அப்பவே அப்பிடி சிரீஸ் #ஒன்று


மகளாகி ஒரு புன்னகையில் சோர்வு நீக்கி
தங்கையாகி எப்போதும் அரவணைக்கப்பட்டு
அக்காவாகி என்னென்றும் தாயாகி
காதலியாகி சிலரது கனவுகள் வளர்த்து
மனைவியாகி ஒரு குடும்பம் பேணி
தாயாகி அன்பு வளர்த்து
தனித்துவமின்றி கரைந்து போனாய்.
நிலைக்கண்ணாடியோடு உன் புன்னகைகள்
அரவணைப்பில் ஒடுங்கிய உன்  சிறகுகள்
தாய்மையில் கரைந்துபோன உன் கால்கள்
அடுத்தவரின் நாக்கு ருசியிலும்
பிள்ளைப் பேறிலும் மறுபிறவியாகத்
தீர்மானிக்கப்படும் உன் திறமையனைத்தும்
உனக்கேயான கனவுகளில்
என்றேனும் நீ பெண்ணாக மட்டும் இருந்திருக்கலாம் அம்மா
இருந்திருந்தால் இன்று
சண்டி துர்கையும் சதிசாவித்திரியும் தெய்வங்களாகியிருக்க மாட்டார்கள்
துரியனின் ஆளுமையும், இராவணனின் நற்குணங்களும் போற்றப்பட்டிருக்கலாம்

(1994)

1 comments:

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

மிகவும் அருமை. திரட்டிகளில் இணைத்து ஓட்டுகள் பல பெற்று உலக அளவில் முன்னேற வாழ்த்துகள் சகோதரி!

Post a Comment