்களைக்
குறுவாளால் அறுக்கிறேன்
வழிந்தோடும்
இரத்தத்தை ருசிக்கிறேன்
உறவுகளைப் பிரிக்கிறேன்
வெட்கமற்றச் சிரிப்போடு
நாளை ஏதேனும் கலகமிழைப்பேன்
விஷமேறியப் பற்களோடிருக்கும்
நாயொன்றையொத்து உறுமுவேன்
ஆதரவளியுங்கள் எனக்கு
ஏனெனில் இன்றிரவு இயலாமற்போனால்
நாளைய பகலில்
குற்றம் ஒன்று செய்வேன்.
3 comments:
வாக்குமூலம் அருமை
பரவாயில்லையே ...
Ethaiyo parthu vadivamaithathu polum kalan puthithu
Post a Comment