தலைப்புச் செய்தி


சிறு மீன்கள் எழுப்பும் ஒலியில்
உடைகின்றன சில ஓடுகள்
நடுங்கும் பவளப் பாறைகள்
துளைக்கும் வெள்ளிக் கதிரொளி
மாடத்தில் நடுங்கும் விளக்கு போல
பெரும் நிசப்தத்தினுள் அமிழ்கின்றன
கிளர்ந்தெழுகின்றன அலைகள்
கடல் அசையும் கடற்கரை
வெண்மணலில் கரையும் சங்கு
கடற்கரை நினைவுகள்
தலைப்பில் ஒளிரும் சோழிகள்
உப்பு நீரில் கரையும்

3 comments:

பா.ராஜாராம் said...

ரொம்பப் பிடிச்சிருக்கு சகோ

vimalanperali said...

நல்லாயிருக்கு.வாழ்த்துக்கள்.

ஆர்வா said...

அருமையான உணர்வுகள் விதூஷ்..

Post a Comment