குங்குமத்தால் உண்டாகும் பயன்கள்


குண்டலினி ஆற்றல் புருவங்களின் மத்தியில் உள்ளது.  உடலில் உள்ள ஆற்றலைத் தக்கவைக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுவதாகக் கூறப்படுகிறது. குங்குமப் பொட்டு நெற்றியைக் குளிர்வித்து நம்மை பாதுகாக்க வேண்டியும் மற்றும் ஆற்றல் இழப்பையும் தடுக்கிறது. சில நேரங்களில் முழு நெற்றியும்  சந்தனம் அல்லது (விபூதி)பஸ்மத்தால் மூடப்பட்டிருக்கும்.

அக்குப்ரஷர் பாயிண்ட்-டான நெற்றி வகிடு மற்றும் புருவ மத்தியை மனஅழுத்தம் அதிகமாக இருக்கும் போது ஆட்காட்டி விரலால் அழுத்தித் தொடும் போது மனச்சோர்வு குறைகிறது.

குங்குமம் பொதுவாக மஞ்சள், படிகாரம், கறையம் (அயோடின்), கற்பூரம், முதலியன கலந்து செய்யப்படுகிறது.  இதில் கஸ்தூரி திரவியமும்  சந்தனமும் கலந்தும் செய்து கொள்ளலாம்.

புராணங்களில் விஷேஷகசேதாய என்று குறிக்கப்படும் இத்தகைய அடையாளங்கள் பூமாலையணிதலும் நெற்றித் திலகம் இட்டுக் கொள்வதும் பல்வேறு வகைத் தொழில் முறைகளை குறிப்பிடவும் பின்பற்றப்பட்டு வந்தன.

ஆயுதப் பயிற்சி போன்ற திறன்சார் கல்வி பயிற்றுவிக்கும் குழுவினர்கள் வெள்ளை சாந்து அல்லது சந்தனப் பொட்டு அணிவார்கள். அரசியல், போர் மற்றும் இராஜதந்திர செயல்பாடுகளில் ஈடுபட்டவர்கள் சிவப்பு குங்குமம் அடையாளம் அணிவார்கள். வாணிபத்தில் ஈடுபட்டவர்கள் மஞ்சள் வண்ணத்தில் திலகம் அணிந்தனர். இந்த மூன்று பேரையும் சார்ந்து தொழில் புரிபவர்கள் கருப்பு, மை,  கஸ்தூரி அல்லது மரக்கரியால் திலகம் இட்டுக்கொள்வார்கள். பெண்கள் மஞ்சள் கலந்த திலகம் இடுவர்.

இலைகள் வெவ்வேறு வடிவங்களாக வெட்டப்பட்டு நெற்றியில் ஒட்டப்பட்டும் வந்தன, இதை பத்ரசேதாய, பத்ரலேகா, பத்ரபங்கா, பத்ரமஞ்சரி என்றெல்லாம் குறிக்கப்பட்டுள்ளன.  நெற்றியில் மட்டுமல்லாது உடல் நறுமணம் கூட்டவும் கன்னம், கழுத்து, கை, மார்பு போல்  உடலின் மற்ற பகுதிகளில் சந்தனம் மற்றும் பிற இயற்கை நறுமணப்பொருட்களை பூசிக் கொள்வதும் அலங்காரம் செய்யும் பொருட்டு பயன்படுத்தப்படுகிறது.

குங்குமம் பயன்படுத்தும் நடைமுறை லலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் சௌந்தர்ய லஹரி உட்பட பல பண்டைய நூல்களில் (புராணங்கள், மத நூல்கள், வேத, தொன்மங்கள் மற்றும் கதைகளில் கூட) குறிப்பிடப்பட்டுள்ளது.

மஞ்சள் கிழங்கை உடைத்து எலுமிச்சம் பழசாற்றில் ஊறவைத்து, காய வைத்து பொடி செய்து கிடைக்கும் குங்குமத்தில் மின்கடத்தும் தன்மை  உள்ளது. இதை நெற்றியில் இடும்போது எதிர்மறை எண்ண அலைத் தாக்குதல்களையும் தவிர்க்க முடியும். வேப்பிலை மாவிலை துளசி எலுமிச்சை போன்றவைக்கு மின்சக்தியை ஏற்கக்கூடிய சக்தி அதிகம்.

குங்குமம் மங்களச் சின்னமாகக் கருதப்படுகிறது. பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் குங்குமத்திற்கு முக்கியத்துவம் அதிகமாக உள்ளது. சக்தி ரூபமாக வணங்கப்பெறும் பெண்கடவுளர்களின் சன்னதியில் பிரசாதமாக குங்குமம் வழங்கப்படுகின்றன. பைரவர் ஹனுமான் போன்ற ஆண் கடவுள்கள் சன்னதியில் குங்குமப்பிரசாதம் வழங்கப்படுகிறது.

ஹனுமான் தன் உடல் முழுதும் குங்குமம் பூசி  அலங்காரத்துடன் இருக்கிறார். ஹனுமான் குங்குமம்  ஏன் இட்டுக் கொள்ள வேண்டும்?

இராமசரித்மானஸ்-சில் குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில் ஹனுமான் ஒருமுறை சீதை குங்குமம் இட்டுக் கொள்வதைப் பார்த்து, ஆர்வத்தோடு `தாயே, குங்குமத்தின் பலன் என்ன?` என்று கேட்கிறார். சீதை தன் கணவர் ஸ்ரீ ராமனின் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக குங்குமம் வைக்கிறேன் என்று பதிலளிக்கிறார். பின்னர் ஹனுமான் தன் உடல் முழுதும் குங்குமம் பூசிக் கொள்வது தொடங்கியது என்கிறது இராமசரித்மானஸ்.

7 comments:

கவிதா | Kavitha said...

நன்றி விதூஷ் :)

எல் கே said...

நல்ல கட்டுரை. குங்கும அர்ச்சனை செய்தால் மிகக் குறைந்த அளவிலேதான் குங்குமத்தை உபயோகிக்க வேண்டும் என சொல்லக் கேட்டிருக்கிறேன்

திவாண்ணா said...

good one! continue!

pudugaithendral said...

அருமை.

ஆனால் சில கோவில்களில் குங்குமம் எனும் பெயரில் வழங்கப்படுவதை இட்டுக்கொண்டால் தோல் நோய்தான்!
:(

ஆனால் மதுரை மீனாஷி அம்மன் கோவில் கிடைக்கும் தாழம்பு குங்குமமோ, காஞ்சி காமாஷி கோவிலில் கிடைக்கும் ஸ்ரீவித்யா குங்குமம் போலோ இருந்தால் நல்லது.


திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு கட்டுரை... நன்றி... வீட்டில் ஏதோ நம்பர் சொல்லி வாங்குகிறார்கள்... அது தான் அரிக்காமல் இருக்கும்...

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_9356.html) சென்று பார்க்கவும்... நன்றி...

வல்லிசிம்ஹன் said...

அருமையாக இருக்கிறது.
நானும் குங்குமத்துக்கு மாறவேண்டும்.
நல்ல குங்குமத்தைத் தயாரித்துக் கொடுத்தவர் நம் கோமா,நானானி இருவரின் தந்தை தயாரித்த குங்குமத்தின் மணம் சொல்லி முடியாது. நெற்றிக்கும் நல்லது. மிக நன்றிமா.

Post a Comment