பழங்காலத்துப் புத்தகம்


அடர்ந்த பனிக்கு உறையாத நதி
நதி மூலத்தில் செதில் இல்லா மீன்கள்
கடல் சேர்வதில்லை


கடல் கடந்து பறக்க முற்படும்
கருடப் பருந்து கானல் நீரைத் துரத்தும்
இடைப்பட்டத் தீவில் இளைப்பாறும்
கடலின் நிழல் இப்போதும்
கண்ணுக்குப் புலப்படுவதில்லை

கடலுக்கு  அப்பாலும்
ஒரு நகரம் இருந்திருக்கலாம்.

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான சிந்தனை வரிகள் சிந்திக்க வைத்தது...

Post a Comment